ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் -2018 !!

+4
ராஜா
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
ayyasamy ram
8 posters

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty சென்னை அணி 'திரில்' வெற்றி

Post by ayyasamy ram Sun Apr 08, 2018 3:35 am

First topic message reminder :

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Tamil_News_large_1995323
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian Fri May 04, 2018 5:41 pm

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் 2 கேட்சுகளை கோட்டைவிட்டு, பேட்டிங்கிலும் சொதப்பிய ரவிந்திர ஜடேஜா விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நீடித்து வருபவர் ரவீந்திர ஜடேஜா. தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்ற சிறப்பாக விளையாடுவதற்காக “ராக் ஸ்டார்” என்ற பட்டத்தை ஷேன் வார்ன் வழங்கினார். அதை அடிப்படையாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.98 லட்சத்துக்கு ஜடேஜாவை ஏலத்தில் விலைக்கு வாங்கியது.

தொடர்புடையவை

தோல்வி முகத்தில் விழுந்த அறைதான்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்
அதன்பின் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் இடம்பெற்று விளையாடி வந்த ஜடேஜா அவ்வப்போது மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். சூதாட்டப்புகார் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ளது.

இந்த சீசனில் தோனியின் உச்சபட்ச பரிந்துரையால் சிஎஸ்கே நிர்வாகம் ரவிந்திர ஜடேஜாவை தக்கவைத்துக் கொண்டது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மெச்சும்படியான பேட்டிங், பந்துவீச்சு ஏதும் இல்லாமல், விளையாடி வருகிறார். ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் 59 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் எந்தவிதமான ஃபார்மிலும் இல்லாத ஜடேஜா சிஎஸ்கே அணியில் விளையாடும் லெவனில் இடம் பெற்று இருப்பது ஒவ்வொரு ஆட்டத்தின் போது விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. சிஎஸ்கே அணிக்கு ஒரு “எக்ஸ்ட்ரா லக்கேஜ்” போலவே ஜடேஜா இருந்து வருகிறார்.

இவரின் இந்த சொதப்பலான ஆட்டம் நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் உச்சத்தை தொட்டு, உள்ளங்கை நெல்லிக்கனி போல் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

சிஎஸ்கே வீரர் ஆசிப் 2-வது ஓவரை வீசியபோது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். முதல் வாய்ப்பைத்தான் தவறவிட்டார் என்றால் அடுத்தபந்திலும் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். இது போட்டியை தொலைக்காட்சியிலும், மைதானத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களின் கோபத்தையும் தூண்டிவிட்டது.

களத்தில் இருந்த தோனியும் கேட்ச் வாய்ப்பை இரு முறை தவறவிட்ட ஜடேஜாவின் செயலைப்பார்த்துக் கடுப்பாகிவிட்டார். அதன்பின் அம்பதி ராயுடு, ரெய்னா, பில்லிங்ஸ் ஆகியோர் வந்து ஜடேஜாவை சமாதானப்படுத்தி அவருக்கு நம்பிக்கை ஊட்டினர்.

நரேன் அடித்த இருஷாட்களில் ஒரு கேட்சை பிடித்திருந்தால் கூட, நரேன் 32 ரன்கள் விளாசுவதை தடுத்திருக்க முடியும், போட்டியில் கொல்கத்தா ரன் சேர்ப்பை தடுத்திருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் முடிவு வேறுமாதிரியாகச் சென்றது. சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்க ஜடேஜாவின் மோசமான பீல்டிங்கும் ஒருவிதத்தில் காரணமாகவே அமைந்தது எனக் கூறலாம்.

ஜடேஜா போட்டியில் இரு கேட்ச் வாய்ப்புகளை விட்டதைத் தொடர்ந்து, அவர் அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்று சிஎஸ்கே ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிஎஸ்கேவின் ட்விட்டர் தளத்தில், “ ஒரு ரசிகர் பதிவிடுகையில், தோனி, பிளமிங்குக்கு அன்பான வேண்டுகோள், அணியில் ஜடேஜாவின் பங்கு என்ன. சிஎஸ்கே அணியில் விளையாடும் லெவனில் அவர் இருக்க வேண்டுமா, அணியில் அவர் பங்கு என்ன, பேட்ஸ்மேனா அல்லது பந்துவீச்சாளரா என்னவென்றே தெரியவில்லை, அவரை தயவு செய்து நீக்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆற்றங்கரையில் மீனை ஒருவர் தூக்கிப்போடுவது போலவும், அதை ஒருபிடிக்காமல் தவறவிடுவதுபோன்ர வீடியோ கிளிப்பை பதிவிட்டு அதில் ஒருவரை தோனியாகவும், மற்றொருவரை ஜடேஜாவாகவும் குறிப்பிட்டு மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் பதிவிடுகையில், ஜடேஜா பந்துவீச மாட்டார், பேட்டிங் செய்யமாட்டார், ஆனால் 8 போட்டிகள் விளையாடிவிட்டார், இதன்பின் தோனி எப்படி ஜடேஜாவை அணியில் வைத்திருக்கிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜடேஜாவை அணியில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக இதுவரை எத்தனை ஜடேஜாக்களை தோனி கழற்றிவிட்டு இருப்பார் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

இதுபோல் ஏராளமான சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவுக்கு எதிராக புறப்பட்டுவிட்டனர். பெங்களூரு அணிக்கு எதிராக நாளை நடக்கும் போட்டியில் ஜடேஜா தொடர்ந்து நீடிப்பாரா என்பது தோனியும், பயிற்சியாளர் பிளெம்மிங் ஆகியோர் முன் இருக்கும் கேள்வியாகும்.

தி ஹிந்து ஐ.பி.எல் -2018 !!  - Page 8 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian Fri May 04, 2018 5:45 pm

இது தொடர்பாக எந்தன் பதிவு எண் #67 பார்க்க .
நேற்றிரவு 10 28 மணி அளவில் பதிவிட்டு இருந்தேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Sat May 05, 2018 7:26 am

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 201805050603080422_IPL-2018-CSK-is-the-most-followed-team-reveals-BARC-data_SECVPF
-

ஐபிஎல் தொடரில் அதிகம் பின்தொடரப்படும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்


ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி
வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள
நிலையில் இந்த சீசனில் சென்னை அணி அதிக
பார்வையாளர்களை கொண்டு வந்துள்ளதாக தொலைக்காட்சி
ஒளிபரப்பு ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதன்படி, விளையாட்டு போட்டிகளை மட்டும் ஒளிபரப்பி வரும்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி சேனல் தொடர்ந்து 17-வது வாரமாக
அதிக பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்த வாரம் மட்டும் 98,59,30,000 பார்வையாளர்களை பெற்றது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
பங்கேற்கும் போட்டிகள் மிக அதிக பார்வையாளர்களை
ஈர்த்துள்ளது.

கடந்த வாரம் நடந்த சென்னை, பெங்களூரு இடையேயான
போட்டியை 1,66,97,000 பேர் பார்த்துள்ளனர். அதற்கு அடுத்த
படியாக சென்னை, பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி
1,53,95,000 பார்வையாளர்களை பெற்றிருந்தது.

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகம் பின்தொடரப்படும்
அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
அதிகம் நேசிக்கப்படும் சேனலாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி
சேனலாக உள்ளது.
-
----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Sat May 05, 2018 7:31 am

டி20 போட்டிகள் அதிக சிக்ஸர்கள் - புதிய சாதனை படைத்தார் ரோகித் சர்மா
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 8 201805050556272676_Rohit-Sharma-hits-300-T20-Sixes-most-by-an-indian_SECVPF
-

நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்,
மும்பை அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடி
மும்பை அணி வென்றது.

இதில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 15 பந்துகளில்
24 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸர்களையும் அடித்தார்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல்
இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார்.

அவர், 301 சிக்ஸர்களுடன் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்
அடித்த வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்திற்கு
முன்னேறியுள்ளார். அதேசமயம் இந்திய அளவில்
அதிக டி20 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
-
-------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Sat May 05, 2018 2:56 pm


ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?
-
ஐ.பி.எல். போட்டியில் 29-வது நாளான இன்று இரண்டு
ஆட்டங்கள் நடக்கிறது. புனேயில் மாலை 4 மணிக்கு நடைபெறும்
ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-
வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது
இடத்தில் உள்ளது.

மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூர், டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப், மும்பை, கொல்கத்தா அணிகளிடம் தோற்று இருந்தது. பெங்களூர் அணியை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால்
சூப்பர் கிங்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
7-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சு மிகவும் மோசமாக
இருந்தது. இதேபோல பீல்டிங்கிலும் வீரர்கள் சொதப்பினர்.
இதனால் வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்கலாம். ஜடேஜா தொடர்ந்து
மோசமாக விளையாடுவது அணிக்கு பாதிப்பே.

டோனி, அம்பதி ராயுடு, வாட்சன் ஆகியோரது அதிரடி ஆட்டத்தை
பொறுத்தே ரன் குவிப்பு இருக்கும்.

பெங்களூர் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று
6-வது இடத்தில் இருக்கிறது. ஏற்கனவே சென்னை அணியிடம்
தோற்றதால் பதிலடி கொடுத்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில்
உள்ளது.

காய்ச்சல் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத
டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவது கூடுதல் பலமே.
குயின்டன் டிகாக் இடத்தில் பார்த்தீவ் பட்டேல் இடம் பெறலாம்.

வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் பெங்களூர் அணி ஆடும்.
தோல்வியில் இருந்து புதுப்பொலிவு பெற சூப்பர் கிங்ஸ் போராடும்.
இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில்
வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஷிரேயாஸ்
அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள்
மோதுகின்றன.

ஐதராபாத் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல்
இடத்தில் உள்ளது. டெல்லி அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 7-வது
இடத்தில் இருக்கிறது.

ஐதராபாத் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
அதுவும் குறைந்த ஸ்கோர் எடுத்து திறமையான பந்துவீச்சால்
வெற்றி பெற்றது. அந்த அணி மும்பை, ராஜஸ்தான் அணிகளை
தலா 2 முறையும், பஞ்சாப், கொல்கத்தா அணிகளை
தலா 1 முறையும் வென்று இருந்தது. பஞ்சாப், சென்னை
அணிகளிடம் தோற்று இருந்தது. டெல்லியை வீழ்த்தி 7-வது
வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

டெல்லி அணி தொடர்ந்து வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால்
வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஐதராபாத்தின்
தொடர் வெற்றிக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைக்குமா? என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியில் ரி‌ஷப்பண்ட் தொடர்ந்து அதிரடியான
ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை பொறுத்தே
அணியின் நிலை இருக்கிறது. கேப்டன் ஷிரேயாஸ் அய்யர்,
பிரித்விஷா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 4-வது வெற்றி
ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
-
------------------------------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Sat May 05, 2018 5:11 pm

61 ரன்னுக்குள் கோலி, ஏபிடி, மெக்கல்லத்தை இழந்து ராயல் சேலஞ்சர்ஸ் திணறல்
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 8 201805051654526884_IPL-2018-CSKvRCB-royal-challengers-bangalore-loss-quick-3_SECVPF

: மே 05, 2018 16:54

ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் புனேயில் நடைபெற்ற வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ்
டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம்,
பார்தீவ் பட்டேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
மெக்கல்லம் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பார்தீவ் பட்டேல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி பவர் பிளே வரை நின்று விளையாடியது.

பார்தீப் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 6 ஓவரில் 1 விக்கெட்
இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது.

பவர் பிளேயின் அடுத்த ஓவரான 7-வத ஓவரை ஜடேஜா வீசினார்.
இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஸ்டம்பை பறி
கொடுத்தார். அவர் 11 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் 8-வது
ஓவரில் ஸ்டம்பிங் ஆனார்.

மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூர் அணி திணறி வருகிறது.

11 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் அடித்துள்ளது.
பார்தீவ் பட்டேல் 49 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
-
-----------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Sat May 05, 2018 8:06 pm

பெங்களூருவை வீழ்த்தியது சென்னை
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Tamil_News_large_201473120180505193208
-
புனே:
பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை
அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20'
தொடர் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் சென்னை,
பெங்களூரு அணிகள் மோதின.

'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்'
தேர்வு செய்தார். சென்னை அணியில் டுபிளசி,
ஆசிப், கரண் சர்மாவுக்குப்பதில் வில்லே, துருவ், ஷர்துல் தாகூர்
இடம் பெற்றனர். பெங்களூரு அணியில் குயின்டன், வோரா,
வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு டிவிலியர்ஸ், பார்த்திவ், முருகன்
அஷ்வின் இடம் பிடித்தனர்.

ஜடேஜா அசத்தல்

பெங்களூரு அணிக்கு பிரண்டன் மெக்கலம், பார்த்திவ் படேல் துவக்கம்
தந்தனர். நிகிடி பந்தில் மெக்கலம் (5) ஆட்டமிழந்தார். இதன்பின்,
'சுழல்' ஆதிக்கம் துவங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி (8)
ஜடேஜா 'சுழலில்' திரும்பினார்.

ஹர்பஜன் பந்தில் விளாசல் மன்னன் டிவிலியர்ஸ் (1) அவுட்டானார்.
மீண்டும் வந்த ஜடேஜா, இம்முறை மன்தீப் சிங்கை (7) திருப்பி
அனுப்பினார். பார்த்திவ் (53) அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார்.

ஹர்பஜன் பந்தில் முருகன் அஷ்வின் (1) சிக்கினார். ஷர்துல்
பந்துவீச்சில் சவுத்தீ ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். முடிவில்,
பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது.

சவுத்தீ (36) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை சார்பில் அதிக
பட்சமாக ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கு

எளிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன் (11) ஏமாற்றினார்.
பின், இணைந்த ராயுடு, ரெய்னா ஜோடி எதிரணி பந்துவீச்சை எளிதாக
சமாளித்தது. உமேஷ் 'வேகத்தில்' ரெய்னா (25) சிக்கினார். சிறப்பாக
விளையாடிய ராயுடு 32 ரன்கள் எடுத்தார்.

கிராண்ட்ஹோம் பந்தில் துருவ் ஷோரே (8) அவுட்டானார். கேப்டன்
தோனி, பிராவோ இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்
சென்றனர். முருகன் அஷ்வின் பந்தை பிராவோ சிக்சருக்கு பறக்க
விட்டார்.

தன் பங்கிற்கு சகால் பந்தை தோனி சிக்சருக்கு அனுப்பினார்.
சென்னை அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி
பெற்றது. தோனி (31), பிராவோ (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
-
--------------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian Sat May 05, 2018 9:43 pm

CSK அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Sun May 06, 2018 12:19 pm

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 201805060555338095_IPL-Dhoni-records-Most-Stumping-as-Wicket-Keeper_SECVPF
-

ஐபிஎல் போட்டியில் மேலும் ஒரு சாதனையை சமன் செய்தார் டோனி


புனே:

ஐபிஎல் டி 20 போட்டி தொடரில் புனேயில் நேற்று நடந்த
பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை
அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணி புள்ளிப்பட்டியலில் தற்போது
14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனும்,
விக்கெட் கீப்பிங்கில் கில்லாடியுமான டோனி,
எம்.அஸ்வின் (பெங்களூரு) விக்கெட்டை ஸ்டம்பிங்
செய்து வீழ்த்தினார்.

இதன்மூலம் ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் அதிக முறை
ஸ்டம்பிங் செய்து இருந்த கொல்கத்தா அணியின்
முன்னாள் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவின்
சாதனையை (158 ஆட்டத்தில் 32 ஸ்டம்பிங்) டோனி சமன்
செய்தார்.

டோனி 169 ஆட்டங்களில் 32 முறை ஸ்டம்பிங் செய்து
விக்கெட்டை சாய்த்து இருக்கிறார்.
இதனால் முதல் இடத்தை டோனி, உத்தப்பா ஆகியோர்
பகிர்ந்து கொண்டுள்ளனர். கொல்கத்தா அணி கேப்டனும்,
விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 161 ஆட்டங்களில்
28 ஸ்டம்பிங் செய்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
-
இதோடு டோனி, இந்த தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்
பட்டியலில் 27 கின்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் 360 ரன்களுடன்
மூன்றாவது இடத்தில் உள்ளார்
-
------------------------------------
மாலை மலர்

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Thu May 10, 2018 12:46 pm

ஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்
-
11-வது ஐ.பி.எல். தொடரில், 41 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில்
‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய ஒரு
கண்ணோட்டம்
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 8 201805101214475526_IPL-2018-Which-team-chance-Play-Off_SECVPF
-


11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி
தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும்
தலா 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதாவது ஒவ்வொரு
அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை
பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்
மொத்தம் உள்ள 56 ‘லீக்‘ ஆட்டத்தில் நேற்றுடன் 41 போட்டிகள்
முடிந்து விட்டன. இன்னும் 15 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

அதிகாரப்பூர்வமாக இது வரை எந்த அணியும் ‘பிளே ஆப்’
சுற்றுக்கு நுழையவில்லை. 16 புள்ளிகள் பெற்று சன்ரைசஸ்
ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு
நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ்
அணிகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான்.
மீதியுள்ள 2 இடத்துக்கு பஞ்சாப், மும்பை, கொல்கத்தா,
ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவும் ஆட்டத்தின்
ஒரு அணியின் வெற்றி-தோல்வி மற்ற அணிகளுக்கு
சாதகமான பாதகமான முடிவாக அமையும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.பி.எல் -2018 !!  - Page 8 Empty Re: ஐ.பி.எல் -2018 !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum