ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 01, 2019 12:15 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -212

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தானாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு


தெளிவுரை
ஒருவன் தான் முயன்று பொருள் தேடுவதெல்லாம் பிறர்க்கு உதவி செய்வதற்கேயாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தா/னாற்/றித்------தந்/த--------------- பொரு/ளெல்/லாம்---தக்/கார்க்/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/----------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமாங்காய்-----------தேமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் - ----------வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை---------- வெண்டளை


வே/ளாண்/மை -----செய்/தற்-----பொருட்/டு
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொருட்டு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளெல்லாம்- பொருட்டு
மோனை- தானாற்றித்-ந்த- க்கார்க்கு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 01, 2019 12:22 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -213

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற


தெளிவுரை
தகுதி உடையவர்க்கு உதவி செய்வது போன்ற வேறு
தொண்டு விண்ணுலகத்தும் மண்ணுலகத்தும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புத்/தேன்--------- உல/கத்/தும்-------- ஈண்/டும்--------- பெற/லரி/தே
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - -------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ஒப்/புர/வின்--------- நல்/ல------ பிற
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---நிரை
கூவிளங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கத்தும்- நல்
மோனை- பிற- பெறலரிதே , லகத்தும்-ப்புரவின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 01, 2019 12:28 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -214

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்


தெளிவுரை
உலகறிந்து சமுதாயத்திற்குத் தொண்டு செய்து வாழ்பவனே வாழ்வான். ;
மற்றையோன் செத்தவனாகவே கருதப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒத்/த--------------- தறி/வான்------- உயிர்/வாழ்/வான்---மற்/றையான்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை


செத்/தா/ருள்------ வைக்/கப்-- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்--------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- த்த- செத்தாருள்
மோனை- த்த- யிர்வாழ்வான்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 10:48 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -215

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு


தெளிவுரை
சிறந்த அறிவினை உடைய ஒருவனது செல்வம் ஊரார்
அனைவருக்கும் பயன்படும் ஊருணி நீர் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஊ/ருணி---------- நீர்/நிறைந் -------- தற்/றே----------- உல/கவாம்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நிரை
கூவிளம்------------கூவிளம்--------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பே/ரறி-------------- வா/ளன்----- திரு
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நீர்நிறைந்- பேறி
மோனை- லகவாம்-ருணி

குறிப்பு
ஏழு சீரும் இயற்சீர் வெண்டளையாக வந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 10:55 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -216

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்


தெளிவுரை
தொண்டுள்ளம் படைத்தவனிடம் உள்ள செல்வம் ஊர் நடுவே
அமைந்த இனிய பழமரம் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பயன்/மரம்-------- உள்/ளுர்ப்------ பழுத்/தற்/றால்-----செல்/வம்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை


நய/னுடை-------- யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்மரம்- நனுடை
மோனை- யன்மரம் – ழுத்தற்றால்- டின்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -217

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்


தெளிவுரை
அருள் உள்ளம் படைத்த ஒருவனது செல்வம் எல்லா
உறுப்புக்களாலும் பயன்படத்தக்க மருந்து மரம் போன்றதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மருந்/தா/கித்--------தப்/பா ------------மரத்/தற்/றால்------செல்/வம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--நேர்/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை----- வெண்டளை


பெருந்/தகை-----யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ருந்தாகித்- பெருந்தகை
மோனை- ருந்தாகித் –ரத்தற்றால்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:08 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -218

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்


தெளிவுரை
உதவுவதைக் கடமையாகக் கொண்ட ஒருவர் தமது வளம்
சுருங்கிய காலத்தும் உதவி செய்தலில் மனம் தளரார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இட/னில்--------- பரு/வத்/தும்-------- ஒப்/புர/விற்-------- ஒல்/கார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


கட/னறி------------ காட்/சி-------- யவர்
நிரை/நிரை-------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னில்- கனறி- காட்சி
மோனை- டனறி- காட்சி , ப்புரவிற்கு ல்கார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:14 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -219

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு


தெளிவுரை
தவறாமல் செய்யத்தக்க உதவிகளைச் செய்ய முடியாது வருந்துகின்ற
நிலையே தொண்டுள்ளம் படைத்த ஒருவனுக்கு வறுமையாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நய/னுடை/யான்---நல்/கூர்ந்/தா-------னா/தல்--------- செயும்/நீ/ர
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ வெண்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


செய்/யா/து--------- அமை/கலா----- வா/று
நேர்/நேர்/நேர்------நிரை/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கருவிளம்---------காசு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-நனுடை- செய்யாது
மோனை- யனுடை-ல்கூர்ந்தா , செயும்நீர- செய்யாது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 11:21 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -220

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

தெளிவுரை
உதவி செய்வதால் ஒருவனுக்குப் பொருள் இழப்பு நேரின்
அதனைத் தன்னை விற்றாயினும் பெறுவது நன்று


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒப்/புர/வி----------- னால்/வருங்---- கே/டெனி ------- னஃ/தொரு/வன்
நேர்/நிரை/நேர்---நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------கூவிளம்-------------கூவிளம்-----------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை

விற்/றுக்/கோள்-----தக்/க-------- துடைத்/து
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்---------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-இல்லை
மோனை- னால்வருங் - ஃதொருவன்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian Fri Aug 02, 2019 5:22 pm

யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.

ரமணியன்

[You must be registered and logged in to see this link.]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 32 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 100 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum