புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_lcap90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_voting_bar90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_lcap90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_voting_bar90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_lcap90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_voting_bar90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_lcap90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_voting_bar90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_lcap90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_voting_bar90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 24, 2018 7:26 pm

சம்பளத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்! ஏழைகளின் சூப்பர் ஹீரோ... யார் இவர்?

90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் 26992001_386340245125352_3766702237232318211_n

தமிழ்படத்தில் ஏழைகளுக்கு உதவும் ஹீரோவாக நடித்துவிட்டால் போதும், நேராக தமிழக முதல்வராக ஆகிவிடலாம் என கனவு காணும் தமிழ்பட ஹீரோக்களுக்கு (சூப்பர் ஸ்டார், உலக நாயகன்களே ) தெரிந்து கொள்ளுங்கள் "தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...! "

இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல! இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!
நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்! அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்!

(தமிழில் இவர் நடித்த படம் : பொம்மலாட்டம்)
தனது சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ! வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ராவின் மராத்வாடா மாவட்டம். கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்க தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி. இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும்.

இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில், அந்த பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர். சையிரட்டுக்கு முன் நம்மிடம் அறிமுகமான மராத்திய நடிகர். திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும்தான் நானாவின் பிழைப்பு. தினச்சம்பளம் 35 ரூபாய். சொற்ப சம்பளத்தில் தாயும் மகனும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். மராத்தி நாடகங்களில் நடித்து, ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு, வருமானம் கொட்டியது.

மூன்றே மாதங்களில் முழு சினிமாவை முடித்து விடும் இன்றைய காலத்தில், 'பிரகார் ' என்ற படத்தில் நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற, சற்றே வித்தியாச நடிகர் நானா. மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை. அரசாலும் தடுக்கமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை.
நடிகர் என்பதையும் தாண்டி, சொந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது நானாவை என்னவோ செய்தது. குறிப்பாக மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தார் நானா. சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு. 2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.

நன்கொடை பணம் முழுவதும் விவசாயிகளுக்கு முழுமையாக சேர வேண்டும் என்பது நானாவின் அடுத்த இலக்கு. இந்த விஷயத்தில் நானா படேகர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது. வேறு ஏதாவது அமைப்பு வழியாக வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை. மூன்றாவது அமைப்பின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை. எந்த அமைப்பையும் அணுகவில்லை. அவரே நேரடியாக களத்தில் குதித்தார்.

மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நானாவே நேரடியாக சந்தித்தார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கு நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மகாராஷ்ட்ராவில், இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.

திரையில் ஆன்டி ஹீரோவாக நடிக்கும் நானாதான், மராத்வாடா மக்களின் நிஜ ஹீரோ. கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும் மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா. ''சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே'' என்றால் , 'இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில் வருகிறது.

'தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது...

தலைவணங்குவோம்.

தாய் மண்ணே வணக்கம்.

ரமணியன்
நன்றி முகநூல்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 24, 2018 7:40 pm

நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் பாவம் .
அவர்களுக்கு வருமானமே கிடையாது.
காசு வாங்காமலே நடிக்கிறார்கள்.
சங்க கட்டிடத்திற்கு ஆயிரக்கணக்கில் டிக்கட் வைத்து
(ஏமாந்த /ஏமாறும்) ரசிகர்களுக்காக கிரிக்கெட் விளையாடுவார்கள்.
சிங்கப்பூர் சென்று கலை விழா நடத்துவார்கள். சிங்கப்பூர் பத்திரிகைகள்
பிச்சை எடுக்க வரும் நடிகர்கள் என்றாலும் மனம் தளராமல் கலைத்தொண்டு புரிவார்கள்.
வேறு சிலர் அரசியலில் நுழைவதற்கு ரசிகர்களிடம் சந்தா வசூலிப்பார்கள்.

இன்னும் ஒருவரோ தமிழ் நாட்டின் தேவைகளை கண்டுக்கொள்ளவேமாட்டார்
ஆனாலும் அரசியலில் நுழைந்து சேவை செய்வாராம்.
தமிழ் சினிமா விசிறிகளை போல கடைந்தெடுத்த அறிவிலிகளை
உலகில் வேறெங்கும் காண்பது அரிது அரிது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 24, 2018 7:41 pm

எனக்கு இவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும்............இந்த கட்டுரையை படித்ததும் இவர் அருமையான நடிகர் மட்டும் இல்லை அருமையான மனிதர் என்றும் புரிந்துகொண்டேன் ஐயா !....... 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் 103459460 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் 1571444738

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 24, 2018 7:46 pm

T.N.Balasubramanian wrote:நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் பாவம் .
அவர்களுக்கு வருமானமே கிடையாது.
காசு வாங்காமலே நடிக்கிறார்கள்.
சங்க கட்டிடத்திற்கு ஆயிரக்கணக்கில் டிக்கட் வைத்து
(ஏமாந்த /ஏமாறும்) ரசிகர்களுக்காக கிரிக்கெட் விளையாடுவார்கள்.
சிங்கப்பூர் சென்று கலை விழா நடத்துவார்கள். சிங்கப்பூர் பத்திரிகைகள்
பிச்சை எடுக்க வரும் நடிகர்கள் என்றாலும் மனம் தளராமல் கலைத்தொண்டு புரிவார்கள்.
வேறு சிலர் அரசியலில் நுழைவதற்கு ரசிகர்களிடம் சந்தா வசூலிப்பார்கள்.

இன்னும் ஒருவரோ தமிழ் நாட்டின் தேவைகளை கண்டுக்கொள்ளவேமாட்டார்
ஆனாலும் அரசியலில் நுழைந்து சேவை செய்வாராம்.
தமிழ் சினிமா விசிறிகளை போல கடைந்தெடுத்த அறிவிலிகளை
உலகில் வேறெங்கும் காண்பது அரிது அரிது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257767

மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா, நடிகர்களை தலை இல் தூக்கிவைத்து ஆடும் ஆட்ட்டம் நம் தமிழ் நாட்டில் தான் மிக அதிகம்.............. கோபம் கோபம் கோபம்...........மக்களுக்காக எட்டணா செலவழிக்காமல் வாய் கிழிய பேசும் இவர்கள்  நாளை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நல்லது செய்யப்போகிறார்களாக்கும்............ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு...முன்பு போல தாவிகுதித்து  , நடிகை பின் ஓடி , வெயில் மழை பாராமல் நடிக்க உடம்பில் தெம்பு  இல்லை........அதனால் தான் சாகும் நேரத்தில் கட்சி அது இது என்று எதையாவது சொல்லி சம்பாதிக்க பார்க்கிறார்கள்............ஒருவர் தன் மனைவி சேர்த்துள்ள , சேர்த்துக் கொண்டிருக்கும் சொத்துக்களுக்காகவே அரசியலுக்கு வருகிறார் என்று 'கிசு கிசு' வேறு வருகிறது..........எல்லாம் தமிழகத்தின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்........இல்லாவிட்டால் அந்த நடிகர் சொன்னது போல "அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று தான் இப்பொழுது நாம் சொல்லவேண்டும் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 24, 2018 7:59 pm

90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் Patekar
-
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் Nana
-
(30/07/2016)-ஆனந்த விகடனில் வந்த கட்டுரை....
-
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்காமல்
வீரசிவாஜிக்கு 3600 கோடியில் சிலை அமைக்கிறது..
-
வாழ்க பாரதம்...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 24, 2018 8:06 pm

இது பழைய செய்திதான் 3 மாத பழசு என எண்ணுகிறேன்.
ஆங்கிலத்தில் படித்துள்ளேன். தமிழில் இப்போது முகநூலில் வந்துள்ளது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 8:25 pm

T.N.Balasubramanian wrote:சம்பளத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்! ஏழைகளின் சூப்பர் ஹீரோ... யார் இவர்?
மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நானாவே நேரடியாக சந்தித்தார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கு நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மகாராஷ்ட்ராவில், இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.

தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது...
ரமணியன்
நன்றி முகநூல்
மேற்கோள் செய்த பதிவு: 1257760
பிரமிப்பு அடங்கவில்லை ஐயா. இப்படியும் ஒரு நடிகர் நமக்கும் வாய்த்திருக்கிறார்களே.
அவர் நல்லாயிருக்கனும் பல விவசாயி குடும்பங்கள் இவரால் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 24, 2018 9:00 pm

ayyasamy ram wrote:90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் Patekar
-
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர் Nana
-
(30/07/2016)-ஆனந்த விகடனில் வந்த கட்டுரை....
-
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்காமல்
வீரசிவாஜிக்கு  3600 கோடியில் சிலை அமைக்கிறது..
-
வாழ்க பாரதம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1257778

//விவசாயிகள் தற்கொலையைத் தடுக்காமல்
வீரசிவாஜிக்கு  3600 கோடியில் சிலை அமைக்கிறது..// கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 25, 2018 12:03 pm

sk wrote:தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது...

இது நானா படேகர் கூறுவது

தமிழ் நாட்டில் வாழ்வது என்று முடிவு செய்யும் முன் எங்கள் இருவரையும் ஒருமுறை நினைத்து பாருங்கள்

நீங்களே செத்து விடுவீர்கள்

இது ஓபிஎஸ் & கோ கூறுவது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக