ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

+4
krishnanramadurai
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Tue Feb 20, 2018 1:47 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Thu Feb 22, 2018 6:59 am

அடுத்து இரண்டு குறட்பாக்களை எவ்வாறு இணைத்து ஒரு நேரிசை வெண்பாவை உருவாக்கலாம் என்று பார்ப்போம் .

முதலில் ஒத்த கருத்துடைய இரண்டு குறட்பாக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் . இரண்டு பாக்களையும் இணைப்பதற்கு ஒரு தனிச்சொல் சேர்க்கவேண்டும் . முதல் குறட்பாவின் ஈற்றுச் சீரில் சிறிது மாற்றம் செய்யவேண்டும் . அவ்வளவுதான் .

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்றார் - பொற்கொடியே !
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் .

இங்கு சேர்க்கப்பட்ட தனிச்சொல் " பொற்கொடியே " என்பதாகும் . முதல் குறட்பாவின் ஈற்றுச் சீரான ' தக " என்பது " தகவென்றார் " என்று மாற்றப்பட்டுள்ளது .

கற்க , நிற்க , பொற்கொடியே - இந்த மூன்று சொற்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றுள்ளது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 22, 2018 9:42 am

மூர்த்தி மற்றும் ஜெகதீஷ்
உரையாடல் ஆரோக்கியமானது.
யாப்பிலக்கணம் விளக்கம் அருமை.
நிறைய விஷயங்கள் ஜெகதீஷ்
வழங்கி உள்ளார்.
நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by T.N.Balasubramanian Thu Feb 22, 2018 9:46 am

ஒரு நாள் வராதிருந்தால் இவ்வளவு பதிவுகள் /மறுமொழிகள்.
உங்கள் அர்த்தமுள்ள பதிவுகள், ஈகரை உறவுகளை ஈர்க்கின்றன
எனத் தெரிகிறது.
நான் இல்லாத போது எனக்கு பிடித்தமான ஜாங்கிரி லட்டு
அல்வா அதிரசம் முதலானவைகளை பரிமாறியுள்ளீர்.

தொடருங்கள் MJ

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Guest Thu Feb 22, 2018 11:58 am

குறட்பா இணைப்பு புரிந்து கொண்டேன். சும்மாவெல்லாம் நினைத்தபடி இணைக்க முடியாது என்பதும் தெரிந்து கொண்டேன்.அதற்கு முன் முந்தைய பதிவில் ஒரு கேள்வி.

நன்றி ஐயா. கவிதை சொல்ல வந்த உங்களை கேள்வி கேட்டு தொல்லை கொடுக்கிறேன்.பொறுத்துக் கொள்ளவும்.

ஈதுவரை நீங்கள் சொல்லியதை வைத்து பார்த்தால்………….
தமிழ் எழுத்துகளை வைத்து உருவானது அசை,அசைகளால் ஆனது சீர்,சீர்களால் ஆனது அடி,அடிகளால் ஆனது பாடல். சரியாக வருகிறதா?

தொடர முன்னர் சந்தேகம் . அசைகளை உடையது சீர் என புரிந்து கொள்கிறேன். அசையில் எப்படி சொல்லைப் பிரிப்பது? விதிமுறை உண்டா? உதாரணமாக பாலும் = பா+லும் . பிரிக்கும் போது பொருள் வர பிரிக்க வேண்டுமா? ஓசையை வைத்து பிரிக்க வேண்டுமா? ஏன் பால் +உம் எனப் பிரிக்கக் கூடாது.
தெளிதேனும் = தெளி+தே+னும் இப்படிப் பிரியுமா?

ஈரசைச்சீர்,மூவசைச்சீர் சரிதான். ஓரசைச்சீர் -அ,ஆ, இப்படி தனி எழுத்துகள் மட்டும் வருமா?

மீண்டும் நன்றி ஐயா.
avatar
Guest
Guest


Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Guest Thu Feb 22, 2018 12:28 pm

அப்பாவுடன் ஒரு டிஸ்கசன் போயிற்று - இப்போதுதான். அவர் எங்கோ இணையத்தில் படித்ததை சொல்லி ஒரு குண்டைப் போடுகிறார்.நான் வருமுன் ஒரு இணையப் பக்கத்தில் படித்ததாக சொல்கிறார்.

முன்னர் சொல்லியது போல், எழுத்து-அசை-சீர்-அடி-பா.
அதைவிட சீருடன் தளை,தொடை என வருகிறதாமே அவை என்ன? வெண்பாவிலா அல்லது எல்லா செய்யுளிலுமா?

நன்றி.

பொறுத்துக் கொள்ளவும்.அப்பா கொஞ்சம் இல்லை கொஞ்சம் அதிகமாகவே தமிழில் வீக்.
avatar
Guest
Guest


Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Thu Feb 22, 2018 1:12 pm

பஃறொடை வெண்பா என்பது நான்கு அடிகளுக்கு மேற்பட்டு வரும் . இதன் மேல் எல்லை 12 அடிகள் வரையில் போகலாம் என்று கூறுவர் . இதில் தனிச்சொல் வராது .ஒரு எதுகையோ அல்லது பல எதுகையோ வரலாம் . இந்த வெண்பா அவ்வளவாக புழக்கத்தில் இல்லை .

சரி உங்கள் கேள்விக்கு வருகிறேன் .

முதலில் நேரசை , நிரையசை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் .
குறில் தனித்து வந்தாலோ , ஒற்றடுத்து வந்தாலோ
நெடில் தனித்து வந்தாலோ , ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும் .

குறில் இணைந்து வந்தாலோ , குறிலிணை ஒற்றடுத்து வந்தாலோ
குறிலும் நெடிலும் சேர்ந்து வந்தாலோ நிரையசை எனப்படும் .

பா / லும் > நேர் நேர் > தேமா
தெளி / தே / னும் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
பா / கும் > நேர் நேர் > தேமா
பருப் / புமி / வை > நிரை நிரை நேர் .> கருவிளங்காய்

நா / லும் > நேர் நேர் > தேமா
கலந் / துனக் / கு > நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நான் / தரு / வேன் > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
கோ / லம் / செய் > நேர் நேர் நேர் > தேமாங்காய்

துங் / கக் > நேர் நேர் > தேமா
கரி / முகத் / துத் > நிரை நிரை நேர் > கருவிளங்காய்
தூ / மணி / யே > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
நீ / யெனக் / குச் > நேர் நிரை நேர் > கூவிளங்காய்

சங் / கத் > நேர் நேர் > தேமா
தமிழ் / மூன் / றும் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
தா > நேர்

வெண்பாவில் நின்ற சீர் தேமா , புளிமா என்றால் வரும் சீர் முன்பாக நிரையசை வரவேண்டும் . அதாவது மா முன் நிரை வரவேண்டும் . அதேபோல

நின்றசீர் கூவிளம் , கருவிளம் என்று இருந்தால் , வரும் சீர் முன்பாக நேரசை வரவேண்டும் .
அதாவது விள முன் நிரை வரவேண்டும் .

மா முன் நிரையும் , விளமுன் நேரும் வந்தால் இயற்சீர் வெண்டளை எனப்படும் .
மூன்று அசைகள் கொண்ட காய்ச்சீர் முன்பாக நேர் வரவேண்டும் . இவ்வாறு வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .

மா முன் நேர் வந்தாலோ , விளமுன் நிரை வந்தாலோ வெண்பா இடர்ப்படும் . இதைத் தளை தட்டல் என்று கூறுவர் .

வெண்பாவின் இறுதிச் சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் முடியவேண்டும் .

சுருக்கமாகக் கூறியுள்ளேன் . வெண்பா இலக்கணம் பயில விரும்புவோர் சொந்தமாக ஒரு திருக்குறளை எழுதிப் பழகவேண்டும் .

இறுதியாக உங்கள் கேள்விக்கு விடையளிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே . இந்த விளக்கம் பலருக்கும் பயன்படுமே !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Fri Feb 23, 2018 6:08 am

மூர்த்தி wrote:அப்பாவுடன் ஒரு டிஸ்கசன் போயிற்று - இப்போதுதான். அவர் எங்கோ இணையத்தில் படித்ததை சொல்லி ஒரு குண்டைப் போடுகிறார்.நான் வருமுன் ஒரு இணையப் பக்கத்தில் படித்ததாக சொல்கிறார்.

முன்னர் சொல்லியது போல், எழுத்து-அசை-சீர்-அடி-பா.
அதைவிட சீருடன் தளை,தொடை என வருகிறதாமே அவை என்ன? வெண்பாவிலா அல்லது எல்லா செய்யுளிலுமா?

நன்றி.

பொறுத்துக் கொள்ளவும்.அப்பா கொஞ்சம் இல்லை கொஞ்சம் அதிகமாகவே தமிழில் வீக்.
மேற்கோள் செய்த பதிவு: 1260276


செய்யுள் உறுப்புகள்
=====================

செய்யுள் உறுப்புகள் ஆறுவகைப்படும்.அவை

எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை ஆகியன வாகும்.

எழுத்து

ஓரு மொழியின் அடிப்படை உறுப்பு எழுத்து ஆகும்.
அசை

எழுத்துகள் தனித்தோ,இணைந்தோ தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அது அசை எனப்படும்.
அசை இரு வகைப்படும்.

நேரசை
நிரையசை

சீர்

அசைகள் ஒன்றோ,இரண்டோ,மூன்றோ,நான்கோ இயைந்து நிற்பது சீராகும்.இது நான்கு வகைப்படும்.

நேர் நேர்
நிரை நேர்
நிரை நிரை
நேர் நிரை

தளை

சீர்கள் ஒன்றுடன் ஒன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது தளை எனப்படும்.தளை நான்கு வகைப்படும்.

ஆசிரியத்தளை
வெண்டளை
கலித்தளை
வஞ்சித்தளை

அடி வகைகள்

குறளடி
சிந்தடி
அளவடி
நெடிலடி
கழி நெடிலடி

தொடை வகைகள்

மோனைத் தொடை
எதுகைத் தொடை
முரண் தொடை
இயைபுத் தொடை
அளபெடைத் தொடை


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Fri Feb 23, 2018 6:15 am

அடுத்து ஒரு இன்னிசை வெண்பாவைப் பார்க்கலாம் .

உழைப்பை மறந்தோம் .
========================
அம்மிக்கல் ஆட்டுக்கல் அத்தனையும் நாம்மறந்தோம்
சும்மா யிருக்கும் சுகமே பெரிதென
எண்ணியதால் எல்லாம் இயந்திரங்கள் செய்யுதுடா
மண்ணுக்குப் பாரம் உடம்பு .

இந்த வெண்பாவில் தனிச்சொல் இடம்பெறாததால் இது இன்னிசை வெண்பாவாயிற்று .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by M.Jagadeesan Fri Feb 23, 2018 6:21 am

வாழ்க்கைக்கு மூவர் .
======================
நல்லவனை உன்னுடைய நன்பனாய்த் தேர்ந்தெடு
வல்லவளைக் கைப்பிடித்து வாழ்க்கைத் துணையாக்கு
பெற்றவர்கள் வாழ்வின் வழிகாட்டி இம்மூவர்
உற்றதுணை என்றும் உனக்கு .

இதுவும் இன்னிசை வெண்பாவாகும் . நேரிசை வெண்பாவைவிட , இன்னிசை வெண்பா எழுதுவது சற்று எளிது . ஏனெனில் இதில் தனிச்சொல் வராததே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Guest Fri Feb 23, 2018 8:27 pm

விளக்கம் அருமை. இரண்டு மூன்று தடவை திரும்ப திரும்ப படிக்க அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.

இரண்டு இன்னிசைப் பாடல்களை தந்துள்ளீர்கள். தனிச்சொல் இல்லாத வெண்பா இன்னிசை வெண்பா. தனிச்சொல் பெற்று இன்னிசை வெண்பா எழுத முடியுமா?

வெண்பாவில் விகற்பம் என்றால் என்ன?
avatar
Guest
Guest


Back to top Go down

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Empty Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum