ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 9:23 am

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Um0CpYGATOaB15hJhfyW+3eb3c8ae123ba4d9dc3440819c675f81

சென்னை: திருவிடந்தையில் நடைபெற்று வந்த ராணுவ கண்காட்சி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இறுதி நாளான நேற்று பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டதால், லட்சக்கணக்கானோர் கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி படையெடுத்தனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடியது. இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் உலக நாடுகள் பங்கேற்கும் ராணுவ தளவாட கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் கடந்த 11ம் தேதி முதல் 4 நாட்களாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ம் தேதி நேரில் வந்து கண்காட்சியை முறைப்படி துவக்கி வைத்தார்.இந்த கண்காட்சியில் மொத்தம் 47 நாடுகளை சேர்ந்த ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், அரங்குகள் அமைத்துள்ளன. இதே போல், இந்தியாவை சேர்ந்த டாடா, எல்என்டி, அசோக் லைலேண்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. ஏப்ரல் 11 முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ராணுவ தளவாட தொழில் நுட்பம் குறித்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தின் பிரத்யேக பீரங்கிகள், தொழில்நுட்ப கருவிகள், போர் கப்பல் மாதிரிகள் உள்பட ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால், கண்காட்சி நிறைவு விழாவான நேற்று பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்ப குடும்பமாக பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கண்காட்சியை நோக்கி படையெடுத்தனர். காலை 8 மணி முதலே திருவிடந்தை பகுதியில் மக்கள் குவிந்தனர். சரியாக 9 மணி முதல் கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.கண்காட்சிக்கு வந்த பொதுமக்களிடம் ஆதார் அட்டை மற்றும் அரசு அங்கீகார அடையாள அட்டையை ஆய்வு செய்து, கடும் சோதனைக்கு பின்னரே, 2வது நுழைவு வாயில் வழியாக அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கண்காட்சியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. கண்காட்சியில் ராணுவத்தின் பல்வேறு அம்சங்களை பார்த்து பொதுமக்கள் பிரமித்தனர். மாலை 5 மணிக்கு கண்காட்சி நிறைவடைந்தது.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 9:23 am

லட்சக்கணக்கானோர் கண்காட்சியை பார்க்க வாகனங்களில் வந்ததால் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் வழியாக முதலில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டதால் கேளம்பாக்கத்தில் நின்ற வாகனங்கள் திருப்போரூர் மற்றும் நெம்மேலி வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும்படி திருப்பப்பட்டது. 10 மணியளவில் இந்த சாலையிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கின. இதையடுத்து, பூஞ்சேரி வழியாக வாகனங்கள் திருப்பிடவிடப்பட்டன. அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்றவர்கள் அக்கரை பகுதியில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி பல மணி நேரம் தவித்தனர். மேலும், அக்கரையில் இருந்து ஓஎம்ஆர் செல்லக்கூடிய சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால், ஓஎம்ஆர்-இசிஆர் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடியது. நெரிசலை கட்டுப்படுத்த பல சாலைகள் மூடப்பட்டன. இதில், தமிழ் புத்தாண்டையொட்டி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிக்கி தவித்தனர். கண்காட்சி முடிந்து மெல்ல மெல்ல வாகனங்கள் திரும்பியதால், மாலை 7 மணிக்கு பின்னரே போக்குவரத்து சீரடைந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by கோபால்ஜி Sun Apr 15, 2018 5:31 pm

ஆயிரம் பிரிவினைவாதிகள் விஷவித்துக்களை தூவினாலும் அதற்கெல்லாம் ஏமாறாமல் தேசிய உணர்வுடன் தெளிவாக இருக்கும் தமிழக மக்களுக்கு வீர வணக்கம்...
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by SK Mon Apr 16, 2018 11:44 am

ஆம் நேற்று ECR மிகவும் நெரிசலாக இருந்தது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 7:08 am

கோபால்ஜி wrote:ஆயிரம் பிரிவினைவாதிகள் விஷவித்துக்களை தூவினாலும் அதற்கெல்லாம் ஏமாறாமல் தேசிய உணர்வுடன் தெளிவாக இருக்கும் தமிழக மக்களுக்கு வீர வணக்கம்...
மேற்கோள் செய்த பதிவு: 1266275
அரசியல் வாதிகள் செய்யும் துரோகம்
தெரிந்ததது தான். அதற்காக தேசிய உணர்வு குறையப்போவது இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 7:11 am

ayyasamy ram wrote:ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் 103459460
-
மேற்கோள் செய்த பதிவு: 1266281
தங்கள் வீடியோ பதிவுக்கு நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 7:12 am

SK wrote:ஆம் நேற்று ECR மிகவும் நெரிசலாக இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1266308
அந்தப் பக்கம் போய் உள்ளீர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by SK Tue Apr 17, 2018 10:22 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:ஆம் நேற்று ECR மிகவும் நெரிசலாக இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1266308
அந்தப் பக்கம் போய் உள்ளீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1266394
நான் நீலாங்கரையில் தான் ஐயா இருக்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum