ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

5 posters

Go down

தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் Empty தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

Post by ayyasamy ram Wed Jul 11, 2018 7:00 am

மதுரை,

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப் படையில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் 6-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. சென்னை உள்பட நாடு முழுவதும் 136 நகரங்களில், தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினர்.

பல்வேறு குளறுபடிகள், தேர்வு மைய சர்ச்சைகள், வழக்குகளுக்கு மத்தியில் நடந்த இந்த ‘நீட்’ தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் 4-ந்தேதி வெளியிடப்பட்டன.

தமிழ் வினாத்தாளில் ஆங்கில மொழி வார்த்தைகள் பலவும் தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்ததாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் ஒரு பொது நல வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் முக்கிய அம்சங்கள்:-


* சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பாடங்களில் இருந்து 180 வினாக்கள் கேட்கப்பட்டன. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை பின்பற்றப்படுகிற நிலையில், அதன்கீழ் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை.

* தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தன. இயற்பியலில் 10 கேள்விகளும், வேதியியலில் 6 கேள்விகளும், உயிரியலில் 33 வினாக்களும் தவறாக கேட்கப்பட்டு இருந்தன.

* தமிழ் மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் அல்லது பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை ‘நீட்’ தேர்வு முடிவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்குதாரர் சார்பில் வாதிடும்போது, “ஆங்கில வினாத்தாளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில், ‘அரிசியின் ரகம்’ என்பதற்கு பதிலாக ‘அரிசியின் நகம்’ என்று தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மனித உடலில் நாளங்கள் என்பதற்கு பதிலாக ‘நலன்கள்’ என தவறாக உள்ளது. ‘வவ்வால்’ என்பதற்கு பதிலாக ‘அவ்வால்’ என உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கி மறு தரவரிசை பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டது.

‘நீட்’ தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ. தரப்பில் பதில் அளித்து வாதிடும்போது, “மருத்துவ கவுன்சில் பரிந்துரையின்பேரில் மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து எடுத்துத்தான் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, “நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. வாரியம் தன்னிச்சையாக செயல்படுகிறது” என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் “பீகாரில் 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். ஆனால் கூடுதல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முடிவு வெளியிட்டது எப்படி? சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமும் சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் வேறு வேறு. அவை இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?” என்று சி.பி.எஸ்.இ.க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“நீட் தேர்வு வினாத்தாளில் தவறுகள் உள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது, “மொழிமாற்றத்தில் தவறு நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை சி.பி.எஸ்.இ. வெளியிட வேண்டும்” என நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.

மேலும், “தற்போதைய தரவரிசைப்பட்டியலையும், மருத்துவ கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தி மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

தீர்ப்பில் கூறி உள்ள பிற முக்கிய அம்சங்கள்:-


இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட உடன் ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் வழக்கு தாக்கல் செய்த அன்றைய தினம் தேர்வு முடிவுகளை வெளியிட்டது நியாயமற்றது. மேலும் கோர்ட்டில் விசாரணையின்போது தமிழக மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் இப்போதைக்கு வெளியிடப்படாது என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அவசரமாக ‘நீட்’ தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

‘நீட்’ தேர்வு முடிந்ததும் விடை சுருக்கத்தை வெளியிடுமாறு கோர்ட்டு கேட்டபோது, அதற்கு சி.பி.எஸ்.இ. மறுத்துவிட்டது. தேசிய அளவில் நடக்கும் தேர்வில் இதுபோன்ற போக்கு கடைப்பிடிக்கப்படுவதை ஏற்க முடியாது. ‘நீட்’ தேர்வு கேள்விகளில் உள்ள தவறை புரிந்து பதில் எழுதிய மாணவர்களை பாராட்ட வேண்டும். இதை மேம்போக்காக கருதாமல் மாணவர்களின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

நீட் தேர்வில் தனியார் மாணவர்கள் பங்கேற்க முடியாதநிலை உள்ளது.

ஏழை மாணவர்கள் பலர் பால் பாக்கெட்டு போட்டும், வீடு வீடாக பத்திரிகை விற்றும் பள்ளிக்கு செல்லாமல் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுகிறார்கள். அவர்களை ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. இந்த மாணவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகத்தான் பள்ளிக்கு செல்லாமல் தனியாக படிக்கின்றனர். அப்படியிருப்பவர்களை ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று தடுக்க காரணம் என்ன?

இவ்வளவு மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும், அறிவியல் பாடங்களில் செய்முறை அறிவு பெற்று இருக்க வேண்டும் என்பதால் தனியார் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத தடுக்கப்படுகிறார்களா?

பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி பெறும் மதிப்பெண் மட்டும் முக்கியமல்ல, இதுபோல தனியாக படிக்கும் மாணவர்களை அரசும், கல்வி அமைப்புகளும் ஊக்கப்படுத்த வேண்டும். தனி மாணவர்களுக்கு செய்முறை அறிவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
---
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் Empty Re: தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

Post by SK Wed Jul 11, 2018 10:25 am

ஆச்சிரியமாக உள்ளது மக்களுக்கு (நியாயத்திற்கு ) ஆதரவாக தீர்ப்புக்கள் கூட கிடைக்கின்றது 

காரணம் இது மதுரை கிளை என்பதால் மட்டுமே 
சென்னையிலும்  கிடைக்காது  உச்சா நீதி  மன்றத்திலும்  கிடைக்காது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் Empty Re: தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

Post by சிவனாசான் Wed Jul 11, 2018 5:54 pm

எந்த எந்த விஷசயங்களுக்கு கோர்ட்டு தீர்வு தரனும்
என்று ஆளும் அரசு அறிவிக்க வேண்டும். வர வர
நீதி மன்றம் அரசாட்சி செய்து வருகிறது எனலாம்.
தரவரிசைப்படி தேர்வும் செய்தாகி விட்டது தற்போது
இப்படி ஓர் கட்டளையா?. உள்ளாட்சி தேர்தல் குறித்து
தடைபோட்டது போன்று >>>>>>>>இதனையும் >>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் Empty Re: தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

Post by SK Thu Jul 12, 2018 2:01 pm

சிவனாசான் wrote:எந்த எந்த விஷசயங்களுக்கு கோர்ட்டு தீர்வு தரனும்
என்று ஆளும் அரசு அறிவிக்க வேண்டும். வர வர
நீதி மன்றம் அரசாட்சி செய்து வருகிறது எனலாம்.
தரவரிசைப்படி தேர்வும் செய்தாகி விட்டது தற்போது
இப்படி ஓர் கட்டளையா?. உள்ளாட்சி தேர்தல் குறித்து
தடைபோட்டது போன்று >>>>>>>>இதனையும் >>>>>>
ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தால் நீதிமன்றம் உத்தரவு போடும் அவசியம் இருக்காது மேலும் NEET தேர்வுக்கு நடத்துவது CBSE எனும் அமைப்பு தானே தவிர அரசு இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் Empty Re: தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

Post by ராஜா Thu Jul 12, 2018 2:03 pm

சிவனாசான் wrote:எந்த எந்த விஷசயங்களுக்கு கோர்ட்டு தீர்வு தரனும்
என்று ஆளும் அரசு அறிவிக்க வேண்டும். வர வர
நீதி மன்றம் அரசாட்சி செய்து வருகிறது எனலாம்.
தரவரிசைப்படி தேர்வும் செய்தாகி விட்டது தற்போது
இப்படி ஓர் கட்டளையா?. உள்ளாட்சி தேர்தல் குறித்து
தடைபோட்டது போன்று >>>>>>>>இதனையும் >>>>>>


என்ன விஷயம்னே தெரியாம கருத்து என்ற பெயரில் உளறல்கள் இப்போது அதிகரித்து விட்டது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் Empty Re: தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

Post by T.N.Balasubramanian Thu Jul 12, 2018 2:52 pm

SK wrote:
சிவனாசான் wrote:எந்த எந்த விஷசயங்களுக்கு கோர்ட்டு தீர்வு தரனும்
என்று ஆளும் அரசு அறிவிக்க வேண்டும். வர வர
நீதி மன்றம் அரசாட்சி செய்து வருகிறது எனலாம்.
தரவரிசைப்படி தேர்வும் செய்தாகி விட்டது தற்போது
இப்படி ஓர் கட்டளையா?. உள்ளாட்சி தேர்தல் குறித்து
தடைபோட்டது போன்று >>>>>>>>இதனையும் >>>>>>
ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தால் நீதிமன்றம் உத்தரவு போடும் அவசியம் இருக்காது மேலும் NEET தேர்வுக்கு நடத்துவது CBSE எனும் அமைப்பு தானே தவிர அரசு இல்லை

பதிவு எண் # 1 ஐ நன்றாக படித்துப் பாருங்கள்.
உங்கள் மறுமொழிகளையும் படித்துப் பாருங்கள்.
ஏற்புடை மறுமொழிகளா அவை என்பதை
உங்கள் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் Empty Re: தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி
» 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும்: ஜெயலலிதா
»  ரயிலில் பயணியைக் கடித்த எலி: ரூ.32 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
» பிளஸ் 2 பயாலஜி தேர்வில் ஐந்து மதிப்பெண் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டது சரியே :
» மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum