ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

Top posting users this month
ayyasamy ram
குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_m10குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

2 posters

Go down

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Empty குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 02, 2018 6:44 pm

Chennai:
சங்ககாலப் புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள்வரை அனைவரும் காவிரியைப் பற்றிப் புகழ்வதற்குக் காரணம், ஒருகாலத்தில், அது வற்றாத ஜீவநதியாக ஓடியதுதான். அப்படிக் காவிரி பாய்ந்துசென்ற இடமெல்லாம் பசுஞ்சோலையாக விரித்துச் சென்றதால், ‘காவிரி’ என்ற பெயர் வழங்கலாயிற்று. மேலும் ‘பொன்னி’ என்று இன்னொரு பெயரும் உண்டு. நீரிலும், நீரடி மண்ணிலும் தங்கத் தாது உண்டென்பதாலும், மண்ணைக் கொழிக்கச் செய்வதாலும் அப்பெயர் உண்டாயிற்று.

முந்தைய அத்தியாயம் படிக்க

குடி தண்ணீர்... விவசாயம்!
இப்படியான காவிரி, கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் ‘தலைக்காவிரி’ என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து பாய்ந்தோடித் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து, இறுதியில் பூம்புகாரில் வங்கக்கடலில் சென்று கலக்கிறது. தலைக்காவிரியானது, மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4,186 அடி உயரத்தில் இருக்கிறது. கர்நாடகத்தில் 320 கி.மீ. தூரத்தையும், தமிழகத்தில் 416 கி.மீ. தூரத்தையும், இருமாநில எல்லையில் 64 கி.மீ. தூரத்தையும் கடப்பதால் காவிரியின் மொத்த நீளம் 800 கி.மீ. ஆகும். இது தெற்கு, கிழக்குத் திசைகளில் பாய்கிறது. முதலில் குடகு மலைப்பகுதியில் பாயும் காவிரியானது, பிறகு தக்காணப் பீடபூமியின் மேட்டு நிலத்திலும், அதன்பின்னர் தமிழகத்தின் சமவெளிப் பகுதியிலும் பாய்கிறது. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் பாயும் காவிரி ஆறானது, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. தமிழகத்தில் குடிதண்ணீர், விவசாயம் என நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 மாவட்டங்களைக் காவிரி ஆறு வாழ்வித்துக்கொண்டிருக்கிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Empty Re: குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 02, 2018 6:46 pm

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 9aFxjtx9TkuFFemvvqnm+e9d519b2544c896407c3bb723774ab3d

மழைப்பொழிவு... நீரின் அளவு!
காவிரி, 81,155 ச.கி.மீ. நிலப்பரப்பைத் தன்னுடைய மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியாகப் பெற்றுள்ளது. இதில், 34,273 ச.கி.மீ. பரப்பு கர்நாடகாவிலும், 43,856 ச.கி.மீ. பரப்பு தமிழகத்திலும், 2,866 ச.கி.மீ. கேரளத்திலும், 160 ச.கி.மீ. பரப்பு புதுச்சேரியிலும் அமைந்துள்ளது. காவிரி வடிநிலத்தின் மேல் பகுதிகள், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்குப் பருவமழையால் பயன்பெறுகின்றன. கீழ்ப்பகுதிகள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்குப் பருவமழையால் பயன்பெறுகின்றன. ஆற்றின் மழை நீர்ப்பிடிப்புப் பரப்பு 50 சதவிகிதத்துக்கு மேல் தமிழகத்துக்குள் அமைந்திருந்தாலும் தென் மேற்குப் பருவக்காற்று மழையின்போது கர்நாடகத்திலும், கேரளாவிலும் உள்ள உயர்ந்த மலைத் தொடர்களில் பொழிகின்ற கனத்த, செறிவான மழைப்பொழிவே ஆற்றின் நிலையான நீரோட்டத்துக்குக் காரணமாகிறது.
தமிழகத்தில் உள்ள பரப்பு பெரும்பாலும் சமவெளியாகவும், தாழ்நிலமாகவும் அமைந்திருப்பதால், நீர்ப்பெருக்கைத் தேக்கிவைக்க வழியில்லாமல் இருக்கிறது. தென் மேற்குப் பருவக்காற்று கனத்த மழையையும், வட மேற்குப் பருவக்காற்று குறைந்த அளவு மழையையும் தருகிறது. வட மேற்குப் பருவக்காற்றின்போது புயலும், காற்றும் அதிக அளவில் இருப்பதால் மழைப்பொழிவு குறைந்துபோகிறது. குறிப்பாக, கர்நாடக வடிநிலப் பகுதிகளில் சராசரியாக 76 நாள்கள் இருக்கும் மழைப்பொழிவு, தமிழகத்தில் 55 நாள்களாக இருக்கிறது. இதனால், தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ச.கி.மீட்டருக்குக் கிடைக்கும் நீரின் அளவைவிட, கர்நாடக, கேரள மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ச.கி.மீட்டருக்குக் கிடைக்கும் நீரின் அளவு அதிகம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Empty Re: குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 02, 2018 6:48 pm

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 54HB8iEpRdekoan5gbPB+bca0eca31761157b1b70d1a2a7f3870c

முதல் நீர்மின் உற்பத்தி நிலையம்!
தலைக்காவிரியில் உருவாகும் காவிரி குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆற்றோடு இணைந்து மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய இரண்டு ஆறுகளும் காவிரியோடு இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பிறகு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. அதன்பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி, அந்த இடத்தில் இருந்து இரண்டு பிரிவுகளாகப் பிரிகிறது. அங்கு ஒருபுறம், ‘சுகனசுக்கி’ என்ற அருவியாகவும், மறுபுறம் ‘பாறசுக்கி’ அருவியாகவும் விழுகிறது. ‘சுகனசுக்கி’ அருவியில்தான் 1902-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்கவயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
‘ஆடு தாண்டும் பாறை!’
அதன்பிறகு, சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இந்த இரண்டு ஆறுகளும் இணைந்த பிறகுதான் காவிரி, ஆழமான அதிகமான நீரோடையாகப் பாறை இடுக்குகளில் புகுந்துவருகிறது. இந்த ஆழமான நீரோடைகளை ஆடுகூட தாண்டலாம் என்பதால், இந்தப் பகுதி, கன்னடத்தில் ‘மேக்கேதாட்டூ’ என்றும், தமிழில் ‘ஆடு தாண்டும் பாறை’ அல்லது ‘ஆடு தாண்டும் காவிரி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியோடு கர்நாடகத்தின் எல்லை முடிவுற்று காவிரி, தமிழகத்தில் காலடி எடுத்துவைத்து பில்லிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், ‘புகைக்கல்’ என்னும் பொருளில் ‘ஒகேனக்கல்’ எனப் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Empty Re: குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

Post by SK Thu May 03, 2018 1:46 pm

வரலாறு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா தண்ணி தர மாட்டேன் னு சொல்றாங்களே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Empty Re: குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

Post by பழ.முத்துராமலிங்கம் Thu May 03, 2018 8:24 pm

SK wrote:வரலாறு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா தண்ணி தர மாட்டேன் னு சொல்றாங்களே
மேற்கோள் செய்த பதிவு: 1268130
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2 Empty Re: குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கல்லணையைக் கட்டமைத்த கரிகாலன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 3
» மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - அத்தியாயம் - 1
» வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» தமிழகத்திற்கு முதல் வெற்றி! 30 டிஎம்சி காவிரி நீரை வழங்க ஆணையம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum