புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
56 Posts - 73%
heezulia
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
221 Posts - 75%
heezulia
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காடும் காடர்களும் - Page 5 Poll_c10காடும் காடர்களும் - Page 5 Poll_m10காடும் காடர்களும் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காடும் காடர்களும்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sat Apr 07, 2018 12:59 am

First topic message reminder :

தோழமைக்கு வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் எழுத்தைப் பதிவிட  வந்துள்ளேன். பணி மாறுதல்  மற்றும் அதுசார்ந்த பல்வேறு பணிகளில் என் கட்டுரையைத் தொடர முடியவில்லை. தற்பொழுது என் எழுத்தைத் தொடரும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்ல புதிய தொடர் ஒன்றையும் எழுதும் சூழல் வாய்த்திருக்கின்றது.

நான் ௨௦௦௭ இல் வால்பாறைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியேற்றபோது அங்கு வாழும் பழங்குடியின மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு மாணவியின் உதவியோடு முதலில் வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற இடத்தில் வாழும் காடர்களை அடர்ந்த காட்டிற்குள் சென்று சந்தித்தேன். சென்ற பாதையின் தன்மை என்னைப் பயப்படுத்தினாலும் ஆர்வத்தில் சென்றது தான். அம்மக்கள் முதலில் என்னைச் சந்திக்க மறுத்தாலும் என்னை அழைத்துச் சென்ற பெண் அவர்களைப் பற்றி அறிந்திருந்ததால் முதலில் மூப்பரைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தந்தார். மூப்பரிடம் என்னால் அவர்களுக்கு எவ்விதத்திலும் துன்பமில்லை என்பதை உணர்த்தி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இவ்வளவு தூரம் வந்திருப்பதாகவும் என் பெயர் நான் பணியாற்றும் கல்லூரி முதற்கொண்டு என்விவரங்களைத் தெரிவித்த பிறகே என்னிடம் அன்பாகப் பேசினர். அதன்பிறகு மூப்பர் அங்குள்ள மக்களில் சிலரை எனக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் எனக்கு  மாங்காயும் தேனும் கொடுத்து உபசரித்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின்னர் அடர்ந்த காட்டிற்குள் தனியே வருவது பாதுகாப்பல்ல என்று கூறி எச்சரித்து நாங்கள் திரும்பும்போது எங்களோடு துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார்கள்.

வீட்டிற்கு வந்த பிறகு அம்மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர அதை எப்படி செயற்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிபடாத போது அவ்வனத்தில் இருந்த ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்கள் எனக்கு அறிமுகமானார்.

அம்மக்களைப் பார்த்துவிட்டு வந்த சில நாட்களில் அம்மக்கள் என்னைப் பற்றி அவரிடம் தெரிவிக்க, வால்பாறை நகராட்சி சிறுபகுதி என்பதாலும் நான் கல்லூரியில் பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்ததாலும் என்னைக் கண்டறிந்து அறிமுகமாவது அண்ணாவிற்கு  எளிமையாக இருந்தது. அவரிடம்  அம்மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற என் ஆர்வத்தை வெளியிட்டபோது அவ்வளவு எளிதாக யாரிடமும் அவர்கள் தங்களைப்பற்றி வெளியிடுவதில்லை. தனியே சென்று அவர்களைப்  பார்ப்பது பாதுகாப்பானதும் அல்ல. ஏனென்றால் அடர்ந்த காடு என்பதால் இடைவழியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி அங்குள்ள ஓராசிரியர் பள்ளியில்தான் நான் பணியாற்றுகிறேன் என்றும் அங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய இயலுமா? என்றும் கேட்டார்.  

ஏற்கனவே அக்காடர் இன மக்களும் அன்பாய் என்னிடத்து தனியே வரவேண்டாம் என்று கூறியது போலவே இந்த ஆசிரியரும் கூறுகின்றாரே  என்று முதலில் நினைத்தாலும் அவர்கள் சொல்வதும் உண்மைதானே என்றிருந்தது. என்றாலும் அம்மக்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குச் செய்யும் இவ்வுதவிகள் எனக்குப் பேருதவியாக இருக்கும் என்று கருதி சரி என்று கூறி அங்குள்ள குழந்தைகளுக்குச் சீருடை  வாங்கிக் கொடுத்தேன். அண்ணன் இளங்கோ அவர்கள் சீருடைகளை நான் தான் அக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன் என்பதை அம்மக்களிடம் தெரிவிக்க அம்மக்களுக்கு என்மீது நல்ல மதிப்பு ஏற்பட அதுவே காரணமாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து அக்குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள், எழுதுகோல்கள் என வாங்கிக் கொடுத்தேன். பள்ளி ஆண்டுவிழாவிற்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து அம்மக்களுடன் ஒரு நெருக்கமான உறவை இளங்கோ அண்ணா ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு என்னை என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லுமளவிற்கு அவர்களுடன் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி முடிந்தவரை அங்குச் சென்றபோதெல்லாம். அறிந்து கொண்டேன். அறிந்ததை எழுதியும் வைத்தேன். ஆனால் எதுவும் முழுமை அடையவில்லை.

திருமணம் ஆனபிறகு என்னால் இப்படி  சென்று தகவல்களைப் பெறமுடியவில்லை. அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் குறைந்து போனது. வார நாட்களில் சந்தையின் போது காடர் இனமக்களைப் பார்க்கும் போது அவர்களை நலம் விசாரிப்பதோடு சரி. அவர்கள் பார்த்தாலும் மறவாது என்னை நலம் விசாரித்துச் செல்வர்.

இடையில் குழந்தைப்பேறு மற்றும் பணிமாறுதல் எனப் பலவிஷயங்களுக்கிடையில் மீண்டும் நான் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி பெயர் து. சரண்யா.

அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண்.அவரைப்பார்த்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்ட அனுபவமே என்முன் நின்றது.  குடும்பம், பணிமாறுதல் எனப் பல்வேறு  காரணங்களுக்காக தொய்வுற்ற என் ஆர்வம் தற்பொழுது மீண்டும் எழுந்துள்ளது. எனக்குள்ள ஆர்வத்தை வகுப்பறையில் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல. ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் குடியிருப்புப் பள்ளிக்கு நான் சென்று உதவியபோது உதவிபெற்றவர் என்பதும் அவள்பேச்சில் அறிந்து கொண்டேன். அன்றைய நாட்களின் புகைப்படங்களைக் காட்டியபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. புகைப்படங்களில் இருப்பவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றபோது அவள் முகத்தில் ஒரு ஆதங்கம். அன்றைக்கு எனக்குத் தகவல் வழங்கியதில் சரண்யாவின் அம்மாவும் ஒருவர். தன் அம்மாவை இளம்வயது தோற்றத்தில் பார்த்தவுடன் அவளுக்கு ஒரு நெகிழ்ச்சி. இப்படி எங்களுக்குள் ஒரு  புரிதல் வந்தவுடன் பணியேற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற என் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறது. சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.

தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். அவர் தரும் தகவலில் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தன் குடில் பெரியவர்களிடம் கேட்டறிந்து  போக்குவதும் அவள்தான். ஆதலின் அவள் பெயரும் இத்தொடரில் இடம்பெறும். நாங்கள் இருவராக இணைந்து இத்தொடரை எழுத விரும்புகிறோம். அதற்கு அனுமதி வழங்கும்படி தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன். என் பழைய தொடரும் இனி தொடரும்..

நன்றி. வணக்கம்.



முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Aug 15, 2018 9:06 pm

தொடர்ச்சி....

அதற்கு அவனுடைய தாய்

போகாதடா என்மகனே போகாதடா
பகஷிக்குப் பகையாளி மகனே பகையாளி
எத்தனையோ பகையாளி மகனே பகையாளி

எனப் பறவைகளுக்கும் பகையான வேறு பறவைகள் உன்னைத் தாக்குமடா மகனே நீ போகவேண்டாம் எனத் தாய் கூறுகிறாள். உடனே மகன் தன் தாயிடம் ஆரியமலையின் கோட்டையைக் குறித்துக் கூறுகிறான்.

செத்திறந்து போனாலும்
மாண்டு மடிஞ்சு போனாலும்
ஆரியமாலை மடிமேலே தாயே

ஆரியமாலை மடிமேலே

எனத் தன் தாயிடம் அவன் இறந்தாலும் ஆரியமலையின் மடிமேலேயே தான் எனக் கூறினான். இதைக் கேட்ட அவனுடைய தாய் மீண்டும் அவனைத் தடுக்க முடியவில்லை.

எல்லாரு கோட்டையடா தாயே
எட்டு சுத்து பத்து சுத்து - ஆரியமலா
கோட்டையடா தாயே கோட்டையடா
பாம்பேறாத மண்டக(ப)மா தாயே மண்டக(ப)மா


என்று எல்லாருடைய கோட்டையும் எட்டுச் சுற்று பத்துச் சுற்று. ஆனால் ஆரியமலையின் கோட்டையோ பாம்பிற்குக் கூட ஏற முடியாத அளவு பெரிய கோட்டை என்றான். மேலும் அவன் ஆரியமலையின் கூந்தலைக் குறித்து கூறுகிறான்.

எல்லாரு கூந்தலடா தாயே கூந்தலடா
எட்டு முழம் பத்து முழம் ஆரியமலா கூந்தலடா
கூந்தலடா தாயே கூந்தலடா பதினாறு பாகமடா தாயே
                       - பதினாறு பாகமடா


என மற்ற பெண்களின் கூந்தல் குறைந்தது எட்டு முழம் அல்லது பத்து முழம். ஆனால் ஆரியமலையின் கூந்தலோ பதினாறு பாகமாக இருக்கும் என்கிறான். இதைக் கேட்ட  அவனுடைய தாய் ஆரியமலையின் பேரழகை உணர்ந்தாள். மீண்டும் தன் மகனைத் தடுக்க அவளுக்கு மனமில்லை.

தொடரும் ......



முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Aug 22, 2018 1:40 pm

தொடரச்சி....

தன் விருப்பப்படியே அவன் புள்ளிமான் வேடமிட்டு ஆரியமலையைப் பார்க்க அவள் கோட்டை இருக்கும் கிழக்குத் திசை நோக்கி விரைந்தான்.

ஆரியமலையின் கோட்டைக்கு வெளியே நின்று ஆரியமலையின் பேரழகை இரசித்தபடி நின்றான். நிலவைப் போன்ற முகம் கொண்ட அவள் முகம் கோட்டையின் முகட்டில் இருந்து ஒளிவீசியது. அவளுடைய கூந்தலை தாதிப் பெண்கள் அவள் இருந்த இடத்திலிருந்து கோட்டையின் கண்களின் வழியே வெளியே எடுத்து வந்து பதினாறு பாகமாகப் பிரித்து வேலியில் உலரவைத்து சிக்கல் களைந்தனர். அப்பேற்பட்ட நீளமான கூந்தலைக் கொண்டவள் ஆரியமலை.

அவளைக் காண புள்ளிமான் வேடம் அணிந்த ராஜகமாரன் அரியமலையின் முன் சென்று துள்ளித் திரிந்தான். அதைக் கண்ட ஆரியமலை அந்த மான் குட்டியைப் பிடித்துக் கொடுக்குமாறு தாதிப் பெண்களிடம் கூறினாள்.

மான்குட்டி ஓடுதடா தாதி பெண்ணாளே
மான்குட்டிய பிடிச்சுக்குடுங்க தாதிப் பெண்ணாளே

எனத் தாதிப் பெண்களிடம் முறையிட்டாள். இதைக் கேட்ட தாதிப் பெண்களும் அந்தப் புள்ளிமான் குட்டியைப் பிடிப்பதற்கு முயன்றனர். மான்குட்டி தப்பி ஓடியது. மான்குட்டியைப் பிடிக்க முடியவில்லை எனத் தாதிகள் ஆரியமலையிடம் கூறினர். அதற்கு அவள் தன் கூந்தலில் இருந்து சிக்கலை எடுக்கும்போது கிடைக்கும் முடியினைப்புள்ளிமான் குட்டி மேயும் இடங்களில் எல்லாம் வலைபோல் விரித்து வையுங்கள் என்றாள்.

மறுநாள் காலையில் புள்ளிமான் ஆரியமலையின் தோட்டத்திற்கு வந்தது. அதன் கால்களில் ஆரியமலையின் கூந்தல் வலைபோல் பின்னியது. மான்குட்டி சிக்கிவிட்டது என மகிழ்ந்த தாதிப் பெண்கள் அதனை ஆரியமலையிடம் கொண்டு காண்பித்தனர். அவள் அறையின் எதிரே இருந்த வேறு அறையில் அந்தப் புள்ளிமான் குட்டியை அடைத்து வைத்தனர். நள்ளிரவில் அந்த மான்குட்டி  அரியமலையின் அநையில் சென்று அவளுடன் படுத்துக் கொண்டது. அதைக் கண்ட அவள் தாதிப் பெண்களை அழைத்து மான்குட்டியை அதனுடைய அறையில் கொண்டுபோய் விடுமாறு கூறினாள். ஆனால் மான்குட்டி மீண்டும் மீண்டும் ஆரியமலையின் அறைக்கே சென்றது. ஆரியமலையும் தாதிப் பெண்களை அழைத்து நள்ளிரவில் தொல்லை கொடுக்க வேண்டாம் என நினைத்து மான்கட்டியைத் தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்தவுடன் மான்குட்டி இராஜகுமாரனாக உருமாறியது. அன்று இரவே இராஜகுமாரனும் ஆரியமலையும் கணவன் மனைவியாகினர்.

மறுநாள் காலையில் சூரியன் எழுவதற்குள் எழுந்துவிடும் ஆரியமலையின் அறைக்கதவுகள் திறக்கப்படவில்லை. தாதிப் பெண்கள் சென்று அவளுடைய அறையைத் திறந்த பொழுது ஆரியமலையின் மெத்தையில் அரிமலையின் கால்களும் இராஜகமாரனின் கால்களும் பிணைந்து கிடப்பதைக் கண்டு அவர்கள் மான் குட்டியாக வந்தது இராஜகுமாரன்தான் என்பதை உணர்ந்து அரிமலையின் அறையைவிட்டு வெளியேறினர்.

ஆரியமலையை மணமுடித்துக் கொண்ட பின்பு தன் தாயைத் தாமரைப் பூவாக மாற்றி அந்தக் கோட்டைக்குக் கொண்டு சென்றான்.

தன் தாய் காட்டில் தனியே இருந்ததினல் அவன் இவ்வாறு செய்தான் என்றும் தான் தாய் தந்தையைப் பற்றிய தகவலை ஆரியமலையிடம் சொல்லாமல் இருந்த காரணத்தால் தன்னுடைய தாயைத் தாமரைப் பூவாக மாற்றிக் கோட்டைக்குக் கொண்டு சென்றான் எனவும் கூறுவர்.

ஆரியமாலை கதை முற்றும். அடுத்த கதை   திருட்டு நாய்....

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Aug 22, 2018 1:57 pm

கதை தொடருவதற்கு முன்பாக முதல் மூன்று கதைகளை மட்டும் கொண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நன்றி.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Aug 22, 2018 3:45 pm

காடர் இன மக்களின் கதையும் அறமும்

அறிமுகம்

காடர்களிடையே பல்வேறு கதைகள் வழங்கப்படுகின்றன.வழங்கப்படும் கதைகள் அனைத்தும் அவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்றும் முன்னோர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கதைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் குழந்தைகளிடையேயும் பெரியோர்கள் தங்களுக்குள்ளாகவும் பொழுது போக்கிற்காகவும் கூறுவர் என்று சொல்லப்படுகிறது. கதை கூறும் போக்கில் கதையில் ஒரு சில கருத்துக்கள் சிலபோது கதை கூறுபவர்களின் மறதியினால் விடுபடுவது உண்டே தவிர்த்து  கதையின் கருப்பொருள் மாற்றிச் சொல்லப்படுவதில்லை. இவ்வாறு காடர் இனப் பெரியோர்கள் அனைவரும் குழந்தைகளிடையே தாம் கூறும் கதைகளைக் கருப்பொருள் மாற்றாமல் வழிவழியாகச் சொல்வதன் மூலம் தம் குடிகளுக்கு அல்லது தலைமுறைக்கு உணர்த்தி வரும் அறத்தின் பதிவினை எடுத்துரைக்க இக்கட்டுரை முயற்சி செய்கிறது.

காடர்களும் கதையும்

ஒரு குடும்பத்தில் பத்து குழந்தைகள் இருப்பின் அவர்கள் மத்தியில் கதை சொல்லப்படுகிறது. அப்பத்து குழந்தைகளுக்கும் சொல்லப்படும் கதை தெரிந்துவிடும். மேலும் கதையினைக் கேட்கும் குழந்தைகள் கேட்பதோடல்லாமல் தாங்கள் கேட்ட கதையினை விளையாட்டின் போதும்  பயன்படுத்துவர் என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு விளையாடும்போது குழந்தைகள் ஒரு வேளை கதைகளைக் கவனக்குறைவாக மாற்றிச் சொனனாலோ அல்லது நிகழ்வை மாற்றினாலோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் பெரியோர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கதையினைச் சரியாகச் சொல்லி திருத்தம் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இது வழிவழியாகத் தொடர்ந்து வருகிறது.

இதிலிருந்து குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் கவனிக்கப்படுகின்றது என்பதும்  விளையாட்டுதானே என்றில்லாமல் தவறெனத் தெரிந்தால் அவை உடனடியாகத் திருத்தப்படுவதும் பெரியோர்கள் கூறும் திருத்தங்களைக் குழந்தைகள் ஏற்றுக் கொண்டு சரியானவற்றைக் கடைபிடிப்பர் என்று கூறும் மங்கம்மா பாட்டியின் (வயது ௭௨, வில்லோனி குடில் , நெடுங்குன்றம்) தகவலிலிருந்து காடர்கள் தங்கள் தலைமுறையை வழிநடத்தும் சிறப்பினை அறியமுடிகிறது.
கதைகளின் வகை

காடர்களிடையே சொல்லப்பட்டுவரும் கதைகள் அனைத்தும் இங்குத் தொகுக்கப்பட்டுவிட்டன என்று கூறுதற்கில்லை. அவர்களின் மனப்பதிவுகளிலிருந்த கதைகள் மட்டும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.இக்கதைகளும் முழுமையானவை என்று சொல்வதிற்கில்லை.  கதைகளைத் தொகுக்கும் முயற்சியில் இதுவரை ௧௨ கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று கதைகளில் கதையின் ஊடே பாடல் இடம்பெறுகிறது. பாடலைப் பாடும் கதாபாத்திரங்களாக மனிதர்கள் மட்டுமன்றி பறவையும் உயிரற்ற பொருள்களும் இருப்பதைக் காணமுடிகிறது.

பதிவுசெய்துள்ள ௧௨ கதைகளும் கதையின் பாடுபொருள் நோக்கில் பின்வருமாறு பகுத்துக் கொள்ளப்படுகின்றன. அவை


Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக