ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! - Page 2 Empty மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:21 pm

First topic message reminder :

டி.வி.எஸ். சோமு பக்கம்
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! - Page 2 J5zVCi9FQMikzj0i8E17+c2e6131d645d170798203384cdd66711



ராமேசுவரம் எனக்கு மிகப் பிடித்தமான ஊர்களில் ஒன்று.
“ஒட்டுமொத்த ஊரே உங்களுக்கானது.. ஊரின் அத்துணை பேரும் உங்களிடம் அன்பும், மரியாதையும் செலுத்துவார்கள்.. பணம் என்பது இன்றியே எங்கும் சுற்றித்திரியலாம்..” – இப்படியோர் அனுபவத்தை நீங்கள் பெற்றது உண்டா?
அதுபோன்ற ஒரு அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது ராமேசுவரம்!
நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் தந்தை, தொடர்வண்டித்துறையின் பயணச்சீட்டு ஆய்வாளராக பணியாற்றினார். வாரம் ஒரு முறை விரைவுத் தொடர்வண்டியில் ராமேஸ்வரம் சென்று வருவது அவரது பணி.
காலை ஆறுமணிக்கு தஞ்சையில் ஏறினால் மதியம் அங்கு சென்றுவிட்டு, மறுநாள் மதியம் வரை முழுநாள் அங்கு இருக்க வேண்டியிருக்கும். பிறகு கிளம்பி இரவு தஞ்சையில் இறங்கவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! - Page 2 Empty Re: மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:54 pm

ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வருவதோ உள்ளே செல்வதோ.. பெரும்பாடு. பக்கத்திலேயே மார்க்கெட். கேட்கவா வேண்டும் மக்கள் நெரிசலுக்கு?
அப்போது இலங்கையில் இருந்து பல பொருட்கள் அரசாங்க அனுமதி இன்றி படகுகளில் வரும். இங்கிருந்தும் பல பொருட்கள் அங்கு செல்லும். அதுதான் கடத்தல்.
அப்படி வரும் பொருட்கள் ராமேஸ்வரம் கடை வீதிகளில் விற்கப்படும். அவற்றில் கொரியன் பேண்ட் பிட், டைகர் பாம் என்கிற தைலம் ஆகியவை ரொம்ப பிரலம்.
நான் கொஞ்சம் வளர்ந்ததும்.. ஏதோ ஒரு தருணத்தில் ராமேசுவர பயணம் நின்றது. இடையில் அப்பாவும் ஓய்வுபெற்றுவிட்டார்.
அந்த நிலையில் ராமேசுவரத்துக்கு பேருந்து பாலம் (தரைப்பாலம்) போடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவாக பாலத்துக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! - Page 2 Empty Re: மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:55 pm

அதுவரை தொடருந்தையே நம்பியிருந்த அத்தீவு மக்கள் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களில் உற்சாகமாக கடல் கடந்தனர்.
இந்த பேருந்துபாலம் கட்டப்பட்ட சில மாதங்களில் நண்பர்கள் செந்தில், நடராஜன் ஆகியோருடன் ராமேசுவரம் சென்றேன். இடையில் எங்கள் பெட்டியின் பயணச்சீட்டு பரிசோதகரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர் பெயர் நினைவில்லை.
இளைஞர். மாணவர்களான எங்களிடம் அன்போடு பேசியபடியே வந்தார்.
தான் கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். என் தந்தை இதே வழித்தடத்தில் பணியாற்றியதையும், ஊர் மக்கள் பெரும் மரியாதை அளித்த நினைவுகளையும் நானும் பகிர்ந்துகொண்டேன்.
அவரும், “ஆமாம்.. தொடருந்து பணியாளர்கள் என்றால் இங்கே மக்கள் மிக அன்போடு பழகுவார்கள்.. மரியாதை அளிப்பார்கள்.. எனக்கும் அந்த அனுபவம் உண்டு” என்றார் மகிழ்ச்சியாய்.
எங்களது தொடர்வண்டி, ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குள் புகுந்து நின்று இளைப்பாற ஆரம்பித்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! - Page 2 Empty Re: மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:56 pm

பயணச்சீட்டு பரிசோதகர், “பத்து நிமிடங்கள் காத்திருங்கள்.. அலுவலகம் சென்று வந்துவிடுகிறேன்.. சேர்ந்தே வலம் வரலாம்” என்றார்.
காத்திருந்து, அவருடன் வெளியில் கிளம்பினோம்.
தொடருந்தில் இருந்து இறங்கும்போதே கவனித்தேன். முன்புபோல அத்தனை கூட்டம் இல்லை.
நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது மேலும் அதிர்ச்சி.
அங்கிருந்த மார்க்கெட்டை காணவில்லை. சில கடைகளே இருந்தன. அவற்றிலும் பெரும் கூட்டமில்லை.
உடன் வந்த பரிசோதகர், “பேருந்து பாலம் கட்டிய பிறகு இங்கே கூட்டம் குறைந்துவிட்டது” என்றார்.
அங்கிருந்த கடை ஒன்றில், எங்கள் அனைவருக்கும் வாழைப்பழம் வாங்கினோம். (சாப்பாடு தள்ளிப்போகும் நேரத்தில் வாழைப்பழமே சிறந்த பசி நிவாரணி.)
கடைக்காரர் சொன்ன விலை அதிகம் போல் தோன்றவே, எங்களுடன் வந்த தொடருந்து பரிசோதகர், “நான் தொடர்வண்டி பணியாளன். எங்களிடம அதிக விலையா” என்றார் புன்கைத்தபடியே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! - Page 2 Empty Re: மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 2:58 pm

அதற்கு கடைக்காரர் வெடுக்கென்று சொன்னார்: “அதுக்கு என்ன.. எல்லாருக்கும் ஒரே விலைதான் விருப்ம் இருந்தா வாங்கு.. இல்லேன்னா கிளம்பு!”
பணியாளர் உட்பட எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. விலை கூடுதல் என்பதுகூட பரவாயில்லை… அதைச் சொன்னமுறைதான் பெரும் அதிர்ச்சி தந்தது.
பிறகு நாங்கள் அங்கு தங்கிய இரு நாட்களில்.பிறகு வேறு சில தொடர்வண்டி பணியாளர்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதை அறிய முடிந்தது.
அப்போது தொடர்வண்டி பணியாளர் ஒருவர், “ச்சே.. மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறியதும் நினைவிருக்கிறது.
பின்னாட்களில் எனக்குத் தோன்றியது இதுதான்:
“மனிதர்கள் மாறுவதில்லை. சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது. அவர்கள் எப்போதும் தமக்குத் தேவையான குணங்களை – நடவடிக்கைகளை பெற்றிருக்கிறார்கள். ஆம்..
மரியாதையையோ அன்பையோ சூழல்தான் தீர்மானிக்கிறது!”

நன்றி
பத்திரிகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்! - Page 2 Empty Re: மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum