ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

Page 2 of 2 Previous  1, 2

Go down

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! - Page 2 Empty அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:39 am

First topic message reminder :

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! - Page 2 TueIIDBSNOPhSaC2jAC1+382bf9ced77a7901b2aa7c1314155740

Third party image reference
புரூஸ்லினா அடிக்கணும்; கமல்னா நடிக்கணும்; பாம்னா வெடிக்கணும்; காதலினா அணைக்கணும்; அருவினா..... குளிக்கணும்! ஆனால், ஓர் அருவி மட்டும் இதுக்குச் சரிப்பட்டு வராது. அது - அதிரப்பள்ளி. (Athirappally) "அப்புறம் என்னாத்துக்கு அங்க போகணும்" என்று இந்தக் கட்டுரையை முழுதாகப் படித்த பிறகும் உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்கு கவுன்சலிங் தேவை. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி எனும் இடத்தில் உள்ள அதிரப்பள்ளியில், சுனாமியில் ஸ்விம்மிங் போடுறவங்களாலகூட குளிக்க முடியாது என்பதுதான் ஸ்பெஷல். ஆனால், தினசரி அதிரப்பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை, நம் தமிழ்நாடு டாஸ்மாக் வாடிக்கையாளர்களைவிட அதிகம்.


"நீங்க வந்தா மட்டும் போதும்" என்று சொல்லும் 'சிவாஜி' ரஜினிபோல், 'பார்த்தா மட்டும் போதும்' எனும் மயக்க நிலைக்கு நம்மைத் தள்ளுவது அதிரப்பள்ளி அருவியின் அம்சம். 'நெருப்பில்லாமல் புகைகிறது அருவி' என்று வைரமுத்து ஒரு கவிதை பாடியது, அதிரப்பள்ளிக்குப் பொருந்தும். வெள்ளையாகப் புகையும் அருவி மட்டும் இதற்குக் காரணமில்லை; அதிரப்பள்ளிக்குச் செல்லும் அதிரிபுதிரி ரூட்டும் ஒரு காரணம். 'பில்ட்-அப்பை விட்டுட்டு ரூட்டைச் சொல்லுய்யா' என்று பேட் வேர்ட்ஸில் நீங்கள் திட்டுவது கேட்கிறது. 


சில காட்டு வழிகள் போல் ஒன்வே இல்லை. அதிரப்பள்ளிக்கு சில பல ரூட்கள் வெவ்வேறு திசையிலிருந்து இருக்கின்றன. கொச்சியிலிருந்து ஒரு பாதை உண்டு. இது 72 கி.மீ. எர்ணாகுளத்திலிருந்து கேரள நெடுஞ்சாலையில் அங்கமாலி தாண்டி வலதுபுறம் அதிரப்பள்ளிக்குச் செல்ல ஓர் அருமையான ரூட் இருக்கிறது. கேரளா போய்த்தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை; தமிழ்நாட்டிலிருந்து பொள்ளாச்சி, வால்பாறை, சோலையார் வழியாகவும் அதிரப்பள்ளிக்கு ஒரு க்ளீஷேவான ரூட் இருக்கிறது. நான் இதைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். 
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! - Page 2 Empty Re: அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:57 am

அதிரப்பள்ளி அருவியைக் கீழே இருந்தும் பார்க்கலாம். கிட்டத்தட்ட அரை கி.மீட்டர் கீழே ட்ரெக்கிங் போய் மேலே அண்ணாந்து பார்த்தேன். அந்தக் கணம் என்னை ஏதோ ஒரு மகிழ்ச்சியான தியான நிலைக்குக் கொண்டு சென்றது. உலகின் ஒட்டுமொத்த மழையும் ஒன்றாக ஒரே இடத்தில் பொழிந்தால், எத்தனை தடிமனாக இருக்கும்! அதுபோல் இருந்தது அருவி. கர்நாடகா 'ஜோக் நீர்வீழ்ச்சிக்குப்' பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. ஆனால் அகலத்தில் இதுதான் முதல் இடம். கிட்டத்தட்ட 260 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கும் தண்ணீர், மாவுத் துகள்களாய்ச் சிதறி எழுந்து சிரித்தபடி ஓடுகிறது. நாலு தூத்தலுக்கே நானூறு கவிதைகள் பாடும் கவிஞர்கள், அதிரப்பள்ளியைப் பார்த்தால் நிச்சயம் சும்மா விடமாட்டார்கள்! 'இந்தியாவின் நயாகரா' என்று இதைச் சொல்வது சரிதான். அருவி நீரின் அந்த ஆக்ரோஷமான, சந்தோஷமான தாண்டவத்தை மணிக்கணக்கில் நின்று ரசித்தேன். அலுக்கவே இல்லை. என்னைப்போல் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். கண்ணை மூடித் திறந்து பார்த்தால், சுற்றி வானவில் வளையம் தெரிந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! - Page 2 Empty Re: அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:59 am

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! - Page 2 1cQxO3EWTIeI5dup1SLN+d8bc4dda2a2e75c5cf3ccd03c8e0d1f0


Third party image reference
வால்பாறையில் இருந்து பார்க்க வேண்டிய இடங்கள்.. க்ளிக் செய்க...


 


இதன் பெரிய வரலாற்றை சின்ன நீரோடைபோல் சொல்கிறேன். கு(றி)ளித்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட 145 கி.மீ நீளம் கொண்ட சாலக்குடி நதி, ஆனைமலை மலையிலிருந்து ஆரம்பமாகிறது. அமைதியின் சொரூபமாக சாலக்குடி நதியிலிருந்து வரும் நீர், அதிரப்பள்ளியில் தாண்டவம் ஆடிவிட்டு, வளச்சல் காடு வழியாகப் பயணித்து, பெரியாற்றில் இணைந்து, அரபிக் கடலில் கலக்கிறது. 


இந்தப் பிரம்மாண்டத்தைத்தான் நிறைய சினிமாவில், கேமராவுக்குள் கொண்டுவந்திருப்பார்கள் ஒளிப்பதிவாளர்கள். 'புன்னகை மன்னன்' படத்தில் கமலும் ரேகாவும் தற்கொலை செய்வது அதிரப்பள்ளி அருவியில்தான். 'குரு' படத்தில் 'வெண்மேகம் முட்ட முட்ட' பாடி உலக அழகி ஆடும் இடம் சாட்சாத் அதிரப்பள்ளியேதான். இது தவிர ராவணன், பையா, பேராண்மை என்று பல படங்கள் விஷுவலாக அழகாக வந்ததற்குக் காரணம் - அதிரப்பள்ளியாக இருக்கலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! - Page 2 Empty Re: அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:04 am

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! - Page 2 26plupSoR6y2scY6K2Fi+2c31e2fa560dfd5d1965a1b7c5801537


Third party image reference
 


சாலக்குடிக்கும் அதிரப்பள்ளிக்கும் இடையே ஒரு சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் இருந்தன. குறிப்பாய் பட்டர்ஃபிளை பார்க் மற்றும் தீம் பார்க். அதிரப்பள்ளியில் தங்குவதற்கு நிறைய ரெஸார்ட்கள், ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. சில ரெஸார்ட்கள், ஓடை ஓரத்தில் அமர்ந்திருக்கின்றன. பார்த்தாலே தங்க வேண்டும் போல் இருந்தது. நிறைய பேர் அருவியைத் தரிசித்துவிட்டு, அப்படியே தலை துவட்டிக் கிளம்பி விடுகிறார்கள். நானும் இப்போது அந்த ரகம்தான். வேறு வழியில்லாமல்தான் கிளம்பினேன். திரும்பவும் வந்த வழியே போய், இரண்டு மணி நேரத்துக்குள் கேரளா செக்போஸ்ட்டில் கையெழுத்துப் போட வேண்டிய பெரிய டாஸ்க் எனக்கு இருக்கிறது.


நெருப்பில்லாமல் புகைந்த அதிரப்பள்ளி, அந்தக் கணத்திலிருந்து என் மனதிலும் ஒரு புகைச்சலை எழுப்பித் தொலைத்து விட்டது. 'இந்த அருவிக் கரையோரம் ஒரு வாழ்க்கை வாய்த்தால் எப்படி இருக்கும்!'

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! - Page 2 Empty Re: அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum