ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

5 posters

Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by ayyasamy ram Mon Mar 19, 2018 9:53 am

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் 201803190245571145_Triangular-20-Over-CricketLast-ball-Beat-the_SECVPF
-
கொழும்பு,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான
பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில்
சிக்சர் அடித்து வெற்றிக்கனியை பறித்தது.

முத்தரப்பு கிரிக்கெட்

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள்
இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா
ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.

இதில் லீக் சுற்று முடிவில் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்
போட்டிக்கு முன்னேறின. இலங்கை அணி ஒரு வெற்றி,
3 தோல்வியுடன் பரிதாபமாக நடையை கட்டியது.

இந்த நிலையில் இந்த தொடரில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில்
இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. இந்திய அணியில்
ஒரே ஒரு மாற்றமாக முகமது சிராஜ் நீக்கப்பட்டு
ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டார்.

மிரட்டிய சுழல்


‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில்
வங்காளதேசத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி பேட்டிங்கை
தொடங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்கம் சிறப்பாக
அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டான் தாஸ் (11 ரன்)
வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சிலும், தமிம் இக்பால் (15 ரன்)
யுஸ்வேந்திர சாஹலின் சுழலிலும் ஆட்டம் இழந்தனர்.

தமிம் இக்பால் தூக்கியடித்த பந்தை ‘லாங் ஆன்’ திசையில்
எல்லைக்கோட்டுக்கு மிக அருகில் நின்ற ஷர்துல் தாகூர் சூப்பராக
பிடித்தார். சவுமியா சர்கார் (1 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம்
(9 ரன்) ஆகியோருக்கும் சாஹல் ‘செக்’ வைத்தார்.

அப்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களுடன் (10.1 ஓவர்)
பரிதவித்தது.

சுழற்பந்து வீச்சில் திணறிய வங்காளதேச பேட்ஸ்மேன்கள்,
இரு சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஓவர்களை வீசி முடித்ததும்
சுறுசுறுப்படைந்தனர். ஏனெனில் வேகப்பந்து வீச்சில் எந்த வித
நெருக்கடியும் இன்றி சவுகரியமாக அடித்து நொறுக்கினர்.

குறிப்பாக சபிர் ரகுமான் அதிரடி காட்டி ரன்ரேட்டை மளமளவென
உயர்த்தினார். விஜய் சங்கரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டார்.
இதற்கிடையே மக்முதுல்லா(21 ரன்), கேப்டன் ஷகிப் அல்-ஹசன்
(7 ரன்) ரன்-அவுட் ஆனார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty Re: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by ayyasamy ram Mon Mar 19, 2018 9:53 am


வங்காளதேசம் 166 ரன்

சாதுர்யமான ஷாட்டுகள் மூலம் இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’
காட்டிய சபிர் ரகுமான் 77 ரன்களில் (50 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்)
ஜெய்தேவ் உனட்கட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில், மெஹதி ஹசன்
ஒரு சிக்சர், 2 பவுண்டரி உள்பட 18 ரன்கள் திரட்டி, தங்கள் அணி
சவாலான ஸ்கோரை எட்டிப்பிடிக்க உதவினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேச அணி 8 விக்கெட்
இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.

ரோகித் சர்மா அரைசதம்


பின்னர் 167 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.
ஷிகர் தவான் (10 ரன்), அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (0) ஏமாற்றம்
அளித்தனர். இதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர்
கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலுடன் கூட்டணி அமைத்து
சரிவை தடுத்து நிறுத்தினார்.

ரன்ரேட்டையும் துரிதப்படுத்தியதால் ‘பவர்-பிளே’யான முதல்
6 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து நல்ல
நிலையில் இருந்தது.

ஆனால் லோகேஷ் ராகுலும் (24 ரன், 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்),
ரோகித் சர்மாவும் (56 ரன், 42 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) சிறிய
இடைவெளியில் வெளியேறியதும் இந்திய அணிக்கு நெருக்கடி
உருவானது.

திடீர் சிக்கல்

இதன் பின்னர் மனிஷ் பாண்டேவும், ஆல்-ரவுண்டர் தமிழக வீரர்
விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர். முக்கியமான கட்டத்தில்
ஆடிய விஜய் சங்கர் பதற்றத்தில் திகைத்து போனார்.

கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 35 ரன்கள்
தேவைப்பட்டது. 18-வது ஓவரை முஸ்தாபிஜூர் ரகுமான் வீசினார்.
அவர் வீசிய முதல் 4 பந்துகளை விஜய் சங்கர் அப்படியே
வீணடித்து கடுப்பேற்றினார். 5-வது பந்தில் ‘லெக்-பை’வகையில்
ஒரு ரன் கிடைத்தது. கடைசி பந்தில் மனிஷ் பாண்டே (28 ரன்)
கேட்ச் ஆனார். இந்த ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே கிடைத்ததால்
இந்திய அணி கரைசேருமா? என்ற கேள்வி எழுந்தது.

பாண்டேவுக்கு பிறகு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆட
வந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty Re: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by ayyasamy ram Mon Mar 19, 2018 9:54 am


‘ஹீரோ’ கார்த்திக்


கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 34 ரன்கள்
தேவைப்பட்டது. 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர்
ருபெல் ஹூசைன் வீசினார். இந்த ஓவரில் அமர்க்களப்படுத்திய
தினேஷ் கார்த்திக் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 22 ரன்கள் சேர்த்து
நெருக்கடியை வெகுவாக தணித்தார்.

இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 12 ரன்கள்
தேவையாக இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை சவுமியா சர்கார்
வீசினார். இந்த ஓவரை விஜய் சங்கர் சந்தித்தார்.

முதல் பந்து வைடாக வீசப்பட மறுபடியும் வீசப்பட்ட முதல் பந்தில்
ரன் இல்லை. அடுத்த பந்தில் சங்கர் ஒரு ரன் எடுத்தார். 3-வது
பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார்
. 4-வது பந்தை சந்தித்த விஜய் சங்கர் பவுண்டரி அடித்து ஆறுதல்
அளித்தார். ஆனால் அடுத்த பந்தில் சங்கர் (17 ரன், 19 பந்து) ஆட்டம்
இழந்தார்.

இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது.
உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் கடைசி பந்தை எதிர்கொண்ட
தினேஷ் கார்த்திக் அதை ‘கவர்’ திசையில் சிக்சருக்கு விரட்டி
அடித்து இந்திய ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.

இந்தியா சாம்பியன்


இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து
4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியோடு சாம்பியன்
கோப்பையை உச்சிமுகர்ந்தது. வியப்புக்குரிய வகையில் ஆடிய
தினேஷ் கார்த்திக் 29 ரன்களுடன் (8 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்)
களத்தில் இருந்தார்.
-
-----------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty Re: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Mar 19, 2018 10:18 am

கடைசி பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் அதை ‘கவர்’ திசையில் சிக்சருக்கு விரட்டி அடித்து இந்திய ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.
உண்மையோ உண்மை ... சிரி
கடைசி 2 ஓவர்களும் உச்சகட்ட பரபரப்பு என்றால் அது மிகையாகாது ...
தோற்பது சாதாரணம் தான் ஆனால் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் செய்யும் வெற்றி களிப்பினை தான் சகித்து கொள்ள முடிவதில்லை.. பாம்பு டேன்ஸ்.. ஆறுதல்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty Re: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by SK Mon Mar 19, 2018 11:49 am

இதே பங்களாதேஷ் அணி இந்தியாவிடம் ஒரு 20 ஓவர் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது நேற்று முன்தினம் தான் அந்த போட்டியின் ஹைலைட்ஸ் பார்த்தேன் நேற்று போட்டியில் இப்படி நடடக்கும் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty Re: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by ராஜா Mon Mar 19, 2018 2:59 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
கடைசி பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் அதை ‘கவர்’ திசையில் சிக்சருக்கு விரட்டி அடித்து இந்திய ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.
உண்மையோ உண்மை ... சிரி
கடைசி 2 ஓவர்களும் உச்சகட்ட பரபரப்பு என்றால் அது மிகையாகாது ...
தோற்பது சாதாரணம் தான் ஆனால் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் செய்யும் வெற்றி களிப்பினை தான் சகித்து கொள்ள முடிவதில்லை.. பாம்பு டேன்ஸ்.. ஆறுதல்
உண்மை தான் ரமேஷ் , வளரும் அணியான பங்களாதேஷ் அணியினர் வெற்றி பெற்றவுடன் பண்ணும் செயல்கள் அருவெறுப்பாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty Re: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by T.N.Balasubramanian Mon Mar 19, 2018 3:00 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
கடைசி பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் அதை ‘கவர்’ திசையில் சிக்சருக்கு விரட்டி அடித்து இந்திய ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.
உண்மையோ உண்மை ... சிரி
கடைசி 2 ஓவர்களும் உச்சகட்ட பரபரப்பு என்றால் அது மிகையாகாது ...
தோற்பது சாதாரணம் தான் ஆனால் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் செய்யும் வெற்றி களிப்பினை தான் சகித்து கொள்ள முடிவதில்லை.. பாம்பு டேன்ஸ்.. ஆறுதல்
மேற்கோள் செய்த பதிவு: 1262919

ரொம்பவும் உண்மை.
கடைசி ரெண்டு ஓவர் திக் திக் ........லப்டப் (இதயத்தின் சப்தம்)
நாம் தோக்கதான்போகிறோம் என்று கூட நினைத்தேன்.
சரி கடைசி பால் நன்றாக தூக்கி அடித்து 4 ரன் வந்தால் என்னாகும் என்ற நினைப்பு வேறு.
நல்லவேளை சிக்ஸர்.நிம்மதியாக தூங்கப்போனேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty Re: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Mar 19, 2018 4:21 pm

ராஜா wrote:உண்மை தான் ரமேஷ் , வளரும் அணியான  பங்களாதேஷ் அணியினர் வெற்றி பெற்றவுடன் பண்ணும் செயல்கள் அருவெறுப்பாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1262951
பாகிஸ்தான் அணி மீது கூட இது போன்ற ஒரு வெறுப்பு(அவர்கள் ஆட்டத்தினை ஒரு வகையில் பிடிக்கும் என்று கூட சொல்லலாம்)   ஏற்பட்டதில்லை அண்ணா ... ஆனால் இவர்களை பார்த்தால் வெறுப்பு தான் வருகிறது அவர்களின் செயல்களால் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

T.N.Balasubramanian wrote:
ரொம்பவும் உண்மை.
கடைசி ரெண்டு ஓவர் திக் திக் ........லப்டப் (இதயத்தின் சப்தம்)
நாம் தோக்கதான்போகிறோம் என்று கூட நினைத்தேன்.
சரி கடைசி பால் நன்றாக தூக்கி அடித்து 4 ரன் வந்தால் என்னாகும் என்ற நினைப்பு வேறு.
நல்லவேளை சிக்ஸர்.நிம்மதியாக தூங்கப்போனேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262952

நானும் அதே தான் ஐயா எதிர்பார்த்தேன்...  சிரி நல்ல வேலை சங்கரையும் இந்திய அணியையும் கார்த்தி காப்பாற்றி விட்டார் ... நடனம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன் Empty Re: முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
»  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
» நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum