ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!

3 posters

Go down

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! Empty வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!

Post by ayyasamy ram Thu Jul 12, 2018 9:01 pm

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! 201807071408277126_Viral-for-a-ARCHERY-beauty-CHOU-TZUYU--This-is-our_SECVPF
-
தமிழக இளைஞர்கள் ஷோ சூயூவை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். ‘ஜிமிக்கி கம்மல்’ செரின், ‘கண்ணழகி’ பிரியா வாரியர் வரிசையில் வைரலாகியிருக்கும் ஷோ சூயூவிற்கு புது சிக்கலும் உருவாகி இருக்கிறது. ஏனெனில் செரினின் நடனத்தையும், பிரியா வாரியரின் கண் சிமிட்டலையும் ரசித்தவர்கள், இந்த கொரிய அழகியை காதலியாக மாற்றி கொண்டுள்ளனர். அதனால் சமூக வலைத் தளங்களில் ஷோ சூயூவிற்கு போட்டா-போட்டி நடக்கிறது.

‘என்னுடைய ஆளு’, ‘என்னுடைய காதலி’, ‘என்னுடைய வருங்கால மனைவி’ என பங்குபிரித்து, அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மும்முரமாக பகிர்ந்து வருகிறார்கள். ஒரே ஒரு வீடியோவில் ‘ஓகோ’ என பிரபலமாகியிருக்கும் ஷோ சூயூ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

* வில் அழகி பிறந்தது தைவானில். அங்குள்ள தைனன் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

* வில்லு விட்டு அசத்தியிருக்கும் நம்ம ஆளு, உண்மையிலேயே வில் வித்தை வீராங்கனை இல்லையாம். இவர் ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், நாடகத் தொடர்களில் நடித்து பிரபலமானவர். உண்மையை சொல்லப்போனால், இவர் ஒரு நடிகை.

* தென் கொரியாவில் வருடந்தோறும் நடிகர்-நடிகைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடப்பது வழக்கமான ஒன்று. ‘ஐடியல் ஸ்டார் அத்லட்டிக் சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் நாடக நடிகர்கள், மேடை நாடக கலைஞர்கள், சினிமா நடிகர்கள் கலந்துகொண்டு தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அப்படி நடந்த போட்டியில்தான் நம்ம ஆளு, வில் அழகியாக பிரபலமாகியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! Empty Re: வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!

Post by ayyasamy ram Thu Jul 12, 2018 9:02 pm

* இவர் அம்பு விட்டதும், அம்பின் நுனி இவரது தலைமுடியை கோதி செல்ல, அது வீடியோவாக வெளியாகி, வைரலாகியது. இவரது தலைமுடி பறந்ததை பார்த்து ரசித்த நாம், அந்த அம்பு இலக்கை எட்டியதா என்பதை பார்க்க மறந்துவிட்டோம்.

உண்மையில் அந்த அம்பு, இலக்கை துளைக்கவில்லையாம். அதற்கு மாறாக இளைஞர்களின் இதயத்தைதான் துளைத்திருக்கிறது.

* இன்று வில் விட்டு அசத்தியிருக்கும் ஷோ, ஒரு காலத்தில் இதழ்களை குவித்து அசத்தியவர். ஆமாங்க, ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்தவர் தனது இதழ்களை முத்தம் கொடுப்பது போல குவித்து ஒரு வீடியோ எடுத்திருக்கிறார். அது இணையத்தில் பரவ, அன்று அது வைரலாகியதாம்.

* இன்று பல நாடகங்கள், மேடை நிகழ்ச்சிகளில் நடித்து அசத்தும் ஷோ, சிறுவயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆம்..! சிறுவயதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது போன்று தத்ரூபமாக நடித்து பலமுறை வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவர அவரை பள்ளியை விட்டு நிறுத்தியிருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் முழு நேர நடிப்பிற்கு தயாராகியிருக்கிறார். இருப்பினும் பெற்றோரின் கரிசனத்தில் மீண்டும் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

*வில் அழகிக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதுவும் அவரது செல்லப்பிராணியான ‘கூஷி’ நாயை அதிக நேரம் கொஞ்சுவாராம்.
-
-வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! 201807071408277126_MUDT7718-1355a._L_styvpf
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! Empty Re: வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!

Post by ayyasamy ram Thu Jul 12, 2018 9:03 pm

* இவரது செல்லப் பெயர் என்ன தெரியுமா…? ‘யோடா’. அட ஆமாங்க, ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் யோடா கதாபாத்திரத்தின் காதுகளை போன்று ஷோவின் காதுகளும் இருப்பதால், இவருக்கு இந்த பெயர் வந்ததாம். மேலும் யோடாவை போன்று காதுகளையும் அசைப்பாராம்.
* நாக்கை தலைகீழாக திருப்புவதும், கைகளை வழக்கத்திற்கு மாறாக திருப்புவதும், இந்த வில் அழகியின் கூடுதல் திறமைகள். இதை நிறைய மேடை நிகழ்ச்சிகளில் செய்து காட்டி அசத்தியிருக்கிறார்.

* இவரது சகோதரர்கள், ஷோவை சாக்லேட் என்று அழைக்கிறார்கள்.

* ‘டுவைஸ்’, ‘காட் 7’, ‘ஸ்டாப் ஸ்டாப் இட்’, ‘மிஸ் ஏ’, ‘ஒன்லி யூ’ போன்ற இசை ஆல்பம் குழுக்களிலும் ஷோ அங்கம் வகிக்கிறார்.

* ‘டுவைஸ்’ குழுவின் ஒரு இசை ஆல்பம் ஜேஜூ என்ற தீவில் படமாக்கப்பட்டது. அந்த தீவில் இயல்பாகவே முயல்கள் அதிகமாக நடமாடும். இருப்பினும் படப்பிடிப்பு சமயத்தில் ஷோவை ஏராளமான முயல்கள் சூழ்ந்துகொண்டனவாம். அவற்றை பிரிய மனமில்லாமல், கண்கலங்கியிருக்கிறார், ஷோ.

* ஒரு விளம்பரத்தில் ஸ்கேட் போர்ட் வீராங்கனையாக நடிப்பதற்காக, நிஜமாகவே ஸ்கேட் போர்ட் கற்றிருக்கிறார்.

* வில் அழகியை பெருமைப்படுத்துவதற்காக தென் கொரிய ரசிகர்கள், ‘சூயூ ஸ்கேட் டுவைஸ்’ என்ற மொபைல் விளையாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதை ஏராளமானோர் தரவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்களாம்.

* தென் கொரியாவில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஷோ, இரண்டுமுறை கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்டாராம். இருப்பினும் ‘வைல்-கார்ட்’ சுற்றில் உலக ரசிகர்களின் ஏகோபித்த வாக்குகளின் உதவியுடன் மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்பி நடுவர்களை அசத்தியிருக்கிறார்.

நன்றி- தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! Empty Re: வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!

Post by Dr.S.Soundarapandian Thu Jul 12, 2018 9:55 pm

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! Empty Re: வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!

Post by SK Sat Jul 14, 2018 12:24 pm

அருமை என்ன ஒரு ஆராய்ச்சி 

அவருடைய perfomance நிஜமான வில் வித்தை வீராங்கனை போலவே இருந்தது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! Empty Re: வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!

Post by SK Sat Jul 14, 2018 12:25 pm

இவளவு கண்டுபிடித்த தினத்தந்தி நீரவ் மோடி எங்கு இருக்கிறார் என்று கண்டு பிடிக்க முடியுமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..! Empty Re: வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum