ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!!

Go down

சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!! Empty சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 31 Dec 2017 - 18:31

சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!! XzmHfW7IR8udXRZxrvNp+dc015d6dba5396cbe47d01f51c17006e

பல்வேறு நன்மைகளை கொண்டது முருங்கை கீரை. இது, உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கை கீரையை தினமும் ஒருபிடியாவது உணவில் சேர்த்துக்கொள்ள பல நோய்கள் தீரும் வலி நிவாரணியாக விளங்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் உடையது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து  இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை கீரையை மேல்பற்றாக போடும்போது வலி நிவாரணியாகிறது. பாலோடு சேர்த்து கொடுக்கும்போது எலும்புகளுக்கு பலம் தருகிறது. உப்போடு சேர்த்து சாறாக கொடுக்கும்போது நெஞ்சக சளியை வெளியேற்றுகிறது. 
நன்றி
ஜீ நியூஸ் தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!! Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 31 Dec 2017 - 18:33

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் போதும் எந்த நோயும் அண்டாது.
பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும் போகம் நீடிக்கும்.
நாவில் உண்டாகும் புண்கள், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு சித்தரத்தை மருந்தாகி பயன்தருகிறது. நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி ஒரு துண்டு எடுத்து நசுக்கி நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் சரியாகும். வாய் துர்நாற்றம் இல்லாமல் போகும். 
இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை  அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் மற்றும் உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தி மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைப்பதுடன் இரத்தச் சோகை வராமல் பாதுகாக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!! Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 31 Dec 2017 - 18:34

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். 
 
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை  அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில்  மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரையாகும்.
இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரும் வயிற்று வலி நீங்கும் முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும். 
முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது சிறந்த ஊட்டம் தரும்

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு  பல மடங்கு அதிகரிக்கும். குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். 
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun 31 Dec 2017 - 18:40; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!! Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum