ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Page 1 of 2 1, 2  Next

Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:10 pm

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது
கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி
ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே
கொஞ்சம் பெருங்காயத் தூளைத்
தூவிவிட்டால் எறும்புத் தொல்லை
இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன்
டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு
பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு
நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின்
மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ
வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ்
தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும்
போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம்
விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில்
பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை
விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து
வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல்
மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில்
வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க
வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த
உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி
விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத்
பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை
அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை
அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும்
"ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை
ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால்
பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள்
காலியானதும் அவற்றைத் துணிகளை
ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு
ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:10 pm

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத
நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு,
தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க
அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது
பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப்
போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி
இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத்
துணியைப் போட்டு மூடி வையுங்கள்.
வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல்
இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி
வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில்
வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப்
போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில்
வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில்
சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம்
போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க
வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க்
குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள்
வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை
அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் மூக்குப் பொடி வாங்கித்
தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல்
தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய்
மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும்
போது அதில் துருவிய கசுக்கொட்டையை
(முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை
நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித்
தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:12 pm

21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப்
பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ
அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின்
துலக்கினால் அவை புதியவை போல்
இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம்,
டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங்
பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின்,
சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால்
பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு
டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக
வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை
உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால்
அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும்
ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக்
கழுவும் போது நீரில் சிறிது உப்பைச்
சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின்
அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு
வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில
நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள்
இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை
நறுக்குவதால் கத்தியில் ஏற்படும்
துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை
கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக்
கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில்
குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு
கொத்து வெந்தயக் கீரையை போட்டு
வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங்
பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும்
குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே
விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித்
தொல்லை இருக்காது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:12 pm

31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு
வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம்
பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால்
அல்லது முடியில் சிறிது உப்பை தடவி
வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது
பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை,
கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப்
பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே
வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம்
செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது
சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி
பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில்
கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை
சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து
துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும்
ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும்
தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய
செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால்
அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை
வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி
வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால்
சீயக்காய்த் தூளையும், புளியையும்
சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன்
வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால்
கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு
பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:13 pm

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக
வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும்.
ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை
உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம்
செய்து வெயிலில் காய வைத்தால் அந்த
பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல
வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க
வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப்
பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல்
இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில்
உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம்
வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு
மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து
வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும்
கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க
வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு
வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல்
இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும்,
தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு
வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப்
போகாமல் இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:14 pm

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது
புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல்
இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள்.
அறை முழுக்க கமகமவென்று வாசனை
பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி
லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில்
குத்தி எடுத்து நைலானைத் தைத்தால்
சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க
அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம்
கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும்
வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை
பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து
பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை
போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு
விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல்
நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத்
துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில்
சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால்
துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது
தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக்
கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும்
கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது.
பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து
அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது
அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக்
கூடாது. எளிதில் ஜீரணமாகாது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:15 pm

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது
மெழுகுவர்த்தியை ஏற்றுவோம்.
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க
மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும்
கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு
வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும்
பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும்
மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை
நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில்
சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது
ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத்
துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு
போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை
தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள்.
பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய
தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு
கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க
வேண்டுமானால் அதன் காம்பை
எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில்
வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல்
இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள்
ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக
காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை
தொங்க விட்டால் புகை காணாமல் போய்
விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக்
கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால்
பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:16 pm

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத்
துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின்
இரண்டையும் சம அளவு கலந்து
பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று
இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில்
கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால்
ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே
வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை
போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற
வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம்
இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய
நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால்
மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில்
சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல்
இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால்
பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும்
ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள்.
ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு
கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக
வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ்
சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை
நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு
சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை
அப்படியே உணவில் போட்டு விடுங்கள்.
உணவில் அதிகமாக இருந்த உப்பு
குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும்,
பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை
துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக
இருக்கும். நாற்றம் இருக்காது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:16 pm

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து
மிருதுவான துணியில் நனைத்து மரச்
சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது
போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில்
இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில்
சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி
அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை
வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு
கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று
மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல்
இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு
ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல்
எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை
சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம்
அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில்
எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால்
அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை
போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி
விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன்
சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை
வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம்
தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக
பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது
சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி
வைத்தால் வீடு முழுவதும் வாசனை
தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள்
ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால்
மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி
இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால்
அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by krishnaamma Wed Jun 06, 2018 2:17 pm

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால்
பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை)
விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி
வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ்
அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும்
துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள்
உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு
உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி
காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு
போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி
அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப்
பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல்
இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின்
அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத்
தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால்
செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது
முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய
கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல்
பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு
வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள
நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு
விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர்
அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக
வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர்
விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன
சைஸ் கொசுவலை துணியில், embroider
கைவண்ணம் காட்டி டி.வி. கவராக
பயன்படுத்தலாம்.

100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த
கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை
படிந்த பகுதியைத் துடைத்தால் கறை
போய்விடும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!! Empty Re: எல்லோரும் வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum