Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர்மூழ்கி மீதான ஒரு பார்வை
Page 1 of 1
நீர்மூழ்கி மீதான ஒரு பார்வை
நீர்மூழ்கி மீதான ஒரு பார்வை |
நீர்மூழ்கிக் கப்பல்கள் மனிதனின் கடற்பயண வரலாற்றில் இன்னொரு மைற்கல். பறவையைக் கண்டு விமானம் படைத்து, பறந்து, பாயும் மீன்களில் படகினைக் கண்டு தண்ணீரின் மேலாகப் பயணித்த மனிதனின் ஆசை அத்துடன் நின்றுவிடவில்லை.அவன் தண்ணீருக்கு அடியாலும் பயணிக்க ஆசைப்பட்டான். ஆசை என்பதைவிட தண்ணீரின் அடியாற் பயணிக்கவேண்டிய தேவை அவனுக்கு எழுந்தது. ஆம், போர் மனிதனுக்கு அந்தத் தேவையை உருவாக்கியது. போர்களின்போது எதிரிகளை நெருங்கிச்சென்று தாக்குவதற்கோ எதிரிகள் அறியாது பயணிப்பதற்கோ தேவையான வழிமுறைகள் பற்றிய தேடலின் விளைவே நீர்மூழ்கிக் கப்பல்கள். 1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால் பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாறு இக்கலத்திலிருந்தே தொடங்குகின்றது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நீர்மூழ்கிகள் பரந்துபட்டளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்காலக் கடற்படைகளின் பயன்பாட்டில் நீர்மூழ்கிகள் தாக்குதல், விமானந்தாங்கிகளின் பாதுகாப்பு, ஏவுகணைக் கட்டுப்பாடு மற்றும் வேவு போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கடற்கலங்களின் வடிவமைப்பே அவை நீரில் மிதப்பதற்குக் காரணமாகின்றது. அதாவது கப்பல் ஒன்று அதன் மொத்தக் கனவளவிலும் அதிகமான நீரினை இடம்பெயர்க்கும்போது அக்கப்பல் நீரில் மிதக்கின்றது. நீர்மூழ்கிகளும் நீரின் மேற்பரப்பில் இருக்கும்போது இதே தத்துவத்தின் அடிப்படையிலேயே நீரில் மிதக்கின்றன. எனவே நீர்மூழ்கிகள் நீருக்கு அடியிற் செல்ல வேண்டுமாயின், ஒன்றில் அவற்றின் நிறையினை அதிகரிக்க வேண்டும். இல்லாது போனால் அவற்றினால் இடம்பெயர்க்கப்படும் நீரின் கனவளவைக் குறைக்க வேண்டும். எனவே, நீர்மூழ்கிகளில் அவற்றின் நிறையினைக் கட்டுப்படுத்துவதற்காக, அவற்றிக் கீழ்ப்பகுதியில், புறச்சுவரின் உட்புறமாக Ballast Tanks என்றழைக்கப்படும் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நீரினாலோ அல்லது வளியினாலோ நிரப்பப்படுவதன் மூலம் நீர்மூழ்கிகளின் நிறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. இத்தாங்கிகள் Main Ballast Tanks என்றழைக்கப்படுகின்றன. இத்தாங்கிகளில் நீரினை நிரப்புவதன் மூலம் நீர்மூழ்கியை நீருக்கடியிற் கொண்டு செல்லவோ இல்லது நீரினை வெளியேற்றி வளியினை நிரப்புவதன் மூலம் நீர்மூழ்கியை நீரின் மேற்பரப்புக்குக் கொண்டுவரவோ முடியும். பொதுவாக நீருக்குள் இருக்கும்போது இந்தத் தாங்கிகள் நீர் நிரப்பப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் இத்தாங்கியில் நிரப்பப்பட்ட நீரின் காரணமாக நீர்மூழ்கியானது நீர் மேற்பரப்பிலிருந்து குறிப்பிட்டதோர் ஆழத்திலேயே பேணப்படும். இக்குறிப்பிட்ட ஆழத்திலிருந்து மேலதிக ஆழத்தைக் கூட்டிக்குறைப்பதற்காக ஆழக் கட்டுப்பாட்டுத் தாங்கி (Depth Control Tank) என்றழைக்கப்படும் மேலுமோர் சிறிய தாங்கி பயன்படுத்தப்படுகின்றது. இத்தாங்கி உயர் அழுத்தத்தைத் தாங்கவல்லது. இத்தாங்கியின் நீர்க்கொள்ளளவைக் கட்டுப்படுத்துவதன்மூலம் ஆழத்தைக் கூட்டிக்குறைக்க முடியும். இத்தாங்கியானது நீர்மூழ்கியின் புவியீர்ப்பு மையப் பகுதியிலோ அல்லது நீர்மூழ்கியின் சமநிலையைப் பேணக்கூடியவாறு அதன் அடிப்பரப்பில் சமச்சீராகப் பரந்தோ காணப்படும். நீர்மூழ்கிகள் நீரினுள் செல்லும் போது, நீரில் காணப்படும் உப்பின் தன்மை, ஆழத்தின் காரணமாக நீரினால் ஏற்படுத்தப்படும் அழுத்தம் போன்றவற்றினால் இத்தாங்கிகளின் அழுத்தம் உயர்கின்றது. இவ்வுயர் அழுத்தத்தைத் தாங்கவல்லதாக நீர்மூழ்கிகளின் இத்தாங்கிகள் உருக்கிரும்பினாலோ அல்லது ரைற்றானியம் உலோகத்தாலோ ஆக்கப்படுகின்றன. நீர்மூழ்கியின் சமநிலைக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அதன் சுழலியின் அருகில் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும் சமநிலைக் கட்டுப்பாட்டுச் செட்டையும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோன்று நீர்மூழ்கியின் புவியீர்ப்பு மையப்புள்ளியை அண்மித்துக் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும் பிரதான கட்டுப்பாட்டுச் செட்டைகள் நீர்மூழ்கியின் ஆழக்கட்டுப்பாட்டுச் செயற்பாட்டில் பங்காற்றுகின்றன. அவசர நேரத்தில் நீர்மூழ்கியை நீர்மேற்பரப்புக்குக் கொண்டுவருவதற்கு நீர்மூழ்கியிலிருக்கும் இரண்டுவகையான ஆழ மற்றும் சமநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதன்போது நீர்மூழ்கி மிக வேகமாக நீர் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்படுகின்றது. தற்போது பயன்பாட்டில் காணப்படும் அநேகமாக அனைத்து நீர்மூழ்கிகளும் அணு சக்தியினால் இயங்குபவையாகவே காணப்படுகின்றன. ஆனால், ஆரம்பத்தில் நீர்மூழ்கிகள் மனிதவலுவால் இயக்கப்படுபவையாகவே காணப்பட்டன. 1863 இல் முதலாவது இயந்திரவலுவால் இயக்கப்படும் நீர்மூழ்கி பிரான்சில் உருவாக்கப்பட்டது. இது அழுத்தப்பட்ட வளியின்மூலம் வலுவூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து 1864 இல் முதலாவது நீராவி இயந்திரத்தால் இயங்கும் நீர்மூழ்கி ஸ்பெயினில் உருவாக்கப்பட்டது. நீர்மூழ்கியில் அணுசக்திப் பயன்பாடு அறிமுகப்படுத்தப்படும்வரை 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான நீர்மூழ்கிகள் நீருக்கடியில் பயணிக்கும்போது மின்கலத்தின் மூலமும் நீர்மேற்பரப்பில் பயணிக்கும்போது டீசல் இயந்திரத்தின் மூலமும் இயங்கிக் கொண்டிருந்தன. இவ்வாறு இயந்திரத்தின்மூலம் இயங்கும்போது அவற்றின் மின்கலங்கள் மீள்மின்னேற்றம் செய்யப்பட்டன. இரண்டாம் உலகப்போர்க் காலப்பகுதியில் ஜேர்மனியப் பொறியாளர்கள் ஐதரசன் எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் நீர்மூழ்கியை உருவாக்கினர். போரின் பின்னரான காலப்பகுதியில் ரஸ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கிக்கான ஐதரசன் எரிபொருள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபோதிலும் அதன் முடிவு திருப்திகரமாக அமையவில்லை. சாதாரணமாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கியில் 80 இற்கும் அதிகமான பணியாளர்களும் சாதாரண நீர்மூழ்கிகளில் அரைவாசியளவு பணியாளர்களும் பணியாற்றுவர். 1985 இல் நோர்வஜியக் கடற்படை தமது நீர்மூழ்கிகளில் முதலாவதாகப் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது. அதைத்தொடர்ந்து டென்மார்க், சுவீடன், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் தமது கடற்படை நீர்மூழ்கிகளில் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது. |
Similar topics
» விமானந்தாங்கிக் கப்பல் மீதான ஒரு பார்வை
» மாறட்டும் பெண் மீதான சமூகத்தின் பார்வை!
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்
» நீர்மூழ்கி கப்பலை தெரியுமா?
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
» மாறட்டும் பெண் மீதான சமூகத்தின் பார்வை!
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்
» நீர்மூழ்கி கப்பலை தெரியுமா?
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|