ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !

2 posters

Go down

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Empty சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !

Post by sugumaran Tue Feb 20, 2018 9:27 pm

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் ஆட்சி மிகவும் முக்கியத்துவமான ஒன்று. அவர்கள் சிதம்பரம் கோவிலைப் போற்றி வந்தனர் .
தலை நகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றும் வரை இடைக்காலத்தில், 1014ம் ஆண்டு முதல் 1022ம் ஆண்டு வரை சோழ மன்னர்களின் குல தெய்வமான நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து தற்காலிக தலைநகராக ஆட்சி செய்தான் ராஜேந்திரசோழர் எனவும் கூறாப்படுகிறது .
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டினை கண்டெடுத்துள்ளனர்.
கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்ததாவது:
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குள படிக்கட்டில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. முதலாம் பராந்தகன், சோழ தேசத்தை கிபி 907-953 வரை ஆண்ட மன்னனாவான். இவனே தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த பெருமைக்குரியவன். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப்பெயர் இருந்தது. முதலாம் பராந்தகம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரநாராயணஏரியை உருவாக்கி சோழ நாட்டை தன்னிகரில்லா மண்டலமாக மாற்றிய பெருமைக்குரியவனர். தற்போகு வீராணம் ஏரி என அழைக்கப்படுகிறது.
இவனால் வெளியிடப் பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டே தற்போதைய நவீன ஊராட்சி முறைக்கு அடித்தளமிட்டது எனலாம். இத்தகைய பெரும் வாய்ந்த முதலாம் பராந்தகன் தில்லை நடராஜர் கோயிலுக்கு பல்வேறான அறக்கொடைகளை வழங்கி உள்ளான். காலப்போக்கில் கல்வெட்டுகள் அயலவர் படையெடுப்புகளால் அழிந்தமையால், எஞ்சிய கல்வெட்டுகளே பராந்தகனின் சிறப்பை பறை சாற்றுகின்றன.
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் காணப்படும் படிக்கட்டு வரிசையில், கீழிருந்து மூன்றாவது படிக்கட்டில் இரண்டாக உடைந்த நிலையில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் முதல் வரியில் கோப்பரகேசரி என்ற சொல்லை மட்டுமே வாசிக்க முடிகிறது. எஞ்சிய சொற்களை படிக்க இயலாத வண்ணம் சிதைந்துள்ளது. கல்வெட்டின் ஏனைய வரிகள் ஸ்ரீ உத்திர மாணிக்கபுரத்து வியாபாரி ஒருவர் வண்ணக்கர் மற்றும் நம்பிமாருக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வண்ணக்கர் என்பது சலவை தொழிலாளியையும், வண்ண சித்திரங்கள் வரையும் கலைஞனையும் கல்வெட்டு சொற்கள் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதி வரியில் கிரந்த எழுத்தில் பன்மஹெஷ்வர ரகைூ என பொறிக்கப்பட்டுள்ளது. பன்மஹெஷ்வர ரகைூ என்பது சிவன் கோவில்களில் அமைக்கபட்ட அறச்செயல்களை சிவனடியார்கள் காப்பார்களாக என்று வேண்டுவதாகும். இக்கல்வெட்டில் பரகேசரி என்று குறிக்கப்படுவதை கொண்டும், மொழிநடை கொண்டும் முதலாம் பராந்தகனின் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் வெளியிட்டதே எனலாம்.
முகலாம் ராஜராஜ சோழனுக்கு முப்பாட்டனான முதலாம் பராந்தகன் காலத்திலேயே தில்லை திருக்கோயில் அரசர், வணிகர் என அனைவரும் போற்றும் திருக்கோயிலாக இருந்து வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அக்கல்வெட்டு தில்லை நடராஜர் கோயிலில் இடம் பெற்றிருந்த கல்வெட்டாகும். பிற்காலத்தில் நடைபெற்ற தெப்பக்குள புணரமைப்பு பணியின்போது, இக்கல்வெட்டு இங்கு இடம் பெயர்ந்துள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து காணப்படுவதால், ஆட்சியாண்டு குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இத்தெப்பக்குளத்தில் மேலும் சில கல்வெட்டுகள் படிக்கட்டுகளில் காணப்படுகிறது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
இந்த செய்தி July 28, 2014 அன்று தினகரன் செய்தித்தாளில் வந்தது .
இன்னம் சில சமீபத்திய சிதம்பரம் குறித்து அடுத்து எழுதுசிரேன் .
அண்ணாமலை சுகுமாரன்
15/2/18
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Empty Re: சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !

Post by SK Wed Feb 21, 2018 1:28 pm

அருமையான தகவல்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834 சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834 சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum