புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_c10கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_m10கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_c10கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_m10கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian

29 Posts - 4%
mohamed nizamudeen
கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_c10கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_m10கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_c10கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_m10கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில்

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Tue Aug 28, 2018 7:58 am

சில மாதங்களுக்கு முன்பு ஆண்டாளை வைரமுத்து கொச்சைப் படுத்திவிட்டார் என்று சொல்லி ஒருக் கூட்டமே அவரை வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடியது. கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆண்டாள் பற்றித் 'தமிழை ஆண்டாள்' என்னும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு அதை கடந்த மார்கழி மாதத்தில் திருவில்லிபுத்தூரில் ஒரு மேடையில் வாசித்தார். அவர் 'ஆண்டாள் திருவில்லிபுத்தூர் கோவிலில் தேவதாசியாக வாழ்ந்து மடிந்தார்' என்று வேறொருவர் சொன்ன ஒரு விஷயத்தை  அந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டி இருந்தார். இதைப் பெரிய ஒரு பிரச்சனையாக்கித் தேவையில்லாத ஆர்பாட்டம் செய்து மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொண்டது இந்தக் கூட்டம்.

கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Kisspng-lakshmi-ranganathaswamy-temple-srirangam-thiruppa-new-england-jetusainfo-5b6c23a8402e95-4233898815338136722629

இது பலநாட்களாக என் மனதில் இருந்து சமூக வலைதளங்களில் மட்டும் இதைப் பற்றி ஏதாவது எழுதிப் பதிவிட்டு வந்தேன். ஆனால் அதைப் பற்றித் தெளிவாகக் கட்டுரை எழுதி, இந்த வீண்போராட்டம் செய்தவர்களைச் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பலநாட்களாக என் மனதில் இருந்தது. அதன்விளைவாக உருவான பதிவுதான் இது.

முதலில் பாரதியார் எழுதிய ஒரு அற்புதமான பாடலை மேற்கோள் காட்டி உங்கள் முன் வைக்கிறேன்:

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
 அலையும் அறிவிலிகள் -- பால்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
 டாமெனல் கேளீரோ?1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
 மயங்கும் மதியிலிகாள் -- எத
னூடும் நின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
 றோதி யறியீரோ?2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
 சுருதிகள் கேளீரோ? -- பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
 பெருமை யழிவீரோ?3
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
 வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
 வேத மறியாதே.4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
 நான்மறை கூறிடுமே -- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
 நான்மறை கண்டிலதே.5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
 பூணு நிலையாமே -- உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
 சான்றவர் கண்டனரே.6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
 காட்டும் மறைகளெலாம் -- நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
 அவங்கள் புரிவீரோ?7
உள்ள தனைத்திலு முள்ளொளி யாகி
 யொளிர்ந்திடு மான்மாவே -- இங்கு
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
 கூவுதல் கேளீரோ?8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
 வெறுங்க தைகள்சேர்த்துப் -- பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்முறை
 காட்டவும் வல்லீரோ?9
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்
 உணர்வெனும் வேதமெலாம் -- என்றும்
ஒன்றுபிரம முளதுண்மை யஃது
 உணர்வெனக் கொள்வாயே.10

இன்று இந்துமதத்தைச் சனாதன தர்மத்தைக் காப்பாற்றுகிறோம் என்றுக் கிளம்பியிருக்கும் பலருக்கு, உண்மையாக இந்தச் சனாதன தர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றே தெரியாது. இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் வைரமுத்துவைப் பழித்தவர்களே இந்து மதத்தின் உண்மையான எதிரிகள் என்பது விளங்கும்.

பாரதியின் இந்தப் பாடலில் கவனிக்க வேண்டிய வரிகள் இவை:

“வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
 வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
 வேத மறியாதே.”

இந்துமதத்தைப் பொறுத்தவரைக் கடவுள் என்பது எங்கும் எல்லாமுமாய் நிறைந்திருக்கிற, ஆதி அந்தம் இல்லாத, குணங்கள் இல்லாத (நிர்குண பிரம்மம்), ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயிர்தன்மையாய் இருக்கின்ற, தன்னை உணர்ந்தறிந்தால் பிரத்தியக்ஷமாக அனுபவத்தில் உணர்கின்ற வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. மனித மனம் இதை முதலில் புரிந்து கொள்ள முடியாது என்பதால், வெவ்வேறு மனிதர்களின் தன்மைக்கேற்ப வெவ்வேறு உருவங்களை உருவாக்கி சகுண பிரம்ம உபாசனை என்ற ஒரு ஆன்மீக சாதனத்தை உருவாக்கினார்கள்.

இதன் ஒரே நோக்கம் ஒரு மனிதன் வாழும்போதே மனத்துயரத்தில் இருந்து விடுதலையடைந்து முழுமை உணர்வும், பூரண திருப்தியும், மனச்சாந்தியும், பேரின்பமும் அடைந்து , தன்னைப் பிணைக்கும் எல்லாத் தளைகளையும் தகர்த்தெறிய வேண்டும் என்பதே!

ஆனால் இன்று பல மனிதர்களுக்கு பக்தி என்பது, முக்திக்கான சாதனமில்லை. அது கடவுளிடம் பேசும் ஒரு டீலிங் ஆகிவிட்டது. 'கடவுளே, என் பெண்ணிற்குக் கல்யாணம் ஆனால் நான் உனக்கு மொட்டை போடுகிறேன்' என்று வேண்டிக்கொள்ளுவதற்காகத் தான் பலருக்கு இன்று கடவுள் பயன்படுகிறார். ஒரே வரியில் சொல்லப் போனால், இவர்களுடைய ஆசையும் பயமும் உருவாக்கும் ஒரு மனபிம்பம்தான் இந்தக் கடவுள். ஆனால், இதற்கும் சனாதன தர்மத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. பாரதியாரின் மற்றும் சில அழகான வரிகள் இதோ:

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்.
1

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.
2

இன்னொரு முக்கியமான விஷயம். 'வசுதா ஏவ குடும்பகம்' என்கிறது மஹா உபநிஷத். இதற்கு 'இந்த பூமியே ஒரு குடும்பம்' என்று பொருள். கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வாக்கியமும் இதைப் போன்றதே. இந்த வாக்கியங்கள் அன்பை வலியுறுத்துகின்றன. ஆன்மிகப் பாதையில் அன்பு மிக முக்கியமானது. அதனால்தான் 'உன்னைப் போல் பிறரையும் நேசி' என்று மஹாஞானி இயேசுவும் கூறினார். நம் நாட்டில் 'வணக்கம்' 'நமஸ்காரம்' என்று கூறுவதற்கெல்லாம் பொருள், 'நான் உனக்குள் இருக்கும் இறைத்தன்மையை வணங்குகிறேன்' என்பதே. நீ பிற மனிதனை நேசித்தால்தான் கடவுளையும் நேசிக்க முடியும் என்கிறது சனாதன தர்மம்'.

அதைத்தான் திருமூலரும் கீழ்க்கண்ட பாடலில் கூறுகிறார்

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே  (திருமந்திரம் : -270)

ஆன்மீகம், மதம், அதன் கோட்பாடுகள் போன்றவை மனிதனுக்காக உருவாக்கப் பட்டவை. மனிதன் அவற்றிற்காக உருவாக்கப் படவில்லை. பைபிளில் கூட இந்தக் கருத்து வருகிறது:

23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.
25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.
27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.
மாற்கு 23 - 28

அவமதிக்கவே முடியாத பரம்பொருளை ஒருவர் அவமதித்ததாகச் சொல்லி, அந்த மனிதனை வாய்க்கு வந்த படியெல்லாம் மனிதாபிமானம் இல்லாமல் திட்டுவதை பக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கும், சனாதன தர்மத்தைப் பற்றி உண்மையில் எதுவும் அறியாதக் கூட்டம்தான் வைரமுத்துவை விமர்சித்தது. ஆண்டாள் உயிரோடிருந்திருந்தால் அவளே இந்தக் கூட்டத்தை வன்மையாகக் கண்டித்திருப்பாள்.

வைரமுத்துவுக்கும் கடவுளுக்கும் என்ன விரொதம் இருக்க முடியும்?  விரொதம் வைக்கக் கடவுள் மாமன் மச்சானா அல்லது பக்கத்து வீட்டுக்காரனா? சனாதன தர்மத்தைப் பொருத்தவரைக் கடவுள் என்பது ஆத்ம சொரூபம். 'ஆத்மா' என்ற வார்த்தைக்கு உண்மையில்  'தான்' என்று பொருள். 'அஹம் தர்ப்பனே ஆத்மானம் பஷ்யாமி' என்று வடமொழியில் கூறினால், 'நான் என்னைக்  கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேன்' என்று பொருள்.  ஆத்மசொரூபம் என்பது ஒருவனின் சுய சொருபமே தவிர வேறில்லை. ஆனால், அவரைப் பற்றி ஒரு பெரும்கூட்டமே என்ன என்ன வசைமொழிகளையெல்லாம் அவர்மேல் வைத்தது? கேட்க முடியாத அசிங்கமான வார்த்தைகளால் உங்கள் மனித இனத்தைச் சார்ந்த ஒரு அழகான மனிதனை, தமிழ்மொழியின் மாபெரும் கவிஞனை இப்படியேல்லாம் பேசுவதை ஆன்மீகம் என்று நினைக்கிறீர்களா?

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், கவிஞர் வைரமுத்துவை விமர்சித்தவர்களில் தொன்னூறு சதவீதம் பேர் அவர் எழுதிய அந்த ஆய்வுக்கட்டுரையைப் படிக்கக் கூட இல்லை. ஒரு விஷயத்தை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளாமல் அதைப் பற்றி மற்றவர் வாயால் கேட்டதை வைத்து மட்டுமே விமர்சனம் செய்வது எவ்வளவு பெரிய கண்மூடித்தனம் என்பது இவர்களுக்குப் புரியவில்லை. திருவள்ளுவரின் கீழ்க்கண்ட குறளையும் இங்கு இவர்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டி இருக்கிறது:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

மூன்றாவது, வரலாற்று மனிதர்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதவும் பேசவும் தன்கருத்தைச் சொல்லவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அப்படிப்பட்ட ஒருக் கருத்துக்கு, தர்க்க ரீதியாகக் கருத்தாலேயே பதில் சொல்வதுதான் முறை, அறிவார்ந்த செயலும் கூட. அதைவிட்டுவிட்டு அந்தத் தனிபட்ட மனிதரின் குணங்களைப் பற்றிப் பேசுவதும், வசைமொழி பாடுவதும் கண்மூடித்தனம் மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒரு பிழையும் கூட. இதை ஆங்கிலத்தில் 'ஆட் ஹோமினம்' (ad hominem) என்று சொல்வார்கள்.

நான்காவதாக ஒரு விஷயம் இருக்கிறது, அதை ஒருச் சிறிய ஒப்புமை மூலமாக விளக்குகிறேன், உங்கள் வீடு பற்றி எரிகிறது என்று நான் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை ஓடிச் சென்று அணைப்பீர்களா அல்லது 'என் வீடு மட்டுமா எரிகிறது, என் பக்கத்து வீட்டுக்காரனின் வீடும்தான் எரிகிறது, என் எதிர்த்த வீட்டுக்காரன் வீடும்தான் எரிகிறது. அவர்களைப் பற்றியெல்லாம் எதையாவது பேசுகிறாயா? ஏன் எப்போதும் என்னையே எதையாவது சொல்கிறாய்?' என்று வாதம் செய்வீர்களா? தீயை அணைக்கத்தானே வழி தேடுவீர்கள்? ஆனால் மதத்தைப் பற்றி வந்தால் மட்டும் இவர்கள், 'ஏன் ஹிந்துக்களைப் பற்றியே எதையாவது சொல்கிறாய்? அவர்கள் மதத்திலும்தான் இப்படியெல்லாம் நடக்கிறது' என்று பேசுவார்கள். இது ஒரு மனம் செய்யும் மாயை, தர்க்கப் பிழையும் கூட. ஆங்கிலத்தில் இதை வாட்டபௌட்டிசம் (whataboutism) என்பார்கள்.

இந்துமதம் என்று பல அரசியல் கட்சிகள் இன்றுப் பேசிக்கொண்டிருப்பது மற்ற மதங்களின் மீதுள்ள வெறுப்பினால் ஏற்பட்ட எதிர்வினைதானே ஒழிய ஆதி சங்கரர், ரமணர், ராமகிருஷ்ணர், அஷ்டவக்ரர், பதஞ்சலி போன்ற ஞானிகள் வளர்த்த சனாதன தர்மம் இல்லை என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஆண்டாளைப் பற்றிக் கூடிய விரைவில் இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 28, 2018 10:35 am

அருமையான பதிவு
திரு.சண்முகம் அவர்களே
கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் 3838410834 கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் 3838410834
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 28, 2018 12:39 pm

" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மந்திரச் சொற்கள் கணியன் பூங்குன்றனார் அவர்களால் சொல்லப்பட்டது . பரிமேலழகரால் அல்ல .

ஆண்டாளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் நல்ல செய்திகள் இருக்கும்போது , அவர் தேவதாசியாக வாழ்ந்தார் என்ற செய்தியில் அக்கறை காட்டுவானேன் ? அதையும் தானே சொல்வதற்குத் துணிவின்றி இன்னொருவர் தோள்மீது ஏறிக்கொண்டு சொல்வானேன் ?

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் .

என்ற ஐயன் வள்ளுவனின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆயினார் வைரமுத்து .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Tue Aug 28, 2018 1:46 pm

M.Jagadeesan wrote:" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மந்திரச் சொற்கள் கணியன் பூங்குன்றனார் அவர்களால் சொல்லப்பட்டது . பரிமேலழகரால் அல்ல .

ஆண்டாளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் நல்ல செய்திகள் இருக்கும்போது , அவர் தேவதாசியாக வாழ்ந்தார் என்ற செய்தியில் அக்கறை காட்டுவானேன் ? அதையும் தானே சொல்வதற்குத் துணிவின்றி இன்னொருவர் தோள்மீது ஏறிக்கொண்டு சொல்வானேன் ?

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் .

என்ற ஐயன் வள்ளுவனின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆயினார் வைரமுத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1275474

நன்றி.. ஏதோ ஒரு நினைவில் பரிமேலழகர் என்று எழுதிவிட்டேன். இப்போது திருத்த முடியவில்லை சிரி

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 28, 2018 2:49 pm

M.Jagadeesan wrote:" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மந்திரச் சொற்கள் கணியன் பூங்குன்றனார் அவர்களால் சொல்லப்பட்டது . பரிமேலழகரால் அல்ல .

ஆண்டாளைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் நல்ல செய்திகள் இருக்கும்போது , அவர் தேவதாசியாக வாழ்ந்தார் என்ற செய்தியில் அக்கறை காட்டுவானேன் ? அதையும் தானே சொல்வதற்குத் துணிவின்றி இன்னொருவர் தோள்மீது ஏறிக்கொண்டு சொல்வானேன் ?

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் .

என்ற ஐயன் வள்ளுவனின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆயினார் வைரமுத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1275474

என்னுடைய கருத்தும் இதேதான்.

கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 28, 2018 2:49 pm

சண்முகம்.ப wrote:
நன்றி.. ஏதோ ஒரு நினைவில் பரிமேலழகர் என்று எழுதிவிட்டேன். இப்போது திருத்த முடியவில்லை சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1275487

திருத்தப்பட்டது.

கவிஞர் வைரமுத்துவும் ஆண்டாள் சர்ச்சையும் - ஒரு சாமான்யனின் பார்வையில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 28, 2018 3:18 pm

நன்றி சண்முகம் .
எதற்கு என்று உங்களுக்கு புரிந்திருக்கும். புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக