புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பன்னாட்டு கருத்தரங்கத்திற்காக எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இணையத்தில் தமிழ் !
நம் தமிழ் மன்னர்கள், இயல் இசை நாடகம் என்கிற முத்தமிழையும் வளர்த்தார்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத நாம் இப்போது நான்காவதாக, இணையத்தின் முகுளம் 'இணையத் தமிழை' வளர்த்துள்ளோம். ஆம், எனக்குத்தெரிந்து, கடந்த 15 - 20 வருடங்களாக இந்த சத்தமில்லாத புரட்சி நடந்து வருகிறது. அது நமக்கு எத்தனை விதங்களில் உபயோகமாக இருக்கிறது என்று எடுத்துரைக்கவே இந்த கட்டுரை.
இதன் பலாபலன்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் தமிழை அல்லது எந்த ஒரு மொழியையும் வளர்ப்பதற்கு தேவையானவை புத்தகங்கள். அதாவது ஒரு கால கட்டத்தில் தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்ட இலக்கண இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் புதினங்கள் புராண கதைகள் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைக்க தேவையான சாதனம்.
முன் காலத்தில் நம் புலவர்கள் அரும்பாடுபட்டுத் தங்களின் படைப்புகளை ஓலைச்சுவடிகளில் பதித்தார்கள் . அப்படி பதிவது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. ஓலையை பதப்படுத்தவேண்டும், பின் எழுத்தாணி கொண்டு எழுத வேண்டும். அப்படி எழுதும்போது பிழை ஏதும் வந்தாலோ அல்லது எழுத்தாணி அதிகமாய் பதிந்து ஓலை சேதப்பட்டாலோ, மறுஒலை தான் எடுத்தது எழுதவேண்டும்.
ஒரு கவிதை தொகுப்பையோ, ஒரு புத்தகத்தையோ இப்படி தொகுக்க பலர் பல நாட்கள் சிரமப்பட வேண்டி இருக்கும். அதனால் தான் புலவர்களுக்கு அந்த கால அரசர்கள் ஆதரவு அளித்தார்கள். இதற்கு ஆகும் செலவுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ராஜராஜ சோழன் 3 சைவக் குரவர்களின் தங்கப்பதுமையை செய்து கொண்டு சென்று , அழிவில் இருந்த பல ஓலைச்சுவடிகளை மீட்டான் என்றும், அன்னமய்யா என்கிற தெலுங்கு புலவரின் பாடல்களை மன்னன் செப்பு பட்டயங்களில் பொறித்து வைத்தான் என்று படிக்கிறோம்.
இவ்வளவு கஷ்டப்பட்டு ஓலைகளில் எழுதி வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி இல் அவற்றை மீண்டும் 'படி' எடுத்துவைக்கவேண்டும். அதாவது மறுபடி அவற்றை புதிதாக , மீண்டும் வேறு ஓலைகளில் எழுதி வைக்க வேண்டும் .இல்லாவிட்டால் ஓலைகளில் உள்ள அரிய பொக்கிஷங்கள் ஓலையுடன் கெட்டுவிடும்.
இவ்வளவு செய்தாலும் அவற்றை கரையான் போன்ற பூச்சிகளிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டாலும் இயற்கை இன் சீற்றத்துக்கு ஆளாக நேரிடலாம். அப்படி அழிந்த நூல்கள் பலப்பல.ஆனால் இந்த கஷ்டங்கள் அச்சு கோர்த்து, புத்தகங்கள் பதிக்க ஆரம்பித்ததும் போய்விட்டது என்றே சொல்லலாம் தான். ஆனால் முற்றிலும் பாதுகாப்பானதா என்றால் ...இல்லை என்றே சொல்லவேண்டும்.
ஏன் என்றால், புத்தகங்களை பாது காப்பதும் ஒன்றும் எளிதான காரியம் இலை. என் தந்தையார் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வைத்து இருந்தார். அவற்றை தன் கண் என போற்றி பாது காத்து வந்தார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட அக்கறையும் சிரமமும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
மேலும், ஓரிடத்தில் இருந்து மற்றும் ஓரிடத்திற்கு அவற்றை சுமந்து செல்வது என்பது சவாலான காரியம். ஆனால் இணையத்தில் தமிழ் வந்ததும் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
ஆம், இப்போது கொஞ்சம் கூட சிரமம் என்பதே இல்லை. தனி ஒருவர் மட்டுமே சில நாட்களில் தொன்மையான காப்பியங்கள் , புதினங்கள், புராண இதிகாசங்கள் எதுவானாலும் அவற்றை தமிழில் தட்டச்சு செய்து PDF போல போட்டுவிட்டால் போதும், அப்புறம் அந்த நூல் காலா காலத்திற்கும் எல்லோருக்கும் பயன்படும்.
அதுவும், முதலில் ஒருசில எழுத்துக்களை நம் கணினி இல் தரவிறக்கம் செய்து , தட்டச்சு செய்யவேண்டும் என்கிற நிலை இருந்தது. அதே எழுத்துருவை வைத்திருப்பவர் மட்டுமே இதை படிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்போது, நாம் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை பயன் படுத்தியே தமிழில் தட்டச்சு செய்யமுடியும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.
இது ஒரு வரப்பிரசாதம். எங்கும் தட்டச்சு செய்யலாம், யாரும் படிக்கலாம் என்கிற நிலை வந்துள்ளது. அதனால் நாம் நமக்கு பிடித்த பல நூல்களை ஒரு சிறிய pendrive இல் ...ஆயிரக்கணக்கான நூல்களை அதில் . சேமித்து வைத்துக் கொள்ள முடியும். எங்குவேண்டுமானாலும் சுலபமாக எடுத்து செல்லலாம். தேவையான போது படிக்கலாம். கைகளில் புத்தகத்தை எடுத்துக் படிக்கும் சுகம் இதில் இல்லை என்று சிலர் சொல்லலாம். என்றாலும் பாதுகாக்க இது மிகச்சிறந்த வழி என்பதை அவர்களும் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
தேவையானவர்கள் புத்தகங்களை இன்னும் வாங்கிக்கொண்டு தானே இருக்கிறார்கள். எனவே, இணையத்தால் தமிழுக்கு எத்தனை உபயோகம் என்றுமட்டுமே நாம் இங்கு பார்க்கவேண்டும். கம்பியூட்டருக்குத் தகுந்த மொழி தமிழ் தான் என்றும் சொல்கிறார்களே !
இன்றைய கால கட்டத்தில் ஒரு சொல்லுக்கு பொருள் தெரிய வேண்டுமா ? அல்லது சித்தர் பாடல்கள் வேண்டுமா?, அல்லது புராண இதிகாசங்கள் வேண்டுமா? இல்லை நீங்கள் சின்ன வயதில் படித்த அம்புலிமாமா புத்தகம் அல்லது வாண்டுமாமா கதைகள் வேண்டுமா?.......சமஸ்கிருத ஸ்லோகங்களின் தமிழாக்கங்கள் வேண்டுமா?...இவை அனைத்துமே 'தேடு பொறி' மூலம் சில நொடிகளில் உங்கள் கைகளில். இது எத்தனை பெரிய சாதனை? அவைமட்டும் அல்ல , , கம்பியூட்டர் சம்பந்தப் பட்ட புத்தகங்கள் கூட இப்போது தமிழில் கிடைக்கிறது.
பலதரப்பட்ட வார மாத சஞ்சிகைகளும், தீபாவளி மலர் பொங்கல் மலர்களும் இங்கு கிடைக்கிறது . தினசரி செய்தித்தாள்களுக்கு குறைவே இல்லை. அதி காலை வேளை இல், தமிழ் நாட்டில் வெளியாகும் அந்த செய்தித்தாள்களை இணையம் மூலம் , நாங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு , அந்த மக்களுக்கு முன்பாகவே படிக்கும் அனுபவத்தை என்ன சொல்வது?
முன்பெல்லாம் எங்களைப் போல வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு, வார மாத இதழ்களை படிப்பதென்பது கனவு தான். இப்போது எதற்கும் குறைவே இல்லை. மொத்த புத்தகமும் இணையத்தின் வழியே எங்களுக்கு கிடைத்துவிடுகிறது. போறாததற்கு online லைப்ரேரிகள் இருக்கிறது. எப்போதுவேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம்.
தொடரும்...........

அதேபோல, உங்கள் ஓய்வுநேரத்தில் ஏதாவது கற்கலாம் என்று நினைத்தீர்கள் ஆனால் அதற்கும் இணையத்தமிழ் வழி வகுக்கிறது. ஜோசியம் முதல் சமையல் கலை, தையல் கலை, கோலம் , ஓவியம் கைவேலைகள் என்று பலவற்றையும் நாம் வயது வித்தியாசம் இன்றி கற்க முடிகிறது. இதற்கான நேரக்கேடு எதுவும் யில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல மிகவும் முக்கியமான ஒன்றும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தணியாத தமிழ் தாகத்தால் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த இணையத்தமிழ். உத்யோகத்தில் பொருட்டோ, வேறு குறுக்டுகீடு களாலோ தமிழை மறந்து இருந்தவர்கள், இப்போது மிக ஆர்வத்துடன் தங்களின் ஓய்வு நேரத்தில் இதை பயன்படுத்தி எண்ணற்ற வலைத்தளங்களையும், வலைப்பூக்களையும் உருவாக்கி வருகிறார்கள்.
எத்தனை எத்தனையோ கவிதையாளர்களையும், புலவர்களையும் கதாசிரியர்களையும் கட்டுரையாளர்களையும் நாம் இங்கு பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் ஒருவர் கதை அல்லது கட்டுரை எழுதி அனுப்பினால் பெரும்பாலும் அவை நிராகரிக்கப்பட்டு திரும்பி வந்து விடும். அது எதனால் , திருத்தி எழுதுவது எப்படி என்று கூட அவருக்கு சொல்ல யாரும் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை,
நாம் ஒரு தளத்தில் அல்லது நமது சொந்நதமான வலைப்பூவில் ஒரு பதிவு போட்டோம் என்றால், உடனடியாக அதற்கு பாராட்டு அல்லது விமரிசனம் கிடைத்துவிடும். அதனால் நமக்கு எப்படி எழுத வேண்டும் என்று தெரியவரும். நம் தவறுகளை திருத்திக்கொண்டு மெருகேற்ற முடியும்.
ஒரு உதாரணத்திற்கு, நான் சார்ந்து இருக்கும் தளத்தை பற்றியே சொல்கிறேனே. என்னைப்போல, ( நான் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சாதாரண இல்லத்தரசி, நடுவயது மாது ) பலர் இங்கு இருக்கிறார்கள். தங்களின் வீட்டில் இருந்தபடியே தங்களால் ஆன தமிழ் சேவை செய்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்கிறார்கள்.
எங்கள் நிறுவனரின் ஊக்கத்தால், நான் எனக்குத்தெரிந்த சமையல் கலையை பலவித குறிப்புகளுடன் இங்கு தந்து கொண்டு இருக்கிறேன். கடந்த ஒரே வருடத்தில் நான் சுமார் 25 சிறு கதைகள் , மற்றும் பல பயணக்கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதேபோல இங்கு இருக்கும் என் உறவுகள் (நாங்கள் இங்கு அப்படித்தான் பழகுகிறோம்...எங்களுக்குள் வயது வித்தியாசம் என்பது இல்லை.... முன்காலத்தில் penfriend என்று சொல்வார்கள் . அதுபோல இங்கு இணைய தள இனிய நண்பர்கள், அன்பு உறவுகள் நிறைய உண்டு ) ஒவ்வொருவரும் பிரமிக்கத்தக்க படைப்புகளை தந்துள்ளார்கள்...தந்துகொண்டிருக்கிறார்கள்.
அவற்றில் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தோழி குறுந்தொகையை படித்து, அவர் பாணி இல் எளிமையான கவிதைகளாக வடித்திருக்கிறார். ,மற்றோருவர் கருட புராணத்தை தன் சொந்த நடை இல் வடித்துள்ளார். வேறு ஒருவர் நாம் எந்த ஒரு தலைப்பு கொடுத்ததாலும் நிமிட நேரத்தில் கிராமிய நடை கமழ பாட்டுகளாய் பதித்து விடுவார் .இங்கு இல்லத்தரசிகளும் உண்டு, தமிழ் ஆசான்களும் உண்டு, மருத்துவர்களும் அங்கு, என்ஜினீயர்களும் உண்டு, ஓய்வு பெற்ற அதிகாரிகளும் உண்டு, மாணவர்களும் உண்டு. எல்லோருடைய நல்லது கெட்டதுகளிலும் பங்கு கொள்கிறோம். மற்றவர்களுக்காக சந்தோஷப்படுகிறோம், அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்.இப்படி பலதும் உண்டு இங்கே.
இதில்என்ன ஒரு அருமை என்றால், அனைவரும் ஒன்றுபோல, ஒற்றுமையாக ஒரு தலைமை இன் கீழ் இயங்கி வருகிறோம். ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டும் தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டும் அவரவர் திறமைகளை வளர்த்துக் கொண்டும் வருகிறோம். இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் எது என்றும் அப்படிப்பட்ட தளம் என்ன வேண்டும் அறிய ஆவல் வருகிறது அல்லவா?
அது தான் 'ஈகரை தமிழ் களஞ்சியம்'...'உலகத்த தமிழர்களின் உறவுப்பாலம்' ... இதன் நிறுவனர் மலேசியாவில் வாழும் சிவா அவர்கள். சிவா, இதுநாள் வரை பல கவிதை போட்டிகள் கட்டுரைப் போட்டிகள் நடத்தி இருக்கிறார். பரிசும் கொடுத்திருக்கிறார் என்றாலும் இதுவரை எங்கள் தளத்தில் ஒரு விளம்பரத்தைக் கூட அவர் அனுமத்தித்ததில்லை என்பதை மிகப் பெருமையோடும் கர்வத்தோடும் கூறிக்கொள்கிறேன். தலைமை நடத்துனர்களும் அவரும் சேர்ந்து அப்படி ஒரு கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர் இந்த தளத்தை.
எங்களின் தளத்தில் எண்ணற்ற தமிழ் புதினங்களும், பயணக் கட்டுரைகளும், கவிதைகளும், அறிய, பல அரிய தகவல்களும் பொதிந்து உள்ளன. படிக்க இனிமையாகவும், பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷமாகவும் நிறைய இருக்கிறது இங்கு. எங்களின் தளத்தைப் போல இன்னும் எத்தனை எத்தனையோ நூறு தளங்கள் அல்லது ஆயிரம் தளங்கள் தங்களால் ஆனவரை தமிழுக்கு சேவை செய்கின்றன என்பதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.
ஆனாலும், இதிலும் ஒரு சிறிய துன்பம் இருக்கிறது. அது நம் எல்லோராலும் களைந்து எடுக்கப் படக்கூடியது தான். ஆனால் நாம் அனைவரும் ஒன்று கூடித்தான் அதை செய்யவேண்டும் நண்பர்களே !
இது போல இணையத்தமிழை பயன்படுத்துவது யார் என்று பார்த்தால், பெரிதும் அயல் நாட்டு வாசிகளும் தமிழ் ஆர்வலர்களும் மட்டுமே. அவர்களும் ஒரு 24 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். சிறியவர்கள் இன்னும் இங்கு வர ஆரம்பிக்கவில்லை.
அவர்களை எப்படியாவது தமிழ் கற்ற செய்யவேண்டியது பெரியர்வர்களான நம் பொறுப்பு என்றே நினைக்கிறேன். அதற்கு ஏதுவாக நிறைய விடியோக்கள் இருக்கின்றன. அவற்றின் உதவியுடன் சரியான ஒலி உச்சரிப்புடன் தமிழை கற்க முடியும். அவற்றை நாம் தான் அவர்களுக்கு போட்டு காட்டவேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை வளர்த்துவிட்ட வேண்டும்.
அரிச்சுவடி தமிழை அழகான எளிய பாடல்கள் மூலமும், சிறிய சிறிய கதைகள் மூலமும் பாடி புரியவைக்கிறார்கள். பஞ்ச தந்திரக்கதைகள் முதல் பல கதைகளும் அந்த வீடியோக்களில் உள்ளது. நாம் தான் அவற்றை நல்ல முறை இல் உபயோகப்படுத்தவேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மக்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொள்ள இதைவிட எளிதான வாய்ப்பு வேறு இல்லை என்றே தோன்றுகிறது.
எனவே, இந்த நூற்றாண்டின் கிடைத்தற்கு அரிய இந்த இணையத் தமிழை நாம் செவ்வனே உபயோகப்படுத்திக் கொள்வதோடு அல்லாமல் அதை அப்படியே பத்திரமாக காப்பாற்றி நம் அடுத்த தலை முறைக்கும் கொண்டு செல்லவேண்டும். மேலும், நம் முன்னோர்களின் நூல்களை காப்பாற்றிவிட்டோம் என்று பெருமை கொள்வதோடு நின்றுவிடாமல், அவைகளையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் பணியும் நம்முடையதே என்றும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய விஷயங்களை இங்கு பதிவிட்டுள்ளேன், பிழையேதும் இருந்தால் பொறுத்தருள்க!
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றாகவே உள்ளது.
ஓலைகளின் பதிவு , படி என பழைய கால துன்பங்களையும் ,
தற்காலத்திய பென்ட்ரைவ் உத்திகளையும் நன்றே விளக்கியுள்ளீர்.
படித்தேன் . ரசித்தேன்..
தலைப்புதான் மாற்றம் வேண்டுமோ!!!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் அக்கா. சின்ன அக்காவின் மலருக்கு மணம் சேர்த்துள்ளது உங்கள் படைப்பு. மிக்க நன்றி அக்கா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நன்றாகவே உள்ளது.
ஓலைகளின் பதிவு , படி என பழைய கால துன்பங்களையும் ,
தற்காலத்திய பென்ட்ரைவ் உத்திகளையும் நன்றே விளக்கியுள்ளீர்.
படித்தேன் . ரசித்தேன்..
தலைப்புதான் மாற்றம் வேண்டுமோ!!!
ரமணியன்
மிக்க நன்றி ஐயா !....
.
.
.
என்னவென்று மாற்றலாம்? .....நீங்களே சொல்லுங்கள்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் அக்கா. சின்ன அக்காவின் மலருக்கு மணம் சேர்த்துள்ளது உங்கள் படைப்பு. மிக்க நன்றி அக்கா.
மிக்க நன்றி மாமா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நடப்பு விஷயங்களை நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கிருஷ்ணாம்மா. உண்மை! அருமை!! பாராட்டுக்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234102krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:நன்றாகவே உள்ளது.
ஓலைகளின் பதிவு , படி என பழைய கால துன்பங்களையும் ,
தற்காலத்திய பென்ட்ரைவ் உத்திகளையும் நன்றே விளக்கியுள்ளீர்.
படித்தேன் . ரசித்தேன்..
தலைப்புதான் மாற்றம் வேண்டுமோ!!!
ரமணியன்
மிக்க நன்றி ஐயா !....
.
.
.
என்னவென்று மாற்றலாம்? .....நீங்களே சொல்லுங்கள்!
"எழுதியது கருத்தரங்கத்திற்கு --
வெளியிடுவது ஈகரையில்"
நீங்கள் கேட்டதால் .............
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3