ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன?

2 posters

Go down

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Empty ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன?

Post by சண்முகம்.ப Mon Aug 27, 2018 9:40 pm

வாழ்க்கை ஒரு வட்டம். அதில் வலியும் சுகமும் மாறி மாறி வரும்.  வெற்றியும் தோல்வியும் திரும்பத் திரும்ப வந்து சேரும். குளிரும், உஷ்ணமும், இரவும் பகலும் என இயற்கையில் அனைத்தும் சுழலும். இந்த சுழற்சியுடன் சேர்ந்து மனதும் சிக்கிச் சுழல்வதால்தான் மனிதனுக்குத் துன்பம் ஏற்படுகிறது.

கையளவு மனது; அதில் கடலளவு கனவு! அதில் ஆசைகளும் பயங்களும் ஏராளம்; விருப்பு வெறுப்புகள் ஏராளம். எண்ணங்கள், உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகளெல்லாம் எக்கச்சக்கம். காலம் என்ற பாதையில் பின்னாலிருக்கும் கடந்தகாலம் தெரியும்; ஆனால் முன்னாலிருக்கும் எதிர்காலம் தெரியாது. இந்த நாளையை நோக்கி, எதிர்காலத்தை நோக்கி மனிதன் முழுமையைத் தேடிப் பயணிக்கிறான். தன் லட்சியங்கள், ஆசைகளெல்லாம் நிறைவேறி விட்டால் முழுமையான, பூரணத்துவமான பரம திருப்தியும் மன அமைதியும் இன்பமும் வந்துவிடும் என்று எண்ணுகிறான். ஆனால் உண்மை என்ன?

1978ம் வருடம் ப்ரிக்மென் என்பவரும் புல்மென் என்பவரும்  (Brickman, Coates, & Janoff-Bulman ) இணைந்து உளவியல் துறையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.  விபத்தில் கைகால்கள் இழந்தவர்களும் லாட்டரியில் பல லட்சம் பரிசு வாங்கியவர்களும் காலப்போக்கில் ஒரே அளவு சந்தோஷத்தைத்தான் அனுபவிக்கின்றனர் எனக் கண்டறிந்தனர். ஒரு மனிதன் எந்தவித இன்பத்தையோ துன்பத்தையோ தற்காலிகமாக அனுபவித்தாலும் விரைவில் அது ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். புதிதாக  ஒரு கார் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கார் வாங்கிய சில நாட்கள் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். பிறகு உங்கள் சந்தோஷம் ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். அந்த இயல்பு நிலையிலேயே நீங்கள் இருக்கலாம் என்று நினைத்தால் அது முடியாது. ஏனென்றால் இயல்பு நிலையில் முழு மனநிறைவு இருக்காது.  அதனால் எதோ ஒன்றை நினைத்து மறுபடி ஆசை எழும்; ஆசைப்பட்டது கிடைத்தவுடன் ஒரு சிறிய தற்காலிக சந்தோஷம். பின்பு மறுபடியும் நிறைவில்லாத அந்த இயல்பு நிலை. துக்கமான ஒன்று நடந்தாலும் அந்த துக்கமும் தற்காலிகம்தான். மறுபடியும் இயல்பான அந்த நிலைக்குத் திரும்பிவிடும் மனது.

இது ஒரு ட்ரெட்மில்லில் ஓடுவது போன்றது. எவ்வளவு ஒடினாலும் நீங்கள் அதே இடத்தில்தான் இருப்பீர்கள்.  அதனால்தான் இந்த உளவியல் கோட்பாட்டிற்கும் ஹெடானிக் ட்ரெட்மில் தியரி (Hedonic Treadmill Theory) என்று பெயரிட்டார்கள். ஹெடானிக் என்றால் ‘இன்பத்தைப் பற்றிய’ என்று பொருள்.  ட்ரெட்மில்லிற்கு ‘மிதி செக்குருளை’ என்ற வார்த்தையை தமிழாக்கமாக சிலர் உபயோகிக்கின்றனர். அதனால் நாம் இந்தக் கோட்பாட்டினை ‘இன்பமிதி செக்குருளை கோட்பாடு’ எனத் தமிழில் அழைக்கலாம். இது இப்போது ஒரு அறிவியல் உண்மை.

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Kisspng-treadmill-life-fitness-exercise-bikes-physical-fit-fitness-treadmill-5b05dd9b6d5687-7523173115271110674479

மனிதன் வாழ்க்கை முழுவதும் வேறு வழியின்றி இந்தச் செக்குருளையிலேயே ஓடிக் கொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்கு முழுமை உணர்வு மட்டும் கிடைப்பதே இல்லை. இந்த உண்மையை அனுபவத்தில் புரிந்து கொண்டவுடன் உலகப் பொருட்களில் ஒருவனுக்குப் பற்றுதல் குறைகிறது. இந்த பற்றுதல் குறைந்த நிலையைத் தான் வைராக்கியம் என்கிறார்கள். வைராக்கியம் உள்ள மனிதன் இந்த சமூகத்தில் எல்லோரையும் போல் வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல முழுதும் ஒட்டாமல் வாழ்கிறான். உள்முகத் தேடலில் பயணித்து முழுமையை வெளியில் தேடாமல் உள்ளுக்குள் தேடுகிறான். தன்னை உணர்ந்து முழுமை அடைந்து மனத்துயரங்களில் இருந்து நிரந்தர விடுதலை அடைகிறான். இதையே ஆத்ம ஞானம் எனவும் ஜீவன்முக்தி எனவும் கூறுகிறார்கள்.

எப்படி களிமண்ணினால் ஆன வெவ்வேறு பொம்மைகளின் வடிவங்கள் வேறுபட்டாலும் மூலப்பொருள் ஓன்றாக இருக்கிறதோ அதைப்போல உங்கள் அனுபவத்தில் நீங்கள் எதையெல்லாம் ஐம்புலன்களாலும் மனதாலும் உணர்கிறீர்களோ அவை எல்லாவற்றிர்க்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்கிறது வேதாந்தம். நீயே அந்த ஒன்று என்கிறது சாந்தோகிய உபநிஷத் (தத்வமஸி). ஒரு மனிதன் தன்னை உடலோடும் மனதோடும் அடையாளப் படுத்திக் கொள்வதால் ‘தான் வேறு, இந்த உலகம் வேறு’ என்ற உணர்வில் வாழ்கிறான். அதனால் அவனுக்கு ‘இருப்பது ஒன்றே ஒன்று தான்’ என்ற உண்மை அனுபவமாக இல்லை. ஆத்ம ஞானம் பெற்றதும் ஒரு மனிதனுக்குத் தான் மனதில் கற்பித்துக் கொண்ட எல்லைகள் மறைகின்றன.

மனதையும் உடலையும் ‘நான்’ என்று அடையாளப் படுத்திக் கொண்டு, அவை தவிர மற்றவை ‘நானல்ல’ என்ற பாவனை தன்னுடைய அனுபவத்தில் இருந்து கொண்டிருக்கும்வரை அவனது மனத்துயரமும் மறையாது, முழுமையும் கிட்டாது. ஆனால், தான் மனதில் கற்பித்துக் கொண்ட எல்லைகள் மறைந்தவுடன் அவன் எப்போதும் முழுமை பெற்றவனாகவே இருந்து வந்திருக்கிறான் என்பதை உணர்கிறான். எல்லைகளே இல்லையென்றாகிவிட்டால் எல்லாமும் தானே என்று உணர்ந்துவிட்டால் என்ன மனக்குறைவோ முழுமையற்ற உணர்வோ இருக்க முடியும்?



Last edited by T.N.Balasubramanian on Mon Aug 27, 2018 10:04 pm; edited 1 time in total (Reason for editing : deletion of blog address)


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Empty Re: ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன?

Post by T.N.Balasubramanian Mon Aug 27, 2018 10:03 pm

சண்முகம் அவர்களே ,
புதியவர் நீங்கள்.
ஈகரை விதிமுறைகளை https://eegarai.darkbb.com/t141766-topic உங்களுக்காக .

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

விதிமுறைகளை படித்து பின்பற்றவும்.

வலைதள முகவரி நீக்கப்படுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Empty Re: ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன?

Post by சண்முகம்.ப Tue Aug 28, 2018 4:04 am

T.N.Balasubramanian wrote:சண்முகம் அவர்களே ,
புதியவர் நீங்கள்.
ஈகரை விதிமுறைகளை https://eegarai.darkbb.com/t141766-topic உங்களுக்காக .

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

விதிமுறைகளை படித்து பின்பற்றவும்.

வலைதள முகவரி நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275420

நிச்சயம் இனி பின்பற்றுகிறேன்... நன்றி


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன? Empty Re: ஆத்மஞானம், முக்தி, மோட்சம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum