புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_m10கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 16, 2018 8:37 pm

தி இந்துToggle navigation
முகப்பு
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்!
கிங் விஸ்வா
Subscribe
கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! Jl4wHMRISrm4vGBaFPAo+VyasaTheGraphicNovelSampleImage1
Published : 16 Feb 2018 11:34 IST
Updated : 16 Feb 2018 11:34 IST
பதினெட்டு லட்சம் சொற்களைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? சிறுவயதில் அமர் சித்ர கதாவில் படித்ததைத் தவிர்த்து, முழுமையான மகாபாரதக் கதையை எப்போது காமிக்ஸ் வடிவில் படித்தீர்கள்? முழுமையான மகாபாரதக் கதையை இது வரையில் காமிக்ஸ் வடிவில் நாம் படித்ததே இல்லை என்பதுதான் உண்மை.

அமர் சித்ர கதாவில் 42 தனிப் புத்தகங்களாக வந்த மகாபாரதம்கூடச் சிறார்களுக்காக உருவாக்கப்பட்டதுதான். அப்படி இருக்க, இந்தியாவின் தலை சிறந்த இரண்டு படைப்பாளிகள் ஒன்றுகூடி வாசிப்பில் முதிர்ச்சி பெற்றவர்களுக்காக மகாபாரதத்தை கிராஃபிக் நாவல் வடிவில் தயாரித்தால் எப்படி இருக்கும்?

மகாபாரதம் ஆரம்பம்

அந்த வகையில், இந்த கிராஃபிக் நாவல் பிரம்மாண்டமான யுத்த களத்தைக் காட்சிப்படுத்தித்தான் ஆரம்பிக்கிறது. இரண்டு மாபெரும் போர்ப் படையினர் எதிரெதிரே நின்று போரிட ஆயத்தமாக இருக்கிறார்கள். யானை, குதிரைப் படைகள் கிளப்பிய தூசி சூரியனையே மறைத்துவிடுகிறது.

காற்று வீச ஆரம்பிக்க, ஒரு மாபெரும் யுத்தம் தொடங்குகிறது. அதேநேரம் கறுத்த உருவமும் வெண்ணிறத் தாடியும் கொண்ட ஒரு முனிவர் அரண்மனைக்குள் நுழைந்து, பார்வையற்ற மன்னரிடம் பேசத் தொடங்குகிறார்.

உலகமே ஒரு விசித்திரமான விலங்குக் காட்சி சாலையாகிவிட்டதென்றும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் நடக்கின்றன என்றும் மாறுபாட்டை விவரிக்கிறார். கழுதைகளை ஈனும் பசுக்கள், மூன்று கொம்புகளைக் கொண்ட விலங்குகள், நான்கு கண்களைக் கொண்ட குதிரைகள், இரண்டு தலைகளைக் கொண்ட நாய்கள் என்று விசித்திரமான விலங்குகளால் உலகம் நிறைந்திருக்கிறது.

கருமையான, பெயர் தெரியாத செடிகொடிகள் உலகை ஆக்கிரமிக்கின்றன. ஓர் இறக்கை, ஒரு கண், ஒரு கால் கொண்ட விசித்திரமான பறவையின் ஓலம் பயமுறுத்துகிறது. குடும்ப உறவுகள் மாறி, நதிகள் அனைத்தும் ரத்தமாக, மேகங்கள் வித்தியாசமாகக் காட்சியளிக்கின்றன என்று அந்த முனிவர் சொல்கிறார். நடக்க இருக்கும் யுத்தத்தின் விளைவுகளை முன்கூட்டியே சொல்லி யுத்தத்தை நிறுத்தும்படி அவர் கேட்கிறார்.


சொல் பேச்சுக் கேட்காத வாரிசுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அந்த மன்னருக்கு ஒரு வரம் அளிக்கிறார் அந்த முனிவர். அந்த மன்னரின் அருகில் இருப்பவரால், யுத்த களத்தில் நடப்பவை அனைத்தையும் காண இயலும். கிளம்பும்போது, இந்த யுத்தத்தின் கதையை நான் உலகுக்குச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த முனிவர் கிளம்புகிறார்.

இந்த கிராஃபிக் நாவலின் ஆரம்பப் பக்கங்களிலேயே நாம் இதுவரையில் பார்க்காத, படிக்காத ஒரு வகையான வாசிப்புக்கு நம்மைத் தயார்படுத்திவிடுகிறார்கள். குறிப்பாக, உலகில் வித்தியாசமாக நடக்கும் சம்பவங்களைப் பற்றிய அந்த இரண்டு பக்க ஓவியங்கள், இந்திய கிராஃபிக் நாவலின் உச்சம் என்றே சொல்லலாம்.

மகாபாரதமே ஒரு நான்-லீனியர் வடிவக் கதைதான். ஆனால், இந்த கிராஃபிக் நாவலில் அதன் வடிவத்தை உடைத்து, சமகால ரசனைக்கேற்ப அதை ஒரு நவீன பாணிக் கதையாகச் சொல்லி இருக்கிறார்கள்.

கதை சொல்லல்

மகாபாரதப் போரில் வென்ற மன்னரின் வாரிசான ஜனமேஜெயன் ஒரு யாகத்தை அஸ்தினாபுரத்தில் நடத்துகிறார். அவருடைய தந்தையை ஒரு பாம்பு கடித்துவிட, உலகிலிருக்கும் அனைத்துப் பாம்புகளையும் அழிக்க அவர் நடத்தும் யாகத்தில் வியாசரும் அவருடைய ஐந்து சீடர்களில் ஒருவரான வைசம்பாயனரும் கலந்துகொள்கிறார்கள். அப்போதுதான் முதல்முறையாக மகாபாரதத்தை வைசம்பாயனர் சொல்கிறார்.

ஜெயம் என்னும் பெயரில் தன் குருநாதரான வியாசர் பாடிய 8,800 அடிகளை விரிவுபடுத்தி, 24, 000 அடிகளாக வைசம்பாயனர் சொல்ல, அதை உக்கிரசிரவஸ் என்ற சூதர் கேட்கிறார். ஒரு கதைசொல்லியான உக்கிரசிரவஸர், தான் கேட்ட கதையை நைமிசாரண்யத்திலிருக்கும் சவுனக முனிவருக்குச் சொல்லும்போது அது 90,000 அடிகளாக முழுமை பெற்று, பாரதமாக உருவெடுக்கிறது.

இந்த கிராஃபிக் நாவலில் வைசம்பாயனர் சொன்னதை மையப்பொருளாகக் கொள்ளாமல், உக்கிரசிரவஸ் என்ற சூதரின் வடிவத்தைக் கையாண்டதால், நமக்கு இன்னொரு வடிவமும் கிடைக்கிறது. கதையை எழுதிய வியாசரே இந்தக் கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். பின் நவீனத்துவ பாணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டிருந்தாலும், தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவரது வடிவில்தான் (உக்கிரசிரவஸ்) இந்த கிராஃபிக் நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த கிராஃபிக் நாவல் முன்வைக்கும் அரசியலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

அமைப்பும் வடிவமும்


சிபாஜி பாந்தோபாத்யாய்

இனிமேல் இந்தியாவில் உருவாக்கப்படும் எந்த ஒரு கிராஃபிக் நாவலும் இதுபோல சிறப்பாக உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு அளவீட்டை இந்த கிராஃபிக் நாவல் ஏற்படுத்தியிருக்கிறது. கதை சொல்லலில் சிபாஜி பாந்தோபாத்யாய் ஒரு உச்சத்தைத் தொடுகிறார் என்றால், ஓவியரான பானர்ஜி அதை இன்னொரு தளத்துக்கு உயர்த்துகிறார்.

குறியீடுகளால் நிறைந்த இந்தப் புத்தகத்தில் 1,600-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. ஒவ்வோர் ஓவியமும் கோணங்களில், அளவுகளில், பார்வை அமைப்புகளில், வண்ணக் கலவையிலிருந்து வேறுபட்டு, சிறப்பாக அமைந்துள்ளது.

அதேநேரம், இரண்டு படைப்பாளிகள் போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கியதால், கதையும் (வார்த்தைகளும்) களமும் (ஓவியங்களும்) பல இடங்களில் முரண்பட்டு இருப்பதைக் காண முடிகிறது.

ஆறு பாகங்களைக் கொண்ட இந்த கிராஃபிக் நாவலின் முதல் பாகம் படிக்கப் புதிய அனுபவத்தைத் தந்தாலும், மிகவும் கவனமாகப் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாக இது அமைந்துவிடுகிறது.


சங்கா பானர்ஜி

சிபாஜி பாந்தோபாத்யாய் (கதாசிரியர்): இந்தியாவின் தலை சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். 63 வயதுடைய இவர், மாற்றுப் பார்வை கொண்ட சிந்தனையாளர். வங்கச் சிறுவர் இலக்கியத்தில் காலனியாதிக்கத்தின் காரணிகளைப் பற்றிய இவரது புத்தகம் மிக முக்கியமானது. ஆங்கில இலக்கியம், நாடகங்கள், பெண்ணியம், திரைப்படத் திறனாய்வு என்று பல களங்களில் இயங்கி வருகிறார். தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள இவரை, இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் தனது கடைசி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் வைத்துள்ளார்.

சங்கா பானர்ஜி (ஓவியர்): முதலில் பானர்ஜி ‘இந்தியா டுடே’ குழுமத்தில் டிசைனராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், சிறு வயது முதலே ஓவியத்தின் மீது தீராக்காதல் கொண்ட இவர், முழுநேர ஓவியராக மாறினார். அதன் பிறகு, கேம்ப்ஃபையர் நிறுவனத்துக்காகப் பல கிராஃபிக் நாவல்களை உருவாக்கினார். பழைய கலாச்சாரம் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையில் ஆர்வம் கொண்டவர் என்பதால், அவரது ஓவியங்களில் இது பற்றிய குறியீடுகள் காணப்படும்.

தலைப்பு: வியாஸா – ஆரம்பம்!

கதாசிரியர்: சிபாஜி பாந்தோபாத்யாய்

ஓவியர்: சங்கா பானர்ஜி

வெளியீடு: பெங்குயின் ரான்டம் ஹவுஸ்

கதைக்கரு: பாரதம், மகாபாரதமாக உருவான கதை..

பக்கங்கள்: ௨௩௨
நன்றி
தி இந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 17, 2018 3:05 am

கிராஃபிக் நாவல்: கிராஃபிக் மகாபாரதம்! 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக