ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi

Go down

சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi Empty சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 9:52 am

நீண்ட நெடிய கலாசாரப் பெருமையைக்கொண்ட நம் நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் மனிதனின் வாழ்வை மேம்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் உருவாக்கப்பட்டதே. அந்த வகையில் மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் திருவிழாவின் முதல் நாள் விழாவாக மார்கழி மாதத்தின் கடைசி நாளில் வரும் போகிப் பண்டிகை அமைந்திருக்கிறது.
பண்டைய தமிழர்களின் வழக்கப்படி ஆண்டின் கடைசி நாளான இந்த நாளில், அந்த ஆண்டு முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் நல்லவற்றைத் தொடர்ந்து செய்யவும் உறுதி ஏற்பார்கள். இதுவே ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற கருத்துருவமாகத் தோன்றியது. ‘போக்கி’ எனும் இந்தப் பண்டிகையே குப்பை கூளங்களை நீக்கி வாழ்விடங்களைச் சுத்தமாக்கும் நாளாக மலர்ந்தது. நாளடைவில் ‘போக்கி’ என்பது மருவி “போகி” என்றானது.
சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi PeFodLmRAOnRyLW2ChNr+b50c81d5edcab8fdcea1ea6c0860a9ef



‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும்விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில் மழையை வரவழைக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi Empty Re: சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 9:54 am

போகி என்றால் ‘மகிழ்ச்சியானவன்’, ‘போகங்களை அனுபவிப்பவன்’ என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே ‘போகிப் பண்டிகை’ எனப்படுகிறது.
சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi MysdEohR9mQsIa2obG7F+7024cc7452daebfec1b4d4d907931bf6




தை மாதம் குளிர்காலத்தின் உச்சபட்ச காலம். எனவே, அந்த மாதத்தின் முந்தின அதிகாலையில் மக்கள் குப்பைகளைக் கொளுத்தி, குளிர் காயும் வழக்கம் இருந்துவருகிறது. சிறுவர்களும் சிறுமிகளும் கூடி நமது பண்டைய வழக்க முறைப்படி சிறிய பறைகளைவைத்து முழங்குவார்கள். விலங்குகளை விரட்ட முழங்கப்பட்ட பறையொலி இன்றும் இந்த போகிப்பண்டிகை அன்று மட்டுமே முழங்கப்படுகிறது. மாட்டுத்தோலால் செய்யப்பட்ட சிறிய பறைகளும், உடுக்கைகளும் விற்கப்பட்டு அவை குழந்தைகளால் வாங்கப்படுவதை இன்றும் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். போகி அன்று அதிகாலையில் தீயின் முன்பாகக் குழந்தைகள் கூடி, வேகமாகப் பறை முழங்கி உற்சாகக் குரல் எழுப்புவார்கள். தீ அணையும் நேரத்தில் பறைகளை வேகமாக முழக்கி, உடைத்து, தீயில் போடுவதும் உண்டு. இந்த இனிமையான நிகழ்வை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம். இதே நாளில் கிராமப்புறங்களில் பெண்கள் தீயைச் சுற்றி கும்மியடித்து, மண்ணின் சாமிகளை வரவேற்றுப் பாடும் பாடல்களைப் பாடுவார்கள்.
போகிக்கு முந்தைய நாளில் வீடு வெள்ளையடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். போகிப் பண்டிகை அன்று அதிகாலையில் நிலைப்பொங்கல் வைக்கும் வழக்கம் இன்றும் நமது தென்மாவட்டப் பகுதிகளில் இருக்கிறது. அதாவது வீட்டுத் தெய்வங்களை எண்ணி பொங்கலிட்டு, மறைந்துபோன சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களுக்குச் சேலைவைத்து வணங்கும் வழக்கம் இது. பொங்கலிடுவதற்கு முன்னர் வீட்டின் கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, கருந்துளசி, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi Empty Re: சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 9:57 am

சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi JPXfpcmESt2IKapy8LaH+c82e607625593c2c951750e623c37b0a

முந்தையக் காலங்களில் எல்லாவிதக் குறிப்புகளும் பனையோலை ஏட்டில்தான் எழுதப்படும். இலக்கியங்களும், புராணங்களும்கூட பனையோலையில்தான் இருந்துவந்தன. படித்தவர்களின் வீட்டில் பரணெங்கும் கிடந்த இந்தப் பனையோலைகள் யாவும் இந்த போகி நாளில் எடுக்கப்பட்டு, சிதைந்துபோன ஏடுகள் நீக்கப்பட்டு, மீதமிருந்த ஓலைகள் புதிதாகக் கட்டப்படும். சிதைந்து போன ஓலைகளில் இருந்த விஷயங்கள் புதிதாக எழுதப்படும். சிதைந்த ஓலைகள் தீயிலிட்டுக் கொளுத்தப்படும். இதுவே போகியன்று தீ மூட்டும் வழக்கமாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.
[size=31]சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi AYBypgaGRl6IVzA71ZOc+4b8f9475ea214c33a86cff08db571e06
[/size]


ஆனால், இன்றைய நாளில் போகிப் பண்டிகையின் தாத்பர்யம் தெரியாமல் மனதில் உள்ள மடமைகளை அழித்து எரிக்காமல், தெருவில் உள்ள டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும் எரித்து சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துகிறார்கள். இறைவனால் படைக்கப்பட்ட இந்த அழகிய புவிப்பந்தை மாசுபடுத்தும் செயலை இறைவன் மன்னிக்கவே மாட்டார். மாசு நிரம்பிய காற்று மனிதர்களையும், மற்ற ஜீவராசிகளையும் பெரிதும் பாதித்து, நோய்களை உருவாக்குகிறது. இதுவும் கடவுளால் மன்னிக்க முடியாத செயல்தான். எனவே நாளை வரும் போகிப்பண்டிகை தினத்தில் பிற்போக்குத்தனமான, மற்றவர்களை வதைக்கும் மடமைகளை அகற்றுவோம். நம்முடன் மற்றவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தும் பொருள்களைக் கொளுத்தினால், நாம் இன்னும் நம் கடவுளைப் பற்றியும், நம்முடைய சடங்குகள் பற்றியும் அறிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். பொங்கலை இனிதே வரவேற்போம். பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட வாழ்த்துவோம்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi Empty Re: சூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்! #Bhogi

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum