ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

3 posters

Go down

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! Empty இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 9:31 pm

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! 6y3Xoa0jRKep9P9vHwrS+f46d9a0ba11bcdf4727636e8f3bdb121

ஆற்று நீரையும் குளத்து நீரையும் கையில் அள்ளிக் குடித்த காலம் இருந்தது. இயற்கை நமக்கு அளித்த கொடை அது. ஆனால், இன்றைக்கு நிலைமை வேறு. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படும் தண்ணீர்கூட மாசுபட்டதாகத்தான் இருக்கிறது. இயற்கைச் சூழல் பெரும்பாலான இடங்களில் மாசுபட்டிருப்பதால், நீரை எங்கிருந்து பெற்றாலும் அதை சுத்திகரித்த பின்பே அதை நம்மால் அருந்த முடிகிறது. எனவேதான் குடிநீர் சுத்திகரிப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.
மனிதர்கள்தான் கிடைக்கும் தண்ணீரை சுத்திகரிக்க செயற்கையான கருவிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இயற்கையில் நீர் சுத்திகரிப்பு என்பது இயல்பாகவே நடக்கிறது. மண்ணில் இருக்கும் நீர் ஆவியாகி மழையாய் மீண்டும் பூமிக்கு வருவதைக்கூட இயற்கையின் தண்ணீர் சுத்திகரிப்புக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தாவரங்களுக்கு நீர் தேவைப்படுவதும், அதன் இலைகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் விளைவால் நீர் ஆவியாதல் நடைபெறும். மிகப்பெரிய காடுகளில் இந்த ஆவியாதல் நிகழ்வு பெரிய அளவில் நடைபெறும். அதுவும் மழைக்காடுகளில் நிலவும் காலநிலையால் ஆவியாதலால் உருவாகும் வெண்ணிற மேகங்களையும்கூட பார்க்க முடியும். இயற்கையின் இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை வீட்டுக்குள்ளேயே உருவாக்கியிருக்கிறார் பிரதிக் கோஷ் என்ற இளைஞர்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! Empty Re: இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 9:34 pm

தாவரங்கள் வளர்ப்போம் குடிநீர் பெறுவோம்...
[size=31]இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! TPAPBNrVTeKnto9CtNfW+c0fc288c74d3589d7e8b474441ec945d
[/size]


மத்தியப் பிரதேசம்தான் பிரதிக் கோஷின் சொந்த ஊர். லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான 'ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்'-டில் படிக்கும்போதுதான் இந்த வடிவமைப்பை உருவாக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்கிறது. குடிநீரை சுத்திகரிக்க அதிகம் செலவாகிறது, அதில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படியிருந்தும் தூய்மையான குடிநீர் கிடைப்பது கடினமாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், இறுதியாண்டு புராஜெக்ட்டாக இதை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கருவியை வெற்றிகரமாக செயல்பட வைத்து பல்கலைக்கழத்தில் இருப்பவர்களை அசத்தியிருக்கிறார். இதன் வடிவமைப்பும் இது செயல்படும் விதமும் மிகவும் எளிமையானது. குழந்தைகள்கூட இதன் செயல்பாட்டை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இயற்கையின் ஆவியாதல் நிகழ்வே இந்தக் கருவியின் அடிப்படை. இதன் மூலமாக செலவே இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறலாம். இந்தக் கருவிக்கு 'ட்ராப் பை ட்ராப்' என்று பெயர் வைத்திருக்கிறார் பிரதிக் கோஷ்.
[size=31]இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! UtTT6QjQ7KVLPfhj5gwW+3b648f15d4064a57f9e434c139c4b8cb
[/size]


ஒரு சாதாரண மனிதனின் உயரமே இருக்கக்கூடிய இந்தக் கருவியில் ஒரு கண்ணாடிக்குடுவைதான் பிரதானமான பகுதி. அதற்குள்ளே செடிகள் வளர்வதற்கான இடம் இருக்கிறது. வெளியில் சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றுவதற்காக ஒரு குழாய் இருக்கிறது. கண்ணாடிக்குடுவைக்குள்ளே ஆவியாகும் நீரை வெளியே கொண்டுவந்து சேகரிக்கவும் ஒரு அமைப்பு கொடுக்கப்பட்டிக்கிறது. ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கு ஒளி தேவைப்படும் என்பதால், கருவிக்கு வெளியே ஒரு விளக்கு பொருத்தப்பட்டிக்கிறது. சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை உள்ளே ஊற்றிவிட்டுக் காத்திருந்தால் போதும் சில மணி நேரங்களில் ஒரு கோப்பை அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உருவாக்கிவிடும் இந்தக் கருவி. இதன் மூலமாக 24 மணி நேரத்தில் இரண்டு முதல் மூன்று கப்கள் வரை நீரை பெற முடியும். இதை ஒருவர் வீட்டில் பயன்படுத்தும்பொழுது சுத்தமான குடிநீர் மட்டுமின்றி புத்துணர்ச்சியும் கிடைக்குமாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! Empty Re: இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 9:36 pm

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! LtW8iRFQC60CyodIp1LA+0d3d4fab965e47c3165190e145f20c66

அசுத்தமான நீரில் இருக்கும் நைட்ரேட்கள், தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள், பாக்டீரியாக்கள் மற்றும் குளோரின் போன்றவற்றை இந்தக் கருவி நீக்கிவிடும் என்று கூறுகிறார் பிரதிக் கோஷ். இந்தக் கருவியை உருவாக்க அதிகம் செலவு செய்ய தேவையிருக்காது என்பதும் இயற்கையாகவே தாவரங்கள் தன்னைதானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், இந்தக் கருவிக்கு பெரிய அளவில் பராமரிப்பும் தேவையிருக்காது என்பதும் இதன் மிகப்பெரிய வசதி என்று கூறுகிறார் பிரதிக். இதைப் பெரிய அளவில் செயல்படுத்தும் திட்டத்தையும் தயாராக வைத்திருக்கிறார். எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வரலாம், அதற்கு இது தொடக்கப்புள்ளியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பிரதிக் கோஷ். நல்ல தொழில்நுட்பம்தான் என்றாலும் இது வெற்றியடைவதற்கான சாத்தியம் பற்றி சிலருக்கு சந்தேகம் எழும்தானே, அதற்கும் அவரிடம் ஒரு பதில் இருக்கிறது.
'சிறு சிறு நீர்த்துளிகள் சேர்ந்துதான் கடல் உருவானது'
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! Empty Re: இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

Post by SK Sat Jan 27, 2018 11:37 am

புதுமையான முயற்சி பாராட்டுக்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! Empty Re: இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 7:16 am

SK wrote:புதுமையான முயற்சி பாராட்டுக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1258030
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! Empty Re: இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

Post by T.N.Balasubramanian Wed Jan 31, 2018 3:50 pm

வியாபார ரீதியாக செயல்படுத்த முடியுமா ?
சந்தேகம் எழுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! Empty Re: இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:08 pm

T.N.Balasubramanian wrote:வியாபார ரீதியாக செயல்படுத்த முடியுமா ?
சந்தேகம் எழுகிறது.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1258386
ரொம்ப செலவு ஆகும் தான்.
முயற்சிக்கு ஒரு நாள் வெற்றி கிட்டும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்! Empty Re: இயற்கை வாட்டர் ஃபில்டர் தயாரித்து லண்டனில் அசத்திய இந்தியர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum