Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
சென்னை:‛‛தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு படுத்துவதற்கே எழுதப்பட்டது.
வைரமுத்துவுக்கு சில கேள்விகள்:
* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை, ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?
* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று. ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார்.
பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி. இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவை தெரியாது..
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல் கொண்டாள்.
நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு. இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.
*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.
*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.
*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா?
*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
ஆண்டாள் குறித்து அவதூறு : வைரமுத்துவுக்கு ஜீயர் எதிர்ப்பு !
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் பேசும்போது, அமெரிக்க பல்கலை பேராசிரியர் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி உள்ளார். அப்போது ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி உள்ளார். இது பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த்தெய்வமாக விளங்கும் ஆண்டாளை, ஒரு தமிழ்க் கவிஞர் அவதுாறாக பேசி உள்ளார் என்பது ஆன்மிக மக்களை காயப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வை புண்படுத்தியதற்காக வைரமுத்து மன்னிப்பு கோரவேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற கருத்துக்களை பேசுவதை தவிர்க்கவேண்டும்,
என்றார்.
தினமலர்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் பேசும்போது, அமெரிக்க பல்கலை பேராசிரியர் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி உள்ளார். அப்போது ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி உள்ளார். இது பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த்தெய்வமாக விளங்கும் ஆண்டாளை, ஒரு தமிழ்க் கவிஞர் அவதுாறாக பேசி உள்ளார் என்பது ஆன்மிக மக்களை காயப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வை புண்படுத்தியதற்காக வைரமுத்து மன்னிப்பு கோரவேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற கருத்துக்களை பேசுவதை தவிர்க்கவேண்டும்,
என்றார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு
-
சென்னை:
‛‛தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி
கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு,
மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு
தெரிவித்துள்ளார்.
அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம்
கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர்
பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக்
கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள்
நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு
படுத்துவதற்கே எழுதப்பட்டது.
வைரமுத்துவுக்கு சில கேள்விகள்:
* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர்
குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு
செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன்.
அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை,
ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள மேல்நாட்டு
அறிஞர்களால் முடியுமா?
* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி
நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று.
ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின்
அவதாரமாகக் கொள்ளப்படுகிறார்.
பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி.
இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்
படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை.
ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன்.
தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய
பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு
இவை தெரியாது..
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி
நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு
கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர்.
ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல்
கொண்டாள்.
நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும்
என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள்,
அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு.
இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும்
விந்தை.
-
----------------
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி
வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை
விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள்.
அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.
*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க
உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற
எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய
கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை
விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.
*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று
பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும்
மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி
இருப்பாயா?
*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து
கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக
நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை
அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது.
வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை,
அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத்
தெளிவுபடுத்தியுள்ளனர்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
-------------------------------------
தினமலர்
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
நேற்றே நான் போட்டுள்ளேன் அண்ணா, எனவே இரு திரிகளை யும் இணைத்துவிடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
வைரமுத்து சினிமா பாடல்கள் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வது நல்லது . அவருக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது சரியல்ல .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
வெகுநாட்களாக உங்களை காணவில்லையே ஐயா, நலமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
உடல்நலக்குறைவு காரணமாக ஈகரைப்பக்கம் வர இயலவில்லை . நீங்களும் மாதக்கணக்கில் வரவில்லையே! என்ன காரணம் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1256516M.Jagadeesan wrote:உடல்நலக்குறைவு காரணமாக ஈகரைப்பக்கம் வர இயலவில்லை . நீங்களும் மாதக்கணக்கில் வரவில்லையே! என்ன காரணம் ?
அடடா....இப்பொழுது தேவலாமா ஐயா?..........ஆமாம் ஐயா, நானும் மாதக்கணக்கில் இங்கு வரவில்லை தான் ....நாங்கள் இப்பொழுது பெங்களூர் வந்து விட்டோம் ஐயா....சௌதியை காலி செய்து கொண்டு வந்து விட்டோம், அதனால் செட்டில் ஆக கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டேன். ....இனி ரெகுலராக வருகிறேன் ஐயா ...நீங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
இப்போது தேவலை . சர்க்கரை கொஞ்சம் அதிகமாகிவிட்டது . தற்போது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» முதல்வர் நாற்காலியில் ஜீயர் சுவாமி: தெலங்கானாவில் வெடிக்கிறது சர்ச்சை
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» முதல்வர் நாற்காலியில் ஜீயர் சுவாமி: தெலங்கானாவில் வெடிக்கிறது சர்ச்சை
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum