ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் குறித்த குறிப்புகள்!!!!!

Go down

பீர் குறித்த குறிப்புகள்!!!!! Empty பீர் குறித்த குறிப்புகள்!!!!!

Post by balakarthik Thu Dec 17, 2009 7:32 pm

பீர் அருந்துதல் இன்று நம் நாட்டில் பரவலான ஒரு விடயம் . தமிழ்நாட்டில்
டாஸ்மாக்குகளில் அதிகம் விற்கப்படும் பானமாக பீர் இருக்கிறது .பீர் அருந்துவோர்
எண்ணிக்கையும் பீருக்கான சந்தையும் இந்தியாவில் நாளுக்குநாள் வளர்ந்து வரும்
ஒன்று . நம் நாட்டில் அக்காலத்தில் பீர் இல்லையென்றாலும் சோமபானம் சுரா பானம்
போன்ற வஸ்துக்கள் இருந்து வந்திருக்கிறது இவை பீரை போன்று இருந்திருக்கலாம்.
பிறகு வெள்ளையர்களின் ஆட்சியில் பீர் அருந்தும் பழக்கம் தொற்றியிருக்கக்கூடும் ,
70களில் பீர் தமிழ்நாட்டில் பெருவாரியாக நுழைந்திருக்கலாம் . இன்றும் புதிதாக
மது அருந்த பழகுகிற ஒவ்வொரு குடிகாரனும் முதலில் தொடங்குவது பீரிலிருந்தே .
இளைஞர்களை மட்டுமின்றி இளைஞிகளையும் வெகுவாக கவர்ந்து வரும் இப்பீரைப்பற்றி
ஆயிரமாயிரம் கதைகளும் சிறுசிறு தகவல்களும் வியக்கவைக்கின்றன .
இன்று பப்களிலும் பார்களிலும் டாஸ்மாக்குகளிலும் பீர் மிக முக்கிய பங்கு
வகுக்கிறது . பீர் குடிப்பதால் தொப்பை உண்டாகும் என்பது ஒரு தவறான கருத்தாகும்
பீர் குடித்தபிறகும் குடிக்கையிலும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவு மற்றும்
நொறுக்குதீனிகளாலேயே அவை உண்டாகிறதென்றும் குடித்தபின் கிடைக்கும் தூக்கமும்
ஜீரணக்கோளாறுமே என ஆய்வுகள் கூறுகிறது . அது தவிர 3.5 சதவீதமே ஆல்கஹால் அடங்கிய
பீர் குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல அளவோடு எடுத்துக்கொண்டால்
உடலுக்கு நன்மை பயக்குமென மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இனி பீர் குறித்த முதன்மை குறிப்புக்கள் :
*உலகின் முதல் சமையல் குறிப்பு பீருக்காகவே எழுதப்பட்டது .
*பீர் குறித்த சரியான ஆரம்ப காலத்திய வரலாறு என்று எதுவும் கிடையாது ,
ஆனால்10000 ஆண்டுகளுக்கு
முந்தைய மெசப்படோமிய நாகரீகத்திலேயே பீரைப்போன்ற ஒரு பானம் அருந்தப்பட்டதாக
அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
*சுமேரிய நாகரீகத்திலேயே முதன்முதலாக கோதுமையிலும் பார்லியிலும் செய்யப்பட்ட
பீர்கள் கண்டறியப்பட்டுள்ளன . சுமேரியர்கள் கோதுமை மற்றும் பார்லியால்
செய்யப்பட்ட 8 வகையான பீர்களை அருந்தியுள்ளனர். அதற்கு சாட்சியாக இன்றும்
இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் பீர் தயாரிக்க பயன்படுத்திய வெசல்கள் இருப்பது
குறிப்பிடத்தக்கது . இவர்களது எட்டு வகை பீர்களில் இன்றைய நாட்களில் இருப்பது
போல STORNG , LAGER போன்ற வகைகள் இருந்தது ஆச்சர்யமூட்டுகிறது . இது தவிர
இந்நாகரீகத்தில் அவர்களது பீரை தயாரிக்க பெண்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
இதில் அவர்கள் மதச்சடங்குகளை செய்பவர்களாக இருந்தனர் என்பது மேலும் சுவாரசியம்
. பீர்களில் சிலவகைகளை மட்டும் கடவுளுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கமும் உண்டு
. இன்று பீர் அருந்தும் அனைவரும் நிச்சயம் சுமேரியர்களுக்கு கடமை பட்டவராக
இருக்க வேண்டும் .
*அக்கால எகிப்தியர்கள்கூட பீர்கள் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் அவர்களது
பிரமிடுகளில் காணப்படுகிறது . ஆனால் நம்மைப்போலும் சுமேரியர்கள் போல் அல்லாமல்
பீருடன் நீரை கலந்து அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர்.
*பிற்காலத்தில் எகிப்தியர்கள் மூலமாக கிரேக்கர்களுக்கு இந்த பீர் தயாரிப்பு
முறை சென்றிருக்கக்கூடும் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். கிரேக்கத்தில்
பீர் பயன்பாடு இருந்தாலும் அவர்கள் விரும்பி அருந்தியது வைனையே .
*4000 ஆண்டுகளுக்கு முன்னமே சீனர்களும் ''குய் ( KUI) " என்னும் பீர் அருந்தி
வந்திருக்கின்றனர் .
*இது தவிர பாபிலோனிய நாகரீகத்திலும் பீர் பயன்பாடு அதிகமாக இருந்திருக்கிறது .
பாபிலோனியர்கள் பல வகையான பீர்களை அருந்தியுள்ளனர் . இவர்கள் தனித்தனியாகப் பீரை
அருந்தாமல் பெரிய பாத்திரங்களில் பீரை ரொப்பி அதில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி
குடிக்கும் விநோத பழக்கம் கொண்டிருந்தனர் . அதிலும் மன்னர் பரம்பரையாக
இருந்தால் அவர்களுக்கு தங்க ஸ்ட்ரா..!(உறிஞ்சி)
*பீர் தயாரிப்பில் RULE OF THUMB என்னும் ஒரு சொலவடை உண்டு , அக்காலத்தில் பீர்
தயாரிப்பில் கொதிக்கும் நீரின் வெப்ப அளவை தங்களது கட்டைவிரலால் பார்க்கும்
முறை இருந்தது , (அது தெர்மா மீட்டர்கள் இல்லாத காலம் ) ஏனென்றால் தண்ணீரில்
ஈஸ்ட்களை கலக்கும் போது நீரின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் ஈஸ்ட்கள் இறந்து
போக வாய்ப்புண்டு அதனால்தான் அக்காலத்தில் அப்படி ஒரு சொலவடை உருவானது .
*1977 ல் பீர் குடிப்பதில் 1.3 விநாடிகளில் 1 லிட்டர் பீரை குடித்ததே இதுவரை கின்னஸில் பதிவுசெய்யப்பட்ட ஒன்றாக உள்ளது


ஈகரை தமிழ் களஞ்சியம் பீர் குறித்த குறிப்புகள்!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum