புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
68 Posts - 41%
heezulia
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
1 Post - 1%
prajai
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
319 Posts - 50%
heezulia
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
21 Posts - 3%
prajai
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_m10காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும்


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 8:13 pm

காற்றின் ஓசை -4
(கருணை காற்றாக பரவட்டும்..)

மெஹல் எப்படியோ மாலனை நடத்தியே மெரீன் என்னும் மற்றொரு ஊருக்கு அழைத்து வந்து விட்டாள். இருவரும் மெரீனுக்குள் பேசி கொண்டே நுழைகிறார்கள். மாலன் எதையோ இவள் தன்னிடத்தில் மறைக்கிறாள் என்றும், எதை இங்கு காட்ட போகிறாளோ என்று சிந்தித்துக் கொண்டும்..மெரீனின் அழகை கண்டு வியந்து கொண்டிருக்கையில் இரண்டு பேர் மெஹலை பார்த்ததும் ஓடி வந்து இடுப்பு வரை குனிந்து வணகுகிறார்கள். மெஹல் கையசைத்து ஏதோ சொல்ல அவர்கள் மின்னலை போல் ஓடி ஏதோ வேலைக்குள் மறைந்து போக.. காணுமிடமெல்லாம் கண்ணை கவரும் சிற்பங்களால் மாலனை வியக்க வைக்கிறது அந்த மெரீன் எனும் சிறு கிராமம்.


மாலனுக்கென்னவோ மகாபலிபுரத்தின் மைய பகுதிக்கு எங்கோ வந்துவிட்ட ஒரு உணர்வு எழுந்தது. அத்தனை அழகான சிற்ப வேலைபாடுகளும்., ஆங்காங்கே சித்திரங்களும்., கற்களை செதுக்கும் உளி சப்தமும்.. மெஹலுக்கு எல்லோரும் கொடுக்கும் மரியாதையும் அவரை வியக்கவைக்க..

"பார்த்தீர்களா மாலன், இவ்விடமெல்லாம் முன்பு ரத்தம் தான் சொட்டிக் கொண்டிருந்தது. இங்கிருந்த ஏழை குடிகளின் வியர்வை ரத்தமாய் பூமியில் இறங்கும் நேரமே இம்மண்ணில் நான் பாதம் பதித்த நேரம் மாலன்.

நீங்கள் கேட்டீர்களே தனியாக நானென்ன செய்வேனென்று, இதோ பாருங்கள் ரத்தம் காய்ந்து போய் எல்லாம் சிலைகளாக நிற்கின்றன. ஏழையின் கண்ணீர் முத்துகளெல்லாம் வியர்வையாகி, வியர்வை இங்கே எத்தனை பிரம்மிப்பூட்டும் சிற்பங்களாய் காட்சி தருகின்றன பாருங்கள் மாலன்"

வள் பேசிக் கொண்டு வர ஒரு வாகனமொன்று சீறிக் கொண்டு வருகிறது. முன்பு விடை பெற்றுச் சென்ற இருவரும் அந்த வாகனத்திலிருந்து கீழிரங்குகிறார்கள் அவர்களோடு அந்த ஊரின் தலைவராக நியமிக்கப் பட்டவனும் வந்திறங்கினான். அவன் மெஹலை வணங்கி விட்டு மாலனுக்கும் மரியாதை செய்த சற்று நாழிகையில் எல்லோருமாய் சென்று அவாகனத்தில் அமர.., அவர்கள் ஏதேதோ சத்தம் போட்டு பேசிக் கொண்டார்கள். எனக்குத் தான் அவர்கள் என்ன பேசுகிறார்கள், இவள் என்ன சொல்கிறாள் என்ன செய்கிறாள் ஒன்றுமே புரிய வில்லை என் அன்பர்களே. அவர்கள் பேசும் மொழி ஏதோ அரபியை ஒத்திருந்தது ஆனால் அரபியுமில்லை.

மின்னல் வேகத்தில் சிற்பங்களின் சாலையை கிழித்துக் கொண்டு ஓரிடத்தில் வந்திறங்கினோம், இறங்கியது தான் தாமதம் நான்கு பேர் ஓடி வந்தார்கள் மெஹலை வணங்கினார்கள் மெஹல் ஏதோ சொன்னாள் உடனே அங்கு ஒரு பந்தளிடப் பட்டது.. இருக்கைகள் போடப் பட்டன.., என்னை உணவருந்தி குளித்து விட்டு சற்று ஓய்வும் எடுக்க கொண்டு சென்று மீண்டும் அங்கேயே கொண்டு வந்தார்கள்.


ரு நான்கு மணி நேர இடைவெளிக்கு பின் வருகிறேன் நான். அழகான தோரணம் திரளாக சூழ்ந்த மக்கள் தவிர யாரோ ஒலிபெருக்கி வைத்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டிருப்பதுமாய் எல்லோரும் கை த்தட்டுவாதுமாய் அங்கே பெரிய மாற்றமே நிகழ்ந்திருந்தது. மெஹல் இங்கும் அங்குமாய் ஓடுவதும் கட்டளைகள் பிறப்பிப்பதும் கையெழுத்து போடுவதுமாய் இருந்தாள்.

மெஹலிடம் சென்று நானும் வணங்கிவிட்டு இன்னும் என்ன செய்ய போகிறாய் மெஹல் உன் சமூக சேவையை காண்பித்து என்னை மனிதனாக்குவதாய் நினைக்காதே மெஹல், நானொன்றும் அத்தனை மோசமானவனில்லை, எனக்கும் என் மண் மீது அக்கறை உள்ளது என்றேன். அவள் பதட்டத்தோடு ஏதோ சொல்ல வர செல்வந்தர்கள் கூட்டத்திற்கு வந்து விட்டதாய் கூறி எல்லோரும் மேடைக்கு அழைக்கப் பட்டோம்.

மெஹல் என்னிடம் மற்றவர்கள் பேசுவதை சற்று மொழி பெயர்த்தும் என்னிடம் பேசுவதையும் தவிர அங்கு ஆங்கிலம் மருந்துக்கு கூட புரியவில்லை. காது கேட்காதவனை போலவும் வாய் பேச இயலாதவனை போலவும் நானங்கு காணப் பட்டேன், மொழி எவ்வளவு வலிமையானது என்பதின் அருமையை கண்கூடாக அங்கே உணர்ந்தேன். எப்படியாவது இங்கிருந்து போனதும் அரபி படித்துக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்துக் கொள்ளையில் மேடையில் முழங்க ஆரம்பித்து விட்டார்கள்.
மேடையில் நானும், மெஹலும், அவ்வூரின் தலைவனாக நியமிக்கப் பட்டவரும் அமர்ந்திருக்க ஒருவர் ஒலிபெருக்கி இல்லாமலே தொண்டை கிழிய கத்தினார். அவருக்கு ஒலி எழுப்பியில் நின்று பேச கோரிக்கை வர.. சற்று தள்ளி நின்று ஒலி பெருக்கியில் பேசலானார். எனக்கு காதை பொத்திக் கொண்டு ஓடலாமா அல்லது இறங்கியாவது விடலாமா என்றிருக்க மெஹலின் மரியாதை நிமித்தமாக வேறு vazhiyinri அமர்ந்திருந்தேன்.

என் அவஸ்த்தை மெஹலுக்குப் புரிந்து விட்டது போலும், இன்னொருவரை அழைத்து அவரிடம் ஏதோ காதில் சொல்ல, அவர் உடனே ஓடிச்சென்று மற்றொரு ஒலி பெருக்கியை எடுத்து முன்னவர் பேசி நிறுத்தியதும் தனக்குத் தெரிந்த சற்றேனும் ஓட்டையுள்ள ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து செய்து எனக்கும் புரியும் படி பேசலானார்.

நான் மெஹலை நன்றியோடு நோக்க மெஹல் சிரித்துக் கொண்டாள். ஒலி பெருக்கி கனகம்பீரமாக முழங்கியது..

"ருபத்தியாறு ஜூன் பிரிட்டீஷிடமிருந்தும், முதலாம் தியதி ஜூலை இத்தாலியிடமிருந்தும் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதில் சுதந்திரம் பெற்ற ஹெரிப் அதமத் மன்னரின் கீழ் ஆளப்படும், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் ஏமானிய தேசத்திற்கு சொந்தமான எங்கள் மரீனுக்கு வந்திறங்கியுள்ள ஜோர்டானிய இளவரசி, கருணையின் பேரரசி.., இரண்டாம் அப்தல்லாவின் மகள் மெஹல் மோனாவை வணங்கி வருக வருகவென வரவேற்கிறேன்" என்று நிறுத்த-

ஒரு நொடி ஆடிப் போய் எழுந்தே நின்று விட்டேன் நான்.. மெஹல் கையசைத்து அமருங்கள் என்று கேட்டுக் கொண்டால். சர்றேறகுறைய இரண்டு மணி நேர உரையாற்றல், பரிசளிப்பு, நிறை குறை ஆராய்தல், அடுத்த முன்னேற்றம் பற்றி பெசுதலென கூட்டம் கைத்தட்டல்கலோடும் சந்தோச ஆரவாரங்கலோடும் முடிய, நானும் மெஹலும் ஒரு கண்காட்சி போன்ற நீண்ட சன்னமான இருள் சூழ்ந்த வளாகத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டோம். அங்கே-

"பாருங்க மாலன், இது தான் சற்றேறக் குறைய ஐந்து வருடத்திற்கு முந்தைய மரீன். யாராலும் தீண்டப் படாமல், தொலைக் காட்சி செய்திகளுக்கு மட்டும் பசி பஞ்சமென கூறி செய்திகளை பணமாக்க ஊடங்கங்களால் மட்டுமே பயன்படுத்த பட்ட மரீன்.

பட்டினியும், பட்டினியை போக்க விபச்சாரமும் மட்டுமே அப்போது இவர்கள் நன்கறிந்த ஒன்று. அந்த சூழலில் நான் இவர்களுக்கு என்ன செய்திருப்பேனென நினைக்கிறீர்கள்???"

நானோன்றுமே கூற விரும்பாமல் ஆச்சர்யம் மேலெழ அவளையே பார்த்தேன்.

"ஜோர்டானில் எனக்கென்று ஒரு உலகமிருந்தது மாலன். அதைவிட்டு நான் வெளியே வந்தது இதுபோன்ற மக்களுக்காகத் தான் மாலன். நானும் தனித்து என்ன செய்திட முடியுமென நினைத்திருந்தால் ரத்தம் சொட்டிய இந்த பூமியில் சொட்டிப் பார்க்க இப்போது மனிதனே இருந்திருக்க மாட்டான், அவர்களின் வியர்வை இப்படி சிலையாக மாறியிருக்காது மாலன். முதலில் நானும் யோசித்தேன் தான், பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் இளவரசி அந்தஸ்த்தை தூக்கி எறிந்தேன்.

ஒரு கருணை மனதோடு மட்டும் சாதாரண பெண்மணியாக இவ்வூருக்குள் நுழைந்தேன். என்னையே கடத்தி வந்து அழகாக இருக்கிறாள் வைத்து விபச்சாரம் செய்யலாமென துணிந்தவர்கள் தான் இவர்கள். நான் ஜோர்டான் நாட்டு இலவரசியென தெரிய வர தூர நின்று பேச ஆரம்பித்தார்கள். அப்பொழுதும் என் கண்களில் நானே கோபத்திற்கு மாறாக இவர்களின் வறுமையையும் பசியையும் சுமந்துக் கொண்டேன் மாலன்.

ஆரம்பத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. எதையாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உயிர் முழுக்க இருந்தது. இத்தனை மனிதர்களுக்காய் தன்னொரு உயிரையாவது கொடுத்து காத்திட வேண்டுமென தார்மீகமாக முடிவு செய்தேன். எனக்கென்று என் தேசத்தில் ஒரு வருமானம் வைக்க விண்ணப்பித்தேன். அதே நேரம் இங்கு என்ன செயாலாமென யோசிக்கையில் இவர்களின் உயிர் பசியாய் கரைந்து போன இந்த மண் சிவந்து தெரிந்தது.

எடு மண்ணை, ஆணையிட்டேன்! என் ஜோர்டானிய வருமானத்தை கொண்டு வெளி நாடுகளுக்குச் சென்று விலை மதிக்கக் கூடிய சிலைகளையும் அவைகளை செய்யும் முறைகளையும், செய்துக் காட்ட சில கைத தேர்ந்த சிற்பிகளையும் கொண்டு வந்தேன், கெட்டியாக பற்றிக் கொண்டது மரீன் சிற்ப வேலையை.

மரீன் சுற்றி இருந்த களிமண் அத்தனையும் சிலையானது. சிலை ஏற்றுமதியானது. விபச்சாரம் மட்டுமே செய்து பிழைத்த ஊர் கலைகூடமானது. ஆர்வமுள்ளவர்களை மேலை நாடுகளுக்குக் கொண்டு சென்று படிக்கவும் வைத்தேன், மேலை நாட்டவர்களை இங்கு வாருங்கள் கலை சிற்பங்களை பாருங்களேனென விளம்பரப் படுத்தினேன். என் நாட்டில் சென்று என்னால் எந்நாட்டிற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அங்கே உழைத்து கொண்டு வந்த பணத்தை எல்லாம் இந்த மக்களின் மறுவாழ்விற்கு கொடுத்து கண்ணீர்மல்க இவர்களை என் சகோதரர்களென கட்டிக் கொண்டேன் மாலன்.

எந்த சிலையை காட்டி நான் ஆரம்பத்தில் இங்கு சிலை செய்வதை துவங்கினேனோ அதே சிலைகளை இப்போது இவர்கள் இங்கே இருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் மாலன் தனி ஒரு மனிதனால் என்ன சாதித்திட முடியாது? இளவரசியாக நான் என்னை இவர்களிடமிருந்து காத்துக் கொண்டதை தவிர, தனி ஒரு பெண் மட்டுமே இங்கு ஜெயித்திருக்கிறாள் இலவரசியல்ல மாலன்"

அவளுக்கு முன் நான் பேச நாவற்றவனாய் பாடம் கற்கும் ஒரு மாணவனை போல் நின்றிருந்தேன்" என்று மாலன் தன் நீண்ட ஒரு கதையை சொல்லி நிறுத்த...

ஏமானிய கூட்டம் மெஹல் பெயர் சொல்லி ஓவெனக் கத்தி ஆரவாரம் செய்தது. மெஹலை பற்றி மெச்சுதலாக ஒருவரிடம் ஒருவர் 'பார்த்தாயா.. இப்படியாம்' என்பது போல் பேசிக் கொண்டார்கள். மாலன் அவர்களை நோக்கி-

"அதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன் உங்களால் என்ன செய்ய முடியுமிந்த உலகிற்கு?

ன்னை திருப்பிக் கேட்காதீர்கள் நான் எனக்கு வரும் அத்தனை நன்கொடையிலும் ஒவ்வொரு ஊரை தேர்ந்தெடுத்து அந்த ஊரில் படிக்கும் ஏழை குழந்தைகளின் அவ்வருட கல்வி செலவை ஏற்க முடிவு செய்திருக்கிறேன். கண்ணுக்கு தெரிந்த ஏழை குடும்பத்தில் திருமனமாகாத சகோதரிகளுக்கு திருமணத்தை என் செலவில் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். எந்த ஒரு அறிவிப்புமே இல்லாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொரு பசியால் வாடும் கிராமகளுக்கு சென்று வயிறார அறுசுவை உணவு கொடுக்கப் போகிறேன். குடும்பங்களால் விடுபட்ட வயோதிகர்களை நான் தத்தெடுத்து மகிழ்விக்கப் போகிறேன். முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு வாழ வழி சொல்லியும்; வேலையற்று திரிபவர்களுக்கு சுய வேலை விழிப்புணர்வையும் ஏற்படுத்தப் போகிறேன்.

ம்...! இப்போது சொல்லுங்கள் நீங்களென்ன செய்யப் போகிறீர்கள் இந்த மண்ணிற்கு, நம் மனிதர்க்கு???"

மாலனை ஓடிவந்து மக்கள் தூக்கிக் கொள்ளாத குறை தான்..

"அன்னை தெரசா சொல்கிறார் 'இந்த உலகிற்கு நாம் செய்யும் உதவி கடலில் ஒரு துளி தான்; ஒரு துளி தானே அதை செய்தென்ன ஆகுமென விட்டுவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்து போகாதா?"

கூட்டம் ஆம் ஆமென்று சொல்லி கை தட்டியது..

"உலகின் கடை கோடி தூரம் வரை உங்கள் பார்வை நீளா விட்டால் பரவாயில்லை, உங்களுக்கு அருகில் உள்ளவர்களையாவது கூர்ந்து பாருங்களேன்" பேச்சை சற்று நிறுத்திவிட்டு மாலன் சற்று நீர் அருந்திக் கொள்கிறார்.

"ஓ.. மனிதர்களே..., நன்றாக காது கொடுங்கள்.., என்னிடத்தில் வேண்டாம் உங்களோடிருக்கும் மனிதர்களிடத்தில் கருணை கொள்ளுங்கள். புழங்கினால் தான் பணம்; புழக்கத்தில் இல்லாமல் பணத்தை அலமாரியில் பூட்டினால் அது காகிதம். காகிதத்தை வைத்து நாளை மனிதம்., சுற்றம்., குடும்பம்., உடன் பிறப்பெல்லாம்.. இறந்த பிறகு என்ன செய்வீர்கள்? பணமும் செல்லரித்து போகும், நாமும் சொல்லரித்தே சாவோம்.

ஐம்பது ரூபாய் போதுமானதென நினைக்கையில் நூறு ரூபாய் கிடைத்தால் அதில் இருபத்தி ஐந்தையாவது இல்லாதவர்களுக்கு கொடுத்து பழகுங்கள். உதவியும் உண்மையும் இருவேறு சக்கரங்களாய் நம்மை எப்பொழுதுமே காக்கும் தோழர்களே.

ஒரு வேளை பட்டினி பெரிதில்லை தான்; ஒரு நாள் பட்டினி வலிக்குமில்லையா? உடம்பில் ரத்த சூடிருந்தால் அதையும் தாங்கிக் கொள்ளலாம் ; ஒரு குழந்தை தாங்குமா? தாங்காதெனில் எத்தனை குடும்பம்.. எத்தனை மனிதர்கள்.. எத்தனை குழந்தை ஒவ்வொரு நாளும் பட்டினியில் தவிக்கிறார்கள் இறக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோமென சிந்தியுங்கள் தோழர்களே.

பசியில் வீடு சென்றதும் துணிகளை அவிழ்த்து எறிந்துவிட்டு முகம் கழுவி வருவதற்குள் குடல் பிடுங்க.. பசியின் அவசரத்தில் வாரி வாரி உணவை உண்ணும் எத்தனையோ நாட்களில், இப்படி உலகில் எத்தனை ஜீவன்கள் பசியால் துடிக்கிறதோ என எண்ணி அழுதிருக்கிறேன் தோழர்களே. பசி மிக கொடியது. பாவமானது.

விபச்சாரம், வழிப்பறிக் கொள்ளை, திருட்டு என அனைத்திற்கும் முதல் வழி வகுக்கும் எமனும்; நம்மை இத்தனை தூரம் ஓடி பிழைக்க வைக்கும் காரண கார்த்தாவும் பசி தான் தோழர்களே.

ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன், எழுந்து நடக்கக் கூடியவர்களுக்கு உதவ வில்லை, நடக்க முடியாதவர்களுக்கு தான் நடக்கும் சக்தி தர சேவை செய்கிறேன் என்றாள் அன்னை தெரசா. அவளின் கருணை உள்ளம் கொள்வோம்; உலகின் கடைகோடி வரை எட்டவேண்டிய பார்வையை தன் அருகாமை வீட்டிலிருந்த துவங்குவோம் தோழர்களே.

இரைக்க இரைக்க பணம் சுரக்கும் கிணறு மனிதன். கொடுக்க கொடுக்க பொருளற்று போனாலும் வள்ளலென்று பெயர் வரும், பயனின்றி இறக்க மாட்டாய் மனிதா பயம் விடு"

மாலனின் பேசுகையி இடையே ஒருவர் எழுந்து "பொருளற்று வள்ளலாகி என்ன செய்ய????" என்றார். அதற்கு மாலன் சொல்கிறார்-

"அருகிலிருக்கும் இன்னொரு மனிதனுக்காவது நீ எடுத்துக் காட்டாவாய் தோழா. நாம் விட்டுச் செல்லும் நல்லவைகள் மீண்டும் யாராலோ துவங்கப் படும் தோழா. வீடும்.. துணிமணியும்.. அல்ல அல்ல குறையாத பணமும்.. எல்லோருக்கும் கனவு தான். ஆனால். பத்து ரூபாய் உணவுக்கு கிடைக்கையில் பதினைந்து ரூபாயினை ஆடைகளுக்கென சம்பாதிக்கிறோம்; பதினைந்து ரூபாயினை ஆடைக்கும் உணவிற்கும் சம்பாதிக்கையில் இருபது ரூபாயினை ஆடைக்கும் உணவிற்கும் மற்ற ஆடம்பரத்திற்குமென சம்பாதிக்கும் சாதனை மனிதர்கள் தானே நாமெல்லோரும்? பிறகு நாம் நினைத்தால் அதுபோல் ஒரு சின்ன துளியை பிறருக்கென உதவ சம்பாதிக்க முடியாதா???"

ஒருமுறை நான் மேலை நாடொன்றில் பணி புரிந்த தொழிற்சாலைக்கு வயோதிகர் ஒருவர் உதவியாளர் பணிக்கென வந்து சேர்கிறார். சேர்ந்த ஒரு மாதத்திலேயே அவருக்கு மருத்துவ ரீதியாக ஏதோ கோளாறு உண்டென ஊருக்கனுப்ப நிறுவனம் முடிவு செய்துவிட்டது. அந்த பெரியவர் 'ஐயோ எவ்வளவு பணம் கட்டி வந்தேனே இப்படி வெறுங்கையோடு சென்று வீட்டில் நான் என்ன பதிலை சொல்வேனென அழுகிறார்.

மனம் தாளாமல் நான் கீழிருந்த ஒரு பழைய சாப்பாட்டு பையை எடுத்துக் கொண்டு எங்கள் நிறுவனம் முழுதும் சுற்றிவந்தேன். சுற்றுவதற்கு முன் நான் ஒரு அந்நாட்டு மதிப்புள்ள பத்து ரூபாவை அதில் போட்டுக் கொண்டு ஒவ்வொருவரிடமாக சென்று 'நாம் ஆளாளுக்கு கொடுக்கும் ஒற்றை ரூபாவில் நாம் நட்டமாவோமா சகோதரர்களே? ஆனால் நாம் ஆயிரம் பேர் சேர்ந்து அவருக்கு கொடுக்கும் ஒற்றை ரூபாயில் அவர் ஆயிரம் ரூபாய் பெருவாரில்லையா சகோதரர்களே என்றேன்' தான் தாமதம் இரண்டு மூன்று மணி நேரத்திற்கெல்லாம் 'பதினாறாயிரம்' ரூபாய்' கொட்டோ..கொட்டென கொட்டியது"

மாலன் சொல்லி நிறுத்த எல்லோரும் கைதட்டும் சப்தம் ஜோவெனக் கேட்டது.

"இது தான், இது தான் உதவியின் சூத்திரம் தோழர்களே. ஒன்று கூடினால் ஓசை வரும், யாரோ ஒருவன் மட்டுமே உதவினால் தானே பொருளற்று போவோம், இருக்கும் எல்லோருமே இல்லார்க்கு உதவ முன் வந்தால் நாளையே உலகில் சமரசம் நிலவாதா?"

நிலவும் நிலவும். . நாங்கள் உதவ முயற்சிக்கிறோம் என்று குரல் கொடுத்தது கூட்டம்..

"உதவி செய்யுங்கள் தோழர்களே கருணை உள்ளம் வளர்த்துக் கொள்ளுங்கள், இல்லாதோரை பார்த்து கண் கலங்குங்கள், அவருக்கு எப்படி உதவலாமென சிந்தனை செய்யுங்கள், உங்களுக்கு உதவவும் இன்னொருவர் சிந்திக்கத் துவங்குவார். வெறும் உதவி என்னும் ஒரு கருணை உள்ளத்தை மட்டுமே மனதில் கொள்ளுங்கள்; போதும். எப்படியாவது பிறருக்கு உதவ வேண்டுமே என்பதை மட்டும் மனதில் சங்கல்பம் செய்துக் கொள்ளுங்கள். பிறகு எப்படி உதவ வேண்டுமென்பதை 'தானே உருவாகும் சூழல் சொல்லிக் கொடுக்கும் தோழர்களே.

ஒரு சின்ன உயிர் துடிக்கையில் கூட மனது பதைக்குமொரு உணர்வினை ஒவ்வொரு மனிதரும் இயல்பாய் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யாரேனும் ஒருவர் வருந்தினாலோ , வலியில் துடித்தாலோ 'இறைவா இவருக்கு நான் எப்படி உதவுவேன் என மனதிலாவது ஒருமுறையேனும் மன்றாடுங்கள் தோழர்களே..

உயிர் வாழும் அத்தனை பேரும் தன்னோடு வாழும் நம் மனிதர்களை தன் தோழனாய்.., தன் சகோதரனாய்.., தன் குடும்பமாய் வாய் வழியிலாவது சொல்லி, கருணையை வளர்க்கப் பழகுவோம் அன்பர்களே..,

உயிர்களின் மீது மனிதனுக்கு கருணை ஏற்பட்டுவிட்டால் பிறரை அழிக்கும் எண்ணம் அறவே வராது. பிறரை அழிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டால், பிறரை அழிக்க வேண்டாமென முடிவு செய்துக் கொண்டால்..'நம்மை நாமே அழித்துக் கொள்ள நம் தேசிய பாதுகாப்பென்னும் பெயரில் செலவிடும் அவ்வளவு பணத் தொகையிலும் இன்னும் நான்கு உலகம் பசியின்றி வாழ பணம் மிஞ்சி விடும் தோழர்களே..

இவையெல்லாம் ஒரு நாளில் நிகழும் மாற்றங்களா? இல்லை இல்லை.., என்றாலும் மனதில் பதிந்து வையுங்கள், மனதில் பதிய பதிய உடம்பில் ஊரும் ரத்தம் போல கருணை உலகெங்கும் பரவட்டும்...., கருணை மெல்ல மெல்ல ரத்தம்.. தசை.. உடல்.. என நாம் பிறருக்குச் செய்யும் உதவியின் வழியாக சென்று ஒவ்வொரு மனிதனின் மூளையையும் தொடட்டும்..,

இறக்க குணம் என் இயல்பென்று ஏற்று நாளைய உலகையாவது 'மனிதமுள்ள மனிதர்களால் ஆள வைப்போம் அன்பர்களே.. எனக் கேட்டு எனக்கு மதிப்பளித்து இத்தனை தூரம் எனக்கு செவி மடுத்த உங்களனைவருக்கும் நன்றி கூறி.. வாழ்க வையகம்; வளர்க கருணையின் பெரியக்கமென கூறி விடை பெருகிறேனென" மாலன் தன் நீண்ட உரையை முடித்து எல்லோரையும் வணங்கி கீழே இறங்கி அதோ.. நடக்கிறார்.

வாசலில் அவருக்கான வாகனமும்., ஏமானிய விமான தளத்தில் இந்தியாவிற்கு திரும்பிப் போக விமானமும் தயாராக நின்றிருந்தது..
---------------------------------------------------------------------------------------------------------
இன்னும் நிறைய விமானங்கள் மாலனுக்காக காத்துக் கொண்டே இருக்கும்; அதுவரை காற்றும் வீசிக் கொண்டே இருக்கும்..


selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 8:18 pm

காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் 677196 காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் 677196 காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் 677196

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 8:20 pm

நன்றி செல்வா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 8:41 pm

பத்து ரூபாய் உணவுக்கு கிடைக்கையில் பதினைந்து
ரூபாயினை ஆடைகளுக்கென சம்பாதிக்கிறோம்; பதினைந்து ரூபாயினை ஆடைக்கும்
உணவிற்கும் சம்பாதிக்கையில் இருபது ரூபாயினை ஆடைக்கும் உணவிற்கும் மற்ற
ஆடம்பரத்திற்குமென சம்பாதிக்கும் சாதனை மனிதர்கள் தானே நாமெல்லோரும்?
பிறகு நாம் நினைத்தால் அதுபோல் ஒரு சின்ன துளியை பிறருக்கென உதவ
சம்பாதிக்க முடியாதா???"

அருமை இந்தப்பாகத்தில் நிறைய படிப்புக்கள் இருந்தது அண்ணா உங்கள் இந்த தொடரை நான் வெறும் கதையாக பார்க்கவில்லை பெரிய ஒரு வழிகாட்டி நூல் போலதான் எனக்கு இருக்கு எனக்கு சொல்ல வார்த்தையே வரலை அண்ணா அருமை அடுத்ததை வெகு சீக்கிரமாகத்தந்திடனும் என்ன சரியா
காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் 246975 காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் Icon_lol

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 9:06 pm

சரிப்பா. தம்பி சொல்லிட்டீங்கல்ல. நிச்சயமாக என் சகோதரா. இன்னும் இரண்டு தினம் வரை விடுமுறை இருக்கிறது. அதுவரை தொடர்ந்து வரும். அதன் பிறகு தான் வேலை துவங்கி விட்டால் அங்கு அதிக கவனம் செலுத்துகையில் இது கடினமாகும். தவிர பணிநேரம் 10 மணி நேரமாக மாறும். அப்போது தான் எழுதுவதற்கு கடினம். இருப்பினும் முயற்ச்சிக்கிறேன் ரூபன்.

உங்களை போன்ற பற்றுள்ள இளைஞர்களுக்காக தான் நான் எழுதுவதே. நல்லதை எடுத்து கெட்டதை மறந்து விடுங்கள். யாரும் அதிகம் படிப்பதில்லையோ என்று வருத்தத்தில் சகோ.. க்கு வருத்தப் பட்டு தனி மடல் அனுப்பி கவலையுற்றேன். என் ஆற்றாமையை நம் மூத்த சகோதரனிடம் தெரிவிப்பதில் தவறில்லையே, அப்படித் தான். ஆனால் இனி வருத்தப் படப் போவதில்லை. ஒருவருக்கு புரிந்தால் ஒருவரால் நூறு பேருக்கு புரியும், எனவே எப்படியாயினும் தொடர்ந்து எழுதுறேன் ரூபன்.

எனக்கு இங்கு வேறு விழாக்கள் வருது. எழுதியும் தட்டச்சு செய்தும் பதிவது அதிக நேரம் பிடிக்கிறது. இருந்தாலும் உங்களை போன்றோருக்கு நல்ல வழி காட்டுவதாய் நம்புவதென்ல் என் தூக்கமோ உழைப்போ துச்சம் சகோதரா.
மிக்க நன்றி ரூபன்காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் 678642

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 9:14 pm

அண்ணா முதலில் உங்கள் வேலை ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு எங்களுக்காக பொறுமையாக வாருங்கள் நாங்கள் என்றும் இங்குதான் இருப்போம் என்னைமட்டுமல்ல என்னைப்போல பல இலைஞர்கல் இருக்கிறார்கள் உங்கள் உடம்பையும் பார்த்துக்கொள்ளுங்கள் சிவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியுமாண்ணா இது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமேன்று இல்லை
அதிகநேரம் எங்களுக்காக உளைக்கிரிங்கள் என்று தெரிகிறது பலகோடி நன்றிகள் உங்கள் எழுத்தால் ஒரு புதுசமுகம் உருவாகும் என்று நம்பிக்கை பிறக்கின்றது தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பார்த்து இருக்கிறோம் காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் 154550

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 9:19 pm

நல்லதுப்பா, அன்பின் கட்டளைக்கே அத்தனை தலையசைப்பும்!

சென்று வாருங்கள் ரூபன்.. காத்திருப்போம்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 9:28 pm

பெரு மதிப்பிற்குரிய திரு வித்யாசாகர் அவர்களுக்கு மீனுவின் சிரம் தாழ்த்திய வணக்கமும்,நன்றியும்,பாராட்டும்..உரித்தாகட்டும்..காற்றி ஓசை ..என்ற ஒரு எளிமையான தலைப்பு..ஆனா சொல்லப் பட்டு இருக்கும் விடயமோ யப்பா சொல்ல வார்த்தைகளே இல்லை..நாம் அடிக்கடி சொல்வது நம்மால் என்ன செய்ய முடியும் ..அது அது அவரவர் தலை விதி அப்படீன்னுதான் ..ஆனா நாம நினைத்தால் எதுவுமே முடியாதது அல்ல..நீங்க(இங்கு நீங்கதானே அந்த ஹீரோ) அந்த முதியவருக்கு பண்ணிய பண உதவி..நிஜம் தான் வித்யாசாகர் ..நீங்களே நடத்தி காமித்து இருக்கின்றீகளே..
அப்பறம் நாம ஒரு நேர பசியையே தாங்க முடியாம தவீகிரப்போ இந்த பிஞ்சு குழந்தைகள் எப்படி தாங்கும்..இன்னும் என்னென்னமோ மனதை சுட கூடிய அதேநேரம் நம் குற்றத்தை இலகுவாக புரிந்து கொள்ள கூடிய விதத்தில் இங்கே சொல்லி இருப்பது ..சிறப்பு
ஒரு சின்ன உயிர் துடிக்கையில் கூட மனது பதைக்குமொரு உணர்வினை ஒவ்வொரு மனிதரும் இயல்பாய் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யாரேனும் ஒருவர் வருந்தினாலோ , வலியில் துடித்தாலோ 'இறைவா இவருக்கு நான் எப்படி உதவுவேன் என மனதிலாவது ஒருமுறையேனும் மன்றாடுங்கள் தோழர்களே..



உயிர் வாழும் அத்தனை பேரும் தன்னோடு வாழும் நம் மனிதர்களை தன் தோழனாய்.., தன் சகோதரனாய்.., தன் குடும்பமாய் வாய் வழியிலாவது சொல்லி, கருணையை வளர்க்கப் பழகுவோம் அன்பர்களே

இங்கே சொல்லப் பட்டபடி இவை எல்லாம் ஒரு நாளில் மாற்ற முடியாது ..எறும்பு கூட என்ன பண்ணுது ,நாம் எறும்பு இல்லையே நமக்கு பலம அதிகம்,ஆற்றலும் அதிகம்,,முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை ..இது காற்றி ஓசை தான் ஆனா பலமான ஓசை ,
அருமையான படிப்பு வித்யாசாகர் ..அருமை..பாராட்டுக்கள் ..உங்கள் ஆக்கங்கள் இன்னும் வளரனும்..இப்படி சமுகத்தை சிந்திக்க வைக்கணும் ,நெஞ்சிலே ஓங்கி குத்தாம இப்படி காற்றின் ஓசையா வருடிகொண்டே சொல்ல வைக்கணும் செல்லமா அதிர வைக்கணும் ... காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் 154550 காற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும் 154550



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 9:43 pm

காற்றின் ஓசை மூன்று படித்தீர்களா?

இது தான் வேணும் மீனு, உங்களுக்கு எத்தனை புரிகிரதென்று தான் தெரிய வேணும், அதற்கு தான் படித்து விட்டு எழுதுங்கள் என்கிறேன். உங்கள் நரம்பசையும் இடத்தில் நாளையா சமூக மாற்ற புதையலையே வைக்கலாம்; அது மெல்ல மெல்ல அசைந்து உலகை இலகுவாய் மாற்றும் மீனு.

நான் எழுதும் விடையங்கள் என்னை விட்டு தூர உள்ளவர்களுக்கு தான்.

அருகில் உள்ள இளவல்கள் ஏராளம். அவர்களுக்கு நிறைய புரியும். நீங்கள் கேட்ட அந்த பெரியவருக்கு செய்த உதவியை போல நடக்கும் நிஜங்கள் ஆயிரம் உண்டு. அவைகளை உங்களை போன்ற சமுதாய துடிப்புள்ளவர்களிடம் சொல்லி உயிர்கொல்லாத நானின் மூலம் தவறும் செய்யும் இதையங்களை துளைக்கணும் என்று முயற்சிக்கிறேன் மீனு. நான் வந்த பாதை என்னையும் என்னோடுள்ளவர்களையும் நிம்மதி படுத்தும் பொது அவைகளை என் தூரமுள்ள சகோ..க்கள் பெற்றுக் கொண்டாலென்ன என்பது தான் என் நோக்கம்.

நாம் யாரும் பெரிய மகானல்ல மீனு, நம் அவசியம் ஒரு மகானுக்குரியதுமல்ல. மனிதர்களுக்குரியது மட்டுமே.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 2:10 am

அன்புள்ளங்களே.. காற்றின் ஓசை பதிவு ஐந்து அழகான காதல் நினைவுகள் அடங்கியது.., ஆனால் நிறைய இருக்கிறது. எப்படியும் முடிய இன்னும் தாமதமாகுமென நினைக்கிறேன்.. நாளைக்கு படித்துவிட்டு பதில் கொடுத்து வையுங்கள், இந்த ஒன்பது நாட்கள் விடுமுறையில் எங்களோடு நேரம் போக்கவில்லை என்பது மனைவி மற்றும் முகிலின் வெளியில் சொல்லா குற்றச்சாட்டு எனவே.., நாளை நான் ஈகரைக்கு வர தாமதமாகலாம். சகோதரர் சிவாவிடம் பேசாதது சிறு ஏக்கத்தை மனதிற்கு தருகிறது, அநேகம் நான் தட்டச்சு செய்து முடிக்க விடியற்காலை ஆகலாம், அதுவரை சகோ வந்தால் பார்த்துவிட்டு செல்கிறேன்..,

விடை பெரும் முன் தெரிய படுத்துங்கள்! நன்றி..


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக