Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
5 posters
Page 1 of 1
90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
சம்பளத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்! ஏழைகளின் சூப்பர் ஹீரோ... யார் இவர்?
தமிழ்படத்தில் ஏழைகளுக்கு உதவும் ஹீரோவாக நடித்துவிட்டால் போதும், நேராக தமிழக முதல்வராக ஆகிவிடலாம் என கனவு காணும் தமிழ்பட ஹீரோக்களுக்கு (சூப்பர் ஸ்டார், உலக நாயகன்களே ) தெரிந்து கொள்ளுங்கள் "தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...! "
இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல! இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!
நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்! அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்!
(தமிழில் இவர் நடித்த படம் : பொம்மலாட்டம்)
தனது சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ! வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ராவின் மராத்வாடா மாவட்டம். கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்க தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி. இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும்.
இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில், அந்த பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர். சையிரட்டுக்கு முன் நம்மிடம் அறிமுகமான மராத்திய நடிகர். திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும்தான் நானாவின் பிழைப்பு. தினச்சம்பளம் 35 ரூபாய். சொற்ப சம்பளத்தில் தாயும் மகனும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். மராத்தி நாடகங்களில் நடித்து, ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு, வருமானம் கொட்டியது.
மூன்றே மாதங்களில் முழு சினிமாவை முடித்து விடும் இன்றைய காலத்தில், 'பிரகார் ' என்ற படத்தில் நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற, சற்றே வித்தியாச நடிகர் நானா. மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை. அரசாலும் தடுக்கமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை.
நடிகர் என்பதையும் தாண்டி, சொந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது நானாவை என்னவோ செய்தது. குறிப்பாக மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தார் நானா. சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு. 2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.
நன்கொடை பணம் முழுவதும் விவசாயிகளுக்கு முழுமையாக சேர வேண்டும் என்பது நானாவின் அடுத்த இலக்கு. இந்த விஷயத்தில் நானா படேகர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது. வேறு ஏதாவது அமைப்பு வழியாக வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை. மூன்றாவது அமைப்பின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை. எந்த அமைப்பையும் அணுகவில்லை. அவரே நேரடியாக களத்தில் குதித்தார்.
மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நானாவே நேரடியாக சந்தித்தார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கு நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மகாராஷ்ட்ராவில், இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.
திரையில் ஆன்டி ஹீரோவாக நடிக்கும் நானாதான், மராத்வாடா மக்களின் நிஜ ஹீரோ. கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும் மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா. ''சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே'' என்றால் , 'இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில் வருகிறது.
'தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது...
தலைவணங்குவோம்.
தாய் மண்ணே வணக்கம்.
ரமணியன்
நன்றி முகநூல்

Last edited by T.N.Balasubramanian on Wed Jan 24, 2018 8:10 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் பாவம் .
அவர்களுக்கு வருமானமே கிடையாது.
காசு வாங்காமலே நடிக்கிறார்கள்.
சங்க கட்டிடத்திற்கு ஆயிரக்கணக்கில் டிக்கட் வைத்து
(ஏமாந்த /ஏமாறும்) ரசிகர்களுக்காக கிரிக்கெட் விளையாடுவார்கள்.
சிங்கப்பூர் சென்று கலை விழா நடத்துவார்கள். சிங்கப்பூர் பத்திரிகைகள்
பிச்சை எடுக்க வரும் நடிகர்கள் என்றாலும் மனம் தளராமல் கலைத்தொண்டு புரிவார்கள்.
வேறு சிலர் அரசியலில் நுழைவதற்கு ரசிகர்களிடம் சந்தா வசூலிப்பார்கள்.
இன்னும் ஒருவரோ தமிழ் நாட்டின் தேவைகளை கண்டுக்கொள்ளவேமாட்டார்
ஆனாலும் அரசியலில் நுழைந்து சேவை செய்வாராம்.
தமிழ் சினிமா விசிறிகளை போல கடைந்தெடுத்த அறிவிலிகளை
உலகில் வேறெங்கும் காண்பது அரிது அரிது.

Last edited by T.N.Balasubramanian on Wed Jan 24, 2018 8:09 pm; edited 2 times in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
எனக்கு இவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும்............இந்த கட்டுரையை படித்ததும் இவர் அருமையான நடிகர் மட்டும் இல்லை அருமையான மனிதர் என்றும் புரிந்துகொண்டேன் ஐயா !.......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
மேற்கோள் செய்த பதிவு: 1257767T.N.Balasubramanian wrote:நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் பாவம் .
அவர்களுக்கு வருமானமே கிடையாது.
காசு வாங்காமலே நடிக்கிறார்கள்.
சங்க கட்டிடத்திற்கு ஆயிரக்கணக்கில் டிக்கட் வைத்து
(ஏமாந்த /ஏமாறும்) ரசிகர்களுக்காக கிரிக்கெட் விளையாடுவார்கள்.
சிங்கப்பூர் சென்று கலை விழா நடத்துவார்கள். சிங்கப்பூர் பத்திரிகைகள்
பிச்சை எடுக்க வரும் நடிகர்கள் என்றாலும் மனம் தளராமல் கலைத்தொண்டு புரிவார்கள்.
வேறு சிலர் அரசியலில் நுழைவதற்கு ரசிகர்களிடம் சந்தா வசூலிப்பார்கள்.
இன்னும் ஒருவரோ தமிழ் நாட்டின் தேவைகளை கண்டுக்கொள்ளவேமாட்டார்
ஆனாலும் அரசியலில் நுழைந்து சேவை செய்வாராம்.
தமிழ் சினிமா விசிறிகளை போல கடைந்தெடுத்த அறிவிலிகளை
உலகில் வேறெங்கும் காண்பது அரிது அரிது.
ரமணியன்
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா, நடிகர்களை தலை இல் தூக்கிவைத்து ஆடும் ஆட்ட்டம் நம் தமிழ் நாட்டில் தான் மிக அதிகம்.............. ...........மக்களுக்காக எட்டணா செலவழிக்காமல் வாய் கிழிய பேசும் இவர்கள் நாளை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நல்லது செய்யப்போகிறார்களாக்கும்............ ...முன்பு போல தாவிகுதித்து , நடிகை பின் ஓடி , வெயில் மழை பாராமல் நடிக்க உடம்பில் தெம்பு இல்லை........அதனால் தான் சாகும் நேரத்தில் கட்சி அது இது என்று எதையாவது சொல்லி சம்பாதிக்க பார்க்கிறார்கள்............ஒருவர் தன் மனைவி சேர்த்துள்ள , சேர்த்துக் கொண்டிருக்கும் சொத்துக்களுக்காகவே அரசியலுக்கு வருகிறார் என்று 'கிசு கிசு' வேறு வருகிறது..........எல்லாம் தமிழகத்தின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்........இல்லாவிட்டால் அந்த நடிகர் சொன்னது போல "அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று தான் இப்பொழுது நாம் சொல்லவேண்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
-
-
(30/07/2016)-ஆனந்த விகடனில் வந்த கட்டுரை....
-
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்காமல்
வீரசிவாஜிக்கு 3600 கோடியில் சிலை அமைக்கிறது..
-
வாழ்க பாரதம்...!!

இது பழைய செய்திதான் 3 மாத பழசு என எண்ணுகிறேன்.
ஆங்கிலத்தில் படித்துள்ளேன். தமிழில் இப்போது முகநூலில் வந்துள்ளது.
ரமணியன்
ஆங்கிலத்தில் படித்துள்ளேன். தமிழில் இப்போது முகநூலில் வந்துள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
மேற்கோள் செய்த பதிவு: 1257760T.N.Balasubramanian wrote:சம்பளத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்! ஏழைகளின் சூப்பர் ஹீரோ... யார் இவர்?
மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நானாவே நேரடியாக சந்தித்தார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கு நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மகாராஷ்ட்ராவில், இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.
தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது...
ரமணியன்
நன்றி முகநூல்
பிரமிப்பு அடங்கவில்லை ஐயா. இப்படியும் ஒரு நடிகர் நமக்கும் வாய்த்திருக்கிறார்களே.
அவர் நல்லாயிருக்கனும் பல விவசாயி குடும்பங்கள் இவரால் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
மேற்கோள் செய்த பதிவு: 1257778ayyasamy ram wrote:
-
-
(30/07/2016)-ஆனந்த விகடனில் வந்த கட்டுரை....
-
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்காமல்
வீரசிவாஜிக்கு 3600 கோடியில் சிலை அமைக்கிறது..
-
வாழ்க பாரதம்...!!
//விவசாயிகள் தற்கொலையைத் தடுக்காமல்
வீரசிவாஜிக்கு 3600 கோடியில் சிலை அமைக்கிறது..//
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்
sk wrote:தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது...
இது நானா படேகர் கூறுவது
தமிழ் நாட்டில் வாழ்வது என்று முடிவு செய்யும் முன் எங்கள் இருவரையும் ஒருமுறை நினைத்து பாருங்கள்
நீங்களே செத்து விடுவீர்கள்
இது ஓபிஎஸ் & கோ கூறுவது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
» அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை
» பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு
» மூத்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 ஓய்வூதியம்
» உள்ளூர் சந்தைல அந்நிய முதலீட்டால் விவசாயிகளுக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|