ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்

Go down

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும் Empty போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 8:16 pm

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும் D67cc64bd124c425d77ff93f16ee0c2a
பெரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் அமேசான் பகுதிக்கும் மற்றும் அங்கு வாழும் மக்களுக்கும் வணிகத்திட்டங்களால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புவேர்ட்டோ மால்டொனாடோ என்ற சிறிய நகரத்திலுள்ள பூர்வகுடி மக்களிடம் பேசிய போப், அமேசான் பிராந்தியம் இதுவரை இம்மாதிரியான அச்சுறுத்தலை கண்டதில்லை என்று கூறியுள்ளார்.

அப்போது போப்பை சந்தித்த பழங்குடி மக்கள், தாங்கள் தங்கள் பகுதிகளிலிருந்து விரட்டப்படுவதாக கூறியதுடன், தங்களை பாதுகாப்பதற்கு உதவ வேண்டுமென்றும் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அர்ஜென்டினாவை சேர்ந்த 81 வயதாகும் போப் பிரான்சிஸ் லத்தீன் அமெரிக்க பகுதிக்கு மேற்கொண்டுள்ள ஒரு வாரகால சுற்றுப்பயணத்தின் இரண்டாவது மற்றும் கடைசி கட்டமாக பெருவிற்கு சென்றுள்ளார்.

போப் என்ன சொன்னார்?

வெற்று மார்போடு, தங்களின் உடலில் வர்ணம் பூசியும், தலையில் வண்ணமயமான இறகுகளுடன் கூடிய கிரீடம் அணிந்த பழங்குடியினர் புவேர்ட்டோ மால்டொனாடோவில் போப்பாண்டவரை நடனமாடியும், பாடியும் வரவேற்றார்கள் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அமேசான் பகுதியின் எல்லையில் உள்ள பெரு, பிரேசில் மற்றும் பொலிவியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போப்பை சந்திக்க வந்திருந்தனர்.

நன்றி
பிபிசி நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும் Empty Re: போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 8:20 pm

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும் A97f9b1f3efbc0be47ddcd9437886167

இன்று தங்களது சொந்த நிலங்களிலேயே அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள அமேசான் மக்கள் இதுவரை இந்நிலையை சந்தித்ததே இல்லை" என்று பேசிய போப் பிரான்சிஸ்க்கு கைத்தட்டல்களும், பறையடிப்பு ஒலியும் வரவேற்பாக கிடைத்தது.

"அமேசான் பல விவகாரங்களில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியாகும். ஒருபுறம், பெட்ரோலியம், எரிவாயு, மரம் மற்றும் தங்கம் ஆகியவற்றின் மீதுள்ள பெரும் வர்த்தக ஆர்வத்தின் காரணமாக அங்கு அழுத்தம் செலுத்தப்படுகிறது. மற்றொருபுறம், அமேசான் பிராந்தியத்தின் இயற்கை வளப் பாதுகாப்புக்காக மனிதர்களை மறந்து வக்கிரத்துடன் செயல்படுத்தப்படும் கொள்கைகளால் ஏற்படும் அச்சுறுத்தலும் இருக்கிறது."

"ஆமாம், சிலருக்கு, நீங்கள் ஒரு தடையாக அல்லது தொந்தரவாகக் கருதப்படுகிறீர்கள், ஆனால் நீங்கள் அனைவரும் உளச்சான்றின் கூக்குரலாய் இருக்கிறீர்கள்" என்று பழங்குடி மக்களிடையே பேசிய போப் தெரிவித்தார்.

அமேசான் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் எவ்வளவு பெரியது?

"அவர்கள் எங்களிடம் கேட்காமலேயே எங்கள் பிராந்தியங்களில் நுழைவதால் நாங்கள் பெருமளவில் பாதிப்படைகிறோம். மேலும், அவர்கள் எங்கள் நிலத்தில் துளையிட்டு பெட்ரோலியத்தை எடுக்கும்போது நாங்கள் இறந்துவிடுவோம்" என்று போப்பிடம் பேசிய பெருவிலுள்ள பழங்குடி மக்களின் பிரதிநிதியான யசிக்கா பாட்டியாச்சி தெரிவித்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும் Empty Re: போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 8:21 pm

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும் E10ca8fa50e3bb1a336f0a1adafd7d1b
நமது ஆற்றை அவர்கள் விஷத்தை கொண்டு நாசம் செய்து பெட்ரோலியத்தை எடுத்தால் நாம் பெரிதும் பாதிக்கப்படுவோம். வெளிநாட்டவர்கள் நம்மை பலவீனமானவர்கள் எனக் கருதுகின்றனர், மேலும் நம் நிலங்களை வெவ்வேறு வழிகளில் எடுத்துச் செல்வதற்கு திட்டமிடுகின்றனர். நமது நிலங்களை கவர்ந்து செல்வதில் அவர்கள் வெற்றியடைந்துவிட்டால் நாம் ஒட்டுமொத்தமாக மறைந்துபோவதற்கு வாய்ப்புள்ளது."

புவேர்ட்டோ மால்டொனாடோவைச் சுற்றியுள்ள பிராந்தியமான மட்ரி டி டியோஸ் சமீபத்திய ஆண்டுகளில் ஒழுங்குபடுத்தப்படாத தங்க சுரங்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஆறுகளில் பாதரசத்தின் அளவு ஆபத்தான அளவிற்கு உயர்வதற்கு வழிவகுக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெருவியன் அமேசானின் பிற பகுதிகளில் சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பழங்குடியினர் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

"இங்கு வாழும் பூர்வக்குடி மக்கள் குறித்து கவலை கொள்ளாமல் மற்ற நாடுகளுக்கான வற்றாத வள ஆதாரமாக அமேசானைப் பார்க்கும் வரலாற்றுக் கருத்தியலை உடைத்தெறிய வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று பெருவில் பேசிய போப் தெரிவித்தார்.
நன்றி
பிபிசி நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும் Empty Re: போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum