புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
Page 3 of 19 •
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...
"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..
முன்னுரை
இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.
மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
....வீரயுக நாயகன் வேள் பாரி
(https://www.mediafire.com/file/ah8kja2b8h4q1c4/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.pdf)
http://www.mediafire.com/file/ah8kja2b8h4q1c4/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.pdf

வீரயுக நாயகன் வேள் பாரி
வேர்ட் டாகுமெண்ட்
(https://www.mediafire.com/file/blxuhambazei7yt/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.docx)
http://www.mediafire.com/file/blxuhambazei7yt/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.docx
வேர்ட் டாகுமெண்ட்
(https://www.mediafire.com/file/blxuhambazei7yt/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.docx)
http://www.mediafire.com/file/blxuhambazei7yt/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.docx
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மிக்க நன்றி நண்பரே ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உள்ளிறங்கிய பெண்கள், தாங்கள் பின்னியிருந்த சடைமுடியை அவிழ்த்தனர். கூந்தல் பரவி தோள் முழுக்கச் சரிந்தது. மெள்ள தலையை ஆட்டியபடி இருந்தனர்.
“அணங்குகள் இறங்குகின்றன’’ என்றான் பாரி.
`மோகினி’ என அஞ்சப்படும் வனதேவதைகளே அணங்குகள் ஆவர். அணங்குகள் முனங்கும் ஓசை விரிந்த கூந்தலின் வழியே வெளிவரத் தொடங்கியது. கபிலர் உற்றுப்பார்த்தபடி இருந்தார். அவரது கவனம் பாடுபவள் சொல்லிச் செல்லும் கதையின் மீதே இருந்தது.
உறையூரைவிட்டு கிடை புறப்பட்டது. கோடைவெயில் தகித்துக்கொண்டிருந்தது. அவர்கள் அதற்கு ஏற்ற நிலப்பகுதியைப் பார்த்து கிடையைச் செலுத்திக்கொண்டிருந்தனர். தோழியைக் கண்டு பம்மியபடி நகர்ந்து கொண்டிருந்தான் கோவன். அவனது பம்மலுக்கான காரணம் செம்பாவுக்கு முதலில் புரியவில்லை. நிலைகொண்டு தங்காமல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது கிடை. கோவன் மறைந்து மறைந்து சிரித்துக்கொண்டு இருந்தான். ஒரு பிற்பகல் நேரத்தில் தோழி நாணல்கூடையில் வெண்சாந்து உருண்டையைத் தூக்கியபடி கிடையின் பின்புற ஓரத்தில் வந்துகொண்டிருந்தாள். முன்புறத்தின் இடது ஓரத்தில் நடந்துகொண்டிருந்தான் கோவன். அவனது தோளில், ஈன்றகுட்டி ஒன்று கிடந்தது. பின்னால் வரும் தாய்ப்பசு நாவால் நக்க, அது துள்ளியபடி இருந்தது. அந்தக் கன்று துள்ளிவிடாதபடி அதன் கால்களை தனது இரு கைகளாலும் இறுகப்பிடித்து நடந்துகொண்டிருந்தான். அவனைக் கடந்துபோன செம்பா, தாய்ப்பசு கத்தும் ஓசையோடு சேர்த்து வலதுபுற இடுப்பில் இரு விரல்கொண்டு ஒரு நிமிண்டு நிமிண்டினாள்.
பால் பீச்சும் விரல்கள் மூங்கில் நாரைவிட வலுமிக்கவை. நிமிண்டிய விரல்களை எடுக்கும் முன்னர் துள்ளி வில்லைப்போல் வளைந்தான் கோவன். அவனைத் தாண்டி குதித்தோடியது தோளில் கிடந்த குட்டி. அது வேறு திசையில் ஓடிவிடக் கூடாது என்பதற்காகப் பாய்ந்து விழுந்து பிடித்தான். விழுந்தவனின் அருகில் புன்முறுவலோடு மண்டியிட்டு உட்கார்ந்தாள் செம்பா. அவன் பிடியில் இருந்து குட்டியை விடுவித்தாள். அவளது பிடியில் இருந்து, தன்னை விடுவித்துக்கொள்ள அவன் முயற்சி செய்யவில்லை. முயன்றாலும் அது நடக்காது எனத் தெரியும். கிடைமாடுகள் அவர்களைச் சுற்றி விலகி நடந்தன. அவளின் கன்னத்தை வாலால் தட்டிவிட்டுப்போனது கிடாரி ஒன்று.
பறவைகள் மொய்த்துக்கிடக்கும் நாணல் கூடையைத் தூக்கிவந்த தோழியின் கண்கள் கிடையை மேய்ந்தன. இருவரையும் காணவில்லை. குறுக்கும் நெடுக்குமாக பறவைகள் பறந்தபடியிருக்க, அவளால் எந்தப் பகுதியையும் உற்றுப்பார்க்க முடியவில்லை. இளங்கன்று, வயிறு நிறைய பால் குடித்து முடித்தது. கோவன் மீண்டும் கன்றைத் தோளில் தூக்கியபடி எழுந்தான். உடன் எழுந்தபடி செம்பா சொன்னாள், “அவள் இன்னொரு முறை வந்து கேட்டாள் சொல்... நீ இடைக்காவல்தான் இருக்க முடியும். இதழுக்குக் காவல் இருக்க முடியாது என்று.''
உரசி நகரும் கிடை வாழ்க்கை எந்நேரமும் காதலைப் பற்றவைத்தபடியே இருந்தது. கடையப்பட்ட தயிர் மத்தின் விளிம்புகளுக்கு இடையில் விரல் தேய்த்து வெண்ணெயை எடுப்பதைப்போல, திரளத்திரளக் காதலை எடுத்துக்கொண்டே நடந்தனர் செம்பாவும் கோவனும். அவர்கள் சற்றே கவனக்குறைவாக இருந்தாலும், தோழி அடிக்க வருவதாக நினைத்து புது மத்தைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவாள். அதற்குள் இன்னொரு பசு கன்றை ஈனும். துள்ள முடியாதபடி கோவன் கன்றையும், செம்பா அவனையும் பிடித்தபடி இருப்பார்கள். அவ்வப்போது விரல்கள் நிமிண்டித் திருகின. விலகும் கிடைக்கு இடையில் நிலம்தொட்டு காதல் துள்ளி எழுந்தது.
அந்தக் கிடைக்குப் பின்னால், வெகுதொலைவில் குதிரை வீரர்கள் சிலர் பல நாட்களாக வந்துகொண்டிருந்தனர். குலத்தலைவனின் உத்தரவு அது. செம்பாவை வாய் பிளந்து பார்த்தபடி கிள்ளி நின்றுகொண்டிருந்த போது, அவனது தந்தை இருட்டுக்குள் இருந்த கிடை மாடுகளைத்தான் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். மாடுகளின் கொம்புகளுக்கு இடையில் கயிறு முறுக்கிக் கட்டப்பட்டிருந்த நெற்றிப்பட்டத்தில் இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கருஞ்சிவப்பு என ஐந்து வண்ணங்களில் கற்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. அவனது கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.
மாளிகைக்கு அழைத்துப்போய் மகனைக் கட்டித்தழுவி முத்தமிட்டான் தந்தை.
“ `இருளிலும் சுடர்போல் ஒளிரும்’ என்று நீ சொன்னபோது பெண்ணைச் சொல்கிறாயோ எனத் தவறாக நினைத்துவிட்டேன். எல்லாம் மணிக்கற்கள். யாருக்கும் கிடைக்காத மணிக்கற்கள். அவற்றை நாம் அடையவேண்டும்” எனச் சொல்லி கிடையை அறிந்து வர ஆள் அனுப்பினான்.
போய்வந்தவர்கள் சொன்னார்கள்... “அவர்களின் ஊர் இருக்கும் மலை முழுவதும் இந்தக் கல் கிடக்கிறதாம். அதைவைத்துதான் மாட்டுக்குப் பட்டம் கட்டியுள்ளனர்.”
“அவர்களின் மலை எங்கும் கிடப்பது மணிக்கற்கள் என அந்த மூடர்களுக்குத் தெரியவில்லை. நாம் இந்த இருநூறு கற்களோடு ஏமாந்துவிடக் கூடாது. இந்தக் கிடையைப் பின்தொடர்ந்தே போங்கள். அந்த ஊரை அடைந்ததும் தகவல் சொல்லுங்கள்” எனச் சொல்லி அனுப்பினான். வீரர்கள் அவர்களின் பின்னால் வந்துகொண்டே இருந்தனர்.
ஒரு முன்மாலைப்பொழுதில் கிடை நகர்ந்துகொண்டிருந்தபோது, தோழி ஓசை எழுப்பி செம்பாவை அழைத்தாள்.
“அருகில் இருக்கும் ஓடையில் நீர் அருந்தி வருகிறேன். அதுவரை நீ தூக்கி வா” எனச் சொல்லி வெண்சாந்து உருண்டை இருந்த நாணல்கூடையை செம்பாவின் தலைக்கு மாற்றினாள்.
கூடை மாற்றுவதை மிகக் கவனமாகச் செய்ய வேண்டும். வெண்சாந்து உருண்டைகள் தோளில் சிந்திவிட்டால், அவற்றைக் கையால் தட்டும் முன் பறவையின் அலகு கொத்தி எடுத்துவிடும். காக்கை கொத்தினால் தோளில் சிறு கீறல் ஏற்படும். மைனாவின் அலகோ சிறு துளையிட்டு எடுக்கும். அதுவே மரங்கொத்தியாக இருந்தால், காயம் ஆற ஒரு வாரம் ஆகும்.
பறவைக் கூட்டம் இப்போது செம்பாவின் தலையைச் சுற்றி இடம் மாறியது. பறவைகளின் இடைவிடாத கீச்சொலிக்கு இடையில் செம்பா கூப்பிட்டது கோவனுக்குக் கேட்கவில்லை. முதுகிலே சுள்ளென கல் விழுந்த பிறகுதான் திரும்பிப் பார்த்தான்.
தோழியைச் சுற்றும்முற்றும் பார்த்தபடி செம்பாவின் அருகில் வந்தான் கோவன். அவள் கூடையை அவன் தலைக்கு மாற்றினாள். பறவைகள் தேனீக்கள் மொய்ப்பதைப்போல அவர்கள் இருவரையும் சுற்றி, படபடத்து, மொய்த்துக்கொண்டிருந்தன. உடல் மேல் சிந்திய வெண்சாந்து உருண்டையை பறவைகள் கொத்தி எடுப்பதால்தான், அவன் இப்படி நெளிந்தும் வளைந்தும் பாடாய்ப்படுகிறான் எனப் பார்த்தவர்கள் நினைத்தனர்.
பசுக்களுக்கு இடையில் படர்ந்ததைப்போல, பறவைகளுக்கு இடையிலும் சுழன்றது அந்தக் காதல். பசுக்கள் விலகி நடக்கவும், பறவைகள் கூடிப்பறக்கவும் இவர்களுக்காகவே கற்றுக்கொண்டதுபோல் இருந்தது. குருவி ஒன்று அவர்களின் இதழைக் கொத்திய பிறகுதான், செம்பா அவனைவிட்டு விலகி, நீர் அருந்தி வருவதாகக் கூறி, ஓடையை நோக்கிச் சென்றாள்.
தோழி போன அதே ஓடைப்பாதையில் அவள் நடந்தபோது எதிரில் வந்துகொண்டிருந்தாள் தோழி.
“பறவையின் இறகு ஒன்று கண்ணில் விழுந்துவிட்டது, ஊதிவிடு” எனச் சொல்லி தோழியிடம் முகத்தை நீட்டினாள் செம்பா. அவள், இடது கன்னத்தைப் பிடித்து கண்ணுக்குள் ஊதப்போகும் போதுதான் இவளுக்கு நினைவு வந்தது, பதிந்துகிடக்கும் பல் தடத்தை அவள் பார்த்துவிடுவாளோ என்று. சட்டெனக் கன்னத்தை அவள் கையில் இருந்து விலக்கி, “சரியாகிவிட்டது” என்றாள் செம்பா.
தோழியோ, “இன்னும் ஊதவே இல்லையடி” எனச் சொன்னபோதும், “இல்லை… இல்லை...சரியாகிவிட்டது” எனக் கூறி விலக முயன்ற செம்பாவின் முகத்தை, இரு கைகளாலும் அழுத்திப் பிடித்து நிறுத்தினாள் தோழி.
செம்பா அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தாள்.
“திரும்பிப் பார்க்காதே, குதிரைகள் இன்னும் நம்மைப் பின்தொடர்ந்துதான் வந்துகொண்டி ருக்கின்றன.”
தோழியின் சொல் செம்பாவை இடி எனத் தாக்கியது. கலங்கியிருந்த கண்களைப் பார்த்த தோழி, “தூசி இன்னும் இருக்கிறது” எனச் சொல்லியபடி இழுத்து மூச்சுவாங்கி ஊதிவிட்டாள். செம்பாவின் கண்ணீர்த்துளி, காற்றில் பறந்தது.
இரவு, கிடை பெரியாம்பளைகளிடம் செய்தியைச் சொன்னார்கள். கிடையின் திசைவழியை மாற்றி ஊர் நோக்கி நடந்தார்கள். துள்ளிக்குதித்து கிடை எங்கும் பரவியபடி இருக்கும் செம்பாவின் சிரிப்பை அதன் பிறகு கோவன் பார்க்கவே இல்லை. இரு நாட்களுக்கு ஒருமுறை புதிதாக ஈனும் குட்டிகளை, அவன் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டே இருந்தான். செம்பா அருகில் வரவே இல்லை. பெரியாம்பளைகள் ஏன் கிடையின் போக்கை மாற்றி ஊருக்குப் போக முடிவு எடுத்தார்கள் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை. சரி, ஊருக்கு வேகமாகப் போனால், செம்பாவுடனான தனது திருமணம் வேகமாக நடக்கும். அதனால் நாமும் வேகமாகவே நடப்போம் என முடிவு எடுத்த கோவனின் கால்கள் கிடையின் முன்கால்களாக மண் மிதித்துச் சென்றன.
இரு மாதங்களுக்கு முன்னரே இந்தக் கிடை ஊர் திரும்பிவிட்டது. ஊரில் இருந்தது கிழவன்களும் கிழவிகளும்தான். மற்றவர்கள் எல்லாம் கிடை போட போயிருக்கின்றனர். வழக்கம்போல ஆவணி மாதம்தான் வருவார்கள். ஊர் முழுவதும் இடையில் திரும்பிய கிடையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. கோவனுக்குச் செய்தி இப்போதுதான் தெரியவந்தது. பெரியாம்பளைகளோடு சண்டைக்குப் போனான்.
``அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டீர்கள் அவர்கள் இப்போது செம்பாவைத் தூக்க ஊருக்குப் படை திரட்டி வந்தால் என்ன செய்வது? நமது கூட்டம் வந்துசேர இரண்டு மாதங்கள் ஆகும்” என்றான்.
பெரியவர் ஒருவர் சொன்னார், “ஆளுக்கு ஒரு திசையில் போய், கிடைகளை வேகமாக வரச் சொல்வோமா?”
“ஓடித் திரும்பும் வலுவோடு இருப்பது இருபது பேர். அவர்களையும் அனுப்பிவிட்டு என்ன செய்வது?”
எல்லோருக்குள்ளும் பதற்றம் இருந்தது. ஆனால், குதிரைக்காரர்கள் யாரும் கண்ணில் படவில்லை. நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.
“வரும் நான்காம் நாள் செம்பாவுக்கும் கோவனுக்கும் மணம் முடித்துவிடுவோம்” என யோசனை சொன்னார் ஒரு பெரியாம்பளை.
“முடிப்பது என்று முடிவான பிறகு நான்காம் நாள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இன்று இரவே மணம் முடிப்போம்” என்றாள் கிழவி.
அச்சத்தை மகிழ்ச்சிகொண்டு கடக்க முடிவுசெய்தனர். மணவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. சாணம் கரைத்து தெரு எங்கும் மெழுகினர். கோவன் இளைஞர்களோடு செம்மலையின் குகைகளுக்குள் அமர்ந்து பாதுகாப்புக்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தான். இப்போது அந்த இருபது இளைஞர்களோடு இருநூறு மாடுகளும் பதிமூன்றும் கிடை நாய்களும் மட்டுமே இருந்தன. அவற்றைக்கொண்டு எதையும் சமாளிக்க முடியும் என அந்த இருபது பேரும் நம்பினர்.
“நான், அந்த ஊருக்குள் போகவில்லை. ஆனால், வளமான ஊர். படைபலம் சற்றே அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு ஏற்ப திட்டம் வேண்டும்” என்றான் கோவன்.
செம்மலையின் மேற்கிலும் வடக்கிலும் அடர்ந்த காடு. அதற்குள் எந்தப் படையும் ஊடுருவி வர முடியாது. படைகள் வந்தால் கிழக்கிலும் தெற்கிலும் இருந்துதான் வர முடியும். வருவதை அறிய பல காதத் தொலைவுக்கு முன்னரே கிடை நாயோடு ஆட்கள் நிறுத்தப்பட்டார்கள்.
மலை எங்கும் கோவனைத் தேடி அலைந்த சிறுவன் உச்சிவெயிலில் பச்சைக் குகைக்குள் அவனைப் பார்த்தான்.
“இன்னிக்கு இரவுல உனக்கும் செம்பாவுக்கும் திருமணமாம். பெரியாம்பளை சொல்லிவிட்டாரு” என்றான் அவன்.
கோவனுக்கு ஆத்திரம் ஏறி வந்தது.
“எல்லாம் தப்புத்தப்பா முடிவு எடுக்கிறான் அந்தக் கிழவன்” எனக் கொதித்தான். மற்றவர்கள் அவனைச் சமாதானப்படுத்தினர். சிறுவனிடம், “மாலையில் மணமேடைக்கு கோவன் வருவான்” எனச் சொல்லி அனுப்பினர்.
இருநூறு மாடுகளில் கொள்ளிக்கொம்பு மாடுகள் இருபது இருந்தன. விரிகொம்பு மாடுகள் முப்பது இருந்தன. நெற்றியில் மூன்று சுழியும் ஒன்றுடன் ஒன்று எதிர்த்திருக்கும் இடிமேலி மாடுகள் இருபத்தி ஆறு இருந்தன. மற்றவை எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியான மாடுகள் இல்லை. ஆனாலும் கொம்பு உள்ள மாடுகள்தான். அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டிருந்தான் கோவன்.
மலையைவிட்டு ஊருக்குள் இறங்கி வந்த மூன்று இளைஞர்கள், கோவன் சொல்லி அனுப்பிய எரிசாற்றுப் பச்சிலையை அரைத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டனர். அதைக் கேள்விப்பட்டு ஊரே நடுங்கியது.
“குலமே அழிந்தாலும் செய்யக் கூடாத செயல் இது. எங்களின் உயிரே போனாலும் நாங்கள் அதை அரைத்துக் கொடுக்க மாட்டோம்” என்று எல்லா கிழவிகளும் சொல்லிவிட்டனர். வேறு வழி இன்றி இளைஞர்கள் மலை திரும்பும்போது குறுக்கிட்ட செம்பா, மூன்று கலயங்களை நீட்டினாள். அவர்கள் கேட்டதைவிட அதிகமானதாகவே அது இருந்தது.
பொழுது இறங்கத் தொடங்கியது. ஊர் முழுவதும் சாணம் மெழுகி, கோலம்போட்டு முடித்தனர். ஊரே கூடிக் கொண்டாடவேண்டிய திருமணம், இப்படி கையளவு ஆட்களை வைத்து நடத்தவேண்டியது ஆகிவிட்டதே என்று எல்லோருக்குள்ளும் கவலை படர்ந்திருந்தது. ஆனால், வாசலில் கோலம் மலர்ந்துவிட்டால், கவலைகள் எல்லாம் காற்றாகப் பறந்துபோகும்.
நீராட்டுச் சடங்கு தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிற நான்கு வீட்டுப் பெண்களும் செம்பாவை அழைத்துக்கொண்டு, ஊரின் மேற்குப் பக்கக் காட்டுக்கு நடுவில் இருக்கும் செங்குளத்துக்குப் போனார்கள்.
சூரியன் இறங்கத் தொடங்கியபோது தூரத்து மேட்டில் கிடை நாய் ஒன்று பாய்ந்துவருவதை மலை மேல் இருந்து கவனித்தான் கோவன். திட்டங்களைச் செயல்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது.
``ஊரார்களை மலைக்கு மேல் ஏற்றுங்கள்’’ என்றான்.
பேரோசைக்கும் கூச்சலுக்கும் நடுவில் எல்லோரும் மலை ஏறினர். செம்பாவைத் தேடின கோவனின் கண்கள். மண நீராட்டுக்காக செங்குளத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டி ருப்பதாகச் சொன்னார்கள். இந்த ஏற்பாடுகளைச் செய்த கிழவனை வெட்டிக் கொல்ல வேண்டும்போல் இருந்தது. ``மின்னல் எனப் போய்த் திரும்புகிறேன்'' எனச் சொல்லி மேற்குத் திசைக் காட்டுக்குள் ஓடினான் கோவன். போகும்போது அவனுக்குப் பிடிபட்டது, கிழவன் செய்த செயல் ஒருவிதத்தில் நல்லதே.
செம்பாவை, நான்கு வீட்டுத் தோழிகளும் நீராட்டினர். உச்சி எடுத்துப் பின்னியிருந்த அவளது இரட்டைப் பின்னல் கூந்தலை மெள்ளக் கழற்றி, கோவனின் வீட்டு அடையாளமான மூன்று சடைப்பின்னலைப் பின்னத் தொடங்கினர். வழக்கமாக இந்தச் சடங்கின்போது கேலிப் பேச்சும் கிண்டல் சொல்லுமாக செங்குளமே கலங்கிப்போயிருக்கும். ஆனால், இன்று அப்படி அல்ல.
நான்கு பெண்களும் மூன்று பின்னல் சடையைப் பின்னி முடித்தபோது, குளக்கரையில் வந்து நின்றான் கோவன். அவர்கள் நால்வரை மட்டும் தனியாக அழைத்தான். சுற்றிமுற்றிப் பார்த்தான். வெண்சாந்து உருண்டை வைக்கப் பயன்பட்ட பழைய நாணல்கூடை ஒன்று நைந்த நிலையில் கிடந்தது. அதை எடுத்துவந்து அதன் மீது கைவைத்தபடி வாக்கு கேட்டான்.
“என்ன நடந்தாலும் செம்பாவை ஊருக்குள் கூட்டி வரக் கூடாது. அவர்கள் கையில் சிக்காமல் வெளியேற வேண்டும்.”
நான்கு பெண்களும் பயந்து தயங்கியபடி இருக்க, செம்பாவின் கை நாணல்கூடையை இறுக்கிப் பிடித்து அவனுக்கான வாக்கை அளித்தது. கோவன் மலை நோக்கி ஓடினான்.
தீப்பந்தங்களோடு அவர்களின் படை கிழக்கிலும் தெற்கிலுமாக ஊரைச் சூழ்ந்தது. ஊருக்குள் எதிர்ப்புகள் எதுவும் இல்லை. உறையூர் படைக்கு வாள் வீசாமலே வெற்றி கைகூடுவதுபோல் இருந்தது. ஊருக்கும் செம்மலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிக்கு அந்தப் படை வரட்டும் எனக் காத்திருந்தான் கோவன்.
அவன் எதிர்பார்த்த இடத்துக்குப் படை வந்தது. கொம்பின் உச்சிமுனை வாள்போல மடித்து நீட்டியபடி இருக்கும் கொள்ளிக்கொம்பு மாடுகளை, இரு திசைகளுக்கும் பத்து எனப் பிரித்த கோவன், அவற்றின் மூக்கில் பச்சிலையை வைத்து நுழைத்தபடி கயிறுகளை உருவிவிட சைகை செய்தான். உற்றுப்பார்த்தால் தீ நிறத்தில் இருக்கும் அவற்றின் கண்கள் பச்சிலைச் சாறு மூக்கில் ஏறியபோது கண்ணில்பட்ட தீப்பந்தங்களை எல்லாம் குத்திக் கிழித்துக்கொண்டு நுழைந்தன.
இடது பக்கமும் வலது பக்கமும் இரு கைகளை விரித்ததைப்போல் கொம்புகள் விரிந்துகிடக்கும் ‘விரிகொம்பு’ மாடுகள் முப்பதும் உள்ளிறங்கின. அவை உள்ளே ஓடினாலே இரு பக்கங்களும் உள்ள குதிரைகளின் விலாவினைச் சீவிச் சரிந்தபடி இருக்கும். பச்சிலை உருண்டையை இரு காதுகளுக்குள்ளும் திணித்த பிறகு தலையை மறுத்து மறுத்து ஆட்டி, ஆவேசம்கொண்டு உள்ளிறங்கின. அவற்றின் மண்டைக்குள் இறங்கும் பச்சிலையின் எரிசாறு கணப்பொழுதில் நூறுமுறை தலையை மறுத்தாட்டி வெறிகொள்ளச் செய்தது.
மீதி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் எல்லாம் சிறப்புத் தகுதியற்ற மாடுகள்தான். ஆனால், கொம்பு உள்ளவை. அது ஒன்று போதும். பிற மாடுகளைவிட வலிமையாக அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது கோவனுக்குத் தெரியும். அவற்றின் குதத்துக்குள் கைகளை நுழைத்து இலை உருண்டைகளை அமுக்கினர். சிறிது நேரத்தில் அவற்றின் குடல் பிறண்டு தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. பின்புறக் கால்களை உதறியபடி அவை வந்த வேகத்தில் பாறைகள் உருண்டன. மாடுகளின் நிலைகொள்ளாத சீற்றம் குதிரைகளைக் கலங்கடித்தது. தாவிச் சரிந்து உள்நுழைந்தன மாடுகள்.
ஊருக்குள் பட்டிபோட்டு அடைக்கப் பட்டிருந்தன கிடை நாய்கள். வயல்வெளிகளில் கிடையைவிட்டுத் தனித்துப் பிரியும் முட்டுக்காளைகளையே குரைத்தபடி மிரட்டி நகர்த்தும் பழக்கம் உள்ள நாய்கள் அவை. குதிரையைத் தாண்டிக் குதிக்கக்கூடியவை. நாக்கை மடித்து சீழ்க்கை அடித்தபடி ஒரு வங்கிழவன் பட்டியைத் திறந்துவிட்டான். பெரும் குரைப்பொலியோடு குதிரைகளின் பின்னங்கால் சப்பைகளின் மீது அவை பாய்ந்துகொண்டிருந்தன. உறையூர் படைக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நாய்களின் பாய்ச்சலையும் மாடுகளின் ஆவேசத்தையும் எதிர்கொள்ளத் திணறிய நேரத்தில், கோவன் தனது இறுதி ஆயுதத்தை இறக்க முடிவுசெய்தான்.
மலையின் பின்புறம் நின்றுகொண்டிருந்த இடிமேலி மாடுகள் இருபத்தியாறையும் மலையுச்சியில் அணிவகுத்து நிறுத்தினான். இடிமேல் இடிவிழுந்தாலும் அஞ்சாமல் முன்னால் நகரும் மாட்டு இனம் அது. தான் செய்யப்போகும் செயலுக்கான கலக்கம் எதுவும் இல்லாமல்தான் கோவனின் முகம் இருந்தது. பெரிய பெரிய வைக்கோற்கட்டுகளை அவற்றின் கொம்புகளின் மேல் செருகினர். இரு திசைகளிலும் பாய்ந்து இறங்குவதைப்போல அவை நின்றுகொண்டிருந்த போது, வைக்கோல் கட்டுகளின் மேல் தீவைத்து கழுத்துக் கயிறுகளை உருவிவிட்டனர்.
மிகப்பெரிய மர உருளைகளில் தீயைப் பற்றவைத்தபடி மலை உச்சியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறங்குவதைப்போல அந்தக் காட்சி இருந்தது. உறையூர் படை கதிகலங்கிய நேரத்தில், எரிந்து இறங்கும் தீப்பந்தத்தின் தழலில் செம்மலையின் மணிக்கற்கள் எல்லாம் ஒளிவீசின. மலை எங்கும் இருந்து பல்லாயிரம் பேர் பந்தங்களோடு இறங்குவதைப் போல் தெரிந்தது. இது கோவனாலும் திட்டமிடப்படாதது. நிலைமை அதிபயங்கரமானதை உணர்ந்த உறையூர் படை, உயிர் தப்பித்தால் போதும் என ஓடத் தொடங்கியது. குறுக்கும் நெடுக்குமாக ஆவேசத்துடன் அலையும் கிடைமாடுகள் நிலைகொண்ட இடத்தில் இருந்து எளிதில் வெளியேறாதவை. அவற்றைக் கடந்து வெளியேற முடியாமல், உறையூரின் முழுப்படையும் அழிந்துகொண்டிருந்தது. வலையைத் தாண்டி மீன்கள் தவ்வுவதைப்போல குதிரைகளைத் தாண்டியபடி நாய்களின் பாய்ச்சல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. மிச்சம் மீதியை கோவனின் கூட்டாளிகள் உள்ளிறங்கி வெட்டிச் சரித்தனர்.
பொழுது புலர்ந்தது. உறையூர் படை தோற்று ஓடியதை உறுதிப்படுத்தினான் கோவன். குடல் சரிந்த குதிரைகளும் உறையூர் வீரர்களின் உடல்களும் எங்கும் கிடந்தன. அவற்றுக்கு நடுவில் நடந்துகொண்டிருந்தான். பெரும்வாள் கொண்டு தலை இருகூறுகளாகப் பிளக்கப்பட்ட விரிகொம்பு மாடு ஒன்று செத்துக்கிடந்தது. `மாடுகளை, பூச்சிகளும் உண்ணிகளும் கடிப்பதையே பொறுத்துக்கொள்ள முடியாமல் வெண்சாந்து உருண்டை செய்த குலத்தில் பிறந்த நான், எம் மாடுகள் அனைத்தும் அழிய பச்சிலை எரிச்சாற்றை என் கையாலே தந்துவிட்டேனே’ எனக் கதறியபடி, செத்துக்கிடந்த மாட்டின் முன் மண்டியிட்டு உட்கார்ந்தான். சரிந்துகிடந்த அதன் இருபக்கக் கொம்புகளையும் பிய்த்து எடுத்தான். தான் செய்யப்போகும் செயலுக்கான கலக்கம் எதுவும் இல்லாமல்தான், அவனது முகம் இருந்தது. சூரியன் அவனுக்கு நேர் எதிராக மேலே எழுந்தபோது, இரு கொம்புகளையும் முழு விசையோடு செலுத்தி, தொண்டைக்குள் இறக்கினான் கோவன். சூரியனைப் பார்த்தபடி அவனது உடல் மண்ணில் சரிந்தது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அணங்கேறி ஆடிய பெண்கள் உக்கிரம்கொண்டனர். போர்க்களத்தில், விரிந்த கூந்தலும் பிளந்த வாயுமாக நிணத்தைத் தின்று குதித்தாடும் பேயாடல் தொடங்கியது. துடியின் ஓசை காதைக் கிழித்தது. கூட்டத்தின் குலவை ஒலி பயங்கர அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
முன்புறம் கொற்றவையின் திசைநோக்கி துடியடித்துக் குலப்பாடலைப் பாடிக்கொண்டிருந்த பெண், ஆவேசம் மேலிட துடியை வீசியெறிந்து பின்புறம் திரும்பினாள். நெருப்புக்கோலமாக இருந்தன அவளது கண்கள். அணங்குகளின் பேய் ஆட்டத்தால் நிலம் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்புறம் திரும்பியவள் களத்தின் நடுவில் வரையப்பட்டிருந்த கோலத்தைக் கால்களால் குறுக்கும் நெடுக்குமாக அழித்து அலங்கோலமாக்கினாள். “செம்பாதேவி…வேணாந்தாயீ…” என ஆண்களும் பெண்களும் பெருங்குரலெடுத்து வேண்டினர். கதறலும் கண்ணீரும் கரைபுரண்டன.
கோலத்தின் நடுவில் நாணல் கூடையில் வைக்கப்பட்டிருந்த வெண்சாந்து உருண்டையை நோக்கிப் போனாள் அவள். அவளது கண்களில் இருந்த ஆவேசத்தையும் கைகளின் வேகத்தையும் கண்டு கூட்டம் நடுங்கியது.
`அங்கு என்ன நடக்கப்போகிறதோ?!' என்ற பதற்றத்தில் கூச்சல் உச்சத்துக்குப்போனது. குலவை ஒலி பீறிட எல்லோரும் களத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அணங்குகளின் ஆட்டத்தைத் தாண்டி யாரும் உள்ளே நுழைய முடியவில்லை.
வெண்சாந்து உருண்டையில் வைக்கப்பட்டிருந்த இரு கொம்புகளையும் ஆவேசத்தோடு பிடுங்கி எடுத்தாள் அவள். கூட்டம் கதறியது. பிறர் அவளை நெருங்க முடியாத வளையத்தை அணங்குகள் உருவாக்கினர். “வேண்டாந்தாயீ…” என உயிர் நடுங்கக் கத்தினர். கத்தும் குரல்களுக்கு நடுவில், அவளோ பிடுங்கிய கொம்புகளை தனது இரு மார்புகளை நோக்கி உள்ளிறக்கத் துணிந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் இடதுபுறத்தில் இருந்து தாக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டாள்.
இரு கொம்புகளும் எங்கோ போய் உருண்டன. கூட்டத்தினர் வாய் பிளந்து நின்றனர். தாக்கிய குலநாகினி, அணங்குகளுக்கு நடுவில் மூச்சிரைக்க நின்றாள். அணங்குகளின் ஆத்திரம் தணிய ஆரம்பித்தது. ஆவேசம்கொண்ட குலநாகினி காலத்தையும் கதையையும் தனது இரு கைகளைக்கொண்டு இறுக்கி நிறுத்தினாள். கூட்டம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
தள்ளப்பட்டு கீழே விழுந்தவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பற்களை நறநறவெனக் கடித்தபடி குலநாகினியை நோக்கிப் பாய்ந்து வந்தாள். மரமே நிலைகுலைந்து சரிந்துவிழுவதுபோல் இருந்தது அவளின் பாய்ச்சல். அவளின் வேகத்தை எதிர்கொண்டு தாங்கி அசையவிடாமல் பிடித்து நிறுத்தினாள் குலநாகினி. கூடியிருந்தவர்களின் குலவை ஒலி மீண்டும் உச்சத்துக்குப்போனது. அவளது இரு கைகளையும் பிடித்த குலநாகினி, அப்படியே அழுத்தி வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டிருந்த கூடைக்கு முன் அமரவைத்தாள். கூடையைப் பார்த்ததும் அவளின் கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கியது.
குலநாகினியை அண்ணாந்து பார்த்தபடி, அனைத்துப் பற்களும் தெரிவதைப்போல முழு வாயிலும் சிரிப்பைக் காட்டித் தலையாட்டினாள். அதே போன்ற சிரிப்புடன் தலையை வேகமாக ஆட்டி அமைதிப்படுத்தினாள் குலநாகினி. அணங்கு ஆடிய நான்கு பெண்களும் பல்வரிசை காட்டிச் சிரித்தபடியே அவளைச் சுற்றி அமர்ந்தனர். குலநாகினி, அந்த வட்டத்தைவிட்டு வெளியேறி தனது இடத்துக்குப் போனாள்.
கபிலருக்கு உடல் முழுவதும் வியர்த்து வடிந்தது. கூட்டத்தின் நெரிசலில் பாரி எங்கு நிற்கிறான் எனத் தெரியவில்லை. நிலைமை அமைதியான பிறகுதான் பாரியின் அருகில் அவரால் வர முடிந்தது.
“கணிக்க முடியாத நிகழ்வுகளைக் கைக்கொள்ள யாரால் முடியும்? இது காலங்களுக்கு இடையில் நடக்கும் போர். நினைவுகளின் வழியே குருதி வழிகிறது. நம்மால் என்ன செய்ய முடியும்? வெட்டுக்காயம் இருப்பதோ, பல நூறு ஆண்டுகளுக்கு முன்” பாரியின் வார்த்தைகளை கபிலரால் பற்ற முடியவில்லை. காட்சிகள் ஏற்படுத்திய கொதிப்பால் அவர் மனம் திணறிக்கிடந்தது.
மூச்சுவிட முடியாத திணறலோடுதான் பாரியின் குரலும் இருந்தது. கபிலர், பாரியை உற்றுப்பார்த்தார். புருவம் உயர்த்தி பெருமூச்சு விட்டபடி பாரி சொன்னான், “கதை இன்னும் முடியவில்லை.”
கபிலரின் கருவிழிகள் அசைவற்று நின்றன.
மூன்று வாரங்களுக்குப் பிறகு பெரும்படையோடு உறையூர் தலைவன் செம்மலை அடிவாரம் போனான். அப்போது அவர்களை எதிர்த்துப் போரிட அங்கு யாரும் இல்லை. அந்தப் பெரும் பொக்கிஷ மலை, தங்களின் ஆளுகைக்கு வரக் காரணமான மகன் கிள்ளியைக் கொண்டாடித் தீர்த்தான் தந்தை.
சில மாதங்களுக்குப் பிறகு, கிள்ளியின் குதிரை உறையூரின் பெரும்வீதியைக் கடந்தபோது தொலைவில் வெண்ணெய் விற்கும் பெண் ஒருத்தி போவது தெரிந்தது. சற்றே அருகில் போய்ப் பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை, தலையில் கூடையைச் சுமந்து போய்க்கொண்டிருந்தவள் செம்பா. வாய் பிளந்து நின்றான். `அன்று நள்ளிரவு நடந்த தாக்குதலில் இந்த அழகு தேவதை அழிந்துபோனாள் என்று அல்லவா எண்ணியிருந்தேன். எனக்காகவே மீண்டு வந்தவள்போல், அதே தெருவில் வந்து நிற்கிறாளே!' என்று திகைத்துப்போனான் கிள்ளி.
சற்றே திரும்பி அவனைப் பார்த்த செம்பா, சின்னதாகச் சிரித்துவிட்டு நடந்தாள். அன்று பார்த்ததைவிட மெருகேறிய அழகு. அருகில் இருந்தவனை அழைத்து குதிரையை அவன் கையில் கொடுத்த கிள்ளி, “போய் தந்தையை அழைத்து வா. அன்று பார்க்காத அழகை இன்றாவது பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்” என்று சொல்லி அனுப்பிவிட்டு, அவள் பின்னால் நடந்தான்.
இறங்கு வெயிலில் ஊரைவிட்டு மிகத் தள்ளி, முன்னர் கிடைபோட்டிருந்த நிலத்தை நோக்கி அவள் நடந்தாள். அடர்ந்த செடி கொடிகள் துளிர்த்துக்கிடக்கும் பாதையில் அவள் நடந்துபோகும் அழகை ரசித்தபடி பின்னால் நடந்தான் கிள்ளி. அவள் வேண்டுமென்றே எதையும் செய்வதுபோல் தெரியவில்லை. கைகளை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நீட்டி பூக்களைப் பறிப்பதும் பூச்சிகளைத் தட்டிவிடுவதுமாக அவள் நடந்துகொண்டிருந்தாள். பின்னால் வரும் ஒருவனுக்கு, அவை அனைத்தும் சமிக்ஞைகளாக இருந்தன.
காற்றில் பறந்தபடி காமம்கொண்ட இணைத் தும்பிகள் அவளின் முகத்துக்கு நேராகப் பறந்தபோது, தலைவணங்கி அந்த இடம் கடந்தாள். பின்னால் வந்தவனால் அந்தக் காட்சியைக் கடக்க முடியவில்லை.
பெருங்கூடையைக் கவிழ்த்துப்போட்டதைப் போன்ற அந்தச் சிறுகுடில் தனித்து இருந்தது. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே குடிலுக்குள் நுழைந்த செம்பா, படலை மூடாமல் திறந்தேவைத்தாள். அவள் நடக்கத் தொடங்கிய பொழுதில் இருந்து அவனை அழைத்தபடிதான் இருக்கிறாள். வீட்டுக்குள் நுழையும்போது தனியாக அழைக்க வேண்டுமா என்ன? அவன் குடிலுக்குள் தலை நுழைத்தான். அதற்குள் வைக்கோல் பாய் ஒன்றை விரித்திருந்தாள். அதன் நடுவில் கால் மடக்கி அவள் அமர்ந்தபோது, தும்பி உடல் மடக்கிப் பறந்தது அவனின் நினைவுக்கு வந்தது. முன்செல்லும் தும்பியை நினைத்தபடி பின்னந்தலை சரிய, பாயில் படுத்தான்.
செம்பாவின் முதுகின் மேல் கை வைக்கப்போகும்போதுதான், அவனுக்கு உள்ளிருந்த ஆபத்து பிடிபடத் தொடங்கியது. குடிலின் நான்கு திசைகளிலும் செம்பாவைப் போலவே நான்கு பெண்கள் குத்தவைத்த நிலையில் உட்கார்ந்து இருந்தனர். பார்த்த கணத்தில் சட்டென எழ முயற்சி செய்யும்போது ஆளுக்கு ஒருவராக அவனது கைகளையும் கால்களையும் பிடித்தனர். அவன் கடுங்கோபத்தோடு கூச்சலிட்டு, தன்னை விடுவிக்க முயன்றான். அவர்கள் பெரும் அழுத்தம் கொடுக்காமல் மிக இயல்பாக அவனை அழுத்திப் பிடித்திருந்தனர். நாள் ஒன்றுக்கு நூறு மாடுகளின் நானூறு காம்புகளில் பால் கறக்கும் விரல்கள். பெரும் கிடைக்குள் விதவிதமான கொம்புகளோடு உரசிக்கிடக்கும் எண்ணற்ற மாடுகளை விலக்கி, நகர்த்தி, தள்ளி வெளிவரும் கைகள். அதுவும் ஒருவர் இருவர் அல்ல, நான்கு பேர். அவனால் என்ன செய்ய முடியும்?
செம்பா, குடிலின் மேல் செருகிவைக்கப்பட்டிருந்த இரண்டு கொம்புகளை உருவி எடுத்தாள். அதுவரை கத்திக்கொண்டிருந்தவன், கண்களின் முன் மரணத்தின் வடிவத்தைப் பார்த்து உறைந்துபோனான். குருதிக்கறையேறி இருந்த கொம்புகள். கோவனின் தொண்டைக்குழிக்குள் இறங்கியவை.
“விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்...'' என்று மீண்டும் மீண்டும் உயிர்போகக் கத்தினான். காவிரி ஆற்றங்கரையில் செழித்துக்கிடக்கும் மரப்புதர்களைத் தாண்டி, தனித்து இருக்கும் குடிலுக்குள் போடும் கத்தல் யாருக்குக் கேட்கும்? செம்பா, கால் மடக்கி அவன் அருகில் உட்கார்ந்தாள். நெஞ்சுக்குழிக்குள் கொம்பை இறக்கப்போகிறாள் என அவன் நடுங்கியபோது, அவனது மார்பில் கோவனுக்குப் பிடித்த ஒற்றைச்சுழிக் கோலத்தைப் போட்டாள் செம்பா.
கொம்பின் நுனி அவன் நெஞ்சின் மேல்தோலைக் கீறியபடி நகர, நெஞ்சு நிறைய மெள்ள ஊறும் குருதியின் வழியே ஒற்றைச்சுழிக் கோலம் உருவானது. அவள் என்ன செய்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. நெஞ்சுப் பகுதியை முடித்த பிறகு இடுப்புக்குக் கீழ் இரு கால்களிலும் வளைந்த இரு கோடுகளைக் கொம்பின் கூர்முனைகொண்டு இழுத்தாள். கதறலை நிறுத்திய அவன், அவளது விநோதமான செயலால் உறைந்துபோனான்.
நான்கு பெண்களும் அவனை அப்படியே புரட்டிப்போட்டனர். முதுகிலும் ஒற்றைச்சுழிக் கோலத்தைப் போட்டு, இடுப்புக்குக் கீழ் பாதம் வரை இருகோடுகளை இழுத்தாள் செம்பா.
கொம்புகளால் குத்திக் கொல்லாமல் மேலெழுந்தபடி கீறிவிடுகிறாள். `இதுபோதும் எப்படியாவது உயிர் பிழைத்துவிடலாம்!' என்ற நம்பிக்கை அவனது கண்களில் உயிர்கொண்டபோது, அவனைத் தூக்கி நிறுத்தினர். சட்டென கையை உதறி தன்னை விடுவிக்க முயற்சித்தபோது, இடதுபுறம் நின்றவள் ஒரு முறுக்கு முறுக்கினாள். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் மூக்கில், பச்சிலை சாறு விடவேண்டும். அப்போது அதன் கொம்புகளை முறுக்கி மூக்கை மேல்நோக்கித் திருப்பியபடி சாறு இறங்கும் வரை பிடித்திருக்க வேண்டும். மாடு, தனது முழு பலத்தால் கொம்பைத் திருகும். ஆனால், அதைப் பிடித்திருப்பவர் அசையவிடக் கூடாது. மாட்டின் கொம்பைத் திருகி நிறுத்தும் பணிதான், கிடையில் அவளுக்குப் பல நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவனது கையை சற்றே திருகியபோது உள்ளுக்குள் எத்தனை எலும்புகள் நொறுங்கின எனத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு நேரமும் அவன் கத்திய மொத்தக் கதறலும் இப்போது ஒரே நேரத்தில் வெளிவந்தது. போதும் என நினைத்துத் திரும்பிய செம்பா, அப்போதுதான் அவனது தோள்களைப் பார்த்தாள். வலதுகை தோள்பட்டையில் ஒரு சுழியைக் கீறி, விரல்கள் வரை இறக்கினாள். அதே போல இடது கையிலும் இழுத்தாள்.
கொம்பை மீண்டும் மேற்கூரையில் செருகிய செம்பா, குடிலின் ஓரத்தில் மூடிவைக்கப்பட்டிருந்த நாணல்கூடையை எடுத்தாள். அதில் மணமணத்துக்கிடந்தது வெண்சாந்து உருண்டை. அதை இரு கைகளாலும் அள்ளி அவனது கால்கணுவில் இருந்து கழுத்து வரை பூசினாள். வெண்ணெயின் குளுமை அவனது உடலெங்கும் பரவியது. கூடை நிறைய இருந்த வெண்சாந்து உருண்டை அவன் உடல் முழுவதும் மணமணத்தது. நால்வரும் பிடியைவிட்டு விலகினர். உயிர்பிழைத்தால் போதும் என, குடிலைவிட்டு வெளியே ஓடினான் கிள்ளி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெண்சாந்து உருண்டையின் மணம் காற்றில் பரவி, பறவைகளின் மூக்குக்குள் இறங்கியது. ஓடிய கிள்ளியின் இடதுபுறத் தோளிலே வந்து அமர்ந்தது ஒரு காகம். ஒரு கையால் அதைத் தட்டிவிட்டு திரும்பும்போது மூன்று காகங்கள் வலதுபுறத் தோளில் அமர வந்தன. இன்னொரு கையைத் தூக்க முடியாததால், வலதுகையாலே அவற்றைத் தட்டி விரட்ட முயன்றபோது தோளின் கிழிபாடுகளுக்குள் இறங்கி எழுந்தது காக்கையின் அலகு. “அய்யோ” எனக் கத்த வாயெடுத்தவனின் செயலை, மறுகணமே வாயடைக்கவைத்தது எதிர் திசையில் படபடத்து வந்துகொண்டிருந்த பறவைகளின் பெருங்கூட்டம். காய்ந்த நாணல்கூடையையே நார்நாராகக் கிழிக்கும் அளவுக்கு பறவைகளை வெறிகொள்ளச் செய்தது வெண்சாந்து உருண்டை.
மாலை நேரத்தில் பறவைகள் வலசை போகின்றன என ஊரார்கள் நினைத்தபோது, அவை அனைத்தும் அலை அலையாக வந்து இவன் மீது இறங்கிக்கொண்டிருந்தன. துள்ளத் துடிக்கக் கதறியபடி அவன் ஓட ஓட, பறவைகளின் கூட்டம் மகிழ்ந்து அவனைச் சூழ்ந்தது. பறவைகளின் அலகுகள் கொத்தியெடுக்கும் இடம் எல்லாம் வெண்சாந்து உருண்டை உருகி உள்ளேபோனது. அடுத்த பறவையின் அலகு, ஆழத்துக்குள் போய் அதை எடுத்தது.
செம்பா வெண்சாந்து உருண்டையை மேலெல்லாம் பூசும்போது, அவனது முகத்தில் சிறு துளிகூடப் படாமல் பூசினாள். ஏன் என்பது, உடன் இருந்த நான்கு பெண்களுக்குக்கூட விளங்கவில்லை. குடிலின் வாசலில் நின்று பார்க்கும்போதுதான் அவர்களுக்கு விளங்கியது. பறவைகள் அவனது உடலை துகள்துகளாகக் கிள்ளி எடுப்பதை, கண்களில் கடைசித்துளி உயிர் இருக்கும் வரை அவன் பார்க்க வேண்டும்.
அழிவு அணு அணுவாக நிகழ்ந்துகொண்டிருந்த அந்த இடத்துக்கு மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன மரங்கொத்திகள். அவற்றால் உள்நுழைய முடியவில்லை. காக்கைகளின் இடைவிடாத கரைச்சலும் பிற பறவைகளின் கத்தலுமாகப் பேரிரைச்சல் நிலவிய அந்த இடத்தில், மரங்கொத்திப் பறவை ஒன்று, அவனது இடதுபுற மார்பை நோக்கி ஓர் அம்பு நுழைவதைப்போல பாய்ந்து, அதே வேகத்தில் வெளியே இழுத்தது தனது கூரிய அலகை.
கபிலர் மறுநாள் காலையில் எழுந்தபோது உடல் முழுவதும் நடுக்கம்கொண்டிருந்தது. மூலிகைச் சாற்றைக் கொடுத்தார்கள். வாங்கிக் குடித்தார். பகல் முழுவதும் நடுக்கம் நீடித்தது. கண்ணுக்குள் செம்பாதேவி நிலைகொண்டிருந்தாள். ஆடுகளத்தில் உருண்டு விழுந்த இரு கொம்புகளை எடுத்துவந்து அவள் முன் வணங்கி நின்றான் முடியன். அதில் ஒன்றை அவனது இடுப்பு உறையில் செருகினாள். மற்றொன்றை அவளின் காலடியைத் தொட்டு வணங்கிக்கிடந்த வீரன் ஒருவனின் இடுப்பில் செருகினாள்.
குலப்பாடலைத் துடியடித்துப் பாடிய அந்தப் பெண்ணின் முகத்தை அப்போதுதான் கூர்ந்து பார்த்தார் கபிலர். அவருக்கு அறிமுகமான முகம் அது. ‘எங்கே பார்த்திருக்கிறோம்?’ என யோசித்தபோது புலிவால் குகை அவரின் நினைவுக்கு வந்தது. பன்றிக்கறியை அவளின் கையில் கொடுத்த கணம் நிழலாட, கைகூப்பி கபிலர் சொன்னார், “மகள் அல்லள், என் தாய் நீ”.
மாலை நெருங்கியபோது, கபிலரின் இருப்பிடத்துக்கு வந்தான் பாரி. உடல் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. அதைக் காட்டிக்கொள்ளக் கூடாது என அவர் செய்த முயற்சி, பலன் அளிக்கவில்லை.
``உங்களின் நடுக்கத்துக்குக் காரணம் உடல் அல்ல, மனம். அது கலங்கிப்போய் இருக்கிறது” என்றான் பாரி.
அதை ஏற்பதைப்போல தலையாட்டிய கபிலர் சற்று மெளனத்துக்குப் பிறகு, “சிந்தப்பட்ட குருதி, கதைகளின் வழியே தலைமுறைகளுக்குக் கைமாறி வந்துகொண்டே இருக்கிறது. கதைகள்தான் மனித நினைவுகளில் இருந்து, குருதிவாடை அகலாமல் இருக்கக் காரணமா?” என்றார்.
`ஆம்' எனத் தலையசைத்தபடி பாரி சொன்னான், “கடித்து இழுக்க விலங்குகளுக்குப் பல் இருப்பதைப்போல் மனிதனுக்குக் கதை.”
நடுங்கி எழுந்தார் கபிலர். மனம் அல்ல, சொல்லால் நிகழ்கிறது நடுக்கம்.
“கிள்ளியின் முன்புறம் பாய்ந்த மரங்கொத்தி, பின்புறமாக வெளியேறிச் சென்றதைப் பேசும் கதைதான் நம்பிக்கையின் வேராக இருக்கிறது. அது இல்லையென்றால், `மேலெல்லாம் வைரக்கல் பதித்த பெரும்வடம் அணிந்தபடி கிள்ளி ஆட்சிசெய்து, எல்லோரையும் வாழவைத்தான்' என்றே கதைகள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.
கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி கொடி என இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை, கதையன்றி வேறு யார் கொடுப்பது?” - பாரி சொல்வதை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர்.
பாரி தொடர்ந்தான், “ஈட்டியை விசைகொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமைகொண்டிருப்பது சதையால் அன்று, கதையால்.”
‘இந்தப் பதிலில் இருக்கும் நியாயங்கள் ஏன் என்னை வந்து சேரவில்லை? அதைத் தடுத்துக்கொண்டிருந்த உண்மைகள் என்ன?’ என்று யோசித்தார் கபிலர். வேந்தர்களுடன் தான்கொண்ட நட்புக்கு மனம் நம்பிக்கையாக இருக்க நினைக்கிறது. தன்னைப் பேணிப் போற்றுவதில் வேந்தர்கள் காட்டிய அக்கறையை பொய் என எப்படிச் சொல்ல முடியும்? எண்ணங்கள், மனக்கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தின. அவர் பாரி சொன்னதை வழிமொழியவில்லை. முகம் உணர்வுகளை வெளிக்காட்டிவிடக் கூடாது என நினைத்து சற்றே இறுக்கத்துடன் தலைசாய்த்தார்.
கவனித்த பாரி, சின்னதாகப் புன்முறுவல் பூத்தபடி இருக்கையைவிட்டு எழுந்தான். “நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நாளை காலை நான் வந்து பார்க்கிறேன்” என்றான்.
“ஏன், நான் இன்று வர வேண்டாமா?”
“உங்களது உடல்நிலை அப்படியிருப்பதால் `ஓய்வெடுங்கள்' என்று சொல்கிறேன். இன்று மூன்றாம் நாள். பிற நாளைப்போல இருக்காது. சற்றே அச்சமூட்டுவதாக இருக்கும்.”
அச்சம் என்பதற்கு அவன் கொண்டுள்ள விளக்கத்துக்குள் நேற்றைய நாள் இடம் பெறவில்லைபோலும். கடந்த இரு நாள்களில் நடந்தவற்றை நினைவுகூர்ந்தவாறே கபிலர் கேட்டார், `‘தெய்வவாக்கு விலங்கு பழம் எடுத்தப் பிறகுதானே குலப்பாணன் உள்ளிறங்குவான். முன்கூட்டியே எப்படிச் சொல்கிறீர்கள்?”
“மூன்றாம் நாளில் தெய்வவாக்கு விலங்குக்கு வேலை இல்லை. காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபு இது.”
“மரபுகளுக்குக் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?”
“நீங்கள் வருவதில் உறுதியாக இருக்கிறீர்களா?”
``ஆம்” என்றார் கபிலர்.
“சரி வாருங்கள், பேசிக்கொண்டே போவோம்” என்றான் பாரி.
இருவரும் கொற்றவை மரம் நோக்கி புறப்பட்டபோது இருள் முழுமை கொண்டுவிட்டது. கபிலர் சொன்னார், “மரபுக்கான காரணத்தைச் சொல்லாமல் அமைதி காப்பது எதனால்?”
“தனித்தக் காரணம் ஒன்றும் இல்லை. நான் வேறு சிந்தனையில் இருந்ததால் மறந்துவிட்டேன்” என்று சொன்ன பாரி மேலும் கூறினான். “உடலெல்லாம் அச்சம்கொண்ட தெய்வவாக்கு விலங்கால் பழங்களைத்தான் எடுக்க முடியும், பாம்புகளை எப்படி எடுக்க முடியும்?”
“புரியவில்லை” என்றார் கபிலர்.
“இன்று சொல்லப்படப்போவது நாகக்குடியின் கதை”.

ஆடுகளத்தின் முன் ஒரு பனை நீளத்துக்கும் இரு கை அகலத்துக்கும் மரக்கட்டைகளை அடுக்கி, அதில் நெருப்பைப் பற்றவைத்துக்கொண்டிருந்தனர். பற்றிய நெருப்பு, நான்கு முனைகளில் இருந்தும் மெள்ளப் பரவிக்கொண்டிருந்தது.
வழக்கமாகக் கபிலரின் முகக்குறிப்பு அறிந்தே விளக்கம் சொல்லும் பாரி, இமை மூடாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுக்கிவைக்கப்பட்ட எல்லா கட்டைகளிலும் நெருப்பு பற்றியது.
தழல், மேலேறத் தொடங்கியது. சற்று நேரம் கழித்து கபிலர் கேட்டார், “இங்கு என்ன நடக்கிறது?”
“பாம்புக்கு நீர் கொடுக்கும் நாகரவண்டுகள் இன்னும் வந்து சேரவில்லை.”
கபிலர் சுற்றும்முற்றும் பார்த்தார். சூழல் வழக்கம்போல் இல்லை. நாகர்குடி பாணன் ‘பகுளி’ என்ற பறையை இசைக்கத் தொடங்கினான். அதன் ஓசை சன்னமாக வெளிவந்தது. கபிலர், இசைப்பவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு பாரியிடம் கேட்டார், “நாகரவண்டுகள் வந்துவிட்டனவா?”
“அவை வந்த பிறகுதான் ஆட்டம் தொடங்கியது.”
``எங்கே, யார் ஆடுவது?” எனக் கேட்டார் கபிலர்.
“உற்றுப்பாருங்கள், நெருப்பின் பின்புறம் என்ன நடக்கிறது என்று.”
கபிலர் சற்றே கூர்ந்து கவனித்தார். நெருப்பின் பின்புறம் வளைந்தும் நெளிந்தும் இரண்டு உருவங்கள் ஆடிக்கொண்டிருந்தன. எரியும் தழலுக்குப் பின்புறம் இருளின் அசைவுகள்போல் அவை இருந்தன.
``கை புணர்ந்தாடும் துணங்கை ஆட்டம்” என்றான் பாரி.
``அவர்களை நாம் பார்க்கக் கூடாது என்பதற்காக நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறதா?” என்று கேட்டார் கபிலர்.
``இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, அவர்கள் நெருப்புக்குள் இறங்கி ஆடுவார்கள்” என்றான்.
நெருப்பு எரிந்து முடிந்த பிறகு, கங்குகளின் மீது ஆடத்தான் இந்த ஏற்பாடு எனப் புரிந்துகொண்டார் கபிலர்.
பின்புறம் ஆடுபவர்களின் உடல்மொழி மாறியது. பாம்புத்துள்ளல் தொடங்கியது. நாகக்குடியின் கதையை, பாணன் தொடங்கினான்.
எருக்குமலையைச் சேர்ந்த நாகர்கள்தான் இந்த மலைத்தொடரில் மிகவும் பழைமையான குடிகள். ‘நாகம், இவர்களின் சொல் கேட்கும்; இவர்களின் வாசனை அறிந்து விலகிச் செல்லும். இவர்களால் நாகத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என இவர்களைப் பற்றி பலவிதமான பேச்சுகள் இந்த மலை முழுவதும் உண்டு.
தேறிமலையின் அடிவாரத்தில் `சேரலர்' என்ற ஒரு குலம் உண்டு. எருக்குமலையும் தேறிமலையும் ஒரே மலைத்தொடரின் இரு வேறு பகுதிகள். எருக்குமலை, தேறிமலையைவிட மிக உயர்ந்து பரந்தது. அந்த மலையின் மீதுதான் நாகர்கள் இருந்தனர். தேறிமலையின் அடிவாரத்தில் சேரலர் இருந்தனர்.
சேரலர் குடி, மலை அடிவாரத்தின் சமதளத்தில் இருந்ததால் வேளாண்மை, வணிகம் என தங்களின் செயல்களை விரைவாகப் பெருக்கியது. வளமும் கூடியது. பெருஞ்சேரல்தான் அந்தக் குலத்தின் தலைவனாக இருந்தான். நீண்டகாலம் அவனது தலைமையில் சேரலர் குலம் தழைத்தது. அவனுக்கு வயது கூடியது. தோலில் சுருக்கம்படியத் தொடங்கியது.
ஒருநாள் அவனது ஊர் மன்றலில் குடிக்கூத்து நடந்துகொண்டிருந்தது. பெருஞ்சேரலும் அவன் குலமக்கள் அனைவரும் அதைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது கூத்தாடிய இளம்பெண் ஒருத்தி, கூத்தின் வேகத்துக்கு ஏற்ப கண்களைச் சுழற்றிச் சுழற்றி ஆடினாள். அவளது கண்கள் தன்னைத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன எனப் பெருஞ்சேரல் நினைத்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவளது கண்கள் சுழன்று வந்து மொய்த்தது தன்னை அல்ல; தனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் வீரனை என்று. அன்று இரவு முழுவதும் சேரலுக்குத் தூக்கம் கொள்ளவில்லை. அழகியின் கண்கள் தன்னைத் தாண்டிப்போன கணத்தை அவனால் தாங்க முடியவில்லை.
`சேரல்குலத்தின் வளம்பெருக்கி, திறன்கூட்டிய மாவீரன்' எனப் புகழப்பட்ட தன்னை, வயோதிகம் வந்து பற்ற நினைப்பதை அவனால் ஏற்க முடியவில்லை. தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் காண, கண்கள் மறுத்தன. ``சுருக்கம் களைய வழி உண்டா?” எனக் கேட்டு, திசையெங்கும் ஆட்களை அனுப்பினான்.
வடதிசை போனவன் வந்து சொன்னான், “நான் பார்த்த பெருமுனி ஒருவன், இதற்கு வழி உண்டு எனச் சொன்னான். ஆனால், என்னவென்று சொல்ல மறுத்துவிட்டான்” என்றான்.
வெகுவிரைவில் அந்த முனி தேறிமலைக்கு வரவழைக்கப்பட்டார். “தேகத்தின் சுருக்கம், மரத்தின் சருகைப்போல உதிரக்கூடியதுதான்” என்றார் அவர்.
“அதற்கான வழியைக் காட்டுங்கள்” என்று பெருஞ்சேரல் வேண்டி நின்றான்.
சிறு குண்டம் அமைத்து, அதில் பலவிதமான மரக்குச்சிகளைப் போட்டுத் தீமூட்டி, அந்தப் புகை நடுவே நின்று அந்த முனி சொன்னார், “நாகங்கள் சட்டையைக் கழற்ற ஒரு மூலிகையை உண்ணும். அந்த மூலிகையை நீ உண்டால், உனது தேகத்தின் சுருங்கிய மேல்தோல் கழன்று யெளவனம் அடைவாய்” என்று.
“அந்த மூலிகையை எவ்வாறு கண்டறிவது?” எனக் கேட்க, “இந்தப் புவிமேல் அந்த ரகசியத்தை அறிந்தவர்கள் நாகக்குடியினர் மட்டுமே.
நீ அவர்களிடம் கேட்டு அந்த மூலிகையைப் பெற்றுப் பயனடைவாய்” என்றார் முனி.
பெருஞ்சேரலின் மனம் குளிர்ந்தது. முனியின் மனம் குளிரச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து அனுப்பினான்.
எருக்குமலைக்குச் சென்று நாகர் குடியின் தலைவனைக் காணுமாறு, தனது அவையினருக்குப் பெருஞ்சேரல் உத்தரவிட்டான். அந்த உத்தரவை ஏற்று மலையேற, யாரும் முன்வரவில்லை. காரணம், நாகர்களைப் பற்றிய கதைகள் அப்படி. நாகர்குடியின் வயதான முதுமகள் உடுத்தியிருக்கும் ஆடையில் இருந்துதான் விரியன்பாம்புக் குட்டிகள் உதிர்ந்து வெளியேறுகின்றன என அவர்கள் நம்பினர். நாகத்தைப் பற்றி எப்போது பேசினாலும் அதைக் கேட்கும் சக்தி அதற்கு உண்டு என நம்பினர். நாகத்தைப் பற்றிய எந்த ஒரு சொல்லும் நாகத்தின் செவியில்தான் போய்த் தங்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.
``தங்களின் குலத்தலைவனுக்காகப் போக எவருக்கும் துணிவு இல்லையா?” எனக் கேட்டபோது, பெரியவர் பொறையன் முன்வந்தார். திறன்கொண்ட பன்னிரு வீரர்களின் துணையோடு, தான் போய் வருவதாகக் கூறினார். பெருஞ்சேரல் மகிழ்வுற்றான்.
சற்றே தயக்கத்துடன் பொறையன் கேட்டார். “ஒருவேளை அந்த மூலிகையை அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டால் என்ன செய்வது?”
“வடதிசை முனி சொன்ன இரண்டாவது வழியில் வேண்டிப் பெறுங்கள்” என்றான் பெருஞ்சேரல்.
சரியென பொறையன் சம்மதித்தார். பன்னிரு வீரர்களுடன், பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கும் பிடார வைத்தியன் இருவருமாக பதினான்கு பேரை உடன் அனுப்ப முடிவானது. வயதில் மூத்த பிடார வைத்தியனுக்கு, இரு காதுகளும் அறுபட்டிருந்தன. இன்னொருவன் வயதில் இளையவனாக இருந்தான். இருவரும் இருவேறு திசைகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். பொறையனோடு சேர்த்து பதினைந்து பேரிடமும் குடிமுனை வாக்குப் பெற்றான் பெருஞ்சேரல். எந்தச் சூழலிலும் அவர்கள் இந்தக் கட்டளையை நிறைவேற்றாமல் இனி நாடு திரும்ப முடியாது.
பதினைந்து பேரும் எருக்குமலையில் ஏறத் தொடங்கினர். நாகர்குடி அல்லாத வேற்றுக்குடியினரின் காலடி, எருக்குமலையில் இதுவரை பட்டதில்லை. முதன்முதலாக அது நிகழ்ந்தது. எருக்குமலையின் அடிவாரம், காட்டுப்புற்களாலும் குறுமரங் களாலும் நிரம்பியதாக இருக்கும். புற்களை விலக்கி அவர்கள் மலையேறத் தொடங்கினர். புது மனிதர்களின் வாடையை நாகங்கள் நன்கு அறியும். அவர்கள் முன்னால் இருக்கும் புற்களை விலக்கி, கால்களை மிகக் கவனமாக முன்நகர்த்திச் சென்று கொண்டிருந்தனர். மலையின் முதல் குன்றைக் கடந்தபோது நிழல்விரியன் ஒன்று நடந்துகொண்டிருந்த ஒருவனின் நிழலுக்குள் நுழைந்தது.
எந்த மனிதனின் நிழலுக்குள் அது நுழைகிறதோ, அவன் நிழலிலேயே அது ஊர்ந்து வந்துகொண்டிருக்கும். நடந்துசெல்பவன் எவ்வளவு வேகமாக நடந்தாலும், மெதுவாக நடந்தாலும் அதுவும் அதே வேகத்தில் நிழலுக்குள் நெளிந்தபடியே வரும். அதன் உடலில் படிந்த நிழலைவிட்டு அது பிரியாது.
இளைய பிடாரனின் நாசி, பாம்பின் வாசனையை நுகர்ந்தது. “யாரும் நின்றுவிடாதீர்கள். ஏதோ ஒரு பாம்பு நம் அருகில் வந்துகொண்டிருக்கிறது” என்றான். எல்லோருக்குள்ளும் அதிர்ச்சி பரவியது; வியர்க்கத் தொடங்கியது. என்ன வாசனை என்பது அவனுக்குப் பிடிபடவில்லை. மூத்த பிடாரனைப் பார்த்துக் கேட்டான், “உங்களின் மூக்கை வாசனை எட்டவில்லையா?”
மூத்த பிடாரன், ‘இவனது செயல் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதே’ என்று நினைத்தபடியே பதில் ஏதும் சொல்லாமல் நடந்துகொண்டிருந்தான். நடந்துசெல்லும் வீரர்கள் அனைவரும் கையில் ஆயுதங்களுடன் இருந்தனர். மனிதன், பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது. வெளியே அவன் எந்த வகை ஆயுதங்களை வைத்திருந்தும் என்னவாகப் போகிறது? உள்ளுக்குள் ஏற்படும் நடுக்கத்தை எவரால் நிறுத்த முடியும்?
நடுக்கமின்றி நடந்துகொண்டிருந்தவன் மூத்த பிடாரன் மட்டும்தான். அவனது நாசி, நீண்ட நேரத்துக்கு முன்பே நாவிப்பூ மணத்தைக் கண்டறிந்துவிட்டது. கருவிரியனுக்கும் நிழல் விரியனுக்கும்தான் இந்த வாடை வரும். கருவிரியனாக இருந்தால் வாடை நுகர்வதற்குள் கடி விழுந்திருக்கும். இது நிழல்விரியன்தான். அதனால்தான் நடக்கவிட்டு வந்துகொண்டே இருக்கிறது. யாருடைய நிழலில் வருகிறது என்பதுதான் அவனுக்குத் தெரியவில்லை.
`மனிதரின் நிழலுக்குள் அது நுழைந்துவிட்டால், அந்த நிழலைவிட்டு விலகாமல் வந்துகொண்டே இருக்கும். நிழலுக்கு உரியவன் அதனிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, நிற்காமல் நடந்துகொண்டே இருப்பதுதான். மாலையில் கதிரவனின் ஒளி மறைந்து மனித நிழல் அதுவாகச் சிதைந்தால் மட்டுமே அது திக்குத்தெரியாமல் திசை மாறும். இல்லையென்றால், அது வந்துகொண்டேதான் இருக்கும். நடப்பவன் எந்த இடத்தில் நின்று இளைப்பாறுகிறானோ, அந்த இடத்தில் அவனது குதிக்காலைக் கடித்துச் சுற்றும். இதை நாம் சொன்னால், மொத்தக் கூட்டமும் பயந்து சிதறிவிடும். என்ன செய்வது?' என, மூத்த பிடாரன் சிந்தித்தபடியே நடந்துகொண்டிருந்தான். இளைய பிடாரனோ பொறையனிடம் போய்ச் சொன்னான், “பாம்பின் வாடை வருகிறது. இந்த வாடையைக்கூட இந்தக் காது அறுந்தவனால் உணர முடியவில்லை. இவன் பாம்புப் பிடாரன்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.”
அவனது சொல்லைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் பொறையன். மூத்த பிடாரனைத் திரும்பிப் பார்த்தார். பொறையன் நடையை நிறுத்தியதும் எல்லோரும் நின்றனர். மூத்த பிடாரன் மட்டும் நிற்காமல் நடந்தான். தன்னை இவன் அவமதிக்கிறான் எனப் பொறையன் நினைத்த கணத்தில், இடதுபக்கம் வந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் கத்திக்கொண்டு கீழே விழுந்தான்.
அன்று இரவு, தனித்த மரம் ஒன்றில் பரண் அமைத்துத் தங்கினர். வீரர்கள், சுழற்சி முறையில் காவல் காத்தனர். உணவு மூடைகளைக்கூட கீழே வைக்காமல் மரத்திலேயே கட்டித் தொங்கவிட்டனர். நடந்ததை மூத்த பிடாரன் விளக்கியபோது, இளைய பிடாரன் வணங்கி மன்னிப்புக் கோரினான்.
மறுநாள் விடிந்தது. ``பாம்பு பெரும்பாலும் காலையிலும் மாலையிலும்தான் இரை மேயும். எனவே, வெயில் நன்கு மேலேறிய பிறகு நடக்கலாம்'' என்றான் மூத்த பிடாரன். அதன்படியே அவர்கள் பொறுத்திருந்து நடந்தனர்.
வீரர்கள் எல்லோருக்குள்ளும் அச்சம் அப்பிக்கிடந்தது. மூத்த பிடாரன் முன் சென்றுகொண்டிருந்தான். வீரர்களுக்கு நடுவில் பொறையனும் இறுதியில் இளைய பிடாரனும் நடந்தனர். பாம்புகளின் விதவிதமான தடங்கள் நெடுகக்கிடந்தன. தொலைவில் இருந்த புதரின் மேல் பெரும்கிளையைப்போல கழுத்தை நீட்டி பறப்பவற்றை மேய்ந்துகொண்டிருந்தது ஏதோ ஒன்று. பின்னால் நடந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் அதைப் பார்த்துக் கை காட்டினான். இளைய பிடாரன் அதை உற்றுப்பார்த்தான்.
அது கட்டையா அல்லது பாம்பா என்பதை அவனால் உணர முடியவில்லை. ஒரு கல் எடுத்து அதை நோக்கி வீசினான். அது மெள்ளத் திரும்பியது.
முன்னால் போய்க்கொண்டிருந்த மூத்த பிடாரனிடம் சத்தம்போட்டுச் சொன்னான், “உனது காதுகளை அறுத்தால் ஒழிய உனக்குப் புத்தி வராது.’’
அப்போதுதான் புரிந்தது. அவன் ஏற்கெனவே அதைப் பார்த்துவிட்டான் என்று. பதில் சொல்லியபடியே நடக்கும் வேகத்தை இரு மடங்கு கூட்டினான் மூத்த பிடாரன். ஏதோ ஓர் ஆபத்து வரப்போகிறது என்பதை எல்லோரும் புரிந்து, வேகம்கொண்டனர்.
இளைய பிடாரன், வீரர்களைக் கடந்து சற்று உள்ளே போய்விட முயன்றபோது, அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வீரர்கள், ``காலிலே குச்சியாலேயே குத்திவிட்டது'' என்று சொல்லி கீழே உட்கார்ந்தனர். அவ்வாறு உட்கார்ந்த நான்கு பேரும் அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.
“ஒரு கட்டைவிரியன் இருந்தால், அதைச் சுற்றி எண்ணற்றக் குறுவிரியன்கள் இருக்கும் என்பதுகூடவா உனக்குத் தெரியாது? தேன்கூட்டைக் கலைப்பதுபோல புதரில் கிடந்தவற்றைக் கல் வீசிக் கலைத்துவிட்டாயே!” என்று சொல்லிக்கொண்டே இளைய பிடாரனது காதோரத்தின் சிறு பகுதியை அறுத்தான் மூத்த பிடாரன்.
இளைய பிடாரன் வலியால் கத்தினான். ஆனால், நான்கு வீரர்களின் மரணத்துக்கு, தான் காரணமாகிவிட்டதால் தண்டனையை ஏற்றான்.
இதுபோன்ற காரணங்களுக்காகச் சிறுகச் சிறுக அறுத்து இரண்டு காதுகளையும் முழுமையாக இழந்து நிற்பவன்தான் மூத்த பிடாரன். காதுகள் அற்ற அவனது தோற்றத்துக்குப் பின்னால், எத்தனை வகையான பாம்புகளைப் பற்றிய அறிவு இருக்கும் என்பதை இளைய பிடாரன் அப்போதுதான் உணர்ந்தான்.
மூன்றில் ஒரு பங்கு வீரர்களை இரண்டாம் நாளிலேயே இழந்தனர். `நாகக்குடியினரின் வாழ்விடத்துக்கு என, ஆறு நாள்கள் ஆகும்’ என்று முன்னோர் சொல்லக் கேட்டுள்ளனர். அங்கு சென்று சேரும்போது எத்தனை பேர் உயிரோடு இருப்போம் என்ற அச்சம் எல்லோரையும் ஆட்கொண்டது.
மூன்றாம் நாள் காலைப்பொழுது கழிந்த பிறகு நடக்க ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் எந்தவிதப் பேச்சும் பேசவில்லை. சற்றே பெரும் மரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் காடு அது. வழக்கத்தைவிடக் கூடுதல் அச்சம் உள்ளுக்குள் ஆட்டிக்கொண்டிருந்தது. ஐந்து பேர் மரணித்துள்ளனர். வாயில் நுரைதள்ளி, உடல் நீலம்பூத்து, கால் விரல் சுருண்டு இழுத்து... என மரணத்தின் இறுதி வடிவங்கள் நினைவிலிருந்து அகல மறுத்தன.
முன்னால் நடந்துகொண்டிருந்த மூத்த பிடாரன், கீழே பதிந்துகிடக்கும் தடத்தைப் பார்த்ததும் நடையை நிறுத்தினான். எல்லோரும் இடம்விட்டு அசையாமல் அப்படியே நின்றனர். அவன் குனிந்து மண்ணில் இருக்கும் நெளிவுகளை உற்றுப்பார்த்தான். பின்னால் இருப்பவர்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. நின்றால் நிழல்விரியன் குதிக்காலைக் கவ்வும், பேசினால் குறுவிரியன் செவிக்கு எட்டும். என்ன செய்வது எனப் புரியவில்லை. ஆயுதங்களின் பிடி வழுக்கும் அளவு வீரர்களின் உள்ளங்கை வியர்த்தது.
மூத்த பிடாரன், அந்தத் தடத்தைப் பார்த்தபடி அது போன திசையில் இன்னும் சிறிது தொலைவு புற்களை விலக்கி உள்ளே போனான். அவன் எதுவும் சொல்லாததால் பதற்றத்தின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பின்னால் நின்று இருந்த இளைய பிடாரன், ``நான் அங்கு வரவா?” என்று கேட்க வாயெடுத்தபோது, கை மீறிக் காதைத் தடவிப் பார்த்துக்கொண்டது.
மூத்த பிடாரனின் முகம் இன்னும் தெளிவடையாமல் இருப்பதைப் பொறையன் கவனித்தார். சின்னதாக அச்சம் அவருக்குள் ஏற ஆரம்பித்தது. மூத்த பிடாரன் தடத்தைப் பார்த்தபடியே அங்கு இருந்த பாறை விரிசலை நோக்கி நகர்ந்துபோனான்.
`எந்தப் பாம்பின் தடத்தையும் தொலைவில் இருந்தே சொல்லக்கூடியவன் மூத்த பிடாரன். இந்தத் தடம் பற்றி மட்டும் ஏன் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறான்?' என்று பொறையன் குழம்பிக்கொண்டிருக்கையில், மூத்த பிடாரன் சொன்னான், “மலஞ்சாரைப் புரண்டிருக்கிறது”.
அவன் சொல்வது மற்றவர்களுக்குப் புரியவில்லை.
“பாம்புகள், வளைந்து வளைந்து போகக்கூடியவை. பாம்புகளின் இனத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப வளைவுகளின் அகலம் மாறுபடும். பாம்புகளுக்கு வயது ஆக ஆக வளையும் ஆற்றல் குறையும். அதனால் அவற்றின் வேகம் குறையும். இந்த நிலையிலேயே பெரும்பாலான பாம்புகள் இறந்துவிடும். ஒருசில பாம்புகள்தான் இவற்றைத் தாண்டியும் வாழும். முடிந்தவரை நெளிவுகொடுத்து நகர்ந்துபோகும். மிகவும் வயதானால், அதாவது, மனிதன் நூறு வயதை எட்டுவதைப்போல பாம்பும் பெரும் வயதை அடைந்தால், அதன் உடல் பாதி அளவுக்குச் சுருங்கிவிடும். அதனால் நெளிந்தபடி நகர முடியாது. உடலை முறுக்கிப் புரளத் தொடங்கும். அப்படியே இடதுபுறமும் வலதுபுறமுமாகப் புரண்டு புரண்டுதான் இடத்தைக் கடக்கும். மனிதன் வயோதிகத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து போவதைப்போலத்தான் அதுவும். இந்த இடத்தில் மலஞ்சாரை ஒன்று புரண்டுபோயிருக்கிறது” என்றான் மூத்த பிடாரன்.
அவன் சொல்வதை அனைவரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
மூத்த பிடாரன் தொடர்ந்தான், “இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்தக் குன்றில் வேறு எந்தப் பாம்பும் இருக்காது.”
எல்லோரையும் ஆச்சர்யம் தொற்றியது.
`` `பாம்பு புரளும் மண்ணில் பிற பாம்புகள் தங்காது’ என்பது முன்னோர் வாக்கு. எனவே, இன்று இந்தக் குன்றைக் கடக்கும் வரை உங்களுக்கு அச்சம் தேவையில்லை” என்றான் மூத்த பிடாரன்.
வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. “அப்பாடா!'' என்று பெருமூச்சு விட்டனர். அச்சமற்ற அடிகளை கால்கள் எடுத்துவைத்தன. நடையின் வேகம் கூடியது. பேச்சு தொடங்கியது. பாம்புகளைக் கையாள்வதில் உள்ள நுட்பங்களைப் பற்றி பேசினர்.
“பாம்புகள், மனிதனைக் கண்டு அஞ்சித்தானே ஓடுகின்றன. பின்னர் ஏன் மனித மனம் பாம்பைக் கண்டு பதறுகிறது?” என்று கேட்டான் வீரன் ஒருவன்.
அசட்டுச் சிரிப்புடன் மூத்த பிடாரன் சொன்னான், “மனிதன், பாம்பின் ஓட்டத்தைப் பொய்யாகப் புரிந்துகொண்டான் என்று பொருள்.”
“அது அஞ்சி ஓடவில்லை என்கிறீர்களா?”
“அதைக் கண்டு நாம் அஞ்ச, அதனிடம் நஞ்சு இருக்கிறது. நம்மைக் கண்டு அது அஞ்சி ஓட, என்ன இருக்கிறது நம்மிடம்?”
வீரனிடம் பதில் இல்லை.
``ஒவ்வொரு பாம்பும் தனது இனத்தின் எண்ணற்றப் பாம்புகளைத் தின்றுவிட்டுத்தான் உயிர்வாழ்கிறது. மனிதனைப்போல் ஓர் உடம்புக்குள் வாழும் ஓர் உயிர் அல்ல; எண்ணிலடங்காத உயிர்கள் வாழும் ஓர் உடல். அது தின்ற உயிருக்கு ஏற்ப அதன் கால்கள் அமைகின்றன.”
மூத்த பிடாரனின் பேச்சு, அச்சமூட்டுவதாக இருந்தது. பாம்பை விடுத்து வேறு எதையும் பேசும் சூழல் இல்லை. இன்னொரு வீரன் நாகர்களைப் பற்றி கேட்டான். ``நாகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானா அல்லது அவர்களுக்குத் தனித்த அடையாளம் ஏதும் உண்டா?”
“நம்மைப் போன்ற மனிதர்கள்தான். ஆனால், தனித்த அடையாளங்களும் உண்டு.”
“என்னென்ன?”
``நாகர்குடியின் ஆண்களை நீங்கள் கண்டறிய வேண்டும் என்றால், அவர்களின் கால்களை வைத்துத்தான் கண்டறிய முடியும். குதிக்காலில் நமக்கு மேலும் கீழுமாக வெடிப்புகள் இருக்கும். அவர்களுக்கோ, செதில் செதிலாகப் பக்குகள் இருக்கும். அதேபோல கைவிரல் நகக்கண்ணில் தோல் நமக்கு மேலும் கீழுமாக உரியும். அவர்களுக்கோ செதில் செதிலாகத்தான் உரியும். உற்றுப்பார்த்தால் நகம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாது” அவ்வளவு நேரம் உற்சாகமாக இருந்த பேச்சொலி, இப்போது சற்றே அமைதிகொள்ளத் தொடங்கியது.
இன்னொருவன் கேட்டான், “நாகர்குடிப் பெண்களை எப்படிக் கண்டறிவது?”
“காமம் கொள்கையில்” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டான் மூத்த பிடாரன்.
“எப்படி?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான் அவன். இந்தப் பதிலை அறிய, எல்லோரும் மிக ஆவலுடன் இருந்தனர். சிறு சத்தம்கூட எழுப்பாமல் கால்கள் நடந்துகொண்டிருந்தன.
மூத்த பிடாரன் சொன்னான், “காமம் கொள்கையில் விம்மும் கொங்கையின் நாவு படம்போல் விரிந்து அடங்கும். அதை உணரும்போது நாம் மரணித்துக்கொண்டிருப்போம்.”
அந்த இடம் அமைதியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து ஒருவன் கேட்டான், “காமத்தின்போது அவர்கள் இமை மூட மாட்டார்கள் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் வேறொன்றைச் சொல்கிறீர்களே?”
“எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள்தானே. ஆளுக்கு ஒன்றாகத்தான் இருக்கும்” என்றான் மூத்த பிடாரன். மூன்றாம் குன்றைவிட்டுக் கீழ் இறங்கினர். ``இந்த இடத்தில் இன்று தங்கிவிட்டு, நாளை மீண்டும் பயணத்தைத் தொடங்கலாம்'' என்றார் பொறையன்.
வீரர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். உணவு மூடைகளைத் தூக்கிவந்த ஒருவன், ஆளுக்கு ஒரு கனியை உண்ணக் கொடுத்தான். மூத்த பிடாரனும் பொறையனும் கனியைப் பெற்றுக்கொண்டு சற்றுத் தள்ளியிருக்கும் சிறுபாறையை நோக்கி நடந்தனர்.
பொறையன், பாறையின் மீது ஏறி உட்கார்ந்து கனியைக் கடித்தார். அவருக்கு எதிரில் நின்றபடி மூத்த பிடாரன் கனியைக் கடிக்கும்போதுதான் கவனித்தான். பொறையன் கனியைக் கடிக்கும்போது பற்களுக்கு இடையில் இருக்கும் செதில்களிலிருந்து குருதி வந்துகொண்டிருந்தது.
பொறையன் கனியைக் கடித்துத் தின்றபடியே சொன்னார், “மரணம் ஏதும் இன்றி இன்றைய பொழுது முடிந்தது.''
அவரது சொல்லை அவரே இன்னும் சிறிது நேரத்தில் பொய்யாக்கப்போகிறார் என்பது மூத்த பிடாரனுக்குப் புரிந்துவிட்டது. ‘நேற்று இரவு மூடைகளைக் கட்டித் தொங்கவிட்ட மரத்திலிருந்து அது கனிகளுக்குள் இறங்கியிருக்க வேண்டும்’ என ஊகித்தபடியே பதில் ஏதும் சொல்லாமல், பொறையனையே பார்த்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
எரிவிரியனையும் ஊதுசுருட்டையும் நண்டுதின்னி நாகத்தையும் கண்கொண்டு பார்த்தறிந்தான் இளம் பிடாரன். இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்தபடி ஆறாம் மலை அடிவாரத்துக்கு அவர்கள் வந்தபோது உயிரோடு இருந்தவர்கள், இரு பிடாரன்களோடு ஒரு வீரன் மட்டுமே.
இவர்கள் வந்த செய்தி, நாகர் குலத் தலைவனுக்கு எட்டியது. அழைத்துவந்து விசாரித்தான். தலைவனைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர் மூவரும். பெருஞ்சேரலின் வேண்டுதலைச் சொன்னான் மூத்த பிடாரன்.
“தோலை உரிப்பதற்காக பாம்பு தின்னும் மூலிகையை, சேரல் குலத் தலைவனுக்கு நீங்கள் தந்துதவ வேண்டும்.”
நாகர் குலத் தலைவன் மிக இளவயதுக்காரன்போல் தெரிந்தான். அசட்டையான பார்வையோடு கேட்டான், “ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொருவிதமான மூலிகையைத் தின்னும். நீ எந்த மூலிகையைக் கேட்டு வந்துள்ளாய்?”
மூத்த பிடாரனுக்கு இந்தக் கேள்வி பெரும்வியப்பைத் தந்தது. பாம்பு தின்னும் ஏதாவது ஒரு மூலிகையை அறிந்துவைத்திருப்பதே அரிதானது. இவர்கள் ஒவ்வொரு பாம்புக்குமான மூலிகையை அறிந்துவைத்திருக்கின்றனர்.
“எந்த மூலிகையைத் தின்றால், மனிதனின் மேல் தோல் உரியும்?” எனக் கேட்டான் மூத்த பிடாரன்.
“நாங்கள் அதைத் தின்றதில்லை” என்றான் நாகர் குலத் தலைவன்.
மூத்த பிடாரனுக்கு, அடுத்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெருஞ்சேரல் சொல்லி அனுப்பிய இரண்டாவது வேண்டுகோளை முன்வைக்க முடிவுசெய்தான்.
கொண்டுவந்த கோணிப்பையில் இருந்து வெண்ணிறத் துணி ஒன்றை எடுத்து, நாகர் குலத் தலைவனை நோக்கி நீட்டியபடி, “இந்தத் துகிலை, புணரும் நாகங்களின் மீது போத்தி எடுத்துத் தர வேண்டும்” என்றான்.
`நாகங்கள் புணர்கையில் அவற்றின் மீது போத்தப்பட்ட துணியால் மனிதனுக்கு நீடித்த ஆயுளும் அதிர்ஷ்டமும் கைக்கூடும்' என்பது வடதேசத்து முனியின் வாக்கு. அதனால்தான் இதைக் கொடுத்து அனுப்பினான் பெருஞ்சேரல்.
``நாகங்கள் புணர்வதைக் கண்டவர் யாரும் இல்லை” என்றான் நாகர் குலத் தலைவன்.
“நாகங்கள் பின்னிக்கிடப்பதை ஊரெங்கும் உள்ள மக்கள் பார்த்திருக்கின்றனர். நீங்கள் பார்த்ததில்லை என்பது நம்பும்படியாக இல்லையே” என்றான் மூத்த பிடாரன்.
“நாகங்கள் பின்னிக்கொள்வது அவற்றின் காதல் விளையாட்டு. அதை எல்லோரும் பார்க்கலாம். ஆனால், நாகங்கள் புணர்வதைத்தான் யாரும் பார்க்க முடியாது.”
இவை இரண்டும் வெவ்வேறு வகையான செயல்கள் என்பதை இப்போதுதான் மூத்த பிடாரன் கேள்விப்படுகிறான்.
நாகர் குலத் தலைவன் சொன்னான், ``நாகத்துக்கு காமம் பெருகும் காலங்களில் மெல்லிய நீரொன்று உடலெங்கும் ஊறி, அதன் கண்களை மறைக்கத் தொடங்கும். மனிதரைப் போலத்தான் அதற்கும் காமம் கண்களைக் கட்டும். அதற்குரிய மூலிகையைத் தின்ற பிறகு, நாகம் தனது மூக்கு நுனியின் வழியே அந்த நீர்த்தோலைக் கழற்றத் தொடங்கும். கண்களின் மேல் படர்ந்த காமத்திரையை அகற்றும். முழு உடலையும் உருவிப் புத்துடல்கொள்ளும். அதன் பிறகு அது எட்டு நாள்களுக்கு வெளியே வராது. எங்கு, எப்படி இருக்கும் என்பதை இதுவரை யாரும் அறிந்ததில்லை. தன் இணையோடின்றி, தனித்து நாகம் தோல் உரிப்பதில்லை.
புத்துடல்கொண்ட கணத்திலிருந்து அது இணை சேரத் தொடங்கும். ஒவ்வொரு செதிலாலும் தன் இணையின் ஒவ்வொரு செதிலுடன் கலந்து மீளும். திருகி, புரண்டு, இறுகி, மேல் தோல் கனிந்து முதிர்ந்த பிறகுதான் இணையைப் பிரிந்து வெளியேறும். தன் பழைய உடலின் வழியே இணை கூடாத ஒரே உயிரினம் அது மட்டும்தான்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாகனின் கருவிழிகளில் நீல நிற வளையம் ஒன்று பூத்து அடங்கியது.
நாகன் மேலும் சொன்னான், “புதிய மேனிகொண்டு மட்டுமே தழுவி வாழும் காதல் வாழ்க்கை நாகத்தினுடையது. இந்தப் புவியில் எந்த உயிரும் இன்புற்றிராத அபூர்வக் காதல் அது.”
மூத்த பிடாரன், வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான். ‘காமம்கொள்கையில் மனிதன் நாகங்களைப் போல பின்ன ஆசைப்படுவது அதனால்தானா?’ என்ற எண்ணம் ஓடியது. சற்றே நிதானித்தான். தனது இரண்டு வேண்டுதல்களும் அர்த்தமற்றதாகிவிட்டன என்பதை உணர்ந்தான். அடுத்து என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.
“வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?”
``நீங்கள் வணங்கும் நாகதேவதையை நாங்கள் வணங்கி விடைபெற எண்ணுகிறோம்.”
``பொழுது சரிந்துவிட்டது. நாளை உங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறேன். இன்றிரவு குடிலில் தங்குங்கள். எக்காரணம்கொண்டும் குடிலைவிட்டு வெளியே வரக் கூடாது.”
“சரி” என்று சம்மதித்தான் மூத்த பிடாரன்.
தனித்து இருந்த குடில் ஒன்றில், அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இரவு கூடியது. `மகுளி'ப் பறை இசைக்கும் ஓசை கேட்டது. இன்று நாகர்களின் விருப்ப நாள். வந்துள்ளவன் பிடாரன் எனத் தெரிந்தும் அவனிடம் கனிவுகாட்டியதற்கு அதுதான் காரணம்.
குலத்தின் வழக்கப்படி புதிய இணையர்கள் விரும்பிக்கூடும் நாள் இது. நாகர்குடி முழுவதும் மந்தையைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தது. நடுவில் பெரும்வட்டத்தில் நெருப்பு மூட்டியிருந்தனர்.
குடிலுக்குள் அடைபட்டிருந்தனர் மூவரும். வீரனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவன் படுக்க தலை சாய்த்தான். பிடாரன்கள் இருவரும் வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தவியாய்த் தவித்தனர். இசையின் ஓசை கூடிக்கொண்டே இருந்தது.
இளம் ஆண்களும் பெண்களும் தங்களின் இணையைத் தேர்வுசெய்யத் தொடங்கினர். மூத்த பிடாரன், ஓலை வேய்ந்த குடிலில் மிகவும் பக்குவமாக சிறுதுளையை உருவாக்க முயன்றுகொண்டிருந்தான். நாகர்கள் வேய்ந்த குடிலில் ஆபத்து நிறைந்திருக்கும் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. எனவே, மிகவும் கவனமாக அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தான்.
இளம்பெண்கள் அமர்ந்திருக்க, இளம் ஆண்கள் அவர்களின் அருகில் வந்து இரு கைகளையும் பற்றி உள்ளங்கையை ஒன்றோடொன்று உரசினர். சாரைப்பாம்பின் அடிவயிறு வழவழப்பானதாக இருக்கும். நல்லபாம்பின் அடிவயிறு சொரசொரப் பானதாக இருக்கும். அது மரம் ஏறக்கூடியதால், அந்தத் தன்மை வாய்ந்தது.
ஆண், பெண் இருவரிலும் இந்த இரு இனங்களும் உண்டு. எதிரெதிர் தன்மை உள்ளவர்கள் கைகளை இறுகப் பற்றினர். அவ்வாறு இல்லாதவர்களின் கைகள், விலகி மறு கை பற்றின. வழவழப்பான சாரையின் அடிவயிற்றை, சொரசொரப்பான உள்ளங்கைகள் சூழத்தொடங்கின.
மூத்த பிடாரன் பக்குவமாகத் துளையிட்டு தொலைவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். இளைய பிடாரனும் அதே போல துளையிட முயன்றான். கைகளைப் பற்றியவர்களின் ஆட்டம் தொடங்கியது. கை புணர்ந்து ஆடும் துணங்கைக் கூத்து. நாகத்திடமிருந்து மனிதன் கற்ற காதற்கலை இது. சுழிவும் பின்னலுமாக நெருப்பின் தழல் போல் உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று படர்ந்து மேலேறின. இசை கூடியது. நாகம் படம் விரிக்கையில், மயில்தோகையில் பல வண்ணம் சட்டெனத் தோன்றி மறையும். நாகர் குலப் பெண்களின் முகங்கள் தழல் படர்ந்த வெளிச்சத்தில் அவ்வாறே தோன்றின.
மூத்த பிடாரன் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கையில், “ஐயோ..!'' எனக் கத்தியபடி கீழே சரிந்தான் இளம் பிடாரன். வேகமாக வந்து அவனைத் தாங்கிப்பிடித்தான் மூத்த பிடாரன். அவனது கண்களின் ஓரம் சிறியதாக நீண்டிருந்தது உள்ளே சென்றதன் வால் பகுதி.
அதிர்ந்துபோனான் மூத்த பிடாரன். கொத்தும் பாம்புகளைத்தான் இதுவரைப் பார்த்துள்ளான். தீண்டிய வேகத்தில் உள்நுழையும் நாகத்தை இப்போதுதான் பார்க்கிறான். தாங்கிப் பிடித்தவனின் கை நடுங்கியது. இனி அவனைக் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்ததும் அப்படியே தரையில் படுக்கவைத்தான். ‘நாகர்கள் வேய்ந்த ஓலையில் எல்லாம் இருக்கும் என்பதை அறியாது அவசரப்பட்டு விட்டானே’ என்று மூத்த பிடாரன் கவலைகொண்டான்.
அதன் பிறகு துளையில் எட்டிப்பார்க்க மனம்வரவில்லை. இசை கேட்டுக்கொண்டே இருந்தது. நாகங்களுக்கு நெருப்பு ஆகாது. இவர்கள் ஏன் நெருப்பை மூட்டி ஆடுகின்றனர் என்பதை அறியவேண்டும் என ஆவலிருந்தது. ஆனால், கண்ணுக்குள் நுழைந்ததைப் பார்த்த பிறகு எல்லாம் வடிந்துவிட்டன.
மறுநாள் காலை நாகர்குடி இளைஞன் ஒருவன் வந்து, இருவரையும் நாகதேவதையின் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். செல்லும்போது வீரன் கேட்டான், “இளைய பிடாரன் ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான்?”
``எழுந்திருக்க முடியாததால்” என்றான் மூத்த பிடாரன்.
நாகதேவதையின் இருப்பிடத்தை அடைந்தனர். மர அடிவாரத்தில் சிறு சிறு கற்களும் பாம்பு உரித்த தோல் ஒன்றும் இருந்தன.
நாகங்களைப் படமெடுக்கச் செய்து, அவற்றின் தலையில் சிறு கல் வைத்து அழைத்துவருவாள் குலத்தின் முதுமகள் எனக் கேள்விப்பட்டுள்ளான் பிடாரன். அங்கு இருக்கும் கற்கள் எல்லாம் தலைமுறை தலைமுறையாக அவ்வாறு கொண்டுவரப்பட்ட கற்களாக இருக்கும் என யூகித்தான் மூத்த பிடாரன். ஆனால், ``பாம்பு கழற்றிய அந்தத் தோலை வைத்து ஏன் வணங்குகின்றனர், அதன் காரணம் என்ன?'' என்று கேட்டான்.
அழைத்து வந்த நாகர்குடி வீரன் சொன்னான், “அது வெண்சாரைக் கழற்றிய தோல்.”
இரண்டு நாள்களில் அடைந்திராத பேரதிர்ச்சியை மூத்த பிடாரன் இப்போது அடைந்தான்.
“வெண்சாரையைப் பார்ப்பது தெய்வத்தைப் பார்ப்பதற்குச் சமம் என்பார்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”
“எங்கள் முன்னோர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்று மட்டும் சொன்னான் நாகன்.
சேரலின் அவையில் நடந்தவற்றை விளக்கினான் மூத்த பிடாரன். வரும்போது நாக வீரன் எங்களை கீழ்மலையின் அடிவாரம் வரை அழைத்து வந்தான். உயிரிழப்பு இன்றி இருவரும் வந்து சேர்ந்தோம்” என்றான்.
“நாம் கேட்ட இரண்டையும் அவர்கள் கொடுக்காமல், கவனமாகப் பேசி உங்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்” என்றான் சேரல்.
“கவனம் பேச்சில் இருந்து என்ன செய்ய, செயலில் வேண்டும்” என்றான் மூத்த பிடாரன்.
அவன் சொல்வது அவையோருக்குப் புரியவில்லை.
“நாகம், என்றுமே மனிதனின் எதிரிதான். அதனிடம் இரந்து பயன் ஏதுமில்லை. அதை அழித்தால் மட்டுமே மனிதன் பயனடைவான். நாகர்கள் அதனினும் கொடிய அழிவுசக்திகள். அவர்களைக் கூண்டோடு அழித்தாக வேண்டும். அவர்கள் இறங்கி வர முடிவெடுத்தால், ஒரே நாளில் சேரல் குலம் அழிந்துபோகும்”.
அந்தக் கணம், பெருஞ்சேரலின் உடல் நடுங்கி அடங்கியது.
“என்ன உளறுகிறாய்?”
“நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டது, நீங்கள் தர முன்வந்த செல்வத்துக்காக அல்ல. பிடாரன்களின் வாழ்நாள் வைராக்கியம், நாகங்களை வெல்வதே. கரும்பருந்திடம் நாங்கள் அளித்துள்ள வாக்கும் அதுதான். நாகர்களின் ஆற்றலை அறியவே எருக்குமலை ஏறினேன். என்னை யாரென அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால், அவர்களை நான் கண்டறிந்துவிட்டேன். மிகச் சிறியதொரு கூட்டம் அது. பெரும்சக்தி வாய்ந்த சேரலர் அவர்களை ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கிறீர்கள் எனப் புரியவில்லை.”
“என்ன செய்யலாம் எனச் சொல்கிறாய்?”
``நீங்கள் உதவ முன்வந்தால், அவர்களைக் கூண்டோடு அழித்துவிடலாம்.”
``ஆறு மலைகளைத் தாண்டி அவர்களின் இருப்பிடம் உள்ளது. எப்படி அழிக்க முடியும்?”
“இந்தத் திசையில் போனால்தான் ஆறு மலைகளைத் தாண்ட முடியும். நாட்டின் வட எல்லையில் கடலோடு இணைந்த மலைமுகடு ஒன்று உள்ளது அல்லவா? அந்தத் திசையில் நுழைந்தால், முதல் குன்றின் மீதுதான் நாகக்குடியின் இருப்பிடம் உள்ளது. இந்தப் பயணத்தில் நான் கண்டறிந்த உண்மை அதுவே.”
பெருஞ்சேரல் மூத்தமகன் பதுமன், “அப்படியென்றால், தாக்குதலை இன்றே தொடங்கலாம்” என்றான் படுஉற்சாகமாக.
பெருஞ்சேரலோ, நிதானம் தவறாமல் இருந்தான்.
“நாகர்களை நம்மால் எப்படி வெல்ல முடியும்?”
``நீங்கள் படைகளைத் தாருங்கள். நான் வெற்றியைத் தருகிறேன்.”
‘பிடாரனின் சொல்லை நம்பலாமா?’ என்ற சிந்தனையில் இருந்தான் பெருஞ்சேரல்.
“நாம் வென்றால், வளம்மிக்க மலைக்குன்றுகள் நம் நாட்டுடன் இணையும். அதுமட்டுமன்று, நாகர்களையே வென்றவர்களாக சேரலர் அறியப்படுவர். அதன் பிறகு, யார் மீது நாம் போர் தொடுத்தாலும் நமது ஆயுதங்கள் தாக்கும் முன் நாம் வென்ற நாகர்களின் கதைகள் அவர்களைத் தாக்கி பலம் இழக்கச் செய்யும்” என்றான் பதுமன்.
பெருஞ்சேரல் மூத்த பிடாரனைப் பார்த்துக் கேட்டான், “படைகள் எப்போது புறப்பட வேண்டும்?'’
``எனக்கான ஆயுதங்களை நான் சேகரிக்க, சில மாதங்கள் ஆகும். அதன் பிறகு புறப்படலாம்.”
வடதிசை மலைமுகட்டின் அடிவாரத்தில், சேரலர் படை அணிவகுத்து நின்றது. தளபதிகள் இரண்டு நிலைகளாகப் படைகளை நிறுத்தியிருந்தனர். காலாட்படையும் விற்படையும் எருக்குமலையை நோக்கி நின்றன. படைகளுக்குப் பின்னால் முகட்டின் மேல்புறத்திலிருந்து பெருஞ்சேரல் களத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.
பெருஞ்சேரலின் படை அடிவாரத்தில் திரண்டிருப்பதை அறிந்த நாகர்கள், எதிர் தாக்குதலுக்கு ஆயத்தமானார்கள்.
மூத்த பிடாரன் மூன்று மாதங்களாகச் சேகரித்த ஆயுதங்கள் எல்லாம் நான்கு கூட்டு வண்டிகளில் இருந்தன. அவை என்ன ஆயுதங்கள் என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. போரின் போக்குகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தலாம் என்ற முடிவோடு, நாகர்களின் தாக்குதல் உத்தியைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவனோடு பெருஞ்சேரல் மகன் பதுமன் நின்றிருந்தான்.
விரிசங்கு ஊதி போரைத் தொடங்கினான் பெருஞ்சேரல். அவன் படைவீரர்கள் ஆயுதங்களோடு மெள்ள முன்நகர்ந்தனர். மலையின் மீதிருந்து நாகர் படைத் தளபதியின் கொம்போசை கேட்டது.
நாகர்களின் தாக்குதல் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் பார்த்ததில்லை. எனவே, வீரர்கள் பெரும் நடுக்கத்தின் வழியேதான் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு முன்னேறினர். சேரலர் படை எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தது. அதில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் நாகர் குடியினர் இருப்பார்கள் எனக் கணித்திருந்தான் மூத்த பிடாரன். எனவே, இந்தப் போர் உச்சிப் பொழுதுக்குள் முடிந்துவிடும் என்பது அவனது எண்ணம்.
சேரல வீரர்கள் முன்னோக்கிச் சென்றபோது நாகர்களும் மூன்று அணிகளாக இறங்கி வந்தனர். ஒவ்வோர் அணியிலும் மிகக் குறைவான வீரர்களே இருந்தனர். அதைக் கண்ட சேரல வீரர்களுக்கு பெரும் நம்பிக்கை பிறந்தது. அவர்கள் இறங்கி வருவதில் ஏதோ மாறுபட்டத்தன்மை இருக்கிறதே என உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன்.
நாகர்களின் இடதுபுறக் குழு குறுவளைவு கொண்டு இறங்கியது. வலதுபுறக் குழு பெரும்வளைவு கொண்டு இறங்கியது. நடுவில் வந்த குழு, வளைவுகளற்று நெட்டுவாக்கில் படுவேகமாக இறங்கியது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனக் கணித்துக்கொண்டிருக்கும்போதே சேரலர் படை நாகர்களை நோக்கி அம்புகளை வீசியது.
நடுவில் நெட்டுவாக்கில் வந்த நாகர் படையின் முன்வரிசையினர் மண்டியிட்டு அமர்ந்து அம்பை நாணில் ஏற்றினர். வழக்கமான நேரத்தைவிட அவர்கள் நாண் ஏற்ற மும்மடங்கு நேரமானது. ``போர்ப் பயிற்சி அற்றவர்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது'' என்றான் பதுமன்.
நாகர்கள் தொடுத்த நாணில் இருந்து அம்புகள் பறந்து வரும்போதுதான், அம்போடு சேர்த்து மற்றொன்று நெளிந்துகொண்டு வருவது தெரிந்தது. கண நேரத்துக்குள் சேரலர் படை கதிகலங்கியது.
அம்போடு வந்து இறங்கிய சாரைகள் நான்கு புறங்களிலும் விழுந்து நகர, படைவீரர்கள் திசையெங்கும் தெறித்து ஓடினர்.
நாகர்களின் இந்தத் தாக்குதலை எதிர்பார்த்திருந்தான் மூத்த பிடாரன். “முதலிலே சொன்னால், படைவீரன் ஒருவன்கூட களத்தில் நிற்க மாட்டான். அதனால்தான் சொல்லவில்லை” என்று பதுமனிடம் கூறினான்.
“நடுவில் நெட்டுவாக்கில் இறங்கியது சாரைப்பாம்பு உத்தி. இடதுபுறம் குறுவளைவு கொண்டு இறங்கியது எரிவிரியன் உத்தி. வலதுபுறம் பெருவளைவுகொண்டு இறங்கியது நல்லபாம்பு உத்தி. பாம்புகளின் தடத்துக்கு ஏற்ப உத்தி வகுத்துள்ளனர். அவர்கள் இப்போது சாரைப் பாம்பை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்துள்ளனர்” என்றான் பிடாரன்.
பதுமனுக்கு, உடல் நடுக்கம்கொள்ளத் தொடங்கியது.
“இதைத் தடுக்க வழி என்ன?”
கேட்டுக்கொண்டிருக்கும்போதே தனது கூட்டு வண்டியின் மேல்கூடாரத்தைத் திறந்துவிட்டான் மூத்த பிடாரன். கரும்பருந்துகளும் பாம்புப் பருந்துகளும் படபடத்து வெளியேறின. காற்றில் ஏறிய பருந்துகளின் ஓசை, எங்கும் எதிரொலித்தது. பருந்துகளின் விரல்கள் களத்தில் நெளியும் சாரைகளைக் கவ்வி மேலேறின. அந்தக் காடு முழுவதும் பருந்துகள் வட்டமடிக்கத் தொடங்கின. பருந்தின் கண்கள் பாம்பைக் காணும் முன் அதை பாம்பு கண்டுணர்ந்துவிடும்.
“இனி எந்தப் பாம்பும் வெளியே நிலைகொள்ளாது. அனைத்தும் தன் இருப்பிடத்தை நோக்கி ஓடிவிடும். அவர்களால் அதைக் கையில் எடுத்து அம்பில் பொருத்தி அனுப்ப முடியாது” என்றான் பிடாரன்.
பதுமனுக்கு, மேலெல்லாம் வியர்த்திருந்தது.
பிடாரனின் இந்த உத்தியை எதிர்பார்த்து இருந்தவனைப் போல நாகர் குலத் தளபதி குறுஞ்சிரிப்பு ஒன்றை உகுத்தான்.
“முகட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருக்கும் அடுத்த படைப் பிரிவை முன்னகர்ந்து வரச் சொல்” என்று கத்தினான் மூத்த பிடாரன்.
பதுமன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும்போதே, நான்காவது கூட்டுவண்டியின் கதவைத் திறந்தான் மூத்த பிடாரன். மரப்பெட்டிகள் நிறைந்திருந்தன. “வீரர்களிடம் பெட்டியை எடுத்துக்கொண்டுபோய், எதிர்திசையில் பகுதிக்கு ஒன்றாகத் திறந்துவிடச் சொல்'' என்றான் மூத்த பிடாரன். பதுமன் உடனடியாக அதற்கான உத்தரவை இட்டான்.
வீரர்கள், பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடினர்.
“பெட்டிகள் முழுக்க எண்ணற்ற பாம்புக்கீரிகளும் கருங்கீரிகளும் இருக்கின்றன. அவை முக்கியம் அல்ல. எட்டு பழந்தின்னிக் கீறிகள் இருக்கின்றன. அவற்றின் வாடை காற்றில் மிதந்தாலே போதும், இந்தத் திசைவிட்டே பாம்புகள் வெளியேறிவிடும்” என்றான் மூத்த பிடாரன்.
சேரலர் படை, மறுமுறை அணிவகுத்தது. இப்போது பின்வரிசையில் கம்பீரமாக நிலைகொண்டது யானைப்படை. அதற்கு முன்னால் விற்படையும் காலாட்படையும் அணிவகுத்தன. முதலில் இருந்ததைப்போல இருமடங்கு வீரர்கள். உத்தரவு கிடைத்ததும் முன்னேறினர்.
நாகர் குலத் தளபதி கை அசைத்ததும் நாகர்களின் அம்புகள் நாணில் இருந்து விடுபட்டு, காற்றில் பாய்ந்தன. இப்போது அம்போடு நெளிந்து வளையும் பாம்புகள் எவையும் தென்படவில்லை. சேரல வீரர்கள் உற்சாகத்துடன் முன்னேறினர். பதுமன், மூத்த பிடாரனைத் தழுவிப் பாராட்டினான். “இனி வெற்றி உறுதி!” என்று சொல்லி மகிழ்ந்தான் பதுமன்.
சிறிது நேரத்தில் முன்கள வீரர்களிடம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. என்னவென்று அறியும் முன்பே வீரர்கள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தனர். சருகில் தீப்பற்றுவதைப் போலத்தான் போர்க்களத்தில் ஓட ஆரம்பிப்பது. ஒருவன் ஓட ஆரம்பித்தால், அந்த அச்சம் கண நேரத்துக்குள் ஒட்டுமொத்த படையிலும் பரவும். யானைப்படைத் தளபதி சட்டென அனுமானித்து, களத்தைவிட்டு வெளியேற உத்தரவிட்டான்.
மூத்த பிடாரனுக்கு, நடப்பது எதுவும் புரியவில்லை. நாகர்கள், அம்பு எய்தியபடி முன்னோக்கி வந்துகொண்டிருந்தனர். சேரலர் படை, களம்விட்டு ஓடிக்கொண்டிருந்தது. பிடாரன் நடப்பதை அறியாமல் திகைத்து நின்றான்.
வீரர்கள், உயிர்பிழைக்க வெறிகொண்டு ஓடினர். என்ன என்பது விளங்கவில்லை. `தாமதிக்கக் கூடாது' என முடிவெடுத்த மூத்த பிடாரன், முன் களத்தை நோக்கி விரைந்தான். பதுமன் அடுத்து என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் தந்தை இருக்கும் இடம் நோக்கி மேலேறினான்.
பெருஞ்சேரல், முகட்டின் மேல் இருந்தபடி களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது படை பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறிய நாகர் கூட்டம் முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. பதுமன் வந்து தந்தையோடு இணைந்தான். எந்தவித முடிவும் எடுக்காமல் மூத்த பிடாரனுக்காக அவர்கள் காத்திருந்தனர்.
சிறிது நேரம் கழித்து மூச்சிரைக்க ஓடிவந்தான் மூத்த பிடாரன். மேலெல்லாம் அலங்கோலமாய் இருந்தது. “எள்ளுச்செடியில் உற்பத்தியாகும் கண்ணுக்குத் தெரியாத கொடும்நாகம் ‘குருதிப்பனையன்’. அம்புகளோடு இணைந்து அவை வந்துகொண்டிருக்கின்றன” என்று தன் மீது பாய்ந்த அம்பை கையில் ஏந்தியபடி கூறினான்.
பெருஞ்சேரலன் நடுங்கிப்போனான்.
“இப்போது என்ன செய்யலாம்?”
பதில் சொல்லும் ஆற்றல் குறைந்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பாயும் நஞ்சின் வேகத்தை கணித்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன். அப்போது பாய்ந்து வந்த அம்பு ஒன்று, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் குத்தியது.
மூத்த பிடாரன் சொன்னான், “இந்தக் குன்றில் மட்டுமே அவர்களின் குடி இருக்கிறது. இன்று இரவோடு இரவாகக் குன்றைச் சுற்றிவளையமிட்டுத் தீயிடுங்கள். தீயில் இருந்து மீள, அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. நாகர் இனம் முழு முற்றாக அழியும்.”
பெருஞ்சேரல் சற்றே தயங்கிச் சிந்தித்தான்.
மூத்த பிடாரன் சொன்னான், “ஒருமுறை தாக்கிவிட்டுப் பாதியில்விட்டால், அவர்கள் உங்களை அழிக்காமல் விட மாட்டார்கள். எனவே, முழுமையும் அழித்துவிடுங்கள்.”
பெருஞ்சேரலின் உடலெங்கும் அச்சம் பரவியிருந்தது. அவனது தயக்கத்தைக் கணித்தபடி பிடாரன் வாய் குழறிச் சொன்னான், “இவர்களை அழித்தால் மட்டுமே உங்கள் இரண்டாவது மகனின் ஆட்சிக்காலம் நிலைத்திருக்கும்.”
‘முதல் மகன் பதுமன் இருக்கும்போது ஏன் இவன் இரண்டாவது மகனைப் பற்றிச் சொல்கிறான்?’ என்ற அதிர்ச்சியோடு பெருஞ்சேரல் திரும்பி பதுமனைப் பார்த்தான்.
பெருஞ்சேரலின் கதறல், காதில் சன்னமாக விழுந்தது. கேட்டபடியே மண்ணில் சரிந்த மூத்த பிடாரனின் வாய் முணுமுணுத்தது, “ஒரு முழம் அளவில் கிளைகளில் தொங்கியபடி வாய் பிளந்து இருக்கும் மனிதனைக் கண்டால் தாவிக் கடிக்கும் உச்ச நஞ்சுகொண்ட பச்சிலை விரியன், சிறிது நேரத்துக்கு முன் பாய்ந்து வந்த அம்பிலிருந்து விலகித் தாவி பதுமனின் தொண்டையைக் கவ்வியது.”
வாயில் நுரை தள்ளியபடி இருந்தது. ஆனாலும் மூத்த பிடாரனின் உடலில் இருந்த நச்சுமுறி மருந்துகள் அவனை விரைவில் சாகவிடவில்லை.
அன்று இரவு எருக்குமலையைச் சுற்றி தீ மூட்டப்பட்டது. மூத்த பிடாரனின் கண் முன் எருக்குமலை முழுமுற்றாக எரிந்தது. அதன் மஞ்சள் வெளிச்சத்தில் நாகர்கள் துடிதுடித்துச் செத்தனர். நாகர்களின் அழிவோடு பிடாரனின் வாழ்வும் முடிந்தது.
கதை கேட்டுக்கொண்டிருந்த கபிலருக்கு, உயிர் உறைந்துவிடுவதுபோல் இருந்தது. ஆனால், கதையைவிட அவரை உலுக்கியது கண்ணுக்கு முன்னால் காணும் காட்சி. நெருப்பு அணைந்த பிறகு கங்குகளின் மீதுதான் இறங்குவார்கள் என்றுதான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், புதிதாக இரண்டு காதல் இணையர்கள் கை புணர்ந்து ஆடியபடி நெருப்பை நோக்கி நகர்ந்தனர்.
நெருப்பின் அனலில் நின்றாடப்போகிறார்கள் எனக் கபிலர் நினைத்துக்கொண்டிருந்தபோதே, அவர்கள் எரியும் நெருப்புக்குள் நுழைந்தனர். கபிலருக்கு குருதியோட்டமே நின்றுவிடுவதுபோல் இருந்தது.
மனிதர்கள் உயிரோடு நெருப்புக்குள் இறங்குவதை, கண்களால் காண முடியவில்லை. நெருப்புக்குள் இறங்கியவர்கள் சுழன்று கைகளை வீசியபோது, உள்ளிருந்து தீப்பொறிகள் நான்கு புறங்களிலும் தெறித்தன. அவர்கள் ஆடுகின்றனரா... எரிகின்றனரா? புரியாத நிலையில் கண்ணிமை செருக, மயங்கிச் சரிந்தார் கபிலர்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி ரமேஷ் .
இன்றுதான் முதல் முறையாக படிக்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு புதினம் மனதை கவருவதற்கு அதன் முதல் அத்தியாயம்
கதாநாயகன் அறிமுகம் படுத்தும் விதம், உரை நடை முதலியவை
மிகவும் முக்கியம். வெங்கடேசன் அவர்கள் நடை மிகவும் அருமை.
நீலன் --கபிலர் முகவுரை சம்பாஷணை அருமை.
நீலனின் பேச்சில் உள்ள தன்னம்பிக்கை ---வாவ் --அருமையோ அருமை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சூரியன் இறங்கிய பிறகே அவர்கள் வெளியேறி வந்தனர். கரும்புகை விண்ணை நோக்கி எழுந்தவண்ணம் இருந்தது. எருக்குமலையின் நாலாபுறங்களில் இருந்தும் சருகுகள் பற்றி எரிய, தீயின் நாவுகள் சுழன்று மேல்நோக்கிப் பாய்ந்துவந்தன. மலையின் எந்தத் திசை வழியாகவும் வெளியேற முடியாத நிலை உருவாகிவிட்டது. இருக்கும் ஒரே வழி, மலையின் மேற்கு முகப்பிலே இருக்கும் கரும்பாறை மடிப்புகளும் அவற்றில் ஆங்காங்கே இருக்கும் குகைகளும்தான். நாகர்கள் எல்லோரும் குடிலைவிட்டு அகன்று குகைகளில் நுழைந்தனர்.
உயிர் தப்பிய மகிழ்வு யாரிடமும் இல்லை. மலை முழுவதும் இருந்த நாகங்கள் நெருப்பில் அழிந்திருக்குமே, அவற்றைக் காப்பாற்ற முடியாமல் நாம் மட்டும் பிழைத்து என்ன ஆகப்போகிறது என்ற மனநிலைதான் எல்லோருக்கும். காட்டுத் தீ ஆறு நாட்கள் எரிந்தது. காற்று வீச வீச நெருப்பின் வெக்கை நாலாபுறங்களிலும் சீறிக்கொண்டிருந்தது. கரும்பாறைகள் பிளவுண்டன.
இரவும் பகலும் நாகர்கள் அழுகையை நிறுத்தவே இல்லை. ஒரு நள்ளிரவில் முதுமகள் ஒருத்தி குகையைவிட்டுச் சற்றுத் தள்ளிப்போய், பாறையின் மீது அமர்ந்து நெருப்புக்கோளமாகத் தகதகத்துக்கிடக்கும் காட்டைப் பார்த்தபடி இருந்தாள். அந்த இடத்தின் சூட்டில் யாரும் ஒரு கண்ணிமைப்பொழுதும் நிற்க முடியாது. அவள் எப்படி இவ்வளவு நேரம் நிற்கிறாள் என மற்றவர்களுக்குப் புரியவில்லை.
அவள் கண்களில் உயிர் இல்லை. எங்கும் தகிக்கும் கங்குகளே இருந்தன. நிலைகொண்ட மரங்கள் எவையும் இல்லை. நெருப்பு, மரங்களை முறுக்கித் திருகியது. இரவில் எரிந்து சரியும் மரங்களைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அங்குமிங்குமாக மரங்கள் வெடிக்கும் ஓசை நின்றபாடில்லை. கருநாகத்தின் சீற்றம் என வெடிப்புற்ற மரங்கள் நெருப்பைக் கக்கின.
முதுமகள், அழும் கண்களைத் துடைத்தபடி பாறையைவிட்டு எழுந்தாள். எழும்போது தொலைவில் தகித்துக்கொண்டிருக்கும் நெருப்பின் பரப்பில், ஏதோ ஒரு வேறுபாட்டை உணர்ந்தாள். அது என்னவென்று அவளுக்குப் பிடிபடவில்லை. அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்றும் தெரியவில்லை. எங்கும் கங்குகள் கண் விழித்திருந்தன. இந்தக் கொடும் இரவில் எதைப் பார்த்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்போடு எழுந்தாள். மீண்டும் அந்த இடத்தில் ஏதோ ஓர் அசைவு தெரிந்தது. கண்களைக் கூர்மையாக்கி உற்றுப்பார்த்தாள். கங்குகளின் உள்நெருப்பு காற்றின் போக்குக்கு ஏற்ப கூடிக் குறைவதால் ஏற்படும் அசைவுகள் நம்மைத் தொந்தரவு செய்கின்றன என்று நினைத்தபடி, குகையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
சிறிது தொலைவு நடந்தவள், மனம் பொறுக்காமல் மீண்டும் திரும்பிவந்து அந்த இடத்தை உற்றுப்பார்த்தாள். கங்குகளின் மீதான அசைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத் தொடங்கின. அவளின் கண்கள் இமைகளை இறக்காமல் உற்றுப்பார்த்தபடியே இருந்தன. நம்பவே முடியாத பேரதிசயம் ஒன்றை அவள் உணரத் தொடங்கினாள். உடலெங்கும் வியர்த்து அடங்கியது. அது உண்மைதானா என்ற கேள்வியை மனம் மீண்டும் மீண்டும் எழுப்ப, அசையாமல் பார்த்தாள். உண்மைதான். `என் கண்கொண்டுதான் அதைப் பார்க்கிறேன்’ என்பதை அவள் நம்பத் தொடங்கினாள்.
நெருப்பு எரிவது அடங்கி, கங்குகள் மட்டும் கனன்றுகொண்டிருந்த ஓர் இடத்தில், சாம்பல் படிந்த கங்குகளின் மீது ஒரு நாகம் ஊர்ந்து போவதுபோல் இருந்தது. உற்றுப்பார்த்தாள் அவள். கண்ணிமைக்கும் நேரத்தில் கங்குகளைக் கடந்து, நெருப்பு அணைந்த இருள் பகுதிக்குள் நுழைந்தது அந்த நாகம்.
முதுமகள், குகையை நோக்கி ஓடினாள். கத்தியபடி இந்த உண்மையைச் சொன்னாள். `இந்தக் கொடும்நெருப்பால் ஆறு நாட்கள் சூழப்பட்ட இந்த நிலையில் எல்லோரும் மனம் சிதைந்தே இருக்கிறோம். முதுமகள், அதிகச் சிதைவுக்கு உள்ளாகிவிட்டாள்’ என்று மற்றவர்கள் நினைத்தனர்.
அவளோ, `‘இல்லை நெருப்பின் மீது நாகம் ஊர்ந்து செல்வதை நான் பார்த்தேன்'’ எனக் கத்தி முறையிட்டாள். எல்லோருக்குமான ஆசையே, `‘மண்ணின் அதிசய உயிரினமான நாகங்கள் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதானே. குலத்தின் முதுமகளுக்கு அது இருக்காதா?’' என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லினர்.
முதுமகள் ஆறாத சினம்கொண்டாள். மறுநாள் இரவு எல்லோரையும் அவள் அமர்ந்திருந்த பாறைக்கு அழைத்துவந்தாள். தாங்க முடியாத வெக்கைக்கு நடுவே இரவு முழுவதும் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். நேற்றுபோல் கங்குகள் பெரும் அனலோடு இல்லை. சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் உள்நெருப்பு இரவானதும் கண்கள் விழித்துத் தகித்தது. ஊரே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கரும்புகை விடாது வந்து முகத்தில் அறைந்தது.
பொழுது, நள்ளிரவைத் தாண்டியது. அவர்கள் தலைமுறைத் தலைமுறையாக வாழும் காட்டைச் சுழற்றித் தின்ற நெருப்பு, இப்போது சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது.
`‘இந்தக் கொடும்காட்சியை இரவும் பகலுமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் எல்லோருக்கும் மனம் சிதைந்துதான்போகும், வாருங்கள் குகைக்குள் ஒடுங்குவோம்” என்று சொல்லி, பெரியவர் ஒருவர் எழுந்தவுடன் அனைவரும் எழுந்து குகை நோக்கிப் புறப்பட்டனர்.
முதுமகளுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இனி இவர்களை நிறுத்த முடியாது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவளும் உடன் நடக்கத் தொடங்கினாள். எல்லோரும் பாறைவிட்டு அகன்ற பிறகு, ஒரு சிறுவன் மட்டும் எதிர்திசையில் பார்த்தபடி அசையாமல் நின்றுகொண்டிருந்தான். மற்றவர்கள் அவனைச் சத்தம்போட்டு அழைத்தபடி குகை நோக்கி நடந்தனர்.
சிறுவனின் குரல் மெல்லியதாகத்தான் கேட்டது. எல்லோரும் அருகில் வந்து அந்தத் திசை நோக்கிப் பார்த்தனர். வியப்பால் விழிகள் பிதுங்கிக்கொண்டிருந்தன. கூட்டத்தினர் மூச்சு விடும் சத்தம்கூடக் கேட்கவில்லை. உறைந்துபோன நிலையில் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். கண்ணீரைத் துடைத்தபடி முதுமகள் மட்டும் குகையை நோக்கி நடந்தாள்.
அதன் பிறகு, பலகாலம் அந்த ரகசியத்தைக் கண்டறிய முடியாமல் நாகர்கள் தவித்துப்போயினர். கங்குகளின் மீது பாம்புகளால் எப்படி ஊர்ந்துபோக முடிந்தது? விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு முதுமகள்தான் ஒருநாள் விடை கண்டாள். அந்த மலையின் தென்திசைப் பாறை இடுக்குக்குள் ஓர் இடத்தில் ‘தீக்களி’ உள்ளது. அதில் புரண்டு, மேனி எல்லாம் தீக்களி அப்பியபடி நாகங்கள் நெருப்பைக் கடந்துள்ளன என்று அறிந்தாள்.
அது உண்மையா என்பதை அறிய முதலில் தானே உடல் எங்கும் தீக்களி பூசியபடி நெருப்புக்குள் இறங்கப்போவதாகச் சொன்னாள். முதுமகள் வாக்கைத் தட்ட முடியாமல் பெரும்மரங்களை வெட்டி வீழ்த்தி தீயை உருவாக்கினர். ஆடை துறந்து உடல் எங்கும் தீக்களி பூசியபடி நெருப்பினுள் நுழைந்தாள் முதுமகள். நாகர் கூட்டத்தின் உயிர்நாடி ஒடுங்கியது. அவள் உள்நுழைந்தபோது வீசிய காற்று, தழலைக் கிளர்ந்தெழச் செய்தது. குலத்தின் முதுமகள் நெருப்பில் மறைந்தாள்.
கணநேரத்தில் பதறிய ஆண்கள், “தண்ணீர்கொண்டு ஊற்றி நெருப்பை அணையுங்கள்” என்று கத்த, பெண்களோ, “முதுமகள் வாக்கை மீற அனுமதிக்க மாட்டோம்” என்று தீயைக் காத்து நின்றனர். சூழ்கொடி எனப் படர்ந்திருந்த நெருப்பின் கிளைகளை விலக்கி வெளியே வந்தாள் அவள்.
உறைந்து நின்றனர் நாகர்கள்.
``எண்ணெய்க்குள் நீர் நுழைய முடியாததைப்போலத்தான் இந்தத் தீக்களியைத் தாண்டி தீ நுழைய முடியாது” - சொல்லியபடி நடந்தாள் முதுமகள்.
நிர்வாண நிறைச்சுடரை அழைத்துக்கொண்டு நீராடச் சென்றனர் நாகினிகள். நடக்கும்போது அவள் சொன்னாள், “நெருப்பு, கண்ணுக்குள் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது கண்கள் திறந்தால் போதும்.”
அவளின் குரலை, கண்விழித்துக் கேட்டுக்கொண்டிருந்தன நாகங்கள்.
தழல்மாலை சூடி வந்தவளின் மேனி எல்லாம் நீரூற்றி நீர்மாலை சூடினர்.
பெருஞ்சேரலின் படை எருக்குமலையைச் சூழ்ந்து எரியூட்டியபோது நாகர்கள் பலரும் போரிட்டு மாண்டுள்ளனர். மிஞ்சியவர்கள் உடல் எங்கும் `தீக்களி’ பூசி அந்த நெருப்பில் இருந்து வெளியேறி பறம்புமலை வந்து சேர்ந்தனர்.
அப்போதிருந்து, அவர்களின் குலவழக்கப்படி கொற்றவைக் கூத்தில் கை புணர்ந்தாடும் துணங்கைக் கூத்து நிகழ்கிறது. புதிய இணையர்கள் தங்களின் மேனி எங்கும் ‘தீக்களி’ பூசியபடி நெருப்புக்குள் நுழைந்து, `தழல்மாலை சூடுவர்.
கபிலரின் உடல்நிலை ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய இரவுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது. பகல் முழுக்க தனது மாளிகையில் படுத்தபடி ஏதேதோ பிதற்றினார். உடல் மிகவும் சூடேறியிருந்தது. செய்தியைக் கேள்விப்பட்டு பாரி வந்தான். மருத்துவர்கள் மருந்துகள் தந்தனர். அவர்கள் போன பிறகு பாரி ‘தழல்மாலை சூடும்’ நிகழ்வை விளக்கிச் சொன்னான். அதை முழுமையாக அறிந்த பிறகுதான் கபிலரின் மனம் நிதானமடைந்தது.
`` `மூன்றாம் நாள் சற்றே அச்சமூட்டுவதாக இருக்கும். நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன். நீங்கள்தான் செவி சாய்க்கவில்லை” என்றான் பாரி.
“எனது உடல் ஈடுகொடுக்க மறுக்கிறது; மனம் உடலைப் பொருட்படுத்த மறுக்கிறது.”
அவர் சொன்னதைப் பற்றி பாரி சிந்தித்துக்கொண்டிருந்தான். கபிலர் தொடர்ந்தார்.
``எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் அழிந்த குலங்கள் பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் இங்கு உயிர்கொள்கின்றன. மனிதர்கள் வரலாற்றுக்குள்ளிருந்து இறங்கிவருகிறார்கள். இந்த மண்ணெங்கும் சிந்தப்பட்ட குருதியும் கண்ணீரும் உலராமல் உனது உள்ளங்கையில் இருக்கின்றன பாரி” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கபிலரின் குரல் உடைந்தது.
பாரிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.
“அந்தக் கண்ணீருக்கும் குருதிக்கும் பறம்பு கடமைப்பட்டுள்ளது” என்று மட்டும் சொன்னான்.
சிறிது நேரம் பேச்சற்ற அமைதி நீடித்தது.
“நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நான் பிறகு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தான் பாரி.
“உன்னிடம் இன்னொன்று கேட்க வேண்டும்?”
“என்ன?” என்றான் பாரி.
“நான் முதன்முதலாகக் கொற்றவைக் கூத்து பார்க்கிறேன். தழல்மாலை சூடலைப் பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால், நீ காலங்காலமாக அதைப் பார்த்துக்கொண்டி ருப்பவன். அப்படியிருக்க அவர்கள் நெருப்புக்குள் இறங்கும்போது உனது உடல் நடுங்கியது ஏன், உனது கண்கள் ஏன் கலங்கின?”
கபிலரின் கேள்வி, பாரிக்குப் பெரும்வியப்பைக் கொடுத்தது. நெருப்பாடல் கண்டு கூட்டமே உறைந்துபோயிருந்த வேளையில், தன்னை எப்படி இவ்வளவு கூர்மையாகக் கவனித்தார்?
எழுந்த பாரி, கபிலரின் அருகில் உட்கார்ந்தான். அவனது முகத்தில் இவ்வளவு நேரம் இல்லாத ஓர் இளஞ்சிரிப்பு ஓடி மறைந்தது.
பாரி சொன்னான், ``நேற்று தழல்மாலை சூட மூன்று இணையர்கள் நெருப்புக்குள் இறங்கினர் அல்லவா? நெருப்புக்குப் பின்புறம் இருந்து உடல் எல்லாம் தீக்களி பூசிக்கொண்டு இறங்குபவர்களை, நெருப்புக்கு முன்புறம் உட்கார்ந்திருக்கும் நம்மால் எளிதில் அடையாளம் காண முடியாது. நேற்றும் அப்படித்தான். ஆனால், மூன்றாவது இணை உள்ளிறங்கும்போது அந்த ஆண்மகன் யார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெண்மகள் யார் என்று எனக்குத் தெரிந்தது. கணநேரத்தில் கண்டறிந்தேன்.”
சற்றே அமைதி காத்த பிறகு பாரி சொன்னான், “அவள் என் மூத்தமகள் அங்கவை.”
அதிர்ந்தார் கபிலர்.
பாரி தொடர்ந்தான், “சிறுவயதில் இருந்து தழல்மாலை சூடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நெருப்பால் தீக்களியை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது என்று நன்றாகத் தெரியும். ஆனால், உள்ளிறங்கியது அங்கவை எனத் தெரிந்த கணத்தில் எனது உடல் நடுங்கியது.
அவள் ஆட்டத்தில் சிறந்தவள். தனது இணையோடு நெருப்பில் இறங்கி ஆடுகிறாள். ‘காதல்கொண்டு நெருப்பில் குளிக்கும் உன் மகளைப் பார்’ என ஒருபக்கம் மனம் துள்ளிக் குதித்தது. இன்னொரு பக்கமோ தழலுக்குள் இறங்குவது என் தசை எனத் துடித்தது.
உடலும் மனமும் இரு கூறுகளாப் பிளவுண்டதாக நீங்கள் சொன்னீர்களே, எனக்கோ மனமே இரு கூறுகளாகப் பிளவுண்டது.”
கலங்குவதிலும் கலங்கி மீள்வதிலும் பாரியே உதாரணமாக இருக்கிறான் என கபிலருக்குத் தோன்றியது.
“அவள் காதல்கொண்டது உனக்குத் தெரியுமா?”
``அவள் காதல் கொண்டுள்ளாள் என்பதை நான் முன்பே கணித்துவிட்டேன். ஆனால், யாரைத் தேர்ந்தெடுத்துள்ளாள் என்றுதான் தெரியாமல் இருந்தது.
``இப்போது தெரிந்ததா?’’
``இல்லை. நெருப்பில் நம் தசையைத்தானே நாம் உணர முடியும். அந்த இளைஞன் யார் எனத் தெரிந்துகொள்ள ஆசையோடிருக்கிறேன். அவளே சொல்லட்டும். அவள் காதல்கொண்டுள்ளாள் என்றால், அவன் மாவீரனாகத்தான் இருப்பான். இவளின் காதலைப் பெற முடிந்த ஒருவன், வீரத்தைத் தாண்டிய அரும்குணங்களைக் கொண்டிருப்பான். காத்திருக்கிறேன். அவனின் கைப்பற்றி எனக்கு எதிரில் வந்து அவள் நிற்கும் நாளுக்காக.”
மகிழ்ச்சி பொங்க கபிலர் கேட்டார்...
``ஆதினிக்குத் தெரியுமா?”
சிரித்தான் பாரி.
``அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? தனக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ளது காதல் என்று அங்கவை உணரும் முன்பே அவள் அறிந்திருப்பாள். அவள், தாய் அல்லவா?”
கலங்கினார் கபிலர். மண்ணை வேர் ஊடுருவுவதுபோல மனங்களை ஊடுருவுகிறான் பாரி. தன்னையும் அவன் ஊடுருவிக்கொண்டிருப்பான்.
“அப்படி எனில், வேளீர் குலம் நாகர் குலத்தோடு கலக்கப்போகிறது அல்லவா?”
“கலவையில்தானே புதுமைகள் பூக்கும். வேடர்குலமும் கொடிக்குலமும் இணைந்ததில்தானே வேளீர்குலம் பிறந்தது. வேளீர்குலத்தில் கலந்துள்ள கலவைகள் எத்தனை எத்தனை! என் தாய் சொல்வாள்... `உன் பாட்டன் திரையர் பெண்ணை மணந்தான்’ என்று. `காட்டெருமையை அடக்கும் வலு எனது தோள்களுக்கு வாய்த்தது அதனால்தான்' எனப் பலமுறை நினைத்திருக்கிறேன். திரையர்போல் திடம்கொண்ட ஒரு குலம் இந்த மண்ணில் வேறு எது? நாளை என் பேரக்குழந்தையின் கண்களில் நீல வளையம் பூத்து மறையும் அழகைப் பார்க்க இப்போதே தயாராகிவிட்டேன்” - சொல்லும்போதே பாரியின் முகம் எல்லாம் பூத்து மலர்ந்தது.
கபிலரின் உடற்சூடு குறையவில்லை. மாலை ஆனதும் அதிகமாகத் தொடங்கியது. நீலன், திசைக்காவல் வீரன். ஆதலால், கொற்றவைக் கூத்து முடிந்ததும் அவன் வேட்டுவன் பாறைக்குச் சென்றாக வேண்டும். எனவே, கபிலருக்கு உதவ உதிரனை அனுப்பிவைத்தான் பாரி.
இளம்வீரன் உதிரன், கபிலரின் மாளிகைக்கு மாலையில் வந்துசேர்ந்தான். அந்தப் பெருங்கவியை விழுந்து வணங்கினான். இருக்கையில் அமர்ந்தபடி அவனுக்கு வாழ்த்து சொன்னார் கபிலர். கொண்டுவந்த பச்சிலை உருண்டைகளை அவர் கையில் கொடுத்து, வாயில் போட்டுக்கொள்ளச் சொன்னான்.
“எனது உடற்சூடு குறைந்துள்ளதாக உணர்கிறேன்.”
குடிக்க நீரைக் குவளையில் நீட்டியபடி உதிரன் சொன்னான், “இன்னும் குறையவில்லை?”
உதிரனை உற்றுப்பார்த்தார் கபிலர்.
“உங்களின் கால் தொடும்போது அறிந்தேன். நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பியுள்ளனர்” என்றான் உதிரன்.
பெரியவர்கள் சில வேலைகளைச் செய்ய மறுப்பார்கள். அதற்கான காரணங்கள் அவர்களிடம் இருக்கும். அதுதான் சரி என உறுதியாக நம்புவார்கள். அதை மீறி அவர்களைச் செய்யவைக்கச் சிறந்த வழி, வயதில் மிகச் சிறியவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதுதான். இறங்கிவந்து அவர்களால் வாதாட முடியாது. அவர்களைக் கொண்டே அவர்களின் தரப்பை வீழ்த்தும் முயற்சி. பாரி அதையே செய்தான்.
உதிரன், ஒரு பெருங்கவியைக் குழந்தைவடிவில் கண்டுகொண்டிருந்தான். அவர் இரவானதும், “கொற்றவைக் கூத்துப் பார்க்க அழைத்துப் போ” என்று நச்சரிக்கத் தொடங்கினார். அவனோ அவரை மாளிகையின் மேலே அழைத்துச் சென்றான். காற்றில் மிதந்துவரும் இசையை வைத்தே, அன்றைய கூத்து யாருடையது என்று அவருக்குச் சொல்லத் தொடங்கினான்.
நான்காம் நாள் கூத்துக்கான சல்லென்ற ஓசையுடைய சல்லிகையின் ஓசை கேட்டது. மறுநாள் மலைத்தெய்வம் சாத்தனுக்காக முழங்கப்படும் இசைக்கருவியான ‘அடக்கத்தின்’ ஓசை கேட்டது. ஆறாம் நாள் பலாமரத்தினால் செய்யப்பட்டு கரடி கத்துவதுபோல் ஓசை எழுப்பக்கூடிய ‘கரடிகை’யின் ஓசை கேட்டது.
இப்படி ஒவ்வொரு நாளும் கேட்கும் ஓசையை வைத்தே அன்றைய கூத்தில் பாடப்படும் கதையை அவன் கூறினான்.
எட்டாம் நாள் இசையின் சத்தமே இல்லாமல் விட்டு விட்டு மனிதர்கள் கத்தும் ஓசை மட்டும் கேட்டது. ``இது கூவல் குடி'’ என்றான்.
``ஒலிக் குறியீடுகளை உருவாக்கி, காட்டைத் தங்களின் குரல்வளையால் பின்னி, தொடர்புகளை உருவாக்கும் வித்தை தெரிந்தவர்கள்'’ என்றான். மறுநாள் கொம்பன் குடியைப் பற்றிக் கூறினான். இடையில் சற்றே உடல் நலம் சரியான கபிலர் கொம்பன் குடியின் கதையைக் கேட்ட நாள் அன்று முற்றிலும் தூக்கம் தொலைத்தார். கதைகள் பல நேரம் குருதியை உறையவைக்கக்கூடியனவாக அமைந்துவிடுகின்றன.
கதை, சொல்லும்போது பெருகக்கூடியது; நினைக்கும்போது திரளக்கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக்கூடியது. வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.
மறுநாள் கடும் மழை இறங்கியது. கார்காலத்தின் தொடக்க நாள்கள். காட்டின் குணம் மாறத் தொடங்கியது. இரவில் மழையின் ஒலியே எங்கும் கேட்டது. இசைக்கருவிகளின் ஓசை எதுவும் கேட்கவில்லை. முதல் இரண்டு நாள்கள் இரவில் விட்டுவிட்டுப் பெய்த மழை, அதன் பிறகு, முழு இரவும் கொட்டித் தீர்த்தது. மீதம் இருக்கும் நாள்களின் கதைகளைச் சொல்லும்படி கபிலர் கேட்டுக்கொண்டே இருந்தார்.
மூன்று கதைகளைச் சொன்னான் உதிரன். பதினைந்து கூடையில் பழங்கள் வைக்கப்பட்டு, தெய்வவாக்கு விலங்குக்காகக் காத்திருப்பது கபிலருக்கு நன்கு தெரியும். எனவே, மீதமுள்ள நான்கு நாள்களுக்கான கதைகளை கேட்டுக்கொண்டே இருந்தார். உதிரன், ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்துப் பார்த்தான்.
“நான் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல” என்று சற்றே கோபித்தார் கபிலர்.
உதிரன் மனம் கலங்கிச் சொன்னான், “என்னை மன்னித்துவிடுங்கள். அந்தக் கதைகளைச் சொல்லும் வலிமை எனக்கு இல்லை.’’
சொல்லும்போதே அவனது உடல் நடுங்கியதைக் கபிலர் உணர்ந்தார். மறுநாள் கபிலரைப் பார்க்க வந்த மருத்துவர்களிடம் அவனும் மருந்து வாங்கிக்கொண்டான்.
``இன்று பதினேழாம் நாள் எவ்வளவு கடும் மழை பெய்தாலும், அதையும் மீறி இசையின் ஓசை கேட்கும்’’ என்றான்.
“காரணம் என்ன?” எனக் கேட்டார் கபிலர்.
``இன்றைய நாள் வேளீருக்கு உரியது. வந்துள்ள அத்தனை குடிப் பாணர்களின் இசைக்கருவிகளும் ஒருசேர முழங்கும். காடு கிடுகிடுக்க, காண்போர் நடுநடுங்க களமிறங்கி ஆடுபவன் வேள்பாரி. கொற்றவைக்கு முன் காட்டெருமையைப் பலியிட்டு, மேலெல்லாம் குருதி பூசி நிலம் நடுங்க ஆடுவான். பறம்பின் எல்லைக்குள் வந்த குலங்களின் கண்ணீர் துடைக்க உயிரையும் தரச் சித்தம் என உருகிச் சொல்லும் பெருநாள் இது.''
சொல்லிக்கொண்டிருக்கும் உதிரனின் உடல்மொழியைக்கொண்டே பாரியின் ஆட்டத்தை உணர்ந்தார் கபிலர். போர்த் தெய்வமான கொற்றவையின் முன், வாளேந்தி ஆடும் அமலையின் ஆட்டத்தை ஆடுவான் வேள்பாரி!
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1268786T.N.Balasubramanian wrote:நன்றி ரமேஷ் .
இன்றுதான் முதல் முறையாக படிக்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு புதினம் மனதை கவருவதற்கு அதன் முதல் அத்தியாயம்
கதாநாயகன் அறிமுகம் படுத்தும் விதம், உரை நடை முதலியவை
மிகவும் முக்கியம். வெங்கடேசன் அவர்கள் நடை மிகவும் அருமை.
நீலன் --கபிலர் முகவுரை சம்பாஷணை அருமை.
நீலனின் பேச்சில் உள்ள தன்னம்பிக்கை ---வாவ் --அருமையோ அருமை.
ரமணியன்
ஆமாம் ஐயா நிச்சயமாக அருமையான நடை... மீளமுடியாமல் தவிக்கிறேன் ... இக்கதையில் இருந்து ...
கல்கி அவர்களை போலவே கதை மாந்தர்களுக்குள் நம்மை உலாவ விடுகிறார்.. உலாவிக்கொண்டு இருக்கிறேன் மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் ...
- Sponsored content
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 19