ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலர்ஜி ஏன்?

Go down

அலர்ஜி ஏன்? Empty அலர்ஜி ஏன்?

Post by தண்டாயுதபாணி Thu Dec 17, 2009 10:27 am




அலர்ஜி
காரணமாக பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிக ஒவ்வாமையால் (அலர்ஜி)
பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நகர்ப்புற மக்களையே இந்த
ஒவ்வாமை அதிகம் தாக்குகிறது.

இயந்திரமயமான வாழ்க்கை முறை காரணமாக 40 சதவீதம் பேர்
ஒவ்வாமையால் அவதியுறுகின்றனர்.
அலர்ஜி ஏன்? Alergy
ஒவ்வாமை என்பது சுகாதாரமற்ற சூழலுக்கு
சுகாதாரத்துடன் விளங்கும் ஒரு பொருள் செல்லும்போது வெளிப்படுத்தும் எதிர்விளைவே
ஒவ்வாமையாகும்.

ஆற்றல் மிகுந்த ஒவ்வாத பொருள் உடலுக்குள் செல்லும்
நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக உஷ-õர் செய்வதுதான்
அலர்ஜி.

இதனால் தொடர்ந்து தும்மல், மூக்கு, கண்களில் எரிச்சல், நீர்
ஒழுகுதல், சருமத்தில் தடிப்பு போன்றவை ஏற்படும். இதுவே ஒவ்வாமையின்
அறிகுறியாகும்.

அலர்ஜி எதனால் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிக்கப்படுமா என்ற
கேள்வி அனைவருக்கும் தோன்றும்.

பரம்பரையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
குன்றியவர்களுக்கு அலர்ஜி உண்டாகும். பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழலால்தான்
பெரும் பாலானோருக்கு அலர்ஜி உருவாகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில்
மக்கள் தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு அதிகம் ஏற்படுகிறது. நகரத்தை சுற்றி
எண்ணற்ற தொழிற் கூடங்கள் அமைந்துள்ளன. நகர வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல
இலட்சங்களை தாண்டிவிட்டது. இந்த தொழிற்சாலைகளும், வாகனங்களும் விடும் புகையே
காற்று மண்டலத்தை மாசடைய செய்துவிட்டன. இந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின்
உடலானது பலவகையில் பாதிக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான்
ஒவ்வாமை.

கழிவுநீர், சுகாதாரமற்ற குடிநீர், உணவு, தேங்கி நிற்கும் சாக்கடை
நீர், நாற்றம் வீசும் குப்பைகள், மனிதக் கழிவுகள் இவற்றாலும் உடலில் அலர்ஜி ஏற்பட
வாய்ப்பாகிறது.

மேலும் சிலருக்கு உணவுப் பொருட்களாலும் ஒவ்வாமை உண்டாகும்.
முட்டை, பால், கருவாடு, கத்தரிக்காய் போன்றவற்றாலும், புளித்துப்போன
பொருட்களாலும் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்.

நவீன காலத்தில் வேதிப்பொருள்கள்
கலந்த குளியல் சோப், ஷாம்பு வகைகள் இவற்றாலும், தரமற்ற ஆடைகளாலும் ஒவ்வாமை
ஏற்படலாம்.

குளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேரம் இருப்பவர்கள், உடலுக்கு
கேடு விளைவிக்கக்கூடிய மாத்திரை, மருந்துகள் இவற்றாலும் ஒவ்வாமை
உண்டாகிறது.

சிகரெட் புகை, வேதிப் பொருள்கள், குளிர்காற்று உள்ளிட்ட
தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களால்
நாசிகளில் உள்ள திரவப் படலம் வீக்கம் உண்டாகி அலர்ஜி ஏற்படுகிறது.

வீட்டைப்
பொருத்தவரை தூசு, நுண் பூச்சி, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளின் முடியில்
குடியிருக்கும் நுண்ணிய கிருமிகள், தலையணை, மெத்தை விரிப்பு, போர்வை இவைகளில்
ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத மாசுப் பொருட்கள் ஒவ்வாமையை உருவாக்க
காரணமாகின்றன.

கரப்பான் பூச்சி, எலிகள், கம்பளிப் பூச்சி இவைகள் சருமத்தில்
அலர்ஜி உண்டாக்கும்.

தோட்டங்களுக்கு விடப்படும் பூச்சிக் கொல்லி
மருந்துகளாலும் அலர்ஜி உருவாகிறது.

ஒவ்வாமையானது ஒருவருக்கு ஒருவர்
மாறுபடும். இதற்கு முக்கிய காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இன்மையே. உடலுக்கு
ஒவ்வாத பொருட்களை அழிக்கும் தன்மையுடைய வெள்ளையணுக்கள் சக்தியின்றி இருப்பதால்
ஒவ்வாமை உண்டாகிறது.

இதனால் தொடர்ந்து ஜலதோஷம், தும்மல், மூக்கின் சுவாசப்
பாதையில் அடைப்பு, வறட்டு இருமல், முகப்பகுதியில் வலி, எந்த வாசனையைம் அறியமுடியாத
நிலை, குரலில் மாற்றம், ஒற்றைத் தலைவலி, தலையில் நீர் கோர்த்துக்கொள்வது போன்றவை
உண்டாகும்.

மேலும் ஒவ்வாமை காரணமாக காது பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு
காதுவலி உண்டாகும். நாள் செல்லச்செல்ல காதில் சீழ் வடிய ஆரம்பிக்கும்.


ஒவ்வாமை பெரும்பாலும் மூக்கு தொடர்புடைய சுவாசப் பாதைகளையே அதிகம்
பாதிக்கும்.

இந்த ஒவ்வாமையால்தான் நுரையீரலின் மூச்சுக்குழாய்களில் அலர்ஜி
ஏற்பட்டு ஆஸ்துமா வாக மாறிவிடுகிறது.

சில சமயங்களில் மூக்குப் பாதைகளில்
உள்ள திசுக்கள் வீக்கம் அடைந்து மூக்கு எலும்பை அரிக்கத் தொடங்கிவிடும். மேலும்
இது சைனஸ் அறைகளைத் தாண்டி கண், மூளை போன்றவற்றிற்கு பரவ ஆரம்பித்து இறுதியில்
உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

பொதுவாக குழந்தைகளுக்கு ஒவ்வாமை சரியான
தூக்கமின்மையை உண்டாகும். படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் தவிப்பார்கள். காது
சரிவர கேட்காது. பசி எடுக்காது. வளர்ச்சியில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள்
உண்டாகும்.

சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அவை நாளடைவில் அரிக்கத் தொடங்கி
புண்களை உருவாக்கி சருமத்தை பாதிப்படையச் செய்யும்.

ஒவ்வாமையை
தடுக்க


· அடிக்கடி ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி எதனால் ஒவ்வாமை
உண்டானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றார்போல் சிகிச்சை மேற்கொண்டால்
ஒவ்வாமையிலிருந்து விடுபட முடியும்.

· உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் உணவுகளான கீரைகள், பழங்கள், போன்றவை அதிகம் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.

· வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது
நல்லது.

· அதிக தூசு உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள். அப்படி செல்ல
நேர்ந்தால் மூக்குக் கவசம் அணிந்துகொள்ளுங்கள்.

· அதுபோல் இருசக்கர
வாகனங்களில் செல்லும்போதும் மூக்குக் கவசம் அணிந்து கொள்வது நல்லது.

·
குளிர்ந்த பானங்களைத் தவிர்த்தல் நல்லது. வெயிலில் அலைந்து திரிந்து வந்தவுடன்
குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது.

· உடலுக்கு ஒவ்வாத உணவுகளை கண்டிப்பாக
தவிர்க்கவேண்டும்.

· அதிக தும்மல், மூக்கில் நீர்வடிதல் தொடர்ந்து
இருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

· நன்கு காய்ச்சிய
குடிநீரைப் மட்டும் பருக வேண்டும்.

ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களையும்
இடங்களையும் தவிர்த்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum