புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே? - கவிதை - Poll_c10எங்கே? - கவிதை - Poll_m10எங்கே? - கவிதை - Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
எங்கே? - கவிதை - Poll_c10எங்கே? - கவிதை - Poll_m10எங்கே? - கவிதை - Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எங்கே? - கவிதை - Poll_c10எங்கே? - கவிதை - Poll_m10எங்கே? - கவிதை - Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எங்கே? - கவிதை - Poll_c10எங்கே? - கவிதை - Poll_m10எங்கே? - கவிதை - Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே? - கவிதை - Poll_c10எங்கே? - கவிதை - Poll_m10எங்கே? - கவிதை - Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
எங்கே? - கவிதை - Poll_c10எங்கே? - கவிதை - Poll_m10எங்கே? - கவிதை - Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எங்கே? - கவிதை - Poll_c10எங்கே? - கவிதை - Poll_m10எங்கே? - கவிதை - Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எங்கே? - கவிதை - Poll_c10எங்கே? - கவிதை - Poll_m10எங்கே? - கவிதை - Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே? - கவிதை -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 28, 2018 7:50 am


எங்கே? - கவிதை - Buddha001
வாடிய பயிரைக்கண்டு வாடிய
வள்ளலார் எங்கே?
-
சின்னப்புறாவுக்கு சிரம் தந்த
சிபி எங்கே?
-
காராம் பசுவின் கன்றுக்காக
தேரை ஏற்றிய தெய்வ நீதி எங்கே?
-
முல்லைக்குத் தேர் தந்த
பாரி எங்கே?
-
மயிலுக்குப் போர்வை தந்த
பேகன் எங்கே?
-
இயேசு, காந்தி, புத்தன் எங்கே?
எல்லோரும் இருக்கிறார்கள்
பாடங்களாக!
எழுதுகிறோம் விடைகளாக!!
-
--------------------------
-தமிழ்வாசகன்
காகித நட்சத்திரங்கள் - கவிதை தொகுப்பிலிருந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 28, 2018 11:43 am

சூப்பருங்க சூப்பருங்க



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 28, 2018 12:10 pm

சின்னப் புறாவுக்காகச் சோழன் சிபி சக்கரவர்த்தி தன்னுடைய சிரத்தைக் கொடுக்கவில்லையே ! தன்னுடைய சதையைத்தானே அறுத்துக்கொடுத்தான் !

" எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் "

என்ற சிலப்பதிகார வரிகளால் இதனை அறியலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 28, 2018 12:17 pm

" எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் "

சிறு வயதில் படித்த ஞாபகம்.
தெளிவான விளக்கம் தந்தால்,
மகிழ்ச்சி அடைவேன்.

ரமணியன்
@MJagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 28, 2018 12:54 pm

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் சிபி என்று ஒரு சக்கரவர்த்தி உசீனர தேசத்தை ஆண்டு வந்தான். . அவன் மனிதர்களிடம் மட்டுமல்லாது, பறவைகள், மிருகங்கள் என அனைத்து உயிரினங்களிடமும் மாறாத அன்பு கொண்டிருந்தான். கருணைக்கும், கொடைத்திறனுக்கும் பெயர் பெற்ற மன்னர்களில் சிபி பலராலும் போற்றப்படுபவர். காரணம், அவனுடைய பரந்த மனமும் , தயாள குணமும்தான். சிபியின் இந்த கீர்த்தி தேவலோகத்தையும் எட்டியது. தேவேந்திரன் சிபிச் சக்கரவர்த்தியை சோதிக்க விரும்பினான். அக்கினி பகவானையும் உடன் அழைத்துக்கொண்டு, தான் ஒரு கழுகு வடிவத்திலும், அக்கினி பகவான் ஒரு புறா வடிவத்திலும் பூமிக்கு வந்தனர். வேகமாக பறந்து வந்த கழுகு, புறாவைத் துரத்திக்கொண்டு வந்தது. ஏழை எளியோருக்கு உதவுவதைத் தம் கைகாளாலேயே செய்ய விரும்புபவன் சிபி. அன்று தம் நந்தவனத்தில் அப்படி ஏழைகளுக்கு உணவளித்து முடித்து அரண்மனைக்குத் திரும்ப நினைத்தபோது, சிபியின் கைகளில் ஒரு புறா வந்து விழுந்தது. அந்தப் புறாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ‘என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்று கேட்பது போல அதன் முகம் மிகவும் பரிதாபமாக இருந்தது. அரசனின் மடியில் அப்படியே சுருண்டு கிடந்தது. அதனை ஆதரவுடன் கையில் எடுத்து தடவிக் கொடுத்தான். அப்போது ஒரு பெரிய கழுகு அவர்கள் முன்னால் வந்து நின்றது. சிபியின் மடியில் இருந்த புறாவை தம் கூரிய கால் நகங்களால், கவ்வி எடுத்துச் செல்ல முயன்றது. சிபி மன்னன் அதைத் தடுத்து நிறுத்தினான். புறா பயத்தில் மிகவும் நடுங்கிப்போனது. அப்போது ஒரு அதிசயம் நடந்தது.

அந்த கழுகு மனிதனைப்போலவே பேச ஆரம்பித்தது. “அரசே, என்னுடைய இரையை நான் உண்பதை நீ ஏன் தடுக்கிறாய். என்னைத் தடுக்காமல் அந்த புறாவை கீழே விட்டுவிடு. நான் எடுத்துக்கொண்டு போகிறேன்” என்று அதிகாரம் செய்தது. "நீ யார் என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் மனிதனைப் போலப் பேசும் உன் வல்லமை என்னை பெரிதும் வியப்படையச் செய்கிறது. எதுவானாலும், இந்தப் புறா தற்போது என் அடைக்கலமாக வந்திருக்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை. ஆகவே இந்தப் புறாவை விட்டுச் சென்றுவிடு. நீ அதை எடுத்துச் செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது!" என்றான் சிபி.உடனே அந்த கழுகு, "அரசே! உனக்கு எல்லா உயிரும் சமம்தானே. அப்படியிருக்க, என் இரையை உண்ண விடாமல் என்னைத் தடுப்பது நியாயமில்லையே நீ எல்லாருக்கும் நியாயம் சொல்ல கடமைப்பட்டவன். அப்படியிருக்க என்னையும் நீதானே காப்பாற்றவேண்டும்? பசியால் வாடும் என் நிலை என்ன? நான் பசியால் இறந்துபோக வேண்டுமா? " என்று கோபமாகக் கேட்டது .அந்தக் கழுகின் வாதம் நியாயமாகப்பட்டதால், சற்றே மனம் வருந்தி, அதனிடம், "உனக்குத் தேவையான வேறு எது வேண்டுமானாலும் கேள். நான் அதைத் தருகிறேன். பாவம் அந்த புறாவை மட்டும் விட்டுவிடு." என்று கூறினான்.உடனே இதுதான் சமயம் என்று அந்த கழுகு, "அரசே! எனக்கு மாமிசம் உடனே வேண்டும்! அது மனித மாமிசமாக இருந்தாலும் கூட பரவாயில்லை. என்னால் பசி தாங்க முடியவில்லை! உடனே உணவிற்கு ஏற்பாடு செய்” என்றது.சற்றே யோசித்த மன்னன் சிபி, “உன் பசியைப் போக்க வேண்டியதும் என் கடமைதான். அதற்காக இன்னொரு உயிரைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. உனக்கு மாமிசம்தானே வேண்டும். இதோ இந்த புறாவின் எடைக்குச் சரியாக என் தொடையில் இருந்து சதையை வெட்டித் தருகிறேன். நீ உண்டு பசியாறலாம்” என்று சொல்லி, உடனே சேவகர்களை அழைத்து தராசைக் கொண்டுவரச் சொன்னான். தராசில் ஒரு புறம் புறாவை வைத்துவிட்டு மற்றொரு புறம் தன் தொடையில் இருந்து சதையை கொஞ்சம், கொஞ்சமாக வெட்டி வைக்கிறான். ஆனாலும் அந்த தராசு இறங்கவே இல்லை. உடனே தானே ஏறி அதில் அமர்ந்த மறு நொடிதராசு சம நிலைக்கு வந்தது. அடுத்த நிமிடம் அந்த புறாவும், கழுகும் தங்கள் சொந்த உருவமான, அக்கினி தேவன் மற்றும் இந்திரனாகவும் மாறி, அவனை அன்புடன் தடவிக் கொடுக்க, அவன் தொடையில் சதை வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ரணமும் மறைந்தே போனது. அரசன் மகிழ்ந்து அந்த தேவர்களிடம் ஆசி பெற்றான். அவர்களும் சிபிச் சக்கரவர்த்தி அனைத்து நலங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று ஆசி கூறிச் சென்றனர்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 29, 2018 12:42 pm

அருமையான விளக்கம் 

ஜெகதீசன் 

மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக