ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

+4
krishnanramadurai
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Tue Feb 20, 2018 1:47 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Fri Mar 02, 2018 6:06 am

இனி வெண்பாவில் பயின்று வரும் சீர்களைப்பற்றிப் பார்ப்போம் .

வெண்பாவில் மாச்சீர் , விளச்சீர் , காய்சசீர் ஆகிய சீர்கள் பயின்று வரும் . அதாவது தேமா, புளிமா , கருவிளம் , கூவிளம் ஆகிய ஈரசைச் சீர்களும் , தேமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் , புளிமாங்காய் ஆகிய மூவசைச் சீர்களும் பயின்று வரும் .

நேர் நேர் > தேமா
நிரை நேர் > புளிமா
நிரை நிரை > கருவிளம்
நேர் நிரை > கூவிளம்

நேர் நேர் நேர் > தேமாங்காய்
நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நேர் நிரை நிரை > கூவிளங்காய்
நிரை நேர் நேர் > புளிமாங்காய்

வெண்பாவில் கனிச்சீர் வராது . இனி ஒரு குறள் வெண்பாவை எப்படி இயற்றுவது என்று பார்ப்போம் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Fri Mar 02, 2018 1:02 pm

ஈரசைச்சீர் , இயற்சீர் என்றும் , ஆசிரியச்சீர் என்றும் அழைப்பார்கள் . ஆசிரியப்பாவில் ஈரசைச்சீர் அதிகம் வருவதால் , ஈரசைச்சீரை ஆசிரியச்சீர் என்று அழைப்பார்கள் .

ஒரு குறட்பாவில் ஏழு சீர்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும் . நின்றசீர் இறுதியில் நேரசை இருந்தால் , வரும் சீரின் முதலில் நிரையசை வரவேண்டும் . நின்றசீரின் இறுதியில் நிரை வந்தால் , வரும் சீரின் முதலில் நேர் வரவேண்டும் . நின்றசீர் காய்ச்சீராக இருந்தால் , வரும்சீரின் முதலில் நேர் வரவேண்டும் .

சுருக்கமாக

மா முன் நிரை
விள முன் நேர்

வரவேண்டும் . இதை இயற்சீர் வெண்டளை என்பார்கள் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .

எல்லோரும் வெண்பா எளிதில் எழுதலாம்
நில்லாமல் இன்றே தொடங்கு .


இந்தக் குறட்பாவில்

எல்லோரும் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
வெண்பா > நேர் நேர் > தேமா

காய் முன் நேர் வருவது காண்க .

வெண்பா > நேர் நேர் > தேமா
எளிதில் > நிரை நேர் > புளிமா

மா முன் நிரை வருவது காண்க .

எளிதில் > நிரை நேர் > புளிமா
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்

மா முன் நிரை வருவது காண்க

எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்

விள முன் நேர் வருவது காண்க .

நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
இன்றே > நேர் நேர் > தேமா

காய் முன் நேர் வருவது காண்க .

இன்றே > நேர் நேர் > தேமா
தொடங்கு .> பிறப்பு என்னும் வாய்ப்பாடு

மா முன் நிரை வந்தது .

இவ்வாறு பல குறட்பாக்களை எழுதிப் பழகினால் முழு வெண்பா எழுதுவது எளிதாகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Guest Fri Mar 02, 2018 9:40 pm

முத்துராமலிங்கம் ஐயாவின் பதிவில் வாய்பாடு பற்றி பார்த்தேன்.ஒன்றும் புரியவில்லை. இப்போது விளக்கம் சற்றே புரிகிறது.

முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.

அசை பிரித்தல்

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் 
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

பண்பிலான்>பண்+பிலான் - நேர் நிரை
பெற்ற>பெற்+ற – நேர் நேர்
பெருஞ்செல்வம்>பெருஞ்+செல்+வம் - நேர் நேர் நேர்
நன்பால்>நன்+பால் - நேர் நேர்
கலந்தீமை>கலந்+தீ+மை -நேர் நேர் நேர்
யாற்றிரிந்>யாற்+றிரிந் - நேர் நேர்
தற்று>தற்+று - நேர் நேர் - காசு


களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .

களித்தானைக்>களித்+தா+னைக் -நிரை நேர் நேர்
காரணம்>கா+ரணம் -நேர் நிரை
காட்டுதல்>காட்+டுதல் -நேர் நிரை
கீழ்நீர்க்>கீழ்+நீர்க் - நேர் நேர்
குளித்தானைத்>குளித்+தா+னைத் -நிரை நேர் நேர்
தீத்துரீஇ>தீத்+துரீ+இ -நேர் நேர் நேர்
யற்று>யற்று - காசு

நன்றி.
avatar
Guest
Guest


Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Sat Mar 03, 2018 6:16 am

பெருஞ்செல்வம் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கலந்தீமை > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
யாற்றிரிந் > நேர் நிரை > கூவிளம்
தற்று > காசு

காரணம் > நேர் நிரை > கூவிளம்
தீத்துரீஇ > நேர் நிரை நேர் > கூவிளங்காய்

தாங்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன் . இரண்டு குறில்கள் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை . குறில் நெடில் இணைந்து வந்தாலும் நிரையசையாகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Guest Sat Mar 03, 2018 1:27 pm

நன்றி ஐயா.
தனிக் குறில் (க-ப….) சீரின் தொடக்கத்தில்,நடுவில்,இறுதியில் எங்கே தனியாக வரலாம்?

ஐ எழுத்து (கை,நை….னை..) எங்கே தனியாக வரலாம்?
புதிதாக தேமாங்காய்…...என்றெல்லாம் சொல்கிறீர்களே.அவற்றை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அசை பிரித்தால் போதாதா?
avatar
Guest
Guest


Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Sun Mar 04, 2018 7:09 am

தனிக்குறில் ஒரு சீரின் கடைசியில்தான் வரும் ; மற்ற இடங்களில் ஒற்றடுத்து வரும் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .

என்ற குறட்பாவில்

அக / ர > தனிக்குறில் இறுதியில் வந்தது .
முத / ல > தனிக்குறில் இறுதியில் வந்தது .
எழுத் / தெல் / லாம் > தனிக்குறில் இடையில் ஒற்றடுத்து வந்தது .
ஆ / தி > தனிக்குறில் இறுதியில் வந்தது .
பக / வன் . தனிக்குறில் இறுதியில் ஒற்றடுத்து வந்தது .

கைநாட்டு > கை / நாட் / டு - சொல்லின் முதலில் கை வந்தது .

( க் + ஐ = கை )

வாழ்க்கை > வாழ்க் / கை - சொல்லின் இறுதியில் கை வந்தது .

சீர்களை இனம் கண்டு கொள்வதற்காகப் பெயர் வைக்கப்படுகிறது .

உதாரணமாக

நேர் நேர் > தேமா எனப்படும் . " தேமா " என்ற சொல்லை அசை பிரித்தாலே நேர் நேர் என்று வரும்
இதுபோல இரண்டு சீர் மற்றும் மூன்று சீர்களுக்குக் காரண காரியத்தோடு பெயரிட்டுள்ளனர் என்பதை அறியவேண்டும் .

தேமாங்காய் என்ற சொல் நேர் நேர் நேர் என்று வருகின்ற சொல்லைக் குறிக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Sun Mar 04, 2018 7:25 am

மூர்த்தி wrote:

முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.

.
மேற்கோள் செய்த பதிவு: 1261068

நீச்சல் தெரிந்தபின் நீந்துவோம் என்னாது
மூச்சடக்கி ஆற்றில் குதி .

பொருள் : நீச்சல் தெரிந்துகொண்டு நீந்துகிறேன் என்று சொன்னால் , நீச்சலைக் கற்றுக்கொள்ளவே முடியாது . ஆற்றிலே குதித்துதான் நீச்சலைக் கற்றுக்கொள்ள வேண்டும் .

அதுபோல தமிழிலக்கணம் கற்றுக்கொண்ட பிறகு யாப்பிலக்கணம் கற்றுக்கொள்கிறேன் என்றால் , செய்யுள் இலக்கணம் கற்றுக்கொள்ள முடியாது .

யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ளும்போதே , தமிழிலக்கணமும் கற்றுக் கொள்ளலாம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Sat Mar 10, 2018 8:09 am

பட்டப் பகலில் பருவப்பெண் கத்தியால்
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .

இந்தக் குறட்பாவில்

பட் / டப் > நேர் நேர் > தேமா
பக / லில் > நிரை நேர் > புளிமா
பரு / வப் / பெண் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கத் / தியால் > நேர் நிரை > கூவிளம்
வெட் / டிக் > நேர் நேர் > தேமா
கொலை / யுண் / டாள் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
நேற்று > நேர்பு என்னும் வாய்ப்பாடு .

முதல் சீரும் மூன்றாம் சீரும் மோனை நயம் பெற்றும் , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றும் வந்துள்ளது .

என்று வெண்பா இலக்கணம் பயின்று வந்துள்ளது .
மா முன் நிரை
விள முன் நேர் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by T.N.Balasubramanian Sat Mar 10, 2018 12:13 pm

இதற்கு பெயர் "நடப்பு குறட்பாவோ" ??

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Sat Mar 10, 2018 12:43 pm

ஆம் ஐயா !

இப்படியும் குறட்பா மீது மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum