ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_c10 
VENKUSADAS
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_c10 
VENKUSADAS
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

+11
poovizhi
கண்ணன்
சிவா
பிரபாகரன் ஒற்றன்
kram
Dr.S.Soundarapandian
heezulia
T.N.Balasubramanian
aeroboy2000
தமிழ்நேசன்1981
ரா.ரமேஷ்குமார்
15 posters

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 30

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 10:40 am

நண்பகலுக்குப் பின்னர்தான் எல்லோரும் படுக்கையைவிட்டு எழுந்தனர்.  முந்தையநாள் கொண்டாட்டம் முடிந்ததென்னவோ அதிகாலையில் தான். உறங்கிய பிறகு, கனவில் தொடர்ந்த ஆட்டங்கள் எப்போது முடிந்திருக்குமோ யார் அறிவார்?. மாலை நேரம் நெருங்கும் வேளையில் சித்திர மாளிகைக்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

பேரரசர் வரும் நேரம் அறிந்து ஏற்பாடுகள் ஆயத்தமாயின. பாண்டிய நாட்டின் பெரும்படைத் தளபதி கருங்கைவாணன் நேற்றுதான் தலைநகர் திரும்பியிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88a
கருங்கைவாணனைப் போன்ற ஒரு மாவீரன் எப்பேரரசுக்கும் தளபதியாய் அமைந்ததில்லை என்றே சொல்கின்றனர். அவன் தளபதியாக வழிநடத்திச் சென்ற எல்லா போர்களிலும் இணையற்ற வெற்றிகளே கிடைத்துள்ளன. பேரரசுக்கு வெற்றி கிடைப்பது அரிய செய்தியல்ல. ஆனால், அவனடைந்த வெற்றிகள் அனைத்தும் சோதித்துப் பார்த்து அடைந்த வெற்றிகள்.

எதிரிகள் வீசும் அம்புகளுக்கு இடையில் போர்க்கலையின் பயிற்சியை நிகழ்த்த அளவற்ற திறன் வேண்டும். அவன் எதிரிகளை வைத்துப் போரினை அறியவே முயல்கிறான். போர் தொடங்கிய சில நாழிகைகளிலேயே களத்தின் ஒவ்வோர் இயக்கமும் அவனால்  கணிக்கப்பட்ட வடிவத்துக்குள் வந்துவிடுகிறது. எதிரிகள் அவன் சொற்பேச்சைக் கேட்டு வந்துசேருவதைப் போலத்தான் அவனது திட்டத்துக்குள் தலை நுழைத்து எட்டிப்பார்க்கின்றனர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே தலைகள் உடலைவிட்டு தள்ளிப்போய் விழுகின்றன.

நாடுகளைப் பிடிப்பதென்ற நிலையைக் கடந்து குறிப்பிட்ட மக்கள்குலங்களைத் தேடித்தேடி வேட்டையாடுகின்றனர். எல்லாவிதத் திறன்களையும் சேகரித்துக்கொள்ள வேண்டியது ஒரு பேரரசின் தேவையாக இருக்கிறது. இப்போதுகூட குறிப்பிட்டதொரு குலத்தை வெற்றிகொண்டுதான் திரும்பியிருக்கிறான். இத்திருமணத்தை முன்னிட்டு சூல்கடல் முதுவனுக்கு மிகச்சிறந்த பரிசைத் தர பேரரசர் விருப்பப்பட்டார்.

அதற்காகவே, பெரும்தாக்குதல் நடத்தப்பட்டது. சிலநூறு பேரைப் பிடிக்க பல்லாயிரம் வீரர்கள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல். வழக்கமாக தாக்குதல் முடிந்து படைகள் பாசறைக்குத் திரும்பினால், தலைநகர் முழுவதும் அவர்களின் வீரக்கதைகள்தான் பேசப்படும். ஆனால்,  இப்போது அதையெல்லாம் பேச யாருமில்லை.  முந்தையநாள் பெருவிருந்தில் யார் எங்கே குடைசாய்ந்தனர் என்பதுதான் பேச்சாக இருக்கிறது.
ந்திறங்கிய யவன அழகிகளைப் பற்றிப் பேசாதவர்கள் யாருமில்லை. ஒளிகுன்றாப் பேரழகு என்று பார்த்தோர் சொல்கின்றனர். யவனத் தளபதிகளும் பாண்டிய நாட்டைப்பார்த்து வியந்துபோயிருந்தனர். மேற்கூரை மூடப்பட்ட நூற்றுக்கால் அரங்கே அவர்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியதாக மொழிபெயர்ப்பாளர்கள் கூறினர். அவர்கள் நாட்டில் உள்ளதெல்லாம் மூடப்படாத திறந்தவெளி அரங்குகள்தானாம்.

பேச்சினூடே ஒவ்வொருவராகச் சித்திர மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். வணிகர்குலத் தலைவர்கள் நால்வர் உள்ளே நுழைந்தபோது இளவரசனும் கருங்கைவாணனும் சாகலைவனும் அங்கே இருந்தனர். முசுகுந்தரும் வெள்ளி கொண்டாரும் உள்நுழைந்தனர். இன்னும் சற்றுநேரத்தில் பேரரசரும் சூல்கடல் முதுவனும் வந்துவிடுவார்கள் எனச் செய்தி சொன்னார்கள். பணியாள்கள் பளிங்குக் குவளைகளில் தேறலை ஊற்ற  ஆயத்தமாயினர்.

“நேற்றைய கொண்டாட்டத்தில், மேற்கூரையிலிருந்து தொங்கும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் ஒருத்தி ஆடினாளே, இப்போதும் என்னால் அதை நம்ப முடியவில்லை” என்றான் சாகலைவன்.
“அவள் தந்தரையில் ஆடினால்கூட நமது கண்களால் நம்பமுடியாமல்தான் இருந்திருக்கும்” என்றார் கருங்கைவாணன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88b
பேசிக்கொண்டிருக்கும்போது வெள்ளி கொண்டார் கேட்டார், “அந்த ஆட்டம் எப்பொழுது நிகழ்ந்தது?”

எல்லோரும் சிரித்தனர்.

“உங்களின் ஆட்டம் தொடங்கிய பின்னால் தான்” என்றான் சாகலைவன்.

“அவளாவது கயிற்றைப் பிடித்து ஆடினாள். நீங்களோ காற்றைப்பிடித்தே ஆடினீர்கள்” என்றார் முசுகுந்தர்.

சிரிப்பு அரங்கை நிறைத்தது.

பேரரசர் வரும் அறிவிப்பு ஓசை கேட்டது. சிரிப்பொலியை அடக்கி, வாயில் நோக்கி வணங்கி நின்றனர்.

தேறல் மட்டுந்தான் அருந்தும்போது தரும் மயக்கத்தை, அதன் மணத்தை நுகரும்போதே தந்துவிடும் சிறப்பைக்கொண்டது. அதனாலேயே குவளையில் ஏந்தியபடி மோந்தும் விலக்கியுமாக ஒரு விளையாட்டை விளையாடுவர். 
 
மூக்கில் ஏறும் மயக்கம் கணநேரத்திலேயே நடு உச்சியைத் தொட்டுத் திரும்புகிறது. கலையாமல் இருக்கும் மேகம்போல அது உச்சந்தலையில் நீண்டு நிலைகொள்ளும். எப்போது குடிக்கத் தொடங்குகிறீர்களோ அதன்பின், அது வயிற்றோடும் எரிகொள்ளும் மயக்கத்தோடும்  தொடர்புடையதாகிவிடுகிறது. எனவே, முதல் மிடறை அருந்தும் வரை மயங்கும் காலத்தை நீட்டித்துச் செல்பவன்தான் தேறலில் தேர்ந்தவனாகிறான்.
இங்கிருப்பவர்கள் எல்லோரும் தேர்ந்தவர்கள் தான். ஏந்திய குவளையை மூக்குகள் நுகர்ந்தபடி பேச்சுக்கள் மட்டுமே சுழன்றுகொண்டிருந்தன. அரங்கின் ஆட்டம் பற்றிப் பேசுதல் மிதக்கும் மனநிலைக்கு மெருகேற்றியது. “திரைச்சீலை விலக மறுத்த கணத்தில் பணியாளன் ஒருவன் ஓடிப்போய் அதனைச் சரிசெய்தான். அது தற்செயலான நிகழ்வு என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், அரங்கினரின் கவனம் முழுவதையும் திரைச்சீலையில் நிறுத்தி, தனது சீலையை மாற்றி சுழன்று உள்நுழைந்தாளே அவள். அந்தக் கணம்தான் நேற்றைய ஆட்டத்தின் உச்சம்” என்றார் முசுகுந்தர்.

தேறலை அருந்தியபடி பொதியவெற்பனின் வாய் முணுமுணுத்தது, “உச்சத்தை அறிந்தவன் நான் மட்டுமே!”

எல்லோரும் ஆடல் அரங்கையே பேசிக் கொண்டிருக்க, சூல்கடல் முதுவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்துப் பேரரசர் கேட்டார்... ”நீங்கள் பேரரங்கில் கலந்துகொள்ளவில்லையா?”

“இல்லை அரசே. நான் திசைவேழரைக்  காணப் போயிருந்தேன். மிகப்பயனுள்ள பொழுதாக அது அமைந்தது.”

“நீங்கள் அடைந்த பயனை எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமா?”

“யவனர்களுக்கும் நமக்குமான வானியல் வேறுபாட்டைப் பற்றி, பொருத்தமானவரிடம் உரையாட வேண்டும் என நீண்டநாள் நினைத் திருந்தேன். அது நேற்றுதான் நிறைவேறியது.”

“திசைவேழர் வானியலின் பேராசான். நீங்களோ கடல் வணிகத்தின் பெருமுதுவன். இருவரும் உரையாடினால் எவ்வளவு அறிவார்ந்த உரையாடலாக அது இருந்திருக்கும். எனக்குக் கேட்க வாய்ப்பின்றிப் போய்விட்டதே.”

பேரரசரின் இச்சொல் சூல்கடல் முதுவனை நாணச்செய்தது.

“யவனர்கள் பெரும்பேரரசை ஆண்டு கொண்டிருப்பவர்கள். நம்மை அவர்களோடு ஒப்பிட முடியாது. ஆனாலும், இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அப்படித்தானே முதுவரே?” என்று கேட்டார் முசுகுந்தர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88c
"ஆம்” என்றார் முதுவன். “கொள்வதற்கு விலையில்லாச் செல்வம் அவர்களிடம் உண்டு, கொடுக்கவோ ஒப்பிடமுடியா வளம் நம்மிடம் உண்டு. இப்பெரும் வணிகம் நடக்கும் கடலை நாம் ‘நேமி’ என்கிறோம்; அவர்களும் இதைப்போன்றே சொல்கின்றனர். நாம் வட்டத்தை ‘திகிரி’ என்கிறோம்; அவர்களோ ‘டிகிரி’ என்கின்றனர். காலத்தின் அளவீடுகளை நாம் ‘ஓரை’ என்கிறோம்; அவர்களோ ‘ஹோவர்’ என்கின்றனர். வெம்மையைக் குளுமையாக்கும் அதிசய மரமாக நமக்கு ‘வேம்பு’ இருக்கிறது; அவர்களுக்கோ ‘ஆலிவ்’. இரண்டின் இலையிலும் இருப்பது ஒரே கசப்பு. இரண்டின் நிழலிலும் இருப்பது ஒரே குளுமை. நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வணிகத்தால் எவ்வளவோ கொடுக்கல் வாங்கல் நடந்திருக்கிறது”. 
 
”இவ்வணிகம் அவர்களின் தேவையில் இருந்துதான் தொடங்கி வளர்ந்தது. அதற்கான மாற்று ஈடாகத்தான் நாம் பலவற்றைப் பெற்றுக்கொள்கிறோம். அந்தத் தொடக்க கட்டத்திலிருந்து நாம் வெகுதூரம் முன்னோக்கி வந்துவிட்டோம். இப்போதைய நிலையில் கடல் வணிகத்தில் நமது கை ஓங்க வழியென்ன?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

கற்பனைக்கான மயக்கத்துக்கு இப்போது தேறலோ, நேற்றைய ஆட்டத்தின் நினைவோ தேவைப்படவில்லை; வணிகத்தின் பெருங்கனவே போதுமானதாக இருந்தது.

 “கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப்போலப் படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத்தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன” என்றாள் பொற்சுவை.

வைகையின் கரையோரம் பூவிலி மன்றத்தில் இருந்து ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டே பொற்சுவை கூறியது சுகமதிக்கு அதிர்ச்சியைத் தந்தது.

சக்கரவாகப்பறவை கடலின் குறியீடாக மட்டுமல்ல, காதலின் குறியீடாகவும் இருக்கிறது. எனவே, அவ்விடம்விட்டு வெளியில் வருதல் நலம் எனத் தோன்றியதால், வைகைக்கரைக்கு அழைத்துவந்தாள் சுகமதி.
``நதி கனவோடும் காதலோடும் கலந்த ஒன்றல்லவா? அதுவும் வைகை, காதலர் திருவிழாவைக் காலங்காலமாகத் தனது உள்ளங்கையில் வைத்துக்கொண்டாடும் நதியல்லவா? இங்கு வந்தால் வேறு எதன் நினைவு வரும் என்று நீ நினைத்தாய்?” எனக் கேட்டாள் பொற்சுவை.

”வைகையைத் தமிழ்நதி என்றுதானே புலவர்கள் அழைக்கின்றனர். அதனால் உங்களின் நினைவு இலக்கியத்தின்பால் செல்லும் என நினைத்தேன்” என்றாள் சுகமதி.

 “இலக்கியமும் காதலும் வெவ்வேறா சுகமதி?” எனக் கேட்டவள் கூறினாள், “நீ கப்பலுக்குள் இருக்கும் நீரணி மன்றத்தில் நாட்டியம் பார்த்திருக்கிறாயா?”

 “ஒரே ஒரு முறை, மணிவாய்த்தீவுக்குப் போகும்போது உங்களோடு சேர்ந்து பார்த்திருக்கிறேன்”.

“அப்போது என்ன நடந்தது என்று  நினைவுபடுத்திப் பார். நடனமாடுபவளின் கால்களை நாம் வியந்து பார்த்துக் கொண்டி ருப்போம். ஆனால், அதைவிட அதிகமாக நாம் ஆடிக்கொண்டிருப்போம். எது நடனம் என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். இலக்கியமும் காதலும் அப்படித்தான். எது இலக்கியம், எது காதல், என்பதைப் பிரித்தறிய முடியாது. ஒன்றின் நிழலாக இன்னொன்று இருக்கும். ஆனால், எது நிழல் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88d
சுகமதி வாயடைத்துப்போனாள்.

வைகையின் சிற்றலைகள் அடுத்தடுத்து வந்து பொற்சுவையின் கால்களை நனைத்து போயின. ஆடையின் கீழ்விளிம்பு முழுவதும் ஈரமானது.

“நேற்று ஆடலரங்குக்கு நீங்கள் ஏன் வரவில்லை என்றும், ‘நீயாவது சொல்லி அழைத்துவர வேண்டாமா?’என்றும் பலர் என்னைக் கேட்டனர்”.

“நீ என்ன சொன்னாய்?”

“பொற்சுவை மிகச்சிறந்த நடனமங்கை. யாருடைய ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாதா?” எனப் பதிலுக்குக் கேட்டேன்.

மறுமொழியால் மகிழ்ந்த பொற்சுவை கேட்டாள், “நான் சிறந்த நடன மங்கையா சுகமதி?”

“இதில் என்ன ஐயம்? நீங்கள் ஆடிய ஆட்டத்தைக் கண்டு மயங்கியவன்தானே அந்த மாவீரன்.”

கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி பொற்சுவை கேட்டாள், ``நீ எதற்காக என்னை வைகைக்கரைக்கு அழைத்து வந்தாய்? இப்போது எதை நினைவூட்டுகிறாய் எனக்  கவனித்தாயா?”

அப்போதுதான் சுகமதிக்கு தான் செய்த தவறு புரிந்தது. நாக்கை மடக்கிக் கடித்தாள்.

“தப்பிக்க முடியாது சுகமதி. நானும் நீயும் காதலைவிட்டு ஒருபோதும் தப்பிக்க முடியாது. ஆடையின் கீழ்விளிம்பை நதிநீரும், கழுத்தின் மேல்விளிம்பைக் கண்ணீரும் கடந்து கொண்டிருக்கின்றன. நாம் என்ன செய்ய முடியும்?”

“இப்படியொரு மயக்கம் உள்ளுக்குள் சுழல ஆரம்பித்தால் யார்தான் என்ன செய்ய முடியும்?” தேறலின் சுவையை இதழ்கள் பருகத் தொடங்கிய நேரத்தில் சூல்கடல் முதுவன் பேசத் தொடங்கினான்.

“யவனத்தேறல் இதனினும் கடுஞ்சுவைகொண்டது. ஆனால், மணமற்றது. பாண்டிய நாட்டுத் தேறலின் தனிச்சுவையே மணத்தாலேயே மயக்குதல்தான்.”

“யவனத்தேறல் மணமற்றுப் போகலாம். ஆனால், யவன அழகிகள் பார்த்தாலே மயங்கவைக்கும்வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88e மாயங்களன்றோ,  அவர்களை என்ன சொல்வது?”

ஏளனமாய் ஒரு சிரிப்புச் சிரித்தார் முதுவன்.

“இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

“நீங்கள் பேரழகிகள் என்று வர்ணித்து மயங்குகிறீர்களே, அவர்களில் பெரும் பான்மையோர் யவன அழகிகள் அல்லர்.”

அவையிலிருந்த எல்லோருக்கும் உச்சியில் ஏறிய மயக்கம் சட்டெனக் கீழிறங்கியது. பேரரசர் திகைத்துப் போனார்.

முதுவன் அதனைக் கண்டுகொள்ளாமல் தேறலைப் பருகினான்.

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? அவர்கள் யவன அழகிகள் இல்லாமல் வேறு யார்?”

“அவர்கள் எல்லோரும் பாப்ரிகோன் அழகிகள். ஒரு சாயலில் யவன அழகிகள்போல் இருப்பார்கள். அவர்களைத்தான் கப்பலில் வந்து இறக்குகின்றனர். எங்களுக்கு உண்மை தெரியும் என்பதால், இம்முறை மூன்று பேரை மட்டும் யவனத்திலிருந்தும் மீதம் இருபதுக்கும் மேற்பட்டோரை பாப்ரிகோனிலிருந்தும் அழைத்துவந்து பரிசளித்தனர்”.

எல்லோரும் அதிர்ந்துபோனார்கள். சற்றே பதற்றமும் உருவானது.

“பரிசளிக்கப்பட்டவர்களில் மூவர் மட்டுந்தான் யவன அழகிகள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார் வெள்ளி கொண்டார்.

குவளையை மாற்றி, நிரப்பிய தேறலைக் கையிலேந்தியபடி முதுவன் சொன்னான், “நாங்கள் வணிகத்தில் பெரும்பொருள் ஈட்டு பவர்கள் மட்டுமல்ல; பெரும்பொருள் இழப்பவர்களும்தான்”

பேரரசருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.

“இந்த ஏமாற்றம் ஒரு தரப்புக்கு மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். இருதரப்புக்கும்தான் நிகழ்கிறது” என்றார் முதுவன்.

அந்தத் தரப்புக்கு என்ன நிகழ்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வத்தோடு இருந்தனர்.

“இங்கே வாங்கும் முத்துகளை பலநூறுமடங்கு விலைக்கு அவர்களின் சொந்தநாட்டினரிடம் விற்பனை செய்கின்றனர். உங்களுக்குத்  தருவனவற்றில் நிறமும் மூக்கும்தான் வேறுபடுகின்றன. அவர்களுக்குத் தருவனவற்றில் நூற்றுக்கு நூறு வேறுபடுகின்றன.”

எல்லோரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

முதுவன் சொன்னான், “இதுதான் வணிகத்தின் நியதி. விற்கப்படும் இடத்தில் முடிவாகும் விலை, பொருளுக்கு மட்டுமல்ல; அதைப் பற்றிய அறியாமைக்கும் சேர்த்துத்தான்”.

“பலநூறு மடங்கு அதிகப்படுத்தி விற்கிறார்கள் என்றால், அதை ஏன் அவர்கள் மட்டும் பெற வேண்டும்?”

“இவ்வணிகப்பாதையின் கட்டமைப்பைக் கையில் வைத்திருப்பது அவர்கள்தானே.”

“அவர்கள் வைத்துள்ள கட்டமைப்பு என்ன என்பதனைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள். அதன்பின், நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்கலாம்” என்றார் முசுகுந்தர்.

“இனிமேல் சிந்திக்க என்னடி இருக்கிறது. எல்லாம் முடிந்துவிட்டது.”

“என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. எதனால் தங்கள் தந்தை இந்த முடிவை எடுத்தார்?”

“பாண்டிய நாட்டு முத்துகள் நூறுமடங்கு அதிக விலைக்கு யவனத்தில் விற்பனையாவதை அறிந்துதான்.”

“அதற்காகவா எடுத்திருப்பார்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88f
“வேறு எதற்காக எடுத்தார்? மிளகின் விலை இதைவிட அதிகமாக இருந்திருக்குமேயானால் இத்தனை கப்பல்களும் முசிறியில்தானே நங்கூரம் பாய்ச்சியிருக்கும். இந்நேரம் நாம் இருவரும் பேரியாற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்திருப்போம்.”

சுகமதி திகைத்தபடி நிற்க, பொற்சுவை தொடர்ந்தாள்... “யவனர்கள் எண்ணற்ற அழகிகளைக் கொண்டுவந்துள்ளதாகக் கூறினாயே, அதற்கு என்ன காரணமோ, அதே காரணம்தான் என் தந்தை என்னைக் கொண்டு வந்துள்ளதற்கும்.”

சுகமதி உறைந்து நின்றாள்.

வைகையைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் பொற்சுவை. “ஓடும் நீருக்குள் உறங்கும் நதி” என்று மனதுக்குள் ஒரு வரி தோன்றியது. அதுதான் பெண் எனவும் தோன்றியது”.

சுகமதி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

பொற்சுவை சுகமதியைப் பார்த்துக் கேட்டாள், “என்ன சுகமதி பேச்சற்றுப் போனாய்?”

“இல்லை… ஒன்றுமில்லை…” எனச் சொல்லி தனது உணர்வை மறைக்கப் பார்த்தாள்.

“நீயும் நானும் மட்டுமல்ல, இப்பூவிலி மன்றத்தில் வந்து நின்ற எல்லா பெண்களின் கண்களும் இப்படிக் கலங்கித்தான் இருந்திருக் கின்றன. அதை வைகை அறியும். நேற்று மணமுடி கொடுத்து வெற்றிலை மாற்றும் அரங்கில் என்னவெல்லாம் இருந்தன என்பதை நீ கவனித்தாயா?”

எல்லாவற்றையும் சுகமதி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால், பொற்சுவை எதைக் கேட்கிறாள் எனத் தெரியவில்லை.

“அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தட்டுகள் முழுவதிலும் பூக்களும் கனிகளும் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. வேர்களும் தண்டுகளும் வைக்கப்படுவதில்லை. ஏன் தெரியுமா?”

கேள்விக்குப் பிறகுதான், சுகமதி சிந்திக்கத் தொடங்கினாள் அதற்கான காரணம் தெரியவில்லை.

“வேர்களும் தண்டுகளும் தம்மைப் பெருக்கிக் கொள்வன. பூக்களும் கனிகளும்தான் தம் இனத்தைப் பெருக்குவன. அலங்கரித்த தட்டில் வைத்து கனி மாற்றப்பட்டதன் காரணம்தான் நான் மாற்றப்படுவதும்.”

ஓரளவு கல்வியறிவுகொண்டவள்தான் சுகமதி. வணிக குலத்திலிருந்து வந்தவள்தான் அவளும்; அதனால்தான் பொற்சுவை பேசும் பொருளின் ஆழம் அவளுக்குப் புரிந்தது. ஆனால், அதைஎதிர்கொள்ளும் மனவலிமை அவளிடம் இல்லை. மனமாற்றத்துக்குத்தான் வைகைக் கரைக்குப் போவோம் என்று சொல்லி அழைத்துவந்தாள். ஆனால், இங்கு நடப்பது தழைகீழாக இருந்தது. வைகைக் கரையைவிட்டு விரைவில் அகலமாட்டோமா என்று தோன்றியது சுகமதிக்கு.

“அதுவும் தட்டில் என்னென்ன கனிகள் வைக்கப்பட்டிருந்தன என்று பார்த்தாயா?”

நினைத்துப்பார்த்து சுகமதி சொன்னாள், “பலாவும் மாதுளையும் இருந்தன.”

“இவை இரண்டும்தான் கனிகளா? எல்லோருக்கும் பிடித்த மாங்கனி ஏன் வைக்கப்படவில்லை? இவ்வளவு பெரிய பாண்டிய நாட்டில் ஒரு மாங்கனி கூடவா கிடைக்கவில்லை? ”

சுகமதிக்குக் காரணம் புலப்படவில்லை.

பொற்சுவை சொன்னாள், ``பலாவும் மாதுளையும் பல வித்துக்களைக்கொண்ட கனிகள். ``மா” ஒற்றை விதையைக்கொண்ட கனி.”

சொல்லவருவதன் பொருள் புரிந்தபோது திகைத்துப்போனாள் சுகமதி. சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் நடுங்கச் செய்வனவாக இருந்தன.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88gபொற்சுவை மேலும் சொன்னாள், “என் உடல் எக்கனியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், என் மனமோ ஒற்றை விதையுடைய மாங்கனி. அதில் இன்னொரு விதைக்கு இடமில்லை.”

“இன்னும் வயிற்றில் இடமிருக்கிறதா?” எனக் கேட்டபோது, சூல்கடல் முதுவன் சொன்னார், “நாங்கள் கடற்குடிகாரர்கள். நீரில் மிதப்பதும் நீரால் மிதப்பதும்தான் எங்களின் வாழ்வு.”

முதுவனின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர் எல்லோரும். அவர் வணிகப்பாதையின் கட்டமைப்பைப் பற்றி சொல்ல  ஆயத்தமானார். அதைக் கவனித்த பேரரசர் கூறினார், “இவ்வுரையாடலின்போது திசைவேழரும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். அவரை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டதும், பணியாளர்கள் ஓடினர்.

“அவர் வந்ததும் இதைப்பற்றிப் பேசுவோம்” என்றார் பேரரசர்.

‘திசைவேழர் தென்திசை மாளிகையில் இருக்கிறார். இங்கிருந்து போய் அவரை அழைத்து வந்துசேர நேரமாகும். முதுவன் சொல்லத் தொடங்கும்போது தந்தை ஏன் இப்படிச் செய்துவிட்டார்?’ என மனதுக்குள் புலம்பினான் இளவரசன்.

‘பெருங்குவளை மூன்றைக் கடந்துவிட்டால் நினைவை நமது கட்டுப்பாட்டின் வழியே ஒழுங்குபடுத்த முடியாது. இவ்வளவு  முதன்மையான செய்தியை உளறலாகப் பேசிவிடக்கூடாது. அது மட்டுமல்ல, உடன் மூன்று வணிகர்களை வைத்துக்கொண்டு பேசுவது அறிவுடைமையல்ல. எனவே, நாளை நிதானமாகப் பேசலாம்’ என்று முடிவெடுத்த பேரரசர் சற்று நேரங்கடத்துவதற்குத்தான் இதைச் செய்தார். முசுகுந்தருக்கு மட்டும் இது புரிந்தது.

“சொல்ல மறந்துவிட்டேன். திசைவேழர் வந்ததும், அவரிடம் யாரும் கபிலரைப் பற்றி சொல்லிவிடாதீர்கள், கோபப்பட்டுவிடுவார்” என்று சொல்லிச் சிரித்தார் முதுவன்.

முதற் குவளையைக் கடக்காமல் இருந்த முசுகுந்தர் கேட்டார், “பெருங்கவி இன்னும் ஏன் மணவிழாவுக்கு வந்து சேரவில்லை?”

“மணமுடி நிகழ்வுக்கு முன்னதாக வந்துவிடுவார் என நினைத்தேன். தாம்பூலம் தரிக்கையில் அவர் இல்லாதது மனதைக் கவலைகொள்ளச் செய்தது” என்றார் பேரரசர்.

“இத்திருமணம் பற்றிய செய்தி தெரியாத இடமேயில்லை. தெரிந்தால் அவர் வராமல் இருந்திருக்க மாட்டார்.”

“ஒருவேளை நெடுந்தொலைவுள்ள தீவு எதற்கேனும் போயிருந்தால் செய்தி எட்டாமல் போயிருக்கலாம் அல்லவா?”

முதுவன் சொன்னான். “இல்லை. எல்லா தீவில் இருந்தும் வணிகர்கள் வந்துவிட்டனர். இத்திருமணச் செய்தி தெரியாத பகுதி நிலப்பரப்பில் எங்கேனும் இருக்கலாம். தீவுக்குள் எங்கும் இல்லை.”

“கடலும் கடல்சார் வாழ்வும்தானே உங்களுக்கு அமைந்தது. நீங்கள் எப்படி செடி, கொடி, காய், கனிகளைப்பற்றியெல்லாம் இவ்வளவு அறிந்தீர்கள்?” வைகையில் இருந்து மாளிகை திரும்பு வழியில் சுகமதி கேட்டாள்.

மறுமொழியின்றி அமைதியாக வந்தாள் பொற்சுவை. தேர்ச்சக்கரம் உருளும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

“நான் எதுவும் தவறாகக் கேட்டுவிட்டேனா?”

“இல்லை. மனம் ஆசானிடம் போய்விட்டது. அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தது ஏராளம். அவரைப் பார்க்கக் கண்கள் ஏங்குகின்றன.”

“அவர் ஏன் இன்னும் மணவிழாவுக்கு வராமல் இருக்கிறார்?”

“அதைப்பற்றி நான் சிந்திக்கவில்லை.

அவரைப் பார்த்தால் அந்தக்கணமே உடைந்து அழுதுவிடுவேன். அவரை நினைத்தாலே மனதில் பதற்றம் பற்றிக்கொள்கிறது. அதனாலே நினைக்காமல் இருக்கிறேன். இப்போது நீ அவரை நோக்கிய நினைவைக் கிளறி விட்டுவிட்டாய்.”

“இன்னும் சிலநாள்கள்தானே இருக்கின்றன. அதற்குள் வந்துவிடுவார் என நினைக்கிறேன்.”

“வருவதாக இருந்திருந்தால் எப்போதோ வந்திருக்க வேண்டும். அதற்கான நாள்கள் கடந்துவிட்டன. இனி அவர் வரமாட்டார்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88h1
“பாண்டியப் பேரரசின் போற்றுதலுக்குரிய பெருங்கவி உங்கள் பேராசான். பின் எப்படி வராமல் இருப்பார்?”

“இம்மணவிழா பற்றிய செய்தி தெரிந்தால்தானே வரமுடியும்?”

“வேந்தர்கள் அனைவருக்கும், சிற்றரசர்கள் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தீவுக்கூட்டங்கள் எங்குமிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். பின், அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே?”
உதட்டோரம் சின்னதாய் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுப் பொற்சுவை சொன்னாள், “அவர் பறம்பு நாட்டுக்குப் போயிருந்தால் எப்படித் தெரிந்திருக்கும்?”

சுகமதியின் கண்கள் இமைக்காமல் நிலை கொண்டன.

பொற்சுவை தொடர்ந்தாள், “இதுபோன்ற செய்திகள் சென்றடையாமல் இருக்கும் ஒரே நிலப்பகுதி அதுவாகத்தான் இருக்க முடியும். ஆசானும் அங்கே போக வேண்டும் என்று பல ஆண்டுகள் விருப்பத்தோடு இருந்தார். அது இப்போது நிகழ்ந்திருக்க வேண்டும்.”

சற்று இடைவெளிவிட்டுச் சொன்னாள், “என் கண்ணீர் அவரை வெகுதொலைவிலே நிறுத்திவிட்டது சுகமதி”.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 31

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 10:55 am

டது புறம் குதிரைத்தலையைப் போலிருக்கும் `ஆறு புரவி'(அசுவினி) விண்மீன் கூட்டம் முன்பைவிடத் துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது. அதையே நீண்டநேரம் பார்த்தபடி இருந்தான் அந்துவன். அவனை அறியாமலேயே மனம் மகிழ்வை உணர்ந்தது. அவனது கண்கள் வரையப்படும் விண்மீன் கூட்டத்தையும், பின்னர் கூண்டுக்குள் இருந்த தேவாங்குகளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே இருந்தன. விண்மீன் கூட்டங்களுக்கு இடையில் உலவித் திரியும் விலங்கினைப்போல அத்தேவாங்குகள் தோன்றின.

வாயும் மூக்கும் சிறிது நீண்டிருப்பதால் பறவைகளின் கைப்பிள்ளைபோல இருப்பதாக அந்துவன் எண்ணினான். மேற்கூரையின் வேலைகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. விரைவில் பாண்டரங்கை விட்டு வெளிச்செல்ல காத்திருந்தான் அந்துவன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P75a
அன்றைய நாளின் காலை நேரத்திலேயே கலந்துரையாடல் அரங்குக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர். ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதைப் பொருத்துத்தான் மனித மனம் எப்படி அதை எடுத்துக்கொள்கிறது என்பது தெரியவருகிறது. தங்களின் அந்தப்புரத்தில் இருப்பவரெல்லாம் யவன அழகிகள் அல்ல என்று முதுவன் சொன்னபோது பேரரசரின் மனம் பேரதிர்ச்சிக்கு உள்ளானது. நேற்றிரவு விருந்தில் மற்றவர்கள் கவனிக்காதபோது முதுவனிடம் பேரரசர் கேட்டார். “நீங்கள் கிளாசரினாவை பார்த்திருக்கிறீர்களா?”

இந்தக் கேள்விக்கு என்ன பொருள் என்பது முதுவனுக்குப் புரிந்தது.

“மணமுடி நிகழ்வில் பார்த்தேன் அரசே. அவள் யவன அழகியல்லவா? அதனால்தான் தனித்துவத்தோடு இருக்கிறாள். இமைகள் கவிழும்போதுகூட அவளின் கண்களைப் பார்க்கத் தோன்றுகிறது.”

பேரரசருக்கு எதிர்பார்த்த பதில் கிடைத்தது. ஆனாலும், சற்றே பதற்றமானார். ‘மணமுடிவாக்கு கொடுக்கும் நிகழ்வில் அரங்கின் இடதுபுற மூலையில் அவள் அமர்ந்திருந்தாள். முதுவன் உட்கார்ந்திருந்ததோ தனக்கருகில். எப்படி இவ்வளவு தொலைவில் கவிழும் இமைகளைக் கண்டறிந்தான்? சில பாதைகளில் பயணிக்கத் தொடங்கினால் பதற்றம் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது’ என்று எண்ணங்கள் ஓடியபடி இருக்க ஆலோசனை மாடத்தை நோக்கி நடந்தார் பேரரசர்.

அங்கு இளவரசன் பொதியவெற்பனும், சூல்கடல் முதுவனும், திசைவேழரும் வீற்றிருந்தனர். இவர்கள் வருவதற்கு முன்பே தலைமை அமைச்சர் முசுகுந்தரும் தளபதி கருங்கைவாணனும், வெள்ளிகொண்டாரும் வந்துவிட்டனர். இன்று நடைபெறப்போகும் உரையாடல், பாண்டிய நாட்டின் எதிர்காலத்தில் பெரும்மாற்றத்தை நிகழ்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. “நேற்று தற்செயலாக நிகழ்ந்த ஓர் உரையாடல் இவ்வளவு ஆக்கபூர்வமான இடத்துக்கு வருமென்று நான் நம்பவில்லை” என்று வெள்ளிகொண்டார் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இது தற்செயல் அன்று என்பது, சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தது  பேரரசர் வந்ததும் பேச்சுத் தொடங்கியது. தோல் வரைபடம் ஒன்றை மரப்பலகையில் விரித்தார் முதுவன். எல்லோரும் அதைச் சுற்றி நின்றனர். பார்த்தவுடன் புரிந்தது அது யவனர்களின் வரைபடம் என்று.

“இவ்வணிகப் பயணம் மூன்று இடங்களில் ‘தங்கல்’களைக் கொண்டது. கொற்கையிலிருந்து புறப்பட்டால் முதல் `தங்கல்’ சிந்து ஆறு கடலிற்புகுமிடத்தில் இருக்கும் பாப்ரிகோனில். அங்கு ஓய்வெடுத்துக்கொண்டு தேவைப்பட்டால் அடிமைகளை மாற்றிக்கொண்டு கப்பல் புறப்படும். அங்கிருந்து செங்கடலின் முனையில் இருக்கும் பெர்னிகே துறைமுகத்துக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து பொருள்களைக் கழுதைகளின் மீதேற்றி நடத்தி மணற்பரப்பைக் கடந்து நீல ஆற்றங்கரை(நைல்நதி)யில் இருக்கும் கோபடஸ் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் கப்பல் மூலமாக யவனத்தை அடைய வேண்டும்.
யவனர்கள் தமிழ்நிலத்தில் இரு கோட்டை களைக் கட்டி வீரர்களையும் எண்ணற்ற அடிமைகளையும் வைத்துள்ளனர். தங்களின் நாவாய்களைப் பழுதுபார்க்கத் தேர்ந்த தச்சர்களையும் வைத்துள்ளனர். இதேபோன்று பாப்ரிகோன், பெர்னிகே, கோபடஸ் ஆகிய மூன்று இடங்களிலும் கோட்டைகள் அமைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்துள்ளனர்.

இப்பெரும் பயணத்தில் மேலிமேடும் மங்களகிரியும் கடற்கொள்ளையர்கள் அதிகமுள்ள பகுதி. அதேபோலச் செங்கடலில் இருந்து பெர்னிகே செல்லும் வழியில் பாலை மணற்பரப்பில் கருங்கொள்ளையர்களின் தாக்குதல் அதிகம் நிகழும். அவற்றைச் சமாளிப்பதில் சிறு தவறு நடந்தால்கூட எல்லாம் அழியும்; அதனால்தான் தேர்ந்த படைவீரர்கள் கப்பலின் பாதுகாப்புக்கு இருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் மொத்தமாகப் போவதும் முக்கியமாகிறது.”

இவையெல்லாம் தெரிந்த செய்திகள்தான்.  இவற்றில் முதன்மையானது ஒவ்வொரு கோட்டையிலும் எத்தனை வீரர்கள், எத்தனை அடிமைகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்.

“பெர்னிகேவைத் தாண்டி நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இங்கிருந்து பெர்னிகே வரையிலான பயணத்துக்கு நாம் சில தங்கல்களை ஏற்படுத்த முடியுமல்லவா?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

“நமது நாட்டில் யவனச்சேரியை அவர்கள் அமைத்துள்ளதைப்போல பாப்ரிகோனிலும் பெர்னிகேவிலும் ஒப்பந்தம் செய்துகொண்டு நாம் தங்கல்களுக்கான கோட்டைகளை அமைக்கலாம்” என்றார் வெள்ளிகொண்டார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P75b
``யவனர்களால் தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள், அடிமைகள் ஆகியோரின் எண்ணிக் கையைவிட இருமடங்கு எண்ணிக்கையில் நம்மால் தங்கவைக்க முடியும்.” என்றான் கருங்கைவாணன்.

பேரரசர் அவனது கூற்றை உற்றுநோக்கினார்.

“மேலிமேட்டிலும் மங்களகிரியிலும் கடற்கொள்ளையை நடத்திக் கொண்டிருப் பவர்கள் யாரென நமக்குத் தெரியும். அவர்களை எப்படி அடக்குவதெனவும் நமக்குத் தெரியும்” என்று சற்றே ஆணவத்தோடு சொன்னான் கருங்கைவாணன்.

இன்று மணச்சடங்கின் முதல் நிகழ்வான ‘சிலம்புக் கழிதல்’ நிகழ்வு. பெண்ணின் வாழ்வில் சிலம்பு அணிதலும் சிலம்பு கழற்றலும் முதன்மையான நிகழ்வுகளாகும். குழந்தைமை நீங்கி இளம்பருவத்துக்குள் நுழையும்போது பெண்ணுக்குச் சிலம்பை அணிவித்தல் பெருவிழாவாக நடத்தப்பெறுகிறது. அதன்பின், அவளுக்கு மணமாகும்போது சிலம்பு அவளின் கால்களில் இருந்து கழற்றப்பெறுகிறது.

மாடத்தில் அரசகுலப்பெண்கள் அமர்ந்திருந்தனர். எல்லோரும் பொற்சுவைக்காக காத்திருந்தனர். அவள் தனது அறையிலிருந்து புறப்பட விருப்பமின்றி இருந்தாள். `எல்லோரும் அரங்குக்கு வந்துவிட்டார்கள்' எனச் சொல்லி சுகமதிதான் அவளை வேகப்படுத்தினாள். அவளோ அதைப் பொருட்படுத்தவே இல்லை.

சிலம்பு அணிவிக்கப்பெற்ற முதல்நாள் நினைவுகளுக்குள் அவள் மனம் மூழ்கிக்கிடந்தது.  தன் கால்களிலிருந்து எழும் ஓசையைக் கேட்க அவ்வளவு ஆசைப்பட்ட காலமது. ஓசைக்காகவே ஓடிப்பார்த்தது எத்தனை முறை. எத்தனை விதத்தில் கால்களை தரைத்தட்டி பழக்கினோம்! தூங்கும்போதும் ஆடிய கால்கள். தூரியில் தொங்கிக்கொண்டே ஆடிய கால்கள். ஓசை எழுப்பும் கால்கள் வாய்த்தன என எண்ணி மகிழ்ந்த நாள்கள்தான் எத்தனை, எத்தனை! பறவைகள் சிறகுக்குள் தலைநுழைத்து கோதிக்கொண்டே இருப்பதைப்போல, குனிந்து இருகைகளாலும் சிலம்பைத் தொட்டு அசைத்துக் கொண்டே இருந்தது ஒரு காலம்.

சிலம்பு அணிதலுக்குத் தந்தை நாள்குறித்தபோது, அண்ணன்தான் கேட்டான். “என்ன பரல் கொண்டு சிலம்பு செய்யப்போகிறீர்கள்?”

“நீயே சொல். உன் தங்கையின் காற்சிலம்புக்கு என்ன பரல் வேண்டுமென்று?”

“நாளை சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

மறுநாள் இல்லத்தின் முற்றத்தில் அனைவரும் அமர்ந்திருக்கும்போது உள்ளே வந்தவன் தந்தையைப் பார்த்துக் கேட்டான், “தந்தையே, என்றென்றும் வெல்ல வேண்டும் என்பதற்காகத் தங்களின் மணிமுடியில் அரசர்கள் பதிக்க விரும்புவது எந்த வகை மணிக்கற்களை?”

“இளஞ்சிவப்பு நிற மாணிக்கக் கற்களைத் தங்களின் மணிமுடியில் பதித்தால் எப்போரிலும் வெல்லலாம் என்று சொல்வார்கள்.”

``அப்படியென்றால் இளஞ்சிவப்பு நிற மாணிக்கக்கல்லைக் கொண்டு என் தங்கையின் கால்களுக்குச் சிலம்பு செய்யுங்கள்.”

“அவள் எந்தப் போரை வெல்லப் போகிறாள் மகனே?”

“அவள் ஒரு பேரழகி. நாளை அவளுக்காகவே போர் நடக்கலாம் அல்லது அவளே ஒரு போரை நடத்தலாம். யார் அறிவார்?”

தந்தை அதிர்ந்துபோனார். தயக்கம் நீங்க நேரமானது. ‘நாம் வணிகர்குலம் என்பதை இவன் அடிக்கடி மறந்துவிடுகிறான், அதுவும் தங்கை என்று வந்துவிட்டால், இவனது எண்ணம் கட்டுக்குள்ளே இருப்பதில்லை’ என்று எண்ணியபடி, “எங்கிருந்து கிடைக்கும் அவ்வளவு கற்கள்? எனக் கேட்டார்.

“பெருவணிகர் நீங்கள். எங்கு கிடைக்குமென உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

தந்தை பெரும்குழப்பத்துக்கு உள்ளானார்.

வணிகர்கள் உருவாக்கிய கதைக்குள் இப்போது பெருவணிகர் ஒருவரே மாட்டிக்கொண்டார். அந்தக் குறிப்பிட்ட தீவு எதுவெனத் தந்தை அறிவார். அவரே புறப்பட்டுப் போனார்.

கப்பல் நீர்கிழித்துப் போனது. நில்லாது அசையும் அலைபோல, அதன் பின், ஓசை நில்லாது ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும் இளஞ்சிவப்பு நிற மாணிக்கக்கல் கொண்ட சிலம்பு பொற்சுவையின் காற்சிலம்பானது.
பிற மூன்று இடங்களிலும் யவனர்கள் உருவாக்கியுள்ள கோட்டைகளில் எத்தனை வகையான பொறிகள் இருக்கின்றன என்று வரிசைப்படுத்தினார் சூல்கடல் முதுவன். அதுவரை அவ்விடங்களில் உள்ளவை மிகப் பாதுகாப்பான கோட்டைகள்; அவற்றினுள் வீரர்கள் உள்ளனர் என்று மட்டு்ம்தான் தெரியும்.  ஆனால், யவனர்களின் வலிமை கோட்டையிலும் வீரர்களிடமும் மட்டுமில்லை; எண்ணற்ற பொறிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அவைதான் அவர்களின் வலிமைக்கு அடிப்படை” என்று கூறியபடி பொறிகளைப் பட்டியலிட்டார்.

“பெரும் தோல்கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டு, கவட்டைபோல் இரும்புக் கம்பிகள் நீண்டபடி கோட்டைமதிலில் நிறுத்தப்பட்டுள்ள ‘எந்திர வில்’. அதை இயக்க ஒருசிலர் போதும். அதிலிருந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அம்புகள் பாய்ந்து வெளிவரும். இரண்டு எந்திர வில்கள் இருந்தால் கோட்டையை எதிரிகள் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

நூற்றுக்கணக்கான கற்களை உமிழும்  ‘கவண்பொறி.’ இரும்பால் செய்யப்பட்ட  சிற்றூசி உருளைகளை வீசி எறியும் ‘கூடைப்பொறி.’ கோட்டைமதிலை நெருங்கும் பகைவரின் உடலைக் கொத்தித்தூக்கும் ‘தூண்டிற் பொறி.’ அதையும் மீறி மேலேறுபவரை அகழியை நோக்கித் தள்ளும் ‘கவைப் பொறி’” என்று வரிசையாகத் தாக்கவும் தடுக்கவும் யவனர்கள் பயன்படுத்தும் பொறிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே வந்தார். கடைசியாக மூன்று பொறிகளைப் பற்றிச் சொல்லியபோது எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.

சிறிதுநேரம் எந்தப் பேச்சும் இல்லை.

பொற்சுவையின் வருகைக்காக எல்லோரும் அரங்கில் நெடுநேரமாக உட்கார்ந்திருந்தனர். அவளோ நினைவுகளில் மூழ்கியவளாக அறையைவிட்டு அகலாமல் இருந்தாள். அரச குடும்பத்தின் மூத்தபெண்மணிகள் காரணம் அறியாமல் திகைத்தனர். “இன்னும் சிறிதுநேரத்தில்  பேரரசியார் வந்துவிடுவார். அதற்குள் அழைத்து வாருங்கள்” என்று ஆள் மாற்றி ஆள் அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
`ஒப்பனை இன்னும் முடியவில்லை' என்று இடைவிடாமல்  மறுமொழி சொல்லிக்கொண்டே இருந்தாள் சுகமதி. பொழுதாகிக்கொண்டே இருந்தது. நிலைமையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்த சுகமதிக்கு ஓர் எண்ணம் பிறந்தது.

பொற்சுவையை அழைத்துவர அனுப்பப்பட்ட பணிப்பெண்களிடம் பெரும் கூடையைக் கொடுத்துவிட்டாள். அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அரங்குக்கு வந்தனர். அரங்கில் இருந்த மற்றவர்கள் என்னவென்று புரியாமல் திகைத்தபோது, பணிப்பெண்கள் சொன்னார்கள்.  “சிலம்பு கழற்றும் விழாவுக்காகச் சாவகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாம்” என்று சொல்லியபடி, பெட்டியில் இருந்த பனை விசிறியை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தனர்.

‘பனைவிசிறியா!’ என்று சற்றே முகம் சுழித்தபடி வாங்கியவர்கள் அதை விரிக்கத் தொடங்கினர். விரியும் பனையோலை முழுவதும் அழகு நிரம்பிய ஓவியங்கள். அத்துணையும் இணையற்ற எழில்கொண்டவை. அனைவரின் கண்களும் ஓவியங்களை உற்றுப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, பனைவிசிறியின் மேல்முனையில் முத்துகள் பதிக்கப்பட்டிருந்தது. வாங்கியவர்கள் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். பறவையின் சிறகுபோல விசிறியை விரிக்கும்போது ஓவியங்களின் அழகும் முத்துகளின் ஒளியும் மெய்ம்மறக்கச் செய்தன.

ஒருவர்கூட விசிறியை விசிறாமல் கண்ணாடியைப்போல் முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒருத்தி மட்டும் சொன்னாள், “விசிறிக்கே இவ்வளவு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோது, இளவரசிக்கு ஒப்பனை செய்ய பொழுதாகாமல் என்ன செய்யும்?”

நமது கலங்களைவிட யவனர்களின் நாவாய்கள் சிறப்புமிக்கவையா? இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P75c
இளவரசனின் வினாவுக்கு சூல்கடல் முதுவன் சொல்லப்போகும் விடை கப்பலின் இயங்கு பொறிகளைப் பற்றியதாக இருக்குமென நினைத்தனர். ஆனால், அவர் வேறு ஒரு விடையைச் சொன்னார்.

“கடற்பயணத்தின் வலிமை என்பது கப்பலோடு  தொடர்புடையதல்ல; கணிதத்தோடு  தொடர்புடையது. வானியலும் நிலவியலும் பற்றிய கணித அறிவே கடற்பயணத்தின் வெற்றி தோல்வியை முடிவுசெய்கிறது.”
``இவ்விரண்டிலும் நமது அறிவு வலிமைமிக்கதுதானே.”

முசுகுந்தரின் கூற்றுக்கு, முதுவன் மறுமொழி சொன்னார், ``நமது வலிமையை யவனர்களோடு ஒப்பிட்டால் யார் வலியவர், யார் வலிமை குற்றியவர் என்பதைப் பற்றிப் பேச முடியும். ஆனால், கடல் பயணத்தில் வலிமையை ஒப்பிடவேண்டியது பிற கடலாடிகளோடு அல்ல; எழும் அலைகளுடனும் வீசும் காற்றுடனும் இழுத்துச் செல்லும் நீரோட்டங்களுடனும்தான். அவற்றோடு ஒப்பிட என்ன இருக்கிறது நம்மிடம்?”
இந்த மறுமொழியின் தொடர்ச்சியை அனைவரும் திசைவேழரிடம் எதிர்பார்த்தனர். அவரோ அமைதியாக உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

“கடலையும் காலத்தையும் புரிந்துகொள்வதில் நமக்கும் யவனர்களுக்குமே வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப்பற்றி பேசத்தான் நேற்றைக்கு முன்தினம் திசைவேழரைப் போய்ப் பார்த்தேன். நாம், ஆண்டை 12 மாதங்களாகப் பிரிக்கிறோம்; யவனர்களோ 10 மாதங்களாகப் பிரிக்கின்றனர். ஆனால், நாள்களின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இல்லை.

அவர்கள் ஒரு நாளை 24 மணிகளாகப் பிரிக்கின்றனர். நாமோ 60 நாழிகைகளாகப் பிரிக்கிறோம். நேரத்தை அவர்களைவிட மிகத்துல்லியமாக நம்மால் கணிக்க முடிகிறது. ஆனால், நிலவியலைப் பொருத்தவரை அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவர்கள் நிலப்பரப்பை ‘டிகிரி’ கணக்கில் 360 பாகங்களாகப் பிரிக்கின்றனர். அது நமது முறையைவிடத் துல்லியமான குறிப்புகளை அவர்களுக்குத் தருகிறது. இருவரும் இருவேறு விதத்தில் காலத்தையும் திசையையும் அறிகிறோம். ஆனாலும், கடலெனும் பேரியக்கத்தைக் கண்டு அஞ்சி நடுங்கியபடி ஓரத்தில் பதுங்கிக்கடக்கும் சிற்றெலிகள்தான் நமது கப்பல்களும் யவன நாவாய்களும்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P75d

இவ்வணிகத்தில் நாம் கோலோச்ச வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை `தங்கல்’ முகாம்களில் கோட்டைகள் அமைப்பதும் அங்கு வீரர்களை இறக்குவதுமல்ல, காலத்தையும் இடத்தையும் பற்றிய அறிவில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடைவதால் மட்டுமே நிகழும்.

சுகமதி எவ்வளவு சொல்லியும் பொற்சுவை புறப்படுவதாக இல்லை. உண்மையில் பொற்சுவையும் தனக்குள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால், மனம் கேட்க மறுத்துக்கொண்டே இருந்தது. மனம் உண்மையைப் பற்றி நிற்கும் விலங்கு. அதைச் சூழலுக்குப் பழக்குதல் எளிதல்ல.

சிலம்பிலிருந்து தெறிக்கும் மாணிக்கப் பரல்களின் ஓசையைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொற்சுவை, முதன்முறையாகக் காதலனால்  பாதம் தொடப்பட்ட கணத்தில்தான் அமைதி அடைந்த சிலம்பின் பரல்களை ரசித்துப் பார்த்தாள்.

அந்தப்பார்வையில் இருந்து விலக முடியாமல் சிலம்பைத் தொட்டுப் பார்த்தபடி அவன் கேட்டான், “பெண்பிள்ளைகளுக்கு ஏன் சிலம்பு அணிவிக்கிறார்கள் தெரியுமா?”

அவனின் சிறுதொடுதல்கள் சிலம்பின்  மாயவோசையை உள்ளுக்குள் கடத்திக் கொண்டிருந்தன. அவள் விடையின்றி நின்றாள்.

அவன் சொன்னான், “பெண் தன் காதலனின் அழைப்பை ஏற்று ஊர் உறங்கும் வேளையில் ஓசையின்றி அவனோடு சென்றுவிடக்கூடாது. அதற்காகத்தான் அவள் எங்கு சென்றாலும் ஓசையோடு செல்லும் ஏற்பாட்டைச் செய்தார்கள்.”

அவனால் ஏற்பட்ட மயக்கத்தை அவனின் மறுமொழியே தெளிவடையச் செய்தது.

அவன் மேலும் சொன்னான்,  “அதனால்தான் இளம்பருவத்தில் சிலம்பு அணிதலும் திருமணத்துக்கு முன்சடங்காக சிலம்பைக் கழற்றலும் நடக்கிறது. சிலம்பின் வேலை கால்களுக்கு அழகூட்டுவதோ, மனதை மகிழ்விப்பதோ அல்ல; காதுகளுக்கு ஓசையைக் கடத்துவது மட்டுமே. ஓசை தேவையில்லாதபோது அதைக் கழற்றிவிடுகிறார்கள்.”

அவன் சொன்னதைக் கேட்டபோது, `அன்றே அதைக் கழற்றிவிட வேண்டும்' என்று தோன்றியது. ஆனால், அண்ணனின் மேல் இருந்த வாஞ்சையால் அது இவ்வளவு காலம் காலிலே இருந்தது. `இப்போதுதான் அண்ணனும் இல்லை; என்னவனோடு நானும் இல்லை. இச்சிலம்பு மட்டும் ஏன் இருக்க வேண்டும்?'

எண்ணம் தோன்றிய கணத்தில் சிலம்பைக் கழற்ற அரங்கு நோக்கி விரைந்தாள் பொற்சுவை.

சூல்கடல் முதுவன் வரைபடத்தை வைத்துச் சொன்னான். குமரிமுனை திரும்பியப்பின் பாப்ரிகோன் போவது வரை எந்த இடையூறும் இல்லை. நேரடியான வடக்கு நோக்கிய பயணம் அது. கரையின் பார்வையிலிருந்து விலகாமல் இரவு பகலாகப் பயணத்தைத் தொடரலாம். சற்றே திசைமாறி ஆழ்கடலுக்குள் கப்பல்கள் போய்விட்டாலும் மறுநாள் காலை கதிரவனைப் பார்த்துக் கலத்தைச் செலுத்தினால் கரையோரம் வந்துவிடலாம்.

இப்பயணத்தின் பெரும் சவால் நிறைந்த பகுதியே பாப்ரிகோனிலிருந்து பெர்னிகே வரையிலான பகுதிதான். மேற்கு நோக்கி வளைந்து செல்லும் நெடும்பயணம். கரையின் பார்வையைத் தவறவிட்டோம் என்றால், நாம் பெரும்சிக்கலில் மாட்டிக்கொள்வோம். இரவில் விண்மீன்கள் எல்லா காலங்களிலும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. எல்லா விண்மீன்களும் ஆண்டு முழுவதும் தெரிவதும் இல்லை. அவற்றை நம்பமுடியாது. எனவே, பகலில் மட்டுமே பயணிக்க முடியும். அதுவும் தெளிவான வானியல் காலம்தான் பயணத்துக்குப் பாதுகாப்பானது. சற்றே திசைமாறினாலும், நாம் எந்தத் திசைவழி மீள வேண்டும் என்பது பற்றி யாருக்கும் தெளிவான புரிதல் இல்லை. யவனக் நாவாய்கள் பலவும் நம்முடைய கப்பல்கள் பலவும் மறைந்து கொண்டேதான் இருக்கின்றன.

பாப்ரிகோன் முதல் பெர்னிகே வரையிலான பகுதிக்குத் துல்லியமான திசை அறிதலுக்கான வடிவம் ஒன்றை நாம் கண்டடைந்தால் கடற்பயணத்தின் பெரும்சாதனையாக அது அமையும்” வரைபடத்தைக் காட்டி நிலைமையை முழுமையாக விளக்கினார் சூல்கடல் முதுவன்.

அதன்பின், எல்லோரும் திசைவேழரைப் பார்த்தனர். பார்வைக்கான பொருள் அவருக்குப் புரிந்தது. ஆனால், அவர் எதுவும் பேசாமலே வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P75e``பாப்ரிகோன் முதல் பெர்னிகே வரையிலான பயணத்தில் கடைசியாகக் கப்பல்கள் எப்போது மறைந்தன?”

மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்று நாவாய் களும் இரு கப்பல்களும் மறைந்துவிட்டன.

சற்றே சிந்தித்தபடி இருந்தவர் சொன்னார்.  “மூன்று மாதங்களுக்கு முன்பு மேலைக்காற்று உச்சங்கொண்டிருந்த காலம். அப்போது தவறிய கப்பல்கள் நடுகடல் நோக்கிப் போகமுடியாது. அதற்கு எதிர்த்திசையில்தான் காற்று தள்ளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாகக் கரை ஒதுங்கியிருப்பார்கள்.”

“அப்படி எதுவும் நிகழ்வில்லையே!”

“அப்படி என்றால், நீ வைத்துள்ள வரைபடம் தவறு. இதில் உள்ள திசை தவறு.”

சூல்கடல் முதுவன் மறுமொழியின்றி நின்றார்.

“தவறான ஒன்றை வைத்துக்கொண்டு சரியானதற்கான வழியைக் கண்டறிய முடியாது.”

“அப்படியென்றால் சரியானதென்று எதைச் சொல்கிறீர்கள்?”

“வரைந்த கோடுகளை அடிப்படையாக் கொண்டு திசையறிய முடியாது. நாள்மீன்களையும் கோள்மீன்களையும் கொண்டு திசையறியலாம். அதையும் அறியமுடியாமல் செய்யும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. எனவே, இவற்றைக் கடந்த வழிமுறைகள் உண்டா என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.”

“அது எப்படிச் சாத்தியமாகும்?”

“ஏன் ஆகாது. கதிரவனின் நிழலை மட்டுமா நம்பி பொழுதளக்கிறோம். நீர் வட்டிகளைக் கொண்டும் மணற்குடுவைகளைக் கொண்டும் பொழுதளக்கிறோம் அல்லவா? சின்னஞ்சிறு கருவியைக்கொண்டு கதிரவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொழுதை நம்மால் அளக்க முடிகிறது. பகலையும் இரவையும் நமது கணக்குகளுக்குள் அடக்க முடிகிறது. அதேபோலக் கதிரவனையும் விண்மீன்களையும் பார்க்க முடியாவிட்டாலும் திசையைக் கண்டறியும் வழிமுறை ஒன்றை நாம் கண்டறிய வேண்டும். அதுதான் இதற்கான தீர்வைத் தரும்.”

“அப்படி ஒன்றை நம்மால் உருவாக்க முடியுமா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P75f
“நம்மால் உருவாக்க முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். இயற்கை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும். நாம் அவற்றைக் கண்டறிய வேண்டும்.”

“எப்படி?”

“அதுதான் அதன் ரகசியம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 32

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 11:10 am

பிலரின் மீது, வண்டுகடி மரத்தின் பட்டையை அறைத்து மூன்று நாள் பூசினர். உடலின் எரிச்சல் சற்றே அதிகமாக இருந்தது. ``இப்படித் தொடர்ந்து பூசினால், கைகால்களில் உள்ள முடிகள் கருகிவிடப்போகின்றன” என்றார் கபிலர்.

உதிரனும் மற்ற இரு பெரியவர்களும் தேய்த்து விட்டுக்கொண்டு இருந்தனர். எதிரில் இருந்த கல்லில் உட்கார்ந்தபடி தேக்கன் சொன்னான், “உங்களின் கவலை அப்படி இருக்கிறது; எனது கவலையோ வேறு மாதிரி இருக்கிறது”

“என்ன அது?”

“இப்படித் தொடர்ந்து தேய்ப்பதன் மூலம் முடிகள் சடைபிடித்து வளர்ந்துவிட்டால் என்ன செய்வது?”

தேய்த்துக்கொண்டிருந்த பெரியவர்களுக்கு சிரிப்புத் தாங்கமுடியவில்லை.  கபிலருக்கோ சற்றே அதிர்ச்சியாக இருந்தது. “ஏன்? இதற்கு முன்னால் தேய்த்து விடப்பட்டவர்களுக்கு அவ்வாறு வளர்ந்ததா?”

“அதுதானே தெரியவில்லை. நாங்கள் கேள்விப்பட்டவரை வெளியில் இருந்து வந்த யாரும் பறம்பில் காலவரையின்றித் தங்கவில்லை. எனவே, மற்றவர்களுக்கு இதனைத் தேய்த்துவிடும் பேச்சே எழவில்லை.”

“நான்தான் சோதனை உயிரியா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67a
“உங்களை ஒருபோதும் நாங்கள் சோதிக்க மாட்டோம். உங்களுக்காக எல்லாச் சோதனை களையும் நாங்கள் ஏற்போம்” என்று சொல்லியபடி உதிரனின் தோளைத் தொட்டான் தேக்கன்.

கபிலர் அவனைப் பார்த்தார். உதிரன் இருவரையும் பார்த்தபடி நின்றான்.

தேக்கன் சொன்னான், “நான்கு முறை நான் காடறிய பிள்ளைகளை அழைத்துப்போய்  வந்துவிட்டேன். காட்டின் எல்லாச் சவால்களையும் எதிர்கொண்டு மீளத்தான் அப்பயணத்தை மேற்கொள்கிறோம். ஆனால், அப்பொழுதுகூட வண்டுகடி மரத்தின் அடியில் யாரையும் அனுப்பியதில்லை. அதன் வாடை கணநேரத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடியது. அடுத்தவனை அனுப்பி, அவனைத் தூக்கிவருவதற்குள் இவனும் மயங்கிவிடுவான். இப்படிப் போகிறவர்கள் எல்லாம் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதில் அதிகம். அது நம்மை எளிதில் ஏமாற்றி, உயிர்கொல்லும் மரம். அந்த மரத்தின் பட்டையை ஒருவன் துணிந்துபோய் உரித்தான் என்பதும், அதனைப் பாரி அனுமதித்தான் என்பதும் உங்களுக்காகத்தான். உங்களின்பொருட்டு நாங்கள் எச்சோதனையையும் எதிர்கொள்வோம்.” சொல்லும்போது, தேக்கனின் குரலில் இருந்த உறுதி கபிலரை உலுக்கியது.

தேய்த்த மருந்தோடு குறிப்பிட்ட நேரம் வரை அமர்ந்திருந்த கபிலர், பின்னர் குளித்துவிட்டு வந்தார். தேக்கனும் அவரும் பொழுதெல்லாம் பேசினர். தேக்கனைப்பற்றியும் காடறிதலைப் பற்றியும் கபிலருக்குத்  தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருந்தன. எல்லாவற்றையும் பேசிக் கழித்தார்.

ஒரு வாரம் கழிந்தது. மூன்று குழுக்கள் சென்று, இருபது பேரெலிகளைப் பிடித்துவிட்டன. இன்னும் இரண்டு தேவையாக இருந்தது. தோழர்களோடு உதிரன் புறப்பட்டபோது கபிலரும் புறப்பட்டார். “இத்தனை நாள் நான் ஓய்வில்தானே இருந்தேன்” எனச் சொல்லிப் புறப்பட்டார். அவர் புறப்பட்டால் பாரியும் வந்துவிடுவான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், கபிலர் வராமல் இருந்த நாட்களிலும் பாரி வேட்டைக்கு வந்தான். அதுதான் ஏன் என்று புரியாமல் வீரர்கள் திகைத்தனர். பறம்புமலையின் மேற்றிசைக் குன்றுகளிலே அவர்கள் அதிகம் அலைந்து திரிந்தனர்.

வழக்கம்போல் குழு புறப்பட்டது. வடகிழக்குத்திசை நோக்கிச் செல்லலாம் என்று அவர்கள் முடிவுசெய்தபோது, அதற்கு நேரெதிராக தென்மேற்குத்திசை நோக்கிப் போகுமாறு பாரி சொன்னான். உதிரனுக்கும் மற்ற வீரர்களுக்கும் அதற்கான காரணம் புரியவில்லை. அவர்களை அனுப்பிவைத்த தேக்கனால் உய்த்தறிய முடிந்தது.

அவர்கள் எவ்வியூரின் தென்மேற்குத் திசையில் போனார்கள். ‘இப்பகுதியில் புலிகள் மிக அதிகம். அவற்றிடம் தப்பித்தான் பேரெலிகள் உயிர்வாழவேண்டும். பிற பகுதியோடு ஒப்பிட்டால், மிகமிகக் குறைவாகத்தான் இப்பகுதியில் பேரெலிகள் இருக்க வாய்ப்புண்டு. பின் ஏன் பாரி இத்திசையில் போகச் சொன்னான்?’ என்று எண்ணியபடியே நடந்தான் உதிரன். பாறை இடுக்குகளைக் கிண்டிக் கிளறியபடி போய்க்கொண்டிருந்தான். பேரெலியின் எச்சங்கள் எவையும் தென்படவில்லை. நடுப்பகல் வரை அவர்களின் கண்களுக்கு எதுவும் தட்டுப்படவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67b
இன்னொரு நாள் வரவேண்டியிருக்கும்போல என்று உதிரனுக்குத் தோன்றியது. நெடும்பொழுது கடந்தது. வீரர்கள் இருகூறாகப் பிரியலாம் என்று கருத்துச் சொன்னார்கள். ‘`சரி'’யென்றான் பாரி.

பிரிந்தவர்கள் நாலு எட்டு வைப்பதற்குள், மழை பொழியத் தொடங்கியது. சடசடவென இறங்கிய கணத்திலேயே அதன் வேகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. அனைவரும் அருகிலிருந்த மலைப்பொடவிற்குள் போய் ஒடுங்கினர்.

மேனியில் இருந்த நீர்த்துளிகளை உதறியபடி, “மழைத்துளிகள் ஒவ்வொன்றும் வேப்பமுத்து அளவு இருக்கிறது” என்றார் கபிலர்.

“கார்காலத்தின் முதுநாள் தொடங்கப் போகிறது. இனி, அதன் வேகம் இணையற்றதாகத்தான் இருக்கும்” என்றான் பாரி.

மழைக்கான பருவத்தில்தான் மழை பெய்கிறது. ஆனால், அதன் பொழிவு வெவ்வேறு தன்மைகளைக் கொண்டது. தொடக்க நாட்களில் பெய்யும் மழை என்பது மேகம் உதிர்க்கும் தூசி போன்றது. காற்றில் அலைஅலையாய் இறங்குவதும், நிலம் ஈரமாகுமுன் மறைவதும், காற்றுக்குள்ளே கரைந்துபோகும் கன அளவு கொண்டதுமாக இருக்கும்.

தூசிப் பருவம் முடிந்து, தும்மல் பருவம் தொடங்கும். எதிர்பாராத நேரத்தில் சட்டென அடித்துவிட்டுப் போய்விடும். போய்விட்டது என நினைக்கும்போது திரும்பி அடிக்கும். நம்மால் கணிக்க முடியாத ஒரு விளையாட்டை விளையாடும். அப்போது பெய்யும் மழையில் நீர்த்துளிகள் நீள்வடிவிலே இறங்கிவரும்.

மூன்றாம் கட்டம், முகில்கள் கூடல்கொள்ளும் பருவம். இதுநாள்வரை நீரை உதிர்த்துக் கொண்டிருந்த மேகங்கள் இப்போது கூடலில் மயங்கி உருக ஆரம்பிக்கும். இணைமேகங்கள் சூழ வலம்வந்து வானில் இடைவிடாமல்கூட, காதல் கசிந்து காட்டாறாய் உருகி ஓடும். மழைத்துளிகள் வேப்பமுத்து அளவினைக் கொண்டிருக்கும்.

நான்காம் பருவத்தில் மோகம்கொண்ட முகில்கள் தரைவந்து தங்கும். நிலம் வானுக்குள் நுழையும். மரத்தின் உச்சிக்கிளை மேகத்தின் வெளிப்புறம் நீண்டிருக்க, வேரில் மழைநீர் பாய்ந்தோடிக்கொண்டிருக்கும். அது இயற்கையின் அதிசய காலம். வானுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் ஏணி விலகிக்கொள்ள, மேகக்கூட்டம் மரம், செடி, கொடிகளுக்கிடையே மீனைப்போல நீந்திப்போகும். ஒருவரை ஒருவர் பிடித்தும் விலகியும் கரைந்தும் உருகியும் காதல்கொள்ளும் காலம். இதுவே கார்காலத்தின் முதுநிலைப்பருவம்.

இப்போது அது தொடங்கியிருக்கிறது. இறங்கிய மழை, இரவு வரை நிற்கவில்லை. குகையைவிட்டு வெளிவரும் எண்ணமே பிறக்கவில்லை. முன்னிரவில் குறையத் தொடங்கிய மழை, நள்ளிரவில்தான் நின்றது. வீரர்கள் பின்னிரவானதும் இருவேறு குழுக்களாகப் பிரிந்து போகலாம் என்று முடிவுசெய்தார்கள். நாம் எந்தக் குழுவோடு போவது என்று கபிலர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், பாரி அவரை அழைத்தபடி குகையைவிட்டு வெளியேறினான்.

“அவர்கள் பேரெலியைப் பிடித்து வந்து சேரட்டும். நாம் வேறொரு திசை வழியே போவோம்” என்றான்.

பாரியின் இந்த முடிவை எதிர்பார்க்காத கபிலர் சற்றே திகைத்தபடி பின்னால் நடக்கத் தொடங்கினார். மேகத்தைக் கொட்டித்தீர்த்த வானம் விண்மீன்களால் பூத்துக்கிடந்தது. தேய்நிலவு கொடிபோல் மெலிந்திருந்தது. மெல்லிய நீலநிற வெளிச்சம் தரையில் பரவிக்கிடக்க, கபிலரை அழைத்துக்கொண்டு பாரி மலைமுகட்டை நோக்கி நடந்தான்.  எங்கும் நீரோடும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. “வண்டுகடி மரப்பட்டையைத் தேய்த்ததால்தான் உங்களைத் துணிந்து அழைத்துச் செல்ல முடிகிறது’’ என்று சொல்லியபடி, பாறையின் மீதேறி நின்று பார்த்தான். ஒளிரும் எண்ணிலடங்கா விண்மீன்களைக்கொண்டு வானம் வித்தை காட்டிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு நேரெதிரில் வடிவுகொண்டு வளைந்திருந்தது கார்த்திகை விண்மீன் கூட்டம்.

விண்மீன் பார்த்துத் திசை அறிந்தபடி முன்நடந்தான் பாரி. தொடர்ந்து வந்த கபிலரிடம் கேட்டான், “அவ்விண்மீன் கூட்டத்தைக் கவனித்தீர்களா?”

“எதைக் கேட்கிறாய்? கார்த்திகைக் கூட்டத்தையா?”

“ஆம்.”

“பார்த்தேனே” என்றார்.

பாரி வேறெதையும் கேட்காமல், அமைதியாக நடந்து சென்றான்.

கபிலரும் பாரியைத் தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பாரியின் கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது. ‘இதை ஏன் கேட்டான் பாரி? கார்த்திகைக் கூட்டம் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும் எனப் பேசிப்பார்க்க நினைத்தானோ?’ என்று தோன்றியது. பெருங்கணியர் திசைவேழரிடம் உட்கார்ந்து நாள்கணக்கில் கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றிப் பேசியது நினைவுக்குள்ளிருந்து அலைஅலையாய் மேலெழுந்து வந்தது. கபிலர் பாரியை நோக்கிக் கேட்டார், “கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றி எதையோ கேட்கவந்து நிறுத்திக்கொண்டாயே, ஏன்?”

கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றி பாரி கேட்கும் விளக்கத்துக்கு விடை சொல்லும் ஆர்வத்திலிருந்துதான் கபிலரின் கேள்வி பிறந்தது. இவ்வழகிய விண்மீன் கூட்டம் கபிலரை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு மாதத்திலும் அதன் நகர்வைப் பற்றி மிக நுட்பமாகத் தெரிந்துவைத்திருந்தார். அதனையெல்லாம் பாரியிடம் பகிர்ந்துகொள்ளும் ஆர்வமே அவரை உந்தித்தள்ளியது.

முன்னால் நடந்தபடி இருந்த பாரி கேட்டான், “அவ்விண்மீன் கூட்டத்திற்குக் கார்த்திகை என்று பெயர் சூட்டியது யார் தெரியுமா?”

கேள்வி கபிலரை திடுக்கிடச் செய்தது. நடுங்கி நின்றார் கபிலர். தாக்குதலைக்கடந்து வார்த்தை மேலெழவில்லை. நேரங்கழித்தே சொல் வெளிவந்தது... “என்ன கேட்டாய்?”

“அவ்விண்மீன் கூட்டத்திற்குப் பெயர் சூட்டியது யாரெனக் கேட்டேன்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67c
‘பதில் இருக்கட்டும்; இப்படியொரு கேள்வியே ஒருபோதும் எனக்குத் தோன்றவில்லையே? திசைவேழருக்குக்கூட இக்கேள்வி தோன்றியிருக்காது என்றே நினைக்கிறேன். விண்மீன்கள் பற்றி எண்ணற்ற கேள்விகள் கேட்டுள்ளேன். உன் ஐயங்கள் தீரவே தீராதா என்று திசைவேழர் பலமுறை சலித்துக்கொண்டுள்ளார். ஆனாலும், இப்படியொரு கேள்வி ஏன் இதுவரை எனக்குத் தோன்றவில்லை? திசைவேழருக்கு இதுபற்றித் தெரிந்திருந்தால் என்னிடம் அவர் அதைப் பகிர்ந்துகொண்டிருப்பார். அவருக்கும் தெரியாதென்றே நினைக்கிறேன்...’ - எண்ணங்கள் ஓடியபடி இருக்க, பேச வார்த்தையின்றித் தடுமாறினார் கபிலர்.

“எதுவும் பேசாமல் வருகிறீர்களே... ஏன்?”

“உனது கேள்வி ஆதிகாலத்தைப் பற்றியதாக இருக்கிறது. மனிதன் பொருளின்மீது மொழியைப் பொருத்தத் தொடங்கிய காலத்தைப் பற்றி நீ கேள்வி கேட்கிறாய். நாங்கள் தற்காலத்துக்காரர்கள். மனிதர்களை ஆசானாக ஏற்று, கற்று வளர்ந்தவர்கள். இயற்கையை இரண்டாம் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டோம். எங்களது கற்றல்முறை ஆழமற்றதெனத் தெரிகிறது.” பதிலுக்காகச் சொற்களைத் தேடினார் கபிலர்.
கேட்டபடி நடந்துகொண்டிருந்த பாரி, “பெரும்புலவர் விடைசொல்லாமல், விளக்கம் சொல்வது ஏன்?”

“விடை சொல்லாவிட்டால் விட்டுவிடும் கேள்வியை நீ கேட்கவில்லை. நான் விடை வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67dசொல்லமுடியாததற்கான சரியான காரணத்தை முன்வைக்க முடியவில்லை என்றால், உனது கேள்வி எனது அறிதலின் அச்சையே நொறுக்கிவிடக்கூடியது. அதனால்தான் எனக்குள் இப்பதற்றம் உருவாகிவிட்டது என்று நினைக்கிறேன்.”

மழை நின்ற நள்ளிரவில், நீரோடைகளின் சலசலப்பில், மயக்கும் இளநீல ஒளியில் நிலம் பூத்துக்கிடக்க, மின்னிச்சிரிக்கும் விண்மீன் கூட்டத்தைப் பார்த்தபடி பாரி சொன்னான், “கார்த்திகை விண்மீன் கூட்டத்தைக் கண்டறிந்து பெயர் சூட்டியவன் முருகன்.”
எதிர்பாராத பதிலாக இருந்தது. நடையை நிறுத்தினார் கபிலர். “முருகன்தான் இவ்விண்மீன் கூட்டத்திற்குப் பெயர் சூட்டினான் என்று எப்படிச் சொல்கிறாய்?”

சற்றே சிந்தித்த பாரி, “நீங்கள் பச்சை மலைத்தொடரில் ஏறத்தொடங்கிய முதல்நாளில் நாக்கறுத்தான் புற்களைக் கடக்கும்போது நீலன் உங்களுக்கு முருகனின் கதையைச் சொன்னான் அல்லவா?”

“ஆம்.”

“அவன் கதையை எத்துடன் முடித்தான்?”

“அது எனக்குத் தெரியாது. சந்தனவேங்கையின்மீது பரண் அமைத்து, முருகனையும் வள்ளியையும் அதில் தங்கவைத்த எவ்வி, அதன்பின் குடில் திரும்பி பூண்டுப்பானத்தைக் கலக்கிக் கொடுத்து யாரையும் அப்பக்கம் போகவிடாமல் செய்தான் என்பது வரை எனக்கு நினைவிருந்தது. தனை மயக்கி மூலிகையைக் கொடுத்ததால், அதன் பிறகு அவன் சொன்ன கதைகள் எவையும் எனக்கு நினைவில்லை.”

நேரெதிரே கார்த்திகை விண்மீன் ஒளிவீசிக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்த பாரி, மீதிக்கதையைச் சொல்லத் தொடங்கினான். 

பச்சை மலையில், யானைப் பள்ளத்தின் தென்திசை முகட்டில் தனித்திருந்த வேங்கை மரத்தின்மீது சந்தனக்கட்டை கொண்டு சிலாக்கொடியால் பிணைத்துக் கட்டிய பரண்விட்டு, மறுபகல் இறங்கினர் முருகனும் வள்ளியும்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67eஆணும் பெண்ணும் தங்களை அறியத்தொடங்கிய தலைநாள் இரவது. இவ்விரவின் குணம் பல பருவங்களுக்கும் நீடிக்கும். இயற்கையின் எல்லா மாற்றங்களின் வழியேயும் தங்கள் இணையின் மீதான காதலை நெய்யத்துடிக்கும் உயிராற்றல் பெருகியபடி இருக்கும். காதல் அறியும்பொழுதுதான் அடுத்த இடத்துக்கு அழைத்துச்செல்லும்; அறியாதவன் அதுவே காதல் என்று நின்றுவிடுவான்.

காதலின் அழைப்பை ஏற்று இருவரும் செல்லத் தொடங்கினர். கார்காலத்தின் தூசிப்பருவம் தொடங்கியது. காற்றில் மெல்லிய சாரல் மிதந்துவந்து வள்ளியின் முகத்தில் நீர்பூசிச் சென்றது. அவள் கைகொண்டு அதனைத் துடைக்காமல் நடந்தாள். முருகன் முன்னால் சென்றுகொண்டிருந்தான்.

மேகத்தின் தூசி இருவர் மீதும் விடாமல் படர்ந்தது.  இக்கானகத்தில் எம்மலர்களுடனும் ஒப்பிட முடியாத பேரழகுகொண்டு மிளிர்ந்தது வள்ளியின் முகம். பார்வையை விலக்கி நடக்க முடியாது என்று முருகனுக்குத் தோன்றியது. தனது விரல்கொண்டு அவளது முகத்தைத் துடைக்க எண்ணினான். அப்போது வள்ளியின் கைகள் முருகனின் முகத்தைத் துடைத்துக்கொண்டிருந்தன.

முருகனின் முகத்தில் கைதொட்ட கணத்தில் வள்ளியின் முகத்தில் இருந்த நீர்த்துளிகள் மறைந்தன. முருகனின் கை அவளது கன்னம் தொடும்போது நீர்த்துளி அற்று இருந்தது வள்ளியின் முகம்.
“எனது விரல் தொடுவதற்குள் நீர்த்துளிகள் எப்படி மறைந்தன?” எனக் கேட்டான் முருகன்.

“என் விரல்கள் உனது முகம் தொட்டதனால்.”

முருகன் திகைத்து நின்றான்.

வள்ளி சொன்னாள், “தொடுதலில் கடந்துவரும் ஆற்றல் என்னையே உருக்குகிறது. சின்ன நீர்த்துளிகள் என்ன ஆகும்?”

‘தொடுதலின் மூலம்தான் ஆணின் ஆற்றல் கடக்கிறது. ஆனால், தொடாமலே பெண் கடத்தும் ஆற்றலுக்கு இணை சொல்ல என்ன இருக்கிறது’ என்று  எண்ணியபடி, முருகன் முன்னே நடந்துகொண்டிருந்தான்.

அவள் பேச்சேதுமின்றிப் பின்தொடர்ந்தாள். தூசிக்காற்று எதிர்வீசியபடி இருந்தது.

வள்ளி கேட்டாள், “வேங்கை மரத்தின் சந்தனப்பரண்விட்டு ஏன் அகல்கிறோம்?

“அது எவ்வி உருவாக்கியது. நமக்கான இடத்தை நம் கனவால் உருவாக்க வேண்டும்.”
 
வள்ளிக்கும் ‘சரி’தான் என்று தோன்றியது.

“சென்ற முறை ஏழிலைப்பாலை நோக்கி நான் அழைத்துச் சென்றேன். இம்முறை நீ அழைத்துச் செல்” என்றான் முருகன்.

அவனது சொல்சுமந்து முன்நடந்தாள் வள்ளி. இணையற்ற இடம்நோக்கி அழைத்துச் செல்கிறாள் என்பதை, பூரிக்கும் அவளுடைய முகம் சொன்னது.

பின்நடந்து வந்த முருகனின் மயக்கம் மேலும் அதிகமானது.

“மானிலும் மயிலிலும் மட்டுமே ஆண் அழகு” என்றான் முருகன்.

“நானும் அப்படித்தான் நம்பினேன்... உன்னைக் காணும் வரை” என்றாள் வள்ளி.

இருவரும் வெட்கம் கலைந்து சிரித்தனர். தூசிக்காற்று நின்று பொழிந்தது.

முன்சென்ற வள்ளியின் கண்களுக்குச் சற்றுத் தொலைவில், விளைந்த பயிர் தெரிந்தது. அதனருகே போனாள். யானை படுத்துறங்கும் அளவு நிலத்தில் அப்பயிர்கள் விளைந்திருந்தன. அந்தக் கதிரை கைகளால் உருவியபடியே வள்ளி சொன்னாள், “இது அரிதான நெற்பயிர். அன்னமழகியரிசி என்று இதனைச் சொல்வோம். மற்ற பயிர்களெல்லாம் பசியைப் போக்கும். ஆனால், இதுமட்டுந்தான் பசி நீக்குவதோடு, உடலை மலரவைத்துச் சுகம் தரும். மனம்தான் பெரும்பாலும் மகிழ்வை உணர்கிறது. உடல் தேவையை மட்டுமே உணர்கிறது. ஆனால் இப்பயிர்தான் உடலை மகிழவும் வைக்கும்.” சொல்லிக்கொண்டே, கைப்பிடி அளவு கதிர் பறித்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதனை முருகனுக்குக் கொடுத்தாள்.

முருகன் அதனை வாங்கி உட்கொண்டான். ‘ஏற்கெனவே என் உடலும் மனமும் மகிழ்வால் திணறிக்கிடக்கின்றன. இதில் இதுவும் சேர்ந்தால், நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமோ?’ என்று அவனுக்குத் தோன்றியது.

வள்ளியும் வாயில் போட்டு மென்றபடி நடந்துவந்தாள். சிறிது தொலைவு சென்றபின், வள்ளிக்கு விக்கல் வந்தது. அருகில் நீரோடை எதுவும் இல்லை. கார்காலம் இப்போதுதான் தொடங்குகிறது, நீர் புரண்டோட இன்னும் நாளாகும். குட்டை எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான் முருகன். எதுவும் தென்படவில்லை.

வள்ளிக்கு உடனடியாகக் குடிக்க நீர் தேவைப்பட்டது. ஆனால், அவ்விடம் கிடைக்காது எனத் தெரிந்தது. அருகிருந்த சிறு பாறையின் மீதேறி, நாற்புறமும் பார்த்த முருகன், ஒரு திசை நோக்கி ஓடினான்.

நீர்நிலையைக் கண்டறிந்துவிட்டானோ என்ற எண்ணத்துடன் பின்தொடர்ந்து ஓடினாள் வள்ளி. அங்கு கானவெள்ளெருக்கொன்று செழித்திருந்தது.

“இங்கு ஏன் ஓடி வந்தீர்கள்?” எனக் கேட்டாள் வள்ளி.

“நீர் எடுக்கத்தான்” எனச் சொல்லியபடி, வெள்ளெருக்கின் அடிவாரமிருந்த சிறுசிறு கற்களை நகர்த்தி, குழியை உருவாக்கினான்.

“இவ்விடத்தில் நீர் இருக்கும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

``கானவெள்ளெருக்கின் விதையைக் காற்று எங்கும் தூவிவிட்டிருக்கும். ஆனால், இங்கு மட்டுந்தான் அது முளைத்துள்ளது, அது நீர் உறிஞ்சும் செடியல்ல; நீர் குடிக்கும் செடி. அதிக நீர் இருப்பதால்தான் இவ்விடத்தில் வளர்ந்திருக்கிறது'' சொல்லிக்கொண்டே கற்களை விலக்கி, குழியை ஆழப்படுத்தினான்.

“வெள்ளெருக்கின் வேர் இரு முழத்தைத் தாண்டாது. எனவே அந்த அளவுக்குள்தான் நீர் இருக்க வேண்டும்” என்று முருகன் சொல்லும்போதே பாறையின் இடுக்கில் கசிந்தோடியது நீர்.

இரு கைகளையும் அதன் அடியில் நுழைத்து, நீர் அள்ளிப் பருகினாள் வள்ளி. நீரின் குளிர்ச்சி உடலெங்கும் பரவியது. 

முருகன் சொன்னான், “மண்ணுக்குள் நீர் இருப்பதும் மனதிற்குள் நீ இருப்பதும் முகம் பார்த்தால் தெரியாதா என்ன?''

குளிர்ச்சி நீரின்றியும் பரவியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67f
முருகன் மீண்டும் சொன்னான், “காதல் சற்றே தலைகீழானது. நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேரல்ல; வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர்.” சொல்லிக்கொண்டே, சிறு கற்களை குழிநோக்கி நகர்த்தி மூடினான் முருகன்.

வள்ளி மீண்டும் நடக்கத் தொடங்கினாள். அவள் அழைத்துச் செல்லும் இடம் காண முருகனுக்குள் பேரார்வம் மேலெழுந்தபடி இருந்தது. அவர்களின் கண்படும் தொலைவில் பன்றிக்கூட்டம் ஒன்று எதிர்சென்றது. இருவரின் கண்களும் அதனைப் பார்த்தன.
‘நான் விரட்டிச்சென்று அம்பெய்திய பன்றிக்கூட்டம் இதுதானா?’ எனக் கேள்வி எழுந்தது முருகனுக்கு.

‘இவற்றை விரட்டி வந்ததால்தான் நான் வள்ளியைக் கண்டேன். எனக்குக் காதலைத் தந்த இவற்றுக்கு நான் அம்பெய்திக் காயத்தை அல்லவா தந்துள்ளேன்?’ எனத் தோன்றியது. சட்டென பின்திரும்பி ஓடினான் முருகன். வெள்ளெறுக்கஞ்செடியின் அடிவாரத்தில் மூடிய கற்களை மீண்டும் கிளறி அகற்றி, பன்றிகள் நீர் அருந்த வழிசெய்துவிட்டு ஒதுங்கினான்.

பன்றிக்கூட்டம் நீர் நோக்கி நகர்ந்தது. அதன் குவிவாய் நீர்தொட்டு உறிஞ்சின. பார்த்துக் கொண்டே வள்ளியின் அருகில் வந்தான் முருகன். அவள் கேட்டாள், “இவற்றின் முதுகில் செந்தாது படிந்திருப்பதைப் பார்த்தீர்களா?”

“இவற்றின் உடலில் காயம் இருக்கிறதா என்பதைத்தான் எனது கண்கள் தேடின. வேறெதையும் நான் கவனிக்கவில்லை.”

“கார்காலத்தில் முதலில் மலரும் செங்கடம்பு மலரத் தொடங்கிவிட்டது. அம்மர அடிவாரத்தில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள்பாவிய செந்நிறப் பூக்களின் மீதுதான் இவை படுத்தெழுந்து வருகின்றன. அதனால்தான் இவற்றின் மேலெல்லாம் செந்தாது ஒட்டியிருக்கிறது.”

அவள் சொன்ன பிறகுதான் அதனைக் கவனித்தான். உடலில் இருக்கும் மயிர்க்கால்களில் செந்தாது பூசியிருந்தது. ஒன்றினை ஒன்று உரசியபடி நீர் அருந்த, குழிநோக்கி முண்டின.

பார்த்துக்கொண்டே வள்ளி சொன்னாள், “மரத்திலே மாலைபோலத் தொங்கும் செங்கடம்ப மலரெடுத்து உனது மார்பில் சூடும்படி அவை எனக்குச் சொல்கின்றன”

“அது கொத்துப்பூ. அதை எனது மார்பில் சூடுவதைவிட, உனது கூந்தலில் சூடுவதுதான் அழகு!”

“அக்கொத்துப்பூவின் இதழ்கள் எவ்வளவு அசைத்தாலும் உதிராதது. அசையா மணம்கொண்டது. அதனால்தான் உனது மார்பிற்சூட ஆசைப்படுகிறேன்.”

`உதிராத பூக்களை எனது மார்பிற்சூட ஏன் ஆசைப்படுகிறாள்?' என முருகன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, வள்ளி சொன்னாள், “அசைத்தால் உதிராதது, அணைத்தாலும் உதிராதல்லவா?”

முருகன் திகைத்தான். செங்கடம்பின் அடிவாரத்தில் மனம் புரண்டு எழுந்தது. நீள்வாய் கொண்டு நீருறிஞ்சும் ஓசை பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தது. மனம் அதனை நோக்கித் தாவியது.

``நான் கூந்தலில் சூடுவது ஒருவருக்கானதாகிறது. நீ மார்பில் அணிவது இருவருக்குமானதாகிறது.” சொல்ல நினைக்கும் சொற்களைச் சொல்லாமலே நடந்தாள் வள்ளி.

சொல்லாத சொற்களைச் சுவைத்துதான் காதல் வளர்கிறது. வெள்ளெருக்கின் வேர்போல மனதின் ஆழத்தில் இருந்து நீர்குடித்துப் பழகியது காதல். அதற்குச் சொல் சொல்ல மலர்வாய் தேவையில்லை. அதனினும் ஆழ்ந்த அன்பைக் குடித்து வளரவே வாய்முகப்பின் ஈரிதழ்களும்.  
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67g
சுரந்துகொண்டிருக்கும்போதே அருந்திக் கொண்டிருக்கும் அதிசயத்தை இதழ்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தன. முருகனின் மனதில் மலர்ந்தது சொல், “நான் அகழ்ந்து கண்டறிந்ததை, நீ அணைத்துக் கண்டறிந்தாய். நான் கண்டறிந்தது ஒருவருக்கானது; நீ கண்டறிந்தது இருவருக்குமானது.” சொல்லாத சொல்லேந்தி இப்பொழுது முருகன் நடந்துகொண்டிருந்தான்.

முன் நடந்த வள்ளி, பாறை இடுக்குகளின் வழியே உள்நுழைந்தாள்.  இருட்பிளவின் வழியே எங்கே அழைத்துச் செல்கிறாள்?’ என்று சிந்தித்தபடியே பின்தொடர்ந்தான் முருகன்.

ஒரு பெரும்பாறையின் முனை திரும்பினாள் அவள். பின்னால் வந்தவன் அதேபோலப் பாறை கடந்ததும் முனை திரும்பினான். திரும்பிய கணத்தில் அவன் கண்கள் பார்த்த காட்சி, அவனை அசையவிடாமல் அப்படியே நிறுத்தியது. இமைகொட்டாமல் பார்த்தான் முருகன், தான் வாழ்வில் இதுவரை பார்க்காத ஒன்றை.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி 33

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 11:45 am

குறுவழியில் உள்நுழைந்து புதுநிலப்பகுதியைப் பார்த்த கணத்தில் மெய்மறந்து நின்றான் முருகன். பெருவட்ட வடிவில் மலைகள் சூழ்ந்திருந்தன. உயர்ந்து நிற்கும் அடர்மரங்களைக்கொண்ட அந்த மலைவளையத்தின் நடுவே பரந்து விரிந்த நிலப்பரப்பு. அந்நிலப்பரப்பு முழுவதும் கழுத்தளவிற்கு விளைந்து நிற்கும் புல்வெளி. பார்க்கும்தோறும் அதன் அழகு பெருகிக்கொண்டே இருப்பதுபோல் உணர்ந்தான். சூழலில் மிதக்கும் மனம் மெல்லிய மயக்கத்தை ஏற்படுத்தியது.

“இந்த அழகைவிட்டுப் பார்வை பிரியாது” என்றாள் வள்ளி.

குரல் கேட்டுத் திரும்பாமலே முருகன் கேட்டான், “புலனறிய முடியாத மயக்கம் சூழ்கிறது. என்ன இருக்கிறது இவ்விடத்தில்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67a
“நமது கண்களுக்கு முன்னால் விளைந்து நிற்பது நரந்தம் புல். இதன் நறுமணம் யாரையும் மயக்கிவிடும். மயிலம் மலர் போலத்தான் இதுவும் காயக்காய நறுமணம் அதிகமாகிக்கொண்டே இருக்கும். காய்ந்த சருகுகள் வெளிப்படுத்தும் வாசனைக்கு அளவேதுமில்லை. நீலக்கடலுக்குள் உப்பு தேங்கிக்கிடப்பதைப் போல, இந்நரந்தம் புல்வெளியில் நறுமணம் தேங்கிக் கிடக்கிறது.”

சொல்லியபடி முருகனின் கைப்பிடித்து புல்வெளிக்குள் நுழைந்தாள் வள்ளி. புற்களைக் கையால் விலக்கி, காலால் மிதித்து நடக்கையில் கிளர்ந்த நறுமணம் இருவரின் மனத்தையும் மயக்கிச் சுழற்றியது. ஏற்கெனவே உட்கொண்டிருந்த அன்னமகிழரிசி உள்ளுக்குள் மலர்த்தலைத் தொடங்கியது. உடலும் மனமும் காற்றாய் மிதக்க காதல் கனிவாய் உருகி மனமாய் பெருகியது.

அவர்களின் பார்வைக்குமுன் பறவைகளும் விலங்கினங்களும் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்தபடி இருந்தன. பார்வையில் கடக்கும் அவற்றின் மீது எண்ணங்கள் நிலைகொள்ளவில்லை. மயக்கத்தின் முழுநிலையில் இருந்தான் முருகன். ஆனால் காதலின் துடிப்பு உள்ளத்தில் விசையைக் கூட்டியபடி இருந்தது.

முருகனின் ஆழ்மனம் விழித்திருந்தது. ‘இது வெறும் மயக்கம் என்றால், நாம் எப்பொழுதோ நினைவைத் தவறவிட்டிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதும் நினைவிருக்கிறது. மயங்கிய மனம் காதலைத்தவிர, வேறெதிலும் நிலைகொள்ள மறுக்கிறது, என்ன நிகழ்கிறது இங்கு?’

வள்ளி கைப்பிடித்து முருகனை அழைத்துச்சென்றாள்.  மயக்கம் தெளியத் தெளிய ஆழ்மயக்கத்துக்குள் அவர்கள் நுழைந்தனர். புல்வெளியின் நடுவில் இருந்த சிறுமேட்டில் அமர்ந்தாள் வள்ளி. அமர்ந்த கணம் அவள் மடிதனில் சாய்ந்தான் முருகன்.

தனது மடியில் அவன் முகம் ஏந்தியபடி எதையோ சொல்ல வாயெடுத்தாள். சொல்லின்றி அமைதியானாள். அவள் முகம் பார்த்த முருகனுக்கு எல்லாம் புரிந்தது. ‘கணநேரம் ஏழிலைப்பாலையின் அணுக்கத்தில் நிறுத்தி மலரவைத்தேன். நீயோ காலம் முழுவதும் மலரவைக்க வழிசெய்கிறாய். நிலமகள் நீ. உனது ஆற்றல் எனைநோக்கிக் கடத்தும் ‘காதல்’ எதிர்கொள்ள முடியாததாக இருக்கிறது; உள்நுழைந்த நறுமணமாய் உனக்குள் மறைகிறேன் நான்.'

நறுமணம் சூல்கொண்டிருக்கும் கருப்பைதான் அம்மலைக்குடுவை. அதன் நடுவில் இருந்த சிறுமேட்டில் வானம் பார்த்துப் படுத்திருந்தனர் இருவரும். நிறையிருள்கொண்டு வானம் கருத்திருக்க எங்கும் விண்மீன்கள் ஒளிவீசின.

காதலில் தெளியும்பொழுதுதான் மயக்கத்தின் ஆழம் புரிகிறது. ஆழத்தை அறியும்பொழுதுதான் அது அறியமுடியாத இடமென்ற உண்மை உரைக்கிறது. அன்னமகிழரிசி உடலை மலர வைத்தது. நரந்தம் புல் மனதை மலரவைத்தது. வள்ளியின் அணுக்கம் மலர்தலில் வாழவைத்தது.

வள்ளி சொன்னாள்,  “இவ்விடத்தில் இணையோடு இருக்கும் உயிரினங்கள் மட்டுமே தங்க முடியும். நரந்தம் புல் கிளர்த்தும் மனவெழுச்சி தனித்த உயிரினத்தை விரட்டிவிடும். பறவைகளும் விலங்கினங்களும் நீங்காத மயக்கம்கொண்டு காதலில் திளைத்திருக்கின்றன.”

“பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன். புலிகளுக்குமுன் இணைமான்கள் மலர் உண்ணுகின்றன. மான் உண்ணாத மலரில் வண்டுகள் நிலைகொள்கின்றன. ஆண்மலரின் மகரமும் பெண்மலரின் சூலகமும் இதழின்றி மலர்கின்றன. இவ்வியப்பு வேறெங்கு நிகழும்?”

விண்மீன்களைப் பார்த்தபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இரவு நகர்தலற்று நிலைகொண்டிருந்தது. முருகனின் கண்கள் வானத்தைப் பார்த்து, குறிப்பிட்ட விண்மீன் கூட்டத்தையே உற்றுநோக்கின.
“வளைந்தோடும் ஆறுபோல இருக்கும் அவ்விண்மீன் கூட்டத்தைப் பார்” என்றான் முருகன்.

“எங்கே?” என்று கேட்டபடி வள்ளியின் கண்கள் தேடின. விரல் நீட்டி அதன் வளைவுகளைச் சொல்லிக்கொடுத்தான். ஆறு புள்ளிகள் வளைவுகொண்டு மின்னின. நீண்டநேரம் அதனையே பார்த்தாள் வள்ளி.

முருகன் செங்கடம்பின் மாலை அணிந்தபடி படுத்திருந்தான். வள்ளியின் மேனியெல்லாம் அதன் மனம் வீசியபடி இருந்தது. மாலையில்லாத தனது உடலில் மணக்கும் செங்கடம்பின் வாசனையை நுகர்ந்தபடி இடப்புறம் திரும்பினாள். முருகனின் மேனியில் உதிராத இதழ்களோடு அவை இருப்பதைப் பார்த்தபடி புன்னைகையோடு சொன்னாள். “மாலை மார்பன்.”

மனதுக்குள் பொங்கும் காதலோடு முருகன் சொன்னான் “மாமலர்க் கோதை.”

கூடிய வெட்கத்தோடு குழைந்து சொன்னாள், “அழகின் வடிவு நீ.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67b
இதழ் முத்தம்போல வாங்கியவற்றையே வழங்கினான், “வடிவின் அழகு நீ.”

சிதறிய சிரிப்போடு மீண்டும் தலைசாய்த்து விண்ணைப்பார்த்தாள். சொல் சுழல பொருளும் சுழன்றது. செங்கடம்ப மாலை இப்பொழுது வள்ளியின் மேல் படர்ந்திருந்தது. இமை சொருகினாள்.

“அவ்விண்மீன்களின் வளைவை என்மீது சுற்றுவதுபோல் இருக்கிறது உனது விரல்களின் தொடுதல்.”

முருகனின் மூச்சுக்காற்று மட்டுமே மறுமொழியாய் இருந்தது.

காற்றிலே வந்த மறுமொழி கண்டு வள்ளி சொன்னாள், “அனலெரியும் காதல் ஒளியுருக்கி ஊற்றுகிறது. அச்சம்கொள்ளவைக்கும் அணைப்பு.”

அணைப்பு நீங்கி முருகன் மொழிந்தான், “மலைமகள் அச்சம் காணாள்.”

மூடிய இமை திறக்காமலே சொன்னாள், “வேலன் மிச்சம் காணான்.”

சொல்கிளர்த்தும் மகிழ்வோடு சொன்னான், “காதலில் நான் வேலன் அல்ல.”

“வேட்டையில் மறைந்து கொள்வது உனக்கு புதிதல்ல.”

வள்ளியின் சொல்லுக்கு மறுசொல் வரவில்லை.

சிலகணம் கழித்து முருகன் சொன்னான், “நான் உன்னுள் மறைந்து கொள்கிறேன். எனை நீ கண்டறியாதே.”

“சரி, ஆனால் என்னைக் கண்டறிய உன்னைப் பின்தொடர்வேன். மறைப்புகள் விலக்கி உன்னுள் புதைந்தெழுவேன்.”

பதிலின்றி இருந்தான் முருகன். அதுவே பதிலாய் அமைந்தது. மறைதலும் தேடலும் கார்காலம் முழுவதும் தொடர்ந்தன. புதைந்தவள் மீண்டாள்; மீண்டவன் புதைந்தான். மேகத்தில் தூசி மாறி தும்மல்கொண்டது. பின்னர் கூடும் முகில்களின் கொட்டம் தொடங்கியது. வேப்ப முத்து அளவினைக்கொண்ட மழைத்துளிகள் கொட்டித்தீர்ந்தன. ஒவ்வொரு துளி நீருக்குள்ளும் நரந்தம் புல்லின் மணம் மேலேறியது. மணமேறிய நீரின் துளிகள் வள்ளிமுருகனின் வாசனையைக் கொண்டிருந்தன.

புல்வெளியின் பெரும்பரப்பைச் சுற்றியிருந்த மலைமுகடுகளில் எண்ணிலடங்காத பூக்கள் பூத்துக் குலுங்கின. கொடிமலர்களும் கொத்து மலர்களும் வண்ணம்வீசி வளைய வந்தன. வேங்கை மரத்தின் கொத்துப்பூக்கள் கரும்பாறையெங்கும் கொட்டிக்கிடந்தன. உதிரவேங்கையும் மணிமுத்து வேங்கையும் பூத்தவேங்கையும் பாயாவேங்கையும் கொட்டும் மழைத்துளிக்கு இணையாக பூக்களைச் சொரிந்தன.

நெருப்பையொத்த எறுழம்பூக்களும் சிறுவட்ட இதழ்கொண்ட எருவைப்பூக்களும் வெண்ணிறக் கூதாளிமலரும் பருத்து பேரழகோடு மலரும் புழுகுப்பூக்களும் சூல்வட்ட மலையை வண்ணக்குவளையாக மாற்றின.
கொட்டும் மழையில் பாறைக்குகைகளில் இருந்த முருகனும் வள்ளியும் மழை நின்ற பொழுதுகளில் நரந்தம் மேட்டில் வந்தமர்வர். மழை நின்ற இரவுகளில் வெளிர்வானில் மின்னும் விண்மீன்களின் அழகு சொல்லிமாளாது. முருகனின் கண்கள் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தன.

வளைந்து கிடக்கும் ஆறு புள்ளிகொண்ட அந்த விண்மீன் கூட்டத்துக்குள் நிலவு சிக்கியிருந்தது. விண்ணில் தெரியும்  வியத்தகு ஒளி இணையாய் அது இருந்தது. அவ்விணை கூடியதும் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து நிலம் நோக்கிச் சரிந்தன. கொட்டும் மழை பொழிய விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைவெளியின்றி இருந்ததால், ஊற்று கசிவதைப்போல மேகத்திலிருந்து உருகி மண்ணில் ஓடியது மேகநதி.

எத்தனை பகலிரவு இப்படிக் கடந்ததெனத் தெரியாது. மேகம் விலகிய நள்ளிரவுகளில் முருகனின் கண்கள் ஆறு விண்மீன் கூட்டத்தைக் கடந்து பயணிக்கும் நிலவின் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தன.
ஓர் அதிகாலை மழைநின்றவுடன் குகைவிட்டு வெளிவந்த வள்ளியின் கண்களில் முதலிற்பட்டன பூத்து நின்ற செங்காந்தள் மலர்கள். செவ்வொளி வீசும் ஆறு இதழ்களோடு அவை இருப்பதைப் பார்த்தபடி முருகனை அழைத்துக் காண்பித்தாள்.

“அவ்விண்மீன் கூட்டத்தின் சுடர்போல் இம்மலர் ஆறு இதழ்களைக் கொண்டுள்ளது” என்றாள்.

செவ்விதழ்களை உற்றுப்பார்த்தான் முருகன். இதழின் அடியில் இளம்பசுமை நிறமிருந்தது. நடுவில் மஞ்சள் மேவி பின்னர் வெண்மையில் கரைந்தது. மேற்பகுதி இளஞ்சிவப்புப் பூண்டுமுனை அடர்சிவப்பாய் மிளிறியது. இதே நிறவாகு அவ்விண்மீன் கூட்டத்தில் உள்ளதை முருகனின் கண்கள் பல இரவுகளில் பார்த்துள்ளன.

“ஆறுவிண்மீனின் அதே குணம் இம்மலரின் ஆறு இதழ்களிலும் இருக்கின்றன” என்றான் முருகன். “அப்படியா!” என்று அவள் கேட்பதற்குள் சொன்னான், “இந்நிறங்கள் அனைத்தையும் காதலில் திளைக்கும் வேளையில் உன்னிடமும் கண்டுள்ளேன்.”

வியப்புற்று வள்ளி கேட்டாள், “நீ விண்ணைக் காணும்பொழுதும் என்னைத்தான் கண்டாயா?”

“நீயின்றி நான் காண விண்ணேது? மண்ணேது?”

சொல்லியபடி செங்காந்தள் மலர்பறித்து வள்ளியின் கூந்தலிற் சூட்டினான். அடர்வானம்கொண்டு கொட்டித் தீர்த்த கார்காலத்து அடைமழை விலகத் தொடங்கியது. விரிவானம் மேகமற்று மிதக்க, அவ்விண்மீன் கூட்டம்விட்டு நிலவு நகர்ந்தது.

நரந்தம் புல் பரப்பில் இருந்து விலகத்தொடங்கினான் முருகன். செங்காந்தள் சூடியபடி அவனுடன் நடந்தாள் வள்ளி. புது இடம் நோக்கி அவளை அழைத்துச்சென்றான் முருகன்.

மலையுச்சியிலிருந்து அடிவாரக் காட்டுக்கு கீழிறங்கி வந்தனர். அடைமழையின் கூதிர்ப்பருவம் முடிந்து முன்பனி தொடங்கியது. நடுக்கம் அதிகமாகும் முன்பனிப்பொழுதில் தங்குவதற்குக் கொன்றை மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடுக்கினைப் பயன்படுத்தினான். குளிர் சற்றே குறையும் பின்னரவில் படுத்துறங்க கருங்கொன்றையின் உச்சியில் பரண் அமைத்தான்.

பனி நடுக்கம் தாளாமல் முயல்கள் கொன்றை மரயிடுக்கில் பதுங்கின. அவ்விடுக்கின் உள்ளே கால்களை இறுகணைத்து அமர்ந்திருந்தாள் வள்ளி. வள்ளியின் கணப்பில் அண்டின முயல்கள்.

இரைதேடி வேட்டைக்குப் போன முருகன் திரும்பி வந்தபோது வள்ளியின் கணப்பில் முயல்கள் அண்டியிருப்பதைப் பார்த்தான். நீள்காது அசைய அவை வள்ளியை நோக்கித் திரும்பின. வள்ளியின் முகத்தில் புன்முறுவல் இருந்தது.

முருகன் முயல்களைப் பார்த்து சொன்னான், “அவ்விடம் அணையாதீர்கள். பின்னர் ஒருபோதும் விலகமாட்டீர்கள்.”

சொல்லுக்குள் பொறாமை வெளித் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஆனால் பார்வையே அதனைச் சொல்லியது. அதன்பிறகுதான் சில முயற்குட்டிகள் வள்ளியின் மேலேறிப் பதுங்கின.

நீண்ட கொன்றைக்காயின் விதைகளை ஒருபக்கம் துளையிட்டு எடுத்துவிட்டு இசைபாடும் குழலாய் மாற்றினான். பொழியும் பனியின் ஊடே பரணில் படுத்தபடி நகரும் ஆறு விண்மீன்களைப் பார்க்க அவன் தவறுவதில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67c
குருவிக்குஞ்சுபோல் வெண்மை திரண்டு பூக்கும் முன்பனியின் புதுமலரான ஈங்கை மலர் பறித்து வள்ளியின் கூந்தலில் சூட்டிய நாளன்று அவன் காடுவிட்டு வெளியேறப் போகிறான் என அவளுக்குப் புரிந்தது.
கீழுதடு நடுங்கும்படி பின்பனி கொட்டும் அந்த நாட்களில் அவனோடு வயல்வெளியின் ஊடே நடந்து வந்தாள் வள்ளி. தவளைச் சத்தம் விடாது கேட்க, மூக்கெங்கும் ஈரப்பதம் ஏறியிருந்தது. தாமரை படர்ந்துகிடக்கும் குளக்கரையில் மருதமரத்தின் மீது பரண் அமைத்தான்.

“எங்கு போனாலும் பரண் மீதே தங்குவதேன்?” எனக் கேட்டாள் வள்ளி.

“இது காதல் வாழ்க்கை. தரையில் தங்கினால் இறுகிய நிலத்தில் கூடலின் வளம் முழுமை கொள்ளாது. வானில் மிதந்தால் கூடலின் இறுக்கம் வலிமை கொள்ளாது. இரண்டும் கலந்த பரணில்தான் நிலம் அசைய, வான் நகர, நடுவில் நாம் மூன்றிலும் கலப்போம்.”

அதன்பின் மறுமொழி சொல்ல ஒன்றுமில்லை வள்ளிக்கு.

பகலும் இரவும் பரண்மேல் மலரும் காதல் கண்டு பறக்கும் நாரைகள் இறகுதிர்த்துப் போயின. காற்றில் மிதந்துவரும் வெண்சாம்பல் இறகுகளைச் சேகரித்து, கொடிகொண்டு முடிச்சிட்டு வள்ளியின் தலையில் மகுடமெனச் சூட்டினான் முருகன்.

“காலநேரமின்றி மிதந்து கொண்டிருக்கிறேன். இதில் நாரைகளின் இறகுகளை தலையில் அணிவித்தால், பறத்தல் நிறுத்தி ஒருபோதும் தரையிறங்காமல் போவேன்” என்றாள் வள்ளி.

“உனது அணைப்பில் மீளமுடியா மயக்கத்தில் கிடந்த எனக்கு, அன்னமழகியரிசி கொடுத்து உடலையும், நரந்தம்புல் கொண்டு மனதையும் தெளிவடைய முடியாத திகைப்பில் வீழ்த்தினாயே, அதைவிடவா?”

முருகனின் வினாவிற்கு விடையேதும் சொல்லவில்லை வள்ளி. இக்கைமாறில்தான் காதல் கனல் நீங்கா வெக்கை கொள்கிறது. அணுக்கள்தோறும் துடிப்படங்கா தவிப்பு கொள்கிறது.

தவிப்பு நீங்கா அதிகாலையில் பின்பனிப் பருவத்துப் புதுமலரான கமுகின் சிறு பூ எடுத்து வள்ளிக்குச் சூட்டினான். வயல் தாண்டி கடல் நோக்கி புறப்பட்டனர் இருவரும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67d
கடற்காற்று மேலேறி வந்து தாழை மரங்களுக்கு இடையில் கட்டிய ஊஞ்சல் பரணை ஆட்டிவிட்டுச் சென்றது.

பரண்மீது ஆடிக்கொண்டே வள்ளி சொன்னாள், “கரையில் இருந்தும் அலையில் மிதக்கிறோம்.”

“மலையிலும் காட்டிலும் வயலிலும் நாம் மிதக்கத்தானே செய்தோம்.”

“ஆனால் இப்பொழுதுதான் உப்பேறிய காற்று உடல் தழுவிச்செல்கிறது. இளவேனில் ஒளிக்கதிர்களால் உடல் சுடுகிறது. இவை அனைத்தும் இவ்வளவு நாளும் உள்ளுக்குள் மட்டுமே நிகழ்ந்தன” சொல்லி மகிழ்ந்தாள் வள்ளி.

இருவரும் ஆடும்பரணில் படுத்தபடி கடல் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

நீண்ட நேரத்துக்குப் பின் வள்ளி கேட்டாள், ``கடல் ஏன் கரையோடு நிற்கிறது?”

“கரை மீது கொண்டுள்ள காதலால்.”

மறுமொழி அவளை ஏதோ செய்தது. சட்டென அவனை நோக்கித் திரும்பியபடி கேட்டாள். “அப்படியென்றால், இவ்வளவு தழுவல்கொண்ட காதலர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா?” கேள்வி கேட்ட கணத்திலே மனம் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் திணறியது.

முகக்குறிப்பறிந்து முருகன் கேட்டான், “என்ன ஆனது?”

சொல்லமுடியாமல் திணறிய வள்ளியை முருகனின் கைகள் சூழ்ந்தபோது கடலும் கரையும் பரணில் இருந்தன.

இரவு நெடுக அலைகளின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்ததது. அவ்வப்பொழுது தெறித்த நீர்த்துளிகள் காற்றில் வந்தன. விண்மீன்களைப் பார்த்தபடி இருந்த அவர்களது நாவிலிருந்து சுடுமீனின் வாசனை விலகவேயில்லை.

இளவேனிற்காலத்துச் சுடுவெயில் உச்சத்தில் இருந்த பொழுது, கடற்கரை மணல்வெளியில் முள்ளி மாமலர் பூக்கத் தொடங்கியது. அந்நீலநிறப் பூவைப்பறித்து பரண் நோக்கி முருகன் வந்தான். அவள் பாலை நிலம் நோக்கிப் புறப்பட ஆயத்தமாக இருந்தாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67e
கொடும்பாலையில் அளவில்லாத தொலைவு நடந்தனர் இருவரும். வற்றிய சுனையில் ஒளி மேவிக்கிடந்தது. பறந்து கடக்கும் கழுகுகளின் நிழல்கள் மட்டுமே மண்ணில் ஊர்ந்தன. வள்ளியின் பாதங்களில் கொப்பளங்கள் பூத்தன. ஆனாலும் விடாது நடந்தாள். பாலை நிலத்தின் பின்கோடை வெயில் எண்ணிலடங்காத தாவரங்களை மலரச்செய்கிறது. சுட்டெரிக்கும் மண் மீது ஏதோ ஒரு மூலையில் சிறுமலரொன்று இதழ் விரித்திருப்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம் வள்ளியின் முகம் மலர்ந்தது.

அழிச்சியும் அலரியும் சுள்ளியும் எருக்கும் இங்குமங்குமாகப் பூத்திருந்தன. இரும்பைப்பூவின் இனிப்பு பறவைக்கூட்டங்களை ஈர்த்தது. வேப்பம் பழத்தைத் தின்ற கைப்புச்சுவை மாற வெளவால்கள் இலும்பை மரத்தைவிட்டு நீங்காமற் கிடந்தன. பொன்நிற தனிப்பூவை கோங்கு உதிர்த்தபொழுது அணிலின் முதுகின் மேல் இருக்கும் வரிகளைப் போன்ற ஊகம்பூவும் இணைந்தே கிடந்தது.

எப்பொழுதோ வீசும் காற்றில் பறக்கும் மலர்கள் மீண்டும் மண் தொடும்போது சருகின் ஓசையுடனேயே சரிந்தன. மண்ணும் மரமும் காற்றும் சுடுவெயில் ஏந்தி நின்றன. ஏந்திய வெயிலின் இறங்காத சூடு மண்ணெங்கும் நிலைகொண்டது. வலிமையிழந்த புலிகள் பதுங்கிய இடத்தைவிட்டு எழ முடியவில்லை. நீரின்றி அலைந்த செந்நாய்களின் கால்தடங்கள் மட்டுமே மிஞ்சின. எப்புறமும் சுடுவெயில் சூழ்ந்த பாலையின் நடுநிலம் நோக்கி நகர்ந்தனர் வள்ளியும் முருகனும்.

வள்ளியின் உதடுகள் வெப்பக்காற்றில் வெடித்துக்கிடந்தன. முதுவேனிலின் சுடுபழத்தைச் சுவைத்து உண்டதன் அடையாளங்கள் அவை. எங்கும் பட்டமரங்களே நின்றிருந்தன. சிறுபாறையோரம் தனித்திருந்த வாகை மரத்தின் மீது பரண் அமைத்தான் முருகன்.

பகல் மங்கியபொழுது பரணேறிச் சாய்ந்தனர் இருவரும். இரவானதும் வானமும் சுடுமோ என்று அஞ்சவைத்தது பகலின் நினைவு. முருகனின் கண்கள் விண்மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. வளைவுகொண்ட அந்த ஆறு விண்மீன்களும் வானில்  தெரியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67f
“அவை வான்விட்டு எங்கு போயின?” எனக்கேட்டாள் வள்ளி.

“எந்த ஒரு வளைவிலும் மறைவுகள் இருக்குமல்லவா? அதேபோல அந்த ஒளி வளைவின் மறைவிடத்தில் நாம் இருக்கிறோம். அதனால் பார்வையில் இருந்து தப்பியுள்ளது” என்றான் முருகன். அதன் பிறகு அது பற்றி அவள் கேட்கவில்லை.

அவை தவிர்த்து எண்ணிலடங்காத விண்மீன்கள் வான்வெளியைப் பூக்காடாய் மாற்றியிருந்தன. எங்கும் சிதறிக்கிடக்கும் வான்பூக்களைப் பார்த்தபடி வள்ளி கேட்டாள், “மழை கொட்டித்தீர்த்த கார்காலத்தில் நிலமெங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. அதன் பிறகு இம்முதுகோடையில்தான் எண்ணிலடங்காத பூக்கள் பூக்கின்றன. மற்ற பருவங்களில் இவ்வளவு பூக்கள் பூக்கவில்லையே ஏன்?”

முருகனின் முகத்தில் மெல்லிய சிரிப்பொன்று ஓடி மறைந்தது. அவன் சொல்லப் போகும் மறுமொழிக்காக காத்திருந்தாள். மறுமொழியேதும் வராமல் நேரம் கடந்தது.

முருகனின் சிந்தனை வேறெங்கோ இருக்கிறது என நினைத்த வள்ளி தனது கேள்வியில் இருந்து  எண்ணத்தை விலக்கினாள்.

சற்று பொழுது கடந்து முருகன் சொன்னான், “எல்லாவற்றிற்கும் காரணம் ஆறு விண்மீன் கூட்டம்தான்.”

முருகனின் விடை எதிர்பாராததாக இருந்தது. திகைப்புற்ற வள்ளி கேட்டாள், “எப்படி?”

“அந்த ஆறுவிண்மீன் கூட்டத்தோடு நிலவு இணைந்திருந்த காலத்தில்தான் கார்மேகங்கள் வானம் எங்கும் நிறைந்திருந்தன. பெருமழை விடாது கொட்டித்தீர்த்தது. அதேபோல அந்த ஆறு விண்மீன் கூட்டத்தோடு கதிரவன் இணைந்திருக்கும் இக்காலத்தில் சுடுவெயில் தீயென விடாது பொழிகிறது. நீரும் ஒளியும்தான் மலரென வடிவம் கொள்கின்றன. அதனால்தான் பிறகாலங்களைவிட இவ்விரு காலங்களிலும் மலர்கள் அதிகமாக மலர்கின்றன. இம்மலர்தலுக்கு காரணம் வளைவுகொண்ட அந்த ஆறுவிண்மீன்கள்தான்.”

முருகனின் விடை முற்றிலும் புதிதாய்த் தோன்றியது. அதனை உள்வாங்கி மறுவினா தொடுக்க சற்று நேரமானது. அவள் கேட்டாள், “அவ்விண்மீன் கூட்டத்தோடு நிலவு இருந்ததை நாம் பார்த்தோம். இப்பொழுது கதிரவன் அக்கூட்டத்தோடு இருக்கிறான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

“விண்மீனின் நகர்வுகளைக் காலம் முழுவதும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். வானின் ஒவ்வொரு பகுதியிலும் அது நகர்ந்து செல்லும் வழித்தடம் எனது மனக்கண்ணில் இருக்கிறது. இப்பொழுது அவற்றோடு இணைந்தே கதிரவன் பயணிக்க வேண்டும். பகல் பயணம் அது. அதனால்தான் இரவில் அவ்விண்மீன் கூட்டம் நம் கண்களுக்குத் தெரியவில்லை. காலச்சுழற்சியின் பாதை அதுவே.”

பதிலுரையால் உறைந்து நின்றாள் வள்ளி. அடுத்த சொல் சொல்ல நா எழாமல் இருந்தது. அதனைக் கவனித்தபடி முருகன் சொன்னான், “உனது முதுகுப்புறத்தை நீ பார்க்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் உன்னால் உணரமுடியும் அல்லவா? அதுபோல்தான் இதுவும்.”

இவ்வுவமைக்குப்பின் சொல்ல எதுவும் இல்லை என்று தோன்றியது. ஆனால் இவ்வுவமையே பல சொற்களைச் சொல்லவும் தூண்டியது.  வேண்டாம் என்று கட்டுப்படுத்தினாள் வள்ளி. ஆனாலும் உருக்கொண்ட வார்த்தைகள், தனக்குத்தானே ஒருமுறையாவது சொல்லிக்கொண்டால் மட்டுமே அமைதிகொள்ளும்.

“எல்லா அணைப்புகளிலும் சூழ்ந்த உனது கைகள் எனது முதுகினையே பற்றியது. காதல் அதனால்தான் இவ்வளவு வெக்கை கொண்டுள்ளதா? சுட்டெறிக்கும் அனல், காதலைவிட்டு எப்பொழுதும் நீங்காமல் இருப்பது அதனால்தானா?” சொற்கள் வேள்விகளாய் உருத்திரண்டபடி இருக்க, அனைத்தையும் விழுங்கிவிட்டு ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டாள், “எல்லா இரவுகளிலும் வான்நோக்கி பரண் அமைத்தது காதலில் மூழ்கத்தான் என நினைத்தேன். ஆனால் காலத்துள் மூழ்கத்தான் அதனைச் செய்தாயா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P67g
அழகிய சிரிப்போடு முருகன் சொன்னான், “நான் காலத்துள் மூழ்கும்போதெல்லாம் காதலுக்குள்தான் மூழ்கினேன். காதல்தானே காலச்சுழற்சியின் அடையாளம். நிலவும் கதிரும் இயற்கைக்குப் பாலூட்டும் இருமார்புகள். கருணையும் காமமும் சமமாய்ச் சுரக்கும் அவ்வழகிய தனங்களைவிட்டு நான் எக்காலமும் அகலாமல்தானே இருந்தேன். அணைப்பு நீங்காமல் அதனை அறிந்தவள் நீதானே.”

சொல்கிளர்த்தும் காதல் உடலெங்கும் பொங்க, செய்வதறியாமல் நின்றாள் வள்ளி. அவளது முகத்தை தனது கைகளில் ஏந்தியபடி முருகன் சொன்னான், “கார்மேகம் மழையைக் கொட்டித் தீர்ப்பதற்கும், தீயாய் வெயில் சுட்டெறிப்பதற்கும் அவ்விண்மீன் கூட்டமே காரணம். எனவே அதனைக் கார்த் தீ என அழைக்கலாமா?”

“உனது கைகள் எனது முகமேந்திய கணத்தில் உடலெங்கும் கார்காலக் குளுமை பரவியது. ஆனால் அணைக்காமல் விலகி நிற்கும் இவ்விடைவெளியில் பாலைத் தீ பற்றி எரிகிறது” வள்ளி வார்த்தையை முடிக்கும் முன்னே இறுக அணைத்தான் முருகன். கார்காலக் குளுமையின் மீது பற்றியெறிந்தது தீ. கார்த் தீ!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 34

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:05 pm

இருளுக்குள் நடந்துகொண்டே கார்த்திகையின் கதையைச் சொல்லி முடித்தான் பாரி. கதை கேட்டபடி பின்னால் வந்துகொண்டிருந்தார் கபிலர். திசைவேழரின் காலக்கணிதம், பேரரசுகளின் வானியலறிவு ஆகியன பற்றி கபிலருக்கு இருந்த எண்ணங்கள், பாரி சொன்ன ஒற்றைக்கதையால் தள்ளாடத் தொடங்கின. `நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஒளிவாளினை இவ்வளவு துல்லியமாகக் கணித்துவைத்திருக்கும்போதே, மலைமக்களின் வானியலறிவைப் புரிந்துகொள்ள கூடுதலாக முயன்றிருக்க வேண்டும்’ எனத் தோன்றியது.

பேச்சற்று வந்துகொண்டிருந்த கபிலரைப் பார்த்து பாரி, “முருகன், கார்த்திகை விண்மீன் கூட்டத்துக்குப் பெயர் சூட்டிய கதையை மட்டும்தானே சொல்லியுள்ளேன். இன்னும் எவ்வளவோ இருக்கின்றனவே” என்றான்.

“இன்னும் எவ்வளவோ என்றால், முருகனைப் பற்றியா... விண்மீன்களைப் பற்றியா?”

“காலத்தைப் பற்றி”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85a
‘என்ன சொல்லவருகிறான் பாரி?’ என்ற திகைப்பு வாயடைக்கச் செய்தது கபிலரை.

பாரி சொன்னான், “அந்த ஆறு விண்மீன்களின் அடிப்படையில்தான் காலமும் ஆறு கூறுகளாகப் பகுக்கப்பட்டன. கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என ஆறு பெரும்பொழுதுகளும், வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என ஆறு சிறுபொழுதுகளும் இதன் அடிப்படையில்தான் பகுக்கப்பட்டதாகச் சொல்வார்கள்.”

இருள் சூழ்ந்துள்ள ஒற்றையடிப்பாதையில் பின்னால் வருகிறவர் சிறு ஓசைகூட எழுப்பாமல் வரக் கூடாது என்பது கபிலருக்குத் தெரியும்.  ஆனால், தெரிந்தவை எல்லாம் தெரியாதவற்றின் பின்புலத்தில் போய் மறைகின்றன. பின்னணிக் கதைகள் காலத்தையே புரட்டுகின்றன. கபிலர் என்ன செய்வார்?

மனம் புரண்டு எழுந்து உண்மையைப்பற்ற நினைத்தபோது குறுக்கிட்ட கதை, ‘அது உண்மையா?’ என்ற கேள்வியை எழுப்பியது. திகைத்து நின்றவரிடம் புதிதாய் வினா ஒன்று மேலெழுந்தது.

“வேளிர்குலத் தலைவன் உருவாக்கியதால்தான் பொழுதை அறிய `வேளை’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோமா? காலை வேளை, மாலை வேளை என அழைப்பதன் காரணம் அதுதானா?”

கபிலரின் வினாவுக்கு, பாரியிடம் விடை இல்லை.

சற்றுநேர இடைவெளியில் மீண்டும் கபிலர் கேட்டார், ``காலச்சுழற்சியை அறுபது ஆண்டுகளாக வகுத்ததற்கும், ஒரு நாளை அறுபது நாழிகைகளாகப் பிரித்ததற்கும் இந்த ஆறுதான் அடிப்படையா?”

பாரியிடமிருந்து மறுமொழி எதுவும் வரவில்லை. ஆனால், கபிலரின் உள்ளத்துக்குள் உருக்கொண்ட வினாக்கள் நின்றபாடில்லை.

“சற்றே நில்” என்றார் கபிலர்.

முன் நடந்துகொண்டிந்த பாரி நின்றான்.

“அன்று அங்கவை கேட்ட வினாவை உன்னிடம் சொன்னேனே நினைவிருக்கிறதா?”

எதுவென்று பாரி யோசித்துக் கொண்டிருந்தான். அந்தப் பொழுதுகூட கபிலரால் காத்திருக்க முடியவில்லை. “ `உயிரெழுத்துகள் ஏன் பன்னிரண்டு?’ என்று கேட்டாளே” என்றார்.

“ஆம்” என்றான் பாரி.

“உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு எல்லாம் ஆறின் மடங்குகளாகவே இருப்பது அதனால்தானா? ஆறு என்ற அச்சின் மீதுதான் எம்மொழி நிலை கொண்டுள்ளதா? ஆறு என்பது எண்ணாகவும், நதியாகவும், மொழியாகவும், காலமாகவும் விரிவுகொண்டதா?” என, கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் கபிலர்.

அமைதியாய் நின்ற பாரி சொன்னான், “ இந்த வினாக்களுக்கு விடைகூற வேண்டியவர் நீங்கள்தானே, என்னிடம் கேட்கிறீர்கள்?”

``விடையை யாரும் சொல்லிவிடலாம். வினாக்கள் உருத்திரள்வதுதான் முக்கியம். பறம்பின் மீது ஏறத் தொடங்கியதிலிருந்து நான் முக்கியமாகக் கண்டடைந்தது விடையை அல்ல, வினாவைத்தான்.”
பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான்  வெளிவருகின்றன. கபிலர், கேள்விகளுக்குள் தலை நுழைத்துக் கொண்டிருந்தார்.

“காலத்தைப் பற்றி வேறென்ன சொல்ல வந்தாய்?”

“முருகன் அளவுக்கு இயற்கையின் ஒவ்வோர் அசைவையும் நுட்பத்தையும் புரிந்துகொண்ட இன்னொரு தலைவன் இல்லை. முருகனோடு இரண்டு பறவைகளைப் பற்றிய கதைகளை இணைத்தே மக்கள் சொல்வர். கேட்டிருக்கிறீர்களா?”

“நான் கேள்விப்பட்ட கதைகள் எல்லாம் இங்கு தலைகீழாக மாறிவிடுகிறதே! நீ எந்தப் பறவைகளைச் சொல்கிறாய்?”

``சேவலையும் மயிலையும்தான்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85b
இந்தப் பறவைகளுக்கும் காலத்துக்கும் இருக்கும் உறவைப் பற்றி கபிலர் சிந்தித்துக்கொண்டிருந்தபோது பாரி சொன்னான், ``சேவல், கதிரவன் விரும்பி; செந்நிற ஒளியின் முதல் கீற்று வானில் மேலெழத் தொடங்கியவுடன் குதூகலித்துக் கொக்கரிக்கத் தொடங்கிவிடும். அதன் மகிழ்வுக்கு அளவு ஏதுமில்லை. அதேபோலத்தான் மயிலும். அது, மழைவிரும்பி; கார்மேகங்கள் கூடத் தொடங்கியதும் குதூகலிக்கத் தொடங்கும்; இறகு விரித்து தனது மகிழ்வைக் கொண்டாடும். நெருப்பும் நீரும்போலத்தான் கார்த்திகையின் இன்னொரு குறியீடு இவை இரண்டும்.”

சேவலின் கொக்கரிப்பையும் மயிலின் தோகை விரிப்பையும் கார்த்திகையோடு இணைத்து பாரி சொன்ன கணத்தில், உடல் சிலிர்த்து அடங்கியது. `காலத்தின் எதிரெதிர் முனைகளை வைத்துதான் முருகனைப் பற்றிய எல்லாக் கதைகளும் பின்னப்பட்டுள்ளன’ எனத் தோன்றியபோதே அறுபதாங்கோழியின் நினைவுவந்தது. “முருகனுக்கு மிகவும் பிடித்தது அறுபதாங்கோழி என்றுதானே பறம்பு மக்கள் சொன்னார்கள்?”
இளஞ்சிரிப்பு மாறாமல் பாரி சொன்னான்,“சேவலும் மயிலும் காலத்தின் குறியீடு என்றால், அறுபதாங்கோழி காதலின் குறியீடு. அது முழுநிலா நாளில் வானம் பார்த்து தனது மெல்லிய குரல்கொண்டு ஒலியெழுப்பும். சேவல்போல தனது அலகு திறந்து கூவாது. மூடிய வாயின் முணுமுணுப்பாய் வெளிவரும் இசை. வண்டுகளின் ரீங்காரம்போல மெல்லொலி எழுப்பும்.  வள்ளியும் முருகனும் நரந்தம்புல்லின் நடுமேட்டில் இருந்த காலமெல்லாம் காற்றில் மிதந்த ஓசை அதனுடையதுதான். அந்த ஓசை, காதலர்கள் உயிர் சுருண்டு ஓருடல்கொள்ள வழிசெய்யும்.

கார்காலமும் வேனிற்காலமும் இணைந்ததன் அடையாளமாகக் கார்த்திகை இருப்பதைப்போல, ஆணும் பெண்ணும் இணைந்த காதல் அடையாளம்தான் அறுபதாங்கோழி. ஒருவகையில் எரியும் நீரும் குளிரும் நெருப்புதான் அதுவும்.”

``காலத்தையும் காதலையும் வைத்து வள்ளியுடன் நடத்திய விளையாட்டு வள்ளிமுருகனைப் பற்றிய எல்லாக் கதைகளிலும் நிகழும்போலும்” என்றார் கபிலர்.

``காலத்துடனும் காதலுடன் விளையாடிப் பார்க்க விருப்பமில்லா மனிதன் யார்? மனிதனின் அடிப்படையான விருப்பம் இவை இரண்டும் தானே.  அதனால்தான் எல்லோருக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. அதை விளையாடித் தீர்த்த வள்ளிமுருகனையும் பிடித்திருக்கிறது.” 

வள்ளிமுருகனின் கதையை அசைபோடுதல், காலத்தையும் காதலையும் மறுபடி நிகழ்த்திப்பார்த்தல்போலத்தான். அந்த நிகழ்வு மனதுக்குள் நிகழும்போது வெளிப்பேச்சுக்கு வேலையென்ன? பாரியும் கபிலரும் இருவேறு உலகுக்குள் நீந்தியபடி  நடந்து சென்றனர்.

இருளின் அடர்த்தி குறையத் தொடங்கியது. மழை நின்ற இரவு, கிழக்கே மேலெழும் புத்தொளிக்காகக் காத்திருந்தது. பறவைகளின் குரலொலி கேட்டபடி இருவரும் நடந்தனர். நீண்டநேரம் கழித்து கபிலர் கேட்டார், “முருகன் கண்டறிந்தவை வேறு என்னென்ன?’’

“நிறைய இருக்கின்றன. ஆனால், சொல்ல முடியாதவைகளாக இருக்கின்றன.”வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85d

“என்னிடம் சொல்ல முடியாதவையா?”

“ஆம், தம் குலம் அல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாதவை, குலங்களில் நிறைய உண்டல்லவா?”

நீண்டநேரம் கழித்து கதைகளிலிருந்து மீண்டு தன்நிலைக்கு வந்தார் கபிலர். எவ்வளவு ஒன்றினாலும் விலகவேண்டிய இடம் உண்டு என்பதை உணரும் நேரம் சற்றே கடுமையானது.

“ஆனாலும் அவை குறித்து நீங்கள் ஏற்கெனவே கேள்வி எழுப்பிவிட்டீர்கள். உங்களது கேள்வியால் திகைத்துப்போய் நின்றது அன்றுதான்” என்றான் பாரி.

`எதைச் சொல்கிறான் பாரி?’ என யோசித்துக் கொண்டிருந்தார் கபிலர். பாரி சொன்னான், ``ஒளிவாளினைப் பார்க்க குன்றுக்கு மேல் உங்களை நான் அழைத்துச் சென்றபோது நீங்கள் கேள்வி ஒன்று கேட்டீர்கள்.”
கபிலர் சிந்தித்தபடியே சொன்னார், “பாழி நகர் பற்றிக் கேட்டேன். `அங்கு வேளிர்களின் செல்வங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளனவா?’ என்று கேட்டேன்.’’

பாரி சொன்னான் ``குமரிக்கடல் முதல் வட திசையின் எல்லை வரை இருக்கும் இந்தப் பச்சைமலைத்தொடரில் இருப்பவர்கள் ஈரேழு பதினான்கு வேளிர்கள். இந்த வேளிர் கூட்டம், தங்களுக்குக் கிடைக்கும் பெரும்செல்வம் எதுவானாலும் அதைப் பாழி நகரில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னோர்கள் விதிசெய்தனர். அந்தப் பாழி நகரை உருவாக்கியவன் முருகன்.”

தான் அன்று கேட்ட வினாவுக்கு, இன்று பாரியிடமிருந்து விடை வந்தது.

“அந்நகரை வேளிர் மட்டுமே அறிவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.”

“ஆம்” என்றான் பாரி.

``பிறரால் அறிய முடியாத நகரம் மண்ணில் எப்படி இருக்க முடியும்?”

“மண்ணின் மேல் இருக்க முடியாது. மண்ணுக்குள் இருக்க முடியுமல்லவா?”

கபிலர் மிரண்டு நின்றார். பாரி சொன்னான், “அது மண்ணுக்குள் வடிவமைக்கப்பட்ட அமைப்புகளைக்கொண்டது. அங்குதான் ஆதிகாலந்தொட்டு வேளிர்களின் செல்வங்கள். அதாவது பச்சைமலையின் வியக்கத்தகு செல்வங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. அந்தப் பாழி நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை எவ்வியிடம் ஒப்படைத்தான் முருகன். அன்றிலிருந்து பறம்பின் மக்கள் அதைப் பாதுகாத்துவருகிறார்கள்.”

“மற்ற வேளிர்கள் அந்த இடத்துக்கு வந்து செல்கின்றனரா?”

“ஆம், பாதுகாப்பது மட்டும்தான் எங்களின் பணி. மற்ற அனைத்து வேளிர்களுக்கும் அந்த இடம் எங்கு இருக்கிறது என்ற உண்மை தெரியும்.”

“ எவ்வியூரிலிருந்து மலைப்பாதையின் வழியே போனால், பாழி நகர் போய்விடலாம் என்று நீ சொன்னாயே!”

கபிலர் முடிப்பதற்குள் பாரி சொன்னான், ``அது வெளித்தோற்றத்துக்காக நாங்கள் அமைத்துள்ள சிறுபாழிக்கான பாதை. பெரும்பாழி இருக்கும் இடம் வேறொன்று.”

முடிச்சோடு நின்றது பாரியின் மறுமொழி. `இதை நேரடியாகக் கேட்க முடியாது. ஆனால், கேட்காமல் இருக்கவும் முடியாது. என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தபடியே கபிலர் கேட்டார், ``மலைப்பகுதியில் மண்ணுள் இருக்கும் ஓர் இடத்தை எல்லாக் காலங்களிலும் பாதுகாத்துவிட முடியுமா? கால ஓட்டத்தில் எளிதில் அழிந்துவிடாதா?”

எவ்வளவு நிதானத்துடனும் கூர்மையுடனும் கபிலர் பாழி நகரை நெருங்குகிறார் என்பதை, பாரி கவனித்தபடியே சொன்னான், “அந்த நகரை இப்போது மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் மண்ணுள் எவ்வளவு ஆழம் புதைந்தாலும் வேளிர் குலத்தவரால் கண்டுபிடித்துவிட முடியும்.”

“ `எப்படிக் கேட்பது, பாரிக்கு இக்கட்டான நிலையை உருவாக்கிவிடும்’ என்று கபிலருக்குத் தோன்றியது. `ஆனால், கேட்காமல் இருப்பது, உருவாகும் எண்ணத்தை மறைக்கும் செயல். மறைக்க முயல்வது தோழமையன்று’ என்று எண்ணியபடியே கபிலர் சொன்னார், “எப்படி என்பதை நீ வெளிப்படுத்தத் தேவையில்லை.”

கபிலரின் சொல்லாற்றல் கண்டு வியந்து நின்றான் பாரி. எவ்வளவு திறனோடு என்னை முன்னகர்த்தி அவர் பின்வருகிறார் என்று எண்ணியபடியே பாரி சொன்னான், ``அந்த நகருக்கான அடையாளங்களை உருவாக்கியவன் முருகன். அந்த அடையாளங்கள் மண்ணில் இருந்தால், அவை கால ஓட்டத்தில் மறைந்துபோகலாம். விண்ணில் இருந்தால்?”

பாரியின் வினா, கபிலரை இழுத்து நிறுத்தியது. பாரி தொடர்ந்தான், “இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும், விண்மீன்களின் இருப்பிடங்கள் மாறவா போகின்றன?”

“இல்லை.”

“பாழி நகருக்கான குறிப்புகள் விண்மீன்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவு காலம் கழிந்த பின்னும், மாதங்களின் நாள் வரிசையும் விண்மீன்களின் இட வரிசையையும் தெரிந்தவன் அந்த நகரை எளிதில் கண்டறிந்துவிடுவான்.”

திகைப்பின் அடுத்தகட்டம் அரங்கேறிக் கொண்டிருந்தது. ‘மலைமக்கள், அறிவின் சிறந்த தொடக்கத்தை உருவாக்கியவர்கள். சமவெளியில் உருவான அரசுகள் அதை அடுத்தகட்டத்துக்கு வளர்த்தெடுத்துள்ளன’ என்றுதான் இதுநாள் வரை கபிலர் நினைத்திருந்தார். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் தொலைந்து போனவையே அபார ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. விண்மீன்களை வைத்து திசை அடையாளங்களையும் நேர அடையாளங் களையும்தான் கணியர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் இங்கோ, விண்மீன்களை வைத்து நிலம் அடையாளப்படுத்தப்படுகிறது. அறிவு வளர்ச்சியின் ஆதிவிதைகள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

கபிலரின் எண்ண ஓட்டங்களை இடைமறித்து பாரி சொன்னான், “முதுவேனிற்காலத்தில் கார்த்திகை விண்மீன் கூட்டத்தோடு கதிரவன் இருப்பதை விண்மீன்களின் சுழல்வட்டக் கணக்கின் அடிப்படையில் முருகன் கண்டறிந்தான் எனச் சொன்னேன் அல்லவா?”

“ஆம்’’ எனத் தலையசைத்தார் கபிலர்.

“அவ்வாறின்றி, வேறொரு முறையில்தான் அதை முருகன் கண்டறிந்தான் எனச் சொல்பவர்களும் உண்டு.”

“அது என்ன முறை?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85c
பாரி சற்றே அமைதிகொண்டு நடந்தான். `சொல்லலாமா?’ என்ற வினாவை எழுப்பி மனதை விடை சொல்ல ஆயத்தம் செய்கிறான் என்பது கபிலருக்குப் புரிந்தது.

பாரி சொன்னான், “இம்மலைத்தொடரில் உள்ள பத்து பேரதிசயங்களில் ஒன்று கருநெல்லி.”

கபிலர், பாரி உச்சரிக்கும் வார்த்தையை மிகக் கவனமாகக் கேட்டார்.

பாரி சொன்னான், “ `அதிசயக்கனியான கருநெல்லியை உண்டால், பகலிலும் விண்மீன் கூட்டத்தைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. முருகனுக்கு நெல்லிக்கனி மிகவும் பிடித்தது. அவன் கருநெல்லி உண்டுதான் பகலில் விண்மீன் நகர்வைப் பார்த்தறிந்தான்’ என்று குலநாகினிகள் கதை சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.’’

கபிலர், திகைப்பிலிருந்து மீள வழியில்லாமல் இருந்தார். எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் ஓடின. மேலேறிய கதிரவனின் ஒளி, காடெங்கும் நிலைகொண்டிருந்த இருளை மஞ்சள் நிற ஆடைகொண்டு போத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. முன்னால் சென்றுகொண்டிருந்த பாரி, பாறை இடுக்கின் வழியே உள்நுழைந்து மறைந்தான்.

‘அதற்குள் உள்ளே மறைந்துவிட்டானே. அவ்வளவு அடர்ந்த இடுக்குப்பாதையா இது!’ என்று நினைத்தபடியே கவனமாகக் கால் தூக்கிவைத்து உள்நுழைந்தார். இருள் சூழந்த பாதை நீண்டிருந்தது.

சற்று தொலைவு நடந்தான். பெரும்பாறை ஒன்று பாதையில் குறுக்கே நிற்பது தெரிந்தது. அதன் பின்புறமிருந்து காலைக் கதிரவனின் ஒளி, தெறித்துச் சிதறிக்கொண்டிருந்தது. `எத்தனை முறை பார்த்தாலும் இருளுக்குள் பாய்ந்து நுழையும் ஒளிக்கதிருக்கு இணை சொல்ல எதுவுமில்லை’ என நினைத்தபடியே பாறையின் அருகில் வந்து முன்புறம் திரும்பினார் கபிலர்.

திருப்பத்தில்தான் எல்லாம் இருந்தன. `இணை சொல்ல முடியாதவை’ என்ற சொல்லின் முழுமையை இயற்கை அவருக்குக் காண்பித்தது. வட்டவடிவ பசுங்குடுவையைப்போல் கண்ணுக்கெதிரே பரந்து விரிந்த புல்வெளி. இரு கைகொண்டு அணைத்துப் பிடித்தபடி சுற்றிக்கிடக்கும் மலைக்குன்றுகள். கதிரவனின் ஒளி பொழியத் தொடங்கும்போது கலையத் தொடங்கிய இணைப் பறவைகளின் ஓசை. காற்றெங்கும் மிதந்த நரந்தம்புல்லின் மணம்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85e
உறைந்து நின்றார் கபிலர். சற்றே விலகி நின்று அவர் முகம் பார்த்து மகிழ்ந்தான் பாரி.

கார்காலத்தின் முதுமழை கொட்டத் தொடங்கியது. இன்னும் சில நாள்களில் அடைமழை தொடங்கும். மழைநீரின் கனம் தாங்காமல் இலையும், இரவின் குளிர் தாங்காமல் மலையும் நடுங்கியபடி இருக்கப்போகின்றன. கபிலருக்கு எலிமயிர்ப் போர்வை நெய்யும் பணி முடியப்போகிறது.

தப்பிச்செல்ல முடியா பேரெலியின் மயிர்தோல்கொண்டு தொல்புலவன்  போத்தப்பட இருக்கிறான். அந்த நாளுக்காகக் காத்திருந்தனர் எல்லோரும். கபிலரின் மனமோ, நரந்தம்புல் மேட்டிலும் கார்த்திகையின் கணக்குகளிலும் மொழியின் புதிர்களிலும் போய் மாட்டி நின்றது. அவற்றின் ஆழம் வசப்படவில்லை. எனவே, அதிலிருந்து மீள முடியவில்லை. நீலன், தனைமயக்கி மூலிகை கொடுத்து கதையை மறக்கவைத்தான். பாரியோ, கதையைச் சொல்லி மீதமுள்ள எல்லாவற்றையும் மறக்கவைத்தான். மறதிக்கும் நினைவுக்கும் நடுவில் பெரும்வேட்டையைத் தன்னந்தனியாக நடத்திக்கொண்டிருந்தார் கபிலர்.

மீளமுடியா அந்த மனநிலையோடுதான் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்தினார். அங்கவையின் வினாக்கள் வழக்கம்போல் அறிதலின் வழியேதான் இருந்தன. மற்றவர்களும் ஆர்வமுடன் பாடம் பயின்றனர். மயிலா புறப்படவேண்டிய நாள் வந்துவிட்டது. அவள் நீலனைப் பார்க்காமல் நீண்டநாள் விலகியிருந்தது இப்போதுதான். ஆனாலும் தனது பெயரையும் நீலனின் பெயரையும் அவள் எழுதக் கற்றிருந்தாள். அது அளவற்ற மகிழ்வை உருவாக்கியிருந்தது. அவனின் ரகசியம் ஒன்று தனக்குள் அடங்கிவிட்டதாக அவள் நினைத்தாள். தனது விரல்களின் வழியே நீளும் கோடுகளுக்குள் அடங்கிய அவனை நினைத்து மகிழ்ந்தாள்.

வேட்டூர் பழையனோடு சேர்ந்து அவள் புறப்படுவதாகத்தான் முடிவுசெய்திருந்தனர். ஆனால், தேக்கன் இன்னும் சில நாள்கள் பழையனை இருக்கச் சொல்லிவிட்டார். அதனால் வீரர்கள் சிலருடன் மயிலா மட்டும் எவ்வியூர்விட்டுப் புறப்பட்டாள். அவளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியின் வழியே கபிலர், நீலனைப் பார்த்துக்கொண்டிருந்தார். குன்றுகளுக்கு இடையில் ஆடும் ஊஞ்சல் அவரின் பார்வைக்குத் தெரிந்தது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சாமப்பூ அரும்புவிடத் தொடங்கியிருந்தது. தேக்கன் புதிய மாணவர்களை அழைத்துக்கொண்டு காடறியப் புறப்படவேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால்தான் சில செய்திகளைப் பேசுவதற்கு வேட்டூர் பழையனை இருக்கச் சொல்லியிருந்தார் தேக்கன்.

தென்திசை தளபதி கூழையன் அனுப்பும் தகவல்கள், பறம்புக்கான ஆபத்து நெருங்குவதைச் சொல்லிக்கொண்டே இருந்தன. கோளூர் சாத்தனின் கைகளை முடியன் வெட்டியதால் சேரகுடிகள் ஒன்றுசேர நாம் வழிவகுத்துவிட்டோம். பாண்டியனையும் சோழனையும்போல தொலைவில் இருப்பவர்கள் அல்ல சேரர்கள். மலைத்தொடரின் அடுத்த குன்றில் அவர்களது காலடி கிடக்கிறது. சேரர்குடி இருவரும் இணைந்து பறம்பு நோக்கி படைகள் வருவதற்கு ஒரு சில குன்றுகளில் பாதை அமைத்துவருகின்றனர். நாம் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டிய நேரம். 

இந்தச் செய்திகள் வந்தபிறகுதான், பேரெலி வேட்டைக்குப் பாரி ஏன் தொடர்ந்து வந்தான் என்பது தெரியவந்தது. பேரெலி அதிகம் இருக்கும் இடங்களை விட்டுவிட்டு மலைகளின் பல திசைவழியாக ஏன் பயணப்பட வைத்தான் என்றும் இப்போதுதான் புரிந்தது. `சேரர்கள் எந்தெந்தக் குன்றுகளின் வழியே நுழைந்து பாதை உருவாக்க முயல்கின்றனர்?’ என்று பாரி சொன்னதாகத் தேக்கன் சொன்னபோது உதிரன் உறைந்துபோனான்.
கழுகின் மூக்கைப்போன்றது பாரியின் கவனிப்பு. கழுகு, வானுச்சியில் பறந்தாலும் நிலத்தில் கிடக்கும் பறவையின் வாடையை எளிதில் நுகர்ந்துவிடும். அதுபோலத்தான் பாரியும். எவ்வியூரில் இருந்தாலும் பறம்பு மலையின் எண்திசையிலும் நிகழும் மாற்றங்களைத் துல்லியமாகக் கவனித்துவந்தான். வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85f

கூழையன் அனுப்பிய செய்தியும் பாரியின் அவதானிப்பும் ஒன்றுபோல இருந்தன. சேரன் ஏறிவர எல்லா வகைகளிலும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

“இச்சூழலில் எவ்வியூரின் ஆசான் தேக்கன், பயிற்சிக்காகப் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காடறியச் செல்ல வேண்டுமா? புதிய ஆசானை அனுப்பினால் என்ன?” என்று சிலர் கேட்டார்கள்.

``அதை முடிவுசெய்யவேண்டியது தேக்கன் தான்’’ என்றான் பாரி.

தேக்கனோ, “அம்முடிவை சாமப்பூவின் அரும்பு துளிர்க்கும் முன் எடுத்திருக்க வேண்டும். எனக்கான வாசனையை அது வழங்கிவிட்டது. நான் அதன் அனுமதியை நுகர்ந்துவிட்டேன். பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காடறியும் எனது பயணத்தை இனி நிறுத்த முடியாது” என்றார்.

பழையனிடம் பகிர்ந்துகொள்ள நிறைய இருந்தன. பறம்பு நாட்டின் மிக மூத்த வீரனென்றால், அது வேட்டூர் பழையன்தான். பறம்பில் உள்ள ஊர்களின் நிலையும் தன்மையும் வீரர்களின் திறனையும் முழுமையும் அறிந்துள்ளவன் பழையன்தான். எனவே, அவனை இருக்கச் சொல்லி நாள்கணக்கில் பேசினான் தேக்கன்.

பழையனின் மனநிலை முற்றிலும் வேறானது. ``திட்டமிடல், முன்தயாரிப்பு இவற்றைக்கொண்டு நிகழ்த்தப்படும் போர்கள் அரச முறையைச் சார்ந்தவை. நாம் ஏன் அதுபோல் சிந்திக்க வேண்டும்? நமது போர்முறை முற்றிலும் வேறானது. அது போர் தொடங்குவதற்கு ஏற்ப வடிவம்கொள்ளக்கூடியது.

போர் என்பது, நிகழும் இடம், தன்மை, சூழல் இவற்றைக்கொண்டு நடத்தப்படுவதுதானே தவிர, வீரர்களைக்கொண்டு மட்டும் நடத்தப்படுவதல்ல. எனவே, அந்தக் கணத்தில் எடுக்கவேண்டிய முடிவை முன்கூட்டி எடுப்பது அறியாமையாகும்” என்றார் பழையன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85g
``பேரரசுகளால் சூழப்பட்டுள்ளோம். நமது பாரம்பர்ய முறைப்படி நாம் போரிடுவோம். ஆனால், அவர்களின் போர் உத்திகளைக் கணித்து அதற்கு ஏற்ப ஆயத்தமாக வேண்டிய தேவையிருக்கிறது” என்று வாதிட்டார் தேக்கன்.

முன்தயாரிப்பின் வழியே போரை அணுகும் முறைக்கு பழையனால் பொருந்த முடியவில்லை. “இப்பணியைக் கூழையனிடம் ஒப்படைத்துவிடு. போர் தொடங்கிய பிறகு எனது பணியை முடிவுசெய்துகொள்ளலாம்” என்றான் பழையன்.

``நீ சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் இடையில் அதிக நாள் இல்லை” என்றான் தேக்கன்.

“இரண்டுக்கும் இடையில் ஒருநாள் இருந்தாலும், நான் ஏன் முன்கூட்டியே ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு ஆற்றலை வீணாக்க வேண்டும்?”

பழையனோடு பேச்சில் மட்டுமன்று, எதிலும் வெல்ல முடியாது எனத் தேக்கனுக்குத் தெரியும். உண்மையில் தேக்கன் நடத்தும் போராட்டம் இந்த விடாப்பிடியான மனநிலையோடுதான். நன்கு திட்டமிட்ட போர்முறையை, எதுவுமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இயற்கையின் பல அமைப்புகள், திட்டமிட்ட ஒருங்கிணைப்பைக் கொண்டு தாக்குதல் தொடுக்கின்றன. இந்த எடுத்துக்காட்டை நாம் சொன்னால், இதற்கு மாற்றான ஓராயிரம் எடுத்துக்காட்டுகளை பழையன் சொல்வான். எனவே, மறுமொழியின்றி அமைதியானான் தேக்கன்.

ஆனால், சூழலில் இந்த அமைதி இல்லை.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 35

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:26 pm

பாண்டரங்கத்தின் பணி முழுமையாக முடிந்தது. மேற்கூரையில் திசைவேழர் சொன்ன குறிப்பின் அடிப்படையிலான ஓவியம் மிகச் சிறப்பாக வரையப்பட்டுவிட்டது. மரச்சாரங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டுப் பார்க்கும்போது முன்பைவிட மிகத் துல்லியமான அளவுகளில் விண்மீன் கூட்டங்கள் ஒளிவீசின. வெள்ளியின் இருப்பிடம் மட்டுமல்ல, வரையப்பட்ட வானத்தில் கோள்கள் அனைத்தின் இருப்பிடங்களும் பொருத்தமாக இருந்தன. அந்துவன், பாண்டரங்கத்தின் எல்லா திசைகளிலும் நின்று மேற்கூரையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். ‘நாம் கவனமாக வேலைசெய்யும்போதுதான், வேலை சிறப்பாக அமையும். ஆனால், நம்மையும் மீறி அதி சிறந்த இடத்தை அடைவது எப்போதாவதுதான் நிகழும். அதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது’.

மனமும் கண்களும் சலிப்படையும்வரை பார்த்தான். `பின் கழுத்துப் பிடித்துக்கொள்ளும்’ என மற்றவர்கள் கூறியபோதும், அவன் அண்ணாந்து பார்த்து மகிழ்வதை நிறுத்தவில்லை. ஊன்றுகோலைத் தூக்கி வீசி ஆசான் ஏற்படுத்திய அவமானத்தைத் துடைக்க மனம் மேலெழுந்து கொண்டிருந்தது.

“ஆசானை அழைத்து வாருங்கள்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88a
பணியாள்கள் விரைந்தனர். தான் செல்லாமல் பணியாள்களை அனுப்பியதிலிருந்தே ஒரு செய்தியை அவன் சொல்ல முயன்றான்.

அறிவுச்செருக்கின் செயல்பாடு இதுவென ஆசானுக்குத் தெரியும். மாணவர்களிடம் அவர் எதிர்பார்ப்பது இதைத்தான். ஆனால், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துவிட்டால், விளைவு அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதன் பிறகு, வாழ்வில் மறக்க முடியாத நாளாக அது மாறும். இதை மாணவர்கள் அறிவர். எனவே, அறிவுச்செருக்கை வெளிக்காட்டி அவரை மகிழ்விக்கும் ஆபத்தைச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள். ஆனால், அந்துவன் துணிந்தான். மேற்கூரையில் பரந்துவிரிந்து கிடந்த வான்வெளி, அவனை ‘துணிந்து நில்’ எனச் சொல்லியது. ‘காலம் கைகூடும் கனவு இது!’ என அவனது மனம் துணிந்தது.
இந்தக் காலம் முழுவதும் தன்னோடு இருந்த தேவாங்குகளுக்கு நன்றி சொல்லும்வகையில் அந்தக் கூண்டுக்கு அருகில் வந்து அவற்றுக்குப் பிடித்த பல்லி முட்டையை உள்ளே உருட்டினான். வழக்கம்போல் சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு இரண்டும் அந்த முட்டையை நோக்கி வந்தன. ஒன்று, அதை எடுத்துக்கொண்டு ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்தது. இன்னொன்று, அவனைப் பாவமாகப் பார்த்தது. அடுத்த முட்டையை உருட்டிவிட்டான். இன்னொன்று அதை எடுத்துச் சென்றது. அதன் மகிழ்ச்சியைக் கவனித்தான். சற்றே மாறுபட்ட ஒன்று, அவன் கண்களில்பட்டது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அடுத்தடுத்த முட்டைகளை உருட்டிவிட்டான். அவை இரண்டும் எடுத்துத் தின்றன. முன்னர் அவன் கண்களில்பட்ட அதே செயல் மீண்டும் பட்டது. இது தற்செயலாக இருக்கும் என நினைத்தான். அடுத்தும் பல்லி முட்டைகளை உருட்டிவிட்டான். மீண்டும் அதுவே நடந்தது. அவன் சற்றே அதிர்ச்சியடைந்தான்.

`அப்படியிருக்காது’ என நினைத்தவன், பல்லி முட்டைகளை உருட்டுவதை நிறுத்திவிட்டு, சிறு கம்பு ஒன்றை எடுத்தான். அவ்வளவு நேரம் முட்டையைத் தின்ற அவற்றைக் குச்சிகொண்டு விரட்டினான். அவை  அஞ்சி உள்ளொடுங்கின. அப்போதும் அவற்றின் செயல் ஒன்றுபோலவே இருந்தது. மீண்டும் அவன் குச்சியை ஓங்கினான். உள்ளே போய் ஒண்டியவை, வேறு இடம் நகராமல் அங்கேயே பதுங்கின. அவன் குச்சியால் சற்றே அடித்து அவற்றைக் கலைத்தான். அவை கத்தியபடி அந்த இடம்விட்டு நகர்ந்து, கூண்டின் இன்னொரு பக்கம் வந்தன. அவன் கண்கள், நம்ப முடியாத ஒரு வியப்பைக் கண்டு கொண்டிருந்தன. ‘நான் காண்பது உண்மைதானா?’ என அவன் தன்னை மீண்டும் மீண்டும் கேட்டபடி அந்தச் சோதனையை நடத்திக்கொண்டே இருந்தான்.

பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்களுக்கு, என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. `மகிழ்ச்சியாக இருந்த இவர், திடீரென அந்த விலங்கை ஏன் இந்தப் பாடுபடுத்துகிறார்?’ எனப் புரியாமல் திகைத்தனர்.
ஆசானை அழைக்கச் சென்ற பணியாளன், `மூன்று நாழிகைக்குப் பிறகு வருவார்’ என்ற செய்தியோடு திரும்பியிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88b
அந்துவனோ, தேவாங்கின் மீதான சோதனையைக் கைவிடுவதாக இல்லை. அடித்தும் அச்சமூட்டியும் அவற்றை ஓடவிட்டுக்கொண்டே இருந்தான்.  ஒருநிலையில் பாண்டரங்கத்தின் வெளிக் கதவையும் மேல்மாடக் கதவுகளையும் பூட்டச் சொல்லிவிட்டு, கூண்டைத் திறக்கச் சொன்னான். பணியாளர்கள், கூண்டைத் திறந்து அவற்றை வெளியே விட்டனர். ஓங்கிய அவனது கம்பைப் பார்த்து அஞ்சி, அவை அரங்கின் எல்லா திசைகளிலும் ஓடின. அவன் அவற்றை விரட்டியபடி இருந்தான். அவற்றின் செய்கை, அவன் எண்ணத்தை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. அவை கத்திக்கொண்டு தூண்களைப் பற்றி ஏற முயற்சித்தன. பிடி நழுவி விழுந்தன. சிறு சிற்பங்களின் மேல் ஏறி மறைய முயன்றன. அவன் விடுவதாக இல்லை. எல்லா திசைகளிலும் அவற்றை விரட்டினான். தன் கண் முன்னால் காண்பது உண்மை என்பதை அவன் முழுமையாக நம்பும்வரை, அவற்றை விரட்டிக் கொண்டே இருந்தான்.

பணியாளர்கள், என்ன நடக்கிறது எனப் புரியாமல் திகைத்துப்போய் நின்றனர். அவை கத்துவதும், பாவமாகப் பார்த்து அலைக்கழிவதும் அவர்களது மனதை உருக்கின. அந்துவனின் மனமோ மகிழ்வில் திளைத்தது. அவற்றின் ஒவ்வொரு துள்ளலிலும் அவன் கண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

‘இத்தனை நாள் இதை எப்படி நான் கவனிக்காமல் இருந்தேன்?’ என்று புலம்பியவாறே “இதைப் பிடித்துக் கூண்டில் அடையுங்கள். நான் போய் ஆசானை உடனடியாக அழைத்துவருகிறேன்” என்று சொல்லி வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88cபுறப்பட்டான்.

திசைவேழரின் தென்திசை மாளிகையின் முன் வந்து இறங்கினான் அந்துவன். வேலையாள்கள், அவன் குதிரையை வாங்கிக்கொண்டனர். உள்ளே நுழைந்தான். தொலைவிலேயே அவன் வருவதைப் பார்த்துவிட்டார் திசைவேழர். ‘அறிவுச்செருக்கு சரிந்துவிட்டது’ என அவரது மனம் சொன்னது. ‘இன்னொரு முறை பாண்டரங்கத்தில் பிழை நிகழ்த்தியிருக்கிறான். நான் சொல்லி அனுப்பிய நேரத்துக்குள் பதற்றமாகி அவனே வந்துள்ளதன் காரணம், வேறு என்னவாக இருக்க முடியும்?’ என்று எண்ணியபடியே அவனை உள்ளே அழைத்தார்.

“உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்தான்.

அவர் எந்தவிதக் காரணமும் கேட்கவில்லை. சற்று நேரத்தில் புறப்பட்டார். அவர் காரணம் கேட்காதது குறித்து, அந்துவன் கவலைகொள்ளவில்லை. அவர் புறப்படும்வரை காத்திருந்து அவரை அழைத்துவந்தான்.
பாண்டரங்கத்துக்குள் இருவரும் நுழைந்தனர். வழக்கம்போல் அவர் மாளிகையின் நடுவில் நின்று, அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தார். அவர் நினைத்ததைவிட மிகச் சிறப்பாக அது வரையப் பட்டிருந்தது. அந்துவனைப் பாராட்டலாம் என நினைத்துத் திரும்பியபோதுதான் கவனித்தார். அவன் அருகில் இல்லை. சற்று தொலைவில் தூண்களுக்குப் பக்கத்தில் இருந்த தேவாங்குகளின் கூண்டுக்கு அருகில் நின்றிருந்தான்.

“என்ன அங்கே நிற்கிறாய்?”

“நான் உங்களைக் காண வருமாறு அழைத்தது,  இந்த விலங்கைப் பார்க்கத்தான்.”

“என்ன இது?”

`இதன் பெயர் தேவாங்கு’ எனச் சொல்ல வாயெடுத்தவன், “இயற்கையின் அதிசயம்” என்றான்.

`என்ன சொல்கிறான் இவன்?’ என்று சிந்தித்தபடியே கூண்டருகில் வந்து, உற்றுப்பார்த்தார்.  அவை உள்ளொடுங்கி நின்றன.

“இது ஒரு வானியல் விலங்கு” என்று சொல்லியபடி, கையில் இருந்த குச்சியை அவரின் கையில் கொடுத்தான்.

அவர் அதைக்கொண்டு கூண்டுக்குள் இருந்தவற்றைச் சற்றே தொந்தரவு செய்தார். அவை இங்கும் அங்குமாக நடந்து அலைமோதின. அவற்றின் கண்கள், உடல்வாகு, காது விடைக்கும் தன்மை என எல்லாவற்றையும் உற்றுக் கவனித்தபடியே இருந்தார். அவருக்குப் புதிதாக எந்த ஒன்றும் தெரியவில்லை.

“என்ன புதிதாய்க் கண்டாய்?”

“உங்களின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லையா?”

அவன் கேட்பது திசைவேழருக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. வழக்கமாக, மாணவர்களிடம் அவர் கைக்கொள்ளும் முறை இது. `என் சொற்கள், என்னிடமே திரும்ப வருகின்றன’ என்று சிந்தித்தபடியே அந்த விலங்கை உற்றுப்பார்த்தார். மாறுபாடுகள் எதுவும் கண்ணில் படவில்லை. சற்றே திரும்பி அந்துவனைப் பார்த்தார்.

அந்துவன் சொன்னான், “அவை எந்தத் திசைநோக்கி உட்காருகின்றன பாருங்கள்.”

திசைவேழர் அவற்றைக் கூர்ந்து கவனித்தார். அவை வடக்கு திசை நோக்கி உட்கார்ந்திருந்தன. தன் கையில் இருந்த குச்சியால் அவற்றைச் சீண்டினார். அவை எழுந்து இன்னொரு பக்கம் சென்று வடக்கு திசை நோக்கி உட்கார்ந்தன. மீண்டும் விரட்டினார். மீண்டும் அவை அவ்வாறே உட்கார்ந்தன. கூண்டைத் திறக்கச் சொல்லி வெளியே விரட்டினார். பாண்டரங்கம் முழுவதும் அவை சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால், எப்போதெல்லாம் தரையில் உட்கார்ந்தனவோ, அப்போ தெல்லாம் அவை வடக்கு திசை நோக்கியே உட்கார்ந்தன.

திசைவேழர் அதிர்ந்துபோனார். ``நான் காண்பது உண்மையா?” என்றார்.

``உண்மை ஆசானே! பலமுறை பரிசோதித்துவிட்டேன். இந்த விலங்கு இயற்கையின் அதிசய ஆற்றல் ஒன்றை தன்னகத்தே கொண்டுள்ளது” என்றான் அந்துவன்.

“என் கண்களை நம்ப முடியவில்லையே!’’ என்று கூறியபடி அவற்றின் பின்னால் ஓடினார். அவை இயல்பாக உட்காருவதைக் கவனித்தார். விரட்டினால் பதற்றமடைந்து உட்காருவதைக் கவனித்தார். எப்போது உட்கார்ந்தாலும் அவை வடக்கு திசை நோக்கியே உட்கார்ந்தன. அவை உட்காரும்போதெல்லாம் அவரது மனம் வியப்பிலும் மகிழ்விலும் துள்ளியது. “என் கண்கள் பொய்யேதும் சொல்லவில்லையே!” என்று அந்துவனைப் பார்த்துக் கேட்டார்.

அந்துவன் சிரித்தான்.

“நீ என் தலை மாணாக்கன் என்பதை மீண்டும் மெய்பித்துவிட்டாய்” என்று சொல்லியபடி வாரி அணைத்தார் அந்துவனை. அவரது சொல், வரையப்பட்ட வான் மண்டலம் முழுவதும் எதிரொலித்தது.
இளமருதனுக்கு, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ``ஆலோசனை மாடத்துக்கு என்னை அழைத்துச்சென்று தேவாங்கைப் பற்றி இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்க வேண்டும்? நான் செய்த பிழை என்ன? பாண்டரங்கத்திலிருந்து தேவாங்கின் கூண்டை நான் வெளியே எடுத்தபோது அந்துவன்தானே `உள்ளேயே இருக்கட்டும்’ எனச் சொன்னார். இப்போது அதில் என்ன பிரச்னை?” என்று மாடத்தின் வெளியே நின்று புலம்பினான். சற்று நேரம் கழித்துத்தான் செய்தி தெரிந்தது,  `வெங்கல்நாட்டு சிறுகுடி மன்னன் மையூர்க்கிழாரை அழைத்துவரச் சொல்லி அரண்மனையிலிருந்து ஆள் அனுப்பட்டுள்ளது’ என்று. இளமருதன் இன்னும் பதறிப்போனான். தன்னைப் பெரிய இடரில் யாரோ மாட்டிவிட்டுவிட்டார்கள் என அஞ்சினான். தேவாங்கின் முகம் நினைவுக்குவந்தது. அதனுடைய பயம் தன்னிடம் ஒட்டிக்கொண்டதோ எனத் தோன்றியது.
ஆலோசனைக் கூடத்துக்குள் பேரரசர், சூல்கடல் முதுவன், திசைவேழர், இளவரசர்,  தலைமை அமைச்சன் முசுகுந்தர், அந்துவன் ஆகியோர் இருந்தனர். மனம் நம்ப மறுக்கிற ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசியும் கண்களால் பார்த்தும் நம்பத் துணிந்தனர்.

பொன்பூச்சுக்கொண்ட உள்ளரங்கில் பேரரசர் அமரும் இடம்தனில் மிதித்து, நின்று, உட்கார்ந்து கடந்தது தேவாங்கு. அதை ஓடவிட்டும் உட்காரவிட்டும் பார்த்துக்கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் முயன்றனர். அதைவிட்டு பார்வையை விலக்காமலேயே முசுகுந்தர் கேட்டார் “இந்த விலங்கு வேறு இடத்திலும் இருக்குமல்லவா?”

திசைவேழர் சொன்னார், “பொதியமலையில் உண்டு. நானே பார்த்திருக்கிறேன். ஆனால், குறிப்பிட்ட திசை நோக்கி உட்காரும் தன்மை அதற்கு இல்லை.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88d
“இதற்கு மட்டும் இருப்பதற்குக் காரணம்?’’

“இது ஒரு மரத்து விலங்கு. குறிப்பிட்ட மரத்தில் மட்டுமே இந்த விலங்கு கூட்டமாகத் தங்கி உயிர்வாழும். பறம்புமலையில் இந்த விலங்கு இருந்த அந்த மரத்தின் அமைப்பு இந்தப் பழக்கம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டும். பல நூறு தலைமுறைகளாக அந்த இடம் இருப்பதால், இந்தப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும்” திசைவேழரின் விவரிப்பு, மேலும் வியப்பைக் கூட்டியது.

“அந்த மரத்தில் எத்தனை தேவாங்குகள் இருக்கின்றன என்ற செய்தி ஏதேனும் உண்டா?”

“திருமணத்துக்கு வந்துள்ள பாணர்களிடம் விசாரித்ததில் பலநூறு தேவாங்குகள் அந்த மரத்தில் உண்டு” என்று அந்துவன் சொன்னான்.

தேவாங்கையும் அதன் எண்ணிக்கையைப் பற்றிய செய்தியையும் அறிந்ததிலிருந்து பொதியவெற்பனுக்கு மகிழ்வு தாங்க முடியாத அளவு இருந்தது. தன் திருமணத்தை முன்னிட்டு நடந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சியாக இப்படி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவன் மனம் கூத்தாடியது.

சூழ்கடல் முதுவனுக்கோ அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் திக்குமுக்காடச் செய்தன. தான் காண்பது உண்மையா என்பதை நம்ப, அவர்தான் அதிக நேரம் எடுத்துக்கொண்டார். திசைவேழர் போன்ற பெரும்வானியல் அறிஞன் சொல்லும்போது ஐயப்படுவது அழகன்று. ஆனாலும் இப்படியொரு செயலை மனம் எளிதில் நம்பிவிடுவதில்லை.

அதன் முழு நடவடிக்கையையும் பார்த்துவிட்டு, சூழ்கடல் முதுவன் ஒற்றைவரியில் சொன்னான், “இனி, கடல் வணிகத்தை நாம் ஆளலாம்.”

இந்தச் சொல்லைச் சொன்னதும், பேரரசர் அவரைக் கட்டி அணைத்தார்.  ``முன்னர் நடந்த கூட்டங்களில் கடல் கண்டு அஞ்சிவந்த தங்களின் சொற்கள், இப்போது முற்றிலும் மாறிவிட்டன. இந்தத் திருமணம் பல புதிய வாய்ப்புகளை நமக்கு உருவாக்கும் என நான் உறுதியாக நம்பினேன். ஆனால், அந்த வாய்ப்பு இவ்வளவு சிறந்ததாக இருக்கப்போகிறது  என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் பேரரசர்.

சூழ்கடல் முதுவன் சொன்னான், “என் வாழ்வில் இன்று அடைந்துள்ள வியப்பும் மகிழ்வும் கலந்த ஓர் உணர்வை இதுவரை அடைந்ததில்லை. திசை அறிய முடியாமல் எவ்வளவு இழப்புகளை நாங்கள் கண்டுள்ளோம். எத்தனை மனிதர்கள், கப்பல்கள், பொருள்களை எல்லாம் கடல் கொண்டுபோனது. திசையைத் தவறவிட்டதால்தான் என் இரண்டு மகன்களையும் பறிகொடுத்தேன். கடல் பயணத்தில் திசையறிதல் என்பது, கடலை வெல்வதற்கு இணையானது. இது தேவாங்கன்று; உண்மையில் இதுதான் தேவவாக்கு விலங்கு” என்று சொல்லி, அதைத் தொட்டுத் தூக்கிக் கொஞ்சினார்.

இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. வெளியே உட்கார்ந்திருந்த இளமருதனுக்கு நேரம் ஆக ஆக பதற்றம் கூடிக்கொண்டேபோனது. சிறிது நேரத்தில் செவியன் அங்கு வந்து சேர்ந்தான். காலையில் திசைவேழர் இந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு, முதலில் பேரரசரிடம் சொல்லியுள்ளனர். பிறகு, இளவரசனையும் முசுகுந்தரையும் அழைத்துக் காண்பித்திருக்கின்றனர். அதன் பிறகுதான் சூழ்கடல் முதுவனுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இடைப் பட்ட நேரத்தில் இது தொடர்பானவர்களைத் தனித்தனியே அழைத்து விசாரித்துள்ளனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88e
செவியனும் விசாரிக்கப்பட்டான். இந்த விலங்கைப் பற்றி அவனுக்குத் தெரிந்ததை யெல்லாம் அவன் சொல்லியுள்ளான். அதன் பிறகுதான் மையூர்கிழாரை அழைத்துவர ஆள் அனுப்பப்பட்டது. இவை எல்லாம் ஏன் நடக்கின்றன என்பது அவனுக்கு விளங்கவில்லை. `இளமருதனைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டுப் போகலாம்’ என்று வந்துள்ளான். இளமருதனோ பதற்றத்தில் நடுங்கிப் போயிருந்தான். “நான் அந்துவனிடம் ஒப்படைத்துவிட்டுப் போனதோடு சரி. அதற்குப் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை” என்றான்.

செவியனுக்கும் மிகவும் குழப்பமாக இருந்தது. “அரண்மனை நிர்வாகத்தை நன்கு அறிந்தவர்தானே நீங்கள். உங்களுக்கும் இதற்கான காரணம் புரியவில்லையா?” எனக் கேட்டான் இளமருதன்.
``என்னால் எதுவொன்றையும் தொடர்பு படுத்தவே முடியவில்லை. ஒரே ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஆனால், அதற்கு இவ்வளவு நாள் கழித்து ஏன் விசாரிக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்றான்.

“என்ன செய்தி அது?”

``நாம் அன்று நள்ளிரவுக் கோட்டைக்குள் நுழைந்தோமல்லவா, அப்போது கதவைத் திறந்தவிட்ட யானை மதம்பிடித்து கோட்டைத் தளபதியைக் கொன்றுவிட்டது. இந்தச் செய்தி வெளியே யாருக்கும் தெரியாது. திருமணக் காலத்தில் தலைநகருக்குள் நிகழ்ந்த மரணம் என்பதால், வெளியே தெரியாமல் எல்லா வற்றையும் முடித்துவிட்டார்கள். அது தொடர்பாகக் கோட்டைவாசலில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அப்போது ஒருவன் மட்டும் சொல்லியிருக்கிறான், ‘பார்க்கவே அருவருப்பாக இருந்த ஒரு விலங்கை உள்ளே எடுத்துவந்தனர். அதைக் கண்ட பிறகுதான் அந்த யானை மிரட்சிக்குள்ளானது’ என்று.”

இளமருதன் நடுங்கிப்போனான்.

செவியன் சொன்னான், “அப்போது நடந்ததற்கு, இப்போது ஏன் விடாமல் விசாரிக்கின்றனர் என்பதுதான் புரியவில்லை.”

இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தனர். நீண்ட நேரம் கழித்து, சக்கரவாகப் பறவையைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் பொற்பல்லக்கு ஒன்றை, பணியாளர்கள் மாளிகைக்குள் தூக்கிச் சென்றனர். இதை ஏன் தூக்கிச் செல்கின்றனர் என்பது தெரியாமல் விழித்த செவியன், தனக்கு நன்கு தெரிந்த அரண்மனைப் பணியாளனிடம் தனியே போய் விசாரித்தான். “ஏதோ புதிய விலங்கொன்று வந்திருக்கிறதாம். அதை வைக்க” என்றான் அவன்.

அதிர்ச்சியானார்கள் இரண்டு பேரும். ``அன்று சக்கரவாகப் பறவையின் கூண்டு வைக்கப்படும் மேடையின் மீது இதை வைத்ததற்குத்தான் அந்துவன் அவ்வளவு கோபப்பட்டான். `தூக்கி வீசிவிடுங்கள்’ என்றான். இன்றோ சக்கரவாகப் பறவை கொண்டுவரப்பட்டப் பொற்பல்லக்கை இதற்குக் கொண்டுபோகின்றனர். என்ன நடக்கிறது?”

செவியன் சொன்னான், “இளமருதா, இது நீ அச்சம்கொள்ளவேண்டிய  நிகழ்வன்று. வேறு ஏதோ முக்கியமானதொரு நிகழ்வு.”

அப்போதுதான் இளமருதனுக்குத் தோன்றியது, ‘பாரிக்கு தேவவாக்குச் சொல்லும் விலங்கு. இதன் சிறப்பைச் சொல்லி நாம் அல்லவா பேரரசரிடம் பாராட்டைப்பெற வேண்டும் என்று இருந்தோம். இப்போது யாரோ உள்ளே புகுந்து நாம் அடையவேண்டிய நற்பெயரை அவர்கள் அடையப்பார்க்கின்றனர். இதை விடக் கூடாது.அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம்.’வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88f

“இந்தத் திருமணத்துக்கு எல்லோரும் வந்திருக்கின்றனர். சேரனுக்கும் சோழனுக்கும் செய்தி சொல்லும் எண்ணற்றோர் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். அதேபோல யவனர்களின் பெரும்தளபதிகள் இங்கு வந்துள்ளனர். எனவே, இதைப் பற்றிய செய்தி எதுவும் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார் முசுகுந்தர்.

“சரி, அந்த விலங்கை, பறம்பு மலையிலிருந்து கொண்டுவர வழி என்ன?” எனக் கேட்டான் பொதியவெற்பன்.

இவ்வளவு நேரம் அளவற்ற மகிழ்சியில் நடந்துகொண்டிருந்த ஓர் உரையாடல் சற்றே இறுக்கமாக மாறத் தொடங்கியது.

``நாம் ஒரு குழுவை அனுப்பி பாரியிடம் பேசி, அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார் சூழ்கடல் முதுவன்.

“வணிகப் பேச்சுக்காகப் போன கோளூர் சாத்தனின் கதை, உங்களுக்கு தெரியாதா?” எனக் கேட்டான் பொதியவெற்பன்.

“கேள்விப்பட்டேன். ஆனால், அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டல்லவா? இது மிகவும் வியத்தகுத்தன்மைகொண்ட விலங்கு. கடல் பயணத்தில் இது அபாரமான ஆற்றலைத் தரவல்லது. நமது வணிக வலிமையை இது பல மடங்கு உயர்த்தக்கூடியது. இதை எடுத்துச்சொல்லி, `இதற்கு ஈடாக நல்லதொரு பரிமாற்றத்துக்கு  பாண்டியநாடு தயாராக இருக்கிறது’ எனச் சொன்னால், பாரி ஏற்பான் என்றே நினைக்கிறேன்” என்றார் சூழ்கடல் முதுவன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P88g
“பறம்புநாட்டின் மீது ஓரளவு நெருக்கமாக இருந்தவர்கள் குட நாட்டினர்தான். ஆனால், அவர்களின் அமைச்சகன் வணிகம் பேசப்போனதற்கே கைகளை வெட்டி அனுப்பி யுள்ளான். பாண்டியநாட்டுத் தூதுவர்கள் போனால் உள்ளேயே அனுமதிக்க மாட்டான். அதை மீறி உள்ளே போனால், அவர்கள் திரும்பி வர மாட்டார்கள்.”

“அப்படியென்றால் இதற்கு என்ன வழி?” எனக் கேட்டார் சூழ்கடல் முதுவன்.

“தளபதி கருங்கைவாணனை வரச்சொல்லி உத்தரவிடுங்கள்” எனப் பேரரசரை வேண்டினான் பொதியவெற்பன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்..
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 36

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:41 pm

தேவாங்கைக் கொண்டுவருதலுக்கான பேச்சுகள் அனைத்தும் பறம்பின்மீது படையெடுப்பதைப் பற்றிய பேச்சாகவே முடிகின்றன. அதுவன்றி வேறுவழிகளைப்பற்றி அக்கறையோடு விவாதித்தனர் முசுகுந்தரும், சூல்கடல் முதுவனும். அதே கருத்துதான் திசைவேழருக்கும். ஆனால், இவர்களால் மாற்றுவழியைச் சொல்ல முடியவில்லை. எனவே, எல்லா உரையாடல்களும் இயல்பாகக் கருங்கைவாணனிடம் போய் முடிந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83a
கருங்கைவாணனும் பொதியவெற்பனும் குரல் உயர்த்திப் பேசுவதற்கான வாய்ப்பை இவை வழங்கின.

“பாரி இவ்விலங்கை வைத்து என்ன செய்யப்போகிறான்? நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடையிலிருந்து பழம் பொறுக்கத்தான் பயன்படுத்துவான் என்றால், அது எவ்வளவு பெரிய அறியாமை. நாம் அவனிடம் எடுத்துச் சொல்லலாம். இவ்விலங்கின் வலிமை, கடலில்தான் இருக்கிறது. கடற்பயணத்தில் காற்றை வெல்லவும் கரையைச் சொல்லவும் ஆற்றல்கொண்ட ஒன்றை அதற்குரிய இடத்தில் பயன்படுத்துதலே முறை, இதனை உரியவர் மூலம் பாரியிடம் சொல்லவைப்போம்” என்று வாதிட்டார் முசுகுந்தர்.

“உரியவர் என்றால் யார்?”

“வழக்கம்போல அரசு அமைச்சர்களை அனுப்பாமல், பாரி பெரிதும் மதிக்கிற மனிதர்களை அனுப்பிவைப்போம்.”

“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?”

“கபிலர் போன்ற பெரும்புலவர்களை அனுப்பிப் பேசச்சொல்லலாம் என்கிறேன்.”

“பெரும்புலவர் கபிலர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. திருமணத்துக்கே இன்னும் வந்து சேரவில்லையே. அவரை எங்கே போய்த்தேடுவது?”

“அது ஒன்றும் கடினமான செயல் அல்ல; நாம் நினைத்தால், அவரைக் கண்டடைந்துவிடலாம்.”

“ஆனால், அதற்கு மாதக்கணக்கில் ஆகும். அதுவரைப் பொறுத்திருக்க முடியுமா?”

பேச்சின் போக்கு பொதியவெற்பனுக்குப் பிடிக்கவில்லை.  உரையாடல்களைப் பெரும்பாலான நேரங்களில் உணர்வுகளே முடிவுசெய்கின்றன. பொதியவெற்பன் உணர்வின் கொந்தளிப்பில் இருந்தான். பொதுவாகத் திருமணக் காலங்களில் போர்தொடுத்தல் விரும்பத்தக்கதல்ல. ஆனால், இப்பொழுது உள்ள சூழல் இத்திருமணமே போரின் வாசலை வேகமாக திறந்துவிடுவதாக இருக்கிறது.

பேரரசர் குலசேகரப்பாண்டியனின் ஆற்றலே, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எவ்வளவு வலியுறுத்திச் சொன்னாலும், அதன் உள்ளுண்மையை  மட்டுமே கண்டுணரும் அறிவுதான். அதனால், பொதியவெற்பன் எவ்வளவு குரல்கொடுத்தும் அவர் ஏற்றுக்கொள்வதற்கானச் செய்திகள் கிடைக்காமலே இருந்தன.

பொதியவெற்பன் சொன்னான், “படைகளைப் பெருக்குதல், பிறவேந்தர்களை திறைசெலுத்தச் செய்தல், பகைவரை அழித்தல், நிலப்பகுதியை மேன்மேலும் அதிகப்படுத்துதல், குடிகளை நன்கு காத்தல் இவைகளே அரச நியதி. இந்நியதியை நிலைநாட்டியே நமது முன்னோர்கள் இப்பேரரசைக் கட்டியெழுப்பினர். நாம் அவ்வழிச் செல்லுதலே முறை.”

பொதியவெற்பன் ஒருவகையில் பேரரசரை சீண்டும் வேலையைத் தொடங்குகிறான் எனத் தலைமை அமைச்சருக்குப் புரிந்தது. ஆனால், பேரரசர் எடுக்கவேண்டிய முடிவில் தெளிவாக இருப்பார் என்று யாவருக்கும் தெரியும்.

அவர் உரையாடலின் தன்மையைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். திருமணவிழாக் கொண்டாட்டம்  பெருகியபடி இருந்தது. ‘மணவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மலரணிதல் சடங்கு இன்னும் சில  நாழிகைகளில் நடக்க இருக்கிறது. நமது மனநிலையை வேறு ஒன்று ஆட்சி செய்கிறது. இதுவோர் அரிய வாய்ப்பு. கடல் வணிகத்தில் பிற பேரரசுகளை வெல்லுவது மட்டுமல்ல, யவனர்களையே நம்மைக்கண்டு மிரளச்செய்யலாம். கிழக்குக் கடலையும் மேற்குக்கடலையும் நமது கப்பல்கள் ஆளும். அது நமது அரசியல் வலிமையை மேலும் பலமடங்கு அதிகப்படுத்தும். இதனைப் பிறர் அறியாமல் செய்யும்முறையே சிறந்தது. போர்தொடுத்தல் இக்காரணத்தை வெளிப் படுத்தும். அதன் இறுதி அழிவில் அவ்விலங்கினங்களேகூட அழிந்துவிடும் ஆபத்தும் உண்டு. எனவே, சற்று நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யவேண்டும்’ என்று நினைத்தார்.

வெங்கல் நாட்டு சிறுகுடி மன்னன் மையூர்கிழார் வரும்வரை முடிவெடுப்பதைத் தள்ளிப்போட்டார்.

றுநாட்களுக்குப் பின் மையூர்கிழார் வந்து சேர்ந்தார். மறுநாள் காலைச்  சிற்றரங்கிற்கு அவர் அழைத்துவரப்பட்டார். கையில் காராளி செய்த காமன் விளக்கோடு வந்தார். பேரரசரைப் பார்த்ததும் அதனை அவரிடம் கொடுத்து அதன் சிறப்பைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார்.

மலரணியும் நிகழ்வுக்குப் புறப்படத் தயாராயிருந்த பேரரசருக்கு மையூர்கிழார் வந்துள்ள செய்தி சொல்லப்பட்டது. உடனே சந்திக்க ஏற்பாடானது. அவர் அளித்த காமன்விளக்கைப் பெற்றுக்கொண்டார். அதன் சிறப்பை விளக்கிச்சொல்வதற்கான சூழல் வாய்க்கவில்லை. பாண்டரங்கத்தில் வைக்கவே தனிக்கவனம் செலுத்திச் செய்தது என்று மட்டுமே சொல்லமுடிந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83b
கருங்கைவாணன் நேரடியாகப் பேச்சைத் தொடங்கினான். பறம்பின் மீது போர் தொடுப்பது பற்றிய வினாக்கள் அவரின் முன் வைக்கப்பட்டன.

முற்றிலும் எதிர்பாராத கேள்வியை எதிர் கொண்டு திகைத்துப்போனார். மணவிழாவுக்குத் தான் முன்கூட்டியே அழைக்கப்பட்டுள்ளோம் என நினைத்துப் பெருமகிழ்வோடு வந்த அவருக்கு இக்கேள்வி பெருங்கலக்கத்தை உருவாக்கியது. பாண்டிய நாட்டின் கடைசி எல்லை வெங்கல் நாடு. அதனை அடுத்து பச்சைமலைத்தொடர் தொடங்குகிறது. எனவே இப்போரில் வெங்கல்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும். ஆனால், இவ்வளவு அவசரமாக திருமணக்காலத்தில் போர்புரிதல் பற்றிப் பேசவேண்டிய தேவை என்ன என்பது அவருக்கு விளங்கவில்லை.

அவர் அதிர்ச்சியடைவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே, மற்றவர்கள் அவரின் அதிர்ச்சியைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. பேரரசரின் முன் நடக்கும் கலந்துரையாடல்களில் வினா எழுப்புவதற்கான இடமில்லை. தன்னை நோக்கி எழுப்பப்படும் வினாவிற்கான விடையைப் பணிவோடு முன்வைக்க மட்டுமே அனுமதியுண்டு.

மையூர்கிழாருக்குச் சூழல் பிடிபடவே நேரமானது. போரின் தேவை பற்றித் தெரிந்துகொள்வது நமது வேலையல்ல, போரின் தன்மை பற்றி தனது அறிவுக்குப்பட்டதைச் சொல்லிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்.
தளபதி கருங்கைவாணன் கேட்டான், “பறம்பு நாட்டில் மொத்தம் எத்தனை ஊர்கள் உள்ளன?”

“நானூறுக்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

``மலையில் அமைந்துள்ள ஊரின் பரப்பும் மக்களின் எண்ணிக்கையும் மிகக்குறுகிய அளவுதானே இருக்கும்.’’

“ஆம்” என்றார் மையூர்கிழார்.

“ஆண், பெண், குழந்தைகள் என எல்லாம் சேர்த்து பறம்புநாட்டில் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”

‘இவ்வினாவிற்கு எப்படி விடை சொல்லமுடியும். பறம்பு நாட்டின் ஓர் ஊரைக்கூட நான் கண்களால் பார்த்ததில்லை. ஒருசில மனிதர்களை மட்டுமே பார்த்துள்ளேன். பின் எப்படி இதற்கு விடை சொல்வது?’ என்று தயங்கிக்கொண்டிருக்கையில் கருங்கைவாணன் சொன்னான். “பாண்டியப் பேரரசின் நிலைப்படையின் எண்ணிக்கையில் பாதிகூட பறம்புநாட்டு மக்களின் எண்ணிக்கை இருக்காது.”

தளபதி சொல்லும் கணக்கு சரியாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஏனென்றால், பாண்டிய நாட்டு நிலைப்படையின் வலிமை அப்படி. இந்தக் கணக்குச் சொல்லப்படுவதற்கான காரணம் எல்லாரும் அறிந்ததே. ஆனால், போர் என்பது எண்ணிக்கையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதைப் பேரரசர் அறிவார். எனவேதான் தளபதியின் சொல்லைவிட மையூர்கிழாரின் சொல்லை அவர் மிகக்கூர்மையாகக் கவனித்து வந்தார்.
மிக உறுதியாக முன்வைக்கப்படும் தளபதியின் வார்த்தையை எதிர்கொள்ளமுடியாமல் அமைதிகாத்தது அவை. தலைமை அமைச்சர் முசுகுந்தர் என்ன சொல்லப்போகிறார் என்று மற்றவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்குமேல் போர் அற்ற ஒரு பேச்சுக்கான இடம் அங்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததனால் அமைதி நீடிக்கவே செய்தது.

தளபதியிடமிருந்த உறுதியும் நம்பிக்கையும் பொதியவெற்பனின் முகத்தில் மகிழ்வாய் எதிரொலித்தது. மற்றவர்களும் அதனைக் கவனித்தபடி இருந்தனர். இந்நிலையில் “நீ சொல்ல வருவதென்ன?” என்று மையூர்கிழாரைப் பார்த்து பேரரசர் கேட்டார்.

மையூர்கிழாரின் முகக்குறிப்பறிந்து பேரரசர் கேட்கிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், தலைதாழ்த்தி நின்றிருந்த மையூர்கிழாருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஆனால், தான் எதையோ சொல்லவேண்டுமென்று பேரரசர் விரும்புகிறார் என்பது மட்டும் புரிந்தது.

சின்னச் செருமலோடு பேசத்தொடங்கினார் மையூர்கிழார். ``நான் நேற்று வந்ததில் இருந்து பலவற்றையும் தெரிந்துகொண்டேன். என் மகன் இளமருதன் சற்றே பதற்றத்தில் இருந்தான். அழைத்துவந்த செவியனிடமும் விசாரித்தேன். ஆளுக்கு ஒன்றாய்ச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னதற்கும் உள்ளே நடக்கும் நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதலில் தோன்றியது. இப்பொழுதோ தொடர்பு இருக்குமெனத் தோன்றுகிறது.”

மையூர்கிழார் சொல்வது சற்றே குழப்பமாய் இருந்தது.

“நீ எதைச்சொல்ல வருகிறாய்?” எனக்கேட்டார் முசுகுந்தர்.

“மதங்கொண்ட யானையை நீங்கள் கையாண்ட முறையை” என்றார் மையூர்கிழார்.

அதிர்ந்துபோனார் முசுகுந்தர். `பேரரசருக்குத் தெரியாமல் நடந்த ஒன்றை இப்படி அவையில் போட்டு உடைத்துவிட்டானே?’

“எந்த மதயானை? என்ன நடந்தது?” வியப்புற்ற குரலில் இருந்தது பேரரசரின் கேள்வி.

முசுகுந்தர் நடந்ததை விளக்கிச் சொன்னார். “திருமணக்காலத்தில் இப்படியொரு தீய நிகழ்வு தங்களுக்குத் தெரியவேண்டாம் என்பதால், இதனை சற்று மறைவாக விசாரித்து முடித்தோம்” என்றார்.

“எனக்குத் தெரியாது என்று எப்படி நீ நம்பினாய்?” எனக் கேட்டார் பேரரசர்.

“பேரரசருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், இது ஒற்றர்களின் மூலம் மெல்லிய குரலில் உங்கள் காதுகளில் பட்டும்படாமலும் விழவேண்டிய செய்தி என்று நான் நினைத்தேன். அதனால்தான் நான் உங்களிடம் தெரிவிக்கவில்லை.”

முசுகுந்தரின் விடை பேரரசருக்கும் அவருக்குமிருந்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தியது. மற்றவர்கள் வியப்படைந்தனர்.

இதனை நினைவுபடுத்தியதன் மூலம் மையூர்கிழார் சொல்லவரும் செய்தி என்ன என்பதுதான் முசுகுந்தருக்குப் பிடிபடாமல் இருந்தது.

மையூர்கிழார் கேட்டார், “எத்தனை வீரர்கள்கொண்டு அந்த மதயானையை மறிக்கச்செய்தீர்கள்?”

“வீரர்கள் எண்ணற்றோர் முன்னும் பின்னுமாக ஆயுதங்களோடு சென்றனர். ஆனால், யாராலும் நெருங்கமுடியவில்லை. அல்லங்கீரன் யானைகளின் குணங்களைக் கண்டறிவதில் தேர்ந்தவன். அவன்தான் இதற்கெனவே பயிற்சி பெற்ற நான்கு யானைகளைக்கொண்டு மோதி அதனை வீழ்த்தினான்” என்றார் முசுகுந்தர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83c
பேரரசரின் காதுகளுக்கு எது போகக்கூடாது என நினைத்தோமோ, அந்தச் செய்தியைத் தானே சொல்லவேண்டியதாகிவிட்டதே என்று மனம் கூசினார். யானையைக் குத்திக்கொல்வதென்பது கொடும்நிகழ்வு. அது மணவிழாக்காலத்தில் நடந்ததென்பது பெரும் இக்கட்டை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், முசுகுந்தர் அந்நிகழ்வை விளக்கிக்கொண்டிருந்த இந்தக் கணத்தில் எல்லோரின் எண்ணமும் இதனைவிடக் கொடும்செயல் அரங்கேறும் போரின் மீதுதான் இருந்ததே தவிர, மணவிழாவின் மீது இல்லை.

மையூர்கிழார் சொன்னார் “எங்களின் வெங்கல் நாட்டில் நடந்த நிகழ்வொன்று. அப்பொழுது நான் இளைஞனாக இருந்தேன். எனது தந்தைதான் ஆட்சி நடத்தினார். நாட்டின் தலைநகர் இப்பொழுது இருக்கும் இடத்தில் கிடையாது. பச்சைமலையின் அடிவாரத்தில் இருந்தது. ஓர் அதிகாலையில் அரண்மனையின் பக்கத்திலிருந்த சித்தூரிலிருந்து பெரும்கூச்சல்  கேட்டது. என்ன என்று பார்க்கப்போன வீரர்கள் பதறியடித்து ஓடிவந்தனர். மதயானை ஒன்று ஊருக்குள் புகுந்துவிட்டது. கட்டடங்களை முட்டிச்சாய்க்கவும் மரங்களைப் பிடுங்கி எறியவுமாக இருக்கிறது என்றனர்.

தந்தை உடனே வீரர்களை அழைத்துக்கொண்டு அவ்விடம் சென்றார். நானும் உடன் சென்றேன். என் வாழ்வில் மறக்கமுடியாத நாளது. அந்த யானையின் உயரமும் ஆவேசமும் இன்னும் என் மனக்கண்ணைவிட்டு அகலவில்லை. அவ்வளவு ஆத்திரம்கொண்ட யானையை இன்றுவரை நான் பார்த்ததில்லை. மதயானை முட்டி மரம் சாய்வதைத்தான் நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் முட்டிய வேகத்தில் பெரும்மரங்கள்கூட நொறுங்கிச் சரிந்ததை அன்றுதான் பார்த்தேன்.

துதிக்கையில் மண்ணள்ளி வீசிக்கொண்டு அது திடுதிடுவென வந்த வேகம் இன்னும் எனக்குள் பேரச்சத்தை உண்டு பண்ணுகிறது. பெரும்பெரும் ஈட்டிகளோடும் வில் அம்புகளோடும் வீரர்களைத் துணிந்து முன்னகரச் சொன்னார் தந்தை. ஓசையெழுப்பும் மத்தளங்கள் இசைக்கப்பட்டன. ஆனால், அவ்வானை  எதையும் பொருட்படுத்தவில்லை. வீரர்களின் ஆயுதங்கள் காற்றெங்கும் பறந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இனி இந்த ஊரைக் காப்பாற்றமுடியாது என்று முடிவுசெய்து எல்லோரும் அவ்விடம்விட்டு அகலுமாறு உத்தரவிட்டார். இவ்வுத்தரவுக்காகக் காத்திருந்த வீரர்கள் குதிரையைத்தாண்டி முன்னால் ஓடினர்.

எல்லோரும் அரண்மனைக்கு வந்த பின்புதான் சிந்தித்தோம். அந்த மத யானை இங்குவந்தால் என்னசெய்வது? அரண்மனைக்கோட்டை திடமானதுதான். ஆனால் யானைமுட்டலில் நொறுங்கிய மரத்தின் உறுதி இதற்கு இருக்காது. எனவே, எப்பாடுபட்டாவது அதனை நெருங்கவிடாமல் தடுக்கவேண்டும் என முடிவுசெய்து முழுவீரர்களையும் அணிவகுக்கச்செய்த ஆயத்தநிலையில் இருந்தார் தந்தை.

சித்தூரைச் சூரையாடிவிட்டு அது எங்களை நோக்கி வரத்தொடங்கியது. வீரர்களின் கால்நடுக்கத்தில் தரையே ஆடியது என்றுதான் சொல்லவேண்டும். அது மனித ஓசைகேட்டு வெறியேறியபடி எங்கள் திசைநோக்கித் திரும்பியது. 

இந்தக் காட்சியைப் பச்சைமலைக் குன்றின்மேல் இருந்த பெண்ணொருத்தி பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறாள். அவள் பறம்புநாட்டுக்காரி. சித்தூரைச் சூறையாடிய யானை அடுத்துள்ள பெரிய ஊரினை நோக்கி நடக்கத்தொடங்கியதும் அவளுக்குக் கவலை அதிகமாகியுள்ளது. ஏனென்றால், இங்கு மக்கள் கூட்டம் அதிகம். இழப்பு அதிகமாகிவிடும் என்று முடிவுசெய்து அவள் வேகவேகமாகக் குன்றினைவிட்டு கீழிறங்கியிருக்கிறாள்.

எங்களின் கண்களுக்கு எதிரே நிலம்நடுங்க பிளிறியபடி யானை வந்துகொண்டிருந்தது. நாங்கள் உருவாக்கிய தடுப்புகள் காற்றில் பறந்துகொண்டிருந்தன. எத்தனை வீரர்கள் தூக்கிவீசப்பட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் அதனுடைய போக்கினை மறிக்க எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.

மதயானை ஓரிடத்திலிருந்து நகரும்போது நான்கு திசையிலும் சம அளவிலான அழிவினை ஏற்படுத்தியபடியே நகரக்கூடியது. வீடுகள் இடிந்து சரிந்து நொறுங்கிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்திற்குப் பின் நாய்கள் குரைப்பொலியை முழுமுற்றாக நிறுத்தின. அதன்பின் எங்களின்  அச்சம் பலமடங்கு அதிகமானது. நாங்கள் அரண்மனைக்குள் நுழைந்து கோட்டைக்கதவினைத் தாழிட்டோம். அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வலிமை இங்குள்ள எந்தக் கட்டுமானத்துக்கும் இல்லை என்பதை எல்லோரும் உணர்ந்தோம். ஆனாலும் அரண்மனைக்குள் அண்டுவதைத்தவிர வேறுவழியில்லை. நான் கோட்டையின் மேலேறி தந்தையின் அருகில் நின்று பார்த்தேன்.

செம்மண் குலைத்துக்கட்டப்பட்ட கோட்டைச்சுவர் அதன் கண்களை உறுத்துவதாக இருந்திருக்க வேண்டும். அது வேகமாகக் கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்தது. மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கூக்குரல் வானம் தொட்டது.

அப்பொழுதுதான் இடப்புற மலையடிவாரத்திலிருந்து ஒரு பெண் கோட்டையை நோக்கி வருவதைப் பார்த்தேன். அவள் வேகவேகமாக வந்துகொண்டிருந்தாள். மதயானை ஒன்று எதிர்திசையில் வந்துகொண்டிருக்கிறது, அதனை அறியாது பெண் ஒருத்தி வந்துகொண்டிருக்கிறாளே என்று பதறினேன். அவளோ எதனையும் பொருட்படுத்தாமல் வந்துகொண்டிருந்தாள். தனது குழந்தையைப் பின்புறம் முதுகோடு சேர்த்து மேல்துணியால் கட்டியிருந்ததும் தெரிந்தது.

நெருங்கி வரவர மதயானையின் பிளிறல் பேரச்சம் தருவதாக இருந்தது. என்ன நடக்கப்போகிறதோ, என்ற அச்சத்தால் நாங்கள் உறைந்து போயிருந்தோம். ஆனால், எவ்வித அச்ச உணர்வுமின்றி அவள் எதிரில் நடந்துவந்துகொண்டிருந்தாள். முதுகுப்புறம் இருந்த குழந்தை அழுதிருக்க வேண்டும். முன்புறம் போட்டு மார்பில் பால்குடிப்பதற்கு ஏற்ப துணியைக் குழந்தையோடு இறுக்கக்கட்டினாள். ஆனாலும், அவள் நடையின் வேகம் குறைந்தபாடில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83d
அவள் கையில் ஏதோ ஒரு செடி ஒன்றை வைத்திருப்பது மட்டும் தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது தெரிந்தது. அவள் அரண்மனை வாசல்நோக்கி உதவிகேட்டு வருகிறாள் என்றுதான் முதலில் நினைத்தேன். அவளோ இப்பக்கம் வராமல், மதயானை வந்துகொண்டிருக்கும் திசைநோக்கிப் போனாள்.

மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த எங்களால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ‘என்ன ஆனது இந்தப் பெண்ணுக்கு, தன்னந்தனியாக மதயானையை நோக்கிப் போகிறாளே!’ என்று அஞ்சினோம்.

பெரும்படையையே சிதறடித்த வெறிகொண்ட அந்த யானையை நோக்கி சிறிதும் அச்சமின்றி அவள் போய்க்கொண்டிருந்தாள். ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது. நாங்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவள் கைகளில் இருந்த செடியை நீட்டியபடி மதயானையை நெருங்கிக்கொண்டிருந்தாள். அவளின் வேகம் அதிகமானபடியிருந்தது. மதயானையின் வேகம் குறைவதுபோல் இருந்தது. நாங்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் பிறகு நடந்தவைகளை எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாது. அத்தனை நூறு வீரர்களை வீசியெறிந்து, குத்தீட்டிகளையும் வேல்கம்புகளையும் சிதறடித்து, எதிரில் பட்டதையெல்லாம் முட்டித்தள்ளி மண்ணோடு மண்ணாக்கிய அந்த மதயானை, மேய்பனின் முன் பணியும் கிடை ஆடுபோல அவளின் சொல்கேட்டுப் பணிந்தது.

அந்த இலையின் வாசனையை நுகர நுகர அதன் மதம் ஒடுங்கி பின்னகரத் தொடங்கியது. அவள் தன்னந்தனியாக சிறுகுச்சியைக்கொண்டு விரட்டுவதைப்போல யானையை விரட்டிக்கொண்டு மலையிலே ஏற்றிவிட்டாள்.

எங்களின்  உயிரச்சம் கலைய நீண்ட பொழுதானது. நாங்கள் கோட்டைக்கதவைத் திறந்து அவளை நோக்கி ஓடினோம். அவள் மலைக்குள் போவதற்குள் அவளைச் சென்றடைந்தோம். பால்குடித்து முடித்த குழந்தையைப் பின்தோளிலே போட்டாள். எனது தந்தை கண்ணீர் மல்க அவளை வணங்கினார்.  “பலநூறு பேரின் உயிர்காத்த தேவி நீ” என்றார். அவள் மறுமொழியேதும் சொல்லவில்லை. அவள் கையில் இருந்தது கரந்தைச் செடி என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் கரந்தையில் எண்ணற்ற வகையுண்டு. அது எந்த வகைக் கரந்தை என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

அந்தச் சூழலில் அவளிடம் அதனைக் கேட்கவும் முடியாது. கேட்டாலும் பறம்பின் மக்கள் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். எங்களைக் காத்தருளிய அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தந்தை துடித்தார். அவள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களின் உயிரைக்காப்பாற்றிய அவளின் காலடியில் பணிந்து “பறம்புக்கும் பறம்பின் மக்களுக்கும் எதிராக சிறுதீங்கும் நாங்கள் என்றும் செய்யமாட்டோம்” என்றார் தந்தை.

மையூர்கிழார் சொன்ன கதையை அவை மிகக்கவனமாகக் கேட்டது. போருக்கான கருத்தைக் கேட்ட பேரரசரிடம், ‘நான் கருத்தை மட்டுமே வழங்க முடியும். போரிலே பங்கெடுக்க முடியாது’ என்று எவ்வளவு அழுத்தமாகச் சொல்ல முடிந்தது மையூர்கிழாரால். வயதும் பட்டறிவும்கொண்ட மூத்த மனிதர்கள் இக்கட்டானச் சூழலை எவ்வளவு நுட்பமாகச் செயல்படுகிறார்கள் என்பதை எண்ணி மனதுக்குள் வியந்தார் முசுகுந்தர்.

அவையில் நீடித்த அமைதி கலைய நேரமானது. இவ்வமைதி அவ்வளவு நேரம் வாதிட்ட தளபதி கருங்கைவாணனின் கருத்துக்கு எதிரானதாக உருத்திரண்டிருந்தது. எனவே, அதனை உடைக்கவேண்டிய பொறுப்பும் தளபதியையே சார்ந்தது.

“போரிலே பங்கெடுக்க மாட்டேன் என்பதைச் சொல்லத்தான் இங்கு வந்தீர்களா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83e
கருங்கைவாணனின் வினாவிற்குச் சற்றும் இடைவெளியின்றி மையூர்கிழார் விடை சொன்னார், “இல்லை. அதற்கு இவ்வளவு விரிவான கதையை நான் சொல்லவேண்டியதில்லை. என் தந்தை அளித்த வாக்குறுதியை மட்டும் சென்னாலே போதுமே.”

“வேறென்ன சொல்ல வந்தீர்கள்?”

“நீங்கள் சொன்ன கணக்குத் தவறானது என்று சொல்ல வந்தேன்.”

தளபதிக்குப் புரியவில்லை. மற்றவர்களுக்கும் புரியவில்லை. “விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றனர்.

“ஒரு பேரரசுக்கு, மதங்கொண்ட யானையை அடக்க பலநூறு வீரர்களும் பயிற்சிகொண்ட நான்கு யானைகளும் காலமெல்லாம் யானைப் படையில் பணியாற்றிய கட்டுத்தறியின் பொறுப்பாளனும் தேவைப்பட்டுள்ளனர். ஆனால் பறம்பின் மக்களுக்கு அப்படியல்ல, ஒரு பெண்ணும் கையில் ஒரு செடியும் இருந்தால் போதுமானதாக இருக்கிறது. அவள் ஒருத்தி நீங்கள் சொன்ன இத்தனை நூறு வீரர்களுக்குச் சமம் என்றால், பறம்பில் இருக்கும் மக்களையும், செடி கொடிகளையும் கணக்கிட்டு நம் பேரரசில் இருக்கும் நிலைப்படை வீரர்களின் எண்ணிக்கையைச் சொல்லுங்கள் பார்ப்போம்?”

மையூர்கிழார் எழுப்பிய வினாவைக்கேட்டு அவையின் நாவு துடிப்படங்கி ஒடுங்கியது.

“மற்ற நாடுகளின் ஆற்றல் அங்குள்ள வீரர்களைப் பொறுத்தது. ஆனால் பறம்பின் ஆற்றல் மனிதர்களை மட்டும் சார்ந்ததல்ல, எனவே வெறும் மனிதர்களைக்கொண்டு படைநடத்திப் போனால், பறம்பு நாட்டின் சிறுகுன்றினைக்கூட கடந்து உள்நுழைய முடியாது” மையூர்கிழாரின் குரல் கணீரென அரங்கு முழுவதும் ஒலித்தது. சிறுசெடிக்கு ஒடுங்கிய மதயானைபோல் அவரின் குரல்கேட்டு ஒடுங்கியது அவை.

பறம்பின்மீது படைதிரட்டிப் போர்புரிவதில் பேரரசரின் மனம் உடன்பாடு கொள்ளாமல் இருந்தது. போரில் ஒருமுறை தோல்வி ஏற்பட்டால், அது அரசின் அச்சாணியையே அசைத்துப் பார்க்கும் என்பதைக் குலசேகர பாண்டியன் நன்கு அறிவார். அதனால்தான் இவ்வுரையாடலை இவ்வளவு தொலைவு வளரவிட்டு அமைதி காத்தார். அவர் எண்ணிய கருத்தே அவையிலும் நிலைநிறுத்தப்பட்ட கணத்தில் சட்டென எழுந்தார். எல்லோரும் பதறி எழுந்தனர்.

“மலரணியும் சடங்கிற்குப் பொழுதாகிவிட்டது” என்று சொல்லியபடி அவை நீங்கினார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83f
பொதியவெற்பன் அவருக்கு முன்பே போய் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வுரையாடலை இந்தத் தன்மையில் விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், வேறு வழியே இல்லை. மனமின்றிப் புறப்பட்டுப் போனான். பொற்சுவையும் அவ்வாறே அங்குவந்து காத்திருந்தாள்.

டங்கு முடிய இரவானது. பேரரசர் தனது பள்ளியறைக்குத் திரும்பும்பொழுது, “தளபதி உடனடியாகக் காணஅனுமதி கேட்கிறார்” என்று பணியாளன் தெரிவித்தான். வரச்சொல்லி அனுமதி கொடுத்தார் பேரரசர்.
நள்ளிரவு வரை அவர்கள் பேசினர். முற்றிலும் புதியதொரு திட்டத்தைத் தளபதி கொண்டு வந்திருந்தார். அது பேரரசருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அதுபற்றி மிக விரிவாக அவர் வினாக்களை எழுப்பினார். அத்திட்டத்தை முழுமையாகக் கருங்கைவாணன் விளக்கினான். இதுவரை ஏற்படாத நம்பிக்கை இப்பொழுது ஏற்பட்டது. இன்றைய நாள் மிகச்சிறந்த நாள் என்று மனதில் எண்ணம் தோன்றிய கணத்தில் அத்திட்டத்துக்கான அனுமதியை வழங்கினார் பேரரசர்.

தேவாங்கைக் கொண்டுவர வழியின்றிப் போய்விடுமோ என்ற தவிப்பு நீங்கிய மகிழ்வோடு தனது பள்ளியறைக்குள் நுழைந்தார் பேரரசர். அதனைவிட பலமடங்கு மகிழ்வோடு புறப்பட்டுப் போனான் கருங்கைவாணன்.
 
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 37

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:59 pm

கூழையன் எவ்வியூருக்குள் அதிகாலையில் வந்துசேர்ந்தான். வழக்கமாகக் காட்டுப்பாதையில் நடந்து வருபவன் இம்முறை குதிரைப்பாதையில் மூன்று வீரர்களோடு வந்திறங்கினான். அதுவே அவன் வந்துள்ள வேலையின் அவசரத்தைச் சொன்னது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83a
“உதியஞ்சேரல் கீழ்மலையில் புதர்விலக்கிப் பாதை உருவாக்கியிருக்கிறான். அதற்கு அடுத்து பறம்புமலைத் தொடங்குகிறது. நம் பகுதியில் நுழையவில்லை. மிகக் கவனமாகத் திட்டமிட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். கடற்கரைப் பகுதியிலிருந்து மூங்கில் நார்க்கொடிகளை எண்ணற்ற வண்டிகளில் கொண்டுவந்து தொடர்ந்து இறக்குகின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை” என்று தென்திசை நிலைமையை விளக்கினான் கூழையன்.

பாரியோடு தேக்கனும், வேட்டூர் பழையனும், முடியனும் அவையில் வீற்றிருந்தனர். எப்பொழுதும் விழிப்போடு இருப்பது கூழையனின் இயல்பு. “உரிய நேரத்தில்தான் விழிப்போடு இயங்கவேண்டும், மற்ற நேரத்தில் இயல்போடு இயங்க வேண்டும் என்று அவனுக்குப் பலமுறை சொல்லியாகிவிட்டது. ஆனாலும், கேட்க மறுக்கிறான்” என்று சலித்துக்கொண்டார் வேட்டூர் பழையன்.

ஆனால், தேக்கனுக்கோ நிலைமையை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியது. சேரனின் வன்மம் மிக ஆழமானது. பத்தாண்டுகளுக்கும் மேலாக அவன் காத்திருக்கிறான். இப்பொழுது குடநாடு அவனுக்கு வாய்ப்பாக வந்தவுடன் செயலிலே இறங்கிவிட்டான் என்று தோன்றியது.

தேக்கன் என்ன சொல்லப்போகிறார் எனக் கூழையன் கவனித்துக்கொண்டிருந்தபொழுது பாரி சொன்னான். ``கீழ்மலைப் பாதையில் நமது எல்லைக்குள் வராமல் கவனமாக நிறுத்தியிருக் கிறான் என்றால், வேறு ஏதோ பகுதியில் பாதை ஊடுருவிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அவன் கூழையனை நன்கு புரிந்து வைத்திருக்கிறான்” என்றான் பாரி.

பழையன் சொல்லியதைத்தான் பாரி வேறுவிதத்தில் சொல்கிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது.

“உதியஞ்சேரல் இம்முறை குடநாட்டைத்தான் முதலிலே உள்ளிறக்கிவிடுவான். நம் மீது கொண்டுள்ள பகையால் நடக்கும் இப்போரில் அவனது முதல் தந்திரம் சகக் கூட்டாளியைக் காவு கொடுப்பது” என்றான் பாரி. 

உதியஞ்சேரல் எப்படிச் சிந்திப்பான் என்பதை நன்கு உணர்ந்தவன் பாரி. அவனது கருத்து முற்றிலும் சரியென்று எல்லோருக்கும் தெரியும். உரையாடலின் இறுதியில் பறம்பு நாட்டின் வடமேற்கு எல்லைப்பகுதிக்குச் செல்ல முடியனுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. ஆனாலும், அனைவரும் வலியுறுத்தியதென்னவோ தேக்கனின் செயலைத்தான். காடறிய இப்பொழுது போகும் முடிவைப் பற்றி மீண்டும் யோசியுங்கள் என்று சொன்னார்கள். கூழையன் மிகக் கடுமையான கோபத்தைத் தேக்கனின் மீது வெளிப்படுத்தினான்.

இறுதியில் தேக்கன் தனது நிலையிலிருந்து சற்றே இறங்கி வந்தான். “முழுநிலவுக்கு இன்னும் மூன்று வாரங்கள்  இருக்கின்றன. அதற்குள் பகரியின் ஈரலைக் கொண்டுவர பறம்பின் மக்களுக்கு நீ உத்தரவிடு. யாராவது கொண்டுவந்துவிட்டால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன்” என்றான்.

தேக்கன் தனது நிலையில் இருந்து இறங்கிவந்தது நல்லது; ஆனால், மூன்று வாரத்துக்குள் பகரியை வேட்டையாடுவதெல்லாம் நடக்காத செயல். ஆனால் வழக்கத்தை மீற முடியாததால், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர்.

மறுநாள் கூழையன் தென்திசைக்கும், முடியன் வடமேற்குத் திசைக்கும் புறப்பட்டனர். பறம்புநாடு முழுவதும் பகரி வேட்டை அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகள் எல்லாம் கபிலருக்குப் பின்னர்தான் தெரியவந்தன. பகரிதான் பறவைகளின் தலைவன். அதன் வேகத்தையும் நுட்பத்தையும் வேறெந்தப் பறவைக்கும் ஈடுசொல்ல முடியாது. அது முட்டை போட்ட அன்றே குஞ்சு பொரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. பிற பறவைகள் பல நாட்கள் அடைகாத்து உடற்சூட்டை முட்டைக்கு இறக்கி குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் பகரி அப்படியன்று, தனது உடலின் வழி பெருவெப்பத்தைக் கடத்தக்கூடியது. பகரியின் ஈரலைச் சாப்பிட்ட மனிதனை எந்த விலங்கு தீண்டினாலும் அதன் நஞ்சு அவனை ஒன்றும் செய்யாது. சில நேரம் தீண்டிய விலங்கு பாதிப்புக்கு உள்ளாகும்.

பகரியைக் கண்ணிற்பார்ப்பதும் அதனை அடித்து வேட்டையாடுவதும் எளிதான செயலல்ல. பகரியின் ஈரல் உண்டவனே எவ்வியூரின் தேக்கனாகிறான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83b
கொடிய பாம்புகளாலும், பூச்சிகளாலும், செடிகொடிகளின் சுணைகளாலும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத மனிதனே காடறியும் ஆசானாகச் செயல்பட முடியும். அவனை நம்பியே பறம்பின் பிள்ளைகளைக் காட்டுக்குள் அனுப்ப முடியும். இல்லையென்றால், இவ்வடர் காட்டில் என்ன நடக்குமென அனுமானிக்கவே முடியாது. பகரியைத் தேடி பறம்பின் கண்கள் வானமெங்கும் பறந்துகொண்டிருந்தன.

நாட்கள் நகர்ந்தன. அடர்மழை கொட்டித் தீர்க்க, பகற்பொழுது மிகக்குறுகியதாகவே இருந்தது. அதில் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83cபகரியைப் போன்றதொரு வீறுகொண்ட பறவையைப் பார்ப்பதே மிகவரிது. பின் எங்கே வேட்டையாடுவது? பறம்பு மலையின் எல்லா முகடுகளிலும் மக்கள் ஏறி இறங்கினர். தன்னியல்பில் எப்பொழுதோ கண்ணிற்படும் ஒரு பறவையை, தனித்து வேட்டையாடி பிடிக்குமளவிற்கு மனிதரின் கைக்குள் இயற்கை சுருங்கி விடவில்லை.

பறம்பின் மக்கள் அச்சிறு பறவையிடம் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் கடைசிப்பகலும் முடிவுக்கு வந்தது. இன்றிரவு முழுநிலவு நாள். வேட்டூர் பழையன், செய்திக்காக முன்னிரவுவரை காத்திருந்தான். எங்கிருந்தும் செய்தி வரவில்லை. பகரி அகப்படவில்லை என்பது முடிவானது. இனித் தேக்கன் காடறியப் புறப்படுதலைத் தடுக்க முடியாது எனத் தெரிந்ததும் பழையன் வேட்டுவன்பாறை நோக்கி புறப்பட ஆயத்தமானான்.

முன்னிரவில் தேக்கனைக் கண்டு பேசினான். “பிள்ளைகளை நல்லபடியாகப் பயிற்றுவித்துக் கொண்டு வா. மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அவனோடு இளம் வீரர்களும் உடன் வந்தனர். அவர்கள் அடர்வனம் நோக்கி நடந்தனர். நள்ளிரவுக்குள் புலிவால் குகைக்குப் போய்விடலாம். அங்கு படுத்தெழுந்து பயணத்தைத் தொடரலாம் என்பது திட்டம்.

பெருகியோடும் வைகையின் இருளகற்றி சூரியக் கதிர்கள் மதுரையை எட்டிப்பார்க்கத் தொடங்கின. இருமாத காலம் விழாக்களில் மூழ்கிக்கிடந்த மதுரை, இன்று அதன் உச்சநிகழ்வைக்  காணத்தயாராகிக்கொண்டிருந்தது. மணமாலை சூடும் இந்நாளுக்காகத் தான் அவ்வளவு பெரும் கொண்டாட்டங்களும் நடந்து முடிந்துள்ளன.

கருங்கைவாணனின் திட்டம் துல்லியமாக நடைமுறையானது. அவனுக்கு வந்துள்ள தகவல்கள் மிக நல்ல செய்தியைச் சொல்லு கின்றன. இன்று பாண்டியப் பேரரசின் திருநாள். இந்நன்னாளில் பேரரசரின் முன் சொல்லப்படும் முதற்செய்தியாக இது இருக்க வேண்டும் என்று அதிகாலையே பேரரசரைக் காண வந்துவிட்டான் தளபதி கருங்கைவாணன்.

பள்ளியறையைவிட்டு எழுந்து வந்த பேரரசரை வணங்கிச் சொன்னான், “நமக்கு வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் நம்மால் அனுப்பப்பட்டவர்கள், பச்சைமலைக்குள் வெற்றிகரமாக நுழைந்துவிட்டனர். இலக்கை அடையும் காலம் நெருங்கிவிட்டது.”

அவனைக் கட்டித்தழுவினார் பேரரசர். “மணநாளின் மகிழ்வை விஞ்சும் ஆற்றல்கொண்ட செய்தியை அளித்தாய்” எனப் பாராட்டி மகிழ்ந்தார்.

“பொதியவெற்பனுக்கும் தெரிவித்துவிடு. இந்நாளின் சிறப்பை முன்பே நமக்குச் சொன்ன திசைவேழருக்கும் சொல். சூல்கடல்முதுவனுக்கும் சொல். மணவிழாவின் மகிழ்வு எல்லையற்றதாய்ப் பெருகட்டும்.”

வணங்கி விடைபெற்றான் கருங்கைவாணன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83d
பள்ளியறைத் திரைச்சீலையை விலக்கி வெளியேறி வந்த பொற்சுவை, நீராழி அரங்கிற்குள் நுழைந்தாள்.  நீள்வட்டப் பளிங்கு நீர்க்குடுவை அவளுக்காகக் காத்திருந்தது. அதில் நாற்பத்தி ரெண்டு நறுமணப்பொருட்கள் கலக்கப்பட்ட மணநீர் நிரப்பப்பட்டிருந்தது.

பொற்சுவை அருகில் வந்தாள். சுற்றிலும் சேவைப்பெண்கள் நின்றிருந்தனர். பக்கவாட்டில் அமைந்திருந்த படிமேல் ஏறி வலதுகால் நீட்டி பெருவிரல் கொண்டு நீரினை அசைத்தாள். சிற்றலைகள் விளிம்பிற்போய் முட்டித்திரும்பின. அந்நீரலைகளைப் பார்த்தபடி கால் நுழைத்து கழுத்துவரை உள்ளிறங்கினாள்.

நீர் மெல்லிய சூடு கொண்டிருந்தது. அதிகாலைக் குளிருக்கு இதம் தர இதைவிட வேறென்ன இருக்கிறது. ஆனால், உடல்தொடும் எதுவும் சுகம் தருவதாக மாறிவிடுவதில்லை. சிந்தித்தபடியே மேலாடையைக் கழற்றி இடக்கையில் நீட்டினாள். சேவைப்பெண் அதனைப் பணிந்து பெற்றுக்கொண்டாள்.

மணநீரின் வாசனை எங்கும் பரவி மூச்சடைக்கச் செய்தது. நறுமணக்குளியல் பழகிய ஒன்றுதான். ஆனால், யவன நறுமணங்கள் மூக்கிற்குச் சற்றே கடுமையூட்டக்கூடியவை. அவற்றை அதிகமாக ஊற்றியிருக் கிறார்கள் எனத் தோன்றியது. இந்தக் கலவையை ஆண் உருவாக்கியிருக்க வேண்டும். பெண்ணின் கைப்பக்குவம் இப்படி இருக்காது. 

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83eஆனால், எல்லா ஆண்களும் இதுபோல் கடுமைகொண்ட கலவையை உருவாக்கி விடுவதில்லை. எவ்வித நறுமணப் பொருட்களும் இன்றி அவனோடு சேர்ந்து சுனை நீராடியபொழுது எழுந்த மணமும் இன்பமும் வேறொன்றிலும் ஏற்பட்ட தில்லை. கலவை, நறுமணப் பொருளோடு மட்டும் சம்பந்தப் பட்டதல்ல. ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை. விரல்தான் உடலின் கண்களைத் திறக்க வல்லது. பாலாடையின் மீது ஊர்ந்துபோகும் சிற்றெறும்பின் கால்தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும். வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியேதான் நினைவின் ஊற்று கசிந்துகொண்டே இருக்கும். கண்ணுக்குத் தெரியாமல் நினைவிற் படரும் அந்நறுமணத்துக்கு ஈடுசொல்ல என்ன இருக்கிறது?

`சுனைநீரின் குளுமையை நீ அறிய வேண்டும் என்று சொல்லித்தான் அவன் அழைத்துச் சென்றான். நீர் மேனியெங்கும் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. நீரோடும் பாறை சுடும் என்று சொன்னால், யார் நம்புவார்கள். நீர் தழுவும் எனது மேனியின் சூட்டை நான் உணர்ந்தபொழுதுதான் அந்த உண்மை உரைத்தது. சிறு மணலை அள்ளி எனது கையிற்கொடுத்து ‘பூசிக்கொள்’ என்றான். நான் மேலெல்லாம் பூசினேன். மென்மலர் மேனியில் சிறுவுராய்வுகளையும் கீறலையும் மணற்துகள்கள் ஏற்படுத்தின. மீண்டும் நீரில் மிதந்தேன். சிற்றெறும்பு கடித்ததைப் போன்ற அக்காயங்களை குளிர்நீருக்குள் உணர்ந்துகொண்டிருந்தபோது அவன் நீருள் இறங்கினான்.

மாமரத்து அடிவாரமிருக்கும் செவ்வெறும்பு கடிப்பதைப்போல உணரத் தொடங்கினேன். கடிகாயங்கள் காமத்துக்குள் மறைந்து கொண்டிருந்தபொழுதே புதிதாகத் தோன்றிக்கொண்டும் இருந்தன. சீற்றம்கொண்டு தாக்கப்படுதலின் சுவையைக் காயங்களே கற்றுக்கொடுத்தன.

நீருக்குள் நுழையும் கைகள் எவ்வளவு இழுத்தணைத்தாலும் வலிமை கூடாது. நீர் தன்னுள் விளையாடுபவர்களோடு தானும் சேர்ந்து விளையாடும். அதற்கான இடத்தைத் தந்தே ஆகவேண்டும். நீர்புகும் முழு இடத்திலும் விளையாட மனிதனால் ஒருபோதும் இயலாது.  நீருலகின் நியதி வேறு.  நிலத்தில் காதல்கொள்கையில் காற்று விலகிக்கொடுக்கும். நீரில் காதல்கொள்கையில் அது விலகிக் கொடுப்பதில்லை. நம்முள் நுழையவே பார்க்கும். சக ஆட்டக்காரனைப்போல அதுவும் பங்கெடுக்கும். நமது பொறாமையை மெல்லத் தூண்டும். நமது இயலாமையைக் காட்டிக்கொடுக்கும். 

பஞ்சுப்படுக்கையே காதலுக்கு சிறந்ததென நினைப்பவர்கள் நீர்ப்படுக்கையை அறியாதவர்களே. நீர் மட்டுமே உடலோடு உடல் கிடத்த, சாய்ந்த நிலையைக் கோருவதில்லை. அது இயற்கை மனிதனுக்கு வழங்கிய அதி சிறந்த காதற்களம். காதலில் மூழ்கித்திளைத்த மனம் தன் துணையின்றி நீர் இறங்கும் துணிவைப் பெறுவதில்லை.’

இச்சிந்தனை உருவான கணத்தில் நறுமணத்தொட்டியில் இருந்து மேலேறினாள் பொற்சுவை. தோழிகள் பதறினர். ``ஒரு பொழுதாவது மணநீருக்குள் இருக்க வேண்டும் இளவரசி” என்று வேண்டினர். எச்சொல்லும் உள்நுழைய முடியாத இறுக்கம்கொண்டிருந்தாள் அவள்.

`நாற்பத்திரெண்டு நறுமணங்களையும் விஞ்சிய வாசனை என்னுள் உண்டு. அதை நுகரக்கூடியவனை நுகர்ந்தவள் நான்’ சொற்களை மனம் உச்சரிக்கும்பொழுது உள்ளுக்குள் இருந்து வாசனை மேலெழுந்து வந்தது. மேலேறும் வாசனை நினைவுக்காட்சிகளைக் கொட்டிக்க விழ்த்தது.

ஆடை அலங்காரத்துக்கும் மலர் அலங்காரத்துக்கும் எல்லோரும் தயாராக இருந்தனர். ஈரம் உலராத பொற்சுவை, இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் சேவைப்பெண்கள் அருகில் வந்தனர்.

கைகளில் ஆடைகளை வைத்துக்கொண்டு அவளின் உடல் துடைக்க ஆயத்தமாக இருந்தனர். அவள் நிமிரவேயில்லை. அவளது அனுமதியின்றி யாரும் தொட்டுவிடமுடியாது. சேவைப்பெண்கள் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர்.

பொற்சுவையின் எண்ணம் நீர்நிலைவிட்டு அகலாமல் இருந்தது. சுனைநீரிற் குளித்து மேலேறியவள் சொன்னாள். ``ஈரத்தை உடல்வெப்பத்தால் மட்டுமே உலரவைத்து விடுகிறது உனது  நெருக்கம்.”

உடல் உலர்ந்துவிடும். ஆனால், இதழ்கள் அப்படியல்ல; நெருக்கத்தில்தான் சுரக்கத் தொடங்கும்.

இதழ் சுரந்துகொண்டிருந்தபொழுது உடல் உலர்த்துகொண்டிருந்தது. நீருள் மூழ்குதல் மீண்டும் தொடங்கியது. நெடுநேரம் கழித்து அவன் உலர்ந்து வீழ்ந்தான். ஆனால், உடலெங்கும் ஈரம் பூத்திருந்தது.
“உள்ளும் புறமுமாக நீரைச் சுழலவிட்டு விளையாடுதலே நீர்விளையாட்டாகிறது. ஆனால், இது தெரியாத பலரும் நீரில் விளையாடுதலையே நீர்விளையாட்டு என்று நினைத்துக் கொள்கின்றனர்” என்று அவன் சொன்னபொழுது, அவள் சொன்னாள். ``இப்பொழுதாவது நான் ஆடைகொண்டு துடைத்து உடலை உலர வைக்கிறேன். நீ அருகில் வராதே.”

அவள் தலைநிமிர்ந்தபொழுது கண்பார்வையைப் புரிந்து சேவைப்பெண்கள் அருகில் வந்து மேனி துடைத்தனர். கூந்தல் உலர்த்த, நறுமணப் புகை தூவ, மேனி துடைக்கவென ஆளுக்கொன்றாய்ப் பணியாற்றினர். வணிகர்குல அலங்காரம் முடிவுக்கு வந்தது. பாண்டியர்குல வழக்கம் தொடங்கியது.

உச்சந்தலையில் மஞ்சள் மின்னும் சூடிகையை அணிவித்தாள் ஒருத்தி. அதனைத் தொடர்ந்து சூடாமணியும் கோதைச்சரமும் சூட்டப்பட்டன. கழுத்தில் கண்டிகையும், மணியாரமும் அணிவித்தனர். அவற்றின்கீழ் தாழ்வடங்கள் நூலளவுத் தொடங்கி விரல் அளவு வரை கனம்கொண்டு இறங்கின. எவ்வொளியையும் உள்வாங்கி பலவண்ணமாய் வெளி கக்கும் செவிப்பூ சூடினர் காதுகளுக்கு. ஆடகமும், வால்வளையும், மகரவாய்க்கட்டும் முன்கை மணிக்கட்டில் தொடங்கி சுற்றிச்சுற்றி மேலேறிக் கொண்டிருந்தன. விரல்களில் மணியாழியும் இடையில் எண்வகை வடமும் சூட்டினர்.

அவளது கண்கள் சுகமதியைத் தேடின. அலங்காரம் நடக்கட்டும் என்று விலகி நின்ற அவள், பொற்சுவையின் கண்கள் தேடுவதைக் கண்டாள்.

அலங்காரப் பணியாளர்களை விலக்கி அருகில் வந்த சுகமதியின் காதோடு சொன்னாள். “எனது உடல் திருமணத்திற்குத் தயாராகிவிட்டது சுகமதி.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83f
தேக்கன் பதினோரு சிறுவர்களோடு புறப்படத் தயாரானான். சிறுவர்களைக் காடறிய அனுப்பும் நாள் எவ்வியூரின் உணர்ச்சிப் பெருநாள். தன் மகனைக் காட்டுக்குக் கொடுத்தனுப்பும் பெண்களின் ஆவேசம் அடங்கா எழுச்சி கொள்ளும். குலவை யொலியால் காடு கிடுகிடுக்கும். பறம்பின் தலைவன் குருதிப்பலி ஈந்து சிறுவர்களை அனுப்பினான். பாரியின் மனை நீங்கி குலநாகினிகளின் முன்வந்து அமர்ந்தனர் சிறுவர்கள். 

உடல்வலுவிலும் வயதிலும் மூத்தவனாக கீதானி முன்னிருந்தான். அவனை அடுத்து குறுங்கட்டி, முடிநாகன், அவுதி, மடுவன், இளமன் என வரிசையாக இருந்தனர். வயதில் மிகச்சிறியவன் அலவன்தான்.

ஆனாலும், அவனின் வேகம் இணைசொல்ல முடியாது. எல்லோருக்கும் குலநாகினி பச்சிலைச்சாறு கொடுத்தாள். குடித்து முடித்தனர். அதன்பின் கீதானியை உள்தாழ் வாரத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

குலநாகினி சிறுகுடுவை ஒன்றை எடுத்துவந்தாள். அதன் உள்ளே மிகக்கெட்டியான வடிவில் ஏதோ இருந்தது. மலைவேம்பின் இலையைப் பறித்துவைத்திருந்தனர். அந்த இலையைக் குடுவைக்குள் நுழைத்தாள். அதன் சாறு இலையில் படிய அவ்விலையைக் கையில் எடுத்தாள். கீதானியை நாக்கை நீட்டச்சொன்னாள். அவன் `ஆ’ வென வாய் பிளந்து நாக்கை நீட்டினான். “போதாது” என்று சொல்லி தலையை மறுத்து ஆட்டினாள். இன்னும் வாய் பிளந்து நாக்கை நீட்டினான். மீண்டும் மறுத்து தலையை ஆட்டினாள். இன்னும் முயற்சித்தான். வாயோரத்து தசை கிழிந்துவிடும்போல் இருந்தது. அடித்தாடை வலித்தது.
“இன்னும் நாக்கை நீட்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த இலையைச் சாறோடு எடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் அடிநாக்கில் வைத்து இருகையாலும் வாயை இழுத்து மூடிப் பிடித்துக்கொண்டாள். மற்ற நாகினிகள் அவனது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் பல்லைக்கடித்து, துடித்துத் துள்ளினான். ஏதேதோ செய்து பார்த்தான். சிறு சத்தங்கூட வெளிவராத அளவிற்கு வாய்த்தாடையை அடைத்து அமுக்கி இருந்தாள் குலநாகினி. தாழ்வாரத்தின் வெளியில் நின்றிருந்த மற்ற சிறுவர்களுக்கு உள்ளே ஒருவன் துடியாய்த் துடிப்பது சிறிதும் தெரியாது.

இலையோடு உள்ளே வைக்கப்பட்ட சாறு என்னவென்று குலநாகினிகள் வெளியே சொல்வதில்லை. செடிகொடிகளில் விளையும் மொத்தக்கசப்பும் கலக்கப்பட்டச் சாறு என்று சிலர் கருதுகின்றனர், பதப்படுத்தப்பட்ட பாம்பின் நஞ்சு என்று சிலர் சொல்லுகின்றனர். நாகப்பச்சை வேலியின் நச்சுக்கொடிகள் கக்கும் பிசின் என்று சொல்லுகின்றனர். எது உண்மை என்று தெரியாது. இந்தச் சாறு கசிந்து, உணவுக்குழல் முழுவதும் இறங்கி முடியும்வரை அவன் கைகளின் பிடி தளர்த்தப்படுவதில்லை.

நாவின் சுவை நரம்புகள் முழுவதும் நஞ்சுக்கசப்பின் சாறு உள்ளிறங்கிய பின்னே அவன் வாய்திறந்து மூச்சுவிட அனுமதிக்கப் படுகிறான். நரம்பில் தேங்கிய கசப்பு நீங்க மாதங்கள் ஆகும். மேல்தோலில் விழும் தழும்பு மறையாததைப்போல அடிநாக்கில் நிலைகொண்ட கசப்பு எளிதில் மறையாது. அவனது நாவு சுவையுணவு தேட இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.

அறுபதாங்கோழிக்கறி முதல் அத்திமது வரை அனைத்தின் சுவையும் துளியாவது நாக்கில்பட்டு வளர்த்த இவர்களின் நினைவில் இருந்தே சுவை அகலும். காடறிந்து வீடுவந்த பின்னும் சில ஆண்டுகள் ஆகும் இக்கசப்பு மறைய.

இக்கசப்பின் வாடை காட்டுப்பயணத்துக்கு மிக முக்கியமானது. காட்டின் எல்லா விலங்குகளும் இவ்வாடையை அறியும்.  சிறுவர்கள் பேசியபடி நடந்து செல்ல இவ்வாடையை நுகர்ந்து அவை விலகிச்செல்கின்றன. விலங்குகளை விலக்க இக்கசப்பின் மனமே மொழியாகிறது.

பதினோறு பேரும் மலைவேம்பின் இலையை  விழுங்கி, துடித்து அடங்கினர். அதன்பின் அவர்கள் புறப்பட்டனர். யாரிடமும் பேச அவர்கள் ஆயத்தமாயில்லை. வாய்திறந்து பேசப்பேச கசப்பு உள்ளிறங்கும். இக்கசப்புக்குப் பழகி அவர்கள் இயல்பாய்ப் பேசத்தொடங்க சில வாரங்களோ மாதங்களோ ஆகலாம். அதுவரை மிகமிகக் குறைவாகவே அவர்கள் பேசுவர். பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குடம் வேம்பின் சாற்றைக் குடித்ததற்குச் சமம்.

அடித்தொண்டை முழுவதும் தேங்கிய கசப்பு நிற்க, அதன்பிறகு யாரிடமும் பேசாமல் எவ்வியூர் விட்டு வெளியேறினர். சிலர் வில் அம்பு வைத்திருந்தனர். சிலர் ஈட்டியை ஏந்திப்பிடித்திருந்தனர். சிலரிடம் கவண்கல் இருந்தது. அவரவர்களுக்கான ஆயுதத்தை எடுத்துவந்தனர். ஆனால், இதுவெல்லாம் தொடக்க நிலைக்குத்தான். அவர்கள் பயன்படுத்த வேண்டிய வலிமை மிகுந்த ஆயுதங்களை இனி அவர்களே காட்டில் உருவாக்கிக்கொள்வார்கள். தங்களுக்கான தனித்துவம்மிக்க ஆயுதம் எதுவென்று அவர்கள் கண்டறியும் வரை இவ்வாயுதம் அவர்களின் கையில் இருக்கும்.

தேக்கன் வழக்கம்போல தனக்கான ஆயுதத்தை வீட்டில் இருந்து எடுத்துவந்தான். அது பன்றியின் கடவாய்க்கொம்பு. இக்காட்டில் மிக வலிமை வாய்ந்த பொருள் எதுவெனக்கேட்டால், அது பன்றியின் கடவாக்கொம்புதான். அதனை உடைக்கவோ, நொறுக்கவோ எதனாலும் முடியாது. அதன் அடிப்பகுதிக்கு என்ன வலிமை இருக்கிறதோ, அதே வலிமை கூர்மை மிகுந்த முனைப்பகுதிக்கும் உண்டு. எனவே, முனையின் கூர்மை ஒருபோதும் சிதைவுறாது.

தேக்கன் இருகொம்புகளின் அடிப்பகுதியில் துளையிட்டு அறுந்துபடாத நார்கொண்டு இரண்டு கையின் மணிக்கட்டோடு சேர்த்துக் கட்டியிருந்தான். காடறிதல் பயணக்காலம் முழுமைக்கும் அவன் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அது மட்டுந்தான்.

மணிக்கட்டில் கட்டி உள்ளங்கைக்குள் மடக்கிக்கொண்டால், இப்படி ஓர் ஆயுதம் இருப்பதே வெளியில் தெரியாது. இதுகொண்டு எந்த மரத்தின் அடிப்பகுதியையும் குத்தி இழுத்தால், நரம்புச் செதில்கள் பிய்ந்து நொறுங்கும். இறுகிய மரத்தின் தூரையே பிய்த்து எடுக்குமென்றால், விலங்குகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

காடறிந்து, சிறந்த போர்வீரனாக விளங்கி, தனது திறமையால் பல வலிமை மிகுந்த பணிகளைச் செய்து இறுதியில் பகரியை வேட்டையாடி ஈரலைத் தின்றவன்தான் தேக்கன் ஆகிறான். எனவே அவன் தனது உடலசைவையோ ஆற்றலையோ துளியும் வீணாகச் செலவிட மாட்டான். எந்தவொரு விலங்கின் தாக்குதலையும் சமாளிக்க மிகச் சில அடிகள் போதும். குத்திக்கொன்று வீழ்த்துவதெல்லாம் வீரர்களின் தொடக்ககால வாழ்வில் நிகழ்த்தும் செயல். ஆனால், வாழ்வு முழுவதும் காடு பார்த்து, பட்டறிவின் உச்சத்தில் நிற்கும் தேக்கனுக்குத் தேவை மிகச்சிறிய சில அசைவுகள்தான். எந்த விலங்கின் நரம்பை எங்கு தட்டினால் போதும் என்று தெரியும். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83g
கைப்பிடி அளவு கோரைப்புற்களின் முனையில் முடிச்சிட்டு, அதனைக்கொண்டு அடித்தால், யானை நகரமுடியாமல் உட்காரும். அவன் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மனிதன் எல்லாவற்றையும் நரம்புகள்கொண்டு அறிந்தவனாகிறான். எனவே நரம்புகளின் இயங்குவிசை அவனுக்குப் பிடிபட்டுவிடுகிறது. விலங்குகளின் வலிமை, ஆற்றல் மீதான கருத்தெல்லாம் நினைவில் இருந்தே உதிர்ந்துவிடுகிறது.
காடறியும் நான்காவது பயணத்தை மேற்கொள்ளும் தேக்கனின் முதல்நாள் நினைவில் கடந்தகாலம் எதுவும் வந்து செல்லவில்லை. வழக்கம்போல் இன்றைய நாளின் நிகழ்வு மட்டுமே அவன் மனதில் ஓடியது. சாமப்பூவின் வாசனை வந்துசென்றது.

முன்னால் சென்றவனைத் தொடர்ந்து பதினோறு பேரும் வந்துகொண்டிருந்தனர். யாரும் வாயைத் திறந்து எதுவும் கேட்கவில்லை, வாயைத் திறந்தாலே காற்று உள்ளே போய் ஒருகுடம் நஞ்சை அடிவயிற்றில் கொட்டிக்கவிழ்ப்பதுபோல் இருக்கிறது. எனவே, பேச்சின்றிப் பின்தொடர்ந்தனர் அனைவரும். நீண்டநேரத்துக்குப்பின் சிறியவன் அலவன் கேட்டான், ``எதை நோக்கிப் போகிறோம்?”

நடந்தபடியே தேக்கன் சொன்னான் ``கொற்றவையை வழிபட, கூத்துக்களம் நோக்கிச் செல்கிறோம்.”

 - பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 38

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 1:18 pm

சப்பு... கசப்பு... கசப்பு. நாக்கின் கீழ் நஞ்சுக் கசப்பு உமிழ்நீராக ஊறுவதைப்போல் கொடுமை எதுவுமில்லை. எனவே, நாக்கை அசைத்துப் பேச யாரும் ஆயத்தமாக இல்லை. தீராக்கசப்பு அடிநாக்கிலிருந்து ஊறிப்பெருகி தலையுச்சியில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் பிதுங்கின. மூச்சிழுத்து மொத்தக் குடலையும் காறி வெளியே துப்பவேண்டும்போல் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85a
ஒவ்வொருவனும் குரல்வளையை முறுக்கித் திருகிக்கொண்டிருந்தான். உடல் மட்டும், தேக்கனின் பின்னால் சென்றுகொண்டிருந்தது. மற்றபடி எண்ணம் முழுவதும் தொண்டைக்குள் கட்டிநிற்கும் கசப்பில்தான் நிலைகொண்டிருந்தது.

தேக்கனின் மனமோ, கடைசியாக நடந்துவரும் சிறுவன் அலவனிடமிருந்தது. `இவ்வளவு கசப்பையும் மீறி, ‘எங்கு போகிறோம்?’ என்று எப்படி அவன் கேட்டான்? நான் சிறுவனாகக் காடறியப் போகும்போது கொடுத்த கசப்பை விழுங்கி இயல்பாகப் பேச இரு வாரங்கள் ஆகின. ஆனால், இவனால் எப்படி உடனடியாகப் பேச முடிந்தது?’ என எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த வினாவைக் கேட்டான் அலவன். “கொற்றவையை வணங்கிவிட்டுத்தான் காடறியச் செல்ல வேண்டுமா?”

தேக்கன் கடும் அதிர்ச்சிக்குள்ளானான். கை அசைத்து அவனை முன்னால் வரச் சொன்னான். அலவன் முன்னேறி தேக்கன் அருகில் வந்தான். அவன் தோளில் கைபோட்டபடி நடந்தான் தேக்கன். ‘ஏன் விடை சொல்லாமல் வருகிறார்?’ என்று அலவனுக்குத் தோன்றியது. தேக்கனின் மனம் சொல்லுக்காகத் திண்டாடியது. எப்படிக் கேட்பது எனச் சிந்தித்தபடியே கேட்டான், “கசப்பு உனக்குப் போதவில்லையா?”

“பெருங்கசப்பாகத்தான் இருந்தது. அப்பப்பா… இவ்வளவு கசப்பா கொடுப்பார்கள்?” என்றான் சிறுவனுக்கே உரிய வேகத்தோடு.

தேக்கன் உறைந்து நின்றான். எவ்வளவு பெருஞ்சொல்லை மிக இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.

தேக்கன் நின்றவுடன் மற்றவர்களும் அப்படியே நின்றனர். பற்களை நறநறவென இறுகக் கடித்து, எச்சிலைத் துப்ப முடியாமல், துப்பினால் மறுபடியும் ஊறுகிறது. அதன் காட்டம் இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் மற்றவர்கள் எல்லாம் விழித்து நிற்க, அலவன் மட்டும் பேசியபடி இருந்தான்.

தேக்கன், அவனின் முகத்தைப் பார்த்தான். எந்தவிதமான கடுமையும் இன்றி இயல்பாக இருந்தது. “நாக்கை நீட்டு” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85b
அலவன் நாக்கை நீட்டினான். அடிநாக்கில் ஒட்டியிருந்தது மலைவேம்பின் இலை. அதன் பச்சை நிறம் மாறி முழுநீலம் கொண்டிருந்தது. அதன் நுனியைப் பிடித்து வெளியே எடுத்தான். நீண்ட நேரமாக உற்றுப்பார்த்தான். இலையின் கசப்பு அலவனுக்குள் இறங்குவதற்கு மாறாக, அவன் நஞ்சு இலையில் ஏறியிருக்கிறது.

திகைப்பு நீங்கி அவன் கண்களை உற்றுப்பார்த்தான் தேக்கன். நீண்ட நேரம் கழித்து உள்ளுக்குள் இருந்த நீல வளையம் பூத்து அடங்கியது. அவனின் பாட்டன் நாகக்குடியைச் சார்ந்தவன் என்ற நினைவு அப்போதுதான் வந்தது.

தேக்கன், மீண்டும் திரும்பி நடக்கத் தொடங்கினான். இப்போது அவனின் கை அலவனின் தோளில் இல்லாமல், தலையின் மேல் இருந்தது. அவனின் உச்சந்தலையை விரல்கள் கோதியபடி மிக இணக்கமாகப் பிடித்திருந்தன. ‘பகரியின் ஈரல் தின்றே நஞ்சை வெல்லும் ஆற்றல் பெறுகிறோம். ஆனால், பிறப்பிலே அந்த ஆற்றலோடு இருக்கும் வீரர்களைப் பற்றி முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். ஆதியில் நாகக்குடியினர் பறம்பில் வந்து கலந்தபோது ஐந்து குடும்பங்களாக மட்டுமே இருந்தனர். ஆனால், இன்று பறம்புநாட்டின் பல ஊர்களில் கலந்து, சிம்புவெடித்துப் பரவியுள்ளனர். அவர்களின் ஆதி ஆற்றலை முழுமையாகக்கொண்டுள்ள மனிதன் பிறப்பது மிக அரிதுதான். அந்த ஆற்றல் கொண்டவனை இப்போது நான் காடறிய அழைத்துச் செல்கிறேன். காடறியப் புறப்படும்போது மனம் ஆசானாகத் தன்னை உணர்ந்து கொள்ளும். அதன்பிறகு, அது மகிழ்வை உணர்வதில்லை. கவனிப்புகளும் கண்டிப்புகளும் மட்டுமே அதன் பணிகளாக இருக்கும். ஆனால், `இம்முறை காடறியும் முதல் நாள் ஆசானாக உணர்ந்த அன்றே மனம் மகிழ்வை உணரத் தொடங்கியுள்ளது’ என்று தேக்கன் நினைத்துக் கொண்டிருக்கையில் அலவன் கேட்டான். “என் கேள்விக்கு இன்னும் விடை சொல்லவில்லை.”
``எந்தக் கேள்விக்கு?’’

“கொற்றவையை வணங்கிவிட்டுத்தான் காடறியப் போக வேண்டுமா?”

“ஆம்.”

“ஏன்?”

“காட்டில் நாம் செல்கையில் விலங்குகள் நம் வாசனையை மோந்து ஒதுங்கிச் சென்றுவிடுகின்றன. சில விலங்குகள் நாம் எழுப்பும் சிற்றோசையில் விலகிவிடுகின்றன. ஆனால், விலகாத இயல்புடைய விலங்குகள் உண்டு.”

“எந்தெந்த விலங்குகள்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85c
``குறிப்பிட்ட விலங்குகள் அல்ல, எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட பருவத்தில் அப்படிச் செய்கின்றன. ஈன்ற  விலங்கு  தம்  இளம்குட்டியோடு போய்க்கொண்டிருக்கையில் அந்த வழியில் நாம் சென்றால், வாசனையைக் கண்டோ, ஓசையைக் கேட்டோ விலகாது. தாய்மையின் ஆவேசம்கொண்டிருக்கும். மிக வேகமாக நம்மைத் தாக்க வரும். இயல்பான காலத்தில் இருக்கும் அதன் ஆற்றல், அந்தக் காலத்தில் பலமடங்கு அதிகரித்திருக்கும். நம்மால் கணிக்கவே முடியாத தாக்குதலாக அது இருக்கும். நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டியது ஈன்ற விலங்கிடம்தான்” என்று சொன்ன தேக்கன், “அதற்காகத்தான் தாய் தெய்வமான கொற்றவையை வணங்குகிறோம்” என்றான்.

பேசியபடியே வந்தனர். எவ்வியூரைவிட்டு மிகத்தள்ளி நடுக்காட்டில் இருக்கும் கொற்றவையின் கூத்துக்களம் நோக்கிப் போனார்கள். அங்கு உள்ள காவல் வீரர்கள் பகரி வேட்டைக்குப் போயிருந்ததால், இன்னும் குடில் திரும்பவில்லை. தேக்கன், மாணவர்களோடு வந்துசேர்ந்தான். கூத்துக்களம், புல் விளைந்து கிடந்தது. பறவைகளின் ஒலி எங்கும் கேட்டது. மெல்லிதாக எதிரொலித்தது தேவவாக்கு விலங்கின் ஒலி.
மர அடிவாரத்தில் இருந்த சிறுமேட்டில் கொண்டுவந்த விலங்குக் கறியையும் உணவு வகைகளையும் இறக்கிவைத்தான்.

“தாய் தெய்வ வழிபாடுதான் எல்லாவற்றிலும் மூத்தது. கொற்றவை ஈன்ற பிள்ளைதானே முருகன். எனவே, ஆதிகாலம் தொட்டு இங்கு வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது. வீறுகொண்ட தாய் இவள். நம் மக்களைக் காக்க எந்தவிதப் போரிலும் நமக்கு வெற்றியைத் தருபவள். `போர் தெய்வம்’ எனப் போற்றப்படுபவள்” என்று சொல்லிக்கொண்டே பொருள்களைப் படையலிடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான் தேக்கன்.
மாணவர்கள், கசப்பைப் போக்க வழியில்லாமல் திணறிக்கொண்டிருந்தனர். அலவன் மட்டும் தேக்கன் சொல்லும் வேலைகளை இயல்பாகச் செய்துகொண்டி ருந்தான். பறித்துவந்த பழத்தைப், பெருவிரலால் அமுக்கி, கண் அமைத்தான் தேக்கன். ``நாம் கண் மூடி வழிபடும்போது நமக்காகப் பார்த்துக்கொண்டிருப்பவை அவைதான். எனவே, வழிபடும் முன் பழங்களுக்குக் கண் திறக்க வேண்டும்” என்று சொல்லியபடி கண் திறந்தான்.

``நாம் ஏன் கண் மூடி வழிபட வேண்டும்?” எனக் கேட்டான் அலவன்.

வேலைகளைச் செய்துகொண்டே தேக்கன் சொன்னான், “கண் மூடினால் இருள் வரும். இருளுக்குள்தானே நம் ஆதி அச்சங்கள் நிலைகொண்டுள்ளன. அவற்றை அங்கேயே வெற்றிகொள்ளும் ஆற்றல் நமக்கு வேண்டுமல்லவா? அதனால்தான், தெய்வங்கள் இருளுக்குள் வந்திறங்குகின்றன” எனத் தேக்கன் முடிக்கும்முன் அலவன் கூறினான்.  ``நான் இருளைக் கண்டு எப்போதும் அஞ்சியதில்லையே!”

என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை, “சரி, நீ வேண்டுமென்றால் கண் திறந்தே வழிபடு” என்றார்.

எல்லாவற்றையும் எடுத்துப் பரப்பும் வேலை முடிந்தது. தேக்கன் கைகளைக் குவித்து, கண் மூடி வழிபட்டான். மாணவர்களும் அதேபோல் வழிபட்டனர். அலவன் மட்டும் திறந்த விழிகளோடு கொற்றவையை வணங்கினான். சற்று நேரத்துக்குப் பிறகு, வழிபாடு முடித்த தேக்கன், படையலிட்ட பொருள்களை எடுத்து மாணவர்களுக்குத் தின்னக்கொடுத்தான்.

``கசப்பு மட்டுப்படும்” என்று சொல்லியபடி கொடுத்ததால், ஒரு கடி அளவு மட்டும் வாங்கிக் கடித்துக்கொண்டனர். அதை விழுங்கவே உயிர்போனது.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85d

எல்லா பழங்களும் கண் திறந்தே இருந்தன. ``நீதான் கண் மூடாமல் வழிபட்டவனாயிற்றே... உனக்கு எந்தப் பழம் தருவது?” எனக் கேட்டபடியே கறித்துண்டங்களை எடுத்துக் கொடுத்தான். அலவன் வாங்கிக்கொண்டான். ``கண் மூடி வணங்குகையில் நீங்கள் கண்டதென்ன?” எனக் கேட்டான் தேக்கன்.

எல்லோர் நினைவுக்குள்ளும் இருந்தது குலநாகினியின் முகம்தான். தாடை உடைவதைப் போல அழுத்திப்பிடித்த அந்த முகம் மறைய நாளாகும் எனத் தோன்றியது. யாரும் வாய் திறந்து பேசவில்லை. அலவன் மட்டும் சொன்னான், “நான் இரு கண்களைப் பார்த்தேன்.”

தேக்கன், மீதம் இருந்தவற்றை எடுத்துக் கொடுத்தபடியே கேட்டார், ``எதனுடைய கண்கள்... தேவவாக்கு விலங்கினுடைய கண்களா அல்லது பறவையின் கண்களா?”

“இரண்டும் அல்ல, அவை மனிதக் கண்கள்.”

மாணவர்கள், அந்த இடம்விட்டுப் புறப்பட ஆயத்தமாயினர். “மனிதக் கண்கள் இதற்குள் எப்படி இருக்கும்? யாரும் உள்நுழைய முடியாத பெருமரப்புதர் அல்லவா இது? அதுவும் பறம்பின் உச்சியில்!” என்று சொல்லியபடியே அந்த இடம்விட்டு நடக்கத் தொடங்கினர்.

கூத்துக்களம்விட்டு காட்டின் தென்திசை நோக்கி நுழைந்தனர். “காடறிதல் என்பது, பச்சைமலைத் தொடரின் எல்லா பகுதிகளையும் அறிந்துவருதல். அதன் தொடக்கம் எப்போதும் தென்திசைதான். திசையறிதல் பகலில் எளிது. இரவில் அதைவிட எளிது. விண்மீன்களைப் பார்த்தாலே போதும்” என்றான் தேக்கன்.

இவ்வளவு நேரமும் பேச்சுக்கு ஈடுகொடுத்துப் பேசிவந்த அலவன், எதுவும் கேட்காமல் இருந்தான். மற்ற மாணவர்கள் கசப்புக்கு அஞ்சி இன்னும் வாய் திறக்காமல் இருந்தனர். ‘அலவன் இந்நேரம் கேள்வி கேட்டிருக்க வேண்டுமே, ஏன் கேட்காமல் இருக்கிறான்?’ என்று குழம்பியபடியே அவனைப் பார்த்தான். அவன் குனிந்தபடியே நடந்து வந்தான்.

“ஏன் பேசாமல் வருகிறாய்?”

“நீங்கள் சொன்னதைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டு வந்தேன்.”

“திசையறிதல் பற்றியா?”

“இல்லை.”

“வேறு எதைப்பற்றி?”

“கண் மூடினால் என்ன நிகழும் என நீங்கள் சொன்னதை நான் நம்பினேன். ஆனால், கண் திறந்ததால் தெரிந்தது என்னவென்று நான் சொன்னதை நீங்கள் நம்பவில்லையே, அதைப் பற்றித்தான்.”

தேக்கன் ஒருகணம் பதற்றமானான். “மனிதக் கண்கள் அந்த மரப்புதருக்குள் எப்படி இருக்க முடியும்?” என்றான்.

“எப்படி இருக்க முடியும் என எனக்குத் தெரியாது. ஆனால், இருந்ததை நான் பார்த்தேன்” என்றான் அலவன்.

தேக்கன் சற்றே நிதானம்கொண்டு சிந்தித்தான். நாகக்குடியினரின் பார்வை ஆற்றல் அளவிட முடியாதது என்பது நினைவுக்கு வந்தது. `ஆனாலும், அந்தப் பெரும்புதருக்குள் மனிதர்கள் எப்படி, எங்கிருந்து போக முடியும்?’ சிந்தித்தபடி நின்றான்.

கேள்விகள் உருவாகிவிட்டால், அவை பதிலின்றி உதிராது. இயல்பாக உதிராத கேள்விகளை உடைத்தால், அவை மீண்டும் தழைக்கும். தேக்கன் முடிவுக்கு வந்தான். ஆசானுடன் மாணவனோ, மாணவனுடன் ஆசானோ சொல் மறுத்துப் பயணிக்க முடியாது. ‘அலவன் கருத்தை அவனே உதிர்த்தாக வேண்டும்’ என முடிவுசெய்த கணத்தில் தேக்கனின் கால்கள் திரும்பின.

மீண்டும் மர அடிவாரம் நோக்கி வந்தனர். இலையில் பரப்பி வைக்கப்பட்ட மீதப்பழங்கள் அப்படியே இருந்தன. அவை தேவவாக்கு விலங்குக்கு மிகப்பிடித்த பழங்கள். எனவே, ‘அச்சத்தால் உள் மறைந்திருக்கும் தேவவாக்கு விலங்குகள், நாம் அந்தப் பழங்களை வைத்துவிட்டுப் போனவுடன் வேகவேகமாக வந்து சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று அந்த விலங்கு வந்து பழம் எடுக்கவில்லையே’ எனச் சிந்தித்தபடியே நின்றான் தேக்கன். சிறிது நேரமானது. மழைக்காலமாதலால் உள்ளொடுங்கிக் கிடக்கும் என நினைத்தான்.

`அலவனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வேலைகொடுப்போம். நினைவிலிருந்து கசப்பு மறைய உதவியாக இருக்கும்’ என முடிவுசெய்தான். குறிப்பிட்ட இடைவெளியில் எல்லோரையும் மரப்புதருக்குள் போகச் சொன்னான் தேக்கன். ``உள்ளே போகும்போது கொடிகளையும் சிறுகொப்புகைளையும் வளைத்து ஒன்றோடொன்று முடிச்சிட்டுக்கொண்டே போங்கள். அப்போதுதான் சரியான வழி பார்த்து வெளிவர முடியும். இல்லையென்றால், வெளிவர  திசை  தெரியாமல் மாட்டிக்கொள்வீர்கள். இந்த மரப்புதர் எவ்வியூரின் பாதி அளவு பரப்புகொண்டது. எனவே, கவனமாகப் போய்த் திரும்பவேண்டும்” என்றான். “நான் சீழ்க்கை அடித்ததும் சென்ற வழியிலேயே வெளியேறுங்கள்” என்றான். மாணவர்கள் கவனமாகக் கேட்டனர்.

“ஒருவேளை, வெளிவர முடியாத சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டால் சீழ்க்கையொலி எழுப்புங்கள். நான் உள்ளே வந்துவிடுகிறேன்.”

கசப்பிலிருந்து எண்ணங்கள் மாறி உள்ளே நுழைவதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியைக் காண்பித்தான் தேக்கன். ஆசானின் முதல் பயிற்சி தொடங்கிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டனர். இதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களை இயக்கத் தொடங்கியது.

மரம் விலக்கி உள்நுழைந்தனர். சிலருக்கு எளிதாக உள்நுழையும்படி இடைவெளி இருந்தது. சிலருக்கு உள்நுழைவதே கடினமாக இருந்தது. ஆனாலும், அனைவரும் உள்நுழைந்தனர். அலவன் எந்த இடத்தில் மனிதக் கண்களைப் பார்த்ததாகச் சொன்னானோ, அதை நோக்கி உட்செல்ல அனுப்பப்பட்டான்.

அவர்கள் செடி கொடிகளை விலக்கி உள்நுழையும் ஓசை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளொடுங்கிப் போய்க்கொண்டிருந்தது. கார் காலமாதலால், செடிகொடிகளின் அடர்த்தி மிக அதிகமாக இருந்தது. எனவே, நுழைந்த சிறிது நேரத்திலேயே பார்வையிலிருந்து மறைந்தனர். தேக்கன் வெளியில் இருந்தபடி மரக்கூட்டத்தைச் சுற்றிவந்துகொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85f
‘இந்த முறை பயிற்சி ஏன் உன்னுள்ளிருந்து தொடங்குகிறது?’ என, மனம் கொற்றவையிடம் கேட்டுக்கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல, `தான் எடுத்த முடிவு சரிதானா?’ என்ற வினா எழத்தொடங்கியது. `அலவன் பார்த்தது மனிதக்கண்கள் அல்ல என்று அவனை நம்ப வைக்க எல்லோரையும் உள்ளே அனுப்பியிருக்க வேண்டுமா?’ எனத் தோன்றியது. உள்ளிருந்து பறவைகள் கலையும் ஓசை அவ்வப்போது கேட்டது. தேக்கன் வெளியே காத்திருந்தான். ‘காவல்குடி வீரர்கள் இங்கு இருந்திருந்தால், இந்தச் சிக்கலே இல்லை. அவர்கள் பகரி வேட்டைக்குப் போய் இன்னும் ஏன் திரும்பாமல் இருக்கிறார்கள்?’  என வினாக்கள் நிற்காமல் எழுந்துகொண்டே இருந்தன.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85e‘தான் எடுத்த முடிவின்மீது இவ்வளவு மறுசிந்தனை இதுநாள்வரை வந்ததில்லை. இப்போதே வருகிறது? வயதானால் உறுதிப்பாடு அதிகரிக்கத்தானே வேண்டும்’ - எண்ணங்கள் ஓடியபடி இருக்க, பொழுதும் கடந்துகொண்டிருந்தது. `உள்ளே சென்றவர்களை வெளியேறி வரச்சொல்லலாம்’ எனத் தோன்றியது.

குறுங்கட்டிதான் முதலில் உள்ளே போனவன். அவன் போன இடத்திலிருந்து முதல் சீழ்க்கையொலியை எழுப்பினான் தேக்கன். அடுத்து ஒவ்வொரு மாணவரும் உள்ளே நுழைந்த இடத்திலிருந்து சீழ்க்கை அடித்தான். சீழ்க்கையொலி ஈட்டிபோல சல்லெனக் காற்றில் பாய்ந்து செல்லக்கூடியது. அதுவும் தேர்ந்தவனின் அடிநாக்கிலிருந்து கிளம்பும் ஒலி மலைமுகட்டுக்குக்கூட கேட்கும். தேக்கன் மிகவும் கட்டுப்படுத்திக் குறிப்பொலியாக அதைப் பயன் படுத்தினான். சீழ்க்கையொலியைப் பல்வேறு முறையிலும் ஏற்ற இறக்கத்துடனும் பயன்படுத்தப் பழகியவன் அவன்.

மாணவர்கள் திரும்பும் ஓசை எதுவும் கேட்கிறதா எனக் கவனித்தபடி இருந்தான். அவர்கள் அதிகத் தொலைவு உள்நுழைந்துவிடவில்லை. மூன்று பனை தொலைவைக் கடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, வேகமாக வந்து விடுவார்கள் எனக் காத்திருந்தான் தேக்கன்.

பறவைகள் கலையும் ஒலியும் பிற ஓசைகளும் கேட்டபடி இருந்தன. மாணவர்களின் சீழ்க்கையொலி எதுவும் கேட்காததால், ஆபத்து எதுவும் இல்லை என்பது புரிந்தது. தேக்கனின் கண்கள் வழிபார்த்துக் காத்திருந்தன.

குறுங்கட்டிதான் முதலில் வெளிவந்தான். மேலெல்லாம் செடி கொடிகள் சுற்றிக்கிடந்தன. எல்லாவற்றையும் இழுத்துப் பிய்த்துக்கொண்டிருந்தான். அடுத்து சிறிது நேரத்தில் மடுவன் வந்தான். மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கியது. அவனைத் தொடர்ந்து அவுதி வந்தான். ஒருவர் பின் ஒருவராக வெளிவந்தனர். எட்டாவது ஆளாக அலவன் வந்தான். இன்னும் மூன்று பேர் வெளிவரவேண்டியிருந்தது.

அலவன் சொல்ல ஒன்றும் இருக்காது எனத் தேக்கனுக்குத் தெரியும். அதனால், வெளிவரவேண்டிய மூன்று பேரை நோக்கியே அவன் கவனம்கொண்டிருந்தான். ‘அவர் கேட்காததனாலேயே புரிந்துகொண்டார்’ என்பது அலவனுக்கும் தெரிந்தது. அவன் எவ்வளவு முயன்றும், உள்ளுக்குள் யாரும் தட்டுப்படவில்லை. உடலில் அங்குமிங்கும் கிழிபட்டாலும் உள்ளுக்குள் சிக்கிக் கொண்டால், இரவெல்லாம் அங்கேயே கிடக்க வேண்டியதாயிருக்கும். பொழுதுக்குள் வெளியேறி வந்தது, எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

சற்று நேரம் கழித்து இளமன் வந்தான். அவனைத் தொடர்ந்து முடிநாகன் வந்தான். மூத்தவனான கீதானியைத் தவிர எல்லோரும் வந்துவிட்டார்கள். பொழுதாகிக் கொண்டிருந்தது. கீதானி உள்ளே நுழைந்த இடத்தில் நின்று புதருக்குள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். வருவதற்கான ஓசை எதுவும் கேட்கவில்லை. தேக்கன் சற்றே புதர் விலக்கி உள்ளே பார்த்தான். இடைவெளியற்று இருப்பதால், எதுவும் தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை சீழ்க்கை அடித்தான். மாணவர்கள் எல்லோரும் தேக்கனை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

நேரமாகிக்கொண்டிருந்தது. தேக்கனின் முகக்குறிப்பு மாறத் தொடங்கியது. ‘இன்னும் சற்றுநேரத்தில் பொழுது மறைந்துவிடும். அதற்குள் அவன் வெளிவந்தால்தான் உண்டு. வர முடியாவிட்டால் அவன் சீழ்க்கை அடித்திருப்பானே, ஏன் அடிக்காமல் இருக்கிறான்? ஒருவேளை விலங்கால் கடுமையாகத் தாக்கப் பட்டிருப்பானோ! என்ன செய்வது, நாம் உடனே உள்ளே போகலாமா, உள்ளே போனால் எவ்வளவு தொலைவு போவது? இருட்டிவிட்டால், வெளியே புற்களுக்கிடையில் விழுந்து கிடப்பவனைத் தேடுவதே கடினம், இந்த அடர்புதருக்குள் எப்படித் தேட முடியும்?’ தேக்கன், முடிவெடுக்க முடியாமல் திணறினான்.

பறவைகள் அடையும் நேரமாகி விட்டதால், ஓசை அதிகமாகவே இருந்தது. ஆனாலும், தேக்கன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. மாணவர்களிலேயே கீதானிதான் மூத்தவன். உடல் வலுவில் மிகச் சிறந்தவன். அவன் எளிதில் விழுந்துவிட மாட்டான் எனத் தோன்றியது. ஆனாலும், அவன் ஓசை எழுப்பாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மனம் திணறத் தொடங்கியது. எந்த முடிவு என்றாலும் விரைவில் எடுத்தாக வேண்டும். நேரம் கடந்துகொண்டிருக்கிறது. முடிவெடுக்க முடியாத தேக்கனின் தயக்கம் நீண்டு கொண்டி ருந்தது. மரங்களில் அடையும் பறவைகளின் ஓசை அதிகமாகிக்கொண்டே இருந்தது.

‘சரி, இனியும் காலம் தாழ்த்தவேண்டாம்’ என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கும்போது உள்ளுக்குள் ஏதோ ஓசை கேட்பதுபோல் இருந்தது. தேக்கன் கூர்ந்து கவனித்தான். மாணவர் களும் உற்றுக் கவனித்தனர். உள்ளுக்குள்ளிருந்து செடி கொடிகளை விலக்கி நகரும் ஓசை துல்லியமாகக் கேட்கத் தொடங்கியது. அது, ஒருவன் நடந்துவரும் ஓசையல்ல; ஓடிவருபவனின் காலடியோசை என்பது புரியத் தொடங்கியது.

‘கீதானிதான் ஓடிவருகிறான். ஆனால், ஏன் ஓடிவர வேண்டும்? எதுவும் விலங்கு துரத்துகிறதா... அப்படியென்றால் சீழ்க்கை அடிக்கலாமே! நாம் உடனடியாக உள்ளே போய் உதவ  முடியும். ஏன் சீழ்க்கை அடிக்காமல் வருகிறான்? பலவற்றையும் சிந்திக்கும் ஆற்றல்கொண்டவன் தானே அவன். நிதானமாக வராமல், அவசரப் பட்டு ஓடத் தொடங்கினால் செடி கொடிகளை இங்கும் அங்குமாக விலக்கிப் போகும்போது ஏற்படுத்திவிட்டுப்போன முடிச்சுகளைப் பார்க்காமல் விட்டுவிடுவோம். வழி தெரியாமல் உள்ளுக்குள்ளே சுற்றவேண்டியிருக்கும்’ எனச் சிந்தித்தபடி பதற்றத்தோடு தேக்கன் நின்றுகொண்டிருந்தான். ஓசை நெருங்கத் தொடங்கியது. அவன் வேகம் மிகவும் கூடியது. எல்லோரும் உள்ளுக்குளிருந்து கீதானி என்னவாக வெளிவரப்போகிறான் என்ற பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85g

ஒருகணத்தில் மர இடைவெளிகளைப் பிய்த்துக்கொண்டு வெளியே விழுந்தான் கீதானி. அவன்மேல் நூற்றுக்கணக்கான கொடிகள் சுற்றிக்கிடந்தன. ஓடிப்போய்ச் சூழ்ந்தனர் மாணவர்கள். மரத்துக்குள்ளிருந்து அவன் வந்த திசை நோக்கி முழு ஆவேசத்தோடு மறித்து நின்றான் தேக்கன். உள்ளுக்குள்ளிருந்து எந்த விலங்கு வந்தாலும், ஒரே அடியில் வீழ்த்தும் வெறிகொண்டு நின்றான் தேக்கன்.

வெளியில் வந்து விழுந்த வேகத்தில் ஏதோ சொல்ல வந்தான் கீதானி. கசப்பு, தொண்டையில் நஞ்சாய் இறங்கிக்கொண்டிருந்தது. அதையும் மீறி, ``தேக்கனைக் கூப்பிடு” என்று மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனைக் கைகாட்டிச் சொன்னான்.

மாணவர்கள் தேக்கனை உடனே அழைத்தனர். உள்ளுக்குள் இருந்து பார்வையை விலக்காமல் அரை மனத்தோடு கீதானியின் அருகில் வந்தான் தேக்கன். அவரைப் பார்த்து மூச்சிரைக்கச் சொன்னான், ``அவர்கள் வெளியேறுகிறார்கள்.”

தேக்கனுக்கு அவன் சொல்வது புரியவில்லை. கீதானியால் தெளிவாகப் பேச முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ பிரச்னை, அதைப்பற்றிச் சொல்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவன் வெளியேறிய பாதையிலிருந்து ஏதோ ஒன்று வரப்போகிறது எனத் தோன்றியது. கீதானியையும் மரத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P85h
தான் சொல்லவருவது தேக்கனுக்குப் புரியவில்லை என்பது கீதானிக்குத் தெளிவாக விளங்கியது. மூச்சிரைப்பை முயற்சிகொண்டு கட்டுப்படுத்தியபடி, நஞ்சுக் கசப்பை எவ்வளவு குடித்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்துக் கத்தினான்,  ``கிழவா… அவர்கள் எதிர்திசையில் வெளியேறி ஓடுகிறார்கள்.”

தேக்கன் அதிர்ச்சி அடைந்தான். அலவனுக்குப் புரியத் தொடங்கியது. சொல்லி முடித்த கீதானி, கசப்பின் கொடுமையைத் தாங்க முடியாமல் சுற்றியிருந்த செடி கொடிகளை வாயில் போட்டு அமுக்கிக் கடித்தான். கண்கள் பிதுங்கி நீர் தாரைதாரையாக வழிந்துகொண்டிருந்தது.

தேக்கனின் கைகள் முதன்முறையாக நடுங்கின. அவன் சொல்லவருவதை அறிவு நம்ப மறுத்தது. ஆனால், இனியும் நம்பாமல் இருக்க முடியாது. பன்றியின் கிடைவாய்க்கொம்பை இரு உள்ளங்கைகளிலும் இறுக்கிப் பிடித்தபடி, மரக்கூட்டத்தின் பின்புறம் நோக்கி ஓடத் தொடங்கினான் தேக்கன். வாய் பிளந்து அவன் கத்திய ஓசையில் மரமெங்கும் இருந்த பறவைகள் படபடத்தன.

`நாமும் அவரைப் பின்தொடரலாம்’ என மாணவர்கள் எழுந்தபோது, அவர்களின் பார்வையிலிருந்து தேக்கன் மறைந்து நீண்ட நேரமாகியிருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty வீரயுக நாயகன் வேள்பாரி - 39

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 1:33 pm

கொற்றவைக்கூத்து நடைபெறும் பெரும் மரப்புதரின் பின்புறம் நோக்கி ஓடினான் தேக்கன். எவ்வியூரின் பாதியளவு பரப்பைக்கொண்ட அடர்மரத்தோப்பின் பின்வட்டத்தை வேகமாகக் கடந்துகொண்டிருந்தன அவனுடைய கால்கள். மரத்தோப்பு முடிந்து காட்டின் சரிவுப்பகுதி தொடங்குமிடம் மிகக்குறுகிய அளவினைக் கொண்டது. அதில் ஓடிக்கொண்டிருந்த தேக்கனின் வேகம் யாரும் பார்த்தறியமுடியாத ஒன்று.

தேக்கன் ஓடத்தொடங்கியபொழுது மாணவர்கள் சிலர் உடனெழுந்து பின்னால் ஓடினர். சிலர் மட்டும் கீதானிக்கு உதவிசெய்துகொண்டிருந்தனர். கீதானி சற்றே மூச்சுவாங்கி இளைப்பாறினான். அவனது வாய் முணுமுணுக்க நினைத்தது. ஆனால், கசப்பு அதனை அனுமதிக்கவில்லை. ஆனாலும், சொற்கள் உள்ளுக்குள் உருண்டுகொண்டே இருந்தன. `அவர்கள் நம்மைப்போன்ற மனிதர்கள் அல்ல; பார்க்கவே அச்சந்தரும் உருவத்தினராக இருந்தனர்.’
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83a
இங்குமங்குமாக ஓடிய தேக்கனால், அவர்கள் தோப்பைவிட்டு எப்பக்கம் வெளியேறினார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ‘யார் அவர்கள்? எத்தனை பேர்? பறம்புமலையில் இவ்வளவு தொலைவு அவர்களால் எப்படி ஊடுருவ முடிந்தது? ஏன் இங்கு வந்தார்கள்?’ வினாக்கள் மண்டையைத் துளைத்துக் கொண்டிருந்தன. பதற்றம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வெளியேறிய தடம் எதுவும் மண்ணில் தெரியவில்லை. ‘மீண்டும் கீதானியை விசாரிக்கலாமா’ என்று தோன்றியது.

சட்டென பிடிபட்டவனாய் அருகிலிருந்த நாங்கில் மரத்தின் மீது ஏறினான். கொப்புகளைப் பிடித்து வேகவேகமாக உச்சிக்கிளைக்குப் போனான். நார்ச்சத்து அதிகமுள்ள மரமாதலால் தேக்கனை, கிளையின் நுனிவரை அது அனுமதித்தது. மர இலைகளைத்தாண்டி அவன் தலை வெளியில் நீண்டது. கண்ணெதிரே மலைச்சரிவின் பள்ளம் முடியுமிடத்தில் சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதனைக் கடந்தால் ஆதிமலையின் தொடக்கம். நான்கு மடிப்புகளைக்கொண்டது ஆதிமலை. 

மரத்தோப்புக்குள் இருந்து வெளியேறியவர்கள் சிற்றாற்றைக் கடந்திருக்க முடியாது. பொழுது மறைய இன்னும் சிறிதுநேரமே இருந்தது. அவர்கள் சிற்றாற்றைக் கடந்து ஆதிமலைக்கு உள்ளே நுழைவதை இங்கிருந்து துல்லியமாகப் பார்த்துவிடலாம். அவர்கள் எத்தனை பேர் என்பதனை அறிய தேக்கனின் கண்கள் அலைமோதிக்கொண்டிருந்தன. ஆற்றின் ஒருமுனையில் இருந்து மறுமுனை நோக்கி கண்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தான். மெல்லிய காற்றில் மரக்கொப்பு அசைந்தாடியது. மிகக்கவனமாக நுனிக்கொப்பில் நின்று கொண்டிருந்தான். கொப்பின் கவட்டையை விரல்கள் பற்றியிருக்க, உடலின் எடையை காற்றில் ஏற்றி கண்களை ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.

அவர்கள் இங்கிருந்து போனால், ஆற்றின் எவ்விடத்தைக் கடப்பார்கள் என்று அவன் எதிர்பார்த்த இடத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால், வேறுதிசையில் சிலர் ஆற்றைக் கடப்பது தெரிந்தது.
தேக்கனின் கண்கள் உற்றுநோக்கின. வந்துள்ளவர்கள் ஐந்து பேர். ஒவ்வொருவரும் முதுகுக்குப் பின்னால், நீள்வடிவில் குழல்போன்ற நரம்புக் கூடையைக் கட்டியிருந்தனர். அதனைச் சுமந்தபடி படுவேகமாக ஆற்றைக்கடந்து ஆதிமலையின் முதற்குன்றுக்குள் நுழைந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83b
மரத்திலிருந்து தாவிக்குதித்து அவர்களைக் கொன்று வீசவேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால், பதற்றப்படாமல் கவனமாகப் பார்த்தான். வேறு யாரும் பின்தொடர்கிறார்களா என்று சிறிதுநேரம் கவனித்தான். யாரும் பின்தொடரவில்லை. வெறும் ஐந்து பேர் இத்தனை மலைகளைக் கடந்து இவ்விடம் வந்து உயிரோடு திரும்பிச்செல்கின்றனர். கண்கள் பார்ப்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனாலும், நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. மரத்திலிருந்து வேகமாக நழுவியபடி கீழிறங்கினான். பொழுது சாய்ந்துகொண்டிருந்தது.

மாணவர்கள் எல்லோரும் மர அடிவாரம் வந்து அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். எல்லோர் கண்களிலும் பெரும்பதற்றம் இருந்தது. ஆசான் சொல்லப்போகும் வார்த்தையை எதிர்பார்த்திருந்தனர்.

இறங்கிய வேகத்தில் தேக்கன் சொன்னான், ``அவர்கள் ஆதிமலையின் வலப்புறம் நோக்கி ஓடுகிறார்கள். பறம்பு மலையின் தன்மை அவர்களுக்குத் தெரியவில்லை. வலப்புறம் நோக்கி ஓடும் அவர்கள் மச்சக்கடவின் வழியாகத் தான் முதற்குன்றைத் தாண்ட வேண்டும். இங்கிருந்து குறுக்குவழியிற்போனால், அவர்களுக்கு வெகுமுன்னரே நாம் போய்விடலாம். கடவைத் தாண்டும்பொழுது ஒருவனின் உடலிலும் உயிர் மிஞ்சக் கூடாது” என்று சொல்லியபடி வெறிகொண்டு கிளம்பினான் தேக்கன். மாணவர்கள் அவனோடு ஓடத்தொடங்கினர். ஓடிக்கொண்டே தேக்கன் கேட்டான், ``மச்சக்கடவுக்குச் செல்லும் வழி யாருக்குத் தெரியும்?”
``எனக்குத் தெரியும்” என்றான் முடிநாகன். அவசரத்தில் வாய்திறந்ததால், குடம் நஞ்சு உள்ளே கொட்டியது. தாங்கமுடியாமல் ஓடிக்கொண்டே காறித்துப்பினான்.

``கீதானியும் அலவனும் என்னைப் பின்தொடர முயலுங்கள். மற்றவர்கள் முடிநாகனோடு இணைந்து வாருங்கள். நீங்கள் வரும்பொழுது அவர்களை மண்ணோடு மண்ணாகச் சாய்த்து வைத்திருப்போம்” என்று அவன் சொல்லிய பொழுது கால்கள் புரவியின் வேகங்கொண்டன.

காட்டில் ஓடுவது சிறந்த கலை. கொடிகளைத் தாண்டவும், முன்காலை மட்டும் ஊன்றவும், படர்தாவரங்களின் மீது குத்துக்காலை பயன்படுத்தவும், பாதமறியா வேகம்கொண்டு ஓடவும் இணையற்ற பயிற்சி வேண்டும். செத்தைகளும் சருகுகளும் கால்களை எளிதில் ஏமாற்றக்கூடியன. பாறைகளும் பாசிகளும் பாதத்தின் மீதான பகையைக் காலங்காலமாக வளர்த்துவருவன. கோரைகளின் வகைகளையும் புற்களின் குணங்களையும் பகுத்தறிய முடியாதவன், பத்தாவது அடியில் மண்டியிட்டு விழுவான். தண்டிலும்,  இலையிலும், கணுவிலும் நஞ்சை வைக்காமல் உடலெங்கும் இருக்கும் சுனைகளில்  நஞ்சை வைத்துள்ள   செடிகொடிகளை அவற்றின் வாசனை வழியே கண்டறிந்து விலகத்தெரிந்தவன் மட்டுமே காட்டில் ஓடி இலக்கை அடைய முடியும்.

மூக்கின் மோப்ப ஆற்றலும், கண்பார்வையின்  கூரிய கவனிப்பும் கால்களை இறகுகள்போல வீசியெறியும் பயிற்சியும் கொண்ட ஒருவனால்தான் காட்டை ஓடிக் கடக்க முடியும். 

வேட்டை விலங்குகளின் நான்கு கால் பாய்ச்ச லுக்குத் தப்பித்துத்தான் மனிதன் பறம்புநாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். எனவே, அதனுடைய நான்கு கால் வேகத்தையும் மிஞ்சுவதாக  மனிதக்கால்கள்  வளம் பெற்றுள்ளன. தேக்கனின் கால்கள் அதனையும் மிஞ்சி ஓடிக்கொண்டிருந்தது.

பொழுது மறைந்து நிலவின் ஒளி படரத்தொடங்கியது. தேக்கனின் ஓட்டத்தை எப்படியாவது நெருங்கிவிட வேண்டும் என்று ஆத்திரங்கொண்டு பின்தொடர்ந்தான் கீதானி. அவனைவிட வயதிலும் உருவத்திலும் இளைத்தவனான அலவன் பல இடங்களில் கீதானியைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தான்.

நேரம் கூடக்கூட தேக்கனின் வேகம் கூடிக்கொண்டிருந்தது. அவனது மனதில் கேள்விகள் அடுக்கடுக்காக மேலெழுந்து கொண்டிருந்தன. கீதானி மரப்புதருக்குள் இருந்து வந்து, அவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்று சொன்ன பொழுதுக்கும் அவர்கள் சிற்றாற்றைக் கடக்கும் நேரத்திற்கும் இடையுள்ள நேரத்தைக் கணக்கிட்டபொழுது மனம் முதல் அதிர்ச்சியை அடைந்தது. `இவ்வளவு குறுகிய நேரத்தில் அவ்வளவு தொலைவு எப்படிப் போயிருக்க முடியும்?’ என்று வியந்தான். அவர்களின் வேகம் பிடிபடத் தொடங்கியது. ‘அது  வழக்கமான வேகமல்ல’ என்று மனம் கணித்தது.

ஓடிக்கொண்டே கேட்டான், ``அந்தக் கூடையில் என்ன கொண்டுபோகிறார்கள்?”

மிகத்தொலைவில் வந்துகொண்டிருந்த இருவரின் காதுகளிலும் வினா சரியாக விழவில்லை. ``என்ன கேட்கிறீர்கள்?” எனக் கத்தினான் அலவன்.

தேக்கன் மீண்டும் கத்திச் சொன்னான். கீதானி இன்னொருமுறை வாய்திறந்து சொல்லி நஞ்சுக்கசப்பை  விழுங்க ஆயத்தமாக இல்லை. ‘நான் ஓடியாக வேண்டும். அதுதான் இப்போதைய தேவை’ என எண்ணியபடியே வேகமாக ஓடினான்.

முன்னால் போய்க்கொண்டிருந்த அலவன் அதே வேகத்தில் பின்னால் திரும்பி, தேக்கன் கேட்டதை மீண்டும் கேட்டான். கீதானி கையசைவாற் சொல்ல, அதனைப் புரிந்துகொண்ட அலவன் மீண்டும் முன்புறம் திரும்பி ஓடியபடி கத்திச் சொன்னான், ``அவர்கள் தேவவாக்கு விலங்கைப் பிடித்துக்கொண்டு போகிறார்களாம்.”

அலவன் சொன்ன சொல் பெரும்மரம் சாய்வதைப்போல தேக்கனின் மீது சாய்ந்தது. அதிர்ந்தான் தேக்கன். ‘ஓடுவதா, நிற்பதா?’ மனம் தள்ளாடியது. ‘நம்பமுடியாத சொல். என்ன நடக்கிறது இங்கு? எப்படி நடந்தது?
பறம்பு மலையை வேற்று மனிதர்கள் கடந்துவந்து தேவவாக்கு விலங்குகளை எப்படிப் பிடித்துக்கொண்டு போகமுடியும்?’ சிந்திக்கச் சிந்திக்க விடை கிடைக்காமல் வெறி கூடிக்கொண்டிருந்தது. முன்னிலும் வேகங்கொண்டு ஓடினான் தேக்கன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83c
அவனுக்குப் பின்னால் வெகுதொலைவில் அலவன் வந்துகொண்டிருந்தான். புதர்கடந்து அடர்மரங்களுக்குள் நுழைந்தான் தேக்கன். அவனை இனி கண்ணிற்பார்க்க இயலாது. குறிப்பின் அடிப்படையில்தான் போக முடியும். எனவே, அடுத்ததாக வந்துகொண்டிருந்த அலவன் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்தான். நேரங்கழித்து கீதானி வந்து சேர்ந்தான். இருவரும் இணைந்து அடர்காட்டுக்குள் நுழைந்தனர்.
தேக்கனின் ஓட்டம் அதிவேகமாக இருந்தது. காரணம்,  எதிரிகளின்  ஓட்டத்தைக் கணக்கிட்டதால், மச்சக்கடவிற்குத் தான் போகும் முன், அவர்கள் அதனைக் கடந்துவிடக் கூடாது என்பதால், இன்னும் வேகமாக ஓடினான். 

நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவான குறுக்குவழியில் தேக்கன் ஓடிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில், நான்கு பங்கு அதிகமான சுற்றுவழியை எளிதாகக் கடந்து எதிரிகள்  வந்துகொண்டிருந்தனர்.

நிலவு ஏறியிருந்தது. காடெங்கும் ஒளி படர்ந்தது. மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்க மச்சக்கடவினை அடைந்தான் தேக்கன். வந்த வேகத்தில் சற்றும் இளைப்பாறாமல், பாறையின் மீதேறிக் கண்களை ஓடவிட்டான். இருளில் எதுவும் பிடிபடவில்லை. மூச்சுவாங்கி ஆசுவாசப்பட்டான். மீண்டும் தலைநீட்டி முன்புறம் சரிந்துள்ள காட்டைப் பார்த்தான். வெகுதொலைவில் பறவைகள் கலைந்து பறந்ததைக் கவனித்தான். வருவது அவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். அவர்கள் வந்துகொண்டிருக்கும் இடத்தைக் கணித்தான்.

இக்கடவினை நோக்கித்தான் வருகிறார்கள். அப்படியென்றால், போகும்பொழுதும் இவ்வழியாகத்தான் போயிருப்பார்கள். இக்கடவு அவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று. மனம் அவர்களின் திசைவழியையும்
எண்ணவோட்டத்தையும் கணித்துக்கொண்டிருந்தது. மாணவர்கள் இருவரும் கீழ்ப்புறம் இருந்து வரவேண்டும். எதிரிகள் வருவதற்குள் வந்து விடுவார்களா என எண்ணிக்கொண்டிருக்கையில் இருவரும் வந்து சேர்ந்தனர். ஒருவகையில் மாணவர்கள் நிகழ்த்தியது வியப்பிற்குரிய ஓட்டந்தான். தேக்கனின் கண்கள் ஆசானாய் இருந்து பெருமைப்பட நேரமற்று இருந்தன.

தேக்கன் தாக்குதலுக்கான வழிவகைகளைச் சிந்தித்தான். கடவின் விளிம்புப்பகுதியில் இருவரையும் மறைந்து நிற்கச் சொன்னான். ``கடவின் வழியாக முதலில் வருபவனை நான் அடித்துத் தூக்கிய கணத்தில் பின்னால் வருகிறவர்கள் சுதாரித்துவிடுவார்கள். உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். உடனே கடவின் பிளவுக்குள் வராமல் சுற்றிவர முடிவுசெய்வார்கள். அப்பொழுது நீங்கள் விளிம்புப் பகுதியில் ஈட்டிகள் மட்டும் வெளியே தெரிவதுபோல நீட்டிப்பிடியுங்கள். எல்லாபுறமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டபின் அவர்கள் பதற்றத்தில் திசை தடுமாறுவார்கள்.
வேறுவழியில்லாமல் துணிந்து கடவினைக் கடக்க முயல்வார்கள்  அல்லது  திசைக்குழப்பத்தில் பின்வாங்க நினைப்பார்கள். ஒருபோதும் விளிம்பில் தெரியும் ஈட்டி முனைகளை நோக்கி வர மாட்டார்கள்.

அவர்கள் கடவினைத் தாண்ட நினைத்தாலோ, பின்வாங்கி நின்றாலோ நான் பார்த்துக்கொள்வேன். அக்கணம் அவர்களுக்குள் முளைக்கும் அச்சமே அவர்களை  அழித்துவிடும். அவர்கள்  சுதாரிப்பதற்கு முன்பே அழிவின் கொடூரத்தை அவர்களின் கண்களுக்குக் காட்டுவேன்” என்றான் தேக்கன்.

மூக்கு விடைத்து, மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கிய இருவரையும் தேக்கனின்  ஆவேசம் இறுகப்பற்றியது. ஈட்டியை உறுதிகொண்டு பிடித்தனர். கீதானி வலப்புறமும் அலவன் இடப்புறமுமாக விளிம்பு நோக்கிப் போனார்கள். தேக்கன் முதல் ஆளை அடித்துத் தூக்கும்வரை ஈட்டியை வெளிநீட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

கடவின் ஒரு பகுதியில் மெல்ல தலைதூக்கி எட்டிப்பார்த்தான் தேக்கன். அவர்கள் வரும் நேரத்தை மனம் கணித்தபடி காத்திருந்தது. காலடித்தடங்கள் கேட்கின்றனவா என்று கூர்மையாகக் கவனித்தான். முன்புறமிருக்கும் பாறைகளிலிருந்து பறவையொன்று குரல் எழுப்பியது. அவர்கள் நெருங்கிவிட்டார்கள் என்பது தெரிந்தது. ஓடிவரும் அசைவில் தேவவாக்கு விலங்குகள் ஓசை எழும்பியவண்ணம் இருந்தன. தேக்கன் கடவுக்குள் நுழைபவனைத் தோதான திசையிலிருந்து தாக்க, கால்கள் இரண்டையும் பாறையின் செதில்களுக்கு ஏற்ப இறுக அமுக்கிக்கொண்டிருந்தான்.

கீதானியும் அலவனும் தேக்கனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். தேக்கனின் கைகள் இரண்டும் பன்றிக்கொம்பினை உள்ளங்கைக்குக் கொண்டு வந்தன. முதல் ஆள் கடவினை நோக்கி முன்னேறி வரும் ஓசை கேட்டது. தேக்கன் பாறையோடு பாறையாக சாய்ந்து அடித்துத்தூக்க ஆயத்தமாக  இருந்தான். பாறையில் காலடியோசை கேட்ட கணத்தை மனம் கணிக்கும் முன் கடவின் பிளவை ஓர் உருவம் பாய்ந்து கடந்தது. கணிக்க முடியாத வேகத்தில் நிகழ்ந்த இச்செயலை விட்டுவிடாதபடி அவன் முதுகுப்புறத்தை நோக்கி மின்னல்வேகத்திற் பாய்ந்தான் தேக்கன்.
   
கடவின் பிளவுக்குள் கால் நுழைத்த கணத்திலேயே ஆளிருப்பதை ஓடிவருபவன் கவனித்துவிட்டான். தன்னைத் தாக்கப்போகிறான் என அறிந்தவுடன் முழுவேகத்தோடு வலக்கையைத் திருப்பிச் சுழற்றினான். முதுகுத்தண்டை நொறுக்கும் வேகத்தோடு பாய்ந்த தேக்கனை, சுழன்ற அவனது வலக்கை அடித்துத் தூக்கியது. இருளுக்குள் பாறையோடு சரிந்தான் தேக்கன்.

அவன் சரிந்து உருளும் ஓசை கேட்பதற்குள் மற்ற நால்வரும் கடவினைக் கடந்தனர். கீதானிக்கு எதுவும் பிடிபடவில்லை. இருளுக்குள் படுவேகமாக உருவங்கள் மறைவதும் யாரோ தூக்கி வீசப்பட்டதும் தெரிந்தது. ஆனால், யார் என்ன என்று தெரியவில்லை. ‘ஒருவன் விழுந்துவிட்டான். வெளியில் ஈட்டியை நீட்டலாம்’ என அவன் எண்ணிக்கொண்டிருக்கையில் இடப்புற விளிம்பில் நின்றிருந்த அலவன் கடவினை நோக்கி ஓடிவந்தான்.

ஈட்டியை வெளிப்புறம் நீட்டாமல் ஏன் கடவினை நோக்கி ஓடிவருகிறான் என்று  கீதானிக்குப் புரியவில்லை. ஆனால், அலவனின் கண்கள் நடந்ததைத் துல்லியமாகப் பார்த்தன. அவர்கள் தாக்கிய வேகத்தில் ஆசான் மேற்பாறையில் மோதிக் கீழே விழுந்ததைப் பார்த்த கணம் உறைந்து நின்ற அலவன், சற்றுநேரம் கழித்துத்தான் ஆசானை நோக்கி ஓடிவந்தான். அதன்பிறகுதான் கீதானி ஓடிவந்தான்.
வந்தவுடன் ஆசானின் தலையை ஏந்திப்பிடிக்க கையைக்கொண்டுபோனான் அலவன். அவன் கைப்படுவதற்குள் ஆசான் தானே தலையைத் தூக்கினான். அந்த வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. வலக்கையை ஊன்றியே நிமிர வேண்டியிருந்தது. பின்மண்டையிற்பட்ட அடி சிறுமயக்கத்தை உருவாக்கியது. கண்களை இறுக மூடித்திறந்தான்.

சற்று ஆசுவாசப்பட்டபின், ``சுனையில் நீரள்ளி வா” என்றான். கீதானி ஓடினான். யானை தாக்கியதைப்போல் உணர்ந்தது தேக்கனின் உடல்.  எழுந்து உட்கார்ந்தான். கீதானி கை நிறைய நீரள்ளி வந்தான். முகத்தில் அறைந்தும் குடித்தும் தெளிச்சி கொண்டான் தேக்கன். கீதானி மீண்டும் மீண்டும் நீரள்ளி வந்தான்.

வலதுகை கொண்டு இடது தோள்பட்டையை இழுத்து அமுக்கிப்பார்த்தான். மாணவர்களிடம் எதுவும் காட்டிக்கொள்ளக் கூடாது என மனம் போராடியது. கண்கள் மேல்சொருக, மூச்சு வாங்கியது.

கால்களை மெல்ல இழுத்து ஊன்றி எழுந்தான். எலும்புகள் எங்கும் உடைந்துவிடவில்லை. தோள்பட்டையில்தான் நல்ல அடிபட்டிருக்கிறது. அது பாறையிற்போய் தாக்கியதால், ஏற்பட்ட அடியல்ல; அவன் கைவீசி தாக்கியதால், ஏற்பட்டது. `ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன் எதிர்பாராத கணத்தில் பின்புறம் திரும்பி, இவ்வளவு ஆற்றலோடு தாக்குகிறான் என்றால், அவனது வலு எவ்வளவு? அவனது உடலுறுதியின் தன்மை என்ன? யார் இவர்கள்?’ தேக்கனின் மனம் பிடி கிடைக்காமல் போராடியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83d
கீதானி மெல்ல வாய்திறந்து சொன்னான், ``அவர்களை நான் நன்றாகப் பார்த்தேன். பார்க்கவே அச்சந்தரும் உடல்வாகு கொண்ட வர்களாக இருந்தனர்” சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கசப்பின் சுரப்பைத்  தாங்கமுடியாமல்  பெரும்பாடுபட்டான். தொண்டைக்குழியை அழுத்திய அவனது கை, சொற்களை இடைமறித்து நிறுத்தியது.

மூச்சுவாங்கியபடி தேக்கன் சொன்னான், ``அப்பேர்பட்டவனை வீழ்த்திவிட்டேன்.”

கீதானியும் அலவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தேக்கன் என்ன சொல்கிறான் எனப் புரியவில்லை.

தேக்கன் மீண்டும் சொன்னான், “அவனது ஓட்டத்தின் வேகத்தை நான் தவறாகக் கணித்துவிட்டேன். நான் நினைத்தைவிட இருமடங்கு வேகம்கொண்டிருந்தான். ஆனாலும், தப்பிச்செல்லவிடாமல் பாய்ந்தடித்தேன். துல்லியமாக அவனது பின்கழுத்து நரம்பை அடித்துவிட்டேன். அது அறுந்துவிட்டதை எனது உள்ளங்கை நன்கு உணர்ந்தது. இனி அதிகத்தொலைவு அவனால் ஓட முடியாது. சிறிது தொலைவிற்குள் விழுந்துவிடுவான்.”

மாணவர்கள் வியந்து பார்த்தனர்.

``மீதமுள்ள நால்வரை வீழ்த்தியாகவேண்டும்” என்று சொல்லியபடி எழுந்து கவனமாகப் பாறையின் மீது ஏறினான். குன்றின் சரிவு அடர்காடுகளைக்கொண்டது; அதற்குள் அவர்கள்  நுழைந்து  போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

தேக்கன் பாறையைவிட்டுக் கீழ் இறங்கினான். ``நீங்கள் வந்தவழியே திரும்பிப்போங்கள். முடிநாகன் மற்றவர்களை அழைத்துக்கொண்டு எதிரே வந்துகொண்டிருப்பான். கவனமாக இங்கே அழைத்து வாருங்கள். வேகமாக ஓடுங்கள்” என்றான்.

கீதானியும் அலவனும் மீண்டும் ஓடத் தொடங்கினர். முன்பிருந்த அதே  வேகம் உடலில் இருந்தது. மனம் சற்றே குழம்பி இருந்தது. ‘தேக்கனையே தூக்கியடிக்கும் வலு கொண்டவர்களா அவர்கள்?’ என்று அலவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ‘அவ்வளவு பெரிய மனிதனை தேக்கன் எப்படி துல்லியமாக அடித்து நரம்பை அறுத்தார்!’ என வியந்தபடியே ஓடினான் கீதானி.

அவர்கள் சிற்றோடையைத் தாண்டும்பொழுது தேக்கன் கத்தும் ஓசையைக் கேட்டு நின்றனர் இருவரும். ‘அவரது இடதுகை இறங்கிவிட்டது. நம்மிடம் அதனைக் காட்டிக்கொள்ளாமல் சரிப்படுத்துவதற்காகத்தான் இருவரையும் அனுப்பிவைத்துவிட்டு அவரே தூக்கிவைத்து அதனைச் சரிப்படுத்துகிறார்’ என்பதை இருவராலும் புரிந்துகொள்ள முடிந்தது.

சிற்றோடையைக் கடந்ததும் மாணவர்கள் எதிர்ப்பட்டனர்.  ‘பிடித்துவிட்டீர்களா அவர்களை? எங்கே வைத்திருக்கிறீர்கள்? எல்லோரையும் கொன்றுவிட்டீர்களா? யாராவது உயிரோடு இருக்கிறார்களா?’ என்னும் வினாக்கள் எல்லோர் மனதிலும் மேலெழுந்தபடி இருந்தன. ஆனால், கசப்புக்கு  அஞ்சி யாரும் வாய் திறக்கவில்லை. வினாக்கள் எதற்கும் சொல்ல விடையின்றி இருந்த கீதானிக்கும் அலவனுக்கும் கசப்பே கைகொடுத்தது. அவர்களை அழைத்துக்கொண்டு விரைவாக மச்சக்கடவுக்கு வந்து சேர்ந்தனர்.

இடக்கையின் தோள்பட்டையை ஒடங்கொடிகொண்டு இடைவிடாது சுற்றி இறுகக் கட்டியிருந்தான் தேக்கன். உள்ளுக்குள் பச்சிலையை வைத்திருக்க வேண்டும். தோள்பட்டைக்குக் கவசம் அணிவிக்கப்பட்டது போல் இருந்தது. என்ன ஆனாலும் உடனடியாக அதனைச் சரிசெய்வதற்கான ஆற்றல் அவற்றுக்கு உண்டு.

முடிநாகனும் மற்றவர்களும் வந்தவுடன் வீழ்ந்துகிடப்பவர்கள் எங்கே என்று தேடினர். யாரும் அங்கு இல்லை. மாறாக ஆசானுக்குத்தான் இடதுதோளில் கட்டுப்போடப்பட்டிருந்தது. என்ன நடந்ததென்று தெரியாமல் விழித்தனர்.

அவர்களின் வரவை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்தான் தேக்கன். வந்ததும் சொன்னான், ``கீதானி, அலவன், மடுவன், அவுதி, வண்டன், பிட்டன் ஆகிய ஆறுபேரும் என்னுடன் வாருங்கள். மீதி நான்கு பேரும் முடிநாகனோடு சேர்ந்து எவ்வியூருக்குப் புறப்படுங்கள். நம் எதிரிகள் தென்கிழக்குத் திசைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆதிமலையின் மிகக்கடினமான அடர்காடு நிறைந்த பகுதிக்குள் அவர்கள் நுழைந்துவிட்டனர். எளிதில் அவர்களால் வெளிவரமுடியாது. நாம் இடப்புறமாக நடந்தால், வெகுவிரைவாக மேலே இருக்கும் எலிவால்முகட்டிற்குப் போய்விடலாம். அவர்கள் அங்கே வரும்பொழுது அவர்களை அழித்தொழிப்போம்.

நீங்கள் எவ்வியூர் சென்று பாரியிடம் கூறி உடனடியாக  ஆதிமலையின் எலிவால்முகட்டிற்கு அழைத்துவாருங்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செல்லுங்கள்” என்றான்.
தேக்கனின் வேகம் உச்சரிக்கும் சொல் முழுவதும் ஏறியிருந்தது. தன்னால் மட்டும் முடியாது  என்றுணர்ந்த கணத்தின் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், அதே நேரத்தில் மாணவர்களை நம்பிக்கையோடு இயக்க, சொற்களை மனம் தேடியது. உள்ளுக்குள் ஊறிப்பெருகும் வெறி கணநேரத்தையும் வீணாக்கவிடவில்லை.

``எந்த வழி போவீர்கள்?”

``வந்த வழி.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 P83e
``இல்லை.  மிகவும் நேரமாகிவிடும். சிற்றோடையின் இடப்புறமாகவே சென்றால், சிறிது தொலைவில் அருவி வரும். அவ்விடத்தில் சிற்றோடையைக் கடந்து மேலே ஏறுங்கள். நேராகச் சென்றால், எவ்வியூர் போய்விடலாம்” என்றான்.

மாணவர்கள் சரியென்று தலையாட்டிச் சொன்னார்கள். அவ்வழி பற்றிய ஐயங்களுக்கு, விளக்கங்கள் தேவைப்பட்டன. ஆனாலும் கசப்பை மீறிப் பேச யாரும் தயாராக இல்லை.

முடிநாகனின் மனதுக்குள் தினவு ஏறியது. தன்னிடம் கொடுக்கப்பட்ட இப்பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டும். ஆபத்து வரும்பொழுது அதனை எதிர்கொள்ளும் இடத்தில் ஒருவன் இருப்பதுதான், வீரம் அவனுக்கு வழங்கும் வாய்ப்பு. அதனை வெற்றியாக முடிக்கவே ஒவ்வொருவனும் ஆசைப்படுகிறான்.

வலிமையான ஆயுதங்களை முடிநாகன் குழுவிற்கு வழங்கிய தேக்கன், “ஓடுங்கள்” என்று கத்தினான். பாறைப்பொடவுக்குள் இருந்த பறவையொன்று படபடத்தது. முடிநாகனும் மற்றவர்களும் அடுத்த அடி எடுத்துவைக்கும் முன் தேக்கன் சொன்னான், “ஈன்ற புலி உங்களை விரட்டுகிறது. இருளைக் கிழித்து நகரும் கால்களின் வேகம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தோடு ஓடுங்கள்.”

தேக்கன் சொல்லி முடிக்கும்முன் பாறையின் கீழ்ப்புறம் நோக்கிப் பாய்ந்தனர் ஐவரும்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 5 Empty Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum