ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதைகள்

+5
பழ.முத்துராமலிங்கம்
krishnaamma
SK
ஜாஹீதாபானு
ayyasamy ram
9 posters

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty ஒரு பக்கக் கதைகள்

Post by ayyasamy ram Thu Nov 24, 2016 7:10 am

First topic message reminder :

உதவி - ஒரு பக்க கதை

ஒரு பக்கக் கதைகள் - Page 7 W5W5yJLfS6CtPTpMqpvA+8
-
‘டமால்..!’ என்று சத்தம் கேட்டது.
பஸ் ஸ்டாப்பில் தனியே ஓரமாக நின்று கொண்டிருந்த
திருஞானம் திரும்பிப் பார்த்தான். ஸ்கூட்டியில் வந்த
ஒரு இளம் பெண், மணலில் சறுக்கி கீழே விழுந்து
கிடந்தாள்.

கூடியிருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உதவலாமா? வேண்டாமா? என்று இருமனதுடன் தவித்துக்
கொண்டிருந்தான் திருஞானம்.

உதவி எதிர்பார்த்து, கிடைக்காத அவள் தானாகவே எழுந்து
ஸ்கூட்டியை எடுத்தாள். நல்ல சிராய்ப்பு. வண்டியைத் தள்ளிக்
கொண்டு, பஸ் ஸ்டாப்பில் நிற்கும் இவனிடம் நேராக வந்தாள்.

‘‘அதான் விழுந்ததை பார்த்தீங்கல்ல! ஹெல்ப் பண்ணலாம்ல!
அதுக்கு கூடவா மனசில்லாம போயிருச்சு!’’ சற்று கோபத்தோடு
கேட்டாள்.

‘‘ஸாரிங்க! இதே போலத்தான், போன மாசம் ஒரு பொண்ணு
சைக்கிள்ல இருந்து விழுந்தா!

எல்லாரும் சும்மா இருக்க, நான் மட்டும் ஓடிப் போய் தூக்கினேன்!
ஆனா அந்தப் பெண்ணோ, ‘நோ! தேங்க்ஸ்! நானே
பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டா! எல்லாரும் சிரிச்சுட்டாங்க!
எனக்கு அசிங்கமா போச்சு! அதுனால யாரும் கேக்காம
ஹெல்ப்புக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்!’’
என்றான்.

‘‘ரொம்ப ஸாரி சார்!’’ என்றாள் அந்தப் பெண்.
‘‘நீங்க எதுக்குங்க ஸாரி சொல்றீங்க!’’

‘‘அன்னைக்கு ‘வேண்டாம்’னு சொன்னது, நான்தான்!’’

—————————————————

-ரவிக்குமார்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by ஜாஹீதாபானு Sat Aug 18, 2018 6:15 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 3838410834 ஒரு பக்கக் கதைகள் - Page 7 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by சிவனாசான் Sat Aug 18, 2018 7:02 pm

உஷார் மருமகள் ஒருபக்க கதை இல்லையோ!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by சிவனாசான் Sun Aug 19, 2018 3:02 pm

அய்யா நல்லதைத்தான் தேர்வுசெய்து காப்பி செய்துவருகிறார்.
அவரின் சுயசிந்தனை கருத்தை வெளிப்படுத்தவில்லையே......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty தப்பா – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Thu Aug 23, 2018 7:35 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Img_1098
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by சிவனாசான் Thu Aug 23, 2018 8:27 pm

நாட்ல இப்போ எல்லாமே இப்படித்தான் நடிக்கிறார்கள்.
குறுக்கு வழி பாதையில் பணம்சேர்க்கிறார்கள். ஒரு
பக்க கதை தப்பே இல்லைங்க .நல்ல கதைதான்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by SK Fri Aug 24, 2018 12:02 pm

எனக்கு அப்படி ஒரு மாமனார் கிடைக்கவில்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by ஜாஹீதாபானு Fri Aug 24, 2018 5:10 pm

ஹாஹா அது சரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty தோஷம் - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Tue Sep 04, 2018 5:15 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 26
-
வசந்திஅழுகையுடனே துணி துவைத்தாள்.
‘‘என்னடி ஆச்சு..?’’ – பக்கத்து வீட்டு மாமி கேட்டாள்.

‘‘அம்மாரொம்ப சீரியஸா இருக்காங்களாம் மாமி.
அண்ணன் போன் பண்ணினான்.’’

‘‘கிளம்பிப்போக வேண்டியதுதானேடி..! அழுதுட்டு
இருக்கே..? வழக்கம் போல உன் மாமியார்க்காரி
அனுப்பமாட்டேன்னுட்டாளா?’’

‘‘ஆமாம் மாமி.

‘உன் அம்மாவுக்கு எப்பவுமே இப்படித்தான்.
அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.
நீ வேலையைப்பாரு’ன்னுட்டாங்க. ஆனா, எப்பவும்
மாதிரி இல்ல மாமி. ‘இந்த தடவை ரொம்ப சீரியஸ்
உடனே வா’ன்னுஅண்ணன் அழுதுட்டே சொன்னான்!’’
– விசும்பலாகச் சொன்னாள் வசந்தி.

‘‘ப்ச்…விடு, எல்லாம் கடவுள் பார்த்துப்பார்!’’
எனக் கடந்து போனாள் மாமி.சற்றுநேரத்துக்கெல்லாம்
வசந்தியின் மாமியார் வந்தாள்.

‘‘வசந்தி… ஏதோ நட்சத்திர தோஷமாம்.
பொண்ணுங்கள அவஅவ பிறந்தவீட்டுக்கு
அனுப்பிடணுமாம்.

இல்லைன்னா வீட்ல இருக்கிற ஆம்பிளைக்கு ஆகாதாம்.
இப்பத்தான்பக்கத்து வீட்டு மாமி சொல்லிட்டுப் போறா.
உன் அம்மாவுக்கு வேற உடம்பு முடியலையே…
உன் வீட்டுக்காரன்கிட்ட கூட நான் சொல்லிக்கறேன்.
நீ உடனே புறப்படு!’’ என்றாள் மாமியார்.வசந்தி

மனதார நன்றி தெரிவித்தாள், கடவுளுக்கல்ல…
பக்கத்து வீட்டு மாமிக்கு!

——————————–
ச.மணிவண்ணன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty அரை உப்பு – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Tue Sep 04, 2018 5:16 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 27
-
காலை ஆறு மணி… கண்ணன் டீ ஸ்டால்…சரக்கு மாஸ்டர்
சங்கரன் டேஸ்ட் பார்க்கக் கொடுத்த முதல் வடையை
வாயில் போட்டார் முதலாளி கண்ணப்பன்.

ஏதோ சொல்ல வந்தவர், கடையில் பெருகியிருந்த
கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘‘நல்லா இருக்கு சங்கரா…
சீக்கிரம் முதல் செட் மாவைப் போட்டு எடு!’’ என்றார்.

அடுத்த இருபது நிமிடத்தில் நூற்றுக்கணக்கான
மெதுவடைகள் தயாராகி, எட்டு மணிக்குள் விற்றுத்
தீர்ந்தன.

எதேச்சையாக மீந்துபோன ஒரு வடையை தனது டீயுடன்
சுவைத்த சங்கரன் பதற்றத்துடன் ஓடி வந்தார்
முதலாளியிடம்.‘‘அய்யா… வடையிலே இன்னிக்கு அரை
உப்பா போச்சுது. மன்னிச்சுக்குங்க.!’’

‘‘பதறாதே சங்கரா… மொதல் வடையிலயே இதை நான்
கண்டுபுடிச்சிட்டேன். ஆனா, காலையில வந்த
கூட்டமெல்லாம் ஐம்பது வயசைக் கடந்தவங்க.

வாக்கிங் முடிச்சு வந்தவங்க. அவங்களுக்கு அரை உப்பு
இருந்தா நல்லதுதான். ஆனா, அடுத்த செட் மாவுல உப்பை
சரியா போட்டுரு. இல்லாட்டி ஸ்கூல் பசங்க,
காலேஜ் பசங்ககிட்ட நாம திட்டு வாங்க முடியாது… ஆமா!’’
என்றார் கண்ணப்பன்.

அந்தக் கடையின் வெற்றி ரகசியம் மாஸ்டருக்கு இப்போது
புரிந்தது..

——————————-
எஸ்.எஸ்.ராஜேஷ்
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty அடையாளம் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Tue Sep 04, 2018 5:17 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 28
-
‘‘வீட்டை அழகா மெயின்டெய்ன் பண்றீங்க மாமி…’’

‘‘நன்றிம்மா… நீங்கதான் பக்கத்து வீட்டுக்குக் குடி
வந்திருக்கீங்களா..?’’

‘‘ஆமாம் மாமி… வீட்டைச் சுத்தி தோட்டம் இருக்கு
போலிருக்கே!’’

‘‘ஆமா… சும்மா புல்லு மண்டிக் கிடந்துச்சு. நான்தான்
சுத்தம் பண்ணி வேலி அடைச்சு காய்கறி
விதையெல்லாம் போட்டேன்… இந்த மண்ணுக்கு எது
போட்டாலும் உடனே முளைக்குதும்மா!’’

‘‘சின்னதா இருந்தாலும் உங்க வீடு அழகா இருக்கு…’’

‘‘அட… இது என் வீடு இல்லேம்மா… நாங்களும் உங்களை
மாதிரி வாடகைக்குத்தான் குடியிருக்கோம்.. மூணு
மாசத்துக்கு முந்திதான் குடிவந்தோம்… இப்ப என்
வீட்டுக்காரருக்குத் திரும்பவும் வெளியூருக்கு
ட்ரான்ஸ்ஃபர். அடுத்த மாசம் காலி பண்ணிடுவோம்!’’

‘‘என்னது… வாடகையா? தோட்ட வேலையே பின்னி
எடுக்கும்… நீங்க ஜன்னல் கம்பி வரைக்கும் துடைச்சு
கிளீனா வச்சிருக்கீங்க. காலி பண்ணப் போற வீட்டுக்கா
இவ்வளவு மெனக்கெடுறீங்க?’’

‘‘எந்த இடமும் நாம வர்றப்ப இருந்ததைவிட போறப்ப
நல்லா இருக்கணும். திருட வர்றவங்கதான் வந்ததுக்கு
எந்த அடையாளமும் இருக்கக் கூடாதுனு நினைப்பாங்க.
நாமெல்லாம் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திட்டுப்
போகணும்…’’

‘பெற்றுக்கொள்வதால் அல்ல, விட்டுச்செல்வதால்
கிடைப்பதே புகழ்’ எனப் புரிந்தது பக்கத்து வீட்டுப்
பெண்ணுக்கு.

—————————————

தஞ்சை தாமு
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum