ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா

4 posters

Go down

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா Empty 35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 17, 2018 7:47 am


செஞ்சூரியன் மைதானத்தின் மீதான விராட் கோலியின் காதல் மீண்டுமொரு முறை நிரூபணமானது, 35-வது ஒருநாள் சதத்தை மீண்டும் ஒரு வெற்றிகரமான விரட்டலில் விரட்டல் மன்னன் விராட் கோலி எடுக்க இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா.

82 பந்துகளில் அனாயசமான சதம் கண்ட விராட் கோலி 96 பந்துகளில் 19 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 129 நாட் அவுட், ரஹானே 50 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 நாட் அவுட். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி மோசமான பேட்டிங்கில் 204 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.


இலக்கை விரட்டுவதன் மூலம் இதுகாறும் இருந்த வசதியான இடத்திலிருந்து அழுத்தங்களை எதிர்கொள்வோம் என்றார் விராட் கோலி, ஆனால் எந்தச் சவாலுக்கும் தயாராக தென் ஆப்பிரிக்கா இல்லை, ரபாடா, மில்லர், மோர்கெல் என்று என்ன தைரியத்தில் வீர்ர்களை நீக்கம் செய்தது என்பதும் புரியவில்லை. எப்போதும் கடைசி போட்டியை வெல்வது அடுத்த தொடருக்கான உத்வேகமாகும். இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதையடுத்து பெற்ற உத்வேகம்தான் ஒருநாள் தொடரில் செலுத்திய ஆதிக்கமாகும். எனவே இந்த விதத்தில்தான் கோலியின் எதிர்பார்ப்பை முறியடிக்க முடிந்துள்ளது தென் ஆப்பிரிக்காவினால், அதாவது சவாலான இலக்கை விரட்டிப் பழக வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்த கோலியின் எதிர்பார்ப்பை தென் ஆப்பிரிக்கா முறியடித்ததுதான் அந்த அணிக்கு ஒரே ‘வெற்றி’ யாகும்.

ஏற்கெனவே தொய்வடைந்து விட்ட பந்து வீச்சில் கோலி 35வது சதம் எடுப்பார் என்பது தெரிந்ததுதான், அதுவும் சதமெடுப்பது ஒரு வழக்கமான பிறகு இந்த வழக்கமான பந்து வீச்சில் இன்னொரு வழக்கமான, ஆனால் அனாயசமான சதமெடுப்பது ஆச்சரியமில்லை.

இந்த ஒருநாள் தொடரில் 558 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி, இருதரப்பு தொடரில் ஒரு பேட்ஸ்மென் எடுக்கும் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராகும் இது. இதில் 3 சதங்கள் அடங்கும், இந்த ஒருநாள் தொடரில் கோலியின் குறைந்த எண்ணிக்கையே 36 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சதம் கண்ட விறுவிறுப்பில் இறங்கிய ரோஹித் சர்மா கட்ஷாட்களை அபாரமாகப் பயன்படுத்தி ஆடத் தொடங்கினார் 13 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்திருந்த போது, லுங்கி இங்கிடி ஒரு பந்தை லெக் ஸ்டம்பில் எகிறச் செய்ய பந்தின் வேகம் 126 கிமீதான் என்றாலும் கொஞ்சம் கூடுதல் உயரம் எழும்பியதால் ஃபைன் லெக்கில் அது போகும் வழியில் அப்படியே பவுண்டரி அடிக்க முயன்ற ரோஹித் மட்டையில் சரியாகச் சிக்காமல் விக்கெட் கீப்பர் கிளாசனிடம் கேட்ச் ஆனது.

சரி ஒரு விக்கெட்டை ஷார்ட் பிட்ச் பந்தில் எடுத்தாகிவிட்டது பேசாமல் ஒழுங்கான லைன் லெந்தில் வீச வேண்டியதுதானே? எதற்கெடுத்தாலும் ஷார்ட் பிட்ச் பந்தை பயன்படுத்தத் தொடங்கினர். மந்தமான பிட்சில் இது தேவையற்ற சோதனை.

அதுவும் கோலிக்கு ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்கலாமா? அது அவர்களுக்கே பெருஞ்சோதனையானது, கிடைக்கோட்டு மட்டை ஷாட்களை கோலி இருபுறமும் பிரயோகிக்க 25 பந்துகளில் 38 ரன்கள் என்று தொடக்கத்திலேயே எகிறினார். ஷிகர் தவண் மறு முனையில் ஸ்லோ பிட்ச் என்பதால் டைமிங் கிடைக்காமல் தடவி 30 பந்துகளில் பாதி ரன்களையே எடுத்திருந்தார், கடைசியில் 18 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிடி பந்தை கட் ஆடினார், நேராக பாயிண்டில் ஸோண்டோவிடம் கேட்ச் ஆனது இந்தியா 80/2, ஆனால் 12.4 ஓவர்களில் 80 ரன்கள். கிட்டத்தட்ட ஓவருக்கு 7 ரன்கள் வீதத்தில் ரன்கள் வந்து கொண்டிருந்தது.

அதன் பிறகு கோலி, ரஹானே 117 பந்துகளில் 129 ரன்களை 3-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் சேர்த்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர். கோலி 82 பந்துகளில் சதமெடுத்தார், சதமெடுத்த பிறகு பொறுத்தது போதும் பொங்கி எழு என்று இம்ரான் தாஹிரை ஒரு மிட்விக்கெட் சிக்ஸும் பிறகு மேலேறி வந்து மிக அழகாக ரசிகர்களைத் தாண்டி நேராக ஒரு அற்புத சிக்சரையும் அடித்தார்.

எதிரணியினரின் ரன்களில் கிட்டத்தட்ட 70% ரன்களை கோலியே எடுத்து விட்டார். எந்த வித சவாலும் அவருக்கு அளிக்கப்படவில்லை, ஷார்ட் பிட்ச் பந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதை கோலி ரன் எடுக்கும் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார். இயன் சாப்பல் இருந்திருந்தால் புகழ்ந்து தள்ளியிருப்பார், காரணம், ஷார்ட் பிட்ச் பந்துகள் ரன் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு என்பதை அவர் தொடர்து வலியுறுத்துபவர், இதனால் கோலி இன்று அவருடைய வாக்கை மெய்ப்பித்தார்.

வெற்றிக்கான ஷாட்டை அவர் நேராக அடித்த போது எந்தவித உணர்ச்சியும் அவரிடத்தில் இல்லை, இறுக்கமான ஒரு முகத்துடன் டிவில்லியர்சை ஆரத்தழுவினார். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றார் விராட் கோலி.

இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா விராட் கோலி, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரிடம் இழந்தது. எனவே தென் ஆப்பிரிக்காவை ‘கோலிசாஹல்தீப்’ செய்து விட்டது இந்தியா என்று அயர்லாந்து இலக்கிய மேதை ஜேம்ஸ் ஜாய்ஸ் பாணி Portmonteau word பிரயோகம் செய்து எள்ளல்-சுருக்கமாக மதிப்பிடுவோம்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா Empty Re: 35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 17, 2018 7:49 am

படங்கள் பதிவில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது
வேறு வழியில் பதிவு செய்து கொள்கிறேன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா Empty Re: 35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா

Post by SK Sat Feb 17, 2018 10:14 am

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா 3838410834 35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா Empty Re: 35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா

Post by T.N.Balasubramanian Sat Feb 17, 2018 10:22 am

பழ மு wrote:படங்கள் பதிவில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது
வேறு வழியில் பதிவு செய்து கொள்கிறேன்

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா 9k=


என்ன பிரச்சனை பழ மு அவர்களே?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா Empty Re: 35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா

Post by ayyasamy ram Sat Feb 17, 2018 10:44 am

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா Virat%20kohli
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா Empty Re: 35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum