புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் -2018 !!


   
   

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 08, 2018 3:35 am

First topic message reminder :

ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Tamil_News_large_1995323
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 21, 2018 12:38 am

புனே: புனேயில் நடந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் புதிய சொந்த மண்ணில் சிஎஸ்கே முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 16 ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஐதராபாத், பஞ்சாப் அணிகள் அதற்கடுத்த இடங்களில் உள்ள்ளன. சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்திலும், ராஜஸ்தான் 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்திலும் உள்ளன. இரண்டாண்டுகள் தடையால் விளையாடாமல் இருந்த சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்கள் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளன. குறிப்பாக இரண்டு முறை சாம்பியனான சிஎஸ்கே, கேப்டன் கூல் டோணி தலைமையில் களமிறங்கியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Bravo-1524219421

கடைசி ஓவர் வெற்றிகள் :
சிஎஸ்கே இதுவரை விளையாடியுள்ள 3 ஆட்டங்களில், மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக கடைசி ஓவரில் திரில் வெற்றி வெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தல டோணி அதிரடியாக விளையாடியும் கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

கடைசி ஆட்டத்தில் தோல்வி:
அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 2 ஆட்டங்களில் வெற்றி, 2ல் தோல்வியடைந்துள்ளது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. டெல்லி, பெங்களூரு அணிகளை வென்ற அந்த அணி, கொல்கத்தாவிடம் தோல்வியடைந்துள்ளது.

மைதானம் மாற்றம்:
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான போராட்டங்களில், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, புதிய சொந்த மைதானமான புனேயில், தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே விளையாடுகிறது. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது

சீசனின் 2வது சதம்: அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அணியின் ஸ்கோர் 50ஆக இருந்தபோது அம்பட்டி ராயுடு 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா 46, டோணி 5, பில்லிங் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி சீசனின் 2-வது சதத்தை அடித்தார். அவர் 57 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தானின் அணியின் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்களையும், லாப்லின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இன்று யாருக்கு வெற்றி

205 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 45, ஜோஸ் பட்லர் 22 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிஎஸ்கேவின் தீபக் சாகர், ஷர்துல் தாகுர், பிராவோ, கரன் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 64 ரன்களில் சிஎஸ்கே வென்றது. இதன் மூலம் தனது புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் வெற்றியை பெற்றதுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் சிஎஸ்கே பிடித்துள்ளது.

நன்றி ஒன் இந்தியா தமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 21, 2018 6:22 am

ஐ.பி.எல் -2018 !!  - Page 6 103459460
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Vatsan
-

இன்றைய ஆட்டங்கள்
கொல்கத்தா-பஞ்சாப்
நேரம்: மாலை 4.00
இடம்: கொல்கத்தா
-
பெங்களூரு-தில்லி
நேரம்: இரவு 8.00
இடம்: பெங்களூரு
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

_________________

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 25, 2018 12:17 pm

ஐ.பி.எல் -2018 !!  - Page 6 25CHPMUDEVILLIERS2



ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் கடந்த கால சீசன்களில் இரு அணிகள் இடையிலான மோதல்கள் தீவிரமாகவே காணப்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களிலும் சென்னை அணி விளையாடாத நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி, பெங்களூரு அணிக்கு எதிராக 21 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் சென்னை அணி 13 ஆட்டங்களிலும், பெங்களூரு 7 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன. அதிலும் சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளும் 7 முறை மோதி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 முறை வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது.

2 வருடங்களுக்கு பிறகு திரும்பி உள்ள சென்னை அணி, பெங்களூருவை விட வலுவாகவே உள்ளது. சென்னை அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. டி வில்லியர்ஸ் மிரட்டும் வகையிலான அதிரடிக்கு திரும்பி இருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக 39 பந்துகளில் 90 ரன்கள் விளாசி வெற்றியில் பிரதான பங்கு வகித்திருந்தார் டி வில்லியர்ஸ். அந்த ஆட்டத்தில் 175 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் டி வில்லியர்ஸ் ஒற்றை ஆளாக ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தனது அசாத்தியமான ஆட்டத்தால் வெற்றியை அறுவடை செய்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு மிரளச் செய்யும் அளவிலான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

சென்னை அணியின் பந்து வீச்சுக்கு அவர், கடும் சவாலாக இருக்கக்கூடும். அதேவேளையில் விராட் கோலி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 52 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக சேர்த்த 92 ரன்களும் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இவர்களுடன் குயிண்டன் டி காக், மனன் வோரா ஆகியோரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5 ஆட்டங்களில் 4 ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று நெருக்கமாகவே முடித்துள்ளது. இலக்கை துரத்திய 4 ஆட்டங்களில் 2-ல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த ஆட்டமும் கடைசி ஓவர் பரபரப்புக்கு விதிவிலக்காக அமையவில்லை. கடைசியாக மோதிய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்த நிலையில் கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது சென்னை அணி.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 106 ரன்கள் விளாசிய ஷேன் வாட்சன், ஹைதராபாத் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 79 ரன்கள் குவித்த அம்பாட்டி ராயுடு ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதில் அம்பாட்டி ராயுடு இதுவரை 201 ரன்கள் குவித்து அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் 184 ரன்கள் சேர்த்துள்ள வாட்சன் பந்து வீச்சில் 6 விக்கெட்களை கைப்பற்றி ஆல்ரவுண்டராக பலம் சேர்த்து வருகிறார். சுரேஷ் ரெய்னா (118), தோனி (139), டுவைன் பிராவோ (104), ஷேம் பில்லிங்ஸ் (68) ஆகியாரும் மட்டையை சுழற்றத் தயாராக உள்ளனர்.

வலுவான சென்னை அணியின் பேட்டிங் வரிசைக்கு எதிராக பெங்களூரு அணி பந்து வீச்சை பலப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளது. அந்த அணி இந்த சீசினில் சொந்த மண்ணில் நடைபெற்ற இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் கோரே ஆண்டர்சனுக்கு பதிலாக காலின் டி கிராண்ட் ஹோம் இடம் பெற வாய்ப்புள்ளது.

வேகப் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்கும் போதிலும் அதனை மற்ற பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது பின்னடைவாக உள்ளது. சுழலில் யுவேந்திரா சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஜோடி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற்பந்து வீச்சில் சற்று தடுமாறி வருகிறது. அந்த அணி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சராசரியாக 7.70 ரன்கள் சேர்த்துள்ள நிலையில் 10 விக்கெட்களை இழந்துள்ளது. இதனால் சாஹல், வாஷிங்டன் சுந்தர் கூட்டணி சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்படுகிறது.

நன்றி - தி இந்து தமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 26, 2018 6:13 am

‛தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Tamil_News_large_2007675
-
பெங்களூரு:
பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில்
சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி
பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் நடக்கிறது.
பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் கோஹ்லி
தலைமையிலான பெங்களூரு அணி, தோனியின் சென்னை
அணியுடன் மோதியது.

'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்'
தேர்வு செய்தார். சென்னை அணியில் டுபிளசி, கரண் சர்மா
நீக்கப்பட்டு ஹர்பஜன், தாகிர் சேர்க்கப்பட்டனர்.

டிவிலியர்ஸ் அரை சதம்:

பெங்களூரு அணிக்கு கேப்டன் கோஹ்லி (18) விரைவில்
திரும்பினார். பின், இணைந்த குயின்டன், டிவிலியர்ஸ்
ஜோடி அசத்தியது. எதிரணி பந்துவீச்சை சிதறடித்த
இருவரும் அரை சதம் கடந்தனர்.

பிராவோ பந்தில் குயின்டன் (53) அவுட்டானார்.
தாகிர் 'சுழலில்' டிவிலியர்ஸ் (68), கோரி ஆண்டர்சன் (2)
சிக்கினர். மன்தீப் சிங் (32) வேகமாக ரன் சேர்த்தார்.

வாஷிங்டன் சுந்தர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.
முடிவில், பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு
205 ரன்கள் எடுத்தது. சுந்தர் (13) அவுட்டாகாமல் இருந்தார்.

ராயுடு, தோனி விளாசல்:

கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன் (7),
ரெய்னா (11) ஏமாற்றினர்.
சகால் 'சுழலில்' பில்லிங்ஸ் (9), ஜடேஜா (3) அவுட்டாகினர்.
பின், கைகோர்த்த ராயுடு, கேப்டன் தோனி ஜோடி மிரட்டியது.

அபாரமாக விளையாடிய ராயுடு அரை சதம் கடந்தார்.
தன் பங்கிற்கு அசத்திய தோனியும் அரை சதம் எட்டினார்.
ராயுடு (82) ரன்-அவுட்டானார். இதனால், சற்று நெருக்கடி
ஏற்பட்டது.

இருப்பினும், தோனியின் அனுபவ ஆட்டம் கைகொடுக்க,
சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள்
எடுத்து வெற்றி பெற்றது. தோனி (70), பிராவோ (14)
அவுட்டாகாமல் இருந்தனர்.
-
-------------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 26, 2018 8:15 am

சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
-
பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு சின்னசாமி
ஸ்டேடியத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல்
சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 5 விக்கெட்
வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல்
வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில், பெங்களூரு அணி பந்து வீச அதிக நேரம்
எடுத்துக்கொண்டது. இதையடுத்து, அந்த அணியின் கேப்டன்
விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 26, 2018 10:23 am

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-

ஜெயித்திருக்க வேண்டிய போட்டி,தோற்றது ஒரு ஏமாற்றம்.
அபராதம் 12 லக்ஷம் வேறு.
நேற்று காலை அவர் முழித்த முகம் சரியில்லையோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 10:44 am

மல்லையா இந்த RCB அணியை வாங்கியதற்கு பதிலாக 4 JCB வாங்கி இருந்தால் இந்நேரம் கடனை அடைந்திருக்கலாம் 

முகநூலில் பெறப்பட்டது 



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 26, 2018 8:57 pm

டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 201804261501456537_1_PTI4_25_2018_000253B12._L_styvpf
-
சென்னை:

11-வது ஐ.பி.எல். போட்டி யில் பெங்களூர் அணியை
வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெற்றது.

அம்பதி ராயுடு 53 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 8 சிக்சர்),
கேப்டன் டோனி 34 பந்தில் 70 ரன்னும் (1 பவுண்டரி, 7 சிக்சர்)
எடுத்தனர்.

இந்த போட்டியில் ரன்கள் குவித்ததன் மூலம்
டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
அவர் டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை
கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
-
-------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 28, 2018 5:47 am


சபாஷ் ஸ்ரேயாஸ்! 'முதல்' போட்டியில் டில்லி வெற்றி

-
ஐ.பி.எல் -2018 !!  - Page 6 Tamil_News_large_2009105
புதுடில்லி:
கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில் டில்லி அணிக்கு
வெற்றி பெற்றுத் தந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் 40 பந்தில்
93 ரன்கள் விளாச, 55 ரன்களில், டில்லி அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கின்றது. இதன்
லீக் போட்டியில் கோல்கட்டா, டில்லி அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், '
பீல்டிங்' தேர்வு செய்தார். டில்லி அணியில் காம்பிர்
களமிறங்கவில்லை.

நல்ல துவக்கம்:

டில்லி அணிக்கு பிரித்வி ஷா, முன்ரோ (33) ஜோடி நல்ல
துவக்கம் தந்தது. இளம் வீரர் பிரித்வி ஷா, 38 வது பந்தில்
ஐ.பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார்.

இவர், 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஷாப் பன்ட் 'டக்'
அவுட்டாக, மேக்ஸ்வெல் (27) ரன் அவுட்டானார்.

முதன் முதலாக கேப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ்,
அரைசதம் கடந்தார். ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில்
ஸ்ரேயாஸ் 4 சிக்சர், 1 பவுண்டரி விளாச, மொத்தம்
29 ரன்கள் கிடைத்தன.

டில்லி அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
ஸ்ரேயாஸ் (93 ரன், 40 பந்து, 10 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல்
இருந்தார்.

ரசல் ஆறுதல்:

கடின இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணியின் 'டாப் ஆர்டர்'
சரிந்தது. கிறிஸ் லின் (5), உத்தப்பா (1), நரைன் (26 ரன், 9 பந்து),
ராணா (8) என, வரிசையாக கிளம்பினர். தினேஷ் கார்த்திக்
நீடிக்கவில்லை. ஷுப்மன் (37), ஷிவம் (0) அடுத்தடுத்த கிளம்பினர்.
ரசலும் (44) போல்டாக, கோல்கட்டா தோல்வி உறுதியானது.

கோல்கட்டா அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 164 ரன்கள் மட்டும்
எடுத்து, வீழ்ந்தது. டில்லி அணி, 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. குல்தீப் (7), மிட்சல் ஜான்சன் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
-
-------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 28, 2018 2:07 pm

புதுடில்லி:
கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில் டில்லி அணிக்கு
வெற்றி பெற்றுத் தந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் 40 பந்தில்
93 ரன்கள் விளாச, 55 ரன்களில், டில்லி அணி வெற்றி பெற்றது.

வாழ்த்துகள் ஷ்ரேயஸ். தொடரட்டும் உங்கள் வெற்றி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக