ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

2 posters

Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:22 pm

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? LynvO61NSSOyCadDRLt5+cee85dbb27d8ed4f59985da6caed1845

கா

விரிப் படுகை முப்போகம் விளையும் பூமியாக இருந்ததெல்லாம் கதையாகிப் போனது. இனிமேல் கடைமடை வரைக்கும் காவிரி நீர் வந்து சேருமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், படுகையின் அடியிலிருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுவருகின்றன.

காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டமும் அதைத் தொடர்ந்து ஷேல் கேஸ் எனப்படும் படிமப் பாறையி லிருந்து எரிவாயு எடுக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு அத்திட்டங் கள் கைவிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிப் படுகைளைத் துளைத்து எடுக்கப்படுவது மீத்தேன், படிமப்பாறைகளைத் துளைத்து எடுக்கப் படுவது ஷேல் கேஸ், இரண்டு திட்டங்களுக்கும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், ஹைட்ரோ கார்பன் என்ற புதிய வார்த்தை புழக்கத்துக்கு வந்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்பது நிலக்கரிப் படுகை மீத்தேன், படிமப்பாறை எரிவாயு இரண்டையும் உள்ளடக்கியதே. ஆனால், இந்த வார்த்தையில் உள்ளடங்கியுள்ள எரிபொருட்களை அரசின் அறிவிப்புகள் விவரிப்பதில்லை.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:23 pm

ஏற்கெனவே, காவிரிப் படுகையில் பெட்ரோல் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இப்போது மட்டும் ஏன் எதிர்ப்புக் கிளம்புகிறது? விவசாயிகள் ஏன் அச்சத்துக்கு ஆளாகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்வகையில், விவசாயிகளின் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பத்திரிகையாளர்கள், அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பலதரப்பினரும் எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் சாதக பாதகங்களை விளக்கி புத்தகங்களை வெளியிட்டுவருகின்றனர்.
வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், மீத்தேன் எதிர்ப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான த.செயராமன் எழுதியுள்ள ‘மீத்தேன் அகதிகள்’ புத்தகத்தில், மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களுக் காக மேற்கொள்ளப்படும் நீரியல் விரிசல் முறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நீரியல் விரிசல் செய்யப்பட்ட பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டதையும் மேலை நாடுகள் இம்முறையைக் கைவிடத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். த.செயராமன் வரலாற்றுத் துறை பேராசிரியர் என்பதால், அரசியல் சூழல்களின் காரணமாகவும் சூழலியல் பாதிப்புகளின் காரணமாகவும் உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயர்பவர்களின் துயரக் கதைகளையும் விவரமாக எழுதியிருக்கிறார். சுற்றுச்சூழல் பாதிப்புகள் புலம்பெயர்வுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிப்பதாகவே இந்நூல் அமைந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:24 pm

பத்திரிகையாளர் கா.அய்யநாதன் எழுதியுள்ள ‘ஹைட்ரோ கார்பன் அபாயம்’ புத்தகம், ஓஎன்ஜிசி நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டுள்ள அறிக்கை களையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. எவ்வகையிலேனும் மக்களைச் சமாதானப்படுத்தி, திட்டங்களைத் தொடர்வதே அதன் நோக்கமாக இருக்கிறதேயொழிய, இத்திட்டங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பற்றி முன்னறிவிப்பதாக இல்லை என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருக் கிறார். கச்சா எண்ணெய் இறக்குமதியால், தொடர்ந்து அந்நியச் செலாவணியை இழந்துவரும் இந்தியா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் மூலமாக அதை ஈடுகட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையைக் காரணம் காட்டித்தான், தாராளமயம் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தாராளமயம் அனுமதிக்கப்பட்டு, 25 ஆண்டுகளாகியும்கூட அந்நியச் செலாவணியை நம்மால் ஈடுகட்ட முடியவில்லை என்பதே நிலை. இந்நிலையில் அந்நியச் செலாவணி, கச்சா எண்ணெய் ஆகியவற் றைக் காரணம்காட்டி, விவசாயிகளின் வாழ்வாதார மான நிலங்களைத் தகுதியிழக்கச் செய்வது சரியா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது கா.அய்ய நாதனின் ‘ஹைட்ரோ கார்பன் அபாயம்’ புத்தகம்.
தமிழில் தொடர்ந்து அறிவியல் சார்ந்த நூல்களை வெளியிட்டுவரும் அறிவியல் வெளியீடு, ‘அறிவியல் பார்வையில் ஹைட்ரோ கார்பன்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. கேள்வி-பதில் வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம், ஹைட்ரோ கார்பன் குறித்த சந்தேகங்களைக் கேள்விகளாக்கி அறிவியல்பூர்வ மான பதில்களை முன்வைக்கிறது. நெடுவாசல் ஒப்பந் தப் பின்னணி, காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருட்கள் உருவான வரலாறு உள்ளிட்ட பின்னிணைப்புகள் இப்பிரச்சினையை அறிவியல்பூர்வமாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் அணுகியிருக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:25 pm

எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியல் ஆய்வுகளுக்கான அவசியங்கள் இருந்தபோதும், அதன் விளைவுகள் மக்களையும் அவர்களது வாழ்வாதாரங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். செயற்கையாக ஆய்வகங்களில் நியூட்ரினோக்களை உருவாக்கும்போது அங்கு உருவாகும் கதிர்வீச்சுகள், அருகிலிருக்கும் பகுதிகளில் எத்தகைய சூழல் கேடுகளை உருவாக்கும் என்பதைப் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. மாநில அரசுகளின் அனுமதி பெறுவதில்கூட வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை.
தங்களது அனுமதி பெறாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று கேரள அரசு கூறியிருப்பதும் இந்தக் காரணத்தால்தான். இதுகுறித்து அணுசக்தி விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் எழுதிய கட்டுரைகள், அதற்கு இந்திய நியூட்ரினோ ஆய்வகம் தெரிவித்த மறுப்பு, வி.டி.பத்மநாபனின் விளக்கங்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்து ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் - தமிழ்நாடு & புதுச்சேரி அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:25 pm

ஏற்கெனவே, காவிரிப் படுகையில் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. எண்ணெய்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகளைப் பற்றி ஓஎன்ஜிசி போதிய அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்று விவசாயிகள் குறைபட்டுக்கொள்கிறார்கள். ஆனால், கச்சா எண்ணெய் எடுப்ப தால் நிலத்தடிநீர் பாதிப்படையவில்லை என்பதால் அதுகுறித்து விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களில் கையாளப்படும் நீரியல் விரிசல் முறையால் நிலமும் வளமும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, அதை எதிர்க்கிறார்கள்.
விவசாயிகளையும் அவர்களை ஒருங்கிணைத்துப் போராடும் தலைவர்களையும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் போக்கு ஒன்றும் உருவாகி யிருக்கிறது. உண்மையில் உணவு, எரிபொருள் இரண்டுமே அத்தியாவசியத் தேவை என்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இரண்டில் எதற்கு முக்கியத்துவம் என்பதில்தான் கருத்து மாறுபாடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by Guest Sun Mar 25, 2018 7:43 pm

மீத்தேன் எடுக்கும் செலவை விட, மாடு வளர்ப்பதால் அதிக எரிபொருளை பெறலாமே.மேல் நாடுகளில் செயற்படுத்துகிறார்கள் . எரிபொருள்,பால் என இயற்கை முறையில் பயன் பெறலாம். செலவும் குறைவே.
avatar
Guest
Guest


Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by krishnanramadurai Sun Mar 25, 2018 9:18 pm

மூர்த்தி wrote:மீத்தேன் எடுக்கும் செலவை விட, மாடு வளர்ப்பதால் அதிக எரிபொருளை பெறலாமே.மேல் நாடுகளில் செயற்படுத்துகிறார்கள் . எரிபொருள்,பால் என இயற்கை முறையில் பயன் பெறலாம். செலவும் குறைவே.
மேற்கோள் செய்த பதிவு: 1264018
வழி பல இருக்கலாம்,
இது ஒரு சமுதாயம்
நாம் எதோ ஒரு கட்டுப்பாட்டிற்கு வரவேண்டும்
இந்த புரிதல் இல்லாத ,சுயநல சமுதாயத்திற்கு
ஒரு வழியும் பயன்படாது .
"போதும் என்ற மனதே பொன் செய்யும் மருந்து" - இது அந்தக்காலம்
"போதாதென்ற மனதே வெற்றியின் விளிம்பு" - இது இந்தக்காலம்
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 11:49 am

மூர்த்தி wrote:மீத்தேன் எடுக்கும் செலவை விட, மாடு வளர்ப்பதால் அதிக எரிபொருளை பெறலாமே.மேல் நாடுகளில் செயற்படுத்துகிறார்கள் . எரிபொருள்,பால் என இயற்கை முறையில் பயன் பெறலாம். செலவும் குறைவே.
மேற்கோள் செய்த பதிவு: 1264018
மாட்டு சாணத்தை மீத்தேன் எடுக்க
உபயோகப்படுத்தலாம்.
மாட்டிற்கு தண்ணீர் தீவனம் என்ன செய்வது.
நீராதாரம் இன்றி இது சாத்தியம் இல்லை.
நன்றி மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by Guest Mon Mar 26, 2018 12:25 pm

ஐயா இது முற்றிலும் சாத்தியமே. ஏற்கனவே இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் தனியாரால் சிறிய அளவில் தொடங்கப்பட்டு விட்டது. அரசு தான் கண்டுகொள்ளவில்லை.கார்பொரேட் நிறுவனங்களின் மோசடிக்கு துணைபோகும் அரசுகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.இந்தத் திட்டத்திற்கு நீராதாரம் பெரிதாக தேவையில்லை.

கொமரபாளையம்,நேர்குன்றம்,ரெட்டிபட்டி-நாமக்கல், போன்ற பல இடங்களில் தனியார் இந்த திட்டத்தை செயற்படுத்தி நல்ல பலன் பெற்று வருகின்றனர். மாட்டின் கழிவுகள் மட்டுமல்லாமல் மனிதக் கழிவு,அழுகிய கழிவுகள் கூடப் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு தனியாருக்கு சிறிய மானியம் வழங்குகிறது. பெரிய அளவில் செய்ய மானில அரசு உதவி செய்வதில்லை கண்டுகொள்வதும் இல்லை..

நாம் தான் சாத்தியத்தை உருவாக்க வேண்டும். இஸ்ரயேல்,அரபு நாடுகள் நீர் இல்லாமல் பாலைவனமாக எதுவும் முடியாதென்ற நிலையில் இருந்த நிலை மாறி, இன்று தண்ணீரில் நிறைவு கண்டதுடன் விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அன்று முடியாது சாத்தியமில்லை என்று இருந்திருந்தால் இப்படி வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

தமிழ் நாட்டிற்கு இப்போது நீர் அவசியமில்லை நல்ல திட்டங்களை செயல்படுத்தும் ஒரு நல்அரசுதான் முக்கியமாக தேவைப்படுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:53 pm

மூர்த்தி wrote:ஐயா இது முற்றிலும் சாத்தியமே. ஏற்கனவே இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் தனியாரால் சிறிய அளவில் தொடங்கப்பட்டு விட்டது. அரசு தான் கண்டுகொள்ளவில்லை.கார்பொரேட் நிறுவனங்களின் மோசடிக்கு துணைபோகும் அரசுகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.இந்தத் திட்டத்திற்கு நீராதாரம் பெரிதாக தேவையில்லை.

கொமரபாளையம்,நேர்குன்றம்,ரெட்டிபட்டி-நாமக்கல், போன்ற பல இடங்களில் தனியார் இந்த திட்டத்தை செயற்படுத்தி நல்ல பலன் பெற்று வருகின்றனர். மாட்டின் கழிவுகள் மட்டுமல்லாமல் மனிதக் கழிவு,அழுகிய கழிவுகள் கூடப் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு தனியாருக்கு சிறிய மானியம் வழங்குகிறது. பெரிய அளவில் செய்ய மானில அரசு உதவி செய்வதில்லை கண்டுகொள்வதும் இல்லை..

நாம் தான் சாத்தியத்தை உருவாக்க வேண்டும். இஸ்ரயேல்,அரபு நாடுகள் நீர் இல்லாமல் பாலைவனமாக எதுவும் முடியாதென்ற நிலையில் இருந்த நிலை மாறி, இன்று தண்ணீரில் நிறைவு கண்டதுடன் விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அன்று முடியாது சாத்தியமில்லை என்று இருந்திருந்தால் இப்படி வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

தமிழ் நாட்டிற்கு இப்போது நீர் அவசியமில்லை நல்ல திட்டங்களை செயல்படுத்தும் ஒரு நல்அரசுதான் முக்கியமாக தேவைப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1264070
இந்த பயோ கேஸ் திட்டம் மாட்டு சாணத்தை உபயோகித்து எடுப்பது.
இது எங்க வீட்டில் 1985ல் போட்டு உபயோகபடுத்தினோம். சமையல் செய்ய மிக
உபயோகமானதாக இருந்தது. இதில் நிறைய
பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அதை அப்போது சரிசெய்து தர ஆளில்லை. ஒரு கட்டத்தில் அது உபயோகமற்று போனது.
இதில் எனக்கு நிறைய பிரச்சனைகள்
தெரியும். ஒரு கட்டத்தில் வெறுத்து விட்டு விட்டோம். ஆனால் தற்போது டெக்னாலஜி வளர்ந்து உள்ளது. இது சாத்தியம் தான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Empty Re: நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» உங்கள் பிள்ளைகள் சாப்பிடுவது சத்தான உணவா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum