புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
113 Posts - 75%
heezulia
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
278 Posts - 76%
heezulia
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளோடும், பொழுதோடும்! Poll_c10நாளோடும், பொழுதோடும்! Poll_m10நாளோடும், பொழுதோடும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளோடும், பொழுதோடும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 10:59 am

நாளோடும், பொழுதோடும்! CbTIWXqxTVaiRS6rsXyV+E_1515731927



பாலக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த மிருதுளா, 'டிவி'யில் ஒளிப்பரப்பான அந்த செய்தியை கேட்டு, அப்படியே கீரையை மேஜை மீது வைத்து, செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். 
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், பொது இடத்தில் இயற்கை உபாதையை கழித்தாள் என்று பீனிங் என்ற இளம் பெண்ணை பிடித்து கேஸ் போட்டு, 90 யூரோ அபராதம் விதித்து விட்டனர். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடி விட்டாள்.


ஆண்களுக்கென்று, 30க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருக்கும் நகரத்தில், பெண்களுக்கு மூன்றே மூன்றுதான் இருக்கின்றனவாம். அதுவும், அப்பெண் இருந்த இடத்திலிருந்து, 2 கி.மீ., தாண்டிதான் ஒன்று இருந்ததாம். நீதிபதி, 'அவசரத்திற்கு ஆண்கள் கழிப்பறையை உபயோகித் திருக்கலாமே... சிரமம் தான் என்றாலும், அது ஒன்றும் அசாத்தியமான விஷயம் இல்லையே...' என்று பேச, கொதித்து விட்டனர், பெண்கள். போராட்ட தேதி அறிவித்திருக்கின்றனர் என்று விவரித்துக் கொண்டிருந்தார், செய்தி வாசிப்பாளர். 


கேட்கக் கேட்க அவளுக்கு கடுப்பாக இருந்தது. வளர்ந்த நாடுகளில் கூட பெண்ணுக்கு சமத்துவம் இல்லையே... இத்தனைக்கும் அவளுக்கு மிகவும் பிடித்த நாடு, நெதர்லாந்து. அலுவலகம், அவளை எட்டு மாத பயிற்சிக்கு அங்கேதான் அனுப்பியது. காற்று, நீர், மக்கள், அவர்களின் இனிமையான பண்பு, மலை, சுரங்கங்கள் என்று இயற்கையை சிதைக்காமல் போற்றி வாழும் அந்த பண்பாட்டை அவள் மிகவும் விரும்பினாள்.


'ஆனால், இந்த சம்பவம் மிக மோசமாக அல்லவா இருக்கிறது... கழிப்பறைகள் இரு பாலினருக்கும் சமமாக அல்லவா அமைக்கப்பட்டிருக்க வேண்டும்... இதில், அபராதம் வேறு... வெரி பேட்...' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.


அச்சமயம், ''ஹேய்... என்ன ஆச்சு... நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு,'' என்ற விவேக்கின் குரல், அவளை நனவுலகுக்கு இழுத்து வந்தது.



தொடரும்......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:00 am

''ஓ சாரி விவேக்... நீங்க வந்தத கவனிக்கலே. பாரேன் இந்த நியூசை...'' என்று அதைப் பற்றி அவள் விளக்க, அதைக் கண்டுகொள்ளாமல், ''பசி வயித்தை கிள்ளுது; டின்னர் ரெடியா?'' என்றான், விவேக்.


''இதோ பத்து நிமிஷம்...'' என்றவள், ''நீயே சொல்லு... ஆண்களுக்கு, 30 டாய்லெட், பெண்களுக்கு, மூணே மூணுன்னு வெச்சிருக்கிறது என்ன நியாயம்...'' என்றாள். 
''மிருதுளா... மொதல்ல டீ போடறியா... எனக்கு தலை வலிக்குது...''


''இதோ டீ போடறேன்; இது தப்பா, இல்லயான்னு, 'யெஸ் ஆர் நோ' மட்டும் சொல்லு... பெண்கள் மீது காட்டற பாரபட்சம் தானே?''
''தலைவலின்னு சொல்றேனே அது உன் காதுல விழலயா...''


''உனக்கு ஏன் விவேக் புரிய மாட்டேங்குது... இந்த செய்தி என்னை பாதிச்ச அளவுக்கு உன்னையும் பாதிச்சிருக்கான்னு தெரியணும்; அதான் தவிக்கிறேன். 'ஆமாம் தப்புதான்; பாவம் அந்த பெண் என்ன பண்ணுவா'ன்னு ஒரு வார்த்தை சொன்னா என்ன குறைஞ்சு போய்டுவே...''


''டாமிட்,'' என்று தினசரியை துாக்கி எறிந்தான். முகம் சட்டென்று சிவந்தது; பற்கள் ஒன்றையொன்று கடித்துக் கொண்டன.


''என்னடி பிடிவாதம் உனக்கு... மனுஷன் செத்து சுண்ணாம்பா வரானேன்னு கொஞ்சமாவது இரக்கம் இருக்கா... என்னை விட உனக்கு இப்ப, அந்த நெதர்லாந்து நியூஸ் தான் முக்கியமா போச்சா... வந்துட்டா, யெஸ் சொல்லு, நோ சொல்லுன்னு டீச்சர் மாதிரி...''


அவனை கோபத்துடன் பார்த்த மிருதுளா, பின், 'விருட்'டென்று சமையலறைக்கு சென்று, சில நிமிடங்களில் தேநீர் தயார் செய்து வந்து, அவனிடம் நீட்டினாள்.


அவளின் முகத்தை பார்க்காமலே வாங்கி, கண் திறக்காமலே குடித்து, 'தொப்'பென்று பெரிய சத்தத்துடன் டீப்பாய் மீது டம்ளரை வைத்தான்.


''இப்ப பேசலாமா... நார்மல் ஆயிட்டீங்களா... ஐ மீன் மனுஷனா ஆயிட்டீங்களா...'' என்றாள் சூடாக!


''வேணாம் மிருதுளா... மூட் தெரியாம விளையாடாதே...'' அவன் குரல் இறுக்கமாக ஒலித்தது.


''விளையாடறேனா... இது சீரியஸ்; நமக்கு கல்யாணம் ஆகி, ஒரு வருஷம் 
கூட ஆகல. இன்னும் எவ்வளவோ காலத்துக்கு நாம சேர்ந்து வாழணும்... ஒவ்வொரு விஷயத்துலயும் நம்ம ரெண்டு பேரும் என்ன நினைக்கிறோம்ன்னு தெரிஞ்சுக்க வேணாமா...''


''இதென்ன இவ்ளோ இம்மெச்சூர்டா இருக்கே...'' என்றவன், ''ரெண்டு மணி நேரம் கழிச்சு இதப் பத்தி பேசுவோம்,'' என்று எழுந்தான். அவனை தடுத்து, ''உன்னோட அபிப்ராயம் என்னங்கறத சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்... வேணும்னே என்னை வெறுப்பேத்துற...'' என்றாள்.


''ஓ மை காட்! உனக்கு ஏன் புரியமாட்டேங்குது... நாளையிலருந்து மூணு நாள் செமினார்; அதை, நல்லபடியா முடிக்கணுமேன்னு நானே, 'டென்ஷன்'ல இருக்கேன்,'' என்றான், எரிச்சலுடன்!


''அப்போ நான் சொல்றதையும் கேட்டுக்கோ...''
''என்ன?''
''அம்மா வீட்டுக்கு போறேன்.''
''போ.''
''மனசு சரியானதும் வரேன்.''
''ஓகே!''
''அப்படின்னா உனக்கு கவலை இல்ல... நான் இல்லேன்னாலும், தனியா இருந்துப்பே...''
''ஆமாம்.''
''பெண்ணோட மனச புரிஞ்சுக்க விரும்பாத ரவுடி நீ...''


தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:01 am

பேசாமல் எழுந்து வெளியே போனான், விவேக். சிறிது நேரத்தில், சப்பாத்தியும், பாலக்கீரை குழம்பும் காத்திருந்தன. இருவரும் பேசாமல் சாப்பிட்டு, துாங்கச் சென்றனர். 'பெண் ஓய்வில்லாத போராளி; கல்வி, பொருளாதாரம், தைரியம் இருந்தாலும், இன்னும், ஆண் - பெண் சமத்துவம் என்பது கேள்விக்குறியாகத் தானே உள்ளது...' என்று நினைத்தாள், மிருதுளா.


காலையில், அலுவலகம் கிளம்பும்போது, அவள் எதிரில் வந்தான், விவேக். முகம் திருப்பிக் கொண்டாள், மிருதுளா.


''இன்னிக்கு, 'கேப்' பிடிச்சு ஆபிசுக்கு போயிடு; எனக்கு கம்பெனி பிக்கப்,'' என்றான். 
இப்போதாவது, 'நீ நேத்துக் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் சொல்லவா...' என்று கேட்டு, ' பாவம் அந்த பெண், 'டாய்லெட்' இல்லன்னா என்ன செய்வாள்...' என்று சொல்வான் என, எதிர்பார்த்தாள்.


ஆனால், அவனோ, தன், 'டையை' சரி செய்து கொண்டிருந்தான்.
''பால், பேப்பர், சமையல் எல்லாம் பாத்துக்கணும்; வீட்டுச் சாவி பத்திரம்...'' என்றாள்.
''ஏன்... என்ன திடீர்ன்னு?''
''அம்மா வீட்டுக்கு போறேன்னு நேத்து சொன்னேனே...''


''என்ன சொல்றே... ஏதோ விளையாடறேன்னு பாத்தா, அந்த அளவுக்கு இப்ப என்ன ஆச்சு?''
''வேணாம்; என்னை தனிமையா இருக்க விடு; நான் ரொம்ப, 'ஹர்ட்' ஆகியிருக்கேன்; அம்மா வீட்டுலயாவது கொஞ்சம் ரிலாக்ஸாக முடியுமான்னு பாக்கறேன்,'' என்றாள். 


அவன் திடுக்கிட்டு அவளையே பார்த்தான். பின், மெல்ல, ''சரி... உன் விருப்பம்; கோபம் குறைஞ்ச பின் திரும்பி வா... ஆனா, ஒன்று தெரிஞ்சுக்க... நான் தெரிஞ்சு உன்னை, 'ஹர்ட்' பண்ணயதே இல்ல; பண்ணவும் மாட்டேன்,'' என்றான்.


மாலையில், அலுவலகம் முடிந்து வந்தவனின் மனம் தவித்தது. 'மிருதுளா, உனக்கு ஏன் பொறுமையே இல்ல... அப்படிப்பட்டவள் இல்லயே நீ... ஒரு பூ மலர்ந்து மடியும் அதிசயத்தை சிறுமி போல பார்த்து ரசிப்பவள்; ரோஜாவுக்கு மட்டுமல்ல, உண்மைக்கும் முட்கள் உண்டு என்பதை புரிந்தவள். சிறிய உதவிகளை மறக்காமலும், சிறிய தவறுகளை மறப்பதுமான உன் நல்ல பண்புக்கு நான் அடிமை என்பது உனக்கு தெரியுமா... தாய் வீடு உன் மனதை குளிர்விக்கட்டும். 


ஆனா, நீ மனக் காயத்துடன் போயிருக்கிறாய்; அதுதான் என்னை வருத்துகிறது...' என்று பலவாறாக நினைத்தபடி வண்டியை செலுத்தியவன், அப்போதுதான் கவனித்தான்; அனிச்சை செயலாக தன் அம்மா வீட்டிற்கு வந்து விட்டதை!


உள்ளே பேச்சு குரல்களும், சிரிப்பு சத்தமும் கேட்க, 'இந்த நேரத்தில், அம்மா புத்தகம் தானே படிச்சுட்டு இருப்பா...' என்று நினைத்தபடி, வீட்டிற்குள் நுழைந்தான்.


அங்கே அம்மாவும், மிருதுளாவும் பேசியபடி, குறுக்கெழுத்து புதிருக்கு விடை தேடிக் கொண்டிருந்தனர். ''வாடா விவேக்... உட்கார்; காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்,'' என்று எழுந்து, சமையலறைக்கு போனாள், அம்மா.


''நீ எப்படி இங்க... உன் அம்மா வீட்டுக்கு போறதா சொன்னியே...'' என்றான்.
''என் அம்மா வீடுன்னு எப்போ சொன்னேன்?'' என்றாள் அவள் மிருதுவாக!


''உன் அம்மா, எனக்கும் அம்மாதான் விவேக்... இன்னும் சொல்லப் போனா, எங்க ரெண்டு பேரோட எண்ணமும் ஒரே மாதிரி இருக்கு... என்னைப் போலவே அம்மாவுக்கும் நெதர்லாந்து விஷயத்துல கோபம்,'' என்றவள், ''சாரி... உன் மீது ரொம்ப கோபப்பட்டுட்டேன்; நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்ன்னு சினிமா பாணியில் ஆசைப்பட்டது தப்பு தான். 


அது, யதார்த்தம் இல்லன்னு இப்ப தோணுது. வயசு, அனுபவம், சிந்தனை, ஒரு விஷயத்தை பாக்கிற பார்வை எல்லாமே ஆளுக்கு ஆள் மாறுபடுது. அம்மாகிட்ட மனம் விட்டு இதைப் பத்தி பேசினதும், மனசு லேசாகிடுச்சு. இனிமே லட்சிய தம்பதி கனவெல்லாம் இல்ல; பிராக்டிகல் அண்ட் லவபிள் தம்பதி. சரியா...'' என்ற மிருதுளாவை வியப்புடன் பார்த்தான்.


வானதி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக