ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:28 am

First topic message reminder :

ஐடி ஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் வெளியேற்றிய வெரிசான் நிறுவனம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 01MRN8ePQROxlrQ5atWR+6de0c4f9da51eac1899602f1f2e21470

சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனம், கடந்த 12-ம் தேதி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய கிளைகளிலிருந்து ஒரே நாளில் 993 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி குண்டர்கள் துணையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இப்படியோர் அதிரடியில் இறங்கும்போது, ஊழியர்களுக்கு ஏதாவது நேரலாம் என்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வளாகத்தில் நிறுத்தியிருந்தது. வெரிஸானின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மனுகொடுத்தன ஐ.டி ஊழியர் சங்கங்கள். இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தைத் தொடங்கவிருக்கிறது. வெரிஸானைப் போலவே, மேலும் சில ஐ.டி நிறுவனங்களும் ஆட்குறைப்புத் திட்டத்தை சத்தமில்லாமல் அமல்படுத்தி வருகின்றன. நாளொன்றுக்கு இரண்டு பேர், மூன்று பேர் எனப் பணியிழந்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையரிடம் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் புகார் அளித்து வெரிசான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், வெரிசான் நிறுவனம் ’ஆள்குறைப்பு நடவடிக்கை என்ற ஒன்று நடக்கவே இல்லை’ என முற்றிலுமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். ”வெரிசான் நிறுவனத்தின் முன்னறிவிப்பு இல்லாத ஆள்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொழிலாளர் நல ஆணையத்தில் கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பிரிவுகளின் கீழ் மனு அளித்துள்ளோம். ஐ.டி சட்டம் 1947 25F என்ற பிரிவுக்கு எதிராக நடந்துகொண்டதாக வெரிசான் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளோம். 993 ஊழியர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் வெரிசான் பொது வெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பணி இழந்த பணியாளர்கள் அத்தனை பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by T.N.Balasubramanian Wed Dec 27, 2017 8:23 pm

வெரிஸ்ன் மட்டும் இல்லை எல்லா கம்பெனியிலும் இதே பாலிசிதான்.
ஒர்க்கர்ஸ்களுக்கு மட்டும்யூனியன் உண்டு, ஒர்க்கர்ஸ் ஸ்ட்ரைக்கின் போது
ஒர்க்கர்ஸ் செய்யவேண்டிய வேலையை வெரிசான் ஆபீசர்கள் செய்தார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by Guest Wed Dec 27, 2017 11:08 pm

//இந்த அளவிற்கு கடுமையாக விமர்சனம் செய்து
உள்ளீர்கள். இது உண்மை??//

ஐயா இது விமர்சனம் அல்ல. செய்தி. சென்ற ஆண்டு வெரிசன் நிறுவன (US) ஊழியர்கள் 44 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.சில சலுகைகள்- ஊதிய உயர்வு,வேலை ஒப்பந்தம் நான்கு வருடங்களாக்கப்பட்டது,ஓய்வு ஊதிய உயர்வு, போன்ற - பெற்றதன் மூலம் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது.
ஊழியர்கள் நீக்கத்திற்காக சிலருக்கு வேறு மானிலங்களில் வேலை தரப்பட்டது.மற்றவர்கள் severance package பெற்றுக் கொண்டார்கள்.

ரமணியன் ஐயா சொன்னது போல் வேலை நிறுத்தக் காலத்தில் ஆபிசர்களும் தற்காலிக வேலையாட்களும் அவசர வேலைகளை செய்தார்கள்.
avatar
Guest
Guest

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 8:28 pm

மூர்த்தி அவர்களுக்கு நன்றி
வழக்கத்திற்கு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by aeroboy2000 Fri Dec 29, 2017 8:16 am

எல்லாம் சரி ... இது மாதிரி பிரச்சினைகளுக்கு எல்லாம் மூல காரணம்

யாரும் கோபிக்க வேண்டாம்...

சம்பந்தம் இல்லாத தோழர்கள் தோழிகள் மன்னிக்கவும்

நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...

நீ சம்பளத்தை ஏத்து ... நான் வீட்டுக்கே போகாமல் அடிமை போல இங்கேயே பழியாக் கிடக்கிறேன் ...
இது ஒரு வாழ்க்கையா என்று சிந்திக்கும் திறன் அற்றவர்களாக மாறிப் போயினர் ...

ஒரு கம்பனி 20000 ரூபாய் அதிகம் கொடுத்தால் ஒரே ஜம்ப் ...
கடமை கண்ணியம் தார்மீகம் ... பொறுப்புணர்வு கம்பனி மீது பற்று பாசம் என்று எதுவும் கிடையாது...

அதை அறவே மறக்கச் செய்தது அமெரிக்க வியாபாரத் தந்திரங்கள் ...

இப்படி இன்று உள்ளது போல மென்பொருள், கணினி, ஐ.டி கம்பனிகள் கூட்டு வைத்து கொள்ளை அடிப்பார்கள், அடி மட்ட சம்பளம் தருவார்கள்...  இந்நிலை மாறும் என்று ஒருவர் அன்றே சொன்னார்... நான் தான் நம்ப முடியாமல் இருந்தேன்....

2001 க்குப் பிறகு
அமெரிக்க அதிபர் புஷ் செய்த பிரச்சினையால்

மிக வேகமாக சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் வயல்கள் காங்க்ரீட் கட்டிடங்களாக மாறியது ... நானும் நடப்பதைக் கண்ட வாறு டீசல் ஜெனெரேட்டர் விற்றுக் கொண்டு இருந்தேன் ...

2004 சுனாமிக்குப் பிறகு ஏக்கர் விலை சென்ட் அளவு நிலத்திற்கு கிடைத்தது...

ஒரு புறம் ம்யூச்சுவல் ஃபண்ட் / பங்குச் சந்தை  ஏற்றம், மறு  புறம் நிலம் , கட்டிடம் விலை ஏற்றம்...

அறை எண்  305 ல் கடவுள் படத்தில் காண்பித்தது போல ... படு வேகமான வாழ்க்கை .... அதீத சம்பளம் .... அளவற்ற போனஸ் ...  வரம்பற்ற பணப் புழக்கம் ......

2005 , 2006 ல்  பி.ஈ மெக்கானிக்கல் படித்த ஒருவன் தொழிற்சாலையில் மாதம் 3000 ரூபாய் வாங்கும் போது அதே படிப்பைக் கொண்டவன் 15000 முதல் லட்சம் வரையில் வாங்கினான் ...

ஓ எம் ஆர் சாலை கட்டமைத்துக் கொண்டு இருந்தார்கள் சிறுசேரி வரையில்...  

கம்பனி மாறினால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் அதிகம் ....

தென் சென்னை யே பணக்காரர்கள் மட்டும் இடம் வாங்க முடியும் இல்லை ஐ.டி. யில் பணி புரிபவர்கள் மட்டும்தான் இடம் வாங்க முடியும் என்று ஆகியது...

இன்று என்னாகியது ...

பல பொறியியல் கல்லூரிகள் கணினி சம்பந்தப் பட்ட படிப்புப் பிரிவுகளையே எடுத்து விட்டது...

இன்னமும் வாழ்க்கை நம் கையை விட்டுப் போய் விடவில்லை....
மீண்டு எழ வாய்ப்புள்ளது ....
உங்கள் குழந்தைகளுக்கு உடலை வளைத்து வேலை செய்யப் பழக்குங்கள்...
நல்லது எல்லாவற்றையும் செய்ய விடுங்கள் ...

தேவை இல்லாமல் பணம் உள்ளது என்பதற்காக வாங்கிக் குவிக்காதீர்கள் ...
அப்புறம் அதை விற்க ஓ எல் எக்ஸ் பின்னே ஓடாதீர்கள் ...

வசதி அற்றவர்களுக்கு உதவுங்கள்...
செய்யும் பணியை விரும்பி மனம் மகிழ சந்தோஷமாகச் செய்யுங்கள் ...  

முடிந்தவரை சீனப் பொருட்களை, அமெரிக்கப் பொருட்களை தவிருங்கள் ...
இன்றைய கால கட்டத்தில் அது மிகவும் சிரமம்தான் ...

நல்ல சிந்தனைகளுடன் நாட்களைத் தொடங்குங்கள் ...
இரவு உறங்கும் முன் அன்று செய்த, செய்வித்த நல்ல செயல்களை சிந்தித்த படி உறங்குங்கள் ...

மனம் நல்வழிப்பட்டால் வாழ்க்கையும் நம் வசப்படும் ...

வாழ்க வளமுடன் ...வளர்க நலமுடன் ...

வாசித்தவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
நெடுஞ்சேரலாதன் கு. லோ
கிழக்கு தாம்பரம் – மாடம்பாக்கம்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by T.N.Balasubramanian Fri Dec 29, 2017 9:39 am

நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...

லாபங்கள்,கஷ்டநஷ்டங்களை அறிந்தே சேர்ந்த பின் குத்துதே குடையுதே என்று சொல்லக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலிக்கவேண்டுமென்றால்  நடிக்கும் திறமை இருந்தால் மட்டும் போதுமா? சொல்லுவதற்கு இணங்க  யாவருடனும் ஒத்துப்போகும் குணம் இருக்கவேண்டும். மாட்டேன் என்று கொடி பிடிக்கமுடியுமா ?
எந்தன் மனதில் பட்டதை கூறுகிறேன். தவறாக யாரும் நினைக்கவேண்டாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 12:33 pm

T.N.Balasubramanian wrote:
நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...

லாபங்கள்,கஷ்டநஷ்டங்களை அறிந்தே சேர்ந்த பின் குத்துதே குடையுதே என்று சொல்லக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலிக்கவேண்டுமென்றால்  நடிக்கும் திறமை இருந்தால் மட்டும் போதுமா? சொல்லுவதற்கு இணங்க  யாவருடனும் ஒத்துப்போகும் குணம் இருக்கவேண்டும். மாட்டேன் என்று கொடி  பிடிக்கமுடியுமா ?
எந்தன் மனதில் பட்டதை கூறுகிறேன். தவறாக யாரும் நினைக்கவேண்டாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1255210
இந்த வேலையில் சேர்ந்து விட்டால்
அவர்கள் சொல்லிய படி தான் ஆடவேண்டும்
நிதர்சனம்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by T.N.Balasubramanian Fri Dec 29, 2017 2:51 pm

நம்முடைய மீனவ சகோதரர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.கடலில் போவது ஆபத்தானதுதான். அதிக பணம் சம்பாதிக்க வெகுதூரம் மாலத்தீவு , செஷல்ஸ் வரை மின்படகில் செல்லுகிறார்கள்.புயல் காரணமாக ஏதாவது ஆகிவிட்டது என்றால் அரசாங்கம்தான் பொறுப்பு என்கிறார்கள்.லாபம் வந்தால் தனது என்றும் சேதம் ஆகின் அரசு பொறுப்பு என்றும் பொறுப்பை மற்றவர்கள் தலையில் கட்டுவது மனித இயல்பாகிவிட்டது..ஒரு உதாரணத்திற்கு கூறினேன்.எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும் அவைகளை பயன்படுத்துகிறீர்களா ...தெரியாது. எவ்வளவு பேர் கடலுக்கு செல்கிறார்கள் கணக்கில்லை.எவ்வளவு பேர் திரும்பிவருகிறார்கள் கணக்கில்லை.இன்னும் பல பல ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் இதில் இருக்கின்றன, அரசின் மெத்தனத்தை ஆதாயம் பார்க்கிறார்கள் சிலர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:35 pm

சம்பாதிப்பது லாபம் வரும் வரை யாரும் வாய் திறந்து எதையும் பேசுவது இல்லை.
மீனவர்கள் அவர்கள் வேலை கடலில் தான்.
சில நேரங்களில் இந்த மாதிரி சூழ்நிலை
உருவாவது இயற்கை இதற்கு யாரையும் குறை
கூறுவதில் பயனில்லை.
ஆனால் இந்த உண்மையை பலரும் பேச
பயந்து எல்லோரும் கோரசாக அரசின்
மீது பாய்ந்து பிராண்டுவது இயற்கை
ஆகி விட்டது.
ஆனால் உண்மை எப்போதும் கசப்பாக உள்ளது
நன்றி 
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive - Page 2 Empty Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum