ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம்

Go down

 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Empty எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம்

Post by ayyasamy ram Tue Apr 17, 2018 9:37 am


--
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-20
எந்தப் பாடல் எழுதினாலும் அதில் சமுதாயக் கருத்துக்களைப்
புகுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்
பட்டுக்கோட்டை.

காதல் பாட்டில்கூட விவசாயத் தொழிலாளர்களின் கருத்தைச்
சொன்னவர் இவர்தான். எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்'
படத்தில் அவர் எழுதிய, சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி...- என்ற பாடலே இதற்கு
எடுத்துக்காட்டு.

இந்தப் பாடல் கூட படத்திற்காக நேரடியாக எழுதவில்லை.
"ஜனசக்தி' பத்திரிகையில் வெளிவந்திருந்த கவிதையைப்
படித்துப் பார்த்த ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் சொல்லி,
பட்டுக்கோட்டையை வரவழைத்து அதில் சில மாற்றங்களைச்
செய்து, இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையாநாயுடுவிடம்
கொடுத்து இசையமைக்கச் செய்து படத்தில் இடம்பெறச்
செய்தார்.

இந்தப் படம்தான் எம்.ஜி.ஆருக்கும் பட்டுக்கோட்டைக்கும்
முதல் சந்திப்பை ஏற்படுத்தி தந்தது.

அந்தப் பாட்டுக்குப் பிறகு தான் "தூங்காதே தம்பி தூங்காதே -
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்ற பாடலையும்
"மானைத் தேடி மச்சான் வரப் போறான்' என்ற பாடலையும்
நாடோடி மன்னனில் எழுதினார்.
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Empty Re: எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம்

Post by ayyasamy ram Tue Apr 17, 2018 9:38 am


காதல் பாட்டில் கூட இத்தகைய பாட்டாளி மக்களின் கருத்தை
எம்.ஜி.ஆர். என்பதால் ஏற்றுக் கொண்டார். இன்றைக்கு அது
போல் காதல் பாட்டில் இதைப் போன்ற கருத்துக்களைச்
சொன்னால் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்லது
இசையமைப்பாளரோ ஏற்றுக் கொள்வார்களா?

கிளுகிளுப்பு உண்டாகக் கூடிய வகையிலே எழுதுங்கள்
என்பார்கள். நான் கூட ஒரு பாட்டில் இதைப் போன்ற
கருத்துக்களை எழுதியபோது வேண்டாம் என்று ஒதுக்கி
விட்டார்கள்.

இலக்கிய வாதிகள் மேடைகளில் பேசுவதற்காகக் கண்ணதாசன்
வரிகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஆலைத்
தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் அன்றாடம்
மனப்பாடம் செய்து கொண்டிருந்தது பட்டுக்கோட்டையின்
பாடல்களைத்தான்.

கண்ணதாசன் தமிழ் கவிதைத் தமிழ். பட்டுக்கோட்டையின்
தமிழ் பாட்டாளித் தமிழ். கண்ணதாசன் பாடல் கவிதை
மனங்களுக்குக் கற்கண்டு.

பட்டுக்கோட்டையின் பாடல் ஆதிக்க மனங்களுக்கு வெடிகுண்டு.
கண்ணதாசன் பாடல் தாலாட்டு என்றால் பட்டுக்கோட்டையின்
பாடல் அதிர்வேட்டு.

சுருக்கமாகச் சொன்னால் கண்ணதாசன் பாடல்களில் இருந்தது
வனப்பு; பட்டுக்கோட்டையின் பாடலில் இருந்தது நெருப்பு.
அதனால்தான் சாகாமல் அவன் பாடல்கள் வாழ்கின்றன.

மதுவுடைமைக் கொள்கை மலிந்திருந்த திரையுலகில்
பொதுவுடைமைக் கொள்கையைப் புகுத்திய பெருங்கவிஞன்
அவன்தான். ஏன் இவனுக்கு முன்பு சமுதாயக் கருத்துக்களை
காதல் பாடல்களில் யாரும் சொல்லவில்லையா என்றால்
சொல்லியிருக்கிறார்கள்.

அதில் மருதகாசி, லட்சுமணதாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்
தக்கவர்கள். எடுத்துக்காட்டுக்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல
வேண்டுமென்றால் மருதகாசி எழுதிய ஒரு பாடலைச் சொல்லலாம்.

மழைபெய்து கொண்டிருக்கிறது. கதாநாயகியும் கதாநாயகனும்
இருக்கின்ற வீடு கூரை வீடு. அந்தக் கூரை ஓரிடத்தில்
பிய்ந்திருக்கிறது. அதன்வழியே மழைத்துளி சொட்டுச் சொட்டாகச்
சிந்துகின்றது. வெளியே இடியுடன் கூடியமழை கொட்டிக்
கொண்டிருக்கிறது. இதைவைத்து மருதகாசி அற்புதமாக
எழுதியிருப்பார்.
-
ஆண் :- மழை - சொட்டுச் சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை போல - அவன்
கஞ்சிக் காகக் கலங்கிவிடும்
கண்ணீர்த் துளியைப் போலே - மழை
சொட்டுச் சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
-
பெண் :- முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழைமேலே
துட்டுப் படைத்த சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே...
-
இதுவும் காதல் பாடல்தான். 1960-இல் வெளிவந்த
"ஆடவந்த தெய்வம்' என்ற படத்தில் டி.ஆர். மகாலிங்கமும்,
பி. சுசீலாவும் பாடியது.

படத்தில் டி.ஆர். மகாலிங்கமும், அஞ்சலி தேவியும் பாடுவது
போல்காட்சி இருக்கும். இப்படிப் பல காதல் பாடல்களை
சமுதாயப் பார்வையும் மருதகாசி போன்றோர் எழுதி
இருந்தாலும் அதில் முழுக்க முழுக்க வெற்றி பெற்றவர்
பட்டுக்கோட்டைதான்.
-
--------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Empty Re: எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம்

Post by ayyasamy ram Tue Apr 17, 2018 9:38 am


நானும், அண்மையில் மறைந்த கவிஞர் நா. காமராசனும்
எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்தபோது பட்டுக் கோட்டையின்
பாடல்களைச் சிறப்பித்து எங்களிடம் பேசினார்.

அதில் ஒரு பாடலை மிகவும் பாராட்டிக் கூறினார். "சக்கரவர்த்தித்
திருமகள்' படத்தில் இடம்பெற்ற நான் சென்ற கட்டுரையில்
குறிப்பிட்ட "பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக
மாறுது' என்ற பாடலைத்தான் அவரும் குறிப்பிட்டார்.

அதில் சரணத்தில் வருகிற இரண்டுவரி தனக்கு ரொம்பப்
பிடிக்குமென்றும் கூறினார். அந்தச் சரணம் இதுதான்.
-
கால நிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சு ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாமே ஒண்ணு
காசை எண்ணிப் பூட்டுது - ஆனா
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது...
-
இதில் கடைசி இரண்டு வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும்.
பட்டுக்கோட்டை தன் கைப்பட எழுதிய கடிதங்களையும் சில பாடல்
களையும் ஏ.எல். நாராயணன் என்னிடம் காட்டியிருக்கிறார்.
இவர் எழுத்துக்களில் பிழையிருக்கலாம். ஆனால் எண்ணங்களில்
பிழையிருந்ததில்லை.

தஞ்சையில் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவரைப்
பாடு பொருளாக வைத்து கவியரங்கம் ஒன்றை நடத்தச்
செய்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.
நான்தான் பட்டுக்கோட்டையைப் பற்றி பாடினேன்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அவர் இருந்திருந்தால் பல
சிறப்புகளை எம்.ஜி.ஆர் அளித்திருப்பார். எம்.ஜி.ஆரைப் போல்
கவிஞர்களை எழுத்தாளர்களைப் போற்றியவர் யாரும் கிடையாது.

முதன்முதல் "ராஜராஜன் விருது' என்ற பெயரில் ஒரு லட்ச ரூபாய்
விருதை அளித்தவர் அவர்தான்.
-
------------------------------
நன்றி-தினமணி
25th September 2017

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Empty Re: எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம்

Post by ayyasamy ram Tue Apr 17, 2018 9:44 am

நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் வரிகளை வாசிக்க...
-
http://www.eegarai.net/t136978-topic
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம் Empty Re: எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்! - கவிஞர் முத்துலிங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum