ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 41 of 100 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:11 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -287

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்


தெளிவுரை
தன்குரிய அளவில் நிற்போம் என்ற பெருமையை விரும்புகிறவனிடத்தில் ,
களவு என்னும் இருண்ட மயக்கம் இருக்காது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வென்/னும்-----கா/ரறி-------------- வாண்/மை-------அள/வென்/னும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை-----வெண்டளை


ஆற்/றல்------------ புரிந்/தார்/கண்--------இல்
நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்------நேர்
தேமா------------------புளிமாங்காய்----------நாள்
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-வென்னும் –அவென்னும்
மோனை- ளவென்னும் -காரறி , ளவென்னும்-ற்றல்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:18 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -288

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு


தெளிவுரை
பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்தவரது நெஞ்சில் அறம் நிலைபெற்றிருப்பதுபோல் களவை அறிந்தவரின் மனத்தில் வஞ்சனை நிலைபெற்றிருக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வறிந்/தார்-------நெஞ்/சத்------- தறம்/போ/ல------- நிற்/கும்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளங்காய்-------தேமா----------------கருவிளங்காய்-----தேமா
வெண்சீர் --------------இயற்சீர் - ---------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை

கள/வறிந்/தார்--------நெஞ்/சில்----கர/வு
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை/பு
கருவிளங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கரவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வறிந்தார் -கவறிந்தார் ,நெஞ்சில் - நெஞ்சத்
மோனை- ளவறிந்தார் -ரவு , நெஞ்சில் - நெஞ்சத்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:33 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -289

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவல்ல செய்தாங்கே வீலர்  களவல்ல
மற்றைய  தேற்றா தவர்


தெளிவுரை
களவைத் தவிர வேறு எதையும் அறியாதவர் , அளவு கடந்த
தீமைகளைச் செய்து அதனால் கெடுவர்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வல்/ல------------ செய்/தாங்/கே------வீ/லர்-------------  கள/வல்/ல
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் -  ---------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை


மற்/றைய--------  தேற்/றா ---------தவர்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வல்ல –கவல்ல , மற்றைய  தேற்றா
மோனை-செய்தாங்கே-தேற்றா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:42 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -290

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு


தெளிவுரை
களவிலே பழகியவர்க்கு வாழ்வே தவறிப் போகும் . அதில் பழகாதவர்க்குத்
தேவருலகம் தவறாது கிடைக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள்/வார்க்/குத்-------தள்/ளும்----------- உயிர்/நிலை------- கள்/ளார்க்/குத்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை


தள்/ளா/து-------- புத்/தே-------- ளுல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ளுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்வார்க்குத் -தள்ளும் – கள்ளார்க்குத்-தள்ளாது
மோனை- ள்வார்க்குத் –ள்ளார்க்குத் ,ள்ளும் -ள்ளாது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

வாய்மை எனப்படுவ யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்


தெளிவுரை
உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என்றால் எந்த உயிர்க்கும்
யாதொரு தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்லுதலேயாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வாய்/மை--------- எனப்/படு/வ----------- யா/தெனின்-------யா/தொன்/றும்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
தேமா----------------கருவிளங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் - ------------ இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை----- வெண்டளை

தீ/மை--------------- இலா/த------ சொலல்
நேர்/நேர்-----------நிரை/நேர்--நிரை
தேமா----------------புளிமா--------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-லாத –சொல்
மோனை- யாதெனின் -யாதொன்றும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:20 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -292

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்


தெளிவுரை
குற்றமற்ற நன்மையைத் தருமானால் பொய்யும் உண்மை
என்று நினைக்கத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/மையும்----வாய்/மை------- யிடத்/த------------- புரை/தீர்ந்/த
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
கூவிளம்-------------தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை

நன்/மை------------- பயக்/கு-------- மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- பொய்மையும் - வாய்மை
மோனை- பொய்மையும் -புரைதீர்ந்த

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:26 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -293

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னை சுடும்


தெளிவுரை
ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றை பிறரிடம் கூறுவது
தவறு . பின்னர் அவனது நெஞ்சே அவனை வருத்தும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னெஞ்------சறி/வது----------- பொய்/யற்/க ------பொய்த்/தபின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------தேமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை------வெண்டளை


தன்/னெஞ்/சே --------தன்/னை----- சுடும்
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சுடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னெஞ் – தன்னெஞ்சே- தன்னை ,பொய்யற்க -பொய்த்தபின்
மோனை- ன்னெஞ் – ன்னெஞ்சே- ன்னை ,பொய்யற்க –பொய்த்தபின்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:35 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -294

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்


தெளிவுரை
மனத்தினால் கூட பொய்யை நினைக்காமல் நடப்பவன் ,
உலகத்தவர் மனத்திலெல்லாம் நிலைத்திருப்பான் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள்/ளத்/தால்------- பொய்/யா------ தொழு/கின்--------- உல/கத்/தார்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா---------------புளிமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -------இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை


உள்/ளத்/து----------- ளெல்/லாம்-------உளன்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை
தேமாங்காய்---------தேமா-----------------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உளன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்ளத்தால்- உள்ளத்து - உன் , உகத்தார் - ளெல்லாம்
மோனை- ள்ளத்தால்- ள்ளத்து - ளன் – லகத்தார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:43 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -295

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

மனதொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.


தெளிவுரை
ஒருவன் மனதார உண்மை சொல்வானானால் , அவன் தவமும்
அறமும் செய்பவனை விடச் சிறந்தவனாவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன/தொடு------ வாய்/மை -----------மொழி/யின்-------தவத்/தொடு
நிரை/நிரை------நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------தேமா-------------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - ------------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை

தா/னஞ்/செய்------ வா/ரின்---- தலை.
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-தொடு- தாஞ்செய்
மோனை- தானஞ்செய் -வத்தொடு – லை ,வாரின் -வாய்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:51 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -296

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்


தெளிவுரை
பொய் பேசாமை போல் ஒருவனுக்குப் புகழ் தருவது வேறு எதுவும்
இல்லை . அது அவனுக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/யா/மை----- அன்/ன------------- புக/ழில்/லை-------- எய்/யா/மை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


எல்/லா ---------------அற/மும்------- தரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- பொய்யாமை -எய்யாமை
மோனை- பொய்யாமை – புகழில்லை , ய்யாமை-ல்லா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 41 of 100 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum