புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காடும் காடர்களும்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தோழமைக்கு வணக்கம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு என் எழுத்தைப் பதிவிட வந்துள்ளேன். பணி மாறுதல் மற்றும் அதுசார்ந்த பல்வேறு பணிகளில் என் கட்டுரையைத் தொடர முடியவில்லை. தற்பொழுது என் எழுத்தைத் தொடரும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்ல புதிய தொடர் ஒன்றையும் எழுதும் சூழல் வாய்த்திருக்கின்றது.
நான் ௨௦௦௭ இல் வால்பாறைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியேற்றபோது அங்கு வாழும் பழங்குடியின மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு மாணவியின் உதவியோடு முதலில் வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற இடத்தில் வாழும் காடர்களை அடர்ந்த காட்டிற்குள் சென்று சந்தித்தேன். சென்ற பாதையின் தன்மை என்னைப் பயப்படுத்தினாலும் ஆர்வத்தில் சென்றது தான். அம்மக்கள் முதலில் என்னைச் சந்திக்க மறுத்தாலும் என்னை அழைத்துச் சென்ற பெண் அவர்களைப் பற்றி அறிந்திருந்ததால் முதலில் மூப்பரைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தந்தார். மூப்பரிடம் என்னால் அவர்களுக்கு எவ்விதத்திலும் துன்பமில்லை என்பதை உணர்த்தி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இவ்வளவு தூரம் வந்திருப்பதாகவும் என் பெயர் நான் பணியாற்றும் கல்லூரி முதற்கொண்டு என்விவரங்களைத் தெரிவித்த பிறகே என்னிடம் அன்பாகப் பேசினர். அதன்பிறகு மூப்பர் அங்குள்ள மக்களில் சிலரை எனக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் எனக்கு மாங்காயும் தேனும் கொடுத்து உபசரித்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின்னர் அடர்ந்த காட்டிற்குள் தனியே வருவது பாதுகாப்பல்ல என்று கூறி எச்சரித்து நாங்கள் திரும்பும்போது எங்களோடு துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார்கள்.
வீட்டிற்கு வந்த பிறகு அம்மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர அதை எப்படி செயற்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிபடாத போது அவ்வனத்தில் இருந்த ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்கள் எனக்கு அறிமுகமானார்.
அம்மக்களைப் பார்த்துவிட்டு வந்த சில நாட்களில் அம்மக்கள் என்னைப் பற்றி அவரிடம் தெரிவிக்க, வால்பாறை நகராட்சி சிறுபகுதி என்பதாலும் நான் கல்லூரியில் பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்ததாலும் என்னைக் கண்டறிந்து அறிமுகமாவது அண்ணாவிற்கு எளிமையாக இருந்தது. அவரிடம் அம்மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற என் ஆர்வத்தை வெளியிட்டபோது அவ்வளவு எளிதாக யாரிடமும் அவர்கள் தங்களைப்பற்றி வெளியிடுவதில்லை. தனியே சென்று அவர்களைப் பார்ப்பது பாதுகாப்பானதும் அல்ல. ஏனென்றால் அடர்ந்த காடு என்பதால் இடைவழியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி அங்குள்ள ஓராசிரியர் பள்ளியில்தான் நான் பணியாற்றுகிறேன் என்றும் அங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய இயலுமா? என்றும் கேட்டார்.
ஏற்கனவே அக்காடர் இன மக்களும் அன்பாய் என்னிடத்து தனியே வரவேண்டாம் என்று கூறியது போலவே இந்த ஆசிரியரும் கூறுகின்றாரே என்று முதலில் நினைத்தாலும் அவர்கள் சொல்வதும் உண்மைதானே என்றிருந்தது. என்றாலும் அம்மக்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குச் செய்யும் இவ்வுதவிகள் எனக்குப் பேருதவியாக இருக்கும் என்று கருதி சரி என்று கூறி அங்குள்ள குழந்தைகளுக்குச் சீருடை வாங்கிக் கொடுத்தேன். அண்ணன் இளங்கோ அவர்கள் சீருடைகளை நான் தான் அக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன் என்பதை அம்மக்களிடம் தெரிவிக்க அம்மக்களுக்கு என்மீது நல்ல மதிப்பு ஏற்பட அதுவே காரணமாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து அக்குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள், எழுதுகோல்கள் என வாங்கிக் கொடுத்தேன். பள்ளி ஆண்டுவிழாவிற்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து அம்மக்களுடன் ஒரு நெருக்கமான உறவை இளங்கோ அண்ணா ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு என்னை என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லுமளவிற்கு அவர்களுடன் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி முடிந்தவரை அங்குச் சென்றபோதெல்லாம். அறிந்து கொண்டேன். அறிந்ததை எழுதியும் வைத்தேன். ஆனால் எதுவும் முழுமை அடையவில்லை.
திருமணம் ஆனபிறகு என்னால் இப்படி சென்று தகவல்களைப் பெறமுடியவில்லை. அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் குறைந்து போனது. வார நாட்களில் சந்தையின் போது காடர் இனமக்களைப் பார்க்கும் போது அவர்களை நலம் விசாரிப்பதோடு சரி. அவர்கள் பார்த்தாலும் மறவாது என்னை நலம் விசாரித்துச் செல்வர்.
இடையில் குழந்தைப்பேறு மற்றும் பணிமாறுதல் எனப் பலவிஷயங்களுக்கிடையில் மீண்டும் நான் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி பெயர் து. சரண்யா.
அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண்.அவரைப்பார்த்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்ட அனுபவமே என்முன் நின்றது. குடும்பம், பணிமாறுதல் எனப் பல்வேறு காரணங்களுக்காக தொய்வுற்ற என் ஆர்வம் தற்பொழுது மீண்டும் எழுந்துள்ளது. எனக்குள்ள ஆர்வத்தை வகுப்பறையில் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல. ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் குடியிருப்புப் பள்ளிக்கு நான் சென்று உதவியபோது உதவிபெற்றவர் என்பதும் அவள்பேச்சில் அறிந்து கொண்டேன். அன்றைய நாட்களின் புகைப்படங்களைக் காட்டியபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. புகைப்படங்களில் இருப்பவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றபோது அவள் முகத்தில் ஒரு ஆதங்கம். அன்றைக்கு எனக்குத் தகவல் வழங்கியதில் சரண்யாவின் அம்மாவும் ஒருவர். தன் அம்மாவை இளம்வயது தோற்றத்தில் பார்த்தவுடன் அவளுக்கு ஒரு நெகிழ்ச்சி. இப்படி எங்களுக்குள் ஒரு புரிதல் வந்தவுடன் பணியேற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற என் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறது. சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.
தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். அவர் தரும் தகவலில் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தன் குடில் பெரியவர்களிடம் கேட்டறிந்து போக்குவதும் அவள்தான். ஆதலின் அவள் பெயரும் இத்தொடரில் இடம்பெறும். நாங்கள் இருவராக இணைந்து இத்தொடரை எழுத விரும்புகிறோம். அதற்கு அனுமதி வழங்கும்படி தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன். என் பழைய தொடரும் இனி தொடரும்..
நன்றி. வணக்கம்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தொடருங்கள் முனைவர் அவர்களே !
தனக்கு தடையில்லாத சீரான நடையோட்டம் . பழங்குடி மக்களின் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ! அத்தோடு இலக்கியப் பணியும் இனிதே தொடரட்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தோழமைக்கு வணக்கம்.
அனுமதிக்கு நன்றி ஐயா . புதிய தொடருடன் என் பழைய தொடரும் இனி தொடரும்.

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
காடர் இனப் பாடல்
ஆனமல அடவிக்கிருக்கும் ஆதிவாசி நாங்கள் ஐயா
ஆதிவாசி நாங்கள்
உள்ளவும் வேறுவேறு இருப்பிடவு நாங்கள் ஐயா
இருப்பிடவு நாங்கள்
ஈற்றையின் கண்டிலைய செத்திரு கூரைய ஒன்றின வச்சிறு ஐயா
கூரைய ஒன்றின வச்சிறு
குளிரு காற்று வாராத அடப்ப ஒன்றின கெட்டிரு ஐயா
அடப்ப ஒன்றின கெட்டிரு
சேரியின் நடுவைக்கு கணப்ப ஒன்றின கூட்டுறு ஐயா
கணப்ப ஒன்றின கூட்டுறு
முதுகுக்குச் சூட்டாத கிடப்பிடவு நாங்கள் ஐயா
கிடப்பிடவு நாங்கள்
மரப்பனையின் கோலெடுத்திரு பாறைக்கு வச்சிரு குட்டிரு ஐயா
பாறைக்கு வச்சிரு குட்டிரு
அதின் மாவெடுத்திரு கூழக்காச்சிரு தின்பிட சாதி நாங்கள் ஐயா
தின்பிட சாதி நாங்கள்
வெலிய வெலிய குட்டமாளி மரமேறும் நாங்கள் ஐயா
மரமேறும் நாங்கள்
கனியாளித் தேனச் சுட்டுறு தின்பிட சாதி நாங்கள் ஐயா
தின்பிட சாதி நாங்கள்
அடவியிலே கிடக்கும் காயும் கனியும் ஒக்க ஐயா
காயும் கனியும் ஒக்க
பச்சையோடு கடிச்சிறு தின்பிடசாதி நாங்கள் ஐயா
தின்பிட சாதி நாங்கள்
அடவியிலே கிடக்கும் ஏலக்காயும் புளிச்சியும்
ஒற்றுமையா எடுத்திறு உரான துளக்க வச்சு
கோட்டான போல ஆற்றில் குடியிருப்பிட நாங்கள் ஐயா
குடியிருப்பிட நாங்கள்

முனைவர் ப.குணசுந்தரி
து.சரண்யா தமிழ் இலக்கியம், இரண்டாமாண்டு
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
முதல் கதை
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப்பிள்ளை
அம்பட்டாஞ்சேயார் மலையாணிப் பிள்ளையின் மாமியாள் தீராத நோயால் அவதிப்பட்டாள். இதனைக் கண்ட மலையாணிப் பிள்ளையின் மனைவி மிகவும் வருந்தினாள். ஒரு நாள் காலையில் வெயில்காய வேண்டுமென அந்த மூதாட்டி கூறினாள். அதனால் அனைவரும் மலையாணிப் பிள்ளையின் வீட்டு முற்றத்தில் வந்து அமர்ந்தனர். அப்போது மேலே ஒரு ஓங்கல் ( பிணந்திண்ணிக் கழுகு) பறந்ததைக் கண்டு அதன் இறைச்சி வேண்டுமெனக் கேட்டாள் மூதாட்டி. உடனே மலையாணிப் பிள்ளை தன் அம்பை எடுத்து ஓங்கலின் மேல் எய்தான். ஓங்கல் அந்த அம்பைச் சுமந்தபடியே நெடுந்தொலைவிற்குப் பறந்து சென்றது. அந்த ஓங்கல் பறவை புலிப் பொன்ப கியத்தி என்ற கிழவியின் வீட்டின் முன் விழுந்தது.
புலிப்பொன்ப கியத்தி என்பவள் புலிக்குப்பாயம் (புலி வேடம்) அணிபவள் . அந்தக் குப்பாயம் உயிருள்ளதாக இருந்தது. தான் எய்த அம்பைத் தேடி மறுநாள் காலையில் மலையாணிப்பிள்ளை சென்றான்.
மலையாணிப்பிள்ளை வீட்டிலிருந்து கிளம்பும் நேரத்தில் அவனுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாகக் கூறினாள். இருப்பினும் மலையாணிப்பிள்ளை தன் பயணத்தைத் தொடரவே விரும்பினான். ( சங்க இலக்கியங்களில் தலைவன் பொருள் தேடிச் செல்லக் கருதும் வேளையில் தலைவி செலவழுங்குவிக்கக் கூறும் காரணம் போன்று இக்காடர் கதையில் வரும் தலைவியும் தலைவன் அம்புதேடிச் செல்வதை விரும்பவில்லையோ? என்ற ஐயம் எழுகிறது. ஐயம் தான். அப்படி இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. சரண்யாவிடம் கேட்டதற்கு கதையில் தலைவன் வெளியே செல்லக் கருதும் போது அவன் வீடு திரும்ப நாளாகும் என்ற எண்ணம் தலைவிக்குத் தெரியும் என்று கூறுகிறார். ஒருவேளை அதனால்தான் அப்படி சொல்லியிருக்கலாம் என்றும் கூறினார்.
மலையாணிப்பிள்ளை தன் பயணத்திற்குத் தேவையான பொருள்களாக புறை (சூரல் என்னும் கொடியினால் செய்த பை ) ஒரு வில், ஒரு அம்பு இவற்றை மட்டும் கையில் கொண்டு சென்றான். மலையாணிப் பிள்ளையின் புறை பேசும் தன்மையுடையது.

கதையின் தொடர்ச்சி
மலையாணிப்பிள்ளை தனக்குத் தேவையான பொருள் அனைத்தையும் எடுத்துக் கொண்டானா ? என்பதை அறிய புறை அவனை நோக்கி,
கூறக் கூறப் பூணி எடுத்தள்ளோ?
குறுமந்தன் கோல்வடி எடுத்தள்ளோ?
பாதிரி அம்பு வலக்கை பிடித்தள்ளோ?
அம்பட்டாஞ் சேயார் மலையாணிப் பிள்ளே!
(பூணி - புறை , குறுமந்தன் கோல்வடி - கிழங்கு அகழும் குச்சி, பாதிரி - வில் )
எனக் கூறியது. (புறை கேட்பதற்கான பதில் மலையாணிப்பிள்ளையிடம் இல்லை.) மலையாணிப்பிள்ளை தன் அம்பைத் தேடி நெடுந்தூரம் சென்றான். அப்போது மலையாணிப்பிள்ளை சென்ற பாதையில் ஒரு காட்டுப்பன்றி கிடந்து உறங்குவதைக் கண்ட புறை மலையாணிப்பிள்ளையிடம்
குத்தும் கூர்மூக்கு பந்னி(நி) கைத்துமறிய துஞ்சிடா
லதே லெதெடுத்(து) லம்பர பூணியில் இட்டள்ளோ
அம்பட்டாஞ் சேயார் மலையாணிப் பிள்ளே!
(துஞ்சிடா - தூங்குதல் )
எனப் பாடியது. இதைக் கேட்ட மலையாணிப்பிள்ளை அந்தப் பன்றியை வேட்டையாடி புறையினுள் இட்டபடியே தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
மலையாணிப்பிள்ளை தான் சென்ற வழியில் இருந்த விலங்குகளை எல்லாம் வேட்டையாடுவதற்காக புறை ஒவ்வொரு விலங்கைக் காணும்போதும் பாடல் பாடத் தொடங்கியது.

முன்பு போலவே புறை மீண்டும் மானைக் கண்டவுடன்
லதே! ! கங்ஙன் கலமான் கைத்துமறியத் துஞ்சிடா
லதே லெதெடுத்(து) தம்பறப்பூணியின் இட்டள்ளோ
அம்பட்டாஞ் சேயார் மலையாணிப் பிள்ளே!
(கங்ஙன் - கத்துகிற, கலமான் - கொம்புள்ள மான்)
என்று பாடியது. மலையாணிப் பிள்ளை அந்த மானையும் வேட்டையாடி தன் புறையில் போட்டான் . தான் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை ஏழு மாடங்களில் உலர வைக்க வேண்டுமென நினைத்தான்.
லதே! ஓடங்ஙி நல்ச்சளுங்கு கைத்துமறியத் துஞ்சிடா
லதே! லெதெடுத்(து) தம்பறப்பூணியில் இட்டள்ளோ
அம்பட்டாஞ் சேயார் மலையாணிப் பிள்ளே!
(ஓடங்ஙி - செதில், நல்ச்சளுங்கு - உடும்பு)
என உடும்பின் ஒருவகை இனத்தைப் பார்த்து புறை பாடியது. உடனே மலையாணிப்பிள்ளை அந்த உடும்பைக் கொன்று புறைக்குள் போட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் கீரி படுத்திருப்பதைக் கண்ட புறை மலையாணிப் பிள்ளையை நோக்கி அதனை எய்து புறையினுள் இடுமாறு இவ்வாறு பாடியது.
குளக்கால் நல்வெருகு கைத்துமறியத் துஞ்சிடா

(குளக்கால் - குறுகிய கால், நல்வெருகு - கீரிப்பிள்ளை)
உடனே மலையாணிப்பிள்ளை அந்தக் கீரியையும் கொன்று புறைக்குள் போட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

புறை கண்டு சொன்ன எல்லா விலங்கையும் வேட்டையாடி சுத்தம் செய்து ஏழு மாடங்களிலும் உலர்த்தினான். ஏழாவது மாடத்தின் அடியில் அவன் இளைப்பாறினான். இரவு நேரம் கழியும் வரை அங்கேயே தங்கலாம் என முடிவு செய்தான்.
மறுநாள் காலையில் மலையாணிப்பிள்ளை ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தான். மலையாணிப்பிள்ளையை எழுப்புவதற்காக புறை அவனை நோக்கி
அம்பட்டாஞ் சேயார் மலையாணிப் பிள்ளே!
குயவன் திரிச்ச திரிகலயம் எடுத்தள்ளோ
நீரா நீர் மணிக்கிணற்றிங்கு திரிக்கால் வச்சு
திரி மதி கொள்ளோ
அம்பட்டாஞ் சேயார் மலையாணிப் பிள்ளே!
எனப் பாடியபடி புறை மலையாணிப்பிள்ளையைக் கிணற்றில் சென்று நீர் எடுத்துவருமாறு பணித்தது. இதைக் கேட்டும் மலையாணிப்பிள்ளை எழும்பவில்லை. மீண்டும் புறை அவனை நோக்கி
அம்பட்டாஞ் சேயார் மலையாணிப்பிள்ளே!
வான் பிறாந்து போரினே வையாமல் கோயிலில்
கொங்ஙப்புள் தட்டி கொல்லன் திரி நாட்டில்
இரிகதிரு பொரிகதிரு பால்கதிரு பைங்கதிரு
செந்தூராடப்பட்டு போரினே!
அம்பட்டாஞ் சேயார் மலையாணிப்பிள்ளே!
(வான் பிறாந்து - விடிந்ததைக் குறித்தல், கொங்ஙப்புள் தட்டி -பறவை , கொல்லன் திரி நாட்டில் - கொல்லர் இருக்கும் நாட்டில் , இரிகதிரு , பொரிகதிரு -, பால்கதிரு ,பைங்கதிரு - சூரியனுடைய கதிர்கள், செந்தூராடப்பட்டு - சிவந்திருத்தல், போரினே - எழுந்திரு )

இதைக் கேட்ட மலையாணிப் பிள்ளை எழுந்து பொறுமையாக கிளம்புவதைக் கண்ட புறை வேகமாகக் கிளம்புமாறு கூறியது. மலையாணிப்பிள்ளையை (யின்) ஆடையை அணியுமாறு பாடியது.
வானப் பூந்துருள் கச்சு வாஞ்சிமுருக் கெட்டுட
கிளக்கண்டன் காரடைய மெய்சேர்த்துக் கெட்டுட
(வானப் பூந்துருள் - , கச்சு - இடுப்பில் அணியும் ஆடை, வாஞ்சி - நன்றாக, முருக் கெட்டுட - இறுக்கிக் கட்ட , கிளக்கண்டன் -? , காரடைய - ஆடை , மெய்சேர்த்துக் கெட்டுட - உடலில் சேர்த்துக் கட்ட)
என மலையாணிப் பிள்ளை தலைப்பாகை அணிவதைக்கண்டு பாடியது. பின்பு மலையாணிப்பிள்ளை ஏழாவது மாடத்தின் மேலே ஏறினான். அப்போது புலிப் பொன்ப கியத்தியின் வீடு அவன் கண்ணில் தென்பட்டது. மாடத்தில் இருந்து இறங்கி அவன் அந்த வீட்டை நோக்கிச் சென்றான்.
புலிப்பொன்ப கியத்தியின் வீட்டில் அவளுடைய மகள் மட்டுமே இருந்தாள். புலிப் பொன்ப கியத்தி வேட்டைக்குச் சென்றிருந்தாள். மலையாணிப் பிள்ளை புலிப்பொன்ப கியத்தியின் வீட்டின் முன் சென்று நின்றான். அப்போது அந்தப் பெண் வெளியே வந்து அவனைப் பார்த்தாள். மலையாணிப் பிள்ளையைக் கண்டவுடன் புலிப்பொன்ப கியத்தியின் மகள் அவன் மீது காதல் கொண்டாள்.
மலையாணிப்பிள்ளையைக் கண்டவுடன் எந்தவொரு கேள்வியையும் கேட்காமல் அந்தப் பெண் அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் அவள் மலையாணிப் பிள்ளையைத் தன் தாய் வருவதற்கு முன் குளித்து மேல் மெத்தைக்குச் சென்றுவிடுமாறு கூறினாள். மலையாணிப்பிள்ளையும் அவள் கூறியவாறே செய்தான். தன்னுடைய அம்பு அந்த வீட்டில் இருப்பதை மலையாணிப்பிள்ளை உணர்ந்தான்.

- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5