புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_m10சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க


   
   

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 12:54 am

First topic message reminder :

18 .12 .2017

இது ஒரு புதிய முயற்சி.

ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.

ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.


காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.

அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.

அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.

அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.

அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.

ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.

என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி

"என் வீரத்தின் மீதாணை"

இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.

தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.

அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.

அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.

காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.

அரசி : வரச்சொல் சபைக்கு.

காவலாளி : உத்தரவு.

ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?

அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.

சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.

புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.

அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?

புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.

அரசி : ஏனப்படி?

புலவர் : காரணம் புரியவில்லை

அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?

புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.

அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.

புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]

ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?

புலவர் : இதே ஊர்.

ப்ரதம தளபதி : பெயர்?

புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.

ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?

புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு

ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?

புலவர் : இல்லை

ப்ரதம தளபதி : சகோதரர்?

புலவர் : அனாதை

ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?

புலவர் : எமக்குத் தொழில் கவிதை.

ப்ரதம தளபதி : அடுத்து?

புலவர் : ஆண்டவன் தொண்டு

ப்ரதம தளபதி : இதற்கு முன்?

புலவர் : பிறப்பால் ஊமை.

ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?

புலவர் : கலைவாணியின் அருளால்.

ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.

புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?

ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.

புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.

அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,

அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.

புலவர் : அரசி

அரசி : ஆட்சிக்கிலக்கணம்?

புலவர் : ஆணவமற்ற அரசு.

அரசி : புலவனின் உரிமை?

புலவர் : சுதந்திரப் பறவை.

அரசி : இதயத்தை மகிழ்விப்பது?

புலவர் : குழந்தையின் மழலை

அரசி : வேதனை தருவது?

புலவர் : நண்பனின் பிரிவு.

அரசி : நட்புக்குயர்வு?

புலவர் : இடுக்கண் களைவது.

அரசி : எண்ணக்கூடாதது ?

புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]

அரசி : பொருளில்லாதவர்க்கு?

புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.

அரசி : அருளில்லாதவர்க்கு?

புலவர் : எவ்வுலகமுமில்லை.

அரசி : எங்கும் வேண்டுவது?

புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.

அரசி : உயர்வுக்கு வழி?

புலவர் : உண்மையும், சத்தியமும்.

ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?

புலவர் : கவிஞனின் காவியம்

அரசி : அழிந்து விடுவது?

புலவர் : நிலையற்ற செல்வம்

ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?

புலவர் : பேச்சைக் குறைப்பது.

ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?

புலவர் : பொன்னேட்டில் இருப்பது.

அரசி : புவியாள்பவர் முடிவு?

புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.

ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?

புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?

புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்

தளபதி : கேட்கத் தகாதது ?

புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.

ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?

புலவர் : அடக்கமில்லாமை

அரசி : அதற்குதாரணம் ?

புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.

ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி

பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.

அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.

அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.

புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?


புலவர் :   ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.

ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.

புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.

அரசி : எப்படி?

புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.

ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.

புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.

தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.

புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.

Heezulia மீண்டும் சந்திப்போம்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 11, 2018 12:30 pm

11.01.2018
 
ஒரு அம்மா, ஒரு மகன். 
 
அம்மா : உண்மய சொல்லு, யாரு இந்த மோகனா, இவளுக்கும் ஒனக்கும் என்ன சம்பந்தம்? 
 
மகன் : இல்ல,  அதுவாம்மா, அவ, அது வந்து............................ யா........ அந்த பொண்ணு ............. எங்கூட, க்ளப்ல டான்ஸ் ஆடுனா, அவ்ளதான், எனக்கும், அவ்ளுக்கும்,  எந்த விதமான சம்பந்தமும் கெடயாதும்மா. [கொஞ்சலா] ஏம்மா, ஏமேல கூடவா உங்களுக்கு சந்தேகம்? 
 
அம்மா : நான் சந்தேகப்படலேடா. ஆனா ஊரென்ன நினைக்கும்? இதோ பார், ஓன்நன்மைக்காகத்தான் இதெல்லாம் வேண்டாம்னு சொல்றேன். [மகன் முகத்தை ரெண்டு கைகளாலும் செல்..............லமா  புடிச்சு] ரவி, ஒரு தாய்க்கு உண்மையான சந்தோஷம் எது தெரீமா?  தாம்பிள்ளய,  நல்லவன்,  ஒழுக்கமானவன்னு பலபேரு வாயால புகழறத, காது குளிர்ர கேக்குறத்தாண்டா. அதனாலே, இனிமேலாவது இதெல்லாம் விட்டுட்டு,  கௌரவமான ஒரு உத்தியோகத்த பாத்துட்டு, ஊரோட இரு, தெரிஞ்சிதா? 
 
ரவி : ஆல்ரைட். இனிமே உங்க இஷ்டப்படியே நடக்றேன். OK? [அம்மாவின் நாடியில் கைவெச்சு] எங்க, சிரிங்க, சிரிங்கம்மா. 
 
அம்மா கலகலன்னு சிரிக்கிறா. ரவியும் சேர்ந்து சிரிக்கிறான்.  Bed ஐயும், சூட்கேஸையும் எடுத்துட்டு மாடிக்கு போறான். ஊருக்கு எங்கயாவது போயிட்டு வந்திருப்பான் போல. மகன் போறதை, அம்மா பார்த்துட்டு பூரிச்சு போய் நிக்கிறா.  
 
அம்மா பீரோவைத் திறக்கிரா. எதையோ................ தேடுறா. ஆ............ங், கெடச்சிருச்சு. கையில ஒரு செயின், அதில ஒரு பெரிய டாலர். ரெண்டு கைலயும் அந்த செயினை புடிச்சுட்டு நிக்கிறா. மூஞ்சிக்கு முன்னால கொசுவத்தி சுருள் சுத்துது. ஃப்ளாஷ் பேக். 
 
இதே அம்மா,  ஒரு கையில ஒரு துணிமூட்டையையும், இன்னொரு கையில ஒரு லாந்தர் விளக்கையும் வச்சுட்டு, காடு மாதிரி இருக்கு, நடந்து வந்துட்டு இருக்கா. ஒரு குழந்தை அழுற சத்தம் கேட்குது. வந்து பார்த்தாக்கா, ஒரு கார் நிக்குது. காருக்கு உள்ளேயும் யாருமில்ல, வெளியவும் யா...................றுமில்ல. ஆனா ஒரு ரெண்டு வயசு இருக்கும், குழந்தை மட்டும், காருக்கு வெளிய அழுதுட்டு நிக்குது. அவள் அந்த குழந்தையை தூக்கி வச்சுட்டு, சுத்................துமுத்தும் பார்க்கிறா. யா..................... ரையும் காணோம். அந்தக் குழந்தையின் கழுத்தில அந்த செயின், பீரோவிலிருந்து எடுத்து பார்த்தாலே, அது  இருக்கு. அம்மா அந்த செயினை பார்க்கிறா.  இவ்வளவுதான் ஃப்ளாஷ் பேக். அதாவது, ரவி அவளுடைய மகனில்லேன்னு, ஆடியன்ஸுக்கு டைரடக்கர் புரிய வைக்கிறார் போல. கொசுவத்தி சுருளை காணோம். 
 
அம்மா இப்போ கையில அந்த செயினோடு வீட்டில. அவள் அந்த செயினையும், அங்க சொவத்தில மாட்டி வச்சிருக்கிற ரவியின் ஃபோட்டோவையும் பார்க்கிறா. 
 
அடுத்த ஸீன்.
 
அம்மா பார்த்த ரவியின் ஃபோட்டோல, இப்போ ஒரு சின்ன பையன். ஒரு பணக்காரர்  வீடு.  அந்த சின்ன பையன் ஃபோட்டோ முன்னால ஒரு பெரியவர் நின்னுட்டு இருக்கார். 
 
பெரியவர் : பாஸ்கர், இப்போ நீ எங்க இருக்கியோ. ஒன்ன எப்படீல்லாம் வளத்து ஆளாக்கணும்னு நான் ஆசப்பட்டேன். ப்ச் , எல்லாமே வீணாயிருச்சு. நான் கண் மூட்றதுக்குள்ள ஒன்ன பாப்பேனா பாஸ்கர். 
 
"நிச்சயமா பாப்பீங்க" ன்னு ஒரு முரட்டு குரல். பெரியவர் திரும்பி பார்க்கிறார். 
 
பெரியவர் : ஓ, தங்கராஜ். 
 
பெரியவர் எந்திரிச்சு வந்து தங்கராஜை வரவேற்கிறார். 
 
தங்கராஜ் : வணக்கம் சார். 
 
பெரியவர் : வாங்க வாங்க, உக்காருங்க. 
 
ரெண்டு பேரும் உக்கார்றாங்க. 
 
பெரியவர் : ஏம்மகன் கெடப்பான் கெடப்பான்னுதான் நீங்களும்தாம் அஞ்சு வருஷமா சொல்லிட்டுதான் வர்றீங்க. ஆனா அவனைத்தான் கெடச்சபாட்ட காணோம். போவட்டும், ஏம்மவன தேடி போன விஷயம் என்னாச்சு? 
 
தங்கராஜ் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு செயினை எடுக்கிறான். 
 
தங்கராஜ் : ஆங் ... இந்த டாலர் செயின், உங்க மகன் போட்டிருந்ததா பாருங்க. 
 
செயினை வாங்கி பார்த்த பெரியவர் : நோ நோ, அந்த டாலரோட  அமைப்பே வேற. 
 
ஒரு இளைஞி. ட்ரெஸ்ஸிங் டேபிள்க்கு முன்னால உக்காந்து மேக்கப் போட்டுட்டு இருக்கா. மேக்கப் முடிஞ்சு எந்திருச்சு வர்றா. வேலைக்காரி வர்றா. இளைஞி வேலைக்காரிய பார்த்து, 
 
இளைஞி : கமலா, மாமா எங்கே இருக்கார்? 
 
வேலைக்காரி : அந்த பாழாப்போன தங்கராஜ் கூட பேசிட்டிருக்கார். 
 
இளைஞி சிரிச்சுட்டு போறா. 
 
இங்க பெரியவர் தங்கராஜ்ட்ட பணத்தை கொடுக்கிறார். 
 
பெரியவர் : இந்தாங்க ஐயாயிரம் ரூபா. [தங்கராஜ் பணத்தை எண்ணுறான்]  பணத்தை பத்தி எனக்கு கவலை இல்ல. எனக்குத் தேவ ............
 
தங்கராஜ் : உங்க மகன், அவ்வளவுதானே. கவலைய விடுங்க. 
 
இளைஞி : அங்க்..............கிள்
 
பெரியவரும், தங்கராஜும் மாடிப்படி பக்கம் திரும்பி பாக்கிறாங்க. இளைஞி படீல ஸ்டை....................லா இறங்கி வந்துட்டு இருக்கா. 
 
பெரியவர் : வாம்மா
 
தங்கராஜ் : ஹலோ கீதா.
 
இளைஞி ஓடி வந்து பெரியவர் தோளை பிடித்து,  "அங்க்கிள்,  என்னுடைய  friendக்கு இன்னிக்கி பர்த்டே. போய் வரட்டுமா?”
 
பெரியவர் : ஏம்மா, நேத்துதான் மெட்ராஸ்ல இருந்து வந்தே, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க கூடாது? 
 
இளைஞி : ஒரு நாள் ப்ரயாணத்துக்கு , ஒரு மாசமா ரெஸ்ட்டு? என்..... ன  அங்க்கிள் நீங்க.
 
பெரியவர் : சரிம்மா, ஒன் இஷ்டம் போயிட்டு வா. 
 
இளைஞி : தாங்க்யூ. 
 
தங்கராஜ் : கீதா, பரீஷல்லாம் எப்டி எழுதியிருக்க? first கிளாஸ்ல பாஸ் பண்ணிர்வியா? 
 
கீதா : பேப்பர்ல வரும், பாத்துக்கோங்க. [பெரியவரை பார்த்து] பபை 
 
பெரியவர் சிரிச்சுட்டே : விளையா...........ட்டு பொண்ணு. 
 
தங்கராஜ் : ஹ ஹ  ஆமா ஆமா, சார், புகழ்ச்சிக்காக சொல்லல்லான்னு  நீங்க நெனைக்க கூடாது. நானும் எத்...........தனையோ தாய்மாமங்கள பார்த்திருக்கேன். அக்கா மகள, தான் சொந்த பெண்ணுமாதிரி இவ்வளவு  செல்லமா நீங்க  வளக்கிறீங்களே, ஆஹா,  உங்களபோல நான் பார்த்ததே இல்ல சார். 
 
பெரியவர் : தங்கராஜ், பறிபோய்ட்டா  என் மகன் பாஸ்கர, இப்ப நான் கீதா உருவுலதான் பார்த்து ஆறுதலடைறேன். 
 
தங்கராஜ் : ஏன் சார், படிப்பெல்லாந்தான் முடிஞ்சு போச்சே, கீதாவுக்கு கல்யாண முயற்சி ஏதாவது................ 
 
பெரியவர் : இன்னிக்கே ஏம்மகன  தேடி கொண்டுவாங்க, நாளக்கே கல்யாணம் ஜாம்ஜாம்னு நடத்திர்றேன். அவனுக்காகத்தானே நான் காத்துட்டுர்க்கேன். 
 
தங்கராஜ் : அதுக்காகத்தானே நான் பணத்த வாங்கிட்டே... இருக்கேன்.   
 
தங்கராஜ் தன் கையிலிருந்த ஐயாயிரம் ரூபாயை வில்லத்தனமான சிரிச்சுட்டே பார்க்கிறான். 
 
அடுத்த ஸீன். 
 
ரவியின் வீடு. போஸ்ட்மேன் ஒரு லெட்டரை குடுத்துட்டு போறான். அம்மா அந்த லெட்டரை வாங்கி பார்க்கிறாள். அதில ரவி பேர் போட்டிருக்கு. "ரவி" ன்னு சிரிச்சுட்டு சொல்லி,  from அட்ரஸை பார்க்கிறாள்.  "மோகனா"ன்னு இருப்பதை பார்த்து திகைக்கிறாள். அம்மா லெட்டரை பிரிக்கிறாள். 
 
அந்த லெட்டர் ஆரம்பத்தில "என் ஆருயிர் காதலர் ரவிக்கு" ன்னு எழுதியிருக்கிறதை வாசிச்சு அம்மாவுக்கு அதிர்ச்சி. 
 
லெட்டர் எழுதியவளே படிக்கிற மாதிரி : உங்களை இப்படி கூப்பிட, எனக்கு உரிமை உண்டூன்னு  நினைக்கிறேன். உங்களோடு சென்னையிலே ஆடிப் பாடின நாட்கள், என்னால் மறக்கவே............. முடியவில்லை. ஒவ்வொரு நிமிஷமும் உங்கள் நினைவுதான். அதிர்ஷ்ட்டவசமாக, உங்கள் ஊரிலேயே எனக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்கராஜ் என்பவர், அவருடைய கோல்டன் க்ளப்பில் என்னை டான்ஸராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.  ஊட்டி வந்ததும், உங்களை நேரில் வந்து நானே சந்திக்கிறேன். சந்தோஷம்தானே. இப்படிக்கு உங்களையே..........எண்ணி 
ஏங்கும்  [இப்போ  அம்மா வாசிக்கிறாள்] மோ...கனா. 
 
அம்மா லெட்டர் வாசிச்சு அதிர்ச்சியிலேயே நாற்காலியில் உட்கார்றா. 
 
அடுத்த ஸீன். 
 
பெரியவரின் வீடு. அங்க ஒரு பெரீ...........ய பணப்பெட்டி. அந்த பணப்பெட்டியில் ஒருத்தன் ஏதோ செய்றான். பெரியவர் வர்றார். 
 
பெரியவர் : என்ன எஞ்சினியர் சார்,  ஆட்டமடிக் கேமராவை பொருத்தியாச்சா? 
 
என்ஜினீயர் : ஓ எஸ். இப்பதான் முடிஞ்சுது. இனிமே உங்களுக்கு தெரியாம, இந்த பணம் வக்கிற பெட்டிய வேற யாரும் நெருங்கவே முடியாது.
 
பெரியவர் : அப்படியா? 
 
எஞ்சினியர் : ஆமா. இப்ப நீங்க வெளிய போய்ட்டு, கதவ திறந்துட்டு வாங்க. 
 
பெரியவர் : ஓ எஸ் 
 
பெரியவர் அந்த ரூமுக்கு வெளியே போறார். கதவை சாத்துறார். மறுபடியும் கதவை திறந்துட்டு உள்ளே வர்றார், பணபொட்டி முன்னால வந்து நிக்கிறார். பணப்பொட்டியிலுள்ள கேமரா க்ளிக்குது. 
 
எஞ்சினியர் : கவனிச்சீங்களா? கதவ திறந்தாலே போதும். ஆட்டோமேட்டிக் கேமரா தானாகவே வேல செய்ய ஆரம்பிச்சுரும். ஏன், இப்ப என்னயும், உங்களையும்தான் அது படம் பிடிச்சிருக்கும். 
 
பெரியவர் : வெர்ரி குட். 
 
எஞ்சினியருக்கு ஷேக் ஹேண்ட் கொடுக்கிறார். "வாங்க"ன்னு சொல்லி, ரெண்டு பேரும் ரூமுக்கு வெளியே வர்றாங்க. 
 
அடுத்த ஸீன்.

பெரியவரின் வீடு 
 
டீஷர்ட்டும், ஷார்ட்ஸும் போட்ட ஒரு இளைஞி, ஹாக்கியோடு அவ ரூம்லே இருந்து வெளிய ஓடி வர்றா.  வேலைக்காரி வந்து, "அம்மா,  உங்க சிநேகிதிங்களெல்லாம் வெளிய காத்திருக்காங்க." ன்னு சொல்றா.  இளைஞி "ஓ" ன்னு சொல்லிட்டு போறா. அங்க பெரியவர் வர்றார். 
 
பெரியவர் : கீதா, என்ன ஹாக்கியா? 
 
கீதா : எஸ். என் friendsஓட பிக்னிக் போறேன். பணம் வேணும் அங்க்ள். 
 
பெரியவர் : பணந்தானே, புதுசா மேனேஜர அப்பாய்ண்ட் பண்ணியிருக்கேன். ஆஃபீஸ்ல போய் வாங்கிக்க. 
 
கீதா : தேங்க்யூ 
 
சொல்லிட்டு போறா.
 
பெரியவர் : ஜாக்ரதயா போய்ட்டு வாம்மா. 
 
ஃபோன் அடிக்குது. பெரியவர் போய் எடுக்கிறார். 
 
பெரியவர் : ஹலோ... தங்கராஜா? குட்மார்னிங். என்ன பணமா? 
 
அடுத்த முனைல, தங்கராஜும், இன்னொரு ஆளும் இருக்காங்க. 
 
தங்கராஜ் : ஆமா சார், பணந்தான். உங்க மகன் விஷயமா துப்பு கண்டுபிடிக்க, ஒரு ஆள டெல்லிக்கு அனுப்ப வேண்டியதிருக்கு. அதுக்கு அர்ஜன்ட்டா கொஞ்சம் [பக்கத்தில நிக்கிற ஆளை பார்த்து கண்ணடிச்சு] பணம் தேவ சார். 
 
பெரியவர் : அஹ, சரி, ஆஃபீஸ்க்கு போயி மேனேஜர்கிட்ட, எவ்ளோ வேணுமோ வாங்கிக்கோங்க. 
 
தங்கராஜ் : அஹ, இட்ஸ் ஆ..............ல் ரைட் சார், 
 
தங்கராஜ்  ஃபோனை வச்சுட்டு சந்தோஷமா எந்திருச்சு வர்றான். அந்த ஆளும் கூடவே வர்றான். 
 
ஆள்: ஏம்பாஸ் அவர இப்டி ஏமாத்திட்டு இருக்கணும். ஒண்ணு அவர் மகன கண்டுபுடிச்சு கொடுக்கணும், இல்ல சும்ம இருக்கணும். 
 
தங்கராஜ் : கண்டுபிடிக்கலாண்டா, ஆனா கீதாவ தாம்மகனுக்குல்ல கல்யாணம் பண்ணி வைக்க அவன் திட்டம் போட்டு வச்சிருக்கான். 
 
ஆள் : அதனால உங்களுக்கென்ன நஷ்டம்? 
 
தங்கராஜ் : இடியட், என் லட்சியம் புரியாம பேசுறியேடா. [ஃபிளையிங் கிஸ் கொடுக்கிறான்] ம்ம்ம்மா, அந்த கீதாவ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு,  சட்டப்பூர்வமா அவ சொத்துக்கு நா......னே அதிபதியாகணும். 
 
ஆள் : அப்பொறம்? 
 
தங்கராஜ் : அப்பொறம், இந்த சோமசுந்தரத்த ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவுல நிக்க வச்சி, ஹ ஹ ஹ ஹ, நான் வேடிக்க பாக்கணும். 
 
ஆள் : அவரு மேலே ஏம்பாஸ் உங்களுக்கு இவ்வளவு ஆத்ரம்? 
 
தங்கராஜ் : ஆத்ரமா? 
 
மேஜை ட்ராயரிலிருந்து ஒரு ஃபோட்டோவை எடுத்து அவன்கிட்ட காட்டி,
 
தங்கராஜ் : யார் தெரீமா? என் கூ ......டப் பொறந்த ஒரே அண்ணன் மூர்த்தி. ஏதோ கொஞ்சம் பணத்த கையாடல் செய்தார்னு அஞ்சு வருஷம் ஜெயில்ல தள்ளி, இவர் குடும்பமே தற்கொல செய்யிறதுக்கு காரணமா இருந்தவன், இதே சோமசுந்தரம். அது மட்டுமல்ல,  பழிக்கி பழி வாங்கி இவனுடைய  மகன எங்க அண்ணன்  கடத்தப் போனாரு. அப்போ இவர துப்பாக்கியால சுட்டு கொன்னது  இதே சோமசுந்தரத்தோட ஆளுங்கதான். இப்போ புரியுதா என் ஆத்திரத்துக்குக் காரணம்? [கொஞ்ச நேரம் அமைதி] தட்ஸ் ஆல்ரைட், நேரமாயிருச்சு,  நான் சோமசுந்தரம் ஆஃபிஸ்க்கு போயி அந்த பணத்த வாங்கிட்டு வந்துர்றேன்.
 
அடுத்த ஸீன். 
 
கார்ல இருந்து இறங்கி கீதா வர்றா. அந்த கார் நிறைய அவள்  நண்பீங்க  உக்காந்திருக்காங்க. 
 
கீதா : நான் மேனேஜர்கிட்ட போயி, கை நிறைய பணம் வாங்கிட்டு வர்றேன். ம்ம்? 
 
நண்பி : அ அ சீக்கிரமா வாடி. 
 
பெரியவர் சோமசுந்தரம் சொன்னபடி, கீதா பிக்னிக் போறதுக்கு பணம் வாங்க போறா. ஆஃபிஸ்ல  மேனேஜர் திரும்பி உக்காந்திருக்கார். 
 
கீதா : குட்மார்னிங் சார். 
 
அங்க மேனேஜர் ரவி  உக்காந்திருக்கான். ரோலிங் சேர்ல திரும்பிகிட்டே  "குட்மார்னிங்". கீதாவை பார்த்து கிண்டலா, "ஓ, நீயா?"
 
கீதா கோபமா : நீங்களா? நீங்களா புது மேனேஜர்? 
 
ரவி : ஏன், சந்தேகமா இருக்கா? மேனேஜர் நானேதான். என்ன விஷயம்? வேலை ஏதாவது வேணுமா? ஐயாம் ஸோ சாரி, நோ வேகன்ஸி. 
 
கீதா : எனக்கு பணம் வேணும். 
 
ரவி : நன்கொடை? குடுத்து பழக்கமில்லை. 
 
கீதா கோபமா : மிஸ்டர் 
 
ரவி : மேடம், அன்னிக்கி என்னமோ பெரீய மகாராணி மாதிரி ஜம்பமா பேசிட்டு போனியே. பாத்தியா, இன்னிக்கி என்கிட்டியே பணம் கேக்க வேண்டிய நெலம ஏற்பட்டு போச்சு. 
 
கீதா : ஹா........... என்...............ன செய்றது? 
 
ரவி : ஹா.............. ஐயோ பாவம். 
 
கீதா : உங்கள சொல்லி குத்தமில்ல சா.........ர். போயும் போயும் உங்களுக்கு மேனேஜர் வேல குடுத்து, இந்த சீட்ல உக்கார வச்சிருக்காரே, இந்த எஸ்டேட் முதலாளி, அவர சொல்லணும். 
 
ரவி : [கீதாவை கும்பிட்டு] அம்மா தாயே, ஒன்ன சீட்ல உக்கார வச்சு பேசிட்டு இருக்க எனக்கு நேரமில்ல. தயவு செஞ்சு இந்த எடத்த விட்டு போயிரு. ப்ளீஸ் டோண்ட் வேஸ்ட் மை டைம். 
 
கீதா கோபமா : ஷடப்
 
ரவி கோபமா : கெடௌட். 
 
ஃபோன் அடிக்குது. ரவி எடுத்து பேசுறான் 
 
ரவி அதே கோபத்துடன் : ஹலோ, யார் வேணும்? [திடீர்னு எந்திரிச்சு நிக்கிறான். அசடு வழிய] ஹ ஹ ஹ குட்மார்னிங் சார், நாந்தான் ரவி பேசுறேன். எஸ் சார், வந்து இங்க.............. அது. 
 
அந்தப் பக்கத்தில பெரியவர். 
 
பெரியவர் : கீதா வந்து பணம் கேட்டாளா? 
 
ரவி : ஆமா சார். கீதாவோ, சீதாவோ, ஒண்ணு வந்து பணத்த கேட்டு தொணதொணதொணன்னு உயிரை வாங்கிட்டே இருக்கு சார். 
 
பெரியவர் : ஹஹஹஹ மேனேஜர், கீதா வேற யாருமில்ல, எவ்வளர்ப்பு மகள். 
 
ரவி அதிர்ச்சியுடன் : ஹ, வளர்ப்பு மகளா? 
 
அதே அதிர்ச்சியுடன் ஃபோனை ஸ்டாண்டில வைக்கா.............ம, கையிலேயே புடிச்சுட்டு உக்கார்றான். கீதா அலட்சியமாக இதையெல்லாம் பார்த்துட்டு,  அவன் கையில இருந்து ஃபோனை வாங்கி ஸ்டாண்டில வைக்கிறாள். ரவி அதிர்ச்சிலேயே உக்காந்திருக்கானா? அவன் மூஞ்சிக்கு நேரே கீதா சொடக்கு போட்டு அவனை கூப்பிடுறா. 
 
கீதா : என்ன சார், இப்பவாவது பணம் தர்றீங்களா? 
 
ரவி : கீதா, காதலுக்காக, இந்த ஒலகத்துல, உடல் பொருள் ஆவி ஊவி எல்லாம்தான் கொடுப்பது வழக்கம். ஆனா உனக்காக உங்க மாமா பணத்தையே நான் தர்றேன். 
 
கீதா : ரொம்.........ப தாங்க்ஸ் சார். 
 
செருமுற சத்தம் கேட்டு ரெண்டு பேரும் வாசலை பார்க்கிறாங்க. தங்கராஜ் நிக்கிறான். 
 
தங்கராஜ் : சமயம் தெரியாம வந்துட்டேன். நான் வேண்ணா அப்புறம்...........
 
ரவி : பரவாயில்ல இருக்கட்டும். 
 
மேஜை ட்ராயரிலிருந்து பணக்கட்டை எடுத்து கீதாவிடம் கொடுக்கிறான். 
 
ரவி கீதாவை பார்த்து : இனிமே............... அடிக்...........கடி வந்து பணம் வாங்கிக்கணும். 
 
கீதா சிரிச்சுட்டே : ம்ம்ம் 
 
கீதா பணத்தை வாங்கிட்டு போறா. தங்கரஜை கடந்து போகும்போது, தங்கராஜ் கீதாவை பார்த்து இளிக்கிறான். "குட்மார்னிங் கீதா" 
 
கீதா மொரச்சுட்டு போயிர்றா. தங்கராஜ் ரவி மேஜை பக்கமா போறான். 
 
ரவி : நீங்க யாரு? உங்க்ளுக்கு என்ன வேணும்? 
 
தங்கராஜ் : ஏம்பேர் தங்கராஜ். 
 
ரவி : ஐஸி. 
 
தங்கராஜ் : எஸ்டேட் மொதலாளிக்கு ரைட் ஹேண்ட். அவசரமா ரெண்டாயிர ரூபா தேவ. 
 
ரவி : நீங்க ரைட் ஹேண்டோ லெஃப்ட்  ஹேண்டோ, மொதலாளியோட அனுமதி இல்லாம, ஒரு பைசா கூட என்னால தர முடியாது. 
 
தங்கராஜ் : ஐஸி. என்ன யாருன்னு ஒங்க்ளுக்கு  தெரியாது. போக போக தெரிஞ்சுக்குவீங்க. இட்ஸ் ஆல்ரைட். வரேங்க. 
 
ஒரு கும்பிடு போட்டு வெளிய போயிறான். ரவி தன ஆஃபிஸ் வேலைய செய்ய ஆரம்பிக்கிறான். 

என்ன படம், வசனங்கள் பேசியது யார் யார்?
 
Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 13, 2018 1:20 am

13.01.2018 

படம் : காதலித்தால் போதுமா 1967 

வசனம் பேசினவங்க : 

அம்மா - குமாரி ருக்மணி 
ரவி - ஜெயசங்கர் 
கீதா - வெண்ணிற ஆடை நிர்மலா 
தங்கராஜ் - RS மனோகர் 
பெரியவர் - VS ராகவன் 

வசனங்களை வாசிச்சீங்களா என்னான்னே தெரியல.

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 13, 2018 1:21 pm

வசனம் நன்றாகப் புரிகிறதே! நன்றி.

இது மருதநாயகம் பாடல்...



நன்றி-
Ilaiyaraaja Official

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 13, 2018 1:40 pm

13.01.2018 

நன்றி மூர்த்தி சார்.


இதே............... வீடியோவைத்தான் ஆடியோவாக, [mp3] மாற்றி, mediafireல upload செஞ்சு, லிங்க்  SK க்கு அனுப்பினேன்.  அவரும், அந்தப் பாட்டை download செஞ்சு கேட்டுட்டேன்னு சொன்னாரே.   

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 13, 2018 11:46 pm

//உங்களுக்கு தனி மெஸேஜ் அனுப்பியிருந்தேனே, அது கெடச்சுதா? சாதா..................ரண பாட்டு லிங்க் அனுப்புறதுக்கு ததீங்கொணத்தோம்  போட வேண்டியதிருக்கு. //

பாட்டு லிங்க் பகிர்வதில் தடை இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பதிவு/செய்தி போன்றவற்றை copy  & paste செய்து பகிரும்படியும் ,லிங்க்கை கொடுப்பதால் அது அந்த தளத்திற்கான விளம்பரம்  ஆகிவிடலாம்  எனவும்  சொல்கிறார்கள். அத்துடன் வேறொரு தளத்தில் இருந்து பகிரும் பொது நன்றி சொல்வது நாகரிகம் எனவும் சொல்கிறார்கள்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 14, 2018 6:06 pm

14.01.2018 

மூர்த்தி, 

நான் இதுவரை எதையுமே................ copy & paste செஞ்சதே இல்ல. அது எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. நன்றி சொல்வது தப்பில்லை. நல்லதுதான். 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 28, 2018 1:36 pm

28.01.2018

இதுல வர்றவங்க யார் யாருன்னு சொல்லிர்றேன்.

புதுப்பொண்ணு மரகதம், 
பொண்ணோட அப்பா ஒரு பண்ணையாரு, 
பொண்ணோட அம்மா சிவகாமி 
புது மாப்ளே முத்தையன், 
முத்தையனின் அம்மா 
முத்தையனின் சித்தப்பா
பஞ்சாயத்தார் 
அம்புட்டுதான். 

சீன் 1

ஒரு பஞ்சாயத்து கூட்டம். ஜனங்க எல்லாரும் உக்காந்திருக்காங்க. புதுசா கல்யாணமான பொண்ணு மரகதமும், மாப்பிள்ளை முத்தையனும் நிக்கிறாங்க. பொண்ணோட அம்மா சிவகாமியும், அப்பா பண்ணையாரும் இருக்காங்க. 

முத்தையனின் சித்தப்பா : இங்க இருக்கிற ஊர் ஜனங்களுக்கு என் வணக்கம். வீரனூர் பஞ்சாயத்தார்க்கு முதல்ல என்னோட விண்ணப்பத்த தெரிவிச்சுக்றேன். 

இப்படி சொல்லிட்டு திண்ணையில உக்கார்றார். 

சித்தப்பா : அதாவது நம்ம ஊரு பண்ணையாரு,[கோபமா] இந்த முத்தையன் பய மேல ப்ராது குடுத்துருக்காரு. முத்தையன் என்னுடைய அண்ணன் மகன் என்பதற்காகவோ, அல்லது நான் அவன் சித்தப்பன் என்பதுக்காகவோ, அவனுக்கு எந்தவிதமான் ஒரு எரக்கத்தையும் காட்டப்படாதுன்னு நான் ஒங்கள கேட்டுக்குறேன். ரெண்டு வீட்டுக்காரரும் சம்மதப்பட்டு நடத்த இருந்த கல்யாணத்த தடுத்து, பொண்ண கடத்திகிட்டு போயி திருட்டுத்தனமா தாலிய கட்டினான். அதுக்கு நீங்க என்ன தண்டன குடுக்கபோறீங்களோ, தயவு தாட்சண்யம் இல்லாம போட்டு தாக்கிறணும், ஆமா. 

பஞ்சாயத்தார் : முத்தையா, நீ என்ன சொல்றே? 

முத்தையா : ஐய்யா, அண்ணன் மகனுக்கூன்னு பொண்ணு பேச போயி, தாம்மகனுக்கு பேசி இங்க வந்து உக்காந்துருக்காரே ஒரு பெரிய மனுஷர், அவருக்கும் நீங்க நல்ல மொறைல தீர்ப்பு வழங்கணும்னு நானும் கேட்டுக்குறேன். 

சித்தப்பா : டேய், ஞாயத்த பத்தி பேச ஒனக்கென்ன யோக்யத இருக்கு? 

முத்தையா : பஞ்சாயத்து கூடி இருக்கும்போது தனிப்பட்ட முறைல என்ன பேசுறதுக்கு உங்களுக்கு என் ... ன அருகத இருக்கு? 

அங்க உக்காந்துட்டு இருந்த பண்ணையார் [பொண்ணோட அப்பா] எந்திருக்கிறாரு. கூடவே அவரோட பொண்டாட்டி சிவகாமியும் எந்திருக்கிறாங்க. 

காரசாரமான, கோபமான, sentiment ஆன வாக்குவாதங்கள் நடக்குது. 

பண்ணையார் கோபமா : ஐய்யா, கள்ளத்தனமா வந்து திருடிட்டு போனதுக்கு மொதல்ல காரணத்த கேளுங்க.

முத்தையா கோபமா : திருடனா, என்ன திருடினேன்? ஒங்க வீட்டுக்கு வந்து நெல்லு மூட்டய திருடினேனா, இல்ல உங்க இரும்பு பொட்டிய கள்ளசாவி போட்டேனா, இல்ல உங்க சொத்துக்கு ஆசப்பட்டேனா? எதைய்யா திருடினேன்? 

பண்ணையார் : பின்ன எதுக்காக ஏவ்வீட்டுக்குள்ள புகுந்து, நான் கண்ண போல வளத்த எம்பொண்ண கூட்டிட்டு போன? 

முத்தையா : நான் அவர் வீட்டுக்குள்ள நொழையவும் இல்ல, அந்த வாசப்படிய மிதிக்கவும் இல்ல. 

பண்ணையார் : அப்போ ............ பலாத்காரமா கொண்டுபோய் எம்பொண்ணு கழுத்துல தாலி கட்டீர்க்க, அப்படித்தானே? 

முத்தையா : இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்ல. உங்க பொண்ணையே கேளுங்க. 

மரகதம் : ஐய்யா, இவங்க ஒண்ணும் என்ன பலாத்காரமா கூட்டிகிட்டு போகல. பலவந்தமா எங்கழுத்தில தாலியும் கட்டல. நானா இஷ்டப்பட்டு சம்மதிச்சுதான் இவங்களையே கட்டிகிட்டேன். இது குத்தமுன்னா, அந்த தண்டனய எனக்கு குடுத்துருங்க. 

பண்ணையாரும், முத்தையனோட சித்தப்பாவும் திகைச்சுபோனாங்க. 

பண்ணையார் : மரகதம்

மரகதம் அழுதுகிட்டே : அப்பா, அவசரப்பட்டு ஏஞ்சம்மதத்த கேக்காம, நீங்களா ஒரு கல்யாண ஏற்பாட்ட செஞ்சீங்க. ஆனவரைக்கும் தடுத்து பாத்தேன். நீங்க கேக்கல. பிறகு, நானா ஒரு முடிவுக்கு வந்து, ஏம்மனசில நெனச்சவர கல்யாணம் செய்துகிட்டேன். இது தப்பா? சொல்லுங்கப்பா. [கெஞ்சுறார்] 

பண்ணையார் என்ன பேசுறதுன்னு தெரியாம பொண்ணையே பாத்துட்டு நிக்கிறார். 

மரகதம் : என்னப்பா பேசாம நிக்கிறீங்க ? 

பண்ணையார் வெறுப்பா : அப் .......... பா, போதும். இனிமே ஓவ்வாயால என்ன அப்பான்னு கூப்டாத. 

பொண்ணோட அம்மா சிவகாமி என்ன செய்றதூன்னு தெரியாம கணவனை பார்க்கிறார்.

மரகதம் அழுதபடியே : அப்படீல்லாம் சொல்லாதீங்க. நடந்தது நடந்துருச்சு. எல்லாத்தயும் மறந்துட்டு, எங்களுக்கு நல்ல வார்த்த சொல்லுங்கப்பா. 

பண்ணையார் கோபமா : ஏன் சொல்லணும், எதுக்காக நல்ல வார்த்த சொல்லணும்? எங்களயும் மீறி ஒன் இஷடப்படி நடந்துகிட்டேல்ல? எப்படியாவது போ. 

மனைவி சிவகாமி கணவன்கிட்ட வருத்தமாவும், திகைப்பாகவும் : என்னங்க, 

பண்ணையார் : பேசாம இரு சிவகாமி. பெத்து வளத்து ஆளாக்குனவங்களுக்கு, இத்தன பெரிய த்ரோகம் செஞ்சதுக்கப்புறம், அந்த பொண்ண பத்தி நமக்கென்ன கவல? 

மரகதம் கோபத்தோடவும், உறுதியுடனும் : அப்பா, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க பாத்து வச்சிருந்த மாப்ளய கட்டியிருந்தா, இந்நேரம் செத்து தொலஞ்சிருப்பேன். ஏம்மனசுக்கு புடிச்ச மாப்ளய கட்னதுக்கப்புறம், நான் நல்லாதாம்ப்பா இருப்பேன், நல்லாதான் இருப்பேன்.

பண்ணையார் கோபமா : எங்கள நோகவச்சதுக்கப்புறம், நீ எப்படி நல்லா இருக்க முடியும்? மரகதம், இன்னேலேயிருந்து நீ எனக்கு மகளுமில்ல, நான் ஒனக்கு அப்பனுமில்ல.இந்த நிமிஷத்திலயிருந்து பந்தபாசமெல்லாம் அறுந்து போச்சு. 

சிவகாமி அழுறார்.

பண்ணையார் பஞ்சாயத்தாருக்கு ஒரு கும்பிடு போட்டு :  வர்றேனுங்க. [சிவகாமிய பார்த்து] சிவகாமி, புறப்படு. 

சிவகாமி பண்ணையாரை சோகத்துடன் பார்த்து, திகைத்து நிக்கிறார். 

பண்ணையார் சிவகாமியை பார்த்து கத்துறார் : ஏநிக்கிற புறப்படு. 

இப்படி சொல்லிட்டே வேகமா நடக்கிறார். மனைவி சிவகாமியும் பின்னாலேயே போறார். 

இதுக்கிடையில மரகதம் அவ போட்டிருந்த நகைய எல்லாம் கழத்தி, கையில வச்சுட்டிருக்கா. 

மரகதம் அவளோட அம்மாவும் அப்பாவும் அவளை கடந்து போகும்போது :  நில்லுங்கப்பா. எங்களுக்கும் மான ரோஷமெல்லாம் நெறை .............. ய இருக்கு. பெத்தவங்க நீங்களே இந்த முடிவுக்கு வந்ததுக்கப்புறம், உங்க சொத்து, ஆஸ்த்தி எதுவுமே எங்களுக்கு தேவயில்ல. 

மரகதம் நகைகளை அம்மாவிடம் நீட்டி : இந்தாங்கம்மா, நீங்க எங்கலயாணத்துக்காக போட்ட நகநட்டு. நீங்களே திருப்பி எடுத்துக்கோங்க. 

சிவகாமி அழுதுகிட்டே : மரகதம் 

பண்ணையார் கோபமா : வாங்கிக்க சிவகாமி. ஏன் யோசிக்கிற வாங்கிக்க. நல்லதா ஒரு பொண்ண வளத்தா.... இன்னைலேயிருந்து அந்தப் பொண்ணு செத்து போயிட்டான்னு நெனச்சுக்கிறேன். [கத்துறார்] புறப்படு, புறப்படு. 

பண்ணையார் வேகமா போயிர்ரார். மனைவியும் அழுதுகிட்டே அவர் பின்னாலேயே போயிர்றாங்க. 

சித்தப்பா கோபமாக : ஊருக்கே............. பெரிய மனுஷன். அவர் மனசையே கலங்க வச்சுட்டான் இந்த முத்தையன் பய. இவனுக்கு சரியான பாடத்த கற்பிக்கல .................. மேலும் மேலும் இந்த மாதிரியான காரியத்த செஞ்சுட்டு இருப்பானுக. 

பஞ்சாயத்தார் : முத்தையா, பொண்ணே.......... சம்மதப்பட்ருந்தாலும், இன்னொர்த்தர்க்கு நிச்சயம் பண்னதுக்கப்புறம், திருட்டுத்தனமா தாலி கட்டிர்றது குத்தம்தான். அந்த குத்தத்துக்காக, ஊர் பெரியவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டு, நூறு ரூபா அபராதத்த உடனடியா கட்டணும். இது பஞ்சாயத்தார் உத்தரவு. 

சித்தப்பா : ம்ம் ......................... ஊர்க்காரங்க கால்ல உழுந்தா மட்டும் போதாது. இவன் செஞ்ச குத்தத்துக்காக, மொதல் ............. ல எங்கால்ல விழணும். அப்புறம் எம்பையன் கால்ல விழணும் ஆமா. [பஞ்சாயத்தார் முன்னால இருக்கிற மேஜையில கோபத்தோடு தட்டுறார்.] 

முத்தையனுக்கு கோபம் வராம இருக்குமா? 

முத்தையன் தெனாவட்டா : கால்ல உழ்றதா? நானா? கெழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும், நான் யாரு கால்லேயும் விழவும் மாட்டேன், மன்னிப்பும் கேக்க மாட்டேன், அபராதமும் கட்டமாட்டேன். நீங்க செய்யிறத செஞ்சுகங்க. பாத்துக்கலாம். 

இப்படி சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு போக நினைக்கிறான். 

சித்தப்பா கோபமா : டேய், பஞ்சாயத்தார் பேச்சுக்கு நீ கட்டுப்படல, ஒன்ன ஊர விட்டே வெலக்கி வச்சுருவோம், ஆமா. 

முத்தையா : அ ..... டே, வெலக்கி வக்கட்டுமே, குடி முழுகி போய்டுமா? இல்ல நாங்க செத்து போயிடுவோமா? 

முத்தையனின் அம்மா திகைப்புடனும், வருத்தத்துடனும் : முத்தையா 

முத்தையா : சும்மா இரும்மா, இந்த ஊர்ல அடிக்கிற காத்து நம்மமேல அடிக்காம போயிடுமா, இல்ல இவங்க இருக் ............. கிற எடத்தில பேயர மழ, நாம இருக் ................. கிற எடத்துல பேயாம போயிடுமா? இந்தாங்கய்யா பஞ்சாயம், தப்பு செய்யறவங்களே சபைக்கு மத்தியில இருக்கும்போது, தர்மஞாயத்த நான் எதிர்பாக்க முடியுமா? ஏண்ட்ட காசுபணம் இல்லய்யா? ஆனா மனசுல சத்தியம் இருக்கு, நல்ல மனசிருக்கு. நீங்க என்னமோ இந்த ஊரே உங்க கைல இருக்கிறதா நெனச்சுகிட்டீங்க. ஆனா இந்த ஊருக்கு மேல, ஒலகத்துக்கு மேல, ஒருத்தன் இருக்கான்யா. அவன் எல்லாத்தையும் பாத்துட்ருக்கான். நான் அவனத்தான் நம்பிட்ருக்கேன். நடக்கிறபடி நடக்கட்டும். என்ன ஒண்ணும் அசச்சுக்க முடியாது. [மனைவிய பார்த்து] வா மரகதம். [அம்மாவ பார்த்து] வாம்மா. [நண்பர்களை பார்த்து] வாங்கடா 

அந்த இடத்த விட்டு மரகதத்தையும், அம்மாவையும் கூப்டுட்டு போறான். 

சித்தப்பா : என்னயா நீ, கூத்து நடுக்குற மாதிரி எல்லாரும் அவன் வாய பாத்துகிட்ருக்கீங்க. பஞ்சாயத்தார் முடிவ சொல்லுங்கய்யா. 

பஞ்சாயத்தார் : ஊரார் முன் நிபந்தனை. வீரனூர் ராமலிங்கம் மகன் முத்தையா, ஊர் ஞாயத்துக்கு கட்டுப்படாததினால, அவனையும் அவன் குடும்பத்தாரையும். ஊரை விட்டே ....... வெலக்கி வச்சிருக்கோம். 

சித்தப்பா மனசுக்கு ஆறுதலாக : அப்பா ................ டி 

பஞ்சாயத்தார் : போட்ட அபராத தொகைய செலுத்தி, மன்னிப்பு கேட்கிற வரையிலும், ஊருக்குள்ள யாரும், அவங்க்ளுக்கு அடுப்பும், நெருப்பும், குடிக்க தண்ணீரும், வாழ்வுக்கோ சாவுக்கோ எதிலும் யாரும் கலந்துக்க கூடாது, இது பஞ்சாயத்தார் உத்தரவு. 

சித்தப்பா : ஹ ஹ ஹா , இதல்லவா தீர்ப்பு. 

- அடுத்த ஸீன் தொடரும் 

Heezulia 


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 28, 2018 1:46 pm

28.01.2018 

ஸீன் 2

முத்தையனின் சித்தி, சித்தப்பா, மகன் 

ஒரு கல்யாண வீடு. மரகதத்துக்கு மொதல்ல நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும், அந்த கல்யாணத்துல வேல செஞ்சவங்களும் வீட்டு முற்றத்தில நிக்கிறாங்க. அவங்களுக்குள்ள ஒரு சலசலப்பு. இந்த மாப்பிள்ளைக்கு பாத்த பொண்ணுதான் முத்தையனை கட்டிக்கிறா. அதனால கல்யாணம் நின்னு போச்சு. 

மாப்பிள்ளை : ஏன் கத்துறீங்க, ஏன் கத்துறீங்க? இருங்க அப்பா வரட்டும் எல்லாத்தையும் தீத்துர்றேன். 

சித்தப்பா வேகமா வர்றார். 

மாப்பிள்ளை : என்னப்பா நீங்க, இங்க கல்யாணத்துக்கு வேல வெட்டி செஞ்சவங்கல்லாம் காசு காசுன்னு உயிரை வாங்குறாங்க. நீங்க பாட்டுக்கு பஞ்சாயத்துல உக்காந்துட்டு சாவகாசமா வர்றீங்க. இவனுங்க கேக்குற கேள்வி நாக்க புடுங்கிகிட்டு சாகலாமான்னு இருக்கு. சாவிய குடுங்கப்பா, பணத்த எடுத்துட்டு வரேன். 

சித்தப்பா : டேய், இரணியனுக்கு ப்ரகலாதனா பிறக்க வேண்டிய பய, எனக்கு மகனா வந்து பொறந்து, ஏம்ப்ராணன வாங்குறே. 

மாப்பிள்ளை : சாவிய எடுங்கப்பா, 

சித்தப்பா : ம் ம் [சாவிய சட்டப்பையில இருந்து எடுத்து] இந்தா, போயி ....... ஒரு அம்பது ரூபாய எடுத்து ........... , தலைய சுத்தி, விட்டெறி. 

சாவிய மகன் கையில கொடுக்கிறார். மகன் சாவிய வாங்கிட்டு வீட்டுக்குள்ள வேகமா போறான். 

கல்யாணத்துல வேல வெட்டி செஞ்சவங்க : என்னய்யா அப்படி சலிச்சுட்டு குடுக்குறீங்க? நாங்க பாடுபட்டு வேல செய்யல, சும்மாவா குடுக்குறீங்க. 

சித்தப்பா : ஆங், செஞ்சீங்க செஞ்சீங்க. நல் ....... லா செஞ்சீங்க. அப்பா கைராசிகார புண்ணியவான்களா, எங்க்யாவது கல்யாணம் நடக்கும்போது, எல்லாரும் ஒண் .............. ணா போய் நில்லுங்க. உருப்படி ஆன மாதிரிதான். விடியாமூஞ்சிகார பசங்க. 

சித்தப்பாவின் மனைவி அவசரமா வீட்டுக்குள்ள இருந்து ஓடி வந்து : என்னாங்க, பையன் சாவிகொத்த ஏங்கிட்ட குடுத்துட்டு, ஊருக்கு போறேன்னு பின்புறம் வழியா ஓட்றாங்க. 

சித்தப்பா : பாரு, வெளையாடாதே. 

சித்தப்பா பயந்து சாவிகொத்த மனைவிகிட்ட இருந்து வாங்கிட்டு, வீட்டுக்குள்ள ஓட்றார் : வெலகு, வெலகு. 

சித்தி, சித்தப்பா ரெண்டு பேருமே வீட்டுக்குள்ள ஓடி வர்றாங்க. பீரோ தெறந்திருக்கு. சித்தப்பா வைத்துல அடிச்சுக்குறார். 

சித்தப்பா : அய்யய்யோ, அய்யய்யோ, அய்யய்யோ. அய்யய்யோ .......... நான் என்ன செய்ய போறேன். எனக்கொண்ணும் பொலப்படலியே. ஊரான்வீட்டு வரிப்பணம், வட்டிப்பணம் எல்லாத்தையும் ஒண்ணா வச்சு பூட்டியிருந்தேனே. அந்தப்பய தூக்கிட்டு ஓடிட்டானே. நான் என்ன செய்ய போறேன். அய்யய்யோ. 

சித்தப்பா தலையில துண்டு போட்டு, தலையில கைய வச்சுட்டு அப்படியே பீரோ பக்கத்திலேயே கீழ உக்காந்துர்ராரு. 

மனைவி : என்ன செய்யுறது? ஒலகத்தில அவங்கவங்க செய்த புண்ணியத்துக்கு நல்லதே நடக்குது. நீங்க செய்ற பாவத்துக்கு உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்குது. 

சித்தப்பா : போடி, ச்சீ ச்சீ.

எந்திரிக்கிறாரு. மனைவி பயந்து ஓடி போயிர்றாங்க.

ஸீன் 3 தொடரும் 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 28, 2018 2:10 pm

28.01.2018 

சீன் 3

பண்ணையார் 
பண்ணையாரின் மனைவி சிவகாமி 
மாட்டுக்காரன் கந்தன் 

பண்ணையார் வேகமா நடந்து வர்றார், வீட்டுக்குள்ள. புறகடைக்கு போறார். அங்க மாட்டுக்காரன் கந்தன் மாட்டுக்கு தீவனம் வச்சுட்டு இருக்கான். 

பண்ணையார் : கந்தா

கந்தன் : ஐய்யா 

பண்ணையார் : ண்டா இப்டீ கத்திகிட்டு கெடக்குது ? 

கந்தன் : மரகதம்மா போனதுக்கப்புறம், ஒண்ணுமே திங்கமாட்டேங்குது. சதா .............. கத்திகிட்டேதான் இருக்குது. 

பண்ணையார் கோபமா கத்துறார் : எங்கயாவது அடிச்சு தொரத்து. எங்கண்ணு முன்னாலேயே காட்டாதே. இத பந்தயத்தில விடப்போய்தான், இவ்வளவு வெனயும் வந்துச்சு. 

கந்தன் கவலையுடன் : எங்கங்க தொரத்றது? 

பண்ணையார் அதே கோவத்துடன் : வெரட்ரியா, இல்ல நீயும் இந்த வீட்ட விட்டு வெளிய போறியா? 

மனைவி சிவகாமி : என்னங்க 

பண்ணையார் அவகிட்டயும் கத்துறார் : சும்மா இரு சிவகாமி.[கந்தன பார்த்து] கந்தா இழுத்துட்டு போடா. 

கந்தனும் மாட்டை இழுத்துட்டு போறான். 

சிவகாமி : பொண்ணு மேல இருக்கிற கோவத்த, இதுகிட்டதான் காட்டணுமா? 

பண்ணையார் கத்துறார் : சிவகாமி, இனிமே இந்த வீட்ல அந்த பொண்ணு இருந்த அடயாளம் கூட எந்த எடத்லேயும் இருக்கக்கூடாது. 

சிவகாமி : நல்லா இருக்குங்க, நீங்களும் நானும் இருக்கிற வரையிலும், அடயாளம் இல்லாம போயிடுமா? குத்தங்கொற ஒலகத்துல யார் செய்யல? அதுக்காக பெத்த பொண்ண இப்படி திண்டாட விடலாமா

பண்ணையார் : அவ எதுக்குடி திண்டாடுறா? திண்டாட்றாளாம். ஆயிரம் வேலி குடித்தனம்ல நடத்றா. அம்மா இனிமே தரையில நடக்கமாட்டாங்ளே. ஏன்னா, கோடீஸ்வரன் வீட்டு மாப்ளயயில தேர்ந்தெடுத்ருக்கா. 

சிவகாமி : ஏங்க, ஆண்டியா இருந்தாலும் இனிமே அவரு நம்ம மருமகபுள்ள. மகளுக்கு மாப்ளே. 

பண்ணையார் : என்ன பேசுற நீ? அவ எனக்கு மக இல்லேன்னு ஊர் கூட்டத்துல சொல்லிட்டு வந்த்ருக்கேன். அத ஞாபகத்துல வச்சுக்க. 

சிவகாமி அழுதுகிட்டே : இந்தா பாருங்க, நடந்ததெல்லாம் மறந்த்ருங்க. அவங்க ரெண்டு பேரையும் கூட்டி வந்து உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்க சொல்றேன்

பண்ணையார் : ஓ, நீயும் ஏங்கால்ல விழுந்து கும்டுட்டு இப்பவே போயிரு.

சிவகாமி தெகச்சு நிக்கிறா. 

பண்ணையார் :
 இனிமே இந்த வீட்டுக்குள்ள யாரும் வரவேண்டாம். போயிடுங்க. 

சிவகாமி கையெடுத்து கும்பிட்டு : மன்னிச்ருங்க. தெரியாத்தனமா சொல்லிட்டேன். அதுக்காக இவ்வளவு பெரிய வார்த்தைய சொல்லாதீங்க.

சிவகாமி அழுதுட்டே போயிர்றா. பண்ணையாரும் மனசிலுள்ள சோகம் தாங்காம, தோள்ல உள்ள துண்டால வாயை பொத்தி அழுறார். 

இப்ப சொல்லுங்க. என்ன படம், யார் யார் நடிச்சிருக்காங்க? 

Heezulia 


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 29, 2018 6:17 pm

29.01.2018 


படம் : விளையாட்டுப்பிள்ளை 1970

மரகதம் - பத்மினி 
முத்தையன் – சிவாஜி
முத்தையன் அம்மா – SN லட்சுமி 
பண்ணையார் - VS ராகவன் [மரகதத்தின் அப்பா]
பண்ணையாரின் மனைவி - ருக்மணி 
நிச்சயம் பண்ணின மாப்பிள்ள - சோ [பாலையாவின் மகன்] 
சித்தப்பா - பாலையா 

Heezulia 


Sponsored content

PostSponsored content



Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக