ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

3 posters

Go down

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? Empty விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 2:06 pm

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? MjEbkLV8QCOB8nNStKIl+b11668fe5e4f26c343f8953d3e1b9ead

சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய புதிய சென்னை மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுத்துள்ளது.
சென்னை மாவட்டம் விரிவாக்கம்: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? Empty Re: விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 2:07 pm

இணைப்பின் பின்னணி?: மாநிலத்தின் இதர மாவட்டங்களைப் போல், சென்னை மாவட்டம் அதிகாரங்கள் பெற்றதாக இல்லை. காரணம் இங்கு நடைபெறும் பெரும்பாலான பணிகளில் மாநகராட்சி நிர்வாகமே முன்னிலை வகிக்ஹகிறது. மேலும் சென்னை மாநகராட்சி ஆணையராக முதன்மை செயலாளர் அந்தஸ்துக்குக் குறையாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டுமே நியமிக்க முடியும்.
இந்நிலையில், சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதையடுத்து இணைக்கப்பட்ட புதிய பகுதிகளுக்கென வளர்ச்சித் திட்டத்திற்கான கூடுதல் நிதியையும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியிருந்தார். இதனால் சில கோடி ரூபாய் நிதியாதாரத்தில் இயங்கி வந்த நகராட்சிகளில்கூட ரூ.100 கோடிக்கும் மேல் கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அனைத்தும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பள்ளிக் கூடங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன.
ஆனால், வருவாய் எல்லைகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படாததால் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாத நிலை இருந்து வந்தது. குறிப்பாக திருவொற்றியூரில் கச்சா எண்ணெயை கடலில் கொட்டியபோது ஒவ்வொரு நாளும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இங்கு முகாமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதனால் அவர் இங்கு வந்து செல்வதற்கே முழு நாளும் செலவிடும் நிலையும் ஏற்பட்டது. திருவொற்றியூரில் அமைச்சர்கள் பங்கேற்கும் எந்த அரசு விழாவானாலும் ஆட்சியர் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? Empty Re: விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 2:08 pm

மனு கொடுக்க 50 கி.மீ. பயணம்: எந்தவொரு பிரச்னை என மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்க வேண்டுமெனில் திருவள்ளூர்தான் செல்ல வேண்டும். மேலும் இதற்காக சுமார் 50 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்.
தற்போது சென்னை மாவட்டத்துக்குள் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இனி 8 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5 கி.மீ. தூரத்தில் உள்ள தண்டையார்பேட்டை அலுவலகம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் எளிதில் அணுக முடியும்.
மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஒரே மாதிரியான எல்லைகளாக இருப்பதே சென்னை மாநகர மக்களுக்கு வசதியாக இருக்கும் என்பதே இந்த அறிவிப்பின் பின்னணி ஆகும்.
இதுகுறித்து திருவொற்றியூர் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி ஆகியோர் கூறியது:
நிர்வாக வசதிக்காக சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகளும் நீண்டகாலமாக போராடி வந்தன. ஆனால், பொதுமக்கள் எவ்வித போராட்டமும் நடத்தாத நிலையில், இப்பகுதிகளை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசின் நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியதாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் இனி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து செயலாற்ற வேண்டும். மேலும், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுபவர், மாநகராட்சி ஆணையருக்கு இணையான அந்தஸ்தில் உள்ளவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மாநகராட்சி துணை ஆணையர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை, உத்தரவு போன்றவைகளை அளிக்க முடியும். இதற்கேற்ற தேவையான சட்டத்திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றனர் அவர்கள்.
சென்னை மாவட்டத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள், சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட வசதிகளையும் எளிதில் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது என்று வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி ஜி.வரதராஜன் கூறினார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? Empty Re: விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

Post by krishnaamma Wed Jan 17, 2018 2:36 pm

நல்ல தகவல் ஐயா! ...............நன்றி !  நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? Empty Re: விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:29 pm

krishnaamma wrote:நல்ல தகவல் ஐயா! ...............நன்றி !  நன்றி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1257019
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? Empty Re: விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

Post by SK Thu Jan 18, 2018 1:05 pm

நல்ல யோசனை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? Empty Re: விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 12:24 pm

SK wrote:நல்ல யோசனை
மேற்கோள் செய்த பதிவு: 1257137
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா? Empty Re: விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பயணிகளின் கைப்பை சோதனை ரத்து: சென்னை உள்பட 6 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்
» சென்னை மாவட்டம்(chennai)
» சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» தி.மலை கிரிவலப்பாதை ரூ.65 கோடியில் விரிவாக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum