ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா இனி பரவாது
by ayyasamy ram Today at 21:05

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Today at 19:09

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Today at 18:57

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Today at 18:09

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Today at 17:37

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Today at 16:57

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Today at 14:30

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Today at 14:11

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Today at 13:54

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Today at 13:52

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Today at 13:40

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Today at 12:56

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Today at 10:10

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Today at 10:08

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 8:17

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 8:12

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 8:07

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 8:05

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 8:02

» நாவல்கள் தேவை
by rukman1304 Today at 0:53

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Today at 0:41

» வானவல்லி நாவல்
by rukman1304 Today at 0:37

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Today at 0:24

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 23:01

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 22:31

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 22:30

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 22:27

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 22:14

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 20:43

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 18:08

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 17:59

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 17:58

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 17:55

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 17:51

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 17:48

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:29

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 15:31

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 15:26

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 15:22

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 15:09

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 15:04

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 14:14

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 13:58

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:54

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 13:54

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 13:40

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 13:30

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 13:25

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 12:03

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:19

Admins Online

திரைப் பிரபலங்கள்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

best திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sat 16 Dec 2017 - 23:22

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 619
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down


best Re: திரைப் பிரபலங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun 28 Jan 2018 - 19:47

எம்ஜிஆர் ஒரு சகாப்தம்
அவர் பற்றிய தகவல்
அருமை.
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14517
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

best திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Mon 29 Jan 2018 - 19:17

29.01.2018

அம்பிகா

கேரளாக்காரர். அம்பிகாவும், இவர் தங்கச்சி ராதாவும் ஸ்கூல்ல படிக்கும்போதே, பாட்டு போட்டில கலந்துட்டு, முதல் பரிசு வாங்குவாங்களாம். மிமிக்ரி, கவிதை, டான்ஸ், நடிப்பு இதிலெல்லாம் அம்பிகா பல பரிசு வாங்கியிருக்காராம். ராதாவும் அப்படித்தானாம்.

சின்ன வயசிலேயே அம்பிகாவுக்கு சினிமா மேல ஆசையாம்.  ஊர் பக்கத்தில ஷூட்டிங் நடந்துச்சுன்னா, அம்மாவை வற்புறுத்தி, ஷூட்டிங் பார்க்க கூட்டிக்கிட்டு போவார். 

இப்படித்தான்  ஒரு நாள், ஒரு ஷூட்டிங்க்கு அம்மாவோடு  போயிருந்தார்.  அங்க கமல், சோமன்பாபு இவங்களும் இருந்தாங்களாம். கமல் அம்பிகாவை பார்த்தார். 

"நீ ஸ்ரீவித்யா போல  ரொம்ப அழகா இருக்க. எங்கூட நடிக்கிறியா? நீ பெரிய நடிகையா வரலாம்" னு கமல் சொன்னாராம்.  அம்பிகா கொஞ்.................சங்கூட தயங்கவே இல்லியாம். சரீன்னுட்டார். சின்ன புள்ளயாச்சே. 

ஷீலா ஓஹோ.................... ன்னு நடிச்சுட்டு இருந்த சமயம். அம்பிகா அவரைப் பார்த்து, அவரைன்னா, அவரை இல்ல, அவர் நடிப்பை பார்த்து, நம்மளும் அவரை மாதிரி நல்லா நடிச்சு, பெரிய நடிகையாகணும்னு, அப்பவே, அம்பிகா நெனச்சாராம். அந்த சின்ன  வயசிலேயே பேராசை பாருங்க.

அம்பிகாவுக்கு நடிப்பின் மேல இருந்த interestஐ பார்த்த அவங்க அம்மா, மலையாள பட தயாரிப்பாளர் சுப்பிரமணியத்தை சந்திச்சார்.  தன் மகள்  நடிக்க விரும்புறதா சொல்லி, சினிமாவில சான்ஸ் கேட்டார். அவரும் அம்பிகாவை பார்த்தார். சரி மேக்கப் டெஸ்ட் செய்யலாமேன்னு, மேக்கப் போட்டு பார்த்திருக்கார். மேக்கப் கச்சிதம். நடிக்க சொல்லியிருக்கார். நல்லாவே நடிச்சுட்டார்.  

அப்புறம் என்ன, அந்த சமயத்தில் சுப்பிரமணியம் தயாரிச்சுட்டு இருந்த 'கோட்டாணிக்கரா' ங்கிற மலையாள படத்தில குழந்தை நட்சத்திரம், குட்டி அம்பிகாதான். 

பருவம் வந்ததும் நடிக்கிறதை விட்டுட்டாராம். முகுந்தன்னு ஒரு எழுத்தாளராம். அவர் கீதான்னு ஒரு நாவல் எழுதியிருந்தாராம். அந்த நாவல் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடந்துச்சாம். இந்தப் படத்தில அம்பிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம், அந்தப் படத் தயாரிப்பாளர். அம்பிகாவின் வீட்டுக்கு ஆளையும் அனுப்பி வச்சாராம். ஆனா, வீட்ல அம்பிகா இல்ல. எங்க போய்ட்டார், எங்க போய்ட்டார்? 

அவர் என்னான்னா, ஜா......................லியா சினிமா தியேட்டர்ல சினிமா பாத்துட்டு உக்காந்திருந்தார். 

பின்னே என்ன, சினிமா தியேட்டர்ல சினிமாதான பாப்பாங்கன்னு சொல்லாதீங்க. இது இப்படித்தான் எழுதணும்.  

சினிமாக்காரங்க விடல. தியேட்டர்லேயிருந்து அம்பிகாவை கூப்பிட்டுக்கிட்டாங்க. அம்பிகாவின் சின்ன வயசு ஆசை இப்ப நிறைவேறிருச்சுல்ல. 

ஆனா ஒரு குழப்பம் மலையாள சினிமாவில. நடிகை பதிமினியின் உறவினர் ஒருத்தர், அம்பிகாங்கற பேர்ல இருந்தாராம். அதனால புது அம்பிகா பேரை மாத்த பாத்தாங்களாம். ஆனா, அம்பிகாவும், அவங்க அம்மாவுக்கும் பேர மாத்துறது பிடிக்கலியாம். ஏன்னா, புது அம்பிகா நடிச்ச படம் நல்லா ஓடுச்சாம். இது தவிர பழைய அம்பிகாவை கண்டுக்காம, இந்த புது அம்பிகாவை தேடி சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுருச்சாம். 

இப்டியே....................... மலையாளத்தில் நடிச்சுட்டு இருந்த அம்பிகா தமிழ் படத்தில 'சக்களத்தி 1979' படத்தல செகண்ட் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சதுதான். இந்தப் படம் அவ்வளவா ஓடல. அப்புறம் பாருங்க 1981ல வந்த 'அந்த 7 நாட்கள்', அம்பிகாவை  வே...............ற லெவலுக்கு கொண்டு போயிருச்சு. 

அந்த 7 நாட்கள் படத்தில, பாக்கியராஜ் மலையாளியாக நடிப்பார்.  மலையாளம் கலந்த தமிழ் வசனத்தை பேசிட்டு, அம்பிகாட்ட "நான் சரியா பேசினேனா"னு கேட்டுக்குவாராம். அம்பிகா ஒரிஜினல் மலையாளியாச்சே. 

அலைகள் ஓய்வதில்லை  படத்துக்கு முதல்ல அம்பிகாவைத்தான் பாரதிராஜா செலக்ட் பண்ணார். அதுக்கப்புறம் என்னாச்சுன்னா, பாரதிராஜா அம்பிகாவின் குடும்ப போட்டாவ பார்த்தார். ராதா அவர் கண்ணில பட்டுட்டா................... அதனால அம்பிகாவுக்கு கிடைக்க வேண்டிய சான்ஸ் போயே  போச்சு. 

ஆனா................. ராதாவுக்கு சினிமாவில நடிக்க ஆசையில்லாம, அப்புறமா ............. அதை விடுங்க.

அம்பிகா அதுக்கப்புறமா ரஜினி, கமல்கூட நடிக்க ஆரம்பிச்சுட்டார். 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில ரஜினி கூட நடிக்குமோபோது, ரஜினி கால்ல விழுந்து அழுற ஸீன். இந்த ஸீன்ல, அம்பிகா கிளிசரின் போடாமலே................ அழுதுட்டாராம். 

இந்தப் படம் வந்த அதே சமயத்துலதான் கமலின் 'சகலகலா வல்லவன்' படமும் ரிலீஸ் ஆச்சாம். ரெண்டு படத்திலேயும் அம்பிகாதான் ஹீரோயின். 

அம்பிகா சின்ன வயசில, கமல் பட  ஷூட்டிங் நடக்கும்போது,  கமல் அம்பிகாட்ட கேட்டாரே ஒரு கேள்வி, "எங்கூட நடிக்கிறியா"ன்னு. 'சகலகலா வல்லவன்' பட ஷூட்டிங்ல, கமல் அதை அம்பிகாட்ட ஞாபகப்படுத்தினாராம். "பாத்தியா நான் சொன்னபடியே நடந்துச்சுல்ல" ன்னு சொல்ற அர்த்தத்ல.  

எங்கேயோ கேட்ட குரல் படத்தில வயசானவரா நடிச்ச மாதிரியே, சிவாஜி கூடவும் வாழ்க்கை படத்தில நடிச்சார். 

நான் பாடும் பாடல். நான் பாடி, நீங்க சொக்கி உக்காந்துட்டீங்கனா, நான் எழுதுறத எப்படி படிப்பீங்க? ஏன்னா, நான் நல்..............லா பாடுவேன். 

அது ஒரு படம். சிவகுமார் ஹீரோ. க்ளைமாக்ஸ் ஸீன். சிவகுமாரை அம்பிகா ஓங்கி அறையணும். சிவகுமார் என்னவோ அடி வாங்க ரெடியாத்தான் இருந்தார். ஆனா, அம்பிகா? முடியவே முடியாதுன்னுட்டாராம். இதுல மட்டுமில்லீங்க. அடிக்கிற ஸீன் எந்தப் படத்ல வந்தாலும், தயங்குவாராம். 

படத்தில குதிரை சவாரின்னாலும் பயமாம். ஏன்னா, மாவீரன், கடலமீன்கள் படங்களில, குதிரை சவாரி ஷூட்டிங் நடக்கும்போது, கீழே விழுந்து அடிபட்டுருச்சாம். 

அம்பிகா, ராதா ரெண்டு பேருமே தனித்தனியாவும், சேர்ந்தும் நடிச்சிருக்காங்க. ஆனா அவங்களுக்குள்ள பொறாமையே இருந்ததில்லயாம். Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 619
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by SK on Mon 29 Jan 2018 - 19:37

வாழ்க்கை
எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

best திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sat 3 Feb 2018 - 20:53

03.01.2018

SV ரங்காராவ்

திரைப் பிரபலங்கள்  - Page 4 LRxhvfoDS9a5D9Un4UtK+svrangarao

இவர் முழு பேர் சாமர்லா வெங்கட ரங்காராவ். 

தெலுங்கு, தமிழ் படங்களில் நடிச்சிருக்கார். தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்கரவர்த்தி' ன்னு பட்டம் கொடுத்தாங்களாம். ஆந்திரா, விஜயவாடால  இவருக்கு மார்பளவு சிலை வச்சிருக்காங்களாம். 

எந்த வேஷத்ல  நடிச்சாலும், அந்தந்த கேரக்டரிலேயே வாழ்ந்தவர் மனுஷன். பிச்சு உதறிருவார். சபாஷ் மீனால 'கரெக்ட்' அப்பாதுரை. மாயாபஜாரில் கடோதகஜன். இதையெல்லாம் விடுங்க, சர்வர் சுந்தரத்ல டைரக்டராக நடிப்பாரு பாருங்க, காமெடியனாகவும் நடிச்சிருப்பாருல்ல. 

தெலுங்கில் இவர் டைரக்ட் செஞ்ச ரெண்டு படங்களுக்கு நந்தி விருது கெடச்சுதாமே. 'நர்த்தனசாலா' என்ற படத்தில இவர் கீச்சனாக நடிச்சதுக்கு, இந்தோனேஷியாவில நடந்த திரைப்பட விழாவில், விருது கெடச்சுதாம். சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கியவர் ஆஜானுபாகு ரங்காராவ். 

கமல்ஹாசன் ஒரு தடவை சொல்லியிருந்தாராம், " நான் பார்க்க ஆசைப்பட்ட   முக்கியமானவங்கள்ல, காந்தி, பாரதியார் உட்பட, ரங்காராவும் ஒருத்தர். ஆனா சந்திக்க சான்ஸ் கிடைக்காம போயிருச்சு". 

நாடகங்களில் நடிச்சு, சினிமாவுக்கு வந்தவர். ஆனாலும், நாடக நடிப்பு இல்லாம, casual ஆக நடிச்சு பேர் பெற்றவர். இங்கிலிஷ் நாடகங்கள்ல கூட நடிச்சிருக்காராம்.


ஷூட்டிங்ல நடந்த சில சுவாரஸ்யங்கள்:

நானும் ஒரு பெண் ஷூட்டிங்.

MR ராதா வந்துட்டார். ரங்காராவை காணோம். ராதாவுக்கு கோவம் வந்துருச்சாம். அவர் பேசுற பாணியிலயே, "கெட்டவனா நடிக்கிறவன்ல்லாம் ஒழுங்கா நடந்துக்கிட்டுறான். நல்லவனா நடிக்கிறவன பாரு,  மத்தவங்கள பாடா................... படுத்துறான்"ன்னு ரங்காராவ் காதுல விழற மாதிரி பேசினாராம். 

ரங்காராவுக்கு சங்கடமாவும், வருத்தமாவும் feel பண்ணாராம். அவர் டைரக்டர்ட்ட, "இன்னிக்கி எம்புட்டு நேரமானாலும் சரி, கிளைமாக்ஸ் சீனை முடிச்சிருங்க. விடிய விடிய ஆனாகூட பரவாயில்ல"ன்னு சொல்லி முடிச்சு கொடுத்தாராம். 


பக்த ப்ரகலாதா ஷூட்டிங் :

AVM செட்டியாரின் படம்.  ரங்காராவ் ரண்யகசிபுவாக நடிச்சார். நடிக்கிறதுல சரியா கோஆப்ரேட் பண்ணலேன்னு செட்டியார் காதுக்கு போச்சாம். தானே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றதாக சொல்லி அனுப்பினார் செட்டியார். செட்டியார் வந்ததை ரங்காராவ் பார்த்தார். அடடே, நம்ம விஷயம் அவர் காது வரிக்கும் போயிருச்சேன்னு யோசிச்சு, ரங்காராவ் என்ன செஞ்சார் தெரியுமா? 

ஷூட்டிங்காக போட்டிருந்த நகைகளை எல்லாத்தையும் கழட்டி, "இந்தாங்க புடிங்க"ன்னு செட்டியார் கையில கொடுத்தார். ஏகப்பட்ட வெயிட்.  "இவ்ளோ.......... கனத்தையும் சுமக்கணும். செந்தமிழ்ல வேற பேசணும்.  வீட்டுக்கு போனாகூட, இவ்ளோ வெயிட்டை சுமந்த வலிதான் இருக்கு" ன்னு ரங்காராவ் சொன்னாராம். அவர் நிலைமை புரிஞ்சு, செட்டியார் சமாதானமானார். 

- ஹிந்து

இன்னும் இவரைப் பற்றி எழுத நிறைய நிறைய இருக்கு. இருந்தாலும் இம்புட்டுதான் எழுதினேன். 

வேற வேலையா பிஸியா இருந்துட்டேன். இங்க வரமுடியல. அதுக்குள்ளாற என்னான்னா ஈகரை எம்மேல கோவிச்சுட்டு, வாசப்படியிலேயே நிக்க வச்சுட்டு, உள்ள விடமாட்டேன்னுருச்சு. இவளத்துக்கும் நான் ஆட்டோமேட்டிக்கா உள்ள வர டிக்கெட் வேற வாங்கி வச்சிருக்கேன். அப்படியும் விடலேன்னா என்ன அர்த்தம்ங்க்றேன். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 619
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by T.N.Balasubramanian on Sat 3 Feb 2018 - 21:53

@Heezulia wrote:வாசப்படியிலேயே நிக்க வச்சுட்டு, உள்ள விடமாட்டேன்னுருச்சு. இவளத்துக்கும் நான் ஆட்டோமேட்டிக்கா உள்ள வர டிக்கெட் வேற வாங்கி வச்சிருக்கேன். அப்படியும் விடலேன்னா என்ன அர்த்தம்ங்க்றேன்.

சேவகா!
அனுமதி என் மறுத்தாய் !
ஈகரையின் மறு தாய் அவர்கள் !
நன்றாக ஷோ காமிக்கும் அவரை தடை செய்யலாமோ!

கபர்தார்!! வேலையிலிருந்து நீக்கப்படுவாய்!!

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26738
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9629

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by ayyasamy ram on Sat 3 Feb 2018 - 22:27

சாமர்லா வெங்கட ரங்காராவ்
--
திரைப் பிரபலங்கள்  - Page 4 103459460 திரைப் பிரபலங்கள்  - Page 4 3838410834
-
திரைப் பிரபலங்கள்  - Page 4 Vannathirai-15
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58269
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by மூர்த்தி on Sun 4 Feb 2018 - 1:03

மற்றவர்கள்   எழுத்துப்  போல்  இல்லாமல்  புதிய  பாணியில்  ருசியாக  எழுதப்படுவதால் யாராவது சூனியம் வைத்திருப்பார்கள் .அல்லது வாஸ்து சரியில்லாமல் இருக்கலாம். கணினியை சற்று  திருப்பி வைத்து எழுதுங்கள்.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sun 4 Feb 2018 - 2:29

04.02.2018
@T.N.Balasubramanian wrote:சேவகா!
ஆமா.................... , இப்ப யார கூப்ட்டீங்க? இந்த சேவகன் ஹூ.............வு? [என் பாணியில who?]

@T.N.Balasubramanian wrote:ஈகரையின் மறு தாய் அவர்கள் !
அப்ப, அந்த ஒரிஜினல் தாய் யாருன்னு தெரியணுமே!!! 

@T.N.Balasubramanian wrote:நன்றாக ஷோ காமிக்கும் அவரை தடை செய்யலாமோ!  
ஏன் பாலு சார், என் மேல் என்னதான்  கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................? 

Heezulia 
 
மேற்கோள் செய்த பதிவு: 1258603

heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 619
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sun 4 Feb 2018 - 2:33

04.02.2018

ஐ................ அய்யா சார் ரங்கராவ் பேர் போட்ட போட்டாவை போட்டிருக்காஹளே.

திரைப் பிரபலங்கள்  - Page 4 1571444738 சார். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 619
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sun 4 Feb 2018 - 3:18

04.02.2018
@மூர்த்தி wrote:மற்றவர்கள் எழுத்துப் போல் இல்லாமல் புதிய பாணியில் ருசியாக எழுதப்படுவதால் யாராவது சூனியம் வைத்திருப்பார்கள். அல்லது வாஸ்து சரியில்லாமல் இருக்கலாம். கணினியை சற்று  திருப்பி வைத்து எழுதுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: ௧௨௫௮௬௧௧

அட நீங்க ஒண்ணு மூர்த்தி சார். புதிய பாணியாவது, ருசியாகவாவது. இது எல்லார்கிட்டேயும் உள்ள, எல்லாருக்கும் தெரிஞ்ச பாணிதான். எப்டீங்க்றீங்களா? நம்ம சாதா...................ரணமா பேசுற, பேச்சு வழக்குல எழுதுறேன். நீங்கல்லாம் செந்............தமிழ்ல எழுதுறீங்க. அம்புட்டுதான் வித்தியாசம். 

இப்ப நீங்க எழுதியிருக்கிறதையே பாருங்களேன். 
"மத்தவங்க  எழுத்து போல இல்லாம, புது................ பாணில டே..............ஸ்ட்டா எழுதுறதனால  யா.....ராச்சும்  சூனியம் வச்சிருப்பாங்க. இல்லேன்னா வாஸ்து சரியில்லாம இருக்கலாம்ல? கம்ப்யூட்டர கொஞ்...........சமா அப்டீ இப்டீ.....ன்னு திருப்பி வச்சு எழுதி பாருங்க, எல்...............லாம் சரியா போவும்". 
இது எப்டீ இருக்கு? நாம் இப்டித்தானே பேசுவோம். இதுதான். வேற ஒண்..........ணும் இல்ல. 

ஆமா.................... அப்டீ யார்தான் சூனியம் வச்சிருப்பாங்க. ஒண்ணு செய்ங்க, வெத்திலைல மை போட்டு பாப்பாங்களே, அது மாதிரி யாராச்சும் இருந்தாங்கன்னா, அத பாத்து, நீங்க அதை வீடியோ எடுத்து அனுப்புங்க. யா..............ருன்னு பாத்துறலாம். யாருன்னு மட்டும் தெரிஞ்சுது................, சும்...............மா விடக்கூடாது பாத்துக்கோங்க, சொல்லிபுட்டேன். பாலு சார்ட்ட சேவகன் யாரோ இருக்கான்.  இவன வச்சு, அவன ஒரு வழி பண்ணிறலாம், சரியா? 

நீங்க வாஸ்த்து சரியில்லாம இருக்கலாம்னு சொன்னீங்களே, அது கூட இருக்கலாம். ஏன்னா நான் லேப்டாப்தான் வச்சிருக்கேன். லேப்டாப்னா, மடீலதானே வச்சுதானே டைப்பணும்? நான் டேபிள் மேலேல்ல வச்சிருக்கேன்.  அது கூட இருக்கலாம். சரி, நான் பாத்துக்குறேன்.

பேச்சோடு பேச்சா, அந்த வெத்தல, மையி, அத மறந்துறாதீங்க, என்ன? 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 619
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by T.N.Balasubramanian on Sun 4 Feb 2018 - 20:54

@heezulia wrote:ஏன் பாலு சார், என் மேல் என்னதான்  கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................?

சரியாக புரிந்துகொள்ள தெரியாமை சோகம் சோகம்

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26738
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9629

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Sun 4 Feb 2018 - 22:29

04.02.2018

சரியாக புரிந்து கொள்ள தெரியாமையோ, தெரிந்து கொள்ள முடியாமையோ, என்னவோ ஒண்ணு.

சரி பாலு சார், எனக்கு புரியுற மாதிரி சொல்லியிருக்கலாம்ல. 

"புரிந்து கொள்ள தெரியாமை"ன்னு சொல்லிட்டு விட்டுட்டீங்களே. அப்புறம் எப்டீ எனக்கு புரியும்? உங்கள மாதிரி புத்திசா.................லியா இருந்தா பரவாயில்ல. நாந்தான் மக்..............காச்சே. வெளாவா.....................ரியா சொன்னாதானே எனக்கு மண்டைல ஏறும். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 619
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by மூர்த்தி on Mon 5 Feb 2018 - 0:15

ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் எழுதியது போல், ஐயா எழுதியதும் உங்களை உயர்வாகவும் நகைச்சுவையாகவும் சொல்லப்பட்டது.அவ்வளவுதான்.
........................

வெத்திலை ,மை வாங்க ஆள் அனுப்பி இருக்கிறேன். வந்ததும் சொல்கிறேன்.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by heezulia on Mon 5 Feb 2018 - 1:25

04.02.2018

வாங்க மூர்த்தி சார். 

பாலு சார் கலர் கலரா எழுதி, சிம்பாலிக்கா நான் ஷோ காட்றதை  சொல்லியிருந்தது அப்பவே நான் கண்டுபுடிச்சுட்டேன். அவர் மட்டும் என்னை கலாய்க்கலாம், நான் கலாய்க்க கூடாதோ? அதுதான் நானும் கொஞ்சம் விளையாடினேன் சார். 
@மூர்த்தி wrote:ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 
மேற்கோள் செய்த பதிவு: 1258700

இத்துனூ.......................... ண்டு கூட நான் தப்பா நினைக்கல, நினைக்கவும் தெரியாது. அப்புறம் எங்க பெருசா எடுத்துக்கிறது. என்னை திட்டினா கூட நான் ஒண்ணும் நெனச்சுக்க மாட்டேன் சார். திட்ற மாதிரி நான் நடந்துகிட்டோமோன்னுதான் யோசிப்பேன். அதுக்குன்னு இப்பவே திட்ட ஆரம்பிச்சிறாதீங்க. 

நான் ரொம்ப ரொம்....................ப ஜா.......................... லி டைப் சார். கேலி கிண்டல்லாம் என்கிட்ட நிறையவே எதிர்பார்க்கலாம் சார். காமெடி சென்ஸ் நிறைய உண்டு. 

பாலு சாரும், நீங்களும் என்னை உயர்வா நெனைக்கிறதை பற்றி ரொம்ப சந்தோ............ஷத்துடன் நன்றி சொல்லிக்கிறேன். நாம பேசுற மாதிரி எழுதுறதா உயர்வு? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. 

வெத்தல வாங்கிட்டு வர ஆள அனுப்பினீங்களே, பெரிய வெத்தலயா வாங்கிட்டு வர சொன்னீங்களா? அப்பதான் சூனியம் வச்சது யாருன்னு அதுல மை போட்டு பார்க்கும்போது, வீடியோ எடுக்க உங்களுக்கு வசதியா இருக்கணும்ல. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 619
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by T.N.Balasubramanian on Mon 5 Feb 2018 - 13:41

@Heezulia wrote:ஏன் பாலு சார், என் மேல் என்னதான் கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................?
எப்பிடி கூப்பிடுவது ? அம்மா ஹீஸுலியாவா / சகோதரி ஹிஸுலியாவா?வயது தெரியவில்லையே !
மரியாதையாக அக்கா என்றே கூப்பிடலாம் .
கொலவெறி ....கோவம்.. அநியாயம் ... எங்கேம்மா இப்பிடி எல்லாம் அர்த்தம் வரும்படி எழுதியுள்ளேன்.
போலீஸ்காரன் அல்லது நீதிபதி யாராவது இதை படிச்சா suo moto கேஸுலே என்னை உள்ள தள்ளிடுவாங்களே. ... அந்த பதிவை அபேஸ் பண்ணவேண்டியதுதான்.....!!!!

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26738
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9629

Back to top Go down

best Re: திரைப் பிரபலங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum