ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

3 posters

Go down

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Empty வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

Post by ayyasamy ram Mon Aug 06, 2018 4:49 am

மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை
அள்ளி வழங்குகிறார்
சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துக்
கல்லூரியின் இணைப் பேராசிரியரும் வாழ்வியல்கலை
நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.
-
வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் P08
-
1 ‘ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’தான்
நினைவுக்கு வரவேண்டும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்),
சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே
ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல்.

இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை
எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும்
கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

2 நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில்
இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த
சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.

3 மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை
கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக
வைத்திருக்கும்.

4மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச்
சீராக்கும். கரிசலாங்கண்ணிக் கீரை, வயதானால் தோலில்
தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி,
மூப்பைக் குறைக்கும்.

5காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம்.
உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி
பிரச்னை போயே போச்சு!

6 ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, ‘ப்ராஸ்டேட்’
சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச்
சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Empty Re: வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

Post by ayyasamy ram Mon Aug 06, 2018 4:50 am

7 ”மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து
சாப்பிட முடியாது” என்பவர்கள், திரிபலாசூரணம்
சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த
சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில்
2 டீஸ்பூன் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும்,

காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த
வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும்.
சரும நோய்கள் சரியாகும்.

8 ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய்
அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள்
அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது
கூடுதல் நலம்.

9 நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக
வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம்,
பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை
சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.
-
-------------
வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் P08a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Empty Re: வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

Post by ayyasamy ram Mon Aug 06, 2018 4:52 am

10   அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம்,
துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள்
அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச்
சேர்த்துக்கொள்ளலாம்.
--
வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் 1462778213-8318

11 வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது.
தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக்
கட்டுப்படுத்தவும் உதவும்.

12 சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்
மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எ
ண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.
-
13 காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம்.
தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில்
குடித்தாலே போதுமானது.
-
14 முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது
கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத்
துடைக்கக் கூடாது.

வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும்
அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே,
முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது.
இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.

15   குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு,
அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து
மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு,
பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது.

இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி
நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.
-
----------------


Last edited by ayyasamy ram on Mon Aug 06, 2018 5:03 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Empty Re: வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

Post by ayyasamy ram Mon Aug 06, 2018 4:58 am

16 வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம்.
தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும், வயோதிகத்தைத்
தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற
பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.
-
வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Hibiscus
-
17 செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில்
தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி
மிருதுவான சருமம் கிடைக்கும்.

18 கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா?
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை
அப்படியே கண்களைச் சுற்றி ‘பேக்’ போட்டுக்கொண்டு,
20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.

நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு ‘பேக்’குமே
20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த
க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது.

அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக ‘ஃபேர்னெஸ் க்ரீம்’களை
வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம்
இருக்கிறது.

19 தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான்.
ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச்
சிறந்த மருத்துவம் இல்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Empty Re: வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

Post by ayyasamy ram Mon Aug 06, 2018 5:00 am



20 தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுச் செய்யும் நாடிசுத்தி
பிராணாயாமம், சீத்காரி மற்றும் சீதளி போன்ற பிராணாயாமப்
பயிற்சிகள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு
நல்ல மருந்து.

21 உடல் ‘ரிலாக்ஸேஷனு’க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற
யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து
வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால்,
அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத்
தக்கவைக்கும்.
--
வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் 1_17544
-
22 யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது
நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை,
‘கடனே’ என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால்
பலன் இன்னும் அதிகம்.

23 இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி
அமரும் நிலைதான் வஜ்ராசனம். ‘வஜ்ரம்’ என்றால் வைரம் எ
ன்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை
வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை.

சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில் மற்றவர்களுடன்
பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும்,
வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால்
போதும்.

24 வீட்டில் இடம் இருந்தால், பூச்செடிகள் வளர்க்கலாம்.
அந்த நறுமணம்கூட மன அழுத்தத்தைக் குறைக்கும்
மருந்துதான்.

25 புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை மெல்லுதல்
போன்ற பழக்கங்களை விட்டுவிட்டால், இளமை உங்களை விட்டு
எங்கே போகப்போகிறது?

இனி… ‘இளமை இதோ இதோ’தான்!
-
------------------------------------------
-பிரேமா
டாக்டர் விகடன் – செப் 16 -2014
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Empty Re: வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

Post by SK Mon Aug 06, 2018 12:09 pm

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் 3838410834 வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Empty Re: வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

Post by சிவனாசான் Tue Aug 07, 2018 8:44 pm

பாஸ்ட் புட் உணவை விரும்பும் மனிதர் இதை
கடைபிடிப்பானா நல்லசெய்திதான் நலமாக
நீண்டநாள் வாழநினைத்தால் பகலில் வெட்டு
வானா மனிதனா அவன் அப்படி பட்ட நாளில்
இதை கடைபிடிபானா? பிடித்தால் நல்வாழ்வு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள் Empty Re: வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum