ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களிடம் கையேந்துவதா...? நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Go down

மக்களிடம் கையேந்துவதா...? நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு Empty மக்களிடம் கையேந்துவதா...? நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by KavithaMohan Thu Jan 11, 2018 3:01 pm

கர் சங்க கட்டடத்தால் மக்களுக்கு என்ன பயன், அதை கட்டுவதற்கு நிதி திரட்ட, லட்சம் மற்றும் கோடிகளில் சம்பவளம் வாங்கும் நடிகர்களிடம் வசூலிப்பதை விடுத்து கலை நிகழ்ச்சி, கிரிக்கெட் நடத்துகிறேன் என்ற பெயரில் மக்களிடம் பணம் வசூலிப்பது ஏன்? என மக்கள் மத்தியில் குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் குழப்பம் உருவாகி விட்டது. விஷாலின் சமீபத்திய செயல்பாடுகளால் நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு நிர்வாகிகளும் அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். துணை தலைவராக இருக்கும் பொன்வண்ணன், தன் பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்து, பின்னர் சங்கத்தின் நலனுக்காகவும், நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்காகவும் தன் ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.
மக்களிடம் கையேந்துவதா...? நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு NTLRG_20180111101344871134

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்த எஸ்வி.சேகர், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது...

நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை, ஆலோசனைகள், வழி நடத்துதல் தேவை என கேட்டுக் கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள்.

தடை வந்தால் என்னவாகும்
என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி ​ரூபாய் ​மதிப்புள்ள ரோடை ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகரைப்பற்றி கேட்டபோது கூட அப்படி ஒன்றுமேயிலையென்று விஷாலும், கார்த்தியும் சொன்னார்கள். ஆனால் உடனடியாக வழக்கும், ஸ்டேயும் வந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த 18 கிரவுண்டுக்கும் அந்த ரோடுக்கும் உரிமையாளர் என்ற ஆதாரம் நம்மிடம் உள்ளதா என் தெரியவில்லை. எதிர் தரப்பினர் அங்கு ரோடு உள்ளது என ஆதாரங்கள் காட்டியும் தீர்ப்பு நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. ஆனால் எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிகிறேன். அங்கு தீர்ப்பு வேறு விதமாக வந்தால் நடிகர் சங்கம் இதுவரை செலவழித்த பணம் என்ன ஆகும்?.

கலைஞர்கள் அவமரியாதை
அதேப்போல் சமீபத்தில் நடந்த மலேசிய கலை விழாவிலும் பல குளறுபடிகள். பல கலைஞர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன். குறிப்பாக இயக்குனர் சங்கதலைவர் விக்ரமன், ஆர்.சுந்தரர்ராஜன், பார்த்திபன், பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் போன்ற பலர். இதன் பெயர்தான் நிர்வாக கோளாறு. இப்படி அரை குறையாக செய்வதற்கு எதற்கு பார்க் ஹோட்டலில் இத்தனை நாட்கள் இவ்வளவு ரூம் போட்டு நம் டிரஸ்ட் பணம் செலவழிக்கப்படவேண்டும்.?

பிச்சை எடுத்த கேவலம்
மலேசியாவில் உள்ள தமிழ் பத்திரிக்கை ஒன்றில் பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் நட்சத்திரங்கள் என வந்த செய்தியை பார்க்கவில்லையா? இத்தனை பணம் மலேசிய தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம், நலிந்த மலேசிய தமிழ் குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் குறைந்து போய் விடுவோமா? பணம் தேவைதான், அது சுய மரியாதையை விற்று ச​ம்​பாதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஓட்டுக்காக
நம் நடிகர் சங்க மூத்த நாடகக் கலைஞர்கள் சிலரை அழைத்துக் சென்று அரிச்சந்திர மயானகாண்டம் காட்சி நடித்திருந்தால் (15 நிமிடம் மட்டுமே வரும்) அது நீங்கள் நாடக கலைஞர்களை உண்மையாக நேசிக்கிறீர்கள், ஓட்டுக்காக அல்ல என்றாவது தெரிந்து இருக்கும். அதையும் செய்யவில்லை​. ​

ராஜினாமா
ஆகவே என் மனசாட்சிக்கு எதிராக நம் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுகளுக்கு நான் உடன்பட முடியாது என்பதாலும் டிரஸ்டி என்ற பதவி நடிகர் சங்கத்தை பொருத்த வரையில் ஒரு அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும், டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன்.

சங்க கட்டடம் கட்டப்படும்
இதுவரை என் இமெயிலில் குறிப்பிட்ட பதில் இல்லா கேள்விகளுக்காகவும், என் ஒப்புதல் இல்லாத செயல்பாட்டுகளுக்கு​ம் ​​நான் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் இக்கடிதம் மூலம் உறுதி செய்கிறேன். ​என் கடிதத்தின் மூலம் ரோசப்பட்டு ​நீங்கள் அனைவரும் ராஜினாமா செய்தாலும் நம் சங்க கட்டடம் கட்டப்படும்.

அடுத்தமுறை ஜெயிக்க முடியாது
அடுத்தமுறை வரும் தேர்தலில் நீங்கள் யாரும் ஜெயிக்கவும் முடியாது என கூறிக்கொள்கிறேன்.​ இவ்வுலகில் யாரும் நிரந்தரமில்லை என்பதை காலமும் அனுபவமும் உங்களுக்கு உணர்த்தும்.

பொது வாழ்வில் எவ்வளவு நேர்மையாக வாழ வேண்டும் என்று நம் மூத்த கலைஞர் சிவகுமாரிடம் கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு தன் ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி சேகர்,
மலேசியாவில் நடந்த விஷயங்கள் மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. விமான நிலையத்திற்கு வரச்சொல்லிவிட்டு அவமதிப்பது சரியல்ல, தவறான விஷயம். இது எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

கலைஞர்கள் கோபம்
ரஜினி, கமலுக்கு மரியாதை கொடுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை, அதேசமயம் மற்ற கலைஞர்களுக்கும் உரிய மரியாதை கொடுங்கள். பாக்யராஜ், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் வருத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். பாரதிராஜா, கோபத்தின் உச்சியில் இருப்பதாக கேள்விப்பட்டேன். மூத்த கலைஞர்களுக்கும் கொடுக்க தெரிய வேண்டும். அதை எப்படி என்று நம் முன்னாள் தலைவர் விஜயகாந்த்திடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் திருந்த வாய்ப்பில்லை.

தமிழ் கலைஞர்களுக்கு அசிங்கம்
பிச்சை எடுப்பதற்கு இந்த ஊருக்கு வருகிறீர்களா என்று மலேசிய பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்கள். இந்த அவமானம் தேவையா. இது ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்கே அசிங்கம் இல்லையா.

மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டாம் - அஜித்
நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் சங்க நிர்வாகிகள் அஜித்தை அழைத்தனர். அதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்த அஜித், "ஏற்கெனவே நம் படங்களுக்கு மக்களிடம் பணம் வாங்குகிறோம். அதைத் தவிர இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கும் கட்டணம் பெறுவது எதற்காக?, நாம் நன்றாக சம்பாதிக்கிறோம். நாம் 10 பேர் பணம் போட்டு கட்டடத்தை கட்டுவோம்" என்றார்.

இவ்வாறு எஸ்வி.சேகர் கூறினார்.

மலேசியாவில் கூட்டமில்லை
கலை நிகழ்ச்சியை மலேசியாவில், கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலிங் மைதானத்தில் நடத்தியிருக்கிறார்கள். சுமார் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வந்ததோ வெறும் 5 ஆயிரம் ரசிகர்கள் தான் என்று கூறப்படுகிறது.

மக்கள் புறக்கணிப்பு
நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் இன்னும் ரசிகர்களின் பணத்தை சுரண்ட நினைப்பது ஏன் என மலேசிய ரசிகர்கள் கருதியதாகவும், மலேசியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதாகவும், அதை சரி செய்வதை விடுத்து நட்சத்திர விழாக்களை புறக்கணிக்கும் படி சமூக வலைத்தளங்களில் பரவிய கருத்துக்களாலும் ரசிகர்கள் கூட்டம் சேரவில்லை என செபராங் பெராய் உறுப்பினர் சதீஷ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

அஜித் கருத்திற்கு ஆதரவு
அஜித்தின் கருத்து நியாயமானது என்று குரல் ஒலிக்க துவங்கியுள்ளது. நடிகர்கள் யாரும் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல, ஒவ்வொருவரும் லட்சம் மற்றும் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். அப்படியிருக்கையில் அவர்களுக்கு ஆளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையை கொடுத்தாலே சங்கத்திற்கான நிதி கிடைத்துவிடும். இல்லையென்றால் இலவசமாக இரண்டு படம் நடித்தாலே போதுமானது. அதை விடுத்து மக்களிடமே வசூலிப்பது என்ன நியாயம் என சமூகவலைதளங்களில் பரவலாக கருத்துக்கள் பரவ தொடங்கிவிட்டது.

மலேசியாவிற்கு சுமார் 300 கலைஞர்கள் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் விமான டிக்கெட், தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட செலவுகள், இந்த நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக சென்னையில் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஆலோசனை நடத்திய செலவுகள் என மொத்த செலவுகளையும் சேர்த்தால் நடிகர் சங்கத்தில் சில உள் அரங்குகளை கட்டி முடித்துவிடலாம் என்கிறார்கள்.

மக்களுக்கு என்ன பயன்
நடிகர் சங்கம் கட்டடம் என்பது நடிகர்கள் மட்டுமே உபயோகிக்க கூடியது. இது பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயன்பட கூடியது அல்ல, அப்படியிருக்கையில் மக்களின் பணத்தை வசூல் செய்து கட்டடம் கட்டுவது என்ன நியாயம் என்ற குரல்கள் மக்கள் மத்தியில் ஒலிக்க தொடங்கியுள்ளன.

ஆகவே நடிகர்கள் இதை புரிந்து கொண்டு, இனி மக்களிடம் பணத்தை வசூலிக்காமல் அவர்களின் சொந்த பணத்தில் கட்டடம் கட்டுவது சாலச்சிறந்தது.

நன்றி
தினமலர்
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

Back to top

- Similar topics
» டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு
»  சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு
» கேரளாவில் சில்வர் லைன் ரயில் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
» குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum