ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!

Go down

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?! Empty தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!

Post by SK Wed Mar 21, 2018 4:50 pm

வர்த்தகர்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளரே தங்களின் முதல் கடவுள். அதிலும் புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள், முதல்முதலாகக் கிடைக்கும் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்த எப்பேற்பட்ட உழைப்பையும் காட்டத் தயங்கமாட்டார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் தற்போது இந்தியாவில் முன்னிலையில் இருக்கும் ஃப்ளிப்கார்ட் தளத்தின் நிறுவனர்களும் இதைத்தான் செய்தார்கள்.


டெல்லி ஐ.ஐ.டி-யில் படிப்பை முடித்துவிட்டு, அமேசான் தளத்தில் பணிபுரிந்த சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் என்ற இரண்டு நண்பர்களுக்கும், நாமே இதுபோல் புதிதாக ஒரு சைட் தொடங்கினால் என்னவென்று தோன்றுகிறது. அமேசானில் இருந்து விலகி, இருவரும் இணைந்து, 2007-ம் ஆண்டு தொடங்கிய தளம்தான் ஃப்ளிப்கார்ட். பெங்களூருவில் ஓர் அபார்ட்மென்ட்டில் வசித்துவந்த அவர்கள் தளத்தை வடிவமைத்து, தொடக்கத்தில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டும் புத்தகங்களை விற்பனை செய்துகொண்டிருந்தனர். வாடிக்கையாளர்களுக்காகவும், ஆர்டருக்காகவும் அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?! OTDCNKjqSNeE4oInApL2+DB-eTdiVwAAzFFC_13312

அதே நேரத்தில், ஹைதராபாத் மாநகருக்கு சற்றுத்தொலைவில் இருக்கும் மகபூப்நகரில் வசித்துவந்த வி.வி.கே.சந்திரா, ஜான் வுட் எழுதிய 'லீவிங் மைக்ரோசாப்ட் டு சேஞ்ச் தி வேர்ல்ட்' (Leaving Microsoft to Change the World) என்ற புத்தகத்தை ஹைதராபாத் முழுவதும் தேடி அலைகிறார். தீவிர புத்தக வாசிப்பாளரான இவர், புத்தகங்கள் வாங்கவேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் 98 கி.மீ பயணித்து ஹைதராபாத் வரவேண்டும். மைக்ரோசாப்ட் பற்றிய புத்தகத்தை ஹைதராபாத் முழுக்க எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில்தான் சச்சின் பன்சால் என்பவரிடமிருந்து தனது ப்ளாக்கில் ஒரு கமென்ட் வருகிறது. ஆன்லைனில் புத்தகம் வாங்க எங்கள் தளத்திற்கு விசிட் அடியுங்கள் என ஒரு லிங்க் அந்த கமென்ட்டில் இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் சூடுபிடிக்காத காலகட்டம் அது. அந்தத் தளத்தை விசிட் அடிக்கும் வலைதள வடிவமைப்பாளரான சந்திராவுக்கு, அத்தளத்தின் வடிவமைப்பு நம்பிக்கை அளிக்கிறது. அவர் தேடும் அந்தப் புத்தகம் அத்தளத்தில் ஸ்டாக் இருப்பதைப் பார்த்த அவர், புத்தகத்தின் மதிப்பு 500 ரூபாய்தான் என்பதால், ரிஸ்க் எடுத்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்து, தனது கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்கிறார்.

நன்றி
விகடன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?! Empty Re: தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!

Post by SK Wed Mar 21, 2018 4:51 pm

வாடிக்கையாளருக்காகக் காத்துக்கொண்டிருந்த சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இருவருக்கும் சந்திராவின் ஆர்டரைப் பார்த்ததும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட். புத்தக விற்பனையாளரின் பழைய டேட்டாபேஸ் தங்கள் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. சந்திரா ஆர்டர் செய்த அந்தப் புத்தகம் விற்பனையாளரிடம் இல்லை. "நீங்கள் ஆர்டர் செய்த புத்தகம் எங்கள் விற்பனையாளரிடம் ஸ்டாக் இல்லை. மற்ற விற்பனையாளர்களிடம் நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்" என சந்திராவுக்கு ஒரு மெயில் அனுப்புகின்றனர். சந்திராவுக்கு இவர்களின் பதில் நம்பிக்கை அளிக்கிறது.

முதல் வாடிக்கையாளரின் நம்பிக்கையை எப்படியாவது வென்றுவிடவேண்டும் என நினைக்கும் அவர்கள், பெங்களூரு முழுக்க சல்லடை போட்டுத் தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. மும்பை, டெல்லி என எங்கெங்கோ கேட்டுப்பார்க்கிறார்கள். பெங்களூருவில் உள்ள ஒரு புத்தகக் கடையில் இவர்கள் தேடும் புத்தகம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும், பைக்கில் சென்று அங்கு தேடிப்பார்க்கிறார்கள். ஆனால், அந்தப் புத்தகம் எதிர்பார்த்த தரத்தில் இல்லை. பழையதாகி பழுப்பு நிறத்தில் இருக்கிறது. அவர்கள் நினைத்திருந்தால் சத்தமில்லாமல் அதை அனுப்பியிருக்க முடியும். ஆனால் வாடிக்கையாளரை ஏமாற்ற அவர்கள் விரும்பவில்லை. இருவரும் மீண்டும் மெயிலில் சந்திராவைத் தொடர்புகொள்கிறார்கள். "நீங்கள் தேடிய புத்தகம் எதிர்பார்த்த தரத்தில் இல்லை. என்ன செய்யலாம்?" என அவரிடமே கேட்கிறார்கள். மெயிலைப் படித்த சந்திராவுக்கு, இவர்களின் சேவை பிடித்துப் போகிறது. அதையே அனுப்பச்சொல்லி ரிப்ளை செய்கிறார்.

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?! RPKd7ywQWONS3Aq9rQqe+Chandra_B_13304

அதுவரை சொந்தக்காரர்களுக்கு மட்டுமே புத்தகம் விற்பனை செய்துகொண்டிருந்த பன்சால் நண்பர்கள், முதல் வாடிக்கையாளருக்கு நம்பிக்கையுடன் புத்தகத்தை அனுப்புகிறார்கள். இவர்களின் சேவை பிடித்துப்போன சந்திரா ஃப்ளிப்கார்ட் தளத்தில், பாசிட்டிவ்வாக கமென்ட் இடுகிறார். பின்நாளில் இந்தியாவில் முன்னிலை வகிக்கப்போகும் ஓர் ஆன்லைன் வர்த்தகத் தளத்தின் முதல் வாடிக்கையாளராக இருக்கப்போகிறார் என்பது, சந்திராவுக்கு அப்போது தெரிந்திருக்காது. இத்தளத்தின் தொடர் வாடிக்கையாளராகவே அவர் அதன்பின் மாறிப்போனார். தனது நண்பர்களுக்கும் ஃப்ளிப்கார்ட் தளத்தைப் பரிந்துரைக்க ஆரம்பிக்கிறார்.

ஃப்ளிப்கார்ட் தளத்தில் தற்போது 33,000 பேர் பணிபுரிகின்றனர். இத்தளத்தில் சுமார் 7.5 கோடிப்பேர் தற்போது பதிவுசெய்த வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். சுமார் 1160 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு இந்நிறுவனத்தின் சொத்துமதிப்பு கணக்கிடப்பட்டிருக்கிறது. தங்களின் முதல் வாடிக்கையாளரை இன்றும் மரியாதையுடன் நினைவுகூர்கிறது அந்நிறுவனம். தங்களது முதல் ஊழியரைத் தொடர்ந்து கவுரவிப்பிது, ஊழியர்களில் ஒருவரை ஒருநாள் சி.இ.ஓ-வாக நியமிப்பது வரை அந்நிறுவனம், மற்ற நிறுவனங்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிக்கிறது.

பிரபல வர்த்தக எழுத்தாளரான மைக்கேல் லிபோஃப், "திருப்தியடைந்த வாடிக்கையாளர் தாமாகவே உங்களை விளம்பரப்படுத்தத் தொடங்குவார்" எனச் சொல்லியிருப்பார். ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட பல வர்த்தக நிறுவனங்கள் இந்த வாசகத்தின் அடிப்படையில்தான் இன்று வெற்றிபெற்றிருக்கின்றன.


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum