புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
73 Posts - 77%
heezulia
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
238 Posts - 76%
heezulia
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
8 Posts - 3%
prajai
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 10:26 am

முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் 201707220826123066_tiruvaiyaru-temple_SECVPF
-
திரு+ஐயாறு-திருவையாறு.
ஈசன் அருள் செய்யும் இத்தலத்தின் அருகில் காவிரி, குடமுருட்டி,
வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகள்
ஓடுகின்றன.

இந்த ஐந்து ஆற்று நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடை
பெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற
பெயர் வந்தது.

திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதைப் போல்,
திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும்
நம்பிக்கையாக உள்ளது.

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்
பாடப்பெற்ற சிறப்பு கொண்டது இந்த திருத்தலம்.

அஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு
புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க
திருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி,
சில மகரிஷிகள் தெரிவித்தனர்.

ஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது
என்பது கடினமாகும். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த
நேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது
நிலையை எடுத்துரைத்தான்.

துர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார்.
ஈசன் மனமிரங்கி நந்திதேவரிடம் கூறி திருக் கயிலையை,
திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும்
திருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து,
இந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு
பகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார்.

இதனை உணர்த்தும் விதமாக, ஆலயத்தில் வட கயிலாயம்,
தென் கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்
பிரகாரத்தில் அமைந்துள்ளன.

பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன்
சுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார்.
மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது.

ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும்.
லிங்கத்திற்கு புணுகு சாத்தப் படும். இறைவனின் பெயர்
ஐயாறப்பர்.

அம்பாள் திருநாமம் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.
அன்னை கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில்
தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தல அம்பாள் சிலையின் உருவ அமைப்பைப் பார்த்தால்
அப்படியே திருப்பதி வெங்கடாசலபதியின் வடிவமைப்பைக்
காணலாம்.

————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 10:27 am

அதுபோல திருப்பதி வெங்கடாசலபதியின் உருவ அமைப்பில்
நம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மனின் வடிவழகைக்
காணலாம். இதனை ‘அரி அல்லால் தேவி இல்லை
ஐயன் ஐயாறனார்க்கே’ என்று இத்தல பதிகத்தில் அப்பர் பதிவு
செய்துள்ளார்.

மேலும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும்,
பெருமாள் கோவில்களில் மட்டுமே நடக்கும் ‘மகாலட்சுமி
புறப்பாடு’ இங்கும் நடக்கிறது. வெள்ளிக் கிழமை தோறும்
மாலை நேரத்தில், திருவையாறு சிவத்தலத்தில் இருந்து,
மகாலட்சுமி புறப்பாடாகி, இத்தல அம்பாள் சன்னிதிக்கு
செல்கிறார்.

அதாவது மகாலட்சுமி தன் கணவர் மகாவிஷ்ணுவை காண
வருவதாக ஐதீகம்.

கடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள
இறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின்
காலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது.

சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும்.
இந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

ஒருமுறை திருக்காள ஹஸ்தியை தரிசனம் செய்த
திருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்),
மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக்
கடந்து காசியை அடைந்தார்.

அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க
வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.
அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது.

ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து
திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது.
இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும்
எண்ணமின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர்.
சில இடங்களில் நடக்க முடியாமல் ஊர்ந்தும் சென்றார்.

அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், முனிவர்
வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, ‘நீர் இம்மானிட
வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச்
செல்லும்’ என்றார்.

ஆனால் திருநாவுக்கரசர் அவரது பேச்சை செவிமடுக்காமல்,
தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன
உறுதியையும் கண்ட சிவபெருமான், ‘திருநாவுக்கரசா!
இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு திருத்தலத்தை
நீ அடைவாய்.
அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்’
என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய
திரு நாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே
உள்ள சமுத்திர தீர்த்தக் குளத்தில் எழுந்தார்.

அங்கு திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி
அருளினார். திருநாவுக்கரசருக்கு திருவையாறு திருத்தலத்தில்
ஈசன் திருக்கயிலை திருக்காட்சி காட்டியருளிய தினம்,
ஆடி அமாவாசை ஆகும்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில்
‘திருநாவுக்கரசர் திருக்கயிலை திருக்காட்சி’ பெருவிழா
லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறுகிறது.

அன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை
பாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை
வழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள்
அனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி
கண்டு வழிபாடு செய்வது திருக்கயிலை தரிசனத்துக்கு ஈடான
பெரும் புண்ணிய திருப்பலனை அளிக்கும்.

திருநாவுக்கரசரின் பொருட்டு அன்று திருக்கயிலை
திருத்தரிசனத்தை திருவையாறு திருத்தலத்தில் காட்டியருளிய
ஈசன், நமக்கும் அருள் செய்வார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர்
தூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்துள்ளது.

———————————-
நன்றி- மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக