ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..?

Go down

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Empty ‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 4:42 pm

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? QLEGRBFnQ2SzCEhrNwXL+ec7a0ca2e3038508b9d1ec577ed98575

நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் நினைவுகள் இன்னும் நமது மனதை விட்டு நீங்காத நிலையில் இந்தாண்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு உண்டா...? கிடையாதா..? என கடைசிவரை பதில் தெரியாமல் காத்திருந்தனர் கடந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள். கடைசியாக நீட் தேர்வை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. தமிழக மாணவர்களும் எந்த தயாரிப்பும் இல்லாமல் தேர்வு எழுதி முடித்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவ படிக்க முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என ஏகப்பட்ட போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போதாக் குறைக்கு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட மையங்கள் என்னவோ ராஜஸ்தான், கேரளா என வெளிமாநிலங்கள்.
இந்தாண்டு நீட் தேர்வு ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டிருந்ததால் மருத்துவம் படிக்க விரும்பிய மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பம் செய்யும்போதே எந்த மையத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற காலமும் கொடுக்கப்பட்டு அதில் மூன்று இடங்களை தேர்வு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்கு அருகாமையில் உள்ள 3 மையங்களை மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப தேர்வு செய்திருக்கின்றனர். ஆனால் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த 3 மையங்களில் ஒரு இடத்தை கூட ஒதுக்காமல் வேறு மாநிலங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருக்கிறது சிபிஎஸ்இ. இதுதொடர்பான வழக்கில் தேர்வு நெருங்கிவிட்டதால் இனி மையங்களை மாற்றினால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நேரிடும் என சிபிஎஸ்இ தெரிவித்தால், மாணவர்களுக்கு எந்தெந்த மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்தந்த மாநிலங்களுக்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றமும் தெரிவித்துவிட்டது.
நன்றி
புதியதலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Empty Re: ‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 4:43 pm

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? OgfMmmFJQQu0lMAx1HAE+c1f1ed5b262e710b9e696ed55058e01e

வரும் 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வை எதிர்கொள்ளப் போவதில் தமிழக கிராமப்புற மாணவர்களும் பலர் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மையங்கள் என்னவோ பிற மாநிலங்கள். இதனால் மாணவர்கள் என்ன செய்வதேன்று திக்குமுக்காடி உள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் பலருக்கும் கேரளாவில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசிவரை தங்கள் மாநிலங்களில் மையங்கள் கிடைத்துவிடும் என காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம். இனி என்ன செய்வது..? தேர்வை எழுதியாகத்தான் வேண்டும். இது கோடை விடுமுறை காலம். ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் கேரளாவை நோக்கி பயணிப்பார்கள். அதற்கு அவர்கள் முன்னதாகவே ரயிலிலோ அல்லது பேருந்திலோ முன்பதிவு செய்து வைத்திருப்பார்கள். தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள முடிவால் தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்ல முறையான பேருந்து வசதியோ அல்லது ரயில் வசதியோ கிடைக்குமா என்பது சந்தேகம். ஓரளவு பொருளாதார வசதி இருப்பவர்கள் வேண்டுமானால் பேருந்தில் கூடுதல் தொகையை கொடுத்தாவது தேர்வு மையத்திற்கு சென்றுவிடுவார்கள்.
ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு எப்படி..? படிப்பறிவில்லாத பெற்றோராக இருக்கலாம். பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் கூட மாணவர்கள் படிக்கலாம். மதிய உணவை நம்பியே பள்ளிக்கு சென்ற மாணவராக இருக்கலாம். அப்படிப்பட்ட மாணவர்களுக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். தங்கள் திறமையால் அந்த கனவு நிறைவேறும் என்றும் நம்பியிருப்பார்கள். அதற்காக அவர்கள் இரவு பகல் பாராமல் படித்திருப்பார்கள். தமிழக அரசு வழங்கிய நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் பயிற்சியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இப்போது தேர்வெழுத மாநிலம் விட்டு மாநிலம் செல்வது எப்படி சாத்தியம்..? மாணவிகளாக இருந்தால் அவர்களால் தனியாகவும் செல்ல முடியாது. பெற்றோர் துணை வேண்டும். அறக்கபறக்க டிக்கெட் எடுத்து சென்றாலும் புது இடத்தில் தேர்வு மையத்தை கண்டுபிடிப்பது என்னவோ மிகவும் கடினமான விஷயம். தேர்வுகள் காலை 8.30 மணிக்கே தொடங்கிவிடுவதால் முந்தைய நாளே அவர்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கே தங்குவதற்கு அறைகள் புக் செய்ய வேண்டும். எப்படி பார்த்தாலும் ஒரு தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பவேண்டும் என்றால் குறைந்தது ரூ.10,000 காலியாகிவிடும். தந்தை இல்லாத மகள். வீட்டு வேலை செய்து வரும் தாயின் மகன் என எல்லோருக்கும் தான் மருத்துவர் கனவு இருக்கும். ஒரு தேர்வை எழுதவே ரூபாய் 10,000 என்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்..?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Empty Re: ‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 04, 2018 4:45 pm

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? DK5JmZGLR7CxGnDhbi43+7a82c55e86958faf997f82fcfe94fdee
234 சட்டமன்ற உறுப்பினர்களையும், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட மிகப்பெரிய மாநிலம் தான் தமிழகம். கல்வி வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது. அப்படிப்பட்ட தமிழகத்தில், தமிழக மாணவர்களுக்கே மையங்களை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றால் இது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தவிர வேறென்னவாக இருக்க முடியும்..? தேர்வு நேரம் நெருங்கிவிட்டால் இனி மையங்களை மாற்ற முடியாது என காரணம் சொல்கிறது சிபிஎஸ்இ. ஒரு மையத்தை கூட மாணர்களுக்கு மாற்றித் தர இயலாத சிபிஎஸ்இ நடத்தும் தேர்வுகள் எப்படிப்பட்ட தேர்வுகளாக இருக்கும் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. நீங்கள் மலை உச்சியில் கொண்டு மையங்களை போடலாம். கடல் கடந்துகூட மையங்களை போடலாம். ஆனால் எங்கு சென்றாலும் தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..? Empty Re: ‘நீட்’டுக்காக காடு மலைகளை கடக்கத்தான் வேண்டுமா தமிழக மாணவர்கள்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» சர்ச்சைகளுடன் நீட் தேர்வு நிறைவு... சட்டையை கிழித்து தேர்வெழுதிய மாணவர்கள்
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
» நீட் தேர்வு ரிசல்ட்: தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum