ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_c10பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_m10பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_c10 
heezulia
பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_c10பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_m10பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_c10 
mohamed nizamudeen
பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_c10பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_m10பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?

Go down

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Empty பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?

Post by ayyasamy ram Wed Jan 17, 2018 6:40 pm

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? 25
-
அலசல்

வலுவான எலும்புகள், ஆரோக்கியமான பற்களுக்கு வைட்டமின் D
அவசியம் என்று நமக்கு தெரிந்தாலும் ஒவ்வொருவருக்கும் எந்த
அளவுக்கு தேவை, அதை எப்படி பெறுவது, யாருக்கெல்லாம்
அவசியம் என்பதில் எப்போதும் குழப்பம் உண்டு.

இத்துடன் மருத்துவர்களும் தற்போது வைட்டமின் D ஊட்டச்
சத்து மாத்திரைகளையும் பரிசோதனையையும் அதிகம்
பரிந்துரைப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களில்
வெளிவரும் வைட்டமின் டி குறித்த விளம்பரங்களும் இந்த
பீதியைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் உண்மை நிலவரம்தான் என்ன... எலும்பு அறுவை
சிகிச்சை நிபுணர் ஆறுமுகம் விளக்கமளிக்கிறார்...

வைட்டமின் D பரிசோதனை யாருக்கு அவசியம்?

‘‘எலும்பு சம்பந்தமான நோயால் தீவிரமாக
பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே வைட்டமின் டி பரிசோதனை
அவசியம். சிகிச்சைக்கு வருகிற எல்லோருக்கும், உடனே
பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இது தவிர, கட்டணம் அதிகம் கொண்ட பரிசோதனை இது
என்பதால் எளிய மக்களுக்கு, நேரிடையாகவே சப்ளிமென்ட்
மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்வோம்.

பரிசோதனை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம்
கொண்டவர்களுக்கு மட்டும் பரிசோதனையின் அடிப்படையில்
சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள பரிந்துரைப்போம்.

இதில் விதிவிலக்காக சில மருத்துவர்கள் அப்படி பயமுறுத்தலாம்.
அது தேவையற்ற அச்சம்தான். ஒருவேளை ஒரு மருத்துவரின்
பரிந்துரையில் மாற்றுக் கருத்து உங்களுக்கு இருந்தால்,
தயங்காமல் செகண்ட் ஒப்பீனியன் இன்னொரு மருத்துவரிடம்
பெறுவதில் தவறு இல்லை.’’
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Empty Re: பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?

Post by ayyasamy ram Wed Jan 17, 2018 6:40 pm


நம் உடலே போதுமான வைட்டமின் D ஊட்டச்சத்தை உற்பத்தி
செய்துகொள்ள முடியுமா?
----
‘‘நமக்குத் தேவையான வைட்டமின் D பெரும்பகுதியை
சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் UVB கதிர்களிலிருந்து
தோல் உற்பத்தி செய்து கொள்கிறது. போதுமான சூரிய ஒளி
கிடைக்காதபோதுதான் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பூமியின் வடகோள நாடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும்
இந்த வைட்டமின் சத்து குறைபாடுள்ளவராக இருக்கிறார்கள்.
கருமை நிறமுடைய ஆப்பிரிக்கர்களின் தோலுக்கு வைட்டமின்
D உற்பத்தி செய்யும் திறன் குறைவாக இருக்கிறது.’’

வெப்ப பிரதேசமான நம் நாட்டில் இருப்பவர்களுக்கு
வைட்டமின் டி பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது?

‘‘நம் ஊரில் சூரிய ஒளிக்கு குறைவே இல்லை என்றாலும்,
இன்று கார்ப்பரேட் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள்
பெரும்பாலும் முழுக்கை சட்டை, காலில் ஷீமற்றும் காலரில்
இறுக்கமான டை அணிபவர்களாகவும், ஏ.சி அறைகளிலும்,
ஏ.சி கார்களிலும் நாளின் பெரும் பொழுதை கழிப்பவர்களாகவும்
இருக்கிறார்கள். நேரடியான சூரியக்கதிர் இவர்கள் உடல் மீது
படுவதில்லை.

இதுதவிர, நவநாகரீகப் பெண்கள் வெளியில் சென்றாலே
தங்கள் தோலின் நிறத்தை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்க்ரீன்
லோஷன் தடவிக்கொள்கிறார்கள். இதனால் புற ஊதாக்கதிர்கள்
ஊடுருவுவது தடுக்கப்பட்டு வைட்டமின் ‘டி’ பற்றாக்குறை
ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.

நம் நாட்டிலும் மழை, குளிர் காலங்களில் சூரிய ஒளி
குறைவாக இருக்கும் காலங்களில் வைட்டமின் D
சத்துக்கள் நிறைந்த உணவு மூலம்
பற்றாக்குறையை சரி செய்து கொள்ளலாம்.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Empty Re: பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?

Post by ayyasamy ram Wed Jan 17, 2018 6:43 pm

"யாருக்கெல்லாம் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது?

‘‘வயது வித்தியாசமோ, பாலின வித்தியாசமோ கிடையாது.
யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். கர்ப்பிணிகள்,
வெளியில் அதிகம் செல்லமுடியாத வயதானவர்கள், குழந்தைகள்,
பாலூட்டும் தாய்மார்கள், ஏதேனும் நோயால் மிகவும் பலவீனமாக
இருப்பவர்களுக்கு இந்த சத்துக்குறைவு ஏற்படலாம்.’’

வெயிலில் 10 நிமிடம் உட்கார்ந்திருந்தாலே ஒருவருக்குத்
தேவையான வைட்டமின் டி சத்து முழுவதுமாக கிடைத்துவிடுமா?

‘‘காலை இளம் வெயிலில் அரை மணிநேரம் கட்டாயம்
உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடியாதவர்கள் 10 நிமிடம்
வெயிலில் நடந்துவிட்டு வரலாம். இப்போது
உடற்பயிற்சிகளையும் ஜிம்முக்குள்ளேயும், வீட்டுக்குள்ளேயே
ட்ரெட்மில்லில் நடக்கவும் செய்கிறார்கள்.

திறந்தவெளி மைதானங்கள் அல்லது பூங்காக்களில்
பயிற்சிகளை செய்ய வேண்டும். மேலும் கண்கள் மட்டும்
தெரியும்படி உடலை முழுவதும் மறைக்காமல் சூரிய ஒளி
உடலுக்கு போதுமான அளவு கிடைக்கும் வகையில் ஆடைகளை
அணிய வேண்டும்.

பெரும்பாலான நேரம் வெயிலில் வேலை செய்பவர்களுக்கு
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் சத்தே போதுமானது.’’


‘வைட்டமின் D’ சத்து கிடைக்கும் உணவுகள்..
.‘‘மீன், மாட்டு ஈரல், முட்டை மஞ்சள்கரு, பால் பொருட்களில்
அதிகமாக இருக்கிறது. பாதாம் பால், சோயா பால், ஆரஞ்சு
பழச்சாறு, நவதானியங்கள், மற்றும் காளான் ஆகியவற்றில்
சற்று குறைவாகவும் இருக்கிறது.’’வைட்டமின் டி பற்றிய
விளம்பரங்கள் பற்றி...‘‘நன்றாக இருந்தால் ரசியுங்கள்...
இல்லாவிட்டால் சேனல் மாற்றுங்கள். அவைகளுக்கு அதற்கு
மேல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.’’
-
----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Empty Re: பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?

Post by ayyasamy ram Wed Jan 17, 2018 6:43 pm



ஒருவர் வைட்டமின் D சத்தை பராமரிக்க வேண்டிய அளவு என்ன?

‘‘வைட்டமின் D கவுன்சிலானது ஒருவர் 50ng/ml
(Equivalent to 125 nmol/L) அளவில் பராமரிக்க வேண்டும்
என்று பரிந்துரைக்கிறது. இதில், 0 - 40 ng/ml - பற்றாக்குறை,
40 - 80 ng/ml - போதுமானது, 80 - 100 ng/ml - உயர்வு,
100 ng/ml-க்கு மேல் - விரும்பத்தகாதது, 150 ng/ml க்கு மேல் -
நச்சு என்று அந்த கவுன்சில் எச்சரிக்கிறது.’’யாருக்கெல்லாம்
சப்ளிமென்ட் தேவைப்படும்?

‘‘பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், க\
கர்ப்பிணிப்பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்
ஆகியவர்கள் அபாயகட்டத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு
வைட்டமின் D பரிசோதனை செய்து 20 ng/ml க்கும் குறைவாக
உள்ளவர்களுக்கு சப்ளிமென்ட் மாத்திரைகளை பரிந்துரைப்போம்.’

’சராசரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின் D
சப்ளிமென்ட் அளவு என்ன?

‘‘0 - 6 மாதங்கள் 1000 IU, 7 - 12 மாதங்கள் 1500 IU, 1 - 3
வருடங்கள் 2500 IU, 4 - 8 வருடங்கள் 3000 IU, 9 வயதுக்குமேல்
அனைவருக்கும் 4000 IU, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும்
தாய்மார்களுக்கும் 4000 IU. இதுவே பரிந்துரைக்கப்பட்ட அளவு.’’
வைட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் என்ன?

‘‘தீவிர பற்றாக்குறையால் குழந்தைகள் மத்தியில் என்புருக்கி
நோயும்(Rickets) வயதானோருக்கு ஏற்படும் எலும்பு நலிவு(
Osteomalasia) மற்றும் எலும்புப்புரை(Osteoporosis) ஆகிய
நோய்களுக்கு முக்கிய காரணமாகிறது. நடுத்தர வயதினர்
எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள்.’’அளவுக்கு அதிகமாக
வைட்டமின் D சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வதால் ஏற்படும்
விளைவுகள் என்ன?

‘‘நீர்ச்சத்துக் குறைவு, வாந்தி, பசியின்மை, எரிச்சல், மலச்சிக்கல்,
மயக்கம் மற்றும் தசைச்சோர்வு ஏற்படும். மருத்துவரின்
ஆலோசனைப்படி, சப்ளிமென்ட் மாத்திரைகளை சாப்பிட்டால்
போதும். தாங்களாகவே அதிகப்படியான சப்ளிமென்ட் மாத்திரைகளை
எடுத்துக்கொள்வதையும், குறிப்பாக குழந்தைகளுக்கு
கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.’’
-
--------------------------------

- உஷா நாராயணன்
குங்குமம் டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன? Empty Re: பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum